Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காலம் தான் எவ்வளவு விரைவாக ஒடி விடுகின்றது....?

இப்போதெல்லாம் இந்தக் கடற்கரை வெறிச்சுப் போய்க் கிடப்பது போல அவனுக்கு ஒரு பிரமை...!

அந்த நாட்களில்  எத்தனை கிடுகுக் கொட்டில்கள் இதே இடத்தில் முளைத்திருந்தன?  மயிலிட்டி, வடமராட்சி, பேசாலை, வங்காலை போன்ற இடங்களிலிருந்தெல்லாம்  சூடை மீனும், கீரி மீனும் அள்ள வந்தவர்களுடன்  உள்ளூர்  மீனவர்களிளின் கொட்டில்களும் நிறைந்திருக்கும்! ஒருவரும் தீண்டாத சாளை மீன்களையும் கொழும்பு கோழித்தீன் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வார்கள்!

அரை வாசி வள்ளங்கள் கடலில் நங்கூரமிட்டிருக்க, மிச்சக் கட்டு மரங்கள் கரைகளில் கிடந்தது வெயில் காயும்!

கிடுகு பின்னுபவனிலிருந்து...கள்ளிறக்குபவன் வரைக்கும் முகமெல்லாம் புன்னகை நிறைந்திருக்கும்! சுருக்கமாகச் சொல்லப் போனால்....அந்தக் காலப் பகுதியில் புங்குடுதீவின் பொருளாதாரம்....அதி உச்சத்துக்கு  உயர்ந்து போயிருக்கும்!

சந்திரனின் மனதிலிருந்து  ஒரு பெரு மூச்சு அதிக வெப்பத்தைச் சுமந்தபடி வெளியில் போனது! நீண்ட நாட்களின் பின்னர் நெடுந்தீவு போகும் வள்ளத்திற்காகக் குறிகாட்டுவான் கரையில் அவன் காத்திருக்கிறான்! 

இராஜேஸ்வரி, சில்வர் ஸ்பிறெ, அலை அரசி,  குமுதினி, எலாறா என்று வள்ளங்களின் பெயர்கள் நினைவில் வந்து போயின! குமுதினியின் நினைவு வந்த போது...கண்களில் இரண்டு துளிகள் கண்ணீர்த் துளிகள் தோன்றிக் கீழே விழுவதா என்று யோசித்தன!! அவனுக்குச் சிறுவயதில் படிப்பித்த அந்த ஆசிரியையின் முகமும் ஒரு கணம் தோன்றி மறைந்தது!

தம்பி...என்ன கனவு கொண்டிருக்கிறீரோ என்று ஒரு பெரியவரின் குரல் அவனை இவ்வுலகத்துக்குக் கொண்டு வந்தது!

வள்ளம் வெளிக்கிடப் போகுது...கெதியா ஓடி வாரும்!

அந்தக் காலத்தில்...வள்ளத்தின் கொண்டக்ரரிலிருந்து  வள்ளத்தின் ஓட்டுனர் வரை, எல்லாரது பெயரும் அவனுக்கு அத்து படி..!

இப்போது அவனை ஒருவருக்கும்  தெரியாது..! ஆரோ  வெளிநாட்டுக்காரர்  போல கிடக்குது என்று யாரோ ஒருவர் சொல்லுவது கேட்டது! சில வருடங்கள் அவனை ஒரு வெளிநாட்டுக்  காரனாக்கி விட்டதை நினைக்கக்  காலம் எவ்வளவு வலிமையானது என தனக்குள் நினத்துக் கொண்டான்!

வள்ளம் புறப்பட்ட போது ...தன்னை யாரும் அடையாளம் கண்டு விடக் கூடாது என்பதற்காக...தனது கறுப்புக் கண்ணாடியை ஒரு முறை துடைத்து விட்டுப் போட்டுக் கொண்டான்! 

நயினாதீவு நாக  பூஷணி  அம்மனின் கோபுரம் கிட்டக் கிட்ட நகர்ந்து வந்தது!

அம்மன் கோபுரத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தடவையும்...இடையில் நகர்ந்து போய் விட்ட வருடங்களை நினைத்துக் கொள்வான்!  ஒவ்வொரு தடவையும்...அந்தக் கோபுரம் உரு மாறிக் கொண்டேயிருக்கும்! நயினாதீவு மக்களின் பொருளாதர நிலையையும். அவர்கள் அப்போதைய மனோ நிலையையும் அந்தக் கோபுரம் பிரதி பலிப்பதாக, அவன்  நினைத்துக் கொள்வதுண்டு!

தேர்த்  திருவிழா பார்க்க வந்து  அனியாயமாகக் கடலில் சங்கமித்த அந்த  இருபத்தியொரு பேரும் ஒரு முறை  வந்து  நினைவில் போனார்கள்!

வள்ளம் எழாத்துப் பிரிவைத்  தாண்டும் போது..தாலாட்டும் அந்தத் தாலாட்டு அவனுக்கு எப்போதுமே மிகவும் பிடித்தமான ஒன்று! இன்றும் அப்படித் தான்! ஒரு மெல்லிய தூக்கம் கூட அப்போது எட்டிப்பார்த்த்து! கண்களை மூடிய படியே சிந்தனையில் மெதுவாக மூழ்கத் தொடங்கினான்!

கொஞ்சம்  தங்களைச் சிலாகித்துக் கொண்ட ஊரவர்கள் சிலர், வள்ளத்தின் மேல் தளத்திலிருந்து '304' விளையாடத் தொடங்க, அவர்களுக்கிடையே கதையும் களை கட்டத்  தொடங்கியது!

முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது!

இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்!

முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்!

இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..!

முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம்  ஓடாமையெல்லோ  கிடக்குது!

வள்ளத்தில் உள்ளேயிருந்த பலர் சிரித்தார்கள்....சில பெண் பயணிகள் மெதுவாக நெளிந்தார்கள்.

அவர்களில் ஒருவர்...அப்புமாரே...கதையை மாத்துங்கோ....உங்கட  எலாறா மட்டும் பெரிசாக் கிழிச்சு விட்டுதாக்கும்!

இந்தக் கதைகள் பொழுது போவதற்காகவே கதைக்கப் படுகின்றன என்று எல்லோருக்கும் தெரிந்தாலும்,  சில வேளைகளில்....அடிபிடியிலும் முடிந்த நாட் களும் இல்லாமல் இல்லை!

இடையில் கொஞ்சம் அவன் அயர்ந்து போயிருக்க வேண்டும்!

தூரத்தில்...பனை மரங்கள் பச்சை வரிசையாகத் தெரியத் தொடங்கி விட்டன!

ஊரைக் கண்ட புழுகத்தில்...கறுப்புக் கண்ணாடியைக் கொஞ்சம் கழற்றினான்!

அப்போது ஒரு இளம் பெண் சந்திரனைப் பார்த்துச் சிரிக்க...அவனும் மரியாதைக்காகப் பதிலுக்குச் சிரித்து வைத்தான்!

இப்போதெல்லாம் அவனுக்குள், அவனையறியாமலே ஒரு விதமான பயம் வந்து குந்திக் கொண்டது!

அவனது சாதகக் குறிப்பை எழுதிய பண்டிதர் ஒருவர்....சாதகன் பிறக்கும் போது கன்னி ஸ்தானத்தில் சந்திரன் உச்சம் பெற்று நின்ற காரணத்தால்...சாதகன் குளிர்ந்த கண்களை உடையவனாகவும், பர தார மனம் கொண்டவனாகவும் இருப்பான் என்று எழுதியிருந்தார்! பர தார மனம் என்பதன் பொருள் அவனுக்கு விளங்கா விட்டாலும், ஏதோ பாரதூரமான வார்த்தை என்ற அளவில் அவனுக்குப் புரிந்திருந்தது! சாதகங்களை அவன் நம்புவதில்லை எனினும்....மனதில் ஒரு விதமான பயம் நிரந்தரமாகவே குடி கொண்டு விட்டது! தனது உணர்ச்சிகளை வெளியே காட்டாது மறைக்கும் எண்ணத்துடன்...கறுத்தக் கண்ணாடியை எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டான்!

மாவலி  இறங்கு துறையில், கால் வைத்தவுடன்...உடம்பெல்லாம் ஒரு விதமான புத்துணர்ச்சி ஒன்று தோன்றியது  போல இருந்தது!

அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..! அதிலிருந்த பெயர்களை ஒரு முறை வாசித்துப் பார்த்தான்! பல பெயர்கள்  மிகவும் பரிச்சயமாக இருந்தன! அந்த ஆசிரியை, மீண்டுமொரு முறை நினைவில் வந்து போனார்! சங்கக்கடைக்குப் பக்கத்திலிருந்த பொன்னம்மா ஆச்சியின் கடையை இப்போது காணவேயில்லை! அந்த நாட்களில் பணம் எதுவும் வாங்காமலே, யானை மார்க் ஒரேன்ஜ் பார்லியை அந்த ஆச்சி அன்புடன் உடைத்துத் தரும்போது, வள்ளத்தில் வந்த களைப்பு உடனேயே பறந்து போய் விடுவது நினைவுக்கு வந்தது!

 

அடுத்த பகுதியில் முடியும்…!

 • Like 20
 • Thanks 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, புங்கையூரன் said:

அடுத்த பகுதியில் முடியும்…!

கதை தொடங்கவேயில்லை! எப்படி அடுத்த பகுதியில் முடியும்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

கதை தொடங்கவேயில்லை! எப்படி அடுத்த பகுதியில் முடியும்?

யூ மீன் காதல்?

சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புங்கையூரன் said:

யூ மீன் காதல்?

சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇

இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......!   😁

பல நினைவுகளை கொண்டு வருகுது.......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......!   😁

பல நினைவுகளை கொண்டு வருகுது.......!

பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 

தொடருங்கள் அண்ணா

அருமையான எழுத்து நடை

பரிச்சயமான இடங்கள் பெயர்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புங்குடு தீவுக்குள் தொடங்கி நயினாதீவைத் தொட்டு நெடுந்தீவுக்குள் இறங்கி விட்டீர்கள்.  அந்த சந்திரன் அண்னாவையும் எனக்கு தெரியும் போலக்கிடக்கு  அருமையாக இருக்கிறது கதை..எனக்கும் ஊரின் நினைவுகள் உள்ளுக்குள் வந்து உசுப்புகிறது.அன்பின் புங்கையூரான் அவர்களே. தொடருங்கள்

Link to post
Share on other sites
4 hours ago, புங்கையூரன் said:

யூ மீன் காதல்?

சுருக்கி எழுதலாம் எண்டு யோசிக்கிறன், கிருபன்! 😇

அந்த வித்தையை எனக்கு கற்றும் தாருங்கள். என்னால் எல்லாம் ஒரு போதும் சுருக்கி எழுத முடியாது. 

ஆனால் இந்தக் கதைதை இன்னொரு பகுதியுடன் முடித்தால், அது பெரிய நல்ல நாவல் ஒன்றின் முன் குறிப்பு மாதிரி ஆக சுருக்கமாக அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது.  விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை    

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எம் தீவகக் கடல்களில் பயணித்து ஏழாத்துப்பிரிவு எனப்படும் கடல் சுழலில் அலைபட்டு எம் பழைய ஞாபகங்களை தட்டி எழுப்பி இருக்கிறீர்கள். வழக்கம்போல் உங்கள் எழுத்து லாவகமாகச் செல்கிறது. தொடருங்கள்

Link to post
Share on other sites

வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு 

நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள  உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய  2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன்  அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம்  கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம்  கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும்  நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்  அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது .


குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

 • Haha 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யோசிக்க வேண்டாம் அக்னீ இதையெல்லாம் போய் சொல்ல மாட்டார் ......!  😂

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

முதலாமவர் ...இந்த வள்ளங்களுக்கு ஏன் இந்த அறுவாங்கள் பொம்பிளையளின்ர பேரை மட்டும் வைச்சுத் துலைக்கிறாங்க்ளோ தெரியாது!

இரண்டாமவர்.... அதுக்கு இப்ப என்ன பிரச்சனை...சூறாவளியளுக்கும் தானே...அவையளின்ர பேரை வைக்கிறாங்கள்!

முதலாமவர்.....அது பரவாயில்லை...வள்ளங்களுக்குப் பொம்பிளைப் பெயர் இனிமேல் வைக்கக் கூடாது எண்டு சட்டம் கொண்டு வர வேண்டும்!

இரண்டாமவர்....உம்மட மனுசி உம்மை விட்டிட்டு ஓடிப் போனத்துக்காக இப்பிடியே..!

முதலாமவர்.. உனக்கு விசயம் விளங்கேல்லைப் போல கிடக்கு...நீ எப்பவுமே ரியூப் லயிற் தானே! இந்தப் பேருகளை வைக்கிறதால மாததத்திலை இரண்டு மூண்டு நாளைக்கு வள்ளம்  ஓடாமையெல்லோ  கிடக்குது!

ஊருக்கு ஊர் ஒரு குசும்பனாவது இருப்பாங்கள்.😁
தொடருங்கள் புங்கையர். கதை வித்தியாசமாக இருக்கின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு 

நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள  உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய  2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன்  அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம்  கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம்  கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும்  நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்  அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது .


குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

ஓ....தம்பியர் ஊர் பாக்க போன இடத்திலையும் நூல் விட்டு பாத்திருக்கிறார்....😎

மற்றது ராசன் நைனாதீவு இல்லை நயினாதீவு. நீங்கள் டெய்லி காத்தான்குடியை ஊடறுத்து போய் வாறதாலை நைனாவிலையே நிக்கிறியள்.😜

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

ஆகா.......சிங்கன் வசமா மாட்டி. இதை வைச்சே ஆளை கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுக்கலாம்.:grin:

 • Like 1
 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

சூடை மீனும்,

முன்னர் மீன் வாங்கப் போனால் சூடை அல்லது சூவாரை பொரியலுக்கு வாங்குவேன்.

13 hours ago, புங்கையூரன் said:

அருகிலிருந்த குமுதினிப் படகில் இறந்தவர்களின் நினைவுக் கல்லைக் கண்டதும்...அந்த உணர்ச்சி வந்த மாதிரியே போயும் விட்டது..!

வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்.
குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.

https://ta.m.wikipedia.org/wiki/குமுதினி_படகுப்_படுகொலைகள்,_1985

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

இது சுருக்கி எழுதுகிற விடயமல்ல பெருக்கி எழுதுகிற விடயம்......யோசிக்காமல் எழுதுங்கோ......!   😁

பல நினைவுகளை கொண்டு வருகுது.......!

பெருக்கலாம் தான் சுவியர்...!

கன காலமாய்க் கராச்சுக்குள்ள, பார்க் பண்ணியிருந்த காரை வெளியால எடுத்துக் கொஞ்சம் எண்ணெய், தண்ணியைக் காட்டிப் போட்டு....கை வேயில ஓடக் கொஞ்சம் பயமாய்க் கிடக்குது!

யாழ் களம் முந்தி மாதிரி இல்லை!  மிகவும் தரமான கவிதைகளும், கவிதைகளும் இப்போது அதில் பதியப் படுகின்றன..!

20 hours ago, விசுகு said:

பெருக்கி எழுதினால் காதலியின் பேரன் வந்து கதவை தட்டினால்???😆 

மிக்க நன்றி, விசுகர்....!

பேத்தி  தான் வந்து தட்டினாலும்.....தட்டுவா!😜

19 hours ago, உடையார் said:

நன்றாக இருக்கு தொடக்கமே, தொடருங்கள். தாலாட்டுவது பெண்கள் தானே, வள்ளத்திற்கு பெண்கள் பெயர்தான் சரி

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி, உடையார்...!

ஆட்டுவித்தால்.....யாரொருவர் ஆடாதாரோ......கண்ணா...!

ஆனால்....இது ஒரு குழந்தை பாடும் தாலாட்டு...!  😄

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 00:17, பசுவூர்க்கோபி said:

புங்குடு தீவுக்குள் தொடங்கி நயினாதீவைத் தொட்டு நெடுந்தீவுக்குள் இறங்கி விட்டீர்கள்.  அந்த சந்திரன் அண்னாவையும் எனக்கு தெரியும் போலக்கிடக்கு  அருமையாக இருக்கிறது கதை..எனக்கும் ஊரின் நினைவுகள் உள்ளுக்குள் வந்து உசுப்புகிறது.அன்பின் புங்கையூரான் அவர்களே. தொடருங்கள்

நன்றி.... பசுவூர்க் கோபி..!

சந்திரனை உங்களுக்குத் தெரியும் போல உள்ளதா? மிகவும் நல்லது!

சந்திரன் அடுத்த முறை...அங்கு வரும்போது உங்களைக் கட்டாயம் சந்திக்கும் படி சொல்லி விடுகின்றேன்...! 😀

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 00:50, நிழலி said:

அந்த வித்தையை எனக்கு கற்றும் தாருங்கள். என்னால் எல்லாம் ஒரு போதும் சுருக்கி எழுத முடியாது. 

ஆனால் இந்தக் கதைதை இன்னொரு பகுதியுடன் முடித்தால், அது பெரிய நல்ல நாவல் ஒன்றின் முன் குறிப்பு மாதிரி ஆக சுருக்கமாக அமைந்து விடவும் வாய்ப்பு உள்ளது.

வித்தையைக் கற்றுத் தருவது....பிரச்சனையில்லை,நிழலி!

காதலை ஒரு நாளும் சுருக்கக் கூடாது! உடன் படுகின்றேன்!

முன்னர் அலைமகள் என்று உறவு யாழில் இருந்தார்...உங்கட கனடாப் பக்கம் என்று தான் நினைவு!

அவர் எழுதிய கருத்தொன்று  அப்படியே ....மனதில் பதிந்து போய் விட்டது!

யாரோ எழுதிய காதல் கதையொன்றுக்கு அவர் எழுதிய கருத்து இது தான்...!

குளிர் காலம் வந்து விட்டால்....எல்லோருடைய பழைய காதலிகளும் வரிசையில....வரத் துவங்குவினம்!

அந்தக் கருத்துத் தான்....இந்தக் கதையை எழுத உந்து கோலாக இருந்தது....!

உங்கள் ஆலோசனைப் படி....விதி விட்ட வழியே நடக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டேன்! 🥰

On 3/3/2021 at 03:31, நிலாமதி said:

பலதார மணம் என்றால் ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளைக் கொண்டிருப்பதாகும். உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது, போல் தெரிகிறது.  விரிவாக எழுதவும். காதலும் நினைவுகளும் ஏற்றும் அழியாதவை    

வணக்கம்.....நிலாக்கா!

உங்களுடைய கருத்தைப் பார்த்த பின்னர்.....கையைக் காலை நீட்டிக் கருத்தெழுதக் கொஞ்சம் பயமாய்க் கிடக்கு!😀

விரிக்கக் கூடிய அளவுக்கு விரிவாக எழுத முயற்சிக்கிறேன்!நன்றியும்...அன்பும்....!

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் ..👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 04:22, Kavallur Kanmani said:

மீண்டும் எம் தீவகக் கடல்களில் பயணித்து ஏழாத்துப்பிரிவு எனப்படும் கடல் சுழலில் அலைபட்டு எம் பழைய ஞாபகங்களை தட்டி எழுப்பி இருக்கிறீர்கள். வழக்கம்போல் உங்கள் எழுத்து லாவகமாகச் செல்கிறது. தொடருங்கள்

நன்றி....காவலூர் கண்மணி..!

வட துருவத்தில் பிறந்த துருவக் கரடிக்கு.....மைனஸ் மூன்று....பாகை தானே....கோடை காலம்...!

தீவகத்தில் பிறந்தவனுக்குக் கடலின் அலைகள் எழுப்பும்  சத்தம் தானே...சங்கீதம்?

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 3/3/2021 at 04:39, தனிக்காட்டு ராஜா said:

வாவ் தொடக்கமே அட்டகாசமா இருக்கு 

நைனாதீவுக்கு நான் சென்ற நேரம் நம்ம கள  உறவு ஜீவன் சிவா அண்ண கூட்டிக்கொண்டு சென்றார் அப்போது எனக்கு முன் ஓர் அழகிய  2 பெண் பிள்ளைகள் ஏன்டா இதுகளுல ஒன்றைப்பார்த்து கல்யாணம் கட்டிட்டு இங்க செட்டில் ஆகன்டா என்றார் மனுசன்  அந்த நேரம் காஞ்ச மாடு கம்பில பாயுற ரைம்  கல்யாணம் ஆகல எனக்கு புள்ள ஓகே சொன்னா நான் வேண்டாம் என்றா சொல்லப்போறன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டன் இந்த யாழ்ப்பாண சனம் மட்டக்களப்பார கல்யாணம்  கட்டுமா? குறிப்பு அது இது என எக்கச்செக்க பிரச்சினை வரும்  நான் யோசித்து அவளப்பார்ப்போம் என முன்னே நிமிர்ந்தேன் ஏனென்றால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்  அவளைப்பார்க்கிறேன் . அவளும் என்னைப்பார்க்கிறாள் ஆகா அந்தப்பயணம் நெடுந்தீவுக்கும் செல்லாதா என நான் நினைத்தால் நைனாதீவில் படகு கரைதட்ட நான் முதலில் பாய்ந்து தரையில் இறங்கினன் அண்ணன் ஜீவன் சிவாவை வெளியே இழுத்து எறியாத குறையாக அவளை தூக்கிவிட கையை கொடுத்தேன் அவளும் சிரித்துவிட்டு கையை கொடுத்தாள் மெதுவாக தூக்க மனுசன் அங்கால திரும்பிட்டு நான் இந்த கூத்தையெல்லாம் பார்க்கல என ஓடிட்டார் பின்னர் மடத்தில் சோறு சாப்பிட போனோம் அங்கேயே நின்றாள் பார்வைகள் மட்டும் பேசி கதைத்து விடை பெற்றது .


குறிப்பு இது என் மனைவிக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது 😀

நயினா தீவும் நல்ல ஒரு இடம், தனி!

சிலப்பதிகாரத்தில் வரும் மணிபல்லவம் என்னும் பெயருள்ள தீவும் இது தான்!

கௌதம புத்தர் நயினாதீவு ஊடாகத் தான்..இலங்கைக்கு வந்தார் என்று...குறிகாட்டுவான் துறையில் எழுதியிருந்தார்கள்!

அந்தக் காலத்தில்...இராமர் பாலத்தால் அவர் நடந்து வந்திருக்கும் சாத்தியங்களே அதிகம் உள்ளன!

அவரைக் காரில் கொண்டு திரிந்தது போல...இப்போது புத்த பிக்குமார் சிலர் கதை விடுகின்றார்கள்!

யாழ், மட்டக்களப்பு இளைஞர்களில் கைகள் குடும்பம் என்னும் கயிறு கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளன!

கையைக் கொடுத்து அவளைத் தூக்கி விடுவதுடன் கையைக் காட்டி விட வேண்டியது தான்!

இப்போது கையைக் காலைக் கொஞ்சம் நீட்ட முடியும் என்று நம்புகின்றேன்!

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எம்முடன் வேம்படியில் படித்த நிர்மலா என்ற பெண்ணும் அப்படக்கில் வெட்டிக் கொல்லப்பட்டதாக அறிந்தேன். உணக்களுக்கு அவளைத் தெரியுமா?

Link to post
Share on other sites
 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By புங்கையூரன்
   ஊரில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும்,…..நெடுந்தீவின் அடிப்படை அடையாளங்கள் இன்னும் மாறாது அப்படியேயிருந்தன !
   கற்களால் அடுக்குப்பட்ட  பயிர் வேலிகள், எவரோ தாட்டு விட்டுப் கிழங்கு பிடுங்க மறந்து போன பனம் பாத்திகளிலிருந்து முளைத்த  பனங்கூடல்கள், மாட்டு வண்டித் தடங்கள் என்பன இன்னும் இருந்தன!
   முள்ளிவாய்க்காலில் மரணித்துப் போனவர்களில், விகிதாசார அடிப்படையில் பார்த்தால், நெடுந்தீவு தான் அதிக விலை கொடுத்தாக இருக்கும் என்பது சந்திரனின் அனுமானமாக இருந்தது! ஸ்ரீ மாவோ அம்மையார்  கொண்டு வந்த  மரவள்ளி  வளர்க்கும் திட்டத்தினாலும் , முத்தையன்கட்டுப் பிரதேசத்தில் இலவசக்  காணி பகிர்ந்தளிப்புத் திட்டத்தினாலும் கவரப்பட்டு அங்கு சென்றவர்களில்  பலரும் , அவர்களது சந்ததியினரில் சிலரும் அவர்களுக்குள் அடங்குவர்!  குறிப்பாக, இசைப்பிரியா போன்றவர்களின்  இழப்பு அவனை மிகவும் பாதித்திருந்தது! 
   தம்பி, இஞ்சையோ  நிக்கிறியள் என்று கேட்ட படியே, குறிகாட்டுவானில் வள்ளத்துக்கு வரும்படி கூப்பிட்ட அந்தப் பெரியவர் அருகில் வந்தார்!   வந்தவர், எங்க தங்கப் போறீங்கள் தம்பி என்று கேட்டார் ! மகா வித்தியாலயத்துக்குப் பக்கத்தில , எங்கையாவது ஒரு ஹோட்டல்ல நிக்கலாம் எண்டு யோசிக்கிறன்! தம்பி, இப்ப வெளிநாட்டுக் காசு புழக்கத்துக்கு வந்த பிறகு எல்லாம் அவையின்ர ஹோட்டல்களாய்த் தான் இருக்குது! தம்பிக்குக் கனநாள் நிக்கிற பிளானோ? அந்தப் பெரியவரது பேச்சின்  சாராம்சம்  அவனுக்குள் ஓடி வெளிப்பதற்கு அவனுக்குக் கொஞ்சக் கால அவகாசம் தேவைப் பட்டது!  அவையின்ர என்றால்…...ம்ம்ம்….இன்னும் நெடுந்தீவு மாறவேயில்லை என்று தனக்குள் நினைத்துக் கொண்டான்! அது சரி…..இவருக்கு எப்படித் தெரிந்தது , நான் அவையின்ர ஆக்களில் ஒருவன் இல்லையென்று…! அவன் யோசிக்கும் போதே பெரியவர் தொடர்ந்தார்! 
   தம்பி, நெழுவினிப்  பிள்ளையார் கோவிலடிக்குப் பக்கத்தில ஒரு வீடு இருக்குது! வீட்டுக்காரர் எல்லாரும் வெளிநாட்டிலை தான் இருக்கினம்! இப்ப வீடு சும்மாதான் கிடக்குது! உங்களுக்கு விருப்பமெண்டால் தாராளமாக அங்கு நிற்கலாம்! வேணுமெண்டால் என்னிட்ட ஒரு மோட்டச்  சைக்கிளும் இருக்குது! உங்களுக்குத் தேவையான இடத்தில நான் கொண்டுபோய்  இறக்கி விடுவன் என்றும் கூறினார்! சரி பெரியவர், எவ்வளவு காசு எண்டும் பேசுவமே என்று சந்திரன் சொல்லவும், என்னடா தம்பி….மீன் கரைஞ்சா எங்க போகப்போகுது….ஆணத்துக்கை தானே கிடக்கப் போகுது!  நீங்களாய்ப் பாத்துத் தாறதைத் தாங்கோவன் எண்டு சொல்லவும் சந்திரனுக்கு கொஞ்சம் உதறலெடுக்கத் தொடங்கியது! ஒரு வேளை பெரியவர் தன்னைப் பற்றி ஏதாவது மணந்து கிணந்து இருப்பாரோ? இருந்தாலும் குறுக்கால வந்த தெய்வத்தையும் திருப்பி அனுப்ப மனம் வரவில்லை! பெரியவரே, நான் நீங்கள் சொல்லுற இடத்தில நிக்கிறன்! ஆனால் ஒரு கொண்டிசன்! எனக்கு உங்கட பழைய சைக்கிள் ஏதாவது இருந்தால் அதைத் தந்தால் போதும்! சாப்பாட்டுக்கு கிட்டடியில கடையள் ஏதாவது இருக்கும் தானே...என்று கேட்கவும்….என்ன தம்பி நீர், நாங்கள் என்னத்துக்கு இருக்கிறம்? நீர் என்ன விருப்பம் எண்டு சொல்லும் , நான் செய்விச்சுத் தாறன் எண்டு சொல்ல சந்திரனும் சம்மதித்தான்! இருந்தாலும் , பெரியவரை ஒரு முறை ரெஸ்ற் பண்ணிப் பார்க்கவேணும் என்று நினைத்தவனாக, ஐயா….ஒருக்கால் ஈச்சங்காட்டுப் பக்கம் போகவேணும், கொண்டு போய் விடுவீங்களோ எண்டு கேட்கவும் , பெரியவர் திடுக்கிட்டவர்  போலச் சந்திரனைப் பார்த்தார்! தம்பிக்கு இடங்கள் தெரியுமோ என்று மிகவும் ஆச்சரியமாகக் கேட்கவும்….இவனுக்கு கொஞ்சம் மனதில் நிம்மதி வந்தது! இல்லை ஐயா, எனது நண்பனொருவன் தன்னுடைய பழைய வீடடைப் பார்த்து வரும்படி சொல்லியிருந்தான்! ஈச்சங்காட்டில எவடம்?  விளாத்தி மரத்துக்கு கிட்டவாக! சரி, எதுக்கும் இதை வைச்சிருங்கோ எண்டு சொல்லி கொஞ்சக் காசை அவரிடம் கொடுக்க,  அவர் என்ன தம்பி இப்பவே எண்டு சொல்லிக் சிரிக்கப் பெரியவருக்கு கடவாய்ப்பற்கள் ஒன்று கூட இல்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது! உடனேயே அங்கே நின்ற பெடியன் ஒருவனைக் கூப்பிட்டுத் தம்பி இந்த ஐயாவைக் கொண்டு போய் ஈச்சங்காட்டிலே இறக்கி விடு என்று கூற…..அவனும் பின்னால் திரும்பிப் பார்த்து விட்டுத் தான் தான் அந்த ஐயா என்று உறுதி படுத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் லாவகமாக ஏறி அமர்ந்து கொண்டான்!
   ஈச்சங்காட்டில் ஒரு ஈச்ச மரங்களையும் இப்போது காணவில்லை! விளாத்தி மரத்தடியில் வீடு இருந்த இடம் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது! அந்த விளாத்தி மரம் மட்டும் இன்னும் அப்படியே நின்றது! தனது மூதாதைகளின் மூச்சுக்காற்றை இந்த மரமும் சுவாசித்திருக்கும் என்ற நினைவே...அவனுக்கு இதமாக இருந்தது!  இங்கு தான் இந்தக் கதையின் கதாநாயகியை அடிக்கடி சந்திரன் இரகசியமாகச் சந்திப்பதுண்டு! இவன் கதைகள் சொல்லும்போது விழிகளை அகல விரித்தபடியே...அவள் கேட்டுக் கொண்டிருப்பாள்!
   இந்த விளாம்பழங்களை யானை எப்படிச் சாப்பிடும் எண்டு உனக்குத் தெரியுமா? இல்லை என்று அவள் தலையாட்ட ‘ஒரு சின்ன ஓட்டை மட்டும் போட்டுவிட்டு, அதன் உள்ளடையை அப்படியே உறிஞ்சி எடுத்து விடும்! அப்போ விதைகளை என்ன செய்யும்? அதை அப்படியே பழத்துக்குள் விட்டு விடும்! அவள் , அது உனக்கெப்படித் தெரியும்? சாப்பிட்ட பழத்தை யானை ஒருமுறை குலுக்கிப் பார்க்கும்! அப்போது அருகில் நிற்பவர்களுக்குக் கிலுக்கட்டி கிலுக்குவது போல ஒரு சத்தம் கேட்கும்!  இதிலிருந்து உனக்கு என்ன தெரிகின்றது?  
   அவளின் பதில் உடனடியாகவே வந்தது!
   யானை தனது அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு….விதைகளைச் சாப்பிடாமல் அப்படியே விட்டு விடுகிறது…! அடுத்து வரும் மழைக்கு விளாம்பழத்தின் கோது உடைய விளாத்தி மரங்கள் முளைக்கும்!
   இப்படியான பதில்கள் தான்...சந்திரனுக்கு அவளிடம் ஒரு விதமான ஈர்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்!
   அவளை முதலில் சந்தித்த சம்பவம் இன்னும் தெளிவாகவே அவனது நினைவில் இருந்தது!
   வீட்டில் விருந்தினர்கள் வந்திறங்கியிருந்தார்கள்!  பொழுது பின்னேரமாகி விட்டிருந்தது! சந்திரனின் தாயார் சந்திரனிடம் கொஞ்சம் காசைக் கொடுத்துத் தம்பி, கடற்கரைக்குப் போய் மீன் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று கூற….அம்மா உங்களுக்கென்ன விசரே, இந்த நேரத்தில கடற்கரையிலே ஒரு வள்ளமும் வராது என்று பின்னடிக்க அம்மாவும், ஆராவது வீச்சு வலைக்காரர் நிப்பாங்கள், போய்ப்பார் என்று சொல்லத் தயக்கத்துடன் கடலுக்குப் போனவனுக்கு ஆச்சரியமாக இருந்தது! அவன் அம்மா சொன்ன மாதிரியே ஒரு வீச்சு வலைக்காரன் நின்று கொண்டிருந்தான்! அவனது இடுப்பில் தொங்கிய பறியும் காற்றில் அசையவில்லை! ம்ம்ம்...பறிக்குள்ள என்னவோ பாரமான சாமான் என்னவோ கிடக்குது! பிரச்சனை என்னவென்றால், அவன் கரைக்கு வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தால், கரையில் கன சனம் நிண்டு...மீனுக்கு விலையைக் கூட்டிப்  போடும்!  கடல் கொஞ்சம் வத்தாக இருந்ததால்...மீன் காரனிடம் நடந்தே போக முடிவு செய்தான்! மீன் காரனுக்கு கிட்டப் போனதும் அவனது அதிஸ்ட்டத்தை நினைத்து...தனது  முதுகில் தட்டித் தன்னைத் தானே பாராட்டியும் கொண்டான்! ஆம், அந்த மீன் பறிக்குள் ஒரு பால் சுறாவும் இருந்தது! பால் சுறா, அதுவும் ஆண் சுறா எல்லாருக்கும் பிடிக்குமென அவனுக்குத் தெரியும்! பின்னேரமானதால் ….குழல் புட்டும் அவித்து சுறா வறையும் வைக்க அந்த மாதிரி இருக்கும்! விலையும் சரியாக இருக்கவே...வாலைப் பிடித்த படி...அந்தப் பால் சுறாவைத்...தண்ணீருக்குள் விட்ட படி இழுத்துக் கொண்டு கரைக்கு நடந்து வந்தான்! அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன! ,முதலாவது சுறா பழுது படாமல் இருக்கும்! இரண்டாவது…..தமிழர்களுக்கே ,,தனித்துவமான குணமான...ஆற்றையும் கண்பட்டு விடக்கூடாது என்ற ஆதங்கமும் தான்!  
   கரைக்கு ஒரு இருபதடி தூரம் கூட இருக்காது! ‘கிளிக்’ என்றொரு சத்தம் கேட்டது!
   தண்ணீரில் ஒரு வட்டம் போட்டுவிட்டுப்  பால் சுறா, அவைனப் பார்த்துக் கண்ணை ஒரு முறை அடித்து நன்றி சொல்லி விட்டுப் போயே விட்டது!
   இப்போது அவனிடம் காசுமில்லை! கறிக்குச் சுறாவுமில்லை!
   கண்ணீரும் கட்டுப்படுத்த முடியாமல்…...வரத் தொடங்கியது!
   அப்போது ‘கிளுக்” என்று யாரோ கரையில் நின்று சிரிப்பதும் தெளிவாகச் சந்திரனுக்குக் கேட்டது!
    
   அடுத்த பகுதியில் தொடரும்….!
    
  • By புங்கையூரன்
   காசும் போச்சுது….கையிலையிருந்த சுறாவும் போச்சுது…!
   கண்களில் கண்ணீர் முட்டிய படியே...கரையிலிருந்து சிரிப்பு வந்த திசையை நோக்கிச் சந்திரன் திரும்பவே ...அந்தச் சிரிப்புக்குரியவள் அங்கே நின்று கொண்டிருந்தாள்!
   மீனவர்களுக்கேயுரிய கொஞ்சம் பரட்டையான தலை மயிர்! நீல நிறம் கொஞ்சம் கலந்த கண்கள்! வெளிர் நிறம்! அந்தக் கண்களில் ஒரு குறும்பு..!
   வீட்டை விருந்தாளிகள் வந்திருக்கினம் போல கிடக்குது! வெறும் கையோட போகப் போறீங்களோ? 
   விருந்தினர் வீட்டுக்கு வந்தது அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று சந்திரன் ஆச்சரியப்பட வேண்டியே இருக்கவில்லை!
   நெடுந்தீவில் அந்தக் காலத்திலிருந்தது ஒரேயொரு இ.போ.ச பஸ் மட்டும் தான், மாவலித் துறைமுகத்திலிருந்து குருக்கள் மடம் வரைக்கும் ஓடுவதுண்டு! யாராவது தூரத்தில் ஓடி வருவதைக் கண்டால், அவர் பஸ்ஸுக்கு வரும் வரைக்கும் அந்த பஸ் காத்திருக்கும்! அதே போலவே குறிகாட்டுவான் போகும் வள்ளமும் பஸ்ஸைக் காணும் வரை காத்திருக்கும்!
   அதனால் ஊருக்குப் புதிதாக யார் வந்தாலும் அது ஊருக்கே தெரிந்து விடுவதில் ஆச்சரியம் எதுவும் இருப்பதில்லை!
   சரி...இப்ப என்ன செய்யப் போறீங்கள் என்று கூறியவள் கடலுக்குள் மெல்ல இறங்கினாள்!
   தண்ணீர் இடுப்பளவில் வரும் வரைக்கும் நடந்து போனவள்...திடீரெனத் தண்ணீருக்குள் புதைந்து போனாள்! செத்தல் தேங்காய்கள் இரண்டைக் கட்டிக்கொண்டு கரையில் நீந்துவதுடன் அவனது நீந்தல் அறிவு மட்டுப் பட்டிருந்தது! கண்களை அகல விரித்த படி ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில்...அவள் மீண்டும் தண்ணீருக்கு மேலே வருவது தெரிந்தது! பின்னர் நடந்து கரைக்கு வந்தவளின் கைகளில் ஒரு பெரிய கயல் மீன் இருந்தது! கயல் மீனின் பிடரிப்பக்கம் கறுப்பாக இருக்குமென்ற வரையில்..அவனுக்குத் தெரிந்திருந்தது! எதுவும் பேசாமலே...கண்களில் மட்டும் நன்றியைக் காட்டிய படியே மீனை வாங்கிக் கொண்டாள்!
   கோடாலியைத் தொலைத்து விட்டுக் கவலையுடன் குளத்துக் கரையில் குந்திக்கு கொண்டிருந்த குடியானவன் முன்பு தோன்றிய தேவதையின் கதையின் நினைவு வந்தது! எவரோ போட்டு வைத்த களங்கண்டிப் பட்டியிலிருந்து...அந்த மீனை அவள் கள்ளமாகக் களட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!
   அதன் பின்னர் அவளைக் காணும் போதெல்லாம் ...அவனுக்குள் ஒரு எதிர்பாராத உணர்வு ஒன்று தோன்றுவது உண்டு! எல்லோரும் அவளைப் பிலோ என்று கூப்பிடுவதால்..அவனும் அவ்வாறே அவளைக் கூப்பிடுவான்! அடிக்கடி ‘பிலோவைக் ’ காணும் சந்தர்ப்பங்களை வேண்டுமென்றே அவன் உருவாக்கிக் கொள்வான்!
   அப்படியான சந்திப்பு ஒன்றின் போது உனது கண்கள் ஏன் நீலமாக இருக்கின்றன எனச் சந்திரன் கேட்கவே, உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தான் என்று கூறியவள் ஒரு நாட்டுப் பாடலொன்றைப் பதிலாகத் தந்தாள்!
    
   என்ன பிடிக்கிறாய் அந்தோனி
   எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
   பொத்திப் பொத்திப் புடி அந்தோனி
   பூறிக் கொண்டோடிற்று சிஞ்ஞோரே
    
   அப்போது அவனுக்கு...அந்தப் பாடலின் கருத்துப் புரியவேயில்லை! அது புரியும் காலத்தில் அவள் அருகில் இருக்கவில்லை!!
   ஒரு நாள் அருகிலிருந்த தேவாலயத்தில் அவள் பிரார்த்தனையில் இருந்தாள்!
   சந்திரனும் கண்களை மூடிப் பிரார்த்தித்தான்! தேவாலயங்களில் எப்போதுமே ஒரு அமைதி குடி கொண்டபடி இருப்பதால், அது ஒரு பொதுவான சந்திப்பிடமாக அமைந்தது!
   கடவுளிடம் என்ன வேண்டிக்கொண்டாய் என அவள் கேட்டாள்! வலசைப் பறவைகளைப் போல எனக்கு இறக்கைகள் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்!  நீ என்ன கேட்டாய்? மீனைப் போல...பூவல்கள் வேண்டுமென்று கேட்டிருப்பாய் என்றான்!
   இல்லையே...நீ நல்லாயிருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! நீ நல்லாயிருந்தால் தானே...நான் நல்லாயிருக்க முடியும் என்று அவள் கூறிய போது தான் அவர்களது நட்பு எவ்வளவு தூரம் ஆழமாகி விட்டது என்று அவனுக்குப் புரிந்தது!
   அதெல்லாம் சரி….எதற்காக வலசைப் பறவைகளைப்  போல நீ வலசை போக வேண்டும்?
   அந்தப் பறவைகள் வாழுகின்ற இடத்தில்...இரவுகள் மிகவும் நீளமானவை! பகல் பொழுதுகள் மிகவும் குறைந்தவை! பனிக்காலம் அதிகம்! கோடை காலம் குறைவு!  அதனால் அவை வலசை போக வேண்டியது காலத்தின் கட்டாயம்! 
   வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரும் பறவைகள்…..தென்னிந்தியாவின் வேடந்தாங்கல் சரணாலயம் நிரம்பிய பின்னர்...அவற்றின் கண்களில் அடுத்த  தெரிவு நெடுந்தீவு தான்! அதனால் அங்கு வாழும் மக்களின் பேச்சு வழக்கில்..வலசை போகும் பறவைகள் உதாரணமாக அடிக்கடி வருவதுண்டு!
   தம்பி...தோசைக்குப் போட்டிருக்கிறன்...கொண்டு வரட்டே?
   அந்தப் பெரியவரின் குரல் அவனது சிந்தனையை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்தது!
   சரி...ஐயா ..என்று கூறியவன் பிலோமினா அன்று கூறியது எவ்வளவு உண்மை என்று சிந்தித்தான்! நான் எதற்காக வெளி நாடு போனேன்? இன்று வரையில் அந்தக் கேள்விக்கான பதில் அவனுக்கு கிடைக்கவேயில்லை! எல்லோரும் போகின்றார்களே என்ற ஒரு மந்தை மனநிலையில் தான் சந்திரன் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்! 
   தோசையைக் சாப்பிட்டு விட்டுச் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கியவன் கொஞ்ச நேரம் காற்றை நன்றாக உள்ளிளுத்து..வெளியே விட்ட படியே சைக்கிளை மிதித்தான்! நீண்ட நாட்களாக ஓடாததால்...கிட்டத் தட்ட ஒரு நீராவி எஞ்சினைப் போலவே, அவனது மூச்சுச் சத்தம் அவனுக்குக் கேட்டது! கொஞ்சம் களைத்துப் போனவன் கண்களில் ஒரு பெட்டிக்கடை தெரிந்தது! சைக்கிளை நிறுத்தி விட்டுக் கடையில் நின்ற சிறுமியிடம் ஒரு சோடா வாங்கிக் குடித்தவன் சிறுமியிடம் காசைக் கொடுக்கக் காசை வாங்கிய சிறுமி மெத்தப் பெரிய உபகாரம் என்றாள்! வெள்ளைக்காரர் கடைகளில் காசு கொடுக்கும் போது அனேகமாகத் தாங்க் யூ என்று சொல்லுவார்கள்! அதைத் தான் அந்தச் சிறுமியும் சொல்லுகின்றாள்! இந்த வழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலும் இருந்திருக்குமா? இப்போதெல்லாம் சாமான் ஏதாவது வாங்கினால், ஒரு இடமும் நன்றி கூடச் சொல்வதில்லையே! தொலைந்து போகின்ற நல்ல பழக்கங்களில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான் என நினைத்துக் கொண்டான்!
   எங்கேயோ நிறையக் கிளைகள் விட்ட பனை மரம் ஒன்று நின்றது நினைவிலிருந்தது!! இப்போது அதனைக் காணவில்லை!  மகா வித்தியாலயத்தை அண்மித்ததும் அவனது பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வந்தன! பிலோமினாவின் வீட்டை அண்மிக்கும் போது, முன்பு கிடுகுகளினால் மேயப் பட்டிருந்த அந்த வீடு, இப்போது ஒரு சின்ன ஒட்டு வீடாக மாறியிருந்ததைக் கண்டு அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது! விறாந்தையில் ஒரு வயசானவர் ஒருவர், சாய் மனைக்கதிரையில் சாய்ந்த படியே, வீரகேசரி வாசித்துக் கொண்டிருந்தார்! தூரத்தில்  வரும்போதே அவரை அடையாளம் கண்டு கொண்டவன், சைக்கிளைக் கொண்டு போய்ப் பகிர் வேலியில் சாத்தி  வைத்தான்! கண்ணாடியைக் கழட்டியவர் தலையை  நிமிர்த்திச் சந்திரனைப் பார்த்தார்! ஆச்சரியத்துடன், தம்பி இண்டைக்குக் காலமையிலையிருந்து இந்தக் காகம் விடாமல் கத்திய படியேயிருந்தது! இண்டைக்கு யாரோ வரப் போகினம் எண்டு எனக்கு அப்பவே தெரியும் என்றவர் தனது  இரு கரங்களாலும் அவனைக் கட்டிப் பிடித்துத் தழுவினார்! மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் காணப்பட்டார்!
   சந்திரனும் தான் கொண்டு வந்த சூட் ஒன்றை அவரிடம் கொடுக்கத் தம்பி...இதைப் போட்டுக் கொண்டு நான் எங்க போறது என்று ஆதங்கப் பட்டார்! ஏன், ஞாயிற்றுக் கிழமைகளில் சேர்ச்சுக்குப் போறதில்லையோ எண்டு கேட்க...அதெல்லாம் முந்திப் போல இல்லை மகன் என்று கூறினார்! அவர் எப்போதுமே சந்திரனை மகன் என்று தான் அழைப்பார்!
   இப்ப கடலுக்குப் போறதில்லையோ என்று சந்திரன் கேட்க ' இல்லையப்பன், கண்டறியாத சரள வாதம் ஒரு காலில வந்த பிறகு தண்ணிக்குள்ள கன நேரம் நிக்கேலாது! வலது கால் விரல்களில மரத்துப் போன மாதிரி ஒரு விதமான உணர்ச்சியும் இருக்காது!
   அந்தக் காலத்தில்..அவர் திருக்கைகளைக் கருவாட்டுக்காகக் கீறி எறியும் அழகு இப்போதும் கண் முன்னே தெரிந்தது! பருந்துகள் வானத்தில் வட்டமிட்ட படி...கடலுக்குள் வீசியெறியப் படும் திருக்கைக் குடல்களைத் தூக்கிக் கொண்டு போவதற்காக வட்டம் போட்டுப் போட்டுக் கீழே இறங்கி வருவது, ஒரு சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி விமானங்கள் வந்திறங்குவது போலவே இருப்பதால், சந்திரனும், பிலோமினாவும் அதை எப்போதும் ரசிப்பது உண்டு! அத்துடன் அவளைத் தான் கருவாட்டுக்குக் காவலாக விட்டுப் போவதால் கிடைக்கும் தனிமையையும் சந்திரன் விரும்புவதுண்டு!
   அங்கு வரும் மீனவர்களின் வலைகளில் சில வேளைகளில் பெரிய சிங்கி றால்கள் சிக்குவதுண்டு! அவ்வாறு கிடைப்பவகளில் பெரிதானவைகளைத் தெரிந்து பிலோவின் அப்பா அவனிடம் கொடுப்பதுமுண்டு! இதை யாழ்ப்பாணம் கொண்டு போனால் நிறையக் காசு வருமே என்று சந்திரன் சில தடவைகளில் அவரிடம் சொல்லும் போது,மகன் இதை யாழ்ப்பாணம் கொண்டு போற காசு இதன் விலையை விடக் கூடவாக இருக்கும் என்று கூறுவதுண்டு!
   எதுவோ ஒரு பெரிய பொருளாதாரத் தத்துவம் ஒன்றைக் கூறி விட்டது போல, அவரது முகத்தில் ஒரு சிரிப்பொன்று எப்போதும் வந்து போகும்!
   கருவாடு காய விடும் போது...கொஞ்சம் வெயில் ஏறியதும், கடற்கரை கொஞ்சம் வெறுமையாகத் தொடங்கும்!
   காய்கின்ற கருவாடுகளை காவலுக்கு நிற்கும் நாய்கள் பார்த்துக் கொள்ள சந்திரனும், பிலோமினாவும் எதிர்பார்க்கும் தனிமை கொஞ்சம் கிடைக்கும்!
    
   இன்னும் வரும்....!

    
 • Topics

 • Posts

  • 10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs   KKR   7 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   7 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் சுவி கல்யாணி சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் நந்தன் கிருபன் நுணாவிலான் கறுப்பி   இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️
  • அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும் by vithaiApril 14, 2021   “திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம் அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுக்களாகவே தம் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். மேலைநாடுகளில் சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். குறிப்பாக சாதிய அல்லது வர்ண நிலவரங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பாக மட்டுமன்றி சாதியத்தின் தொற்றுவாயிலும் அகமணத்தன்மை காணப்படுவதை அம்பேத்கர் தன்னுடைய மானிடவியல்சார் ஆய்வின் மூலம் கண்டறிந்தார். தன்னுடைய சாதிக்கு எதிரான சிந்தனைகளின் அடிப்படைகளை சாதியை விஞ்ஞான பூர்வமான, வரலாற்று நிலைப்பட்ட ஆய்விலிருந்தே அம்பேத்கர் ஆரம்பித்தார் என்பது முக்கியமானது. மொத்தச் சாதிய இருப்பின் அடிநாதமே ‘அகமணங்கள்’ (Endogamous nature) தான் என்கிறார் ’மானிடவியலாளர்’ அம்பேத்கர். தன்னுடைய காலத்திற்கு முன்பு காலனிய ஐரோப்பியரும், கீழைத்தேய ஆய்வாளர்களும் சாதியின் ‘பிறப்பு’ பற்றிச் ஆய்ந்து சொன்னவற்றை, ஆதாரங்களுடன் மேவிச்சென்றார். அவர் அதுவரைகாலமும் இருந்த புறவயமான ஆய்வுகளில் இருந்து விலகி சாதியை அகவயமாகப் புரிந்துகொள்ளும் வழிகளைத்திறக்கிறார். அகமண முறைகளே சாதியின் தோற்றத்திலும் தொடர்ச்சியிலும் பெருத்த பகுதியை வைத்திருக்கின்றன என்ற அவருடைய ஆய்வும் வாதமும் முக்கியமானது. அவர் கலப்பு மணத்தின் இன்மையே சாதியைப் பாதுகாக்கிறது என்கிறார். கெட்கர் விளக்கிய கலப்புமணத்தடை, பிறப்பிலேயே ஒவ்வொருத்தரும் பிறந்த குழுவிற்கு உறுப்பினராகிவிடும்தன்மை என்பவற்றின் இயல்புகளை சாதிய நிலவரங்களைப்பாதுகாக்கும் முக்கிய ஏற்பாடுகள் என்பதை அம்பேத்கர் வலியுறுத்துகின்றார். இந்திய வர்ணக் கோட்பாட்டை அடியாகக் கொண்ட சாதிய அமைப்புக்களின் ஏனைய தாங்கு தூண்களின் அடிப்பாகமாக அகமணமே இருந்து வருகின்றது. குறிப்பாக அகமண முறைமையைப் பாதுகாப்பதன் மூலம் சாதி தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதை நுட்பமாக அவதானிக்க வேண்டும். முன்பு சதி (உடன் கட்டை ஏறுதல்) ,குழந்தைத்திருமணம் , கட்டாய விதவை முறை என்பன இவ் அகமண அமைப்பினைப் பாதுகாக்கும் கூறுகளாக இருந்தன. இந்த அகமணம் நீடிக்கவேண்டுமெனில் குறித்த குழுவிற்குள்ளே சம எண்ணிக்கை தொடர்ச்சியாகப் பேணப்படவேண்டும். எனவே இச்சமநிலையை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சம் நிறைவு காண்கிறது. மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒரேநேரத்தில் இறப்பதற்குச் சாத்தியமில்லை. கணவன் இறந்துபோனால் பெண் கூடுதலாக நிற்கிறாள். அத்தருணத்தைக் கையாளாவிட்டால் அவர் அக்குழுவைத் தாண்டிச்சென்று அகமண வழக்கத்தைக் குலைப்பாள். அதற்காக அவளை விதவையாக்குவதும் உடன்கட்டை ஏற்றுவதும் நடக்கிறது. அவனுக்கு பருவமெய்தாத பெண்ணை மணம் முடிப்பதும் தானேவந்து பிரம்மச்சரியம் ஏற்பதும் நடக்கிறது. அவ்வாறு குலஒழுங்குகளிலிருந்து சாதிக்கான இயல்புகளைத் தொடங்கும் அம்பேத்கர், பிற்கால நடைமுறைகளில் அவை மெல்ல நடைமுறை இழப்பதை விளக்குகிறார். பெண்ணொருத்தி கணவனை இழந்தால் அவள் அவனுடன் தீக்குள் இறக்கிறாள், கணவன் மனைவியை இழந்தால் ‘பிரமச்சரியம்’ கடைப்பிடிக்கிறான். இம் மானுடப்பிறழ்வுகளும், சாதியை விட்டு விலகி வேறு வர்ணங்களுடன் மணத்தொடர்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைப்பாதுகாக்கும் பொறிமுறைகளாகும். இவ்விடத்தில் ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்று அம்பேத்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை அவர் விளக்கியிருக்கிறார். இவ்விடத்தில் இந்து மதமும் அதன் மூல நூல்களும் எடுக்கும் பாத்திரம் பெரியது. மனுஸ்மிருதி திருமணங்கள் எவ்வாறு நடக்க வேண்டும் யார் யாரைத்திருமணம் செய்ய வேண்டும் என்பதை வர்ணப்பாகுபாட்டைப்பாதுகாக்கும் விதமாக ‘உயர் குடி மணம்’ ’தாழ் குடி மணம்’ என்பவற்றை அனுலோம (இயற்கைக்கு உகந்தது), பிரதிலோம (இயற்கைக்கு ஒவ்வாதது) என்று வரன்முறை செய்கின்றது. பிராமணர்கள், சத்திரியர்கள் போன்ற ஒடுக்கும், சுரண்டும் உயர்குடிகளின் வாழ்வை உறுதி செய்யவும் வைசிக, சூத்திரர்களை ஒடுக்கவுமாக திட்டமிட்டு இந்து மூல நூல்கள் அகமண முறையை கடுமையாக வலியுறுத்துகின்றன. பிராமணியத்தின் பரவுகை, நாட்டார் வழிபாட்டு முறைகளிடம் இருந்த ‘சடங்கியல் தலைமையைப்’ பறித்துக்கொண்டதைப் போலவே திருமணத்திலும் சடங்கியல் தலைமையையும் கட்டமைப்பையும் தங்களுடைய பிறழ்வான சாதிய நடைமுறையைப்பாதுகாக்கும் அமைப்பாகவே மாற்றியது. மனு, உலகின் பெரிய அழிவே வர்ணதர்மத்தின் அழிவு என்றும், உலகின் பெரும் தீமை வர்ணக்கலப்புத்தான் என்கிறது. மத அமைப்பிற்கும் சாதி அமைப்பிற்கும் பழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தின் மன அமைப்பு சிந்திக்காதவண்ணம் கடவுளின் பெயராலும், பிறப்பின் பெயராலும் மனுதர்மம் போன்ற சித்தாந்தங்கள், பிராமணீய சத்திரிய நலன்களையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் முகமான வர்ண சித்தாந்தங்களை நிறுவி, புராண இதிகாசங்கள் மூலம் அதற்கான தொன்மக்கதைகளை உற்பத்தி செய்து சமூக அமைப்பை வர்ண ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவந்தது. எழுத்தாளர் பிரேம் கட்டுரை ஒன்றில் வர்ண அமைப்பினை வலியுறுத்தக் கூடிய இந்து மூல நூல்களில் ஒன்றான ’கீதை’ சொல்லப்பட்ட இடமென விபரிக்கப்பட்டும் பாரதப்போர்க் காட்சியை இவ்வாறு வாசிப்பார், |மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர்க்காட்சி இங்கு இந்திய வேத நூலாகக் கொண்டாடப்படும் பகவத்கீதை பிறக்கிறது. இதை இந்திய மன அமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டால் இந்திய வாழ்வியல், அறவியல் பற்றிய முழு அடிப்படையுமே இதற்குள் மறைந்திருக்கிறது என்று கூறலாம். அர்ச்சுனன் போர்க்களத்தில் தனக்கு முன்னே நிற்கும் அனைவரையும் பார்க்கிறான். சில வினாடிகள்தான். அவனால் போர் செய்ய முடியவில்லை. மனம் பதை பதைக்கக் கருவிகளைத் தளரவிட்டு சோர்ந்து போகிறான். ஏனெனில் எதிரே இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லப்போவதன் துடிப்பு. அவனுக்குத் தேர்ப்பாகனாக வரும் கண்ணன் அர்ச்சுனனைப் போர் செய்யத்தூண்டுகிறான். இந்தக்காட்சியைப் பலரும் பலவாறு விபரித்திருக்கிறார்கள். போரின் அவலம், தான் செய்யப்போகும் கொடுமையின் பதைபதைப்பு, தான் என்ன செய்ய வேண்டும் என்ற அறத்தவிப்பு எனப்பல்வேறு விளக்கங்கள். ஆனால் கீதையில் அர்ச்சுனன் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் தவிப்புகள் மனிதக் கொலைகள் மீதான அவலம் அல்ல, வேறொன்று. அர்ச்சுனன் சொல்கிறான் ‘இதோ எதிரே நிற்கும் அனைவரும் நமது குலத்தைச் சேர்ந்த ஆண்கள். இவர்களைக் கொல்வதன் மூலம் நமது குலம் சிதறிப்போகும் ஆண்கள் அழிந்தால் நமது குலப்பெண்கள் (வேறுகுலத்தவருடன் கலந்து) தூய்மை அழிவார்கள். பெண்களின் குலத்தூய்மை அழிந்தால் சமூக ஒழுங்கும் வர்ண தர்மமும் அழியும் எனவே நான் இந்தக் கொடுமையைச் செய்ய மாட்டேன்’ அதற்கு கண்ணன் அப்படித்தர்மம் அழிய விடமாட்டேன். ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து, அதர்மத்தை (வர்ணக்கலப்பை அழிப்பேன்) என உறுதி வழங்கிக் கொலைக்குத் தூண்டுகிறான். எவ்வளவு பெரிய அழிவையும் விட வர்ணதர்மத்தின் அழிவேமிகப்பெரிய அழிவாகவும், இந்திய மனத்தின் மிகப்பெரும் அச்சமாகவும் செயற்படுவதை நாம் அறிந்துகொள்ள முடியும் | (பிரேம்: பின்னநவீனத்துவம், பிறகான மாக்சியம், பக் 178-179 ) மதங்களின் வழிவந்த இதிகாசங்கள் புராணங்கள் கடவுளர்களின் <கந்தர்வ மணங்களை> விபரிக்கின்றன. சமூக ஒழுக்கம் திணிக்கப்பட்ட பெண்களை, தேவர்களும் கடவுளர்களும் ‘கந்தர்வ மணம்’ புரியவும், ஏமாற்றவும், பாலியல் அறங்களை மீறும் உரித்தைப் பெறுகின்றனர். இத்தொன்மங்களுக்குரிய நடைமுறை நியாயங்களை மதங்களின் மூல நூல்கள் கற்பிதப்படுத்துகின்றன. இதிகாசங்கள் புராணங்கள் அகமண முறையை மனிதர்களுக்கும், கட்டற்ற தன்மையினை கடவுளர்களுக்கும் கதாநாயகர்களுக்கும் வழங்கும் அபத்தத்தை இச்சமூகம் கொண்டாடிக் கொள்ளுமாறு அவர்களின் மன அமைப்பை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். ஒரே நிலத்தைப்பகிர்ந்துகொள்கின்ற பிராமணர்களின் திருமணச்சடங்கு கடவுளர்களுக்கு நிகழ்த்தப்படும் ‘திருக்கல்யாணத்தை’ ஒத்திருக்கிறது. ஆனால் பிராமணர் அல்லாதோரின் சடங்குகள் அப்படியில்லாது இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழ்ச்சமூகம் ஆதியில் வர்ணப்பாகுபாடு இல்லாத சமூகமாக இருந்து வந்தது. அதனுடைய கோத்திரங்களும் குடிகளும் சாதியமற்ற பண்பாட்டுக்குப் பழகியிருந்தனர். ஆனால் சாதியத்தின் வருகையுடன் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகாரங்களின் மீது சாதியம் ஏறி அமர்ந்துகொண்டது. இந்து மதம் அதை ஒழுங்கமைத்தது. அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தின் திருமண முறைகளுக்குள்ளும் அதுசார் சமூக அமைப்புக்குள்ளும் சாதி புகுந்தது. சாதியின் பெரிய பாதுகாப்பான திருமணம் அதுசார் சடங்களில் சாதி இறுக்கமான விதிகளை வகுத்து ‘வர்ண மன அமைப்பை’ உருவாக்கியது. ஈழமும் அகமணமும் தமிழ்ச்சமூகத்தில் குறிப்பாக ஈழத்து தமிழ்ச்சமூகத்தின் அகமண அமைப்பு பெண்ணின் பெயரில் இருக்கும் சொத்தையும், உரித்தையும் பாதுகாக்கும் பொறிமுறையைச் சாதியிடமே ஒப்படைத்தது. கூடவே சீதண முறையும் அக மண முறைக்கு உரமிட்டது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கும் சாதிய அமைப்புக்களின் அகமண முறையைத் தமக்குள் கொண்டிருக்கின்றார்கள். மதத்தின் வழியாகப் பெற்ற சடங்கியல், போலச்செய்தல் பயில்வுகளின் ஊடாக இடைநிலைச்சாதியினரும் சரி, ஒடுக்கப்படுகின்ற சாதியினரும் சரி தமக்குள் அகமண முறையைப் பேண வேண்டியிருக்கிறது. பால், பாலியல் உரிமைகளை, சுதந்திரத்தை சமூக ஒழுக்கம் என்னும் பெயரில் குறித்த சாதிய, வர்க்க நலன்களுக்காக ஒழுங்கமைத்தது. பாலியலின் சடங்கான, சமூக அங்கீராத்தைக் கோரக்கூடிய மண நிலைமையை கட்டுப்படுத்தி ‘அக’ நியதிகளை மீறாமல் பாதுகாப்பதில் சாதிய, வர்க்க, சமய, ஆணாதிக்க மன அமைப்புக்களின் பண்புகளும் நடைமுறைகளும் பங்கெடுத்தன. நன்றாகக் கவனித்தால் ஆணாதிக்க சமூக ஒழுங்கு அகமணமுறையில் ஆண்களுக்கே சலுகைகளையும் தளர்வுகளையும் வழங்குவதையும் பெண்களை ஒடுக்கும் அதிகபட்ச நடைமுறைகளைக் கையாள்கின்றது. பெண்ணைப் புனிதமாக, தாய்மையாக, தெய்வத்தன்மையாக கற்பிதப்படுத்துவதன் மூலம், அவளைச் சொத்தாக, தூய்மைவாதத்தின் சடப்பொருளாக முன்நிறுத்துகின்றன. அவளுடைய மானுட உரித்தை ஒடுக்குகின்றன. கணவனை இழந்தால் பெண்ணை தீயினுள்ளும் விதவை நோன்பினுள் தள்ளுகின்றன. ஆணுக்கு வாழ்க்கைக்குரிய வேறு வாசல்களைத்திறந்து விடுகின்றன. விதவை முறைமை ஒழிக்கப்பட்ட பிறகும் ’மறுமணம்’, சுதந்திரமான துணைத்தெரிவு, பாலியல் சுதந்திரம் என்பவற்றை ஒடுக்கியபடிதான் உள்ளது. ஏனெனில் சொத்து, சாதிய புனிதம், கலாசார குறிபீடு என்பனவற்றைச் சுமக்கும் பண்டமாகப் பெண்ணை மாற்றுகின்றது. இந்த வரலாற்றிப்பின்னணியில் இலங்கையில் தாக்கத்தைச் செலுத்திய பிராமணியத்தின் மேற்சொன்ன ஒடுக்குதல் கூறுகள் இலங்கைக்கு வரும் போது வேறுவடிவங்களைப்பெற்றன என்பதையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக பெளத்த, காலனிய நிலமைகள் அதிகாரத்தில் இருக்கும் போது வரலாற்றில் பிராமணீயத்தினால் இலங்கையில் பெருமெடுப்பில் தலையெடுக்க முடியவில்லை. இலங்கையில் பிராமணியம் அதிகார பீடத்தில் இல்லாவிட்டாலும், இந்துக்கள் திருமணத்தில் கடுமையான அகமண அமைப்பினையே பின் பற்றுகின்றனர். அதிகாரத்தில் இருக்கின்ற ‘வெள்ளாளர்’ களையும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. மதம், ஆணாதிக்கம், சாதி இவை மூன்றும் இணைந்து அகமண அமைப்பினை அண்டாது செய்கின்றன. மதம், சமூகத்தகுதி, சொத்துடமை எல்லாமே அதிகாரத்துக்கும் ஆதிக்கத்திற்குமான அடிப்படைகளாக இருக்கின்றன என்பார் அம்பேத்கர். ஈழத்தில் ஆணவக்கொலைகள் போன்ற கடும் ஒடுக்கு முறைகள் இல்லாவிட்டாலும் அகமணத்தன்மையை மீறி கலப்புத்திருமணம் செய்யும் போது குடும்பப்புறக்கணிப்பு, சமூகப்புறக்கணிப்பு, சொத்துரித்து மறுப்பு, உளவியல் நெருக்கடி என்பவற்றைச் சமூகம் தாராளமாக வழங்குகின்றது. பேசிச்செய்கின்ற திருமணங்கள் தொண்ணூறு வீதத்திற்கு மேலே ஒரே சாதிய, வர்க்க நிலைமைகளின் பேரம் பேசுதல்களின் ஊடாக அகமணத்தை பயில்வில் வைத்திருக்கவும் செய்கின்றன. சாதிய மனநிலை ஊறிய மனங்களும் சமூகப்பயத்துடன் இருக்கும் மனங்களும் காதல் என்று வரும் போது கூட சாதிய நிலமையை ஒருமுறை உமிழ்ந்து விழுங்கிய பிறகே ‘காதலைத்(!) தொடங்கும் அபத்தமும் உள்ளது. உறவினர்களை உருவாக்குதல், அவற்றின் பரம்பரை மரத்தினைப் பேணுதல் சாதிய அகமணத்தினாலும் பேணப்படுகின்றது. யாழ்ப்பாணத்துச் சாதியத்தைப் பற்றி எழுதும் போது மைக்கல் பாங்ஸ் “’ஒவ்வொரு சாதியும் பெயரிடப்படாத புனைவான், அகமணக்கட்டுடைய அலகுகளாக உள்ளார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பல்வேறு கிராமங்களிற் சிதறிவாழும் கணிசமான குழுக்களை உள்ளடக்கியது. இவை இடுகுறிப்பெயர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் இனப் பொதுவியல்பான பெயர்களும் அற்றவையாகும். ‘என்னுடைய சொந்தக்கார’ எனும் வெளிப்பாடு ‘எனது உறவினர்’ என்ற நேரடியான அர்த்தம் தரும். அது எனது சாதியைச் சார்ந்தவர்களைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.’’ (பனுவல் இதழ் 07, பக் 08) ஈழத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு தளங்களில் செல்வாக்கு மிக்க புலமாக உள்ள ‘புலப்பெயர்வாளர்கள்’ வேறு அரசியல் பண்பாட்டுச்சூழலுக்குள் சென்றாலும் கலப்புத்திருமணம் அரிதாகவே இருந்தது. அவர்கள் சாதிய, சமய நம்பிக்கைகளை வேறொரு நிலத்திலும் பண்பாட்டிலும் பின்பற்றவே திருவுளம் கொண்டனர். குடும்ப அமைப்பு சாதிய அகமணப்பேணுகையின் பெரிய பாத்திரத்தை எடுக்கிறது அது ஆதிக்க மனநிலை வழங்கியவற்றை உணர்ச்சிப்பாங்கோடு உறவுக் கற்பிதங்களால் செய்து முடிக்கின்றது . குடும்பம்; திருமணம் என்ற ஆதாரத்தின் மீது அமைந்திருக்கிறது என்றார் ஏங்கல்ஸ். திருமணத்தின் மீது குடும்பமும் குடும்பத்தின் மீது திருமணமும் கொண்டுள்ள இயக்கத்தில் அகமணமும் சாதிய, வர்க்க நலன்களும் தங்களின் வேர்களை விரவி ஓடியிருக்கின்றன. சாதிய அகமணத்தோடு இணைந்திருக்கும் மற்றொரு கூறு புவியியல் சார் அகமணத்தன்மையாகும். குறித்த குழுக்கள் குறித்த நிலத்தில் வாழும் குழுக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் மரபினைப் பேணுகின்றன. மேலும் இடைநிலைசாதியினரும் சரி, தாழ்த்தப்படும் சாதியினரும் சரி, ஒடுக்கும் சாதியினரைப்போல் மாற வேண்டும் என்ற போலச்செய்யும் அல்லது அதே போன்ற மாற்றை உருவாக்கும் நடை முறைக்குள் செல்லும் மனநிலையோடு இருக்கும் பண்புகளைத் திருமணத்திலும் அவதானிக்கின்றோம். அவர்கள் பொருளாதாரம் ஈட்டுவதன் ஊடாக வர்க்க மேன்நிலையாக்கமும், ஒடுக்கும் சாதிக்குழுக்களுடன் கலப்புத்திருமணங்களைச் செய்வதன் ஊடாக அவர்களின் மனநிலைக்குள் சென்று சேரவும் சாதியை ஒழிக்காமல் அதை ‘மேன்நிலையாக்கம்’ செய்யவும் விரும்புகின்றனர். ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த திருமணச்சடங்குகளின் பல்தன்மை, , உள்ளூர் மரபுகள் தேய்ந்தழிந்துள்ளன. ஈழத்தில் உள்ளூர் மரபுகளில் இருந்த ‘சோறுகொடுத்தல்’ முதலான திருமணச்சடங்குகள் நீங்கிப் போயுள்ளன. அவை அகமண முறைமையை வியாபித்த, தங்களை உயர் குடிகளாகக் காட்டிக்கொண்ட பிராமணீய சடங்கியல் அதிகாரத்தினால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் பிராமணர்களிடையே ‘திருமணம்’ முதலான மங்கலச் சடங்குகளுக்கு உரியவர்கள், மரணம் முதலான அமங்கலச்சடங்குகளுக்கு உரியவர்கள் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் மரபுரித்துகளைச் சடங்குகளை அகமண முறையைப் பின்பற்றும் சாதிய அமைப்பைப் பின்பற்றும் தங்களையே ஒடுக்கும் குழுக்களைப் போலச்செய்தும், அவர்களினால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட தளைகளுக்குள் சிக்கிக்கொண்டும் இழந்து போயுள்ளனர். பழய தொல்குடிச் சமயங்கள், வழக்குகள், திணை வாழ்வு என்பவை, தருகின்ற தொல், இலக்கியச்சான்றுகள் சாதிக்கு முந்திய சமூகத்தில் இருந்த ஒடுக்குதல் அற்ற சுதந்திரமான காதல் வாழ்க்கையை விபரித்துச்செல்கின்றன. இலங்கையில் ஈழ விடுதலைப்போராட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போராட்டத்தில் அதிகாரம் மிக்க அமைப்பாக மாறியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்களுடைய அமைப்பின் கொள்கைகளில் சமய, சாதிப்பாகுபாடுகளை புறக்கணித்தனர். நடைமுறையுலும் அவை இயலுமான அளவு பயிலப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களோ, அவர்கள் சார்ந்து திருமணம் முடிப்பவர்களோ சமய சடங்குகள் அற்று புலித்தாலி, மோதிரமாற்று, கைக்கடிகாரம் மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக திருமணத்தை மேற்கொண்டனர். இங்கே சாதிய அகமண முறைக்கெதிரான பண்புகள் அதிகரித்ததுடன் கலப்புத்திருமணங்களும் நடக்க சமூக வாய்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததை இங்கே அவதானித்தே நகர்ந்து செல்ல வேண்டும். இலங்கையைப்பொறுத்தவரையில் வட இலங்கைக்கு என்று குறிப்பிட்ட அகமணத்தன்மைகளும், கிழக்கிற்கு என்று அகமணத்தன்மைகளும், மத்திய மலைநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளிகள் இந்திய, சாதிய அகமண முறைகளையே பின்பற்றுவர், முஸ்லீம்களிடையே சாதிய நிலமை காணப்படாவிட்டாலும் அங்கே வர்க்க அகமணத்தன்மை செறிவாக உள்ளது. சிங்கள மக்களிடையே சாதிய அமைப்பு நிலவுவதுடன் சாதிய, வர்க்க அகமணத்தன்மை உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் அதனுடைய அகமணத்தன்மை மானுடவியல் கண்களுடன், முன்னேறிய கோட்பாடுகளின் சமகாலத்தன்மைகளுடன் அணுகப்பட்டது குறைவாகவே இருக்கின்றது. இலங்கையின் தமிழ் கிறிஸ்தவ சூழலிலும் சாதிய நிலமைகளும் அகமணமும் நிகழ்கின்றது, கிறிஸ்துவ திருச்சபையின் அதிகாரம் இன்று வரையும் ‘கிறிஸ்தவ வெளாளர்’ களிடமே உள்ளது. கிறிஸ்தவம் சாதிய அமைப்பினை ஏற்காவிடினும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்த கிறிஸ்தவத்திற்கும் சாதியமும் அகமண மரபும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதமும் சடங்கும் சடங்கியல் தலைமையும் மாறினாலும் சாதிய நீக்கம் செய்வதும் கைவிடுவதும் பெரும் சவாலாகவே இருப்பதை அவதானிக்கிறோம். தமிழ்ச்சூழலில் இணையேற்பு, சுயமரியாதைத் திருமணம் போன்ற சொற்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. மேலும் தற்பாலீர்ப்பாளர் மணங்களுக்கு அல்லது இணையேற்பிற்கு இந்தியாவில் சட்ட பூர்வ அனுமதி கிடைத்திருக்கிறது. இலங்கையில் அத்தகைய தற்பாலீர்ப்பாளர்களின் மணமும் குடும்ப வாழ்வும் அங்கீகரிக்கப்பட வேண்டும். சாதியும் சமயமும் தலைக்குள் உழன்று கொண்டிருக்கும் இச்சமூகத்தைச் சிந்திக்கவும் பன்மைத்தன்மையை, கலப்பு மானுட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் பழக்க வேண்டும். ஒடுக்குதலற்ற சுதந்திரமான உடலையும் கருத்தையும் மக்கள் அடைய வேண்டும். சமூக அமைப்புக்களின் திருமணச்சடங்குகளும் அதுசார் கருத்தியல்புகளும் பன்முகமானவை, இங்கே அப் பல்தன்மைகள் அதிகாரமிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. ஒடுக்க கூடிய சாதிய, சமய அடிப்படையில் எழும், அவற்றைப்பாதுகாக்கும், அகமணங்களைப் பேணுகின்ற சமூகங்கள் மையத்தில் இயங்கும் போது அவற்றின் ஒடுக்குமுறை அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலதிகாரம் என்பவற்றை எதிர்க்கவும் வேண்டியுள்ளது. கலப்புத்திருமணங்கள் பற்றிப்பேசும் போது நடைமுறையில் சாதிய, வர்க்க கலப்பு நடைபெறுவதற்கான பெரிய புள்ளியாக ‘காதலைக்’ கருதினால், ஒரு குறித்த சமூகத்தைச்சேர்ந்த ஆண் பெண் உடல்கள் காதல் வயப்படுதலிற்கான பாலியல் தேர்வும், பழக்க வழக்கமும், ஒழுக்க நடைமுறைகளும், நம்பிக்கைகளும் தனிப்பட்ட இரண்டு உடல்களுக்குள் இயங்கு விதத்தை குடும்பம், சமூகச்சூழல், பொருளாதாரம் முதலானவையே தீர்மானிக்கின்றன. அதற்கு மதம், சாதி என்பன அதிகாரக் கற்பிதங்களையும், மரபார்ந்த நம்பிக்கைகளையும் கொடுக்கின்றன. இங்கே வெவ்வேறு அடையாளங்களை, இயல்புகளைக் கொண்டிருக்கின்ற உடல்கள் சந்திப்பதற்குரிய சூழமைவைக் கொண்டுவருவதற்கு பொருளாதார சமத்துவமும், சுயமரியாதையும் சமதர்மமும் கொண்ட சமூகத்துக்கான பயணத்தில் பங்கெடுக்க வேண்டும். சாதிய, சமய, ஆணாதிக்க பண்புகளற்ற கலப்புத்திருமணங்களோ, இணையேற்புகளோ வெறுமனே அதிர்ச்சி மதிப்பீடுகளோ சாகசங்களோ அல்ல அவை அபூர்வமாக நிகழ்வதில் இருந்து இயல்பாக நிகழ்வதற்கான வழி முக்கியமானது. -யதார்த்தன் (நன்றி – ஜீவநதி)   https://vithaikulumam.com/2021/04/14/அகமண-முறையும்-சாதியை-அழி/
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா.
  • என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்) April 18, 2021     —  கருணாகரன் —  தமிழ்த்தேசியக் கட்சிகளின் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) அரசியல் போதாமைகளும் ஜனநாயகப் பற்றாக்குறையும் சமூக நீதி குறித்த அக்கறையின்மையும் செயற்பாட்டுப் பலவீனமும் அவற்றை விட்டு நம்மைத் தூரத் தள்ளுகின்றன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளை முறியடிக்கக் கூடிய விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படைத் தகுதிகளை இவை கொண்டிருக்கவில்லை என்பது இதில் முக்கியமான குறைபாடாகும். இதிலும் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தினரோடு கொள்ள வேண்டிய உறவைப் பற்றியும் இணைந்து செயற்பட வேண்டிய அரசியல் தேவையைப் பற்றியும் இவற்றிடம் எந்த விதமான தெளிவான சித்திரங்களும் இல்லை. நடைமுறைகளும் இல்லை.  இதைப்போலவே வடக்கும் கிழக்கும் எப்படி அகரீதியாகவும் புறரீதியாகவும் இணைந்து அரசியல் மற்றும் பண்பாட்டு உறவில் நீடிப்பது என்பதைக்குறித்தும் இவற்றிடம் எந்த விதமான சிந்தனைகளையும் செயற்பாட்டு முறைமைகளையும் காணமுடியவில்லை. அவ்வாறே வடக்குக் கிழக்கில் உள்ள சிங்கள மக்களுடன் எப்படியான அரசியல் தன்மைகளை மேற்கொள்வது? அரசியலுக்கு அப்பால் சமூக வாழ்விலும் பண்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பிற செயல்முறைகளிலும் எப்படி இணக்கப் புள்ளிகளையும் ஒருங்கிணைவையும் கொள்வது என்பதிலும் எந்தத் தெளிவும் இல்லை. (இதைக் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயலாம்).  இந்த நிலையில் தனியே அரச எதிர்ப்புவாதமும் சர்வதேசத்தை நோக்கிய கையேந்தலுமாக தமிழ்த்தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியுமா? அது பயன் தருமா? அதுவும் போராடிப் பேரிழப்புகளைச் சந்தித்த நிலையிலிருக்கும் மக்களுக்கு இவ்வாறான மேலோட்டமான அரசியல் (சட்டை கசங்காத அரசியல் அல்லது வெள்ளை வேட்டி அரசியல்) பயனுடையதா? சரியானதா?  இவ்வாறான நியாயமான கேள்விகளை நாம் எழுப்பும்போது உடனடியாக நம்மைநோக்கி, “அப்படியென்றால், நீங்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவரா? அரச சார்பானவரா, ஒத்தோடியா?” என்று கேட்கிறார்கள்.  ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று உண்மையில் விளங்கவில்லை. இதொரு குறுக்கு வழி எண்ணமே இவர்களை இப்படிக் கேட்க வைக்கிறது. மாற்றுச் சிந்தனைக்கு செல்ல முடியாத, மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்க முடியாத, மாற்றுச் செயல் முறையில் தம்மை ஈடுபடுத்த முடியாததன் காரணமே இது.  நாம் சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது அந்தத் தரப்பிலுள்ளவர்களின் பொறுப்பாகும். அதுவும் அரசியல் ரீதியான கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படையாக முன்வைத்தால் அதை அதே வெளிப்படைத் தன்மையோடு அணுகி, அவற்றுக்கான பதிலைக் காண முற்படுவதே நியாயம். அதுவே அழகு. அதுவே சரியானது. அதை விடுத்து, எதிர்க்கேள்விகளின் மூலம் திசை திருப்பல்களை மேற்கொள்வதும் அரச ஆதரவாளர் என்று குறிசுட்டு ஒரு பக்கம் தள்ளுவதும் நியாயமற்றது. அது கீழ்மையானது.  அரச ஆதரவு என்பதும் அரசை  எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அரசைப் புரிந்து கொள்வது என்பதும் வெவ்வேறானது. நிபந்தனையற்ற (கேள்விகளற்ற) அரச ஆதரவு என்பதும் நிபந்தனையற்ற (கண்மூடித்தனமான) அரச எதிர்ப்பு என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அடித்தால் மொட்டை. கட்டினால் குடும்பி என்ற மாதிரி. இதையே கறுப்பு – வெள்ளை அரசியல் என்கிறோம். இந்தப் பார்வையே துரோகி – தியாகி என்ற பிரிகோட்டை உருவாக்கக் காரணமாகியது. இரண்டினதும் விளைவுகளில் வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அரசியல் அடிப்படைகளில் இரண்டுக்கும் ஒத்த தன்மைகளுண்டு. முக்கியமாக உண்மைகளைக் காணத் தவறும் போக்கில்.  மற்றும்படி அரச ஆதரவு – அரச எதிர்ப்பு என்பதற்கு அப்பாலானதொரு வழிமுறையைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று பலரும் கேட்கலாம். அல்லது இதைக்குறித்த குழப்பம் அவர்களுக்கிருக்கலாம். இதற்கு முன்பு நாம் ஒன்றைப் பற்றி அறிய வேண்டும்.  இதுவரையான (60 ஆண்டுகளுக்கு மேலான) அரச எதிர்ப்பு நமக்கு எதைப் பெற்றுத் தந்தது? அதைப்போல இதுவரையான (20 ஆண்டுகள் வரையான) அரச ஆதரவு தந்தது என்ன?  எனவேதான் நாம் இரண்டுக்கும் அப்பாலான ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அது கண்மூடித்தனமான அரச எதிர்ப்போ அரச ஆதரவோ அல்ல. இரண்டுக்கும் இடையிலானதைப் போன்றது. அதாவது தேவையானபோது –சரியானவற்றுக்கான ஆதரவைக் கொடுப்பது. பிழையானபோது அவற்றை எதிர்ப்பது. மறுப்பது.  இதை ஒரு அரசியல் வழிமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. ஆனால் இந்தக் கடினங்களை எதிர்கொண்டே நாம் நம்முடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். எந்தக் கடினங்களையும் எதிர்கொள்ளாமல் எந்த இலக்கையும் எட்ட முடியாது.  சரி, ஆனால், இதற்கான சாத்தியங்கள் எப்படி? என்ற கேள்வியொன்று உங்களுக்குள் எழலாம். ஏனென்றால் அரச எதிர்ப்பில் பிரச்சினையே இல்லை. அரச ஆதரவை வரையறை செய்வதில்தான் பிரச்சினையே. நாம் நினைப்பதைப்போல அரச ஆதரவை வரையறுத்து வழங்க முடியாது. அது அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று நீங்கள் வாதிடலாம்.  அதில் உண்மையுண்டு. நிபந்தனையற்ற ஆதரவையே அதிகாரம் விரும்பும். அதையே அனுமதிக்கும். இந்த மாதிரி இடைநிலை நிற்கும் தன்மையை அது அனுமதிக்காது. அதற்கு இடமளிக்காது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சில தேவைகள் –அவசியங்கள் உண்டு. அதைக் கவனித்து அதற்குள் காரியங்களைச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செயற்படுத்திக் கொள்ளலாம். அது சோரம் போதல் அல்ல. அது அரசியல் சாதுரியமாகும். மக்கள் நிலைநின்று,மக்கள் நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாகும். இதை இராஜதந்திர ரீதியாகச் செயற்படுவது என்றும் கருதிக் கொள்ளலாம்.  இவ்வாறு வலிமையாகச் செயற்படுவதன் மூலம் ஒரு புதிய அரசியல் அடையாளத்தையும் வழிமுறையையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த அரசியல் வழிமுறையும் அடையாளமும் முக்கியமானது. இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியதும் அதுவே. எப்படியென்றால், அரச எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் சரியானதை ஏற்றுக் கொண்டு, தவறானதை நிராகரித்தும் மறுத்தும் நியாயமாகச் செயற்படுவதாக ஒரு அடையாளத்தை உருவாக்குதல். இந்த அடையாளம் முக்கியமானது. இது எதிர்த்தரப்புகளுக்கும் வெளிச்சமூகத்துக்கும் ஒரு புதிய சேதியைச் சொல்லும். குறிப்பாக சிங்கள மக்களிடம் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தும்.  இப்போதுள்ள அரச எதிர்ப்பை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நாட்டுக்கும் தமக்கும் எதிரான போக்கு என்று கருதும் அல்லது கருதப்பட வைக்கும் நிலையே காணப்படுகிறது. எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பைக் காட்டுவது என்பது “எதிர்த்தரப்பு – எதிரித் தரப்பு” என்று அடையாளமாக்கி, அதற்கான எதிர் மனநிலையை சிங்கள மக்களிடத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அடையாளத்தையும் மனநிலையையும் பயன்படுத்தியே சிங்கள மேலாதிக்க –இனவாத அரசியல் நடத்தப்படுகிறது.  இதை நான் மேற்சொன்ன இடையூடாட்ட (சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் கருதிச் செயற்படும்) அரசியல் உடைக்கக் கூடியதாக இருக்கும். நாம் எதற்கும் எப்போதும் எதிரானவர்களல்ல. சரியானதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு ஆதரவழிப்போம். தவறானதை எதிர்ப்போம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவே நாம் எப்போதும் சரியானதை – நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்துவது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற எதிர் அடையாளத்தை மாற்றியமைப்பது.  “இதிலும் பிரச்சினை உண்டே!” என்று நீங்கள் கேட்கலாம். “எங்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது அவர்களுடைய நோக்கில் தவறாகத் தெரியும். அவர்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது எங்களுக்குப் பிழையாகத் தோன்றும். இப்படியிருக்கும்போது நாம் எப்படிப் பொதுவான சரியை ஏற்றுக் கொள்வது?” என்ற விதமாக.  இந்தச் சிக்கலும் சிரமமும் உண்டே. அதுதான் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு மிகமிகக் கடினமான வழிமுறை என்று. ஆனால் வேறு வழியில்லை. போர் மட்டும் இலகுவான வழியாக இருந்ததா, என்ன? அதில் எவ்வளவு இழப்புகள்?முக்கியமாக உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், வாழ்விழப்புகள், உடமை, வாழிட இழப்புகள் என ஏராளம் இழப்புகளை நாம் சந்திக்கவில்லையா? முப்பது ஆண்டுகள் அந்த வழியில் நம்மைச் செலவிடவில்லையா?  இது அதை விட இலகுவானது. ஆனால்,மிகப் பொறுமையாக, மிக நிதானமாக, மிக விவேகமாகச் செயற்பட வேண்டியது.  இரண்டு தரப்புக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய சரிகளை முதலில் ஏற்றுக் கொள்வது. அதற்கான ஆதரவை வழங்குவது. அதைப்போல சிக்கலான இடங்களில் மிக நிதானமாக எமது தரப்பின் நியாயப்பாடுகளைச் சொல்லி, முன்பு சரியானவற்றுக்கு வழங்கிய ஆதரவை நினைவூட்டி எதிர்ப்பது.  இப்படிச் செய்து கொண்டு வரும்பொழுது நியாயமாக நாம் எதிர்ப்பைக் காட்டுகிறோம். நியாயங்களைக் கேட்கிறோம். நியாயமாகப் பேசுகிறோம் என்ற உணர்வு ஏற்படும். ஏனெனில் எதிர்த்தரப்பில் (சிங்களத்தரப்பில்) உள்ளவர்களுக்கு இதயமும் மூளையும் மனச்சாட்சியும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அவர்களிடமும் அறவுணர்வும் புரிதலும் உண்டு. உண்மையில் அவர்களை நாம் எதிர்த்தரப்பு என்றே கருத வேண்டியதில்லை. அப்படிக் கருதுவதே ஆயிரம் பிரச்சினைகளை உற்பவிக்கக் கூடியது. இது நம்முடைய கடந்த கால அனுபவம் இல்லையா?  என்பதால் நாம் இந்தச் சரியென்றால் அதை ஏற்றும் பிழையென்றால் அதை எதிர்த்தும் நிற்கும் ஒரு அரசியல் வழிமுறையை உருவாக்கி நிலைப்படுத்த வேண்டும். அதன் மூலம் புதிய அரசியல் திறப்பை (சாவியை) நம்முடைய கையில் எடுத்துக்கொள்ள முடியும். இன்றுள்ள ஒரே வழிமுறை இதுதான். அரசியலில் மாற்றுப்பார்வைகளுக்கு எப்போதும் இடமுண்டு என்பது யதார்த்தம். ஆனால், அந்த பலதரப்பட்ட பார்வைகளில் எவை சரியானவை, அனுபவத்துக்கும் அறிவுக்கும் நெருக்கமானவை என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. தமிழ் அரசியல் முன்னெடுப்பு என்பது முற்று முழுதான ஆராய்வுக்குரியதாக இன்றுள்ளது. அதைச் செய்தே தீர வேண்டும்.  (தொடரும்)    https://arangamnews.com/?p=4741
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.