Jump to content

கடிதமும் கடந்து போகும் !


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

கடிதமும் கடந்து போகும் !
=====================

 

நீங்கள் கடைசியாக எப்போது ஒரு தாளில் நண்பருக்கோ உறவினருக்கோ கடிதம் எழுதினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? போன வாரம்? போன மாதம்? போன வருடம்? அல்லது சில வருடங்களுக்கு முன்னர்?

ஆமாம், இன்றைய இணைய உலகில் ஏறக்குறைய வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் ஒன்றுதான்  கடிதம். ஆனால் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எமது பிரதான தொடர்பாடல் ஊடகமாக கடிதமே இருந்தது. அதற்கு தந்தி, தபால் அட்டை, inland letter, aerogram, air mail என்று வேறுவேறு வடிவங்களும் இருந்தன. 

Inland letter இந்தியாவில் மக்களிடையே உள்ளூர் கடிதத் தொடர்பில் அதிகம் புழக்கத்தில் இருந்தது. இதற்கு தனியாக கடித உறை மற்றும் முத்திரை தேவையில்லை (Ready made ஆடை போல). இது இரண்டு பக்கங்களைக் கொண்டது. அதில் ஒரு பக்கம் முழுவதும் எழுத முடியும், மறுபக்கத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தில் எழுத முடியும். மேலே உள்ள இரண்டு பகுதிகளில் அனுப்புநர் மற்றும் பெறுநர் விலாசத்தை எழுதி அதனையே மடித்து ஒட்டி அனுப்பி விடலாம். 
இதே வடிவத்தை ஒத்த aerogram கடிதம் இலங்கையில் வெளிநாட்டுக்கு அனுப்பும் வகையாக பயன்பாட்டில் இருந்தது. இதைத் தவிர கடித உறையோடு முத்திரை ஒட்டி அனுப்பும் Air Mail மூலம் கடிதத்துடன், எமது குடும்பப் படங்களை வைத்து வெளிநாட்டில் பணிபுரியும் குடும்பத் தலைவருக்கு அனுப்புவோம். வீட்டுத் தலைவரும் தான் வேலை செய்யும் நாட்டில் எடுத்த சில படங்களை அனுப்புவதுண்டு. செலவு குறைந்த முறையாக இருந்ததால் இலங்கையில் உள்ளூர் தொடர்பாடலில் தபால் அட்டையும் மக்களிடையே அந்த நாட்களில் மிகவும் பிரபலமாக இருந்தது.

கடிதங்கள் காகிதத்தில் உள்ள வெறும் எழுத்துக்களாக மட்டும் இருக்கவில்லை. அது அனுப்புபவர், பெறுபவர் இருவருக்கும் இடையிலான உணர்வை, உறவை மட்டுமல்ல சிலநேரங்களில் மனிதர்களையே உயிப்போடு வைத்திருக்கும் ஒரு கருவியாகவே இருந்தது. குறிப்பாக தூர தேசத்தில் பணிநிமித்தம் தனியே வாழ்ந்த ஆண்கள் தம் மனைவி மற்றும் பிள்ளைகள் அனுப்பும் கடிதங்களுக்காகக் காத்துக் கிடப்பார்கள். புதிய கடிதம் வரும்வரை கடைசியாக வந்த கடிதத்தை அடிக்கடி எடுத்த வாசித்து பரவசமாவார்கள். அவர்களின் ஆடைகள் இருக்கும் பெட்டியில் / அலுமாரியில் இந்தக் கடிதங்களுக்குக் கட்டாயம் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். 

கடிதங்கள் அதிகமாக புழக்கத்தில் இருந்த காலத்தில் நாம் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருந்தோம். சிலர் கடிதத்திலேயே கவிதையையும் சேர்த்தே எழுதுவார்கள். காதலர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். சில கடிதங்கள் கவிதைகளாலேயே நிரம்பிருக்கும். கடிதம் எழுதுவது ஒருவகையில் பாடசாலைக் கல்விக்கு வெளியே எமக்கான எழுத்துப் பயிற்சியாகவும் இருந்தது. இவ்வாறு தமது இளமைக் காலத்தில்  கடிதங்களைப் பயன்படுத்தியவர்களுக்கு, அவற்றோடு இணைந்த அனுபவங்கள் இன்றும் பசுமையாக இருக்குமென்றே நான் நம்புகிறேன்.

எனக்கு முதலில் பரீட்சயமான கடிதம் பாடசாலைக்கு கொண்டு செல்ல வேண்டிய சுகவீனக் கடிதமாகும். சில பிள்ளைகள் பாடசாலைக்கு வராது வீட்டில் இரண்டு நாட்கள் தொடர்ந்து நிற்பதற்காகவே தமது தாத்தா, பாட்டிமாரை அடிக்கடி கொல்வதும் உண்டு. வகுப்பாசிரியரிடம் சுகவீனக் கடிதத்தைக் கொடுத்ததும் அவர் அதைப் படிக்க முன்னர், “ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை” என்று கேட்பார். அதன் பின்னரே கடிதத்தைத் திறந்து படிப்பார். படித்த பின்னர் அதனை மடித்து வைத்துவிட்டு, வகுப்பு முடிந்ததும் தன்னுடன் எடுத்துச் செல்வார். அப்போதெல்லாம், ஆசிரியர் அந்தக் கடிதங்களை எல்லாம் கொண்டுபோய் என்ன செய்வார் என்ற கேள்வி என் மனதின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும். 

 அடுத்து நானே கடிதம் எழுதத் தொடங்கியது என் தந்தை வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றபோதுதான். மாதம் இருமுறை அவரிடமிருந்து கடிதங்கள் வந்து சேர்ந்துவிடும். ஒரு கடிதம் வந்து ஒரு வாரத்திற்குள் பதில் கடிதம் நாங்கள் எழுதி அனுப்புவோம் என்று அவர் காத்திருப்பார். கடிதத் தாளில் அம்மாவும் பிள்ளைகள் நாங்கள் நாலுபேரும் ஒருவர் பின் ஒருவராக எழுதுவோம். நாம் ஆளுக்கு நான்கு வசனங்கள் மட்டுமே எழுதுவோம். அப்பா ஒவ்வொரு முறையும் நிறைய விடயங்களை எழுதச் சொல்லுவார். பத்து வயதில் என்ன எழுதுவது என்ற குழப்பத்தில் ஆடு குட்டி போட்டது, சைக்கிள் ஓடி விழுந்தேன் என்று ஏதோவெல்லாம் எழுதியதாக ஞாபகம். ஒருவழியாக ஐந்தாறு வருடங்களில் அவர் ஊர் திரும்பியதும் அந்தக் கஷ்டமும் நீங்கியது.

பின்னர் என் பதின்ம வயதில் வேறு பல கடிதங்கள் பற்றியும் தெரிய வந்தது. அதில் முக்கியமானது காதல் கடிதம். எங்கள் ஊரிலும் கடிதம் கொடுத்து காதல் வளர்த்தவர்கள் பலர் இருந்தார்கள். பல இடங்களில் நண்பனுக்காக கடிதம் எழுதிக் கொடுத்து காதலை வெற்றி பெற வைத்த நல்ல நண்பர்களும் இருந்தார்கள். குழப்பிவிட்டவர்களும் இருந்தார்கள்.  சிலரின் காதல் திருமணத்தில் முடிந்தாலும் வேறு சிலரின் காதல் பாதியிலேயே கருகியதும் உண்டு. கடிதத்தை கடைசிவரை கொடுக்க முடியாமலே காதலைத் தவற விட்டவர்களும் இருக்கிறார்கள்.  

அந்த நாட்களில் ஒரு ஆணுக்கு தான் காதலிக்கும் பெண்ணுக்கு தன்னை பிடித்திருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதே பெரும்பாடு. கண்ணாலே கதை பேசி புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டாலும் காதலை உறுதிப்படுத்த கடிதங்களே ஆபத்துதவிகளாக கடிதங்களே இருந்தன. காதலைத் தெரிவிக்க அல்லது உறுதிப்படுத்த கடிதம் கொடுப்பது அப்படியொன்றும் இலகுவானதல்ல, படிக்கும் புத்தகத்தில் கடிதத்தை வைத்துக் கொடுத்துவிட்டு அல்லது அந்தப் பெண்ணின் தோழி மூலம் அனுப்பிவிட்டு என்ன பதில் வருமோ என்ற ஒரு பதட்டம் ஒருபுறம், கடிதம் தந்தை அல்லது தாயின் கைக்குப் போய் வீட்டிற்கு வழக்கு வருமோ என்ற பயம் ஒருபுறம் என்று அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.  

வீட்டுக்கு வீடு தொலைபேசிகள் கூட இல்லாத அந்த நாட்களில் காதலை உறுதிப்படுத்திக் கொண்டாலும் அதன்பின் காதலர்கள் சந்திந்துப் பேசுவதும் கிராமங்களில் இலகுவானதல்ல.  இதனால் பெரும்பாலும் அந்த நாட்களில் கடிதங்களே அந்தக் காதல்களை வளர்த்தன. அந்தக் கடிதங்களை தமது காதலியின் கையில் சேர்ப்பதும் பதில் கடிதம் பெறுவதும் சில நேரங்களில் ஒரு திரில்லர் திரைபடத்தை 3Dயில் பார்ப்பது போலத்தான் ஆண்களுக்கு இருந்தது. பெண்கள் தனியே வெளியே செல்வது குறைவென்பதால் சரியான சந்தர்ப்பம் பார்த்து அவள் உலாவும் நேரம் பார்த்து வீட்டு முற்றத்தில் வீசுதல், கல்லில் கட்டி அவள் கண்பட வீட்டுத் தோட்டத்திற்குள் வீசுதல். அவள் சைக்கிளின் செல்லும்போது உடன் செல்லும் தோழிக்கே தெரியாது  நுட்பமாக கடிதத்தை கைமாற்றுதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதைத் தவிர காதலுக்காக நிரந்தர மற்றும் தற்காலிகத் தூதுவர்களைப் பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.

சில வேளைகளில் இந்தக் கடிதங்கள் பெற்றோர், மாமன்மார் அல்லது அண்ணன்மாரின் கையில் சிக்கி கதாநாயகன் சின்னாபின்னமாவதும் உண்டு. இதனால் சில பெற்றோர் உடனேயே தமது பெண்ணுக்குத் திருமணம் முடித்து வைத்து, காதல் கடிதம் எழுதிக் கொண்டிருந்த கதாநாயகனைத் தாடி வைத்த கவிஞனாக மாற்றிவிடுவதும் உண்டு. சில காதல் கதைகளில் கடிதத்தோடு தூது போன தூதுவர்களே பெண்ணை கவர்ந்ததும் நடந்துண்டு. நான் ஐந்து வருடமாகக் காதலித்துத் திருமணம் புரிந்திருந்தாலும் கடைசிவரை என் மனைவிக்குக் காதல் கடிதம் எழுதவேயில்லை. அதை என் மனைவி இன்றும் ஒரு குறையாகச் சொல்வதுண்டு.

காதல் கடிதங்களை விட மிகவும் சுவாரசியமானவை எம்மவர்கள் எழுதும் மொட்டைக் கடிதங்கள். அதிலும் இரண்டு வகையான மொட்டைக் கடிதங்கள் உள்ளன. அதில் முதல் வகை குடும்ப, உறவு மட்டத்தில் குழப்பிவிடும் வகையிலான மொட்டைக் கடிதம். தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் திருமணத்தைக் குழப்புதல், கணவன் மனைவிக்குள் சண்டையைக் கிளப்புதல், தனது எதிரியாக இருப்பவனின் உத்தியோகத்தைக் கெடுத்தல், பிடிக்காதவர் வீட்டுத் திருமணத்தைக் கெடுத்தல், தனக்கு கிடைக்காத பதவி உயர்வு தன்னோடு உள்ள இன்னொருவனுக்கு கிடைக்கவிடாது செய்தலென நம்மவர்கள் மொட்டைக் கடிதங்களை நாகாஸ்திரமாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். 

இவ்வாறு யாரென்று தெரியாது கடிதம் எழுதும் இவர்கள் கடிதத்தை தமது ஊரில் இருந்து அஞ்சலில் சேர்க்காது இன்னுமொரு நகரத்துக்குச் சென்று அங்கு போடுவார்கள். சிலர் அதற்கு முத்திரை ஓட்டுவதும் கிடையாது. வேறென்ன, கடிதத்தைப் பெறுபவனே அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தட்டும் என்ற நல்ல நோக்கம்தான். 

இரண்டாவது வகை மொட்டைக் கடிதங்கள் நிறுவன மட்டத்திலான மொட்டைக் கடிதங்கள். இதில் சமூக நன்மைக்காக whistle blower ஆக உண்மையிலேயே சமூக அக்கறையில் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி அரசு அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யும் வகையிலானவை ஒருவகை. அடுத்தது அலுவலக உயரதிகாரிகள், சக ஊழியர்கள் மீது புகார் செய்து அடுத்துக் கெடுக்கும் வகையிலானவை இன்னொருவகை. எமது சமூகத்தில் மிகச்சிலரே உண்மையான சமூக அக்கறையோடு அடையாளத்தை மறைத்து புகார் செய்வதுண்டு. அதிகமாக petition வகையிலான மொட்டைக்கடிதங்கள் தமக்குப் பிடிக்காத அரசு உயரதிகாரிகளை மாட்டி விடுவதற்காகவே எழுதப்படுவது வழமை. அந்த நாட்களில் பெரும்பாலும் ஊருக்கு ஒரு மொட்டைக் கடித நிபுணர் இருப்பார். 

நான் வாழ்நாளில் யாருக்கும் மொட்டைக் கடிதம் எழுதாத போதும் எனக்கும் ஒரு  மொட்டைக் கடிதம் வந்தது. என் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பாக வந்திருந்த அந்தக் கடிதம், என் மனைவிக்கு அனுப்புவதற்கு பதிலாக என் விலாசத்திற்கே அனுப்பப்பட்டிருந்தது. நானும் அனுப்பியவரைத் திட்டிவிட்டு, வேறு வழியில்லாமல் மறுநாள் மனைவியைச் சந்தித்தபோது கொண்டுபோய் அவரிடம் கொடுக்க வேண்டியிருந்தது. கடிதம் எழுதியவரும் என்ன செய்வார் பாவம், எனது அலுவலக கோப்பில் என் வீட்டு விலாசம்தானே இருக்கும்? என் மனைவியும் வாசித்து வாய்விட்டுச் சிரித்துவிட்டு என்னிடமே கொடுத்துவிட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் கையெழுத்தை வைத்து அதை எழுதியவரையும் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் பின்னர் அவரிடம் நான் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

பாடசாலை நாட்களின் பின்னர் எனக்கு கிடைத்த கடிதங்களில் முக்கியமானது என் முதல் வேலை நியமன நேர்முகத் தேர்வுக்கான கடிதம். அதில் இருந்த செய்தி முழுக்க முழுக்க சிங்களத்தில் இருந்தது. அதில் மருந்துக்கும் ஆங்கிலமோ தமிழோ இருக்கவில்லை. எங்களூரில் நல்ல ஆங்கில அல்லது சிங்களப் புலமையோடு இதற்காகவே பிறப்பெடுத்தது போல சில மூத்தவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரிடம் ஓடோடிச் சென்று விளக்கம் பெற்றேன். பின்னர் கொழும்பு செல்ல அனுமதிக்கு விண்ணப்பிக்க ஒரு கடிதம், நேர்முகத்தேர்வுக்கு வருகிறேன் என அமைச்சுக்கு ஒரு கடிதம் என்பவற்றோடு எனது வாழ்க்கை நான் பிறந்த கிராமத்திலிருந்து தலைநகருக்கு நகர்ந்தது.

அதன் பின்னர், பல்கலைக் கழக அனுமதிக்கான படிவங்கள், பல்கலைக் கழகத்தில் இருந்த காலத்தில் பெற்றோருக்குக் கடிதம், படிப்பு முடிந்ததும் வேலைக்கு விண்ணப்பம், வேலையிலிருந்து விலகும் அறிவிப்பு, அடுத்த வேலைக்கு விண்ணப்பம், உயர் கல்விக்கான விண்ணப்பம் என்ற எமது காலத்தில் கடிதங்கள் எங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்தே இருந்தன. ஆனாலும் காலப் போக்கில் கைப்பேசிப் பாவனை, மின்னஞ்சல் என்பன கடிதம், தபால் அட்டை போன்றவற்றின் தேவைகளை இல்லாது ஒழித்தன. ஆனாலும் அலுவலகத் தேவைகளுக்காக  கடிதங்களின் பாவனை தொடர்ந்திருந்தது. இன்று கடிதம் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவென்றே சொல்லலாம்.

கடந்த பத்தாண்டுகளில் அலுவலகத் தேவைகளுக்கும் கடித உறையில் வைத்துக் கடிதம் அனுப்பும் வழக்கம் குறைந்து செல்லத் தொடங்கி இன்று நாம்  paperless கலாச்சாரத்துக்குள் முழுமையாக மூழ்கத் தொடங்கியிருக்கிறோம்.

-- அக்கம்-பக்கம் --
 

 

https://www.facebook.com/101881847986243/posts/281051986735894/?d=n

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கான அறைகூவலும் சாத்தியமின்மையும்   என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தமிழர் அரசியலை, குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர் அரசியலைப் பொறுத்தவரையில், அதைப் பற்றிப் பேசும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும், தமிழர் அரசியலில் ‘ஒற்றுமை’ வேண்டும் என்று கூறுவது, உலக சமாதானம் வேண்டும் என்று உலகத் தலைவர்கள் சொல்வது போன்ற சம்பிரதாயபூர்வமான சொற்றொடராகவே மாறிப்போயுள்ளது.  தமிழர் அரசியலைப் பற்றி கருத்துரைப்பவர்கள், தமிழர் அரசியலில் ஒற்றுமை இல்லை என்றும், தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்றும் சொல்வதை, பெரும்பாலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்தப் பொது மனநிலைக்குத் தீனி போடுமாற்போல, அரசியல்வாதிகளும் அவ்வப்போது ஒற்றுமைக்கான அறைகூவலையும் சிலவேளைகளில் ஒற்றுமையின்மை பற்றிய ஒப்பாரியையும் அரங்கேற்றுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், இதைப்பற்றி யாரும் கொஞ்சமேனும் அலசியாராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. தமிழ்க் கட்சிகளிடையே ஒற்றுமை என்று இங்கு பொதுவாக விளிக்கப்படுவது, கொள்கையளவில் வேறுபட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளிடையேயான ஒற்றுமையை அல்ல. மாறாக கொள்கையளவில் ஒற்றுமைகளைக் கொண்ட கட்சிகளிடையேயான ஒற்றுமையைத்தான். அது என்ன கொள்கையளவிலான ஒற்றுமை என்று சிலர் வினவலாம். தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசத்தின் அபிலாஷைகளாக தீர்க்கமாக இனங்காணப்பட்டுள்ள தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவையே தமிழ்த் தேசிய அரசியல் கொள்கைகளாக ஏற்கப்பட்டுள்ளன. ‘தமிழ்த் தேசிய கட்சி’களாகத் தம்மை முன்னிறுத்துபவை, இதையே தமது அடிப்படைக் கொள்கையாக முன்னிறுத்துகின்றன. இந்த அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான வழிவகைகள், ஆரம்பப்புள்ளி, அணுகுமுறை பற்றி அவற்றிடையே சில கருத்து வேறுபாடுகளை அடையாளம் காண முடியுமாயினும், அவற்றின் நோக்கங்களில் பெரும் வேறுபாடுகள் இல்லை. மறுபுறத்தில், தமிழ் அரசியல் பரப்பில், தேசிய கட்சிகளும் தேசிய கட்சிகளோடு கூட்டணியிலுள்ள கட்சிகளும் உண்டு. இந்தக் கட்சிகளைச் சார்ந்த தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்த் தேசியத்தின் சில பகட்டாரவாரக் கருத்துகளை முன்வைத்தாலும், தமிழ்த் தேசியம் பற்றி, சமஷ்டி பற்றியெல்லாம் பேசுவதில்லை. அது தேசிய கட்சிகளின் கொள்கையோடு சில இடங்களில் முரண்படும் என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆகவே இவர்கள் அதிகமாக அபிவிருத்தி பற்றிப் பேசுவதையும், ஆதரவுத்தள அரசியலை முன்னெடுப்பதையும் நாம் காணலாம். தேசிய கட்சிகளோடு, தமிழ்த் தேசிய அரசியல் கொள்கை ரீதியில் ஒன்றுபட முடியாத நிலை இருப்பதால், தமிழ் அரசியலில் ஒற்றுமை பற்றிப் பேசுபவர்கள், இந்தத் தேசிய கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளோடு கூட்டணியில் உள்ள கட்சிகளை அந்த ‘ஒற்றுமை’ எனும் பெயருக்குள் உள்ளடக்குவதில்லை. அப்படியானால், இங்கு தமிழ் அரசியலில் ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையேயான ஒற்றுமை என்ற பொருளிலேயே பயன்படுத்துவதை புரிந்துகொள்ளலாம். அப்படியானால், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதில் என்ன சவால்கள் இருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கு விடை காணும் முன்பு, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே, ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான தேவை என்ன என்பது பற்றியும் சிந்தித்தல் அவசியமாகிறது. தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுத்துவதற்கா, தேர்தல் அரசியல் தவிர்த்த பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, ‘ஒரே குரலாக ஒலிக்கும் போது, அந்தக் குரல் பலமான குரலாக இருக்கும்’ என்பதும், தேர்தல் அரசியல் காரணமாகச் சொல்லப்படுவது, ‘வாக்குச் சிதறலைத் தவிர்ப்பதன் மூலம், அதிக பிரதிநிதிகளை தமிழ்த் தேசிய கட்சிகளால் வென்றெடுக்க முடியும்’ என்பதுமாகும். ஒரு குரலாகத் தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுக்கும் போது, அந்தக் குரல் பலமானதாகத்தான் இருக்கும். ஒரு குரலைவிட, பல குரல்கள் எப்போதும் பலமானவையே. ஆனால், மக்கள் பிரச்சினைக்காக குரல்கொடுக்க எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து, ஒரு கட்சியாக இருந்தால்தான் அது சாத்தியம் என்று சொல்வதில் எந்த உண்மையுமில்லை. வேறுவேறு கட்சிகளாக இருந்தால் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக, அவை ஒன்றாகக் குரல் கொடுக்க முடியும். ஒரே கட்சியாகவோ கூட்டணியாகவோ இணைந்துவிட்டால் மட்டும் தான், எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள் என்று சொல்வதில் உண்மையிருக்க முடியாது. ஆகவே, இந்த ஒற்றுமைக்கான தேவைக்கான உண்மையான காரணமாக இருப்பது, தேர்தல் அரசியல் காரணிகள்தான். வாக்குச் சிதறலால், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பிளவுபட்டுவிடக்கூடாது என்பதை முன்வைத்துத்தான், தேர்தல் அரசியல் காரணத்துக்காகவேதான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூட உருவானது. இது உருவான போது, அதில் அங்கம் வகித்த எல்லாக் கட்சிகளுக்கும் அந்த ஒற்றுமை தேர்தலில் நல்ல பலனைத் தந்தது. இது கூட்டமைப்பில் போட்டியிட்டால், வெற்றிபெற்றுவிடலாம் என்ற தேர்தல் ஆதாயம்தான் ‘கூட்டமைப்பு’ என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்ப்பதாக இருந்தது. ‘தமிழ்த் தேசியம்’, ‘ஒற்றுமை’, ‘ஏக பிரதிநிதிகள்’ என்ற குறியீடுகளின் மதிப்பு, தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. ஆகவே, கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கான ஆசனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, தேர்தல் அரசியலில் கேள்வி அதிகமாக இருந்தது. அது, கட்சிகளிடையே ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை உருவாக்கியது. கூட்டமைப்புக்குள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சி, தனது மேலாதிக்கத்தை செலுத்தத்தொடங்கிய போது, அங்கு பிளவுகள் ஏற்பட்டன. கூட்டமைப்புக்குள் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட கட்சியோடு இன்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் கட்சிகள், தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும்தான் அங்கு ஒட்டிக்கொண்டு நின்கின்றன என்றால் அது மிகையல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கும் எழுச்சிக்கும் பின்பு, கடந்த பொதுத் தேர்தல்தான் அதற்கு மிகச் சவாலான தேர்தல் எனலாம். கூட்டமைப்பைத் தாண்டிய தமிழ் வேட்பாளர்கள், கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தார்கள். இதனால், கூட்டமைப்பில் தேர்தல் கேட்டால் வெற்றிதான், என்று மக்கள் பணிசெய்யாது, கூட்டமைப்பு ஆசனத்தில் அமர்ந்து தேர்தல் ருசி கண்டவர்கள் பலர்; கூட்டமைப்பு பெற்றுக்கொண்ட ஆசனங்கள் குறைவடைந்ததனால் தேர்தலில் தோல்வி கண்டிருந்தனர். மேலும், ஒரே கூட்டமைப்பாக இயங்கும் போது, தமக்கள் சிலர் விடும் பிழைகளைக் கூட விமர்சிக்க முடியாது. இது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அரசியல் ஜனநாயகத்தை மட்டுமல்ல, பொறுப்புக்கூறலையும் இல்லாதொழிப்பதாகவே அமையும். இந்தப் பின்புலத்தை வைத்துப் பார்க்கும் போது, இங்கு அரசியல்வாதிகளிடமிருந்து வரும் ஒற்றுமைக்கான கோஷம் என்பது, தேர்தல் அரசியல் சார்ந்ததாகவே இருக்கிறதேயன்றி, அது கொள்கைக்கானதாகவோ, மக்களுக்கானதாகவோ இல்லை. மேலும், இத்தகைய தேர்தல் ஒற்றுமை என்பது, அந்தக் கூட்டமைப்புக்குள் ஆதிக்கம் செலுத்தும் கட்சிக்கு சாதகமானதாகவே இருக்கும். தமிழ் மக்கள் விரும்பும் ஒற்றுமை, இத்தகைய தேர்தல் அரசியல் சார்ந்த ஒற்றுமையை அல்ல. இங்குதான் மக்கள் கேட்கும் ‘ஒற்றுமை’க்கும், அரசியல்வாதிகள் கேட்கும் ஒற்றுமைக்கும் வேறுபாடுண்டு. இங்கு மக்கள் விரும்பும் ‘ஒற்றுமை’ என்பது, மக்கள் பிரச்சினைகளில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதையே! அந்த விடயத்தில், தேர்தல் அரசியல், சுயநலக் காரணிகள் என்பவை தலையிட்டுவிடக்கூடாது என்பதே, தமிழ் மக்களின் அவா! ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் மக்கள் மையப் பணியொன்று, ஒரு தரப்பால் அல்லது கட்சியால் முன்னெடுக்கப்படும் போது, எங்கே அது வெற்றிபெற்றுவிட்டால், அது அந்தத்தரப்பினது அல்லது கட்சியினது வெற்றியாகிவிடும் என்று மக்கள் எண்ணிவிடுவார்களோ என்று, ஏனைய தரப்புகள் மற்றும் கட்சிகள் அதற்கு ஆதரவு தர மறுக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். இதற்காகத்தான் தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சிகள் அனைத்தும், ஓர் அரங்கத்தில், அல்லது வட்டமேசையில் இணையவேண்டும். அது தேர்தலைக் கடந்த தமிழ்த் தேசத்துக்காகக் குரல்கொடுக்கின்ற அரங்கமாக மாற வேண்டும். அதுதான் நீடித்து நிலைக்கத்தக்க ஒற்றுமையாக இருக்கும். தேர்தலை மையப்படுத்திய ஒற்றுமை என்பது, அடிபாடுகளிலும் முரண்பாடுகளிலும்தான் முடியும். ஏனென்றால், தேர்தலுக்கான ஒற்றுமை என்பது மக்களை மையப்படுத்தியதல்ல; அது தனிநபர்களின் தேர்தல் ஆதாயங்களை மையப்படுத்தியது. இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசத்தின் அரசியலும் ஒற்றுமைக்கான அறைகூவலும் தோற்றுக்கொண்டிருக்கின்றன.     https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்க்-கட்சிகளின்-ஒற்றுமைக்கான-அறைகூவலும்-சாத்தியமின்மையும்/91-289810  
  • ஒரே ஒரு டவுட்டு இதில். இந்த சாந்தி முகூர்த்தம் / முதலிரவு எல்லாம் இப்படி மாயவுலகிலா நடக்கும்? ( நிழலி, நெல்லை காலமடா  நீ 18 வருடங்களுக்கு முன்னே கலியாணம் கட்டியது)🏃‍♂️
  • ஒத்துழையாமையின் பிரதிபலிப்பு லக்ஸ்மன் கொவிட்-19 பெருந்தொ ற்றாகப் பரவியதற்கும், ஒவ்வொரு நாடும் இப்போதும் இன்னல்படுவதற்கும் ஒற்றுமையின்மையும் ஒத்துழையாமையுமே காரணமாகும். இதனை யாருக்கும் மறுத்துவிட முடியாது.  உலகின் அனைத்து நாடுகளிலும் படித்தவர்கள் முதல், பாமரர்கள் வரை வாழ்வாதாரத்தையே முன்னுரிமைக்குரிய விடயமாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இதற்கு முக்கியமானதொரு காரணமாகும்.   2022ஆம் வருடத்துக்கான நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, தனது அக்கிராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘நான் கொண்டது மாத்திரமே கொள்கை; அதுவே இலக்கு; வேறு யாருக்கும் கொள்கையில்லை; நோக்கமில்லை, இலக்கில்லை’  என்ற தோரணையிலேயே உரையாற்றியிருக்கிறார்.  இந்த உரையானது, பொதுஜன பெரமுன கூட்டணியில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்  கூட ஒத்துழையாமை என்ற நிலைப்பாட்டில் இருக்கையிலேயே நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது உரை மீதான மறுநாள் விவாதம், வெறிச்சோடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றமையை இதற்கு அடையாளமாகச் சொல்லலாம். “ஜனாதிபதியின் உரை, ‘யானை விழுங்கிய விளாம்பழம்’ போன்றது. அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஜனாதிபதி, தனது கொள்கை அறிக்கையில் ஏன் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்  என்பதை தெளிவுபடுத்துவார்  என எதிர்பார்த்தால், அவர் தனது பழைய கதைகளையே மீண்டும் கூறியிருக்கிறார்” என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கருத்து வெளியிட்டுள்ளார். “இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும் மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிந்தனை இருக்கிறது. இந்த நாடு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது.  இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாகச் செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும். அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும்” என்று என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதியின் உரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ஜனாதிபதியின் உரையில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் பற்றிய பார்வை எதுவும் இருக்கவில்லை. முழுமையான உரையில் ஓரிடத்தில் நாட்டில் வெளிநாட்டு நாணயம் தொடர்பான பிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டதைத் தவிர, பிரிதொரு விடயமும் இல்லை. நீண்டகாலமாக நாட்டில் இருக்கின்ற பிரச்சினையென ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு, அது கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த பல அரசாங்கங்களாலும் தீர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி, அதன் மூலம் அந்தப் பிரச்சினையை இன்னொருவர் தோளில் சாட்டவே ஜனாதிபதி முயன்றுள்ளார். ஆனால், பிரச்சினையை அடையாளம் கண்ட அவர், தீர்வினை அடைவதற்கான வழிமுறைகளை முன்வைக்கத் தவறிவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவருடைய கருத்தும் பெரும் விமர்சனங்களையே வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஜனாதிபதியைப் பொறுத்தவரையில்,  இன்னமும் மூன்று வருடங்கள் பொறுத்திருங்கள்; நான் சொன்னதைச் செய்வேன் எனச் சொல்லலாம். அந்த வகையில், மாற்றம் எதுவும் இன்றி, தான் கொண்ட கோலத்தை நடத்தவே திட்டமிடுகிறார் என்பது வெளிப்படையாகின்றது. பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு உருவாக்க முயற்சி, காணாமல் போனோர் பிரச்சினைக்குத் தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தம், பசுமை விவசாயக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கியிருந்த இந்த உரையில், இலங்கையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து எந்த ஒரு கருத்தையும் முன்வைக்கவில்லை. பெரும் எதிர்பார்ப்பாக இருந்த வேறும் பல விடயங்கள் கணக்கிலெடுக்கப்படவில்லை என்பது பிரதானமான விமர்சனங்களாக இருக்கின்றன.   பொதுவான நாட்டின் செயற்பாடுகள் குறித்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களுக்கு இடையில் ஒத்துழையாமை காணப்படுகிறது. ஒத்துழையாமை என்பதற்கு தலைமைக்கு ஒத்துழைக்காமை, தலைமை ஒத்துழைக்காமை, ஒருவருடன் ஒருவர் உடன்படாமை என்று பலவாறாகக் கொள்ளமுடியும். இங்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இந்தக் குழப்பம் இருப்பதை அறிய முடிகிறது. அதேநேரத்தில் சர்வாதிகாரப் போக்கான ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், விலகியிருக்கும் அல்லது ஒதுங்கியிருக்கும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவே கொள்ள முடிகிறது. இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிக்கப்பட்டமையானது, பல்வேறு விதமான பதிவுகளை விட்டுச் சென்றிருக்கிறது. அது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை ஓர் இறுக்கமான கட்டுப்பாடான நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதனைச் சர்வாதிகாரச் செயற்பாட்டு முறைமையாகவே கொள்ள முடியும். இவ்வாறிருக்கையில், நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அதிகார ரீதியான போட்டிகளுக்குள் முண்டுப்பட்டு, அடக்குமுறை ரீதியான நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு, அகிம்சை, ஆயுதம், இராஜதந்திரம் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதற்கான ஒத்துழையாமை ஒன்றினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உருவாக்கி வருகிறார். ஆரம்பத்தில் வெளிநாடுகளின் அழுத்தங்களையும் புலம்பெயர் அமைப்புகளின் கருத்துகளையும் சட்டை செய்தாத அவர், இப்போது புலம்பெயர் அமைப்புகளை நாடி வருகிறார். இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்காவின் நியூயோர்க் சொன்றிருந்த வேளை, அவர் விடுத்த புலம்பெயர் தமிழர்களுக்கான அழைப்பு மற்றும் சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட்டிடம் அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பேற்படுத்தும்படி கோரியமை போன்றவற்றினைக் குறிப்பிட முடியும். முக்கியமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைச் சந்திப்பதற்கான அழைப்பினை தாமாகவே விடுத்துவிட்டு, அதனை இரத்துச் செய்து இன்னமும் மீள அழைக்காதிருப்பது கூட, ஓர் ஒத்துழையாமையின் படிநிலையே. இது ஏன் நடைபெறவில்லை என்பதற்கு காரணம் திரைமறைவானதாகவே இருக்கிறது. மிகவும் இராஜதந்திரமாக நகர்வதாகக் காட்டிக்கொள்ளும், வீண் முயற்சியாகவே இதனைக் கொள்ள முடியும். உள்ளே இருப்பவர்களை உதறித்தள்ளிவிடுதல் என்ற நிலைப்பாட்டுக்கு, நாட்டின் பொருளாதாரத்தினை நிமிர்த்துவது ஒன்றே நோக்கம் என்றே கொள்ள முடியும். இன்றொரு வகையில் தமிழர்களை ஏமாற்றும் மற்றொரு முயற்சியாகவும் சந்தேசிக்க முடிகிறது. அந்தவகையில் அவர்களுடைய ஒழுங்கிலேயே, தமிழ் மக்களின் அரசியல் தரப்பும் ஒத்துழையாமை நிலைப்பாட்டினை பிரதிபலித்திருக்கிறது. அதன் ஒரு படிதான் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கான 13ஐ அமல்படுத்தக் கோரும் ஆவணக் கையளிப்பாகும். மின்சாரம் துண்டிக்கப்படுமா, துண்டிக்கப்படாதா என்று தெரியாத நிலையில் இருக்கும் மக்கள் அரசியல்வாதிகளின் இறுமாப்பு மோதல்களுக்குள் சிக்கமாட்டார்கள் என்றாலும், பெருந்தேசியச் சிங்களப் போக்கு இனவாதமானது இலங்கையில் எழுந்தே நிற்கிறது. இந்த நிலைப்பாட்டுக்கு  சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தெரியாத ஒன்றல்ல. தெரிந்தும் தெரியாமலிருக்கின்ற ஒத்துழையாமைதான் காரணம். இந்த ஒத்துழையாமையின் பிரதிபலிப்பாக நாட்டில் உருவாகி வருகின்ற வீணான பிரச்சினைகளை ஜனாதிபதி எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதுதான் மில்லியன் கேள்வி. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  கையாளும் வஞ்சகத் தனமான இராஜதந்திர முறைமை, நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்கிற மாயத்தனம் ஒத்துழையாமையின் முழு வெளிப்படையாகும். இந்த ஒத்துழையாமையானது இன்னமும் பல தசாப்தங்களுக்கு இலங்கை நாட்டை மீட்கமுடியாத நிலையை நோக்கியே நகர்த்தும்.     https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஒத்துழையாமையின்-பிரதிபலிப்பு/91-289809  
  • வெண்ணை கையிலிருக்க நெய்க்கு உலகமெல்லாம் அலையும் அன்புக் கள உறவுகளே! எங்கள் நித்தியானந்த சுவாமிகளை மறந்ததென்ன.... எங்களுக்கு எந்தச் செலவுமின்றித் தனி நாடமைக்க இந்தச் சுவாமியை நாடினால் போதுமே. நித்தியானந்தா சுவாமிகள் ஒரு தமிழரல்லவா அவர் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்த பரிவாரங்களுடன் தங்கியுள்ளார், அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவவுள்ளதாக கருதப்படுகிறது.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.