Jump to content

சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி: ஈழத்தமிழ்ச் சிறுமியின் தமிழின அடக்குமுறையை பிரதிபலிக்கும் ஓவியம் முதலிடம்.!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் நடைபெற்ற ஓவியப் போட்டி: ஈழத்தமிழ்ச் சிறுமியின் தமிழின அடக்குமுறையை பிரதிபலிக்கும் ஓவியம் முதலிடம்.!

Screenshot-2021-03-03-09-05-31-353-com-a

சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறையை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் சிறுமியால் வரையப்பட்ட ஓவியம் முதலிடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று அதன் 19ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஓவியப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது.

இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்ற தலைப்பில் கடந்த 19ஆம் திகதி நடத்தப்பட்ட இவ் ஓவியப் போட்டியில் ஆயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறு போட்டியில் பங்கேற்றிருந்த ஆயிரம் பேரில் ஒருவராக ஆர்காவ் மாநிலத்தைச் சேர்ந்த அபிர்சனா தயாளகுரு என்ற புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமியும் பங்கேற்று ஓவியத்தை வரைந்திருந்தார்.

ஈழத்தில் தமிழினம் சந்தித்து வரும் அடக்குமுறைகளையும் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வரும் கட்டமைப்புசார் இனவழிப்பு செயற்பாடுகளையும் தனது ஓவியத்தின் ஊடாக சிறந்த முறையில் வெளிப்படுத்தி பார்ப்போரது மனங்களில் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தை வரைந்துள்ளார் அபிர்சனா தயாளகுரு.

குருந்தூர்மலையில் ஆதிகாலம் முதல் இருந்த ஆதிசிவனை அப்புறப்படுத்திவிட்டு புத்தர் சிலையை நிறுவியுள்ள காட்சியை தத்ரூபமாக வரைந்து இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறலையும்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் நடத்தும் நீதிகோரிய போராட்டத்தை வெளிப்படுத்தியும், போரின் இறுதிக் காலகட்டத்தில் தமிழ் இளைஞர்களை சுட்டுப் படுகொலை செய்வது உள்ளிட்ட தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் காட்சி, போரின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சி என ஈழத் தமிழினம் சந்தித்த, சந்தித்து வரும் அடக்குமுறைகளையும், அழித்தொழிப்புகளையும் உயிரோட்டமாக தனது ஓவியத்தில் கொண்டு வந்திருந்தார் சுவிட்சர்லாந்து வாழ் ஈழத்தமிழ்ச் சிறுமி அபிர்சனா தயாளகுரு.

ஆயிரம் போட்டியாளர்களின் ஓவியங்களுக்கு மத்தியில் அபிர்சனாவின் குறித்த ஓவியம் முதலாவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://aruvi.com/article/tam/2021/03/03/23227/

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-03-03-11-18-57-393-com-a

வாழ்த்துக்கள்..👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-03-03-11-18-57-393-com-a

வாழ்த்துக்கள்..👍

ஒரு கண்ணீர்க் கதையொன்றை...ஓவியமாக வடித்துள்ளார் இந்த மாணவி....!

ஆயிரம் கதைகளை......தனக்குள் புதைத்து வைத்திருக்கின்றது  இவரது ஓவியம்..!


நன்றிகள்....!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இது இளைஞர்களிடையில் தாயகக் கனல் கனன்று கொண்டிருப்பதைக் காட்டுகின்றது.....வாழ்த்துக்கள் தாயே......!  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உலகையே மாற்றியமைக்கும் வல்லமை ஓவியத்திற்கும் உண்டு. மாணவி அபிர்சனா தயாளகுருவின் ஓவியமும் ஈழத்தமிழர் துயரினை மாற்ற உதவலாம். வாழ்த்துக்கள்!! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வியட்நாம் போரில் புலிட்சர் பரிசு வென்று உலகின் மனதை உலுக்கிய 'Napalm Girl' 'கிம்'மின் ஒளிப்படம் நினைவில் வருகிறது. அந்தப் படத்தை எடுத்த Nick Ut ம் ஒரு சமூகப் போராளியே. அப்போராளியின்  இடத்தில் அபிர்சனா தயாளகுருவை வைத்துப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தாயே !

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓவியம் வரைந்த சிறுமிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிவது காலத்தின் கட்டாயமாகும் எனவும் தமிழ் மொழியில் இணைத்துக் கொள்பவர்கள், விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த தமது சொந்த மாவட்டங்களிலே கடமைபுரிய வழியேற்படுத்தப்படும் என அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.சுதந்திரமான, ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் சேவைக்கான ஆளணியை அதிகரிப்பது தொடர்பாக யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.(15)     http://www.samakalam.com/வடக்கு-மாகாணத்தில்-பொலிஸ/
  • இலங்கையில் புதுவகையான கொரோனா வைரஸ் ? April 22, 2021 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும்  நோயாளர்களின்  எண்ணிக்கையும் அதிகரிப்பு  ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.  குறித்த பதிவில் காணப்படுவதாவது,  இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான கொரோனா வைரசு இனங்காணப்பட்டு  கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது. இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும்  அதிக கவனம் செலுத்துதல் அவசியம். நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நோய் பரவுவதை மிக விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் கடந்த காலத்தில் கண்டு கொண்டுள்ளோம்.  கடந்த பண்டிகை காலங்களைத் தொடர்ந்து இச்சுகாதார வழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடித்தல்  படிப்படியாகக் குறைந்து வந்ததே  இந்த புதிய பாதிப்பு உருவாக சந்தேகத்திற்கு இடமின்றி வழிவகுத்தது. மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற செயல்களைத் தவிர்ப்பதற்கு, ஒரு சமூகமாக செயற்பட எமக்கு நோய் நிவாரணிக்கான பொறுப்பை மீளவும் நினைவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.  இந்த தடுப்பு நடவடிக்கைகளில் கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிவது, மக்களிடையே இடைவெளி பேணல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, இருமல், தொண்டை நோ அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் சன நெருக்கமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல், சன  நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும். ஏற்கனவே சுகாதார வழிகாட்டுதல்களை உரியவாறு  முறையாகக் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியமையால் கடந்த சில மாதங்களாக இலங்கை வாசிகள் அனைவருக்கும் ஒருவித விடுதலை உணர்வை  அனுபவிக்க முடியுமாயிருந்தது. ஆதலால்   நாம்  மீண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது என்பது கடினமான காரியமல்ல. ஆகையால், எதிர்வரவிருக்கும் காலம் முழுவதும், மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு முழுமையாகப் பின்பற்றி, தேவையற்ற போக்குவரத்துப் பயணங்களை  முடிந்தவரை குறைத்து, தமக்கு நோயறிகுறிகள் தென்பட்டால் ஏனையோரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு, மீண்டுமொரு முறை நாடு முழுவதும் கொரொனா நோய்த்தொற்று பரவாது தடுக்க  பொறுப்புணர்ந்து செயற்படுமாறு சுகாதார அமைச்சின் சார்பாக இலங்கை வாழ் சகலரிடமும் வேண்டிக் கொள்கின்றோம். என பதிவிடப்பட்டுள்ளது   https://globaltamilnews.net/2021/159821/
  • யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு April 23, 2021 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.  இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துனைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு  துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     https://globaltamilnews.net/2021/159832/
  • வணக்கம் வருக .!. தங்களின் மேலான கருத்துக்களை தருக..!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.