Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நிழலி 
உங்களிடம் அதீத கற்பனை வளமும், சிறந்த எழுத்தாற்றலும் உள்ளது, மென்மேலும் எழுத வாழ்த்துக்கள்.
அதேபோல், நீங்கள் பாலியல் fantasy இல் நாட்டம் உள்ளவர் போல் தெரிகின்றது. கட்டுப்பெட்டியான தமிழ் சமூகத்தில் பிறக்காமல், பிரஞ்சு போன்ற  திறந்த மனமுடைய (open minded) சமூகத்தில் பிறந்து இருக்க வேண்டியவர்.
 

Link to post
Share on other sites

மேலும் மேலும் உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றி. இன்னும் இரண்டு பகுதிகள் மட்டுமே உள்ளன எழுதி முடிக்க. ராசுக்குட்டியின் அனுபவங்கள் சிலருக்கு பாடமாக அமையலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

மேலும் மேலும் உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றி. இன்னும் இரண்டு பகுதிகள் மட்டுமே உள்ளன எழுதி முடிக்க. ராசுக்குட்டியின் அனுபவங்கள் சிலருக்கு பாடமாக அமையலாம்.

 

ஏன்  ராசா  பயப்படுத்துகிறீர்கள்??

இப்பத்தான்  ஒருத்தர்

பிரஞ்சு போன்ற  திறந்த மனமுடைய (open minded) சமூகத்தில் பிறந்து இருக்க வேண்டியவர் என்று  உற்சாகம்  தந்திருக்கிறார்??😜

 

Link to post
Share on other sites

பகுதி 3: - தவறான மருந்து

இப்ப வரும் திரைப்படங்களில் நேர்கோட்டில் (linear) இல் கதை போய்க்கொண்டு இருக்கையில்  இடையே இன்னொரு குட்டிக் கதை (nonlinear) வந்து போகின்ற மாதிரித்தான் ராசுக்குட்டியின் இந்தக் கதையின் இடையில் இன்னொரு குட்டிக்கதை. 

இது அவர் உயிர் அருந்தப்பில் பிழைத்தது கூகிள் ஆண்டவரால் தான் என்று நம்பி கொண்டிருந்த கதை.

பிறக்கும் போதே தனக்கு ஞானம் வந்துவிட்டது என்று தன் மனசுக்குள் நினைத்துக் கொண்டு இருந்த ராசுக்குட்டிக்கு கடவாயில் கொஞ்சம் லேட்டாகத்தான் ஞானப்பல்லு முளைத்தது. சும்மா எல்லா பல்லும் தன் பாட்டுக்கு ஒரு கரைச்சலும் இல்லாமல் அமைதியாக வந்து தன்ர இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்க, உந்த ஞானப்பல்லு மட்டும் ராசுக்குட்டிக்கு தன் சேட்டையை காட்டியது. 

முதலில் கொஞ்சமே கொஞ்சமாக வெளியே வந்து முரசை அணு அணுவாக பதம் பார்த்தது. அது வளர்ந்து வரும் மட்டும் வலி என்றால் அப்படி ஒரு வலி  ராசுக்குட்டிக்கு . பிறகு திடீரென வேகமெடுத்து வளர, நல்லா சாப்பிட்டு உருண்டு திரண்டு இருந்த சொக்கையை உள் பக்கமாக கிழிக்க தொடங்கி ஞானப்பல்லு தன் அடுத்த கட்ட தாக்குதலை மேற்கொள்ள துடிச்சுப் போனார் ராசுக்குட்டி,

சரி, இப்படி எல்லா வேதனையை அனுபவித்த பின் முழுமையாக வந்த ஞானப்பல்லு சும்மா இருக்கவில்லை. அது தன் பக்கத்தில் முரசில் ஒரு சிறு வெடிப்பை நிகழ்த்த, ஒரு நாளைக்கு இரண்டு தரம் பல்லுத்தீட்டும் போதும் நிகழும் தாக்குதலை சமாளிக்க பக்றீரியாக்கள் அந்த வெடிப்புக்குள் கவர் எடுத்து தங்கிட்டினம். வந்து தங்கின பக்றீரியாக்கள் தங்கள் வேலையை காட்ட, வெண் குருதிச் சிறுதுணிக்கைகள் அவர்களுடன் மல்யுத்தம் நடத்த, ராசுக்குட்டி வேதனையில் மீண்டும் துடி துடித்துப் போனார். 

ஒரு கட்டத்தில் வேதனையின் அளவு அதிகரிக்க பல்லு டாக்குத்தரிடம் ஒடிப் போக, "நீ ஏன் இவ்வளவே லேட்டாக வந்தனீ" என அவர் கோபப்பட்டு அன்ரி பயோடிக்கு (Antibiotic) மருந்தெழுதி தந்தார். முதலிலேயே போயிருந்தால், ஞானப்பல்லு தேவையற்றது என்று கழட்டி எடுத்து மனுசன் கொஞ்சம் காசு பார்த்து இருக்கும். அது நடக்காத கோபம் போலும். 

ராசுக்குட்டியும் பக்கத்தில் இருக்கும் பார்மசிக்கு போய் மருந்து வாங்கி அடுத்த நாள் காலையில் முதல் குளுசையை போட்டு விட்டு, மனிசிக்கு 'ரற்றா' சொல்லி வேலைக்கு செல்லும் போது (மனுசி "போயிட்டு வாங்கோ" என்று சொல்லி வழியனுப்பாட்டில் விபத்தில் சிக்கி விடுவேனோ என்ற பயம் ராசுக்குட்டிக்கு) ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். 

ராசுக்குட்டிக்கு காரை ஒட்டு, போது லேசாக தலையை சுத்துற மாதிரி இருந்தது. பிறகு மூன்று விரல்கள் உணர்ச்சியற்று போனது போல இருக்க ஸ்ரியரிங்கை பிடிக்க கஷ்டப்பட்டுக் கொண்டே அலுவலகத்துக்கு ஒரு மாதிரி போய் சேர்ந்தார். அங்கு போன பின் தலைச்சுற்று அதிகரிக்க, மனிசிக்கு தொலைபேசியில் அழைத்து விடயத்தை சொல்ல, "நீங்கள் குடிச்ச மருந்து பிழை போல" என்று மனிசி குண்டைத் தூக்கி போட்டார். 

"எதுக்கும் மருந்தின் பெயரை படம் எடுத்து அனுப்புங்கோ" என்று சொல்லி, மருந்தின் லேபலை மனிசி படம் எடுத்து மொபைலில் அனுப்ப, ராசுக்குட்டி அதை பற்றி கூகிள் ஆண்டவரிடம் அபிப்பிராயம் கேட்க, "அது அன்ரி பயோடிக் இல்லை....இது புற்று நோயாளர்கள் ஹீமோ தெரபிக்கு பிறகு குடிக்கும் மருந்து" என்று விடை தந்தார் கூகிள் ஆண்டவர்.

அவ்வளவு தான் ஆடி போய் விட்டார் ராசுக்குட்டி. 

பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார்.

 "நீ உடனடியாக அம்புலன்ஸ் இற்கு அடிச்சு எமர்ஜென்சிக்கு போ, அதற்குள் உன் வேலைக்கு அருகில் உள்ள ஹொஸ்பிடலுக்கு நான் தகவல் அனுப்புகின்றேன் என்று பரபரத்தார் பல்லு வைத்தியர். நம்மட ராசுக்குட்டிக்குத்தான் பொறுமை மருந்துக்கும் இல்லையே,.. எனவே தன்னால் காரில் உடனடியாக போய்ச் சேர முடியும் என நினைத்து அம்புலன்ஸை கூப்பிடாமல் தானே காரை செலுத்தி 30 நிமிடம் தாமதமாக ஹொஸ்பிடலின் எமர்ஜென்சி பிரிவில் தன்னை கொண்டு போய் தானே ஒப்படைச்சார்.

" நல்ல வேளை ஒரு தடவை மாத்திரம் நீ மருந்து எடுத்துள்ளாய் .. இன்னும் கொஞ்சம் எடுத்து இருந்தால் பாரதூரமாக போயிருக்கும்" என்று சொன்ன மருத்துவர்கள், " நீ உண்மையில் கெட்டிக்காரன், எப்படி இந்த மருந்து தவறு என்று கண்டுபிடித்தாய்" என்று ஆச்சரியப்பட்டு பாராட்டிக் கொண்டு இருக்கும் போது, ராசுக்குட்டி மனசுக்குள்"கூகிள் ஆண்டவரிடம் ஒரே அடியாக சரணாகதியாகிக் கொண்ரு இருந்தார்.

அன்று தொட்ட பழக்கம் கடைசியாக சிறு நீர் பிரச்சனையின் இறுதி பரிசோதனையில் அடைந்த அந்த ''கொடுமையான வலி'' வரை தொடர்ந்தது ராசுக்குட்டிக்கு.

- தொடரும்

 • Like 8
 • Sad 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

பல்லு டாக்குத்தரிடம் உடனே இது பற்றிக் கதைக்க, விடயம் தெளிவானது. அவர் எழுதித் தந்த மருந்தின் பெயருக்கும் பார்மசி தந்த மருந்தின் பெயருக்கும் இடையே இரண்டே இரண்டு எழுத்துகள் மட்டுமே வித்தியாசம். எனவே பார்மசிகாரர் பிழையாக மருந்து தந்து போட்டார்.

இதுவே அமெரிக்காவென்றால் பணம் பண்ணியிருக்கலாம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தவறான மருந்தை தந்த மருந்தகம் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.அன்ரிபயோடிக் தரும் போது சாதரணமானவர்கள் தர மாட்டார்களே பார்மசிஸ்ட் விளக்கம் சொல்லித் தானே தந்திருப்பார்.தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டால் இப்படி எத்தனை உயிர்களோடு விளையாடுவார்கள்..🤔

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவே அமெரிக்காவென்றால் பணம் பண்ணியிருக்கலாம்.

அமெரிக்கா என்றில்லை உலகமெங்கும் பல் சார்ந்து ஒரே குறிக்கோள் தான் 

பணம்.

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதுவே அமெரிக்காவென்றால் பணம் பண்ணியிருக்கலாம்.

 

8 minutes ago, யாயினி said:

தவறான மருந்தை தந்த மருந்தகம் மேல் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.அன்ரிபயோடிக் தரும் போது சாதரணமானவர்கள் தர மாட்டார்களே பார்மசிஸ்ட் விளக்கம் சொல்லித் தானே தந்திருப்பார்.தவறுகளை கண்டு கொள்ளாமல் விட்டால் இப்படி எத்தனை உயிர்களோடு விளையாடுவார்கள்..🤔

நடவடிக்கை எடுக்கப்பட்டு மருந்தகர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். நிரந்தரப் பாதிப்பு மற்றும் உடலில் விசம் ஏறுதல் போன்றவை ஏற்படாமையால் நட்ட ஈடு கேட்கவில்லை. அப்படி கேட்டால் 5 ஆயிரத்துக்குள் தான் வரும் என்பதால் ராசுக்குட்டிக்கு மினக்கெட நேரமில்லை (5 இலட்சம் என்றால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு நட்ட ஈடு கேட்டு இருப்பார் என்பது வேறு விசயம்)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

 

நடவடிக்கை எடுக்கப்பட்டு மருந்தகர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். நிரந்தரப் பாதிப்பு மற்றும் உடலில் விசம் ஏறுதல் போன்றவை ஏற்படாமையால் நட்ட ஈடு கேட்கவில்லை. அப்படி கேட்டால் 5 ஆயிரத்துக்குள் தான் வரும் என்பதால் ராசுக்குட்டிக்கு மினக்கெட நேரமில்லை (5 இலட்சம் என்றால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு நட்ட ஈடு கேட்டு இருப்பார் என்பது வேறு விசயம்)

சரி தகவலுக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2021 at 19:31, நிழலி said:

 

நடவடிக்கை எடுக்கப்பட்டு மருந்தகர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். நிரந்தரப் பாதிப்பு மற்றும் உடலில் விசம் ஏறுதல் போன்றவை ஏற்படாமையால் நட்ட ஈடு கேட்கவில்லை. அப்படி கேட்டால் 5 ஆயிரத்துக்குள் தான் வரும் என்பதால் ராசுக்குட்டிக்கு மினக்கெட நேரமில்லை (5 இலட்சம் என்றால் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு நட்ட ஈடு கேட்டு இருப்பார் என்பது வேறு விசயம்)

உண்மைக்கதை போல் இருக்கு, நான் உங்களது கற்பனையில் என்று நினைத்து விட்டேன். தொடருங்கள்.....!  🤔

Link to post
Share on other sites

இறுதிப்பகுதி.

சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது.  இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது.

ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது.

முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த  முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர்.

ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு  வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை.

CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார். 

மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார்.

இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.

ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு. 

மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது.  என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு.

prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம்.

image.png

சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர்.

"இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான்.

ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார்.

"இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு.

டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது.

பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது

எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார். 

டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார்.

"எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை" 

"நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும்

"ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.

 • Like 6
 • Thanks 2
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி கதைக்கு??

தொடர்ந்து  எழுதுங்கள்

வாழ்த்துக்கள்

 

(அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு  வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை.

நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்ப பலரும் ராசுக்குட்டி போலத்தான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த  முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர்.

இது ராசுக்குட்டி மாத்திரமல்ல தமிழர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று.
ராசுக்குட்டி விதிவிலக்கா என்ன?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)

நானும் இதைத் தான் யோசித்தேன்.

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நிழலி அவர்களே.! கற்பனைக்கு வாழ்த்துக்கள்..!!

பாவம் ராசுக்குட்டி ஆர் பெத்த பிள்ளையோ..?? நாங்கள் களத்தில் கருத்தெழுதி உங்களிடம் மாட்டுப்படுவதுபோல் அவரும் கூகுள் ஆண்டவரைத் தரிசிக்கப்போய் மாட்டிக் கொண்டாரே.!!

ஆனாலும் பிறவிக் குணம் யாரைவிட்டது..! மனைவி சொன்ன புளி, சின்ன வெங்காயம், உள்ளி வாங்குவதற்கும் கூகுள் ஆண்டவரைத் தரிசித்த பின்புதான் கொள்முதல் செய்தாராம்.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை வாங்கும்போது தெளிவான, திரட்சியான, ஒரே அளவிலான சீரான நிறத்துடன் ஈரப்பதமில்லாதவற்றை வாங்க வேண்டும். மிருதுவான, ஈரப் பதமுள்ள, மேற்தோலில் கரும்புள்ளிகள் உடையவற்றையும், முளைவிட்டதையும் தவிர்க்க வேண்டும்.

புளி

புளி இதயத்திற்கு நல்லது. ஏனெனில் இது கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சிறிது எடை குறைக்க விரும்புவோருக்கு புளிச் சாறு ஏற்றது. லேசான டையூரிடிக் பண்புகளையும் கொண்டுள்ளது, உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும். உடலை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவும்.

உள்ளி

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது. சில விடயங்கள் நெருடலாக இருந்தாலும் கதையை நகர்த்தும் விதம் வாசிக்கத் தூண்டுகிறது...பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது

இந்த இடத்தில்.....ராசுக் குட்டி, ஒரு கவிஞனாக மாறுகின்றார் போல கிடக்கு..!

ஒரு நல்ல படிப்பினைக் கதை...!

Link to post
Share on other sites

முடிவு வரைக்கும் வாசித்த உறவுகளுக்கும், பின்னூட்டங்கள் இட்டும் பச்சைப்புள்ளிகளை வாரி வழங்கியும் உற்சாகப்படுத்திய உறவுகளுக்கும் நன்றி. 

ராசுக்குட்டி பற்றி இன்னும் நிறைய கதைகள் உள்ளன. அவர் பெண்பார்க்கும் படலத்தில் நடந்த கதை, அவரது அம்மா கந்தசஷ்டி விரதம் பிடிக்கும் நிலை வரைக்கும் அவர் கொண்டு போய் விட்ட கதை, பிஸ்ஸா டிலிவரிக்கு போன காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களின் கதை என்று நீளமாக ஒரு பட்டியலே இருக்கு.

On 3/3/2021 at 01:52, suvy said:

உண்மைக்கதை போல் இருக்கு, நான் உங்களது கற்பனையில் என்று நினைத்து விட்டேன். தொடருங்கள்.....!  🤔

உண்மைக் கதை, கொஞ்சம் புனைவுகள் கலந்து எழுதப்பட்டது. 

ராசுக்குட்டி ஆஸ்பஸ்திரியில் CT scan எடுக்கப் போயிருந்த போது, அவர் எழுதிக் கிழித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத்தின் பிதாமகனுக்கு இப்படி தான் ஸ்கான் எடுக்கும் நிலைக்கு வந்திருப்பதாக தகவல் அனுப்பி அந்த பிதாமகனையும் கவலைப்பட வைத்த விடயத்தினை இடையில் செருக மறந்து விட்டார் என்று தகவல் வந்திருக்கு

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.