Jump to content

நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சசிகலா
சசிகலா

`புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்’ - சசிகலா

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சசிகலா, தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் புரட்சித்தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

சசிகலா, தினகரன்
 
சசிகலா, தினகரன்

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்காகவும் பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

  •  

சசிகலா அறிக்கை

No description available.No description available.

 

 

TAGS

 

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்.

அன்புடன் வி.கே சசிகலா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்!’ - சசிகலா அறிவிப்பு | sasikala says, she will exit from politics (vikatan.com)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அறிக்கை - 'அரசியலை விட்டு விலகுகிறேன்'

அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவதாகவும் தி.மு.கவின் ஆட்சி அமையவிடாமல் தடுக்க தொண்டர்கள் பாடுபட வேண்டுமென்றும் ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கைவிடுத்துள்ள அவர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர அவரது உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி என ஜெயலலிதா அடையாளம் காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்கோ, பட்டத்திற்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.

டிடிவி தினகரன் துவங்கிய அ.ம.மு.க. அதி.மு.கவுடன் இணையுமா என பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"துவக்கத்திலிருந்தே அவருக்கு விருப்பமில்லை" - டி.டி.வி. தினகரன்

சசிகலாவின் அறிக்கை வெளியான பிறகு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்காக வி.கே. சசிகலா ஒதுங்கியருப்பதாகத் தெரிவித்தார்.

டி.டி.வி. தினகரன்

பட மூலாதாரம்,TTV DINAKARAN TWITTER PAGE

"துவக்கத்திலிருந்தே பதவியேற்பதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால், தொடர்ந்து வலியுறுத்தியதால் பிறகு ஏற்றுக்கொண்டார். அதற்குப் பிறகு உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்தது. அப்போதுதான், தற்போதைய முதல்வரைத் தேர்வுசெய்து ஆட்சி செய்ய அனுமதித்தார். சிறையிலிருந்து வெளிவரும்போதுகூட அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை. ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்னாரே என்று நீங்கள் கேட்கலாம். அப்படிச் சொன்னாலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என நினைத்திருக்கலாம். ஆனால், ஒரு மாதமான நிலையிலும் ஏதும் நடக்கவில்லை. ஆகவே நான் ஒதுங்கியருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாவீர்கள் என சொல்லி இப்போது ஒதுங்கியிருக்கிறார்" என்றார் தினகரன்.

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த தன்னை நீக்கியது செல்லாது என்று தொடர்ந்த வழக்கைப் பொறுத்தவரை, அவர் அரசியலை விட்டே விலகுவதாகச் சொல்லிவிட்ட நிலையில் எல்லாவித உரிமைகோரல்களையும் விட்டுவிட்டார் என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்தார் தினகரன்.

"அ.தி.மு.கவின் தன்னைச் சேர்ப்பேன், சேர்க்க மாட்டேன் என பலரும் பேசுவதால், தான் பேசு பொருளாக இருப்பதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் விலகியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்று சொல்லியிருக்கிறார். எங்களைக் கட்சியைவிட்டு விலக்கிவிட்டதால்தான் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டியதாயிற்று. எங்கள் தலைமையில்தான் கூட்டணி அமையும். சசிகலாவை மையமாக வைத்து கட்சியை மீட்போம் என ஒருபோதும் சொல்லவில்லை. சசிகலா சிறையிலிருக்கும்போது கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்டோம். ஆகவே அவரை மையமாக வைத்து செயல்பட்டதாகச் சொல்ல முடியாது."

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இனி என்ன ஆகுமெனக் கேட்டபோது, சசிகலாவின் அறிவிப்பிற்கும் அ.ம.மு.கவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றார் தினகரன்.

அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய உதவுவோம் என சசிகலா சொல்லியிருக்கும் நிலையில், அது அ.தி.மு.க. வடிவில் அமையுமா அல்லது அ.ம.மு.க. வடிவில் அமையுமா எனக் கேட்டபோது, அ.ம.மு.க. தலைமையில்தான் அமையும் என்றார். ஆனால், அவரை தன் கட்சியில் சேரும்படி தான் வலியுறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

"இந்த அறிவிப்பு அ.ம.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் சோர்வை ஏற்படுத்தும். நானே சோர்வடைந்திருக்கிறேன். இம்மாதிரி அவர் நினைக்கிறார் என்று தெரிந்தவுடன் நேரில் வந்து அரை மணி நேரத்திற்கு மேல் பேசிப்பார்த்தேன். பிறகு மாலை வந்தபோது, தான் எழுதி வைத்திருந்த அறிக்கையைக் காண்பித்தார். ஏன் ஒதுங்குகிறீர்கள் என்று கேட்டேன். அவர் இதுதான் சரியான முடிவு என்றார். பிறகு என்ன செய்ய முடியும்? அவர் மனதில் பட்டதைத் தெரிவித்திருக்கிறார். இதற்குப் பிறகு அ.ம.மு.க. நிர்வாகிகளை அழைத்துப் பேசி என்ன செய்வதென முடிவெடுக்க வேண்டும். தேர்தலில் எங்களை தலைமையில் நிச்சயம் கூட்டணி அமையும். 1,300 பேர் வரை விருப்ப மனு கொடுத்திருக்கிறார்கள். பத்தாம் தேதிவரை விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம். பத்தாம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்போம். கூட்டணி முடிவானதும் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்" என்றும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா அறிக்கை - 'அரசியலை விட்டு விலகுகிறேன்' - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஸ்டம் சரியில்ல, இப்போ மாற்றம் இல்லையெண்டால் எப்பவும் இல்லை எண்டு ரஜனி கிளம்பினார்.

ஆளைவிடுறா சாமி அரசியலே வேண்டாம் எண்டு ஓடிட்டார்.

கண்டிப்பா அரசியலில் ஈடுபடுவேன் என்று மூண்டு நாளுக்கு முதல்தான் சொன்னார்  சசிகலா.

இரண்டுநாள் முன்னம்தான் அமித்ஷா தமிழ்நாடு வந்துபோனார்.

இண்டைக்கு அரசியலே வேண்டாம் ஆளைவிடுங்க எண்டு சசிகலா ஓடி போறா.

சும்மா சொல்லகூடாது மோடி சலங்கை கட்டி ஆடுறார் . ஒரே வெருட்டுத்தான் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

சிஸ்டம் சரியில்ல, இப்போ மாற்றம் இல்லையெண்டால் எப்பவும் இல்லை எண்டு ரஜனி கிளம்பினார்.

ஆளைவிடுறா சாமி அரசியலே வேண்டாம் எண்டு ஓடிட்டார்.

கண்டிப்பா அரசியலில் ஈடுபடுவேன் என்று மூண்டு நாளுக்கு முதல்தான் சொன்னார்  சசிகலா.

இரண்டுநாள் முன்னம்தான் அமித்ஷா தமிழ்நாடு வந்துபோனார்.

இண்டைக்கு அரசியலே வேண்டாம் ஆளைவிடுங்க எண்டு சசிகலா ஓடி போறா.

சும்மா சொல்லகூடாது மோடி சலங்கை கட்டி ஆடுறார் . ஒரே வெருட்டுத்தான் போல கிடக்கு.

ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும், இருக்குது, பிஜேபியின் விளையாட்டு. திமுக வென்றால் கூட, ஒரு பிஜேபி உறுப்பினர் வந்தாலே, பிஜேபி அரசமைக்கும் அளவுக்கு, திமுக, அதிமுக mla கள், பாய்வார்கள்.

அடுத்து தமிழகத்தில் பிஜேபி அரசமைக்கும்🥴

செய்திருக்கும் ஊழலை வைத்து மடக்குவார்கள்.

துரைமுருகன், பொன்முடி, உதயநிதி, அவர் அப்பா, (தாத்தா), எடப்பாடி, பன்னீரு, வேலுமணி எல்லாரும், பிஜேபியிடம் மடங்குகிற அளவுக்கு ஊழல் செய்துள்ளனர்.

Link to comment
Share on other sites

4 minutes ago, Nathamuni said:

ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும், இருக்குது, பிஜேபியின் விளையாட்டு. திமுக வென்றால் கூட, ஒரு பிஜேபி உறுப்பினர் வந்தாலே, பிஜேபி அரசமைக்கும் அளவுக்கு, திமுக, அதிமுக mla கள், பாய்வார்கள்.

அடுத்து தமிழகத்தில் பிஜேபி அரசமைக்கும்🥴

 

எனது நாட்க்குறிப்பில் குறித்துக்கொள்ளுகின்றேன்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

எனது நாட்க்குறிப்பில் குறித்துக்கொள்ளுகின்றேன்.😜

யு ஆர் அண்டி இந்தியன் H ராஜா முதல்வர் என்று மட்டும் எழுதி வையாதீங்க..

வேற யாரு..... குஸ்பு ஆண்டி தான்...

  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

வேற யாரு..... குஸ்பு ஆண்டி தான்...

அடுத்த அதற்கு அடுத்த ரமில்நாட்டு மொதல்வராய் வர குஷ்பு ஆண்டிக்கு சந்தர்ப்பம் இருக்கா சார்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அடுத்த அதற்கு அடுத்த ரமில்நாட்டு மொதல்வராய் வர குஷ்பு ஆண்டிக்கு சந்தர்ப்பம் இருக்கா சார்? 😂

வடக்கத்தி ஆண்டி தானே.... இந்துவை கலியாணம் பண்ணி, இந்துவா இருக்கிறா,

இருக்காதே பின்ன?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

வடக்கத்தி ஆண்டி தானே.... இந்துவை கலியாணம் பண்ணி, இந்துவா இருக்கிறா,

இருக்காதே பின்ன?😎

ஏனெண்டு தெரியேல்லை???? தமிழ் தமிழிச்சி எண்டால் கொஞ்ச சனத்துக்கு அலர்ஜி அலர்ஜியாய் வருது. ஆனால் வடக்கத்தி என்ன கேவலம் கேணைத்தனம் செய்தாலும் கோவில் கட்டி கும்பிடுறாங்க......ஏன் சார்????😎

Link to comment
Share on other sites

அரசியலை விட்டு சசிகலா ஒதுங்கியதற்கு இதுதான் காரணம்: தினகரன் விளக்கம்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரளவுகாவது நேர்மை ( ? ) இருந்தால் ரெல்லியை எதிர்த்து போராடலாம் ..😢

1.Midas Golden Distilleries Private Limited
2. Lifemed Hospitals Private Limited
3. Royapettah Cardiac Centre Private Limited
4. A World Rock Private Limited
5. Curio Auto Mark Private Limited
6. Aviry Properties Private Limited
7. Signet Exports Private Limited
8. Fancy Steels Private Limited
9. Cottage Field Resorts Private Limited
10. Sri Jaya Finance And Investments Private Limited
11. Sri Hari Chandana Estates Private Limited
12. Jazz Cinemas Private Limited
13. Khazzana Finvest Private Limited
14. Rainbow Air Private Limited
15. Indo Doha Chemicals And Pharmaceuticals Limited
16. Satiate Building Promoters Private Limited
17. Jasons Golden Breweries Private Limited
18. Affluent Lands Developersprivate Limited
19. Dakshin Fruits And Vegetables Private Limited
20. Srijat Exports Private Limited
21. Afore Developer Private Limited
22. Aadjoin Developers Private Limited
23. Kentaa Steels Private Limited
24. Rainbow Air Private Limited
25. Subham Micro Finance Private Limited
26. Shri Jaya Investments Agency Limited
27. Brain Flower Innovations Private Limited
28. Ramraj Agro Mills Limited
29. Anjaneya Printers Private Limited
30. Jayaraaman Business Consultants Private Limited
31. Sukraa Club Private Limited
32. Maruti Transports Private Limited
33. Satiate Finance And Investments Private Limited
34. Satiate Building Promoters Private Limited
35. Jasons Golden Breweries Private Limited
36. Affluent Lands Developersprivate Limited
37. Dakshin Fruits And Vegetables Private Limited
38. Srijat Exports Private Limited
39. Afore Developer Private Limited
40. Lex Property Developments Private Limited
41. Array Land Developers Private Limited
42. Fancy Transports Private Limited
43. Aavignaa Agro Private Limited
44. Riverway Agro Products Private Limited
45. Signora Business Enterprises Private Limited
46. Meadow Agro Farms Private Limited
47. Industrial Minerals India Private Limited
48. Fancy Transports Private Limited
49. Apollo Textiles Private Limited
50. Riverway Agro Products Private Limited
51. Maruti Transports Private Limited
52. Aswathaasugars Distilleries Private Limited
53. Transworld Garnet India Private Limited
54. Shree Sanghvi Mills Private Limited
55. V V Titanium Pigments Private Limited
56. V V Network Private Limited
57. Ishwarya Azoics Limited
58. Edison Paints Limited
59. V V Renewable Energy Private Limited
60. Dhanalakshmi Srinivasan Sugars Private Limited
61. Pyramid Cements Private Limited
62. VV-Indbarath Infrastructure Limited
63. Ajax Media Tech Private Limited
64. Alliance Broadvasting Private Limited
65. Ayodhya Benefit Fund Limited
66. Hindustan Readymix Concrete Private Limited
67. Sands Enterprises Private Limited
68. Atmos Filters Private Limited
69. Environ Biowaste Systems India Private Limited
70. Eco Trees India Private Limited
71. V V Minerals Private Limited
72. V V Iron Amp Steel Company Private Limited
73. Q2q Solutions Private Limited
74. Spring Garnet India Private Limited
75. Opaque Mineral Resource Private Limited
76. V V Solar India Private Limited
77. Shri Nandhi Dhall Mills India Private Limited
78. Gnana Ganapathy Chits Private Limited
79.  Lakshmi Movie Makers India Limited
80. Goodyield Investments Private Limited
81.  Eminent Financial Services Limited
82. United Growth Chits Limited
83.
84. Wyse It Solutions Private Limited
85. Bells And Claps Media Private Limited
86. Sri Janardhana Credits Limited
87.  Sri Jay Chits India Private Limited
88. Emerald Engineering Private Limited
89. Kovai Biowaste Management Private Limited
90. Vijay Steel Agencies Private Limited
91. Welkyn Software Solutions Private Limited
92. Mayava Jewel Paradise Private Limited
93. Crystal Scans And Diagnostics Private Limited
94. Adhiev India Private Limited
95. H M C Fabrics Private Limited
96.  Adhiev Nanopv Private Limited
97. Shijiamoni Energy Ventures Private Limited
98. Adhiev Kodi Energy Private Limited
99. Kodiwin Hydro Power Private Limited
100. Guru Kodi Green Power Private Limited
101. Yk 5 Power Private Limited
102. Solacon Energy Park Private Limited
103. Nanopv Solar India Private Limited
104.  Nanopv Voltech Solar Private Limited
105. Mavis Satcom Limited
106. Muthu Pipes Private Limited
107. Sastry Nuts Plates Manufacturers Private Limited
108. Liberty High Scans Private Limited 

....

டிஸ்கி

இந்த பட்டியல் 2016 ல் எடுக்கபட்டது .. நிச்சயம் தற்போது வளர்ச்சி அடைந்து இருக்கும் .. அவர் இப்போ  "தனிமரம் " என்றாலும், ஜெ ஆட்சியை பயன்படுத்தி சொத்து சேர்த்த அவரின் உறவுகளே ரெல்லியை எதிர்க்க விட மாட்டார்கள்.. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஏனெண்டு தெரியேல்லை???? தமிழ் தமிழிச்சி எண்டால் கொஞ்ச சனத்துக்கு அலர்ஜி அலர்ஜியாய் வருது. ஆனால் வடக்கத்தி என்ன கேவலம் கேணைத்தனம் செய்தாலும் கோவில் கட்டி கும்பிடுறாங்க......ஏன் சார்????😎

தோல் கலர் அப்பிடி அண்ணை!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்காலிக விலகலா, நிரந்தர விலகலா... ஏன் இப்படிச் செய்தார் சசிகலா?

spacer.png

ஒரே அறிக்கை, ஒட்டு மொத்தமாக தமிழக அரசியல் களத்தையே நேற்று உலுக்கிவிட்டது. சசிகலாவின் அரசியல் விலகல் அறிவிப்பு, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, அமமுக என எல்லாத் தரப்பிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார் என்பதை கடந்த பிப்ரவரி 6 அன்றே மின்னம்பலத்தில் எழுதியிருந்தோம். சசிகலா நினைத்தபடி, அதிமுக–அமமுக இணைப்பு நடக்காமலே, இப்படியொரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணமென்பதுதான் யாருக்குமே விடை தெரியாத கேள்வியாகவுள்ளது. இதுபற்றியே விவாதங்கள் களை கட்டியிருக்கின்றன.

ஒரு மாதத்துக்கு முன்பு, ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்று சசிகலா சொன்னபோதே, ‘அவர் எப்போது அரசியலில் இருந்தார்’ என்ற கேள்விகள் எழுந்தன. இப்போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததும் அதே பாணியிலான விமர்சனங்களும் எழுகின்றன. பாரதிய ஜனதாவின் மிரட்டலால்தான் இப்படியொரு முடிவை அவர் எடுத்திருக்கக்கூடுமென்றும் சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் அவருடைய ‘அரசியல் விலகல்’ அறிக்கையின் பின்னணியில் இருப்பது மிகவும் இயல்பான காரணங்கள்தான் என்று அடித்துச்சொல்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர்.

சசிகலாவின் நடவடிக்கைகளையும் அவருடைய எண்ண ஓட்டங்களையும் அறிந்த அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசியபோது அந்த இயல்பான காரணங்களை அவர்கள் விளக்கினர்....

‘‘பலரும் யூகிப்பதைப் போல சின்னம்மாவின் இந்த முடிவுக்கு யாருடைய நிர்ப்பந்தமும் அழுத்தமும் காரணமில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பலவீனமடைந்தே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. சிறையிலிருக்கும்போதும், சிறையை விட்டு வெளியே வந்தபோதும் அதிமுகவில் தனக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விட, அதிமுக பலவீனமாகி, திமுக மீண்டும் பலமாகி ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்ற எண்ணம்தான் அவரிடம் மேலோங்கி இருந்தது. அதற்குக் காரணம், அடிப்படையாகவே திமுக மீது அவருக்கு இருக்கும் வெறுப்பு. அவர் சிறைக்குப் போவதற்கு யார் யாரோ பின்னணியில் இருந்தனர் என்று பலர் பேசினாலும், தான் சிறைக்குப் போகவும், அம்மா மரணமடையவும் திமுக போட்ட வழக்குதான் காரணமென்பதில் அவர் தெளிவாக இருக்கிறார்.

தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள் மீதான பகையை விட, அந்தப் பகை அவருடைய உள்ளத்தில் கனன்று எரிந்து கொண்டேயிருக்கிறது. வரும் தேர்தலிலும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டுமெனில், அதிமுக மேலும் பலம் பெற வேண்டுமென்றே நினைத்தார். அதற்கு அதிமுகவுடன் அமமுகவும் இணைய வேண்டுமென்று விரும்பினார். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கே, கட்சியில் அதிகாரத்தை எதிர்பார்த்தார். அதற்கு தன்னுடைய பலத்தை முழுமையாகக் காட்ட வேண்டுமென்று கருதினார். சிறையில் இருந்து தான் வெளியேறும்போது, பிரமாண்டமான வரவேற்பு தரும்படி ஏற்பாடு செய்யச்சொன்னதன் காரணமும் அதுதான். ஆனால் அது பெரிதாக பலன் கொடுக்கவில்லை.

தமிழகத்திற்குள் அவர் வரும் நாளில், 5 அமைச்சர்களும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் அவரை வந்து பார்ப்பார்கள் என்று தகவல் கூறப்பட்டிருந்தது. ஒருவரும் வரவில்லை. தமிழகத்திற்கு வந்தபிறகும் யாரும் பார்க்கவரவில்லை. ஆட்சியின் கடைசி நாள் வரைக்கும் அதில் பலனடைய வேண்டுமென்பதால் யாரும் வரவில்லை என்றும், தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் வருவார்கள் என்றும் கூறப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. முதல்வர் பழனிசாமியையும் பன்னீரையும் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காக அவர் எடுத்த எந்த முயற்சிகளும் பலனளிக்கவே இல்லை. மற்றொரு புறத்தில் அமித்ஷாவை ஒரு வழியில் தொடர்பு கொண்டு, அதிமுக–அமமுக இணைப்பையும் அவர் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அமித்ஷா பேச்சையே அவர்கள் இருவரும் கேட்பதாக இல்லை.

அவர்களிருவருக்குமே சின்னம்மாவைச் சேர்த்துக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை; ஆனால் அவரை வைத்து தினகரன் மீண்டும் வந்தால் அது தங்கள் இருவரின் பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் இருவரும் ஒன்றுபட்ட கருத்தோடு இருந்தார்கள். அதையே அமித்ஷாவிடமும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இப்போதைய நிலையில், அமித்ஷா சொல்வதைக் கேட்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. பாரதிய ஜனதாவுக்கான சீட் ஒதுக்கீட்டில் அவர் கறார் காட்டுவதே அவருடைய கைதான் ஓங்கியிருப்பதைத் தெளிவாக்கிவிட்டது. அதனால் அந்த முயற்சியும் தோல்வியாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வரும் தேர்தலில் அமமுகவை ஆதரிப்பதிலும் அவருக்கு உடன்பாடில்லை. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே அவர் கருதுகிறார். அதுமட்டுமின்றி, இரட்டை இலைக்கு எதிராக அவர் எந்த பிரசாரத்தையும் எப்போதுமே முன்னெடுக்கமாட்டார்.

தினகரனையே இந்தத் தேர்தலில் நிற்க வேண்டாமென்றுதான் அவர் அட்வைஸ் செய்திருக்கிறார். ஆனால் அதை தினகரன் கேட்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கனவே உடல்ரீதியாக பலவீனமாகயிருந்த சின்னம்மாவுக்கு அடுத்தடுத்த இந்த நிகழ்வுகளாலும், துரோகங்களாலும், நம்பியிருந்த பல விஷயங்கள் நடக்காததாலும் கடுமையான மனஉளைச்சலுக்கும் உள்ளாகிவிட்டார். இந்த சூழ்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கொடுத்த பேட்டியில், ‘சசிகலாவைச் சேர்ப்பதற்கு நுாறு சதவீதம் வாய்ப்பே இல்லை; டெல்லியில் முதல்வர் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று அடித்துச் சொன்னது அவரை மொத்தமாக நொறுக்கிப் போட்டது. அதற்குப் பின்பே யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்து அந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். இது தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடு என்று பலரும் பேசுகிறார்கள். தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்படும் முடிவைப் பொறுத்தே, தன்னுடைய முடிவை அவர் மாற்றுவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா என்பது தெரியும்!’’ என்றார்கள்.

சசிகலாவின் ரீ என்ட்ரி தமிழக அரசியலில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவர் எடுத்துள்ள இந்த முடிவு, தேர்தலில் எந்தமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போதைக்குத் திட்டவட்டமாக யாராலும் கணிக்க இயலாது என்பதே நிதர்சனம். அதிமுக ஜெயித்தால் இனி அந்தக் கட்சியின் எந்தவொரு அத்தியாயத்திலும் அவர் பெயர் இடம் பெறாமலே போய்விடும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை தோற்றுவிட்டால் தன்னுடைய முடிவை அவர் பரிசீலிக்கவும், அவரை அரசியலுக்கு வரச்சொல்லி பலரும் வற்புறுத்தவும் வாய்ப்புண்டு என்று கருதுகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

தமிழகத்தின் எதிர்காலம் மட்டுமில்லை; சசிகலா, அதிமுகவின் எதிர்காலமும் வாக்காளர்கள் கையில்தான்!

 

https://minnambalam.com/politics/2021/03/04/23/sasikala-withdraw-from-politics-reason

 

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

தற்காலிக விலகலா, நிரந்தர விலகலா... ஏன் இப்படிச் செய்தார் சசிகலா?

 

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

 

ரஜனி, சசிகலா, எடப்பாடி, ஓ.பிஸ்  எல்லோரையும் ஆட்டிவிப்பது ஒரே கரம் தான்.

Link to comment
Share on other sites

காறி துப்புனாலும் கண்டுக்க மாட்டாங்க" | சசிகலா முடிவுக்கு பின் இருக்கும் ராஜதந்திரம் பண்டேய் பேட்டி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

தோல் கலர் அப்பிடி அண்ணை!!!

கன இடங்களிலை தோல் கலர் முக்கியம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.