Jump to content

நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

தேசிய வெசாக் பண்டிகையை நிகழ்வுகளை இம்முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்படுத்தி நயினாதீவு நாகவிகாரையில் முன்னெடுக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தசாசன , கலைகலாச்சார அலுவல்கள் அமைப்பின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை  | Virakesari.lkmahindaaa.jpg

அரச பொசன் பண்டிகை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 65  பௌத்த விகாரைகள்,35 பிரிவெனா பாடசாலைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வுகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை காட்டிலும் இம்முறை அரச பொசன் பண்டிகையை சுகாதார பாதுகாப்பு வழிமுறைக்கு அமைய சிறப்பாக கொண்டாட எதிர்பார்கக்ப்பட்டுள்ளது. 

அரச பொசன் பண்டிகைக்கான நிகழ்வு திட்டமிடல் மற்றும் ஒழுங்குப்படுத்தலில் புத்தசாசனம், மத கலைகலாசார  அமைச்சின் கீழ் உள்ள  இந்து , கிருஷ்தவம் மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களம் ஒன்றினையவுள்ளன.

நயினாதீவில் இம்முறை வெசாக் பண்டிகை - பிரதமர் ஆலோசனை  | Virakesari.lk

Link to comment
Share on other sites

4 minutes ago, Kapithan said:

பிரதமர் சொல்ல விரும்பும் சேதி என்ன..🤥

அத்தியடி குத்தியனின் உதவியுடன் வடக்கில் பௌத்ததை விஸ்தரிப்போம் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் இல்லாத அல்லது மிகச் சிறியளவில் குடியேறியிருக்கும் தமிழர் தாயகத்தில் அவர்களின் மதக் கொண்டாட்டம் ஒன்றினை நடத்தவேண்டிய தேவை என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா கோரத்தாண்டவம் ஆடுது. மக்கள் பயத்திலும், ஏக்கத்திலும் உறைகிறார்கள். விளைவு தெரியாமல் விளையாடும் முட்டாள்கள் என்னடாவென்றால்; ஒரே நாடு, ஒரே சட்டம் என கூப்பாடு போடுகிறார்கள்.  வெகு விரைவில் கொடுக்கப்பட்ட வளங்களுக்கும், அவகாசத்துக்கும் கணக்கு காட்டும் வேளை நெருங்கப்போகுதோ தெரியவில்லை. சாதாரண நோயால் இறப்பவர்களையும் கொரோனா என்று சொல்லி எரிக்கிறார்கள். பலவந்தமாக கொரோனாவை காரணம் கூறி தங்கள் சட்டங்களையும், கொள்கைகளையும் திணிக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சிங்களவர்கள் இல்லாத அல்லது மிகச் சிறியளவில் குடியேறியிருக்கும் தமிழர் தாயகத்தில் அவர்களின் மதக் கொண்டாட்டம் ஒன்றினை நடத்தவேண்டிய தேவை என்ன? 

இது போன்ற பல கேள்விகள் கேட்கப்படும் போது பயங்கரவாதிகள் என பட்டம் சூட்டுவார்கள். அல்லது எங்களை இனவாதிகள் இன வெறியர்கள் என்பார்கள்.

நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.

அவர்கள் சொன்னால் வெற்றிகோஷம், நாங்கள் சொன்னால் இனவாதம், நாடு பிரிந்து விடும். இனத்தையும் நாட்டையும் தாங்களே பிரித்துக்கொண்டு, யுத்தக்குற்ற விசாரணை செய்தால், உரிமைகளை கொடுத்தால் நாடு இரண்டு பட்டுவிடுமாம், இனங்களுக்கிடையில் பிரிவினை வந்து விடுமாம் என்று  போடும் வேஷங்களை சரியென்று வெளிநாட்டுத் தூதுவர்களிடம் ஒத்தூதுவதும் நமக்குள் உள்ளவர்களே.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

நான் எனது மண் எனது மக்கள் என்று சொன்னால் இன வெறியாம்.

ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணை கட்டாவிடில் மடை திறந்த வெள்ளம்போல் ஒருவரொருவர் மேல் வெறுப்பை கொட்ட வேண்டிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

ஐயா கற்பகம், தாங்கள் அமெரிக்காவில் தின்று கொண்டு வாழ்ந்து கொண்டு தமிழும் புரியாமல்...... ஐயோ.... ஐயோ..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கு  சில  சந்தேகங்கள் வருகுது??

எனது அப்பா  அம்மா இலங்கையிலிருந்து நான் பிரான்சிலிருந்தால் அவர்களை  நான் எப்படி  அழைப்பது??

எனது  அண்ணன் தம்பி ஊரிலிருந்து நான் கனடாவிலிருந்தால் அவர்கள்  எனக்கு  என்ன முறை???

நான் பிரான்சிலிருந்து  எனது  மனைவி லண்டனில் இருந்தால் அவர்  எனக்கு  என்ன உறவு???

எனது  பிள்ளைகள் கனடாவிலிருந்து நான் ஊரிலிருந்தால்  எனது  பிள்ளைகள் என்ன  முறை  வரும்  எனக்கு??

ஒரே  குழப்பமாக்கிடக்கு???

உங்களுக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2021 at 03:57, கற்பகதரு said:

ஜேர்மன் மண்ணில் தின்று, வாழ்ந்து கொண்டு, எங்கோ உள்ள மண்ணை எனது மண் என்று அதுக்கும் சொந்தம் கொண்டாடினால் இன வெறி இல்லாமல் வேறென்ன? அந்த மண்ணை பிடித்திருந்தால் அங்கே போக வேண்டியது தானே? எத்தனை ஆயிரம் மக்கள் அங்கே வாழவில்லையா? அவர்களுக்கு இல்லாத ஆபத்தா உங்களுக்கு வரப்போகிறது? இப்படி ஊரை பேய்க்காட்டினால் இனவெறி இல்லாமல் வேறென்ன காரணம் இருக்கும்…?

ஜேர்மனியில் பாதுகாப்பு,கல்வி ,மருத்துவம்,விரும்பிய வேலையைத்தேடிச்செய்யும் உரிமை,வேலை இல்லாவிடில் உதவி,பொழுதுபோக்கு,பேச்சு சுதந்திரம்......இப்படி பல உரிமைகள் உண்டு .இவற்றை உங்களால் இலங்கையில் வழங்க முடியுமா?அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ?சுதந்திரமாக....மகிழ்ச்சியாக....திருப்தியாக.....தேகாயரோக்கியமாக...நீதியாக...எதுவுமில்லை.  ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும்.

குமாரசாமியண்ணை எங்கு வாழ்த்தாலும் அவர் பிறந்த இடம் தான் அவரது மண்  அங்கு வாழும் மக்களே அவரது மக்கள் எனப்படுவார்.ஜேர்மனி அரசு பல ஆண்டு விசாரனைக்குப்பின் ,அவருக்கு இலங்கையில் நின்மதியாக உயிர் பாதுகாப்புடன் வாழமுடியாது என்பதைக் கண்டுயறிந்து ஒர் ஜேர்மன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளைப் போல் அவருக்கும் வழங்கிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு?

அங்கே. கையை...காலை....கண்ணை.....இப்படி உடல் உறுப்புகளை இழந்தவர்களும். அநேகம் பேர் உண்டு.    அண்ணாவை...தம்பியை....பெற்றேரை...இப்படி உறவினர்களை இழந்தவர்களும் அநேகர் உண்டு.     

வீடுகள்...ஆடுகள்....மாடுகள்....வாகனங்கள் ...காணிபூமிகள்...இழந்தேரும் அநேகமுண்டு.....இங்கே மிகுந்த கஸ்டத்தின் மததியில தான் வந்து சேர்தோம். ஒரு சில வருடங்கள் இருந்து விட்டுப்போகலாம் என்று.தான் வந்தோம் .பிறகு நடத்தது எல்லாம் நாங்கள் எதிர்பார்க்காதவையாகும்.

Link to comment
Share on other sites

13 hours ago, Kandiah57 said:

ஜேர்மனியில் பாதுகாப்பு,கல்வி ,மருத்துவம்,விரும்பிய வேலையைத்தேடிச்செய்யும் உரிமை,வேலை இல்லாவிடில் உதவி,பொழுதுபோக்கு,பேச்சு சுதந்திரம்......இப்படி பல உரிமைகள் உண்டு .இவற்றை உங்களால் இலங்கையில் வழங்க முடியுமா?அங்கு மக்கள் எப்படி வாழ்கிறார்கள் ?சுதந்திரமாக....மகிழ்ச்சியாக....திருப்தியாக.....தேகாயரோக்கியமாக...நீதியாக...எதுவுமில்லை.  ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும்.

ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடு. இலங்கை பின்தங்கிய நாடு. செல்வந்த நாட்டில் கிடைக்கும் வசதிகளுக்காக குமாரசாமி ஜேர்மனியில் இருக்கிறார் என்கிறீர்கள். பிறகு இலங்கை மண்ணுக்கும் உரிமை கோருகிறார். இங்கே உள்ளதையும் அனுபவித்துக் கொண்டு அங்கேயும் உரிமை கோருகிறார் இல்லையா? அங்கே இருப்பவர்கள் பாவம்... இவர் அவர்கள் நிலத்தையும் தனதாக்க பார்கிறார். 
 
13 hours ago, Kandiah57 said:

 ஒரு சிறிய வேலை எடுப்பதாலும் டக்கிமாமாவுக்குபின் மாதக்கணக்கில் அலைத்து பலலட்சம் செலவு செய்யவேண்டும்.

இலங்கையில் சிறிய வேலை செய்பவர்கள் கூட லட்சாதிபதிகளாக இருப்பதால் தான் அவர்களுக்கு வேலை எடுக்க கூடியதாக இருந்திருக்கிறது என்கிறீர்கள். இப்படி அடுத்தவனையெல்லாம் முட்டாள் என்று நினைத்து கதையளப்பதால்தான் உங்கள் கதைகள் எல்லாம் பொய் என்ற முடிவுக்கு உலக நாடுகள் எப்போதோ வந்துவிட்டன.

13 hours ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை எங்கு வாழ்த்தாலும் அவர் பிறந்த இடம் தான் அவரது மண்  அங்கு வாழும் மக்களே அவரது மக்கள் எனப்படுவார்.ஜேர்மனி அரசு பல ஆண்டு விசாரனைக்குப்பின் ,அவருக்கு இலங்கையில் நின்மதியாக உயிர் பாதுகாப்புடன் வாழமுடியாது என்பதைக் கண்டுயறிந்து ஒர் ஜேர்மன் குடிமகனுக்கு வழங்கும் உரிமைகளைப் போல் அவருக்கும் வழங்கிறது. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு?

குமாரசாமி அண்ணைதான் பொட்டம்மான் என்று தெரியாமல் எழுதிவிட்டேன். அவருக்கு நிச்சயமாக உயிர் ஆபத்து உண்டுதான். அண்ணை குமாரசாமி, நீங்கள் உயிரை பணயம் வைத்து தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவையோடு ஒப்பிடும் போது முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்கள் செய்ததெல்லாம் தூசுக்கும் நிகராகாது என்பதை அறியாமல் எழுதிவிட்டேன், மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

On 27/2/2021 at 06:12, விசுகு said:

இப்ப எனக்கு  சில  சந்தேகங்கள் வருகுது??

எனது அப்பா  அம்மா இலங்கையிலிருந்து நான் பிரான்சிலிருந்தால் அவர்களை  நான் எப்படி  அழைப்பது??

எனது  அண்ணன் தம்பி ஊரிலிருந்து நான் கனடாவிலிருந்தால் அவர்கள்  எனக்கு  என்ன முறை???

நான் பிரான்சிலிருந்து  எனது  மனைவி லண்டனில் இருந்தால் அவர்  எனக்கு  என்ன உறவு???

எனது  பிள்ளைகள் கனடாவிலிருந்து நான் ஊரிலிருந்தால்  எனது  பிள்ளைகள் என்ன  முறை  வரும்  எனக்கு??

ஒரே  குழப்பமாக்கிடக்கு???

உங்களுக்கு???

நீங்கள் குமாரசாமியாராக இருந்தால் அவர்களை எப்படி அழைப்பது என்று சிந்திப்பதிலும் பார்க்க அவர்கள் மண்ணை எப்படி உங்கள் மண்ணாக்குவது என்று திட்டம் போட்டிருப்பீர்கள். நீங்கள் இப்படி குழம்பி இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கற்பகதரு said:

ஜேர்மனி பொருளாதார வளர்ச்சியடைந்த செல்வந்த நாடு. இலங்கை பின்தங்கிய நாடு. செல்வந்த நாட்டில் கிடைக்கும் வசதிகளுக்காக குமாரசாமி ஜேர்மனியில் இருக்கிறார் என்கிறீர்கள். பிறகு இலங்கை மண்ணுக்கும் உரிமை கோருகிறார். இங்கே உள்ளதையும் அனுபவித்துக் கொண்டு அங்கேயும் உரிமை கோருகிறார் இல்லையா?

அவர் பொருளாதரத்தில் உச்ச வளர்ச்சி அடைந்த யேர்மன் நாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையை ஒரு கிரிக்கெட் போட்டியாக இரசித்து அனுபவிக்கிறார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.