விவகாரத்தை ஜெனிவாவில் வைத்திருந்து காலங்கடத்தும் யோசனை – தமிழ் சிவில் சமூகம்

By
உடையார்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்) April 18, 2021 — கருணாகரன் — தமிழ்த்தேசியக் கட்சிகளின் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) அரசியல் போதாமைகளும் ஜனநாயகப் பற்றாக்குறையும் சமூக நீதி குறித்த அக்கறையின்மையும் செயற்பாட்டுப் பலவீனமும் அவற்றை விட்டு நம்மைத் தூரத் தள்ளுகின்றன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளை முறியடிக்கக் கூடிய விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படைத் தகுதிகளை இவை கொண்டிருக்கவில்லை என்பது இதில் முக்கியமான குறைபாடாகும். இதிலும் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தினரோடு கொள்ள வேண்டிய உறவைப் பற்றியும் இணைந்து செயற்பட வேண்டிய அரசியல் தேவையைப் பற்றியும் இவற்றிடம் எந்த விதமான தெளிவான சித்திரங்களும் இல்லை. நடைமுறைகளும் இல்லை. இதைப்போலவே வடக்கும் கிழக்கும் எப்படி அகரீதியாகவும் புறரீதியாகவும் இணைந்து அரசியல் மற்றும் பண்பாட்டு உறவில் நீடிப்பது என்பதைக்குறித்தும் இவற்றிடம் எந்த விதமான சிந்தனைகளையும் செயற்பாட்டு முறைமைகளையும் காணமுடியவில்லை. அவ்வாறே வடக்குக் கிழக்கில் உள்ள சிங்கள மக்களுடன் எப்படியான அரசியல் தன்மைகளை மேற்கொள்வது? அரசியலுக்கு அப்பால் சமூக வாழ்விலும் பண்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பிற செயல்முறைகளிலும் எப்படி இணக்கப் புள்ளிகளையும் ஒருங்கிணைவையும் கொள்வது என்பதிலும் எந்தத் தெளிவும் இல்லை. (இதைக் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயலாம்). இந்த நிலையில் தனியே அரச எதிர்ப்புவாதமும் சர்வதேசத்தை நோக்கிய கையேந்தலுமாக தமிழ்த்தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியுமா? அது பயன் தருமா? அதுவும் போராடிப் பேரிழப்புகளைச் சந்தித்த நிலையிலிருக்கும் மக்களுக்கு இவ்வாறான மேலோட்டமான அரசியல் (சட்டை கசங்காத அரசியல் அல்லது வெள்ளை வேட்டி அரசியல்) பயனுடையதா? சரியானதா? இவ்வாறான நியாயமான கேள்விகளை நாம் எழுப்பும்போது உடனடியாக நம்மைநோக்கி, “அப்படியென்றால், நீங்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவரா? அரச சார்பானவரா, ஒத்தோடியா?” என்று கேட்கிறார்கள். ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று உண்மையில் விளங்கவில்லை. இதொரு குறுக்கு வழி எண்ணமே இவர்களை இப்படிக் கேட்க வைக்கிறது. மாற்றுச் சிந்தனைக்கு செல்ல முடியாத, மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்க முடியாத, மாற்றுச் செயல் முறையில் தம்மை ஈடுபடுத்த முடியாததன் காரணமே இது. நாம் சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது அந்தத் தரப்பிலுள்ளவர்களின் பொறுப்பாகும். அதுவும் அரசியல் ரீதியான கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படையாக முன்வைத்தால் அதை அதே வெளிப்படைத் தன்மையோடு அணுகி, அவற்றுக்கான பதிலைக் காண முற்படுவதே நியாயம். அதுவே அழகு. அதுவே சரியானது. அதை விடுத்து, எதிர்க்கேள்விகளின் மூலம் திசை திருப்பல்களை மேற்கொள்வதும் அரச ஆதரவாளர் என்று குறிசுட்டு ஒரு பக்கம் தள்ளுவதும் நியாயமற்றது. அது கீழ்மையானது. அரச ஆதரவு என்பதும் அரசை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அரசைப் புரிந்து கொள்வது என்பதும் வெவ்வேறானது. நிபந்தனையற்ற (கேள்விகளற்ற) அரச ஆதரவு என்பதும் நிபந்தனையற்ற (கண்மூடித்தனமான) அரச எதிர்ப்பு என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அடித்தால் மொட்டை. கட்டினால் குடும்பி என்ற மாதிரி. இதையே கறுப்பு – வெள்ளை அரசியல் என்கிறோம். இந்தப் பார்வையே துரோகி – தியாகி என்ற பிரிகோட்டை உருவாக்கக் காரணமாகியது. இரண்டினதும் விளைவுகளில் வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அரசியல் அடிப்படைகளில் இரண்டுக்கும் ஒத்த தன்மைகளுண்டு. முக்கியமாக உண்மைகளைக் காணத் தவறும் போக்கில். மற்றும்படி அரச ஆதரவு – அரச எதிர்ப்பு என்பதற்கு அப்பாலானதொரு வழிமுறையைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று பலரும் கேட்கலாம். அல்லது இதைக்குறித்த குழப்பம் அவர்களுக்கிருக்கலாம். இதற்கு முன்பு நாம் ஒன்றைப் பற்றி அறிய வேண்டும். இதுவரையான (60 ஆண்டுகளுக்கு மேலான) அரச எதிர்ப்பு நமக்கு எதைப் பெற்றுத் தந்தது? அதைப்போல இதுவரையான (20 ஆண்டுகள் வரையான) அரச ஆதரவு தந்தது என்ன? எனவேதான் நாம் இரண்டுக்கும் அப்பாலான ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அது கண்மூடித்தனமான அரச எதிர்ப்போ அரச ஆதரவோ அல்ல. இரண்டுக்கும் இடையிலானதைப் போன்றது. அதாவது தேவையானபோது –சரியானவற்றுக்கான ஆதரவைக் கொடுப்பது. பிழையானபோது அவற்றை எதிர்ப்பது. மறுப்பது. இதை ஒரு அரசியல் வழிமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. ஆனால் இந்தக் கடினங்களை எதிர்கொண்டே நாம் நம்முடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். எந்தக் கடினங்களையும் எதிர்கொள்ளாமல் எந்த இலக்கையும் எட்ட முடியாது. சரி, ஆனால், இதற்கான சாத்தியங்கள் எப்படி? என்ற கேள்வியொன்று உங்களுக்குள் எழலாம். ஏனென்றால் அரச எதிர்ப்பில் பிரச்சினையே இல்லை. அரச ஆதரவை வரையறை செய்வதில்தான் பிரச்சினையே. நாம் நினைப்பதைப்போல அரச ஆதரவை வரையறுத்து வழங்க முடியாது. அது அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று நீங்கள் வாதிடலாம். அதில் உண்மையுண்டு. நிபந்தனையற்ற ஆதரவையே அதிகாரம் விரும்பும். அதையே அனுமதிக்கும். இந்த மாதிரி இடைநிலை நிற்கும் தன்மையை அது அனுமதிக்காது. அதற்கு இடமளிக்காது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சில தேவைகள் –அவசியங்கள் உண்டு. அதைக் கவனித்து அதற்குள் காரியங்களைச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செயற்படுத்திக் கொள்ளலாம். அது சோரம் போதல் அல்ல. அது அரசியல் சாதுரியமாகும். மக்கள் நிலைநின்று,மக்கள் நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாகும். இதை இராஜதந்திர ரீதியாகச் செயற்படுவது என்றும் கருதிக் கொள்ளலாம். இவ்வாறு வலிமையாகச் செயற்படுவதன் மூலம் ஒரு புதிய அரசியல் அடையாளத்தையும் வழிமுறையையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த அரசியல் வழிமுறையும் அடையாளமும் முக்கியமானது. இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியதும் அதுவே. எப்படியென்றால், அரச எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் சரியானதை ஏற்றுக் கொண்டு, தவறானதை நிராகரித்தும் மறுத்தும் நியாயமாகச் செயற்படுவதாக ஒரு அடையாளத்தை உருவாக்குதல். இந்த அடையாளம் முக்கியமானது. இது எதிர்த்தரப்புகளுக்கும் வெளிச்சமூகத்துக்கும் ஒரு புதிய சேதியைச் சொல்லும். குறிப்பாக சிங்கள மக்களிடம் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தும். இப்போதுள்ள அரச எதிர்ப்பை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நாட்டுக்கும் தமக்கும் எதிரான போக்கு என்று கருதும் அல்லது கருதப்பட வைக்கும் நிலையே காணப்படுகிறது. எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பைக் காட்டுவது என்பது “எதிர்த்தரப்பு – எதிரித் தரப்பு” என்று அடையாளமாக்கி, அதற்கான எதிர் மனநிலையை சிங்கள மக்களிடத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அடையாளத்தையும் மனநிலையையும் பயன்படுத்தியே சிங்கள மேலாதிக்க –இனவாத அரசியல் நடத்தப்படுகிறது. இதை நான் மேற்சொன்ன இடையூடாட்ட (சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் கருதிச் செயற்படும்) அரசியல் உடைக்கக் கூடியதாக இருக்கும். நாம் எதற்கும் எப்போதும் எதிரானவர்களல்ல. சரியானதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு ஆதரவழிப்போம். தவறானதை எதிர்ப்போம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவே நாம் எப்போதும் சரியானதை – நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்துவது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற எதிர் அடையாளத்தை மாற்றியமைப்பது. “இதிலும் பிரச்சினை உண்டே!” என்று நீங்கள் கேட்கலாம். “எங்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது அவர்களுடைய நோக்கில் தவறாகத் தெரியும். அவர்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது எங்களுக்குப் பிழையாகத் தோன்றும். இப்படியிருக்கும்போது நாம் எப்படிப் பொதுவான சரியை ஏற்றுக் கொள்வது?” என்ற விதமாக. இந்தச் சிக்கலும் சிரமமும் உண்டே. அதுதான் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு மிகமிகக் கடினமான வழிமுறை என்று. ஆனால் வேறு வழியில்லை. போர் மட்டும் இலகுவான வழியாக இருந்ததா, என்ன? அதில் எவ்வளவு இழப்புகள்?முக்கியமாக உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், வாழ்விழப்புகள், உடமை, வாழிட இழப்புகள் என ஏராளம் இழப்புகளை நாம் சந்திக்கவில்லையா? முப்பது ஆண்டுகள் அந்த வழியில் நம்மைச் செலவிடவில்லையா? இது அதை விட இலகுவானது. ஆனால்,மிகப் பொறுமையாக, மிக நிதானமாக, மிக விவேகமாகச் செயற்பட வேண்டியது. இரண்டு தரப்புக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய சரிகளை முதலில் ஏற்றுக் கொள்வது. அதற்கான ஆதரவை வழங்குவது. அதைப்போல சிக்கலான இடங்களில் மிக நிதானமாக எமது தரப்பின் நியாயப்பாடுகளைச் சொல்லி, முன்பு சரியானவற்றுக்கு வழங்கிய ஆதரவை நினைவூட்டி எதிர்ப்பது. இப்படிச் செய்து கொண்டு வரும்பொழுது நியாயமாக நாம் எதிர்ப்பைக் காட்டுகிறோம். நியாயங்களைக் கேட்கிறோம். நியாயமாகப் பேசுகிறோம் என்ற உணர்வு ஏற்படும். ஏனெனில் எதிர்த்தரப்பில் (சிங்களத்தரப்பில்) உள்ளவர்களுக்கு இதயமும் மூளையும் மனச்சாட்சியும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அவர்களிடமும் அறவுணர்வும் புரிதலும் உண்டு. உண்மையில் அவர்களை நாம் எதிர்த்தரப்பு என்றே கருத வேண்டியதில்லை. அப்படிக் கருதுவதே ஆயிரம் பிரச்சினைகளை உற்பவிக்கக் கூடியது. இது நம்முடைய கடந்த கால அனுபவம் இல்லையா? என்பதால் நாம் இந்தச் சரியென்றால் அதை ஏற்றும் பிழையென்றால் அதை எதிர்த்தும் நிற்கும் ஒரு அரசியல் வழிமுறையை உருவாக்கி நிலைப்படுத்த வேண்டும். அதன் மூலம் புதிய அரசியல் திறப்பை (சாவியை) நம்முடைய கையில் எடுத்துக்கொள்ள முடியும். இன்றுள்ள ஒரே வழிமுறை இதுதான். அரசியலில் மாற்றுப்பார்வைகளுக்கு எப்போதும் இடமுண்டு என்பது யதார்த்தம். ஆனால், அந்த பலதரப்பட்ட பார்வைகளில் எவை சரியானவை, அனுபவத்துக்கும் அறிவுக்கும் நெருக்கமானவை என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. தமிழ் அரசியல் முன்னெடுப்பு என்பது முற்று முழுதான ஆராய்வுக்குரியதாக இன்றுள்ளது. அதைச் செய்தே தீர வேண்டும். (தொடரும்) https://arangamnews.com/?p=4741
-
ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த மும்பை ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 14 ஆவது ஐ.பி.எல். டி-20 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப வீரர்களாக அணித் தலைவர் ரோகித் சர்மாவும் டிகொக்கும் களமிறகி, பவுண்டரியுடன் ஓட்ட கணக்கை தொடங்கினர். முஜீப் ரஹ்மான், புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ரோகித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கினார். இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை திரட்டினர். எனினும் இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் விஜய் சங்கர் பிரித்தார். அதன்படி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா 6.3 ஆவது ஓவரில் விஜய் சங்கரின் பந்து வீச்சில் விராட் சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவையும் 10 ஓட்டங்களுடன் வெளியேற்றினார் விஜய் சங்கர். அதன் பிறகு மும்பையின் ஓட்ட வேகம் வெகுவாக தளர்ந்தது. தொடர்ந்து டிகொக் 40 ஓட்டங்களுடனும், இஷான் கிஷன் 12 ஓட்டங்களுடனும், ஹர்த்திக் பாண்டியா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். கடினமான இந்த ஆடுகளத்தில் இறுதிக் கட்டத்தில் பொல்லார்ட் மாத்திரம் ஆறுதல் அளித்தார். சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரஹ்மானின் பந்துவீச்சில் விளாசிய ஒரு சிக்சர் 105 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. இந்த சீசனில் மெகா சிக்ஸர் இது தான். இதே போல் புவனேஷ்வர்குமாரின் ஓவரில் கடைசி இரு பந்தையும் சிக்ஸராக்கி 150 என்ற சவாலான ஓட்டத்தை அடைவதற்கு வழிவகுத்தார். 20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றது. பொல்லார்ட் 35 ஓட்டங்களுடனும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்), குருணல் பாண்டியா 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 151 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக அணித் தலைவர் டேவிட் வோர்னரும், ஜோ பெயர்ஸ்டோவும் களம் புகுந்தனர். பெயர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பெற்று அதிரடி காட்டினார். அது மாத்திரமன்றி ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் 2 சிக்ஸரையும் தெறிக்க விட்டார். இதனால் பவர்-பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது. எனினும் எதிர்பாராதவிதமாக பேர்ஸ்டோ 43 ஓட்டங்களுடன் ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ ஆகிப்போனார். அதேபோல் வோர்னர் 36 ஓட்டங்களுடன் அநாவசியமாக ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மும்பை பக்கம் திரும்பியது. நடுத்தர வரிசையில் விஜய் சங்கர் மாத்திரம் 28 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ஐதராபாத் அணி 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது. மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ராகுல் சஹார் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குருணல் பாண்டியா தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக பொல்லார்ட் தெரிவானர். இந்த வெற்றி மும்பையின் இரண்டாவது வெற்றி என்பதுடன், ஐதராபாத் அணியின் மூன்றாவது தோல்வியும் ஆகும். https://www.virakesari.lk/article/103938
-
By அன்புத்தம்பி · Posted
இது ஒரு நேபாள நாட்டு பாடல்,, போட்டி பாடல் போல் தெரிகின்றது காட்ச்சிகளை பார்க்கின்ற போது பெண்கள் ஆண்களையும்,ஆண்கள் பெண்களையும் கிண்டலடிப்பது போல் தெரிகின்றது .. -
By கிருபன் · பதியப்பட்டது
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ், இலங்கைக்கும் பரவும் ஆபத்து இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த வைரஸ் வெளிநாடுகளுக்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வன் கேர்கோவ் கூறியதாவது, “இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2 மாநிலங்களில் B.1.617 என்ற புதிய உருமாறிய கொரோனா முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது, B1617 வம்சத்தை சேர்ந்தது. இந்த வைரஸ், E484Q, L452R என்ற 2 மரபணு உருமாறிய கொரோனா ரகங்களாக மாற்றம் அடைந்தது. இந்த வகையான கொரோனா, இந்தியாவில் அதிகரித்து வருகிறது. அத்துடன், பிற நாடுகளிலும் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இந்தியாவுக்கு அருகில் உள்ள இலங்கை போன்ற நாடுகளுக்கும் பரவும் ஆபத்தை கொண்டுள்ளது. குறிப்பாக, ஆசியாவிலும், வட அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா, வேகமாக பரவக்கூடியது. இதனால், தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது” என அவர் கூறினாா் https://www.meenagam.com/இநேந்தியாவில்-உருமாறிய-க/
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.