Jump to content

இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு


Recommended Posts

இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு

 

 -எம்.எஸ்.எம். ஐயூப்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.

‘தமது மோசமான மனித உரிமைகள் வரலாற்றைப் பற்றியும் பரவலாக இடம்பெறும் தண்டனையற்ற குற்றங்களைப் பற்றியுமான சர்வதேச விமர்சனங்களைத் திசை திருப்புவதற்காக, எவ்வித ஒழுங்குமற்ற ஆணைக்குழுக்களை நியமிக்கும் வரலாறொன்று இலங்கைக்கு இருக்கிறது. 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல், குறைந்த பட்சம் அவ்வாறான 10 ஆணைக்குழுக்களையாவது இலங்கை நியமித்துள்ளது. அவற்றில் ஒன்றாவது குறிப்பிடத்தக்க பயனைத் தரவில்லை’.

சர்வதேச மன்னிப்புச் சபையும் இந்த விடயத்தைப் பற்றி, 2009ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. ‘Twenty Years of Make-Believe – Sri Lanka’s Commissions of Inquiry’ என்ற பெயரிலான அந்தப் புத்தகத்திலும் இலங்கையின் அரசாங்கங்கள் மனித உரிமைகள் விடயத்தில் நடந்து கொள்ளும் முறை விமர்சிக்கப்பட்டு இருந்தது. இலங்கை அரசாங்கங்கள் ஆணைக்குழுக்களை நியமிப்பதன் நோக்கம், புத்தகத்தின் பெயரிலேயே கோடிட்டுக் காட்டப்படுகிறது. 

இலங்கையில் Law and Society Trust என்ற அமைப்பு, 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இதே விடயத்தைப் பற்றி, ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருந்தது. ‘A Legacy to Remember – Sri Lanka’s Commissions of Inquiry – 1963- 2002’ என்ற பெயரிலான அந்தப் புத்தகத்தில், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் கொலை தொடர்பான ஆணைக்குழு முதல், 2002ஆம் ஆண்டு வரை, பல்வேறு அரசாங்கங்கள் நியமித்த ஆணைக்குழுக்கள், எவ்வாறு வெறும் கண்துடைப்புகளாக மாறின என்பது எடுத்துக் காட்டப்பட்டு இருந்தது. இலங்கையில் ஆணைக்குழுக்கள், நேர்மையான நடவடிக்கைகள் அல்ல என்பதையும் வெறும் அரசியல் நோக்கம் கொண்டவை என்பதையும், இந்நூல் தெளிவாக உணர்த்துகிறது. 

ஆயினும், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதாவது அவ்வாண்டின் உயர்த்த ஞாயிறு தினம், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீதும், மூன்று தேவாலயங்கள் மீதும், முஸ்லிம் பயங்கரவாதக் குழுவொன்று நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழு, முன்னைய ஆணைக்குழுக்களை விட ஓரளவுக்கு வேறுபட்டதாகும். பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அந்தத் தாக்குதல் விடயத்தில் தாம் பொறுப்புதாரர் அல்ல என்று நிரூபிக்கும் நோக்கம், மைத்திரியிடம் இருந்திருக்கலாம். ஆனால், தாக்குதலின் பின்னணி என்ன என்பதை, ஆணைக்குழு மூலம் அறியும் உண்மையான நோக்கமும் அவரிடம் இருந்திருக்கலாம். 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான இந்த ஆணைக்குழு, தம்மை நியமித்தவருக்கு எதிராகவே குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்த, உலகில் ஒரே ஆணைக்குழு என்ற வகையில், வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தமது இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் போது, மைத்திரியே ஜனாதிபதியாக இருந்திருப்பாரேயானால், ஆணைக்குழு அவ்வாறானதொரு பரிந்துரையைச் செய்யுமா என்பதும் சந்தேகமே. 

இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அனைத்தும், அப்போதைய ஜனாதிபதியை ஆத்திரமூட்டாத வகையிலேயே தமது அறிக்கைகளைத் தயாரித்துள்ளன. அதேவேளை, பல ஆணைக்குழுக்கள் அப்போதைய ஜனாதிபதிக்குத் தேவையான முறையில், அவரைத் திருப்திப்படுத்தும் வகையில், தமது அறிக்கையைத் தயாரித்துள்ளன. 

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவும், ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற அடிப்படையில், நாட்டில் சட்டம் அமைய வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்பது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சுலோகமாகும். எனவே அது, தற்போதைய அரசாங்கத்தை திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையாகும். 

ஆணைக்குழு, நாட்டிலுள்ள அனைவரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பின்னால், தாக்குதலை நடத்திய ஸஹ்ரான் ஹாஷிமுக்கும் தலைமை தாங்கிய ஒருவர் இருந்திருக்கலாம் என்றும் அவர்களுக்கு பணம் முதலானவற்றை வழங்கியவர்கள் இருக்க வேண்டும் என்றும் பலர் நம்பினர்.ஆனால் ஆணைக்குழு, ‘ஸஹ்ரானே தாக்குதல் நடத்திய குழுவின் தலைவர் என்றும் தெமட்டகொட வர்த்தகரான முஹம்மத் இப்ராஹீமின் இரு மகன்களான இன்சாப்,  இல்ஹாம் ஆகியோரே அக்குழுவுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்சாப், இல்ஹாம் ஆகிய இருவரும் தாக்குதல்களின் போது உயிரிழந்தனர்.

http://static2.tamilmirror.lk/assets/uploads/image_02b3471dfb.jpg

ஓர் இயக்கத்தின் தலைவர், ஆரம்பத்திலேயே தற்கொலை செய்து கொள்வதில்லை என்ற அடிப்படையிலேயே பலர், ஸஹ்ரானுக்கு மேலாக மற்றொரு தலைவர் இருந்திருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். 

ஆனால், இந்தப் பயங்கரவாத குழுவுக்கு ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றோ, தனி நாட்டை அடைய வேண்டும் என்றோ, எவ்வித நோக்கமும் இருந்ததாக ஆதாரம் இல்லை. அவர்கள், பிற சமயத்தவரைக் கொலை செய்து, சுவர்க்கம் செல்லலாம் என்ற இஸ்லாத்துக்கு முரணான, மிருகத்தனமான, மூட நம்பிக்கையில் செயற்பட்டதாகவே தெரிகிறது. எனவே, இது போன்ற ஒரு குழுவின் தலைவரே, ஆரம்பத்தில் தற்கொலை தாக்குதல் நடத்த முன் வரலாம்.

ஆயினும், அவர்கள் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, எவ்வாறு பெற்றனர் என்பது ஆராயப்பட வேண்டிய விடயமே.

தாக்குதலுக்குப் பின்னால் இயங்கியவர்களை அம்பலப்படுத்தி, அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என, கொழும்பு பேராயர்  கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, கடந்த இரண்டு வருடங்களாக, அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்.அவர், அக்கருத்தை வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களைப் பற்றி, அவர் ஏதோ அறிந்து வைத்திருக்கிறார் அல்லது, குறிப்பிட்ட சிலரைச் சந்தேகிக்கிறார் போல் தெரிந்தது. ஆனால், ஆணைக்குழு அவ்வாறு எவரையும் குறிப்பிடவில்லை.  எனவே, இப்போது கத்தோலிக்க மக்கள் விரக்தியடைந்துள்ளனர். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையை ‘கறுப்பு ஞாயிறு’ எனப் பிரகடனப்படுத்தி இருக்கின்றனர். 

ஸஹ்ரானின் மனநோயாளர்களான பயங்கரவாதக் குழுவைத் தவிர்ந்த, ஏனைய இலங்கை முஸ்லிம்கள் மீதான சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும், அவர்களை ஆணைக்குழு விடுவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இதில் சிக்கலாம் எனப் பலர் நினைத்தனர். கர்தினாலும் அவ்வாறு சிந்திப்பதாகக் கடந்த காலத்தில் தெரிந்தது. ஆனால், சந்தேகநபர் ஒருவரைப் பற்றி, அப்போதைய இராணுவத் தளபத் மஹேஷ் சேனாநாயக்கவிடம் தொலைபேசியில் வினவியதைத் தவிர, அவருக்கு எதிராக ஆணைக்குழு எவ்வித குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. 

கடந்த வருடம், ஐந்து மாதங்களாக இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரம் இல்லை என விடுவிக்கப்பட்ட ரிஷாட்டின் சகோதரர் ரியாத்தைப் பற்றியும், மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று மட்டுமே ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்காக ஆணைக்குழு மேலதிக ஆதாரங்களை வழங்கவில்லை.

ரிஷாட்டும் முன்னாள் மாகாண ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரும் பயங்கரவாதத்துக்கு உதவி புரிவதாகக் கூறி, அவர்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரி, அத்துரலியே ரத்தன தேரர் 2019ஆம் ஆண்டு மே மாதம், தலதா மாளிகை வளவில் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், அவர்களுக்கு எதிராகவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பெரிதாக எதுவும் இல்லை.

உண்மையிலேயே, இந்த மூன்று அரசியல்வாதிகளையும் விமல் வீரவன்ச, ரத்தன தேரர் போன்ற பேரினவாதிகளும் ஊடகங்களுமே பயங்கரவாதிகள் ஆக்கின. அந்தப் பிரசாரத்தை மக்கள் நம்பினர். இப்போது, ஆணைக்குழுவுக்கு ஆதாரமில்லாமையால் அவர்களைத் தாக்குதலோடு தொடர்புபடுத்தாது விட்டுவிட்டுள்ளது. 

ஆயினும், மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக ரிஷாட், முன்னாள் இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்தமை தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறது. அந்த விடயம் ஆணைக்குழுவின் பொறுப்புகளில் சேர்ந்த விடயமல்ல.

இப்போது ஜனாதிபதி, இந்த ஆணைக்குழு அறிக்கையைப் பரிசீலித்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக சமல் ராஜபக்‌ஷவின் தலைமையில், ஆறு பேர் கொண்ட அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்துள்ளார். அந்தக் குழுவில், இத்தகைய பாரிய பொறுப்பொன்றை நிறைவேற்றக் கூடிய நிபுணத்துவ அறிவுள்ளவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இறுதியில் மக்களின் பணத்தில், கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட ஆணைக்குழு, என்ன செய்தது என்ற கேள்வி மட்டுமே மீதமாகியுள்ளது?

 

Tamilmirror Online || இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழினத்துக்கடி உபதேசம். உனக்கல்லடி சிங்களமே.🤨
    • RCB இறுதி நாலுக்குள் வரக்கூடாது. வந்தாலும் கோலி கப் தூக்கக்கூடாது!
    • இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு? மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள – பௌத்த அரசாங்கமாக அடையாளப்படுத்தி மற்றெந்த அரசுகளையும் விட – சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலை, சிங்கள – பௌத்த இலங்கை தேச – அரச கட்டுமானத்தை நோக்கி மிக வேகமாக நகர்த்திச் செல்கின்றது. டொனால்ட் ட்ரம்ப் வீழ்ச்சி கூட இந்த அரசாங்கத்திற்கு பட்டறிவைக் கொடுக்கவில்லையோ எனத் தோன்றுகின்றது. நினைவுகூரல் தொடர்பில் ஒவ்வொரு வருடமும் மாவீரர் தினத்தை ஒட்டியும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தேசிய மயப்படுத்தும் அளவிற்கு இன்னும் கட்டமைக்க முடியாத நிலை வடக்குகிழக்கில் இருந்து கொண்டே இருக்கின்றது. தேசிய நினைவுகூரல்கள் கட்டமைக்கப்படாத வரைக்கும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய இயக்கமாதல் காலதாமதாமாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். நினைவுகூரல்களின் வகிபங்கு தமிழ்த்தேச கட்டமைப்பில் இன்றியமையாதது. நினைவுகூரல்கள் தேசிய நினைவுக்கூரல்கள். ‘ஈழத்தமிழ்’ அடையாள கட்டமைப்பில் நினைவுக்கூரல்களின் வகிபங்கு மிகவும் காத்திரமானது. அவ்வாறான தேசிய நினைவுக்கூரல்களை நாளாந்த தேசியத்தினூடு மக்கள் மயப்படுத்த வேண்டுமேயொழிய அரசியல் கட்சி மைய அணுகுமுறைக்குள் கொண்டு செல்லுதல் மிகக் குறுகிய அரசியலை நோக்கி நகர்த்துவதாகும். நினைவுக்கூரல்கள் ஒட்டுமொத்த ஈழத்தமிழினத்திற்குச் சொந்தமானது. அரசியல் கட்சிகள் அவற்றை மக்களிடமிருந்து திசைமாற்றித் திருட (Hijack) முடியாது. கடந்த பதினொரு வருடங்களுக்கு மேலாக ஒரே சுழற்சிக்குள் தான் சிக்குண்டிருக்கின்றது நினைவுகூரல்கள். ஒவ்வொரு நினைவு கூரல் முடிவிலும் மக்களின் எழுச்சியை கட்சிகள் உரிமை கோருவது அபத்தமானது. இராணுவக் கெடுபிடிக்குள்ளும் நினைவுகூரல்களில் மக்களின் பங்கேற்பு என்பது, தமிழ்த்தேசியத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பு. இந்த நினைவுகூரல்கள் மக்கள் இயக்கமாக நிறுவனமயப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற வரலாற்றுக் கட்டாயம் பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றுத் தளத்தில் முன்வைக்கப்பட்டது. மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு கூரல்கள் மட்டுமல்ல ஒவ்வொரு படுகொலையுமே நினைவு கூரப்பட வேண்டும், இன்னொரு படுகொலை நிகழாதிருப்பதற்காக. அம்பாறை மேய்ச்சல் தரை கையை விட்டு போன நிலையாகத் தோன்றுகின்றது. மிக அண்மையில் மேய்ச்சல் தரையிலிருந்து இளைஞரொருவர் தங்களைத் தாங்களே காப்பாற்ற வேண்டிய நிலைக்குள் மக்கள் தள்ளப்பட்டு விட்டதாகவும், சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்வதற்காக வன்முறைக்குள் தள்ளப்படுவதாகக் கூறி அக் காணொளி வெளிவந்திருந்தது. சிங்களம், தமிழர் காணியை கையகப்படுத்துவதற்கு அப்பால் அங்குள்ள தமிழர்களை ‘பிழைத்தெஞ்சி நிற்றல்’ (Survival) முறைக்குள் மக்களை வலிந்து திணிக்க முயலுகின்றது. மிக அண்மைய சிங்கள ஆக்கிரமிப்பு முயற்சி உத்திகள், கால்நடைகளைக் கொல்லுதல், காணிகளை வலிந்து கையகப்படுத்தல், தொடர் அச்சத்திற்குள் மக்களை தக்க வைத்தல், அங்குள்ள மக்களை தனிமைப்படுத்தல் போன்ற வேறு பல உத்திகளூடான கூட்டு மீட்டெழுச்சியை (Resilience) சிதைக்க முற்படுகின்றது. இவ்வாறு மாற்று வழி தென்படாத இளைஞர்களை வன்முறைக்குள் வலிந்து திணிக்கின்றது. வன்முறைக்குள் வலிந்து திணிப்பதன் மூலம் சூழ்நிலையை தனது கட்டுப்பாட்டுக்குள் இலகுவாக கொண்டு வருகின்றது. சிங்கள – பௌத்த அரசு இதை ஒரு மாதிரி (Model) முறைமையாக பின்பற்றுகின்றது. இம் மாதிரி உத்தியை இலங்கை அரசு உதிரிக்கும், கூட்டு குழுமத்திற்கும் பயன்படுத்துகின்றது. தற்போதைய நிலைமைகளை அவதானிக்கின்ற போது அரசு அதன் அடிவருடிகள் மூலம் மேய்ச்சல் தரையை ஒரு போராட்டக் களமாக மாற்ற முனைகின்றது. இதற்கான மாற்று போராட்ட வடிவ முறையை விரைந்து சிந்திப்பது அவசியமாகும். ஏனெனில், இம் மாதிரி உத்தி ஏனைய இடங்களுக்குமானது. திருகோணமலையில் அரிசிமலை பிக்குவும் அவர் நிர்வகிக்கும் நம்பிக்கை நிதியமும் ஏறக்குறைய பதின்மூன்று இடங்களை அடையாளப்படுத்தி சமய வழிபாட்டிற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பை அரசாங்கத்திடம் கோரி அதற்கான வர்த்தமான பத்திரிகையூடு அனுமதி பெறப்பட்டு விட்டது. தென்னவன்மரபு அடிக் கிராமத்திலிருந்து, திருகோணமலை மாவட்டத்தின் முல்லைத்தீவு மாவட்டத்துடனான எல்லை, கும்புறுபிட்டி வரைக்கும் இது நீண்டு செல்லுகின்றது. தொல்லியல், வனவளதிணைக்களம், மகாவலி அதிகார சபைகளின் நில அபகரிப்பை விட மேற்குறிப்பிட்ட நில அபகரிப்பு  Pooja Grant க்கூடாக மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் கண்ணியா, கோணேஸ்வரம் போன்றவற்றின் இருப்பு நீண்டகாலத்திற்கு ஈழத்தமிழ் இருப்பின் அடையாளமாகத் தக்க வைக்கப்படுமா என்ற அச்சம் இருக்கின்றது. காரணம், இராவணனை சுதேச சிங்கள அரசனாக உருவாக்குவதற்குரிய, கட்டமைப்பதற்குரிய புலைமைசார் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ் ஆய்வுப் பரப்பை சிங்கள அரசு விஸ்தரிக்கின்றது. மிக முக்கிய சைவ வழிபாட்டு யாத்திரை தலங்களுக்கு அண்மையில் பௌத்த விகாரைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன அல்லது ஏற்கனவே கட்டமைக்கப்பட்டு விட்டது. உதாரணத்திற்கு, திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், கன்னியா இன்னும் பல. சைவ சமய மைய (Centralised Structure) குவிவுக் கட்டமைப்பு தற்போது என்றுமில்லாதவாறு அவசியமாகின்றது. ஏற்கனவே இருப்பவற்றை தக்க வைப்பதற்காகவாவது. தொல்லியல் இடங்களை அடையாளங்காணல், சிங்கள – பௌத்த பண்புகளுடன் இணைந்து தொல்லியல் சார்ந்தது அனைத்துமே சிங்கள பௌத்திற்கானது என்ற அறிவியல் சொல்லாடலை கட்டமைக்க முனைகின்றது. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலையை தொல்லியலுக்கூடாக பின் முள்ளிவாய்க்கால் தளத்தில் மிக வேகமாக முடுக்கிவிட்டுள்ளது. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலை பற்றி இனப்படுகொலை ஆய்வாளர்களுக்கிடையே பல்வேறுபட்ட விவாதங்கள் எழுகின்ற நிலையில், கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலையை இனப்படுகொலையின் விளைவாகப் பார்க்கின்ற தன்மையும், கலாச்சார/ பண்பாட்டின் அழிப்பு, ஒரு இனத்தின் இருப்பை அழிக்கின்ற உள்நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்படுகின்றது. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலை அணுகுமுறையை தமிழ் இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாக இணைத்து விவரிப்பதற்கான ஆய்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை. கலாச்சார/ பண்பாட்டு இனப்படுகொலை ஒரு இனக்குழுமத்தின் கலாச்சார, சமய, அடையாள அழிவு தொடர்பிலானது. கலாச்சார/ பண்பாட்டு இழப்பு என்பது இனப்படுகொலையின் விளைவானது. ICTY இன்னும் ஆழமாக இதை வெளிக்கொணர்ந்தது. இலக்கு வைக்கப்பட்ட கலாச்சார/ பண்பாட்டு அழிவுகள் குற்றமிழைத்தவர்களின் ஒரு இனக் குழுமத்தை அடையாளத்தை மையமாகக் கொண்ட இனப்படுகொலை உள்நோக்கத்தை கொண்டிருப்பதாக ICTY நிரூபித்தது (Prosecutor v Karadzic and Mladic 1996). முல்லைத்தீவில், கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் தெற்கு, செம்மலை கிழக்கு போன்ற ஆறு கிராம அலுவல பிரிவுக்குட்பட்ட காணி நிர்வாக அதிகாரத்தை பிரதேச செயலாளரிடமிருந்து பறித்தெடுத்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை குடிசன இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்திட்டத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை பல வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. அதனுடைய ஆகப் பிந்தைய வடிவமே இதுவாகும். மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் மேற்குறிப்பிட்ட காணிகள் கையளிக்கப்படுமாயின் அம்பாறை மாவட்டத்திற்கு ஏற்பட்ட நிலைமை, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்படுவதற்கு அதிக காலம் செல்லாது. ‘புதிய உலக ஒழுங்கில் இலங்கை – இந்திய உறவுகளை ஆழப்படுத்தல்’ என்ற தொனியில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில் Path Finder Foundation சார்பாக கலந்துகொண்ட அதனுடைய தலைமையதிகாரி திரு.பேனாட் குணதிலக குறிப்பிடும் போது 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கை – இந்திய உறவிற்கு இடையூறாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார். இவரது கருத்து சூழலுக்கு வெளியே இருந்து விவரிக்கமுடியாது. ஆனால், Path Finder Foundation னுடைய நிறுவுநர் இந்தியாவிற்கான அமைச்சுப் பதவி பெற்ற ராஜதந்திரியாக நியமிக்கப்பட்ட சூழலில் ஆராயப்பட வேண்டியது அவசியமாகும். 13ஆம் திருத்தச் சட்டத்தை தமிழர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு தொடக்கப்புள்ளியாக கருதாத நிலையிலும், 13ஆம் திருத்தச் சட்டம் இலங்கை – இந்திய உறவுகளுக்கு இடையூறாக இருப்பதாகக் குறிப்பிடுவது இலங்கை – இந்திய வெளியுறவுக் கொள்கை எத்திசையில் பயணிக்கப் போகின்றது என்பதை வெளிக்கொணருகின்றது. இலங்கையும், இந்தியாவும் ஒரே மாதிரியான ஜனநாயக உள்ளீட்டைக் கொண்டுள்ளவை. பெரும்பான்மைவாதம் (Majoritarianism) தான் அவர்களுடைய ஜனநாயகத் தன்மையை பெரும்பாலும் தீர்மானிக்கின்றது. மதத்தை (அடிப்படைவாத) மையப்படுத்திய ஒத்த கலாச்சாரத்தைக் கட்டமைப்பதே இரண்டினதும் நோக்கமாக உள்ளதால் இரண்டு நாடுகளுமே பரஸ்பரம் உதவி செய்து முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியாவினுடைய பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக இந்தியா இலங்கையுடன் எந்த விலையை கொடுத்தாவது பயணிக்கத் தயாராகிவிட்டது. இந்தியா, இலங்கை அரசை பகைத்து தமிழருக்கு கைகொடுக்கும் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லாமலே போகின்றன. வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசிய அரசியலை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் எந்தவிதமான முன்னேற்றமும் எட்டப்படவில்லை. தமிழ்த்தேசிய மைய அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகள் மைய அரசியலை மட்டுமே முன்னெடுக்கின்றன. தத்தம் அரசியல் கட்சிக்கு அப்பால் சிந்திக்க கூடியவர்கள் இல்லையென்று சொல்லுமளவிற்கு நிலைமை மோசமடைகின்றது. இவ்வாறானதொரு நிலையில் அரசியல் கட்சிகளின் பலமான கூட்டிணைவு என்பது சாத்தியமற்றதாகின்றது. கொள்கைகளை மையப்படுத்தி ஒன்றிணையக் கூடிய நிறுவனங்கள், ஒன்றாவதற்கான சூழலும் தென்படுவதாயில்லை. பிரச்சினைகளை மையப்படுத்தி ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளும் குதிரைக் கொம்பு தேடுவதாகப்படுகின்றது. இவற்றை ஒட்டுமொத்தத்தில் பார்க்கின்ற போது, இதற்கான காரணிகளை இயக்குகின்றவர்கள் இன்னொரு தமிழினப் படுகொலைக்கான ஆயத்தங்களை மேற்கொள்கின்றார்களா என எண்ணத் தோன்றுகின்றது. புலம்பெயர் தேசங்களிலும் பலமான கூட்டிணைவு சாத்தியமுள்ளதாகத் தெரியவில்லை. பல்வேறு அமைப்புக்கள் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்தாலும் கூட்டு முயற்சி என்பது எட்டாக் கனியாகப் போய்க் கொண்டிருக்கின்றது. உளவியல் போரின் மிக முக்கிய உத்திகளான நம்பிக்கையின்மையை, சந்தேக கொள்ளலை ஒருங்கிணைவிற்கு எதிரான பொறிமுறையாக இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. நாளாந்தம் எழுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுதலை பொறியாகக் கொண்டு இலங்கை அரசு ஈழத்தமிழர்களை எப்போதுமே மைய இலக்கிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்ற கருவியாகக் கைக்கொள்கின்றது. நீண்டகால இலக்கை மையப்படுத்தி கூட்டிணைவோடு பலமான அமைப்பை கட்டியெழுப்பக்கூடிய, வேண்டிய வரலாற்றுச் சூழல் வாசலண்டை வந்து நிற்கின்றது. இலங்கை அரசு தமிழர் தரப்பை எப்போதுமே பலவீனமாக வைத்துக் கொண்டே தனது காய்களை நகர்த்திக் கொள்ளும். தமிழர் தரப்பில் பலமான கூட்டிணைவு எழாத வரைக்கும், பலமான கூட்டெதிர்ப்பு எழப்போவதில்லை என்பதில் இலங்கை அரசு தெளிவாகவுள்ளது. இப்பொறிமுறை அரசு பயன்படுத்தும் Counter Insurgency உத்தி. தமிழர் தரப்பின் கூட்டிணைப்பின் அவசியம் பற்றி பல்வேறு தளங்களில் பலராலும் பேசப்படுகின்ற நிலையில் பூனைக்கு மணி கட்டுவது யாரென்பதில் அதிகாரப்போட்டி வேறு. பன்முகப்படுத்தப்பட்ட, நீண்டகால இலக்கினைக் கொண்ட தமிழ்த்தேசிய செயற்திட்டத்தை கூட்டிணைந்து கட்டமைக்கத் தவறுகின்ற வரலாற்றுச்சூழலில் இன்னொரு தமிழினப் படுகொலை முயற்சியை முறியடிப்பதென்பது இயலாமற்போகலாம். எழில் ராஜன் https://maatram.org/?p=9289      
    • என்ன எலி அண்டர்வெயருடன் ஓடுது ....? நல்லதுக்கில்லையே .. ஆணைக்குழு நமது பக்கமும் திரும்பி திரும்ப கம்பியெண்ண வைத்துவிடுமோ  என்ற பயத்தில்  நங்கூரத்தை கொஞ்சம் பலமாக  போட்டுப்பார்க்கிறார் பொன்சி   
    • கொஞ்சம் கொஞ்சமாய் நான் நீ என்று ஆளையால்  போட்டுகுடுக்கும் காலம் வருகிறது கடைசியாக சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெகுவிரைவில் வரும் .
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.