Jump to content

நாம் பெற்ற பிள்ளைகள் பற்றி??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

எம்  அனுபவங்களை 

அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

பொய்யாக்கி 

நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

எம்மை தலைகுனிய  செய்து  விடும்

ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

கூடி  வாழ்தல் சார்ந்து

தனியே  வாழ்தல்  சார்ந்து.......

அவர்களது  பார்வையும்  கல்வியும் பக்குவமும்

எமது பார்வையும் கல்வியும் அனுபவங்களும் ஒட்டாத  தண்டவாளங்களின்  நிலை  தான்.

அந்தவகையில் என் பிள்ளைகளிடம்  ஆரம்பத்திலிருந்தே நண்பனாக  பழகுபவன் என்றரீதியில் 

இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

அவள் சாதாரணமாக  சொன்னாள்

அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

முற்றும்.

Edited by விசுகு
  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

ஒரு காலத்தில் மணப்பெண்ணை கணவனுடன் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி முதலிரவுக்கு அனுப்பினார்கள்.
எண்ணிப் பார்க்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

கைக்குழுந்தைகளாக  எம்  பிள்ளைகள் எம்  கையில்  தவளத்தொடங்குவதாலோ என்னவோ

அவர்களை என்றும் அவ்வாறே  நாம் கணக்கிடுகின்றோமா??

அவர்களுக்கான  படிப்பு  சார்ந்து

அல்லது  அவர்களின் வயது  சார்ந்து 

அல்லது  எமது  கல்வி அல்லது  கேட்டறிந்த அனுபவங்களை அவர்கள்  மேல்  செலுத்துவது சார்ந்து

அதை நாமும்  அவர்களும் எவ்வாறு  கிரகிக்கக்கூடும்  என்று  நாம்  எந்தளவுக்கு கரிசனை  கொள்கின்றோம்

அதிலும் உடலின் சில  அந்தரங்க  உறுப்புக்கள்  அல்லது  உடலுறவு  சார்ந்து

எமக்கும்  அவர்களுக்குமிடையிலான உணர்தல் எந்தளவில்??

அநேகமான  பெற்றோர் பிள்ளைகளின்  முன்

முத்தங்கள் சில்மிசங்களை கூட தவிர்த்தல் என்பது  பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாக உள்ளநிலையில்

அதற்கு மேல் எதைப்பேசமுடிகிறது???

ஆனால்  பிள்ளைகளுடன் நண்பர்களாக  பழகும்  போது 

அவர்களிடமிருந்து வரும் சில  விடயங்கள்

எம்  அனுபவங்களை 

அவர்கள் பற்றிய எமது அளவுகோளை  

பொய்யாக்கி 

நம்மையே தாண்டிய அவர்களின் கல்விமுறை  மற்றும் கூச்சமற்ற தெளிவு

எம்மை தலைகுனிய  செய்து  விடும்

ஒர் இனச்சேர்க்கை  சார்ந்து

வயது கூடியவர்களை  திருமணம் செய்வது சார்ந்து

கூடி  வாழ்தல் சார்ந்து

 

இப்படியான  நிலை எனக்கும் ஏற்படுவதுண்டு

எனது  மகளது பிறந்த நாள் அன்று  அவளுடன் பேசிக்கொண்டிருந்தபோது

அவள் சாதாரணமாக  சொன்னாள்

அப்பா என்னை  அம்மாவிடம் தை  முதலாம் திகதி (வருடப்பிறப்பன்று)  நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்

அதனால் தான் நான் புரட்டாதி  ஒன்றில் பிறந்தேன்  என.

எனக்கு உடம்பெல்லாம் குறுகி  விட்டது

ஏனெனில் இதை  சொல்லும்போது அவளுக்கு அன்று  தான் 12 வயது.

முற்றும்.

 

பிள்ளை உருவாக்குதல், கலவி,  பாலியல்  உறுப்புக்கள் என்பவற்றை எமது சமூகத்தில்  சிதம்பர ரகசியம் போல் வைத்திருக்கின்றார்கள். இங்கு பதின்ம வயது(Teen age) தொடங்க முன்னர் அவைகளைப்பற்றிய  விளக்கம் பாடசாலையில் கொடுப்பார்கள். 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பெற்ற பிள்ளைகள் உண்மையிலேயே நல்ல முற்போக்கான சிந்தனைகளுடன் வளர்க்கப் படுகிறார்கள்.எங்களைப்போல் புறங்கூறுதல் வஞ்சனை பொருளாசை போன்ற தீய குணங்களற்றவர்களாகவும் சாதி சமயம் குலம் கோத்திரம் போன்றவற்றிற்கு மதிப்பு  கொடுக்காதவர்களாகவும் எதையும் துணிவுடன் நேருக்கு நேர் பேசக்கூடியவர்களாகவும்  பிள்ளைகள் வாழ்விற்காய் தம்மையே தியாகம் செய்த எம் பெற்றவர்களைப்போல் நாம் இருக்கக்கூடாது என  அறிவுரை கூறுபவர்களாகவும் சில சமயம் எமக்கு ஆசானாகவும் இருக்கிறார்கள். 
அவர்களது பார்வையும் பக்குவமும் பலமுறை எம்மை பிரமிக்க வைப்பதாய் இருக்கும். கனடாவில்
மூன்றாம் வகுப்பு சமயப் புத்தகத்திலேயே குழந்தை உருவாவது பிறப்பது குடும்ப உறவு போன்ற பாடங்களை பார்த்து திகைத்த காலம் ஒன்றுண்டு.
எமது காலத்தில் பெரியவர்கள் பேசுமிடத்தில்கூட எமக்கு இருக்க அனுமதி கிடைப்பதில்லை.
ஆனால் இன்றோ எமது பிள்ளைகள் வளரும் காலத்தில் எதைப்பற்றியும் வெளிப்படையாக பெற்றவர்களுடனும் சகோதரர்களுடனும் பேசுவதைப்பார்க்க வியப்பாயிருக்கும்.
அவர்களது சிந்தனைகளும் செயற்பாடுகளும் வித்தியாசமானவை. அதற்கேற்ப நாம் மாறினால்தான் எம்மால் சந்தோசமாக வாழமுடியும். அவர்களை எம்மைப்போல் மாற்ற முயற்சித்தால் எமது வாழ்க்கையின் சந்தோசங்களை இழக்கவேண்டி ஏற்படலாம். 
வளர்ந்த பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு விளங்கும். தலைப்பிற்கு நன்றிகள் விசுகு

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு ஏற்ற ஒரு பதிவு....!

நாங்களும் கால மாற்றங்களுடன் பயணிக்காதவிடத்துக்....காலம் நம்மை விட்டு விட்டு வெகு தூரம் பயணித்து விடும்...!

கூனிக் குறுக இங்கு எதுவுமே இல்லையே!

ஒரு வேளை  வருசப் பிறப்பு அண்டைக்குக் கொஞ்சம் ஆசாரமாக இருந்திருக்கலாமோ....என்னமோ?🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.