Jump to content

கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு.

கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்து, மூக்குடைபட்டது, இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் உருவான அமைப்பு.

12,000 தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது நகரத்தின் தரவு. அதனை உபயோகிக்காது, வெறுமனே 4,000 தமிழர்கள் என்று சொல்வதன் காரணம் என்ன?

ஆ.... வந்து.... தமிழர்கள் இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்தில், மலேசியாவில், என்று வசிக்கிறார்கள்... அதுதான்.... வந்து..... அப்படித்தான்..... ஹி.. ஹீ.

உங்களது ஆவணத்தில் உள்ள அனைத்துமே,இலங்கைத் தூதரக ஆவணத்தில் உள்ளது போன்றே உள்ளது.

உங்களுக்கும், இலங்கை தூதரகத்துக்கும், நேரடியாக அல்லது மறைமுகமான தொடர்புள்ளதா?

இல்லை... இல்லவே இல்லை. வந்து.... யாழ்ப்பாணத்தில், அனுமதி இல்லாமல், முறையாக கட்டப்படாததால் தான் தூபி இடிக்கப்பட்டது... இப்போது முறையாக கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இங்கே தேவையில்லாதது.  இது, இங்கே வசிக்கும், இலங்கையரான தமிழர், இஸ்லாமியர், சிங்களவர்கள், பறங்கியர்கள், மலே ஆகியோருக்கு இடையே விரிசலை உருவாக்கும்.

ஹார்ப்பர் முதல், இன்றய பிரதமர் வரை இரண்டு பிரதமர்கள், இலங்கை யுத்த குற்ற செய்ததாக அறிவித்தும், இலங்கையில் நடந்த பொது நல வாய மகாநாட்டினை பகிஷ்கரித்தனர். நீங்கள் இந்த நாட்டின் வெளியுறவு கொள்கை முடிவினை எதிர்கிறீர்களா?

இல்லை.... இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில், அதனை ஏற்றுக் கொள்கிறேன்.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் முடிவில், ஹோலோகோஸ்ட்டினால் கொலையானவர்களுக்கு, உலகமெங்கம் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. நாசி அரசினை ஆதரிப்பவர்கள், அது தவறு என்றால், ஏற்றுக் கொள்ள முடியுமா?

ம்....ம்ம்ம்  

 

 

Edited by Nathamuni
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில ஏதாவது ஒரு தமிழ் அமைப்பும் அல்லது Brampton தமிழ் வாசிகள்  பங்கு கொண்டு இருக்க வேண்டும் அல்லவா, ஆக குறைந்தது பார்வையாளர் ஆக.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பொப் ரே கொழும்பில் வைத்து திருப்பி அனுப்ப காரணமான இரும்பு லேடி என்ற சிங்களக் கிழத்தியும் பிரம்டனில் தான் இருந்தவ,....இருக்கிறாவோ தெரியாது...பிரம்டந்தான் சீனாக்களின் தலைநகரம்...அங்கு எப்படி சிலை கட்டுவியள்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2021 at 22:27, alvayan said:

இரும்பு லேடி என்ற சிங்களக் கிழத்தியும் பிரம்டனில் தான் இருந்தவ,....இருக்கிறாவோ தெரியாது...பிரம்டந்தான் சீனாக்களின் தலைநகரம்...அங்கு எப்படி சிலை கட்டுவியள்..

உண்மையாக கருதி சொல்லி இருந்தால், நீங்கள் கனேடிய பிரசா அல்லது வதிவிட (எந்த வகை ஆயினும்) உரிமை பெற்றவராயின், இதை சொன்னதின் மூலம், வெட்கி தலை குனிய வேண்டும், கனடா இன் விழுமியங்களை அறியாமல் இருப்பதற்கு.      

பிராம்டனோ அல்லது வேறு நகரமோ, கனடியன் நகரம், கனடாவின் விழுமியங்களை கொண்டது.  

இதை அந்த வாதத்தில், கவுன்சிலர் சொல்கிறார்.

இதனால் தான், சிங்கள இனவாதம் கனடாவில் அடிபட்டு போகிறது, வெளிக்காட்ட இடம் இருந்தும்.

நினைவு சின்னமமோ அல்லது எதுவோ கட்டுவதின் முடிவு சனநாயக அடிப்படையில், வெளிப்படையாக வைக்கப்பட்டு, வாதிக்கப்பட்டு, உண்மை தன்மை அறியப்பட்டு, கவுன்சிலர் சொன்னது போல (சிங்கள இனவாத) எதிர்ப்பாளர்களின் கருத்துக்களும் வெளிவருவதற்கு இடமளிக்கப்பட்டு, அடைந்த முடிவு.

மாறாக, இங்கே இரண்டு விடயங்கள். சிறி லங்கா தூதரகம் கனேடிய உள்நாட்டு நிர்வாகத்தில் தலை இட்டது.

மிக முக்கியமாக, அந்த எதிர்கருத்தை கொண்டுவந்தவர் (youtube இல் உள்ள வீடியோ இல்) சொன்னது.   

யாழ் பல்கலையில், கட்டடங்களை  திட்டமிட்ட பெருப்பிக்கும் பணியில் தான், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடித்து அகற்றப்பட்டதாக, இல்லாததை ஆக்கி பொய் சொல்கிறார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பொது சேவையாளர்களலான ( elected public servants) பிரம்டன் நகர கவுன்சிலர்களுக்கு.

இது மிகப்பெரிய குற்றமாகும். அதுவும் சத்திய பிரமாணம் எடுத்து  (நினைவு சின்னத்திற்கு)  எதிர் கருத்தை கொண்டு வந்து இருந்தால்.

நீங்கள் கனேடிய பிரசா அல்லது வதிவிட (எந்த வகை ஆயினும்) உரிமை பெற்றவராயின் அல்லது அப்படி உரிமை உள்ள, பிரம்டன் நகர கவுன்சிலுக்கு கொண்டு செல்ல வேண்டிய கடப்பாட்டை கொண்டுளீர்கள். 


பிரசா உரிமைக்கு எழுத்து பரீட்சை அவசியம் என்பதை ஏன் என்று இப்பொது புரிகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்


பிரசா உரிமைக்கு எழுத்து பரீட்சை அவசியம் என்பதை ஏன் என்று இப்பொது புரிகிறது.

திறமையான கண்டுபிடிப்பு.... தாங்கள் என்ன ரூடோவின் மொழிபெயர்ப்பாளரோ....அல்லது இலங்கைக்கு சாமரம் வீசுபவரோ....2009 ல் நடந்ததை இந்த உலகமே அறியும் ..அந்த லேடியின் படம் போட்டு ஆங்கிலத்தில் வந்தததை ஏ  பி சி டி எழுத்துக்கூட்டி நான் வாசிச்சனான்...அப்ப நீங்கள்    மகிந்தவிடம் மண்டசொரி படிச்சனீங்களோ...பொப்ரேயை ஏன் னிப்பாட்டினது என்பதையும் தெரியுமோ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

தாங்கள் என்ன ரூடோவின் மொழிபெயர்ப்பாளரோ....அல்லது இலங்கைக்கு சாமரம் வீசுபவரோ

இரண்டும் இல்லை. பிரம்படனை சீனர்களின் நகராக உங்கள் பார்வையின் புரிதலுக்கு.

இதை montreal பிரெஞ்சு மாகாணத்தில்  என்று சொல்லி எப்படி காட்டுவீர்கள் என்று கேட்டு இருந்தால், நியாயமான கேள்வி.   

5 hours ago, alvayan said:

அந்த லேடியின் படம் போட்டு ஆங்கிலத்தில் வந்தததை ஏ  பி சி டி எழுத்துக்கூட்டி நான் வாசிச்சனான்

லேடி கனடாவில் எதாவது செய்யக் கூடியதாக இருந்ததா? bob rae சொறி லங்கா செல்வதற்கு கனடாவில் விமானத்தில் ஏறுவதை? 

கனடாவில், லேடி விரும்பியது எதையும் வெளியில், எவருக்கும் சொல்லும் உரிமையும் , இடமும் இருந்தும் கூட?    

5 hours ago, alvayan said:

பொப்ரேயை ஏன் னிப்பாட்டினது என்பதையும் தெரியுமோ..

லேடியாலோ அல்லது அப்படி இல்லாமலோ, சொறி லங்கா செய்ததை, செய்வதை பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? 

ஆனால், Bob Rae ஐ சொறி லங்காவிமான நிலையத்தில்  சொன்னது அவர் விடயம் அறியாமல் சொறி லங்காவை தவறாக  கதைத்ததாக  ஒப்புக்கொள்ளும் பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு, அப்படி இட்டால், உள்நுழைவு அனுமதியை பரிசீலிக்கலாம் என்று. 

Bob Rae சொறி லிங்காவின் முகத்துக்கு நேரே  மறுத்தது, இரும்பு லேடிக்கு  என்னவாக இருந்திருக்கும்?  
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்து இதுதான் இந்த இரும்பு லேடியும் பிரம்டனில்தான் இருந்தவர்...அங்கு தமிழீழச்சாவடி போடுவதற்கே தடையெடிக்கும் சீனாக்கூட்டம் அன்கு இருப்பதைத்தான் குறிப்பிட்டேன்....நீங்கள் மற்றவரை மட்டம் தட்டுவது மற்றவர்களுக்கு விளங்காது என்பது உங்களுடைய மேதாவித்தனம்..

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • Rajasthan Royals (5.6/20 overs)32/3 Royal Challengers Bangalore RCB chose to field. CRR: 5.33   RR in trouble😢
  • நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?
  • உலக சமத்துவமின்மை-பா.உதயன்  Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன.  இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. அரசியல் பொருளாதார நலன் சார்ந்த பின்னணியிலால் தடுப்பூசி உற்பத்திகள் தடைபட்டு இதனால் ஏழை நாடுகள் பெரிதும் தடுப்பூசி விநியோகத்தினால்  பாதிக்கப் பட்டு இந்த பெரும் கொள்ளை நோயை கட்டுப் படுத்த முடியாமல் தின்றாடுகின்றன.  குறிப்பாக மிகவும் வறிய நாடுகளான ஆசிய ஆபிரிக்க நாடுகளை இது பெருதும் பாதித்து மனித பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மீண்டும் இந்த நோயை கட்டுப் படுத்த முடியாமல் ஏற்றுமதி செய்யப்படும் வைரசுகளினால் பணக்கார நாடுகளுக்கும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.  ஒரு மென்மை சக்தி (Soft Power) என்ற கோட்பாட்டுக்கு இணங்க பணக்கார நாடுகள் தடுப்பு ஊசியை ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என பல அரசியல் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் மேலும் தடுப்பு ஊசி மருந்து விநியோகத்தை தாமதப் படுத்தினால் மீண்டும் மீண்டும் புதிய வைரசு (mutation) மாற்றங்களின் பிறப்புக்கே இது வழி வகுக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.  இன்னும் பல வறிய நாடுகளுக்கு அடுத்த வருடங்களிலும் தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கூட சந்தேகமே. தடுப்பூசியின் வரவுக்கு பின் மனித இழப்புக்களில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் மனித இழப்புக்களையும் பொருளாதார  இழப்புக்களையும்  கட்டுப் படுத்த முடியவில்லை. எல்லா மனித உயிர்களுமே பெறுமதி மிக்கன என்ற அறம் சார்ந்த பொறுப்புணர்வோடு  தடுப்பு ஊசி அரசியல் பொருளாதார இராஜதந்திர நலன் கடந்து மனிதம் சார்ந்து சமத்துவம் சார்ந்து உலகம் இந்த பேரழிவில் இருந்து கடந்து போகுமா. பா.உதயன் ✍️  
  • தாயக அரசியலுக்கு தலைமைதாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இலங்கைப் பிரசை ஒருவர் இலங்கை அரசியலில் ஈடுபடமுடியும் என்பது புத்தகப் பூச்சிகளுக்கு  தெரியாததுதான் விந்தை.  அமெரிக்க குடியுரிமை/நிரந்தர வதிவிட உரிமை இருக்கின்ற/இருக்கப்பெற்ற கொட்டாபய இராசபக்ச இலங்கை சனாதிபதியாகலாம் ஆனால் இன்னொரு இலங்கையைப் பூர்விகத் தமிழன் இலங்கை அரசியலில் ஈடுபடக் கூடாது எனும் முட்டாள்தனமான கருத்தைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும். கிருபன், அதீத வாசிப்புப் பழக்கம் இருப்பது உண்மையில் போற்றுதற்குRயதுதான். ஆனால் வாசிக்கும்போது அதிலுள்ள நன்மையானவற்றைக் கிரகிக்கவும் வேண்டுமல்லவா...😀 அதற்கு முயற்சி செய்யுங்கள்.. 👍
  • கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம்  கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள்  மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள்  பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல்  ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.