Jump to content

யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மேலும்,

யாழ்ப்பாண மக்களுடைய பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தோம். பனை அபிவிருத்தி தொடர்பிலும் ஆராய்ந்தோம் அதேபோல் பனை உற்பத்திகளை எவ்வாறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதையும் ஆராய்ந்தோம் அத்தோடு புகையிலை உற்பத்தி தொடர்பிலும் புகையிலை உற்பத்திப் பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பாகவும் ஆராய்ந்தோம்.

படகுாகட்டுமானங்கள், விவசாயம் மூலம் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

அரச பொருளாதார ஊக்குவிப்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பினூடாக சில திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

வடபகுதியிலுள்ள சிறு தொழில் முயற்சியாளர்கள், நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தாமாகவே தமது நிலையை மேம்படுத்தி செல்வது வரவேற்கதக்கது.

முதலீட்டாளர்களுக்கு எமது அமைச்சின் ஊடாக பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம். அத்தோடு மேலும் வடபகுதியில் இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்கள் நடுத்தர முயற்சியாளர்களுக்கு எம்மாலான உதவியை ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரதேங பொருளாதாரத்தை முன்னேற்ற செல்ல முடியும் என்பது எமது நோக்கமாகும்.

வடக்கில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள திறப்பதற்கு நாங்கள் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றோம். எனினும் எதிர்காலத்தில் அவற்றை மீள திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

நுண் கடன் திட்டம் என்பது ஒரு பிரச்சினையான விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக நுண் கடன் பட்டவர்கள் கடனை மீளச் செலுத்த முடியாத நிலை இங்கே காணப்படுகின்றது அதோடு இந்த நுண்கடன் தொடர்பாக நாடு பூராவும் ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

குறிப்பாக கடன் பெற்றவர் பலர் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. சிலர் கடனை பெற்று சில தொழில் முயற்சியில் ஈடுபட்டிருப்பார்கள். எனினும் அந்த தொழில் முயற்சியானது, தொழில் சுற்றாடல் மற்றும் அகசூழல் காரணமாக அது சாத்தியப்படாத்தன் காரணமாக பொதுமக்கள் அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது” என்றார்.

யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

பாதி  சனம்  அங்கு இல்லை ஆனாலும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இவர்களின் ஒவ்வொரு திட்டத்திலும் மறைநீர் இழப்பு உண்டு .

தீவுப்பகுதிகள் கோடைகாலம்களில் சொல்லவே தேவையில்லை .

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கின்றது 

வரைதல்

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கிறது

கருத்து

மலிவான மூங்கில் கோபுரம் தினமும் காற்றில் இருந்து 100 லிட்டர் தண்ணீரை சேகரிக்கிறது

நீர் சேகரிப்பு வலையமைப்பு

மூங்கில் வலுவான இணைப்புகள்

https://www.intelligentliving.co/bamboo-tower-collects-water-from-air/

கண்ணை குத்திக்கொண்டு விடியலை தேடுகிறோம் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

இப்பொறிமுறை யாழ்ப்பாணம் போன்ற வறண்ட இடங்களில்( ஈரப்பதம் குறைந்த ) சாத்தியமானதா?. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 50L முதல் 100L வரை புதிய தண்ணீரை சேமிக்கின்றது என்று  கூறுகிறானர் . இந்த உரிமைகோரல் சாத்தியமானதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

இப்பொறிமுறை யாழ்ப்பாணம் போன்ற வறண்ட இடங்களில்( ஈரப்பதம் குறைந்த ) சாத்தியமானதா?. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 50L முதல் 100L வரை புதிய தண்ணீரை சேமிக்கின்றது என்று  கூறுகிறானர் . இந்த உரிமைகோரல் சாத்தியமானதா?

சாத்தியமானது ஆனால் விளங்காத அரசியலால் இருப்பதையும் பறி கொடுக்க போகிறம் தற்போது உள்ள மழை 40 வீதம்   வீழ்ச்சியை சேமித்தாலே  காணும் .

The structure provides both clean water and shade

Link to comment
Share on other sites

18 minutes ago, பெருமாள் said:

 தற்போது உள்ள மழை 40 வீதம்   வீழ்ச்சியை சேமித்தாலே  காணும் .

உங்கள் கூற்று உண்மையானதே. மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை  செய்யாமல், யாழ்ப்பாணத்தில் இருக்கும் மெத்த படித்த அறிவாளிகள் இரணைமடுவில் இருந்து நீரை உறிஞ்ச பாக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி பெருமாள். மிகத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பம் இது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதில் இசுரேலும் எளிமையான ஆனால் பயன் மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இவை பற்றியும் அறிந்தவர்கள் பகிர்ந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

உங்கள் கூற்று உண்மையானதே. மழை நீரை சேகரிக்கும் திட்டத்தை  செய்யாமல், யாழ்ப்பாணத்தில் இருக்கும் மெத்த படித்த அறிவாளிகள் இரணைமடுவில் இருந்து நீரை உறிஞ்ச பாக்கின்றார்கள்.

அங்குள்ள அரசியல்வாதிகளை கேளுங்கள் சராசரி யாழின் மழைவீழ்ச்சி எவ்வளவு என்று சரியான பதில் வராது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கற்பகதரு said:

மிகவும் நன்றி பெருமாள். மிகத் தேவையான பொருத்தமான தொழில்நுட்பம் இது. மழை நீரை சேமித்து பயன்படுத்துவதில் இசுரேலும் எளிமையான ஆனால் பயன் மிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இவை பற்றியும் அறிந்தவர்கள் பகிர்ந்தால் நல்லது.

பெரிய தொழில் நுட்பமெல்லாம் தேவையில்லை. இருக்கிற குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி  மழைத்தண்ணியை சேகரிச்சாலே போதும். நிலமும் குளிர்ச்சி அடையும். நல்ல தண்ணியும் எப்பவும் கிடைக்கும்.

எப்ப பாத்தாலும் தொழில் நுட்பம்.....வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் புத்தி நல்ல புத்தி.

எங்கடை முன்னோர்கள் செய்ததை தான் வெள்ளைக்காரனும் செய்யிறான். 

நீர் தேக்கங்கள் அன்று தொடக்கமே வலியுறுத்தி வரப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

30 minutes ago, குமாரசாமி said:

கடந்த முறை ஊருக்கு போன பொழுது(2019) பார்த்தது என்னவென்றால், குளங்களை தூர்வாரவில்லை அதனை நிரப்பி வீடுகள் கட்டி வைத்திருக்கின்றார்கள். யாழ் நீரேரிகளை நானீரேரிகளாக மற்றும் ஆறுமுகம் திடத்தை சில யாழ்ப்பாண  அறிவாளிகள் தடுத்து வைத்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

45 minutes ago, குமாரசாமி said:

பெரிய தொழில் நுட்பமெல்லாம் தேவையில்லை. இருக்கிற குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி  மழைத்தண்ணியை சேகரிச்சாலே போதும். நிலமும் குளிர்ச்சி அடையும். நல்ல தண்ணியும் எப்பவும் கிடைக்கும்.

எப்ப பாத்தாலும் தொழில் நுட்பம்.....வெள்ளைக்காரன் கெட்டிக்காரன் புத்தி நல்ல புத்தி.

எங்கடை முன்னோர்கள் செய்ததை தான் வெள்ளைக்காரனும் செய்யிறான். 

நீர் தேக்கங்கள் அன்று தொடக்கமே வலியுறுத்தி வரப்பட்டுள்ளது.

அண்ணை, இசுரேல் “வெள்ளைக்காரன்” இல்லை - மத்தியகிழக்கு ஆசிய நாடு. பாலைவனம் என்பதால் தண்ணீர் சேகரித்து பயன்படுத்துகிறார்கள். எங்கட ஆட்களின் போர்க்கால தொழில்நுட்பங்கள் பற்றி “பொருத்தமான தொழில்நுட்பம்” Appropriate Technology என்ற உலகப்புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகையில் அந்த நாட்களில் படிக்க கிடைத்தது. பொருளாதாரத்தடையிலும் எப்படி வாகனம் ஒடியது, மின்சாரம் கிடைத்தது, தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இயங்கியது என்றெல்லாம் யாரோ ஒரு “வெள்ளைக்கார” விஞ்ஞானி வியந்து எழுதியிருந்தார். ம்..... எங்களுடைது என்றால் அதை தொழில்நுட்பம் என்று கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவா இந்த தாழ்வு மனப்பான்மை?

Link to comment
Share on other sites

இஸ்ரேல் கடல் நீரை சுத்திகரித்து (உப்பை நீக்கி) தான் தேவைக்கு பயன்படுத்துகிறார்கள். 

https://www.irishtimes.com/news/ireland/irish-news/how-israel-used-desalination-to-address-its-water-shortage-1.3959532

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடுகளில் உலக வெப்பமயமாவதை பெரும்பாலும் பொய்யென்று நம்புகிறார்கள், குறிப்பாக வலது சாரி அரசியல்வாதிகள். சில நாடுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு, வரட்சி, காடெரிவு, பனிப்பொழிவு என்று சடுதியான காலனிலை மாற்றம் நிகழ்வதற்கு துருவங்களில் நிகழ்ந்த பனியுருகல் காரணம் கூறுகிறார்கள், உயர் மற்றும் தாழமுக்கங்களினால் காற்று ஒரு நதி போல் பிராந்தியங்களினூடக பயணிக்கின்றது அந்த நதியோட்டம் பலவீனமடைந்ததால் இவ்வாறு காலனிலை மாற்றம் நிகழ்வதாகக்கூறப்படுகிறது, 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.