-
Tell a friend
-
Topics
-
Posts
-
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஆனால் கூறுபவர்கள் உண்மையையும் ஆங்காங்கே கூறவேண்டுமல்லவா..?
-
By uthayakumar · பதியப்பட்டது
உலக சமத்துவமின்மை-பா.உதயன் Rich countries have a moral obligation to help poor countries get COVID-19 vaccines. கோவிட் -19 தடுப்பூசிகளின் உற்பத்தி மற்றும் விநியோகம் உலகளாவிய சமத்துவமின்மையை அம்பலப்படுத்தி தீவிரப்படுத்தியுள்ளது. பணக்கார நாடுகளால் அப்பட்டமான தடுப்பூசி கொள்வனவுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்தே வருகின்றன. முதலாளித்துவ நாடுகளின் வரிசையிலே அமெரிக்கா,பெரிய பிரித்தானிய மற்றும் பல ஐரோப்பிய சந்தையில் அங்கம் வகிக்கும் நாடுகளே பெரும் தொகையான கோவிட்-19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் நாடுகளாக இருக்கின்றன. இந்த நாடுகளில் உள்ள அரசாங்கங்களால் காப்புரிமை உரிமைகளைப் பாதுகாத்தல் இது தடுப்பூசிகளை மேலும் உற்பத்தி செய்வதைத் தடுக்கிறது. அரசியல் பொருளாதார நலன் சார்ந்த பின்னணியிலால் தடுப்பூசி உற்பத்திகள் தடைபட்டு இதனால் ஏழை நாடுகள் பெரிதும் தடுப்பூசி விநியோகத்தினால் பாதிக்கப் பட்டு இந்த பெரும் கொள்ளை நோயை கட்டுப் படுத்த முடியாமல் தின்றாடுகின்றன. குறிப்பாக மிகவும் வறிய நாடுகளான ஆசிய ஆபிரிக்க நாடுகளை இது பெருதும் பாதித்து மனித பொருளாதார இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் மீண்டும் இந்த நோயை கட்டுப் படுத்த முடியாமல் ஏற்றுமதி செய்யப்படும் வைரசுகளினால் பணக்கார நாடுகளுக்கும் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும். ஒரு மென்மை சக்தி (Soft Power) என்ற கோட்பாட்டுக்கு இணங்க பணக்கார நாடுகள் தடுப்பு ஊசியை ஏழை நாடுகளுக்கு கொடுத்து உதவ வேண்டும் என பல அரசியல் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும் மேலும் தடுப்பு ஊசி மருந்து விநியோகத்தை தாமதப் படுத்தினால் மீண்டும் மீண்டும் புதிய வைரசு (mutation) மாற்றங்களின் பிறப்புக்கே இது வழி வகுக்கும். இதனால் உலகப் பொருளாதாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும் பல வறிய நாடுகளுக்கு அடுத்த வருடங்களிலும் தடுப்பு ஊசி எல்லோருக்கும் கிடைக்குமா என்பது கூட சந்தேகமே. தடுப்பூசியின் வரவுக்கு பின் மனித இழப்புக்களில் மாற்றம் ஏற்பட்டாலும் இன்னும் மனித இழப்புக்களையும் பொருளாதார இழப்புக்களையும் கட்டுப் படுத்த முடியவில்லை. எல்லா மனித உயிர்களுமே பெறுமதி மிக்கன என்ற அறம் சார்ந்த பொறுப்புணர்வோடு தடுப்பு ஊசி அரசியல் பொருளாதார இராஜதந்திர நலன் கடந்து மனிதம் சார்ந்து சமத்துவம் சார்ந்து உலகம் இந்த பேரழிவில் இருந்து கடந்து போகுமா. பா.உதயன் ✍️ -
தாயக அரசியலுக்கு தலைமைதாங்குவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இலங்கைப் பிரசை ஒருவர் இலங்கை அரசியலில் ஈடுபடமுடியும் என்பது புத்தகப் பூச்சிகளுக்கு தெரியாததுதான் விந்தை. அமெரிக்க குடியுரிமை/நிரந்தர வதிவிட உரிமை இருக்கின்ற/இருக்கப்பெற்ற கொட்டாபய இராசபக்ச இலங்கை சனாதிபதியாகலாம் ஆனால் இன்னொரு இலங்கையைப் பூர்விகத் தமிழன் இலங்கை அரசியலில் ஈடுபடக் கூடாது எனும் முட்டாள்தனமான கருத்தைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும். கிருபன், அதீத வாசிப்புப் பழக்கம் இருப்பது உண்மையில் போற்றுதற்குRயதுதான். ஆனால் வாசிக்கும்போது அதிலுள்ள நன்மையானவற்றைக் கிரகிக்கவும் வேண்டுமல்லவா...😀 அதற்கு முயற்சி செய்யுங்கள்.. 👍
-
கிட்டத்தட்ட எனது நிலைப்பாடும் இப்படி தான் போய்க்கொண்டு இருக்கிறது ஒவ்வொரு பந்தியும் ஏதோ ஒரு வகையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு படுத்தி செல்கிறது பிறப்பால் சைவசமயம் கோயில் தர்மகர்த்தா பரம்பரை ஆனால் சிறு வயது முதல் அதன் மீதான கேள்விகள் மறுப்புகள் மூடநம்பிக்கைகள் சார்ந்து முட்டுதல்கள் பிள்ளைகளுக்கு எதையும் புகுத்தாமல் அவர்களே அவர்களுக்கானதை தேட வழிவிடுதல் ஆனாலும் பரம்பரைக்கோயில் திருவிழா மற்றும் பராமரிப்புக்கு பணம் அனுப்புதல் வீட்டில் பெரியோர்களின் ஞாபகார்த்தங்களுக்கு ஐயர் வருதல் உட்பட அது இன்னொரு பக்கம் போய்க்கொண்டே தான் இருக்கிறது நீங்கள் சொன்னது போல எனது நிலைப்பாடு என்னுடன் மட்டுமே ஏனெனில் எனது நிலைப்பாட்டை விட பெரும்பான்மையோர் என் முன்னே உள்ளனர். அவர்களின் நம்பிக்கைகளை நான் மதிக்காவிட்டால் நான் மனிதனாக கூட இருக்கமுடியாதே??? அப்புறம் தானே கடவுள்?? பல்வேறு கதைகளை கருத்துக்களை ஞாபகங்களை மீண்டும் மீண்டும் எம்முள் விதைத்த தங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.
-
தனது அனுபவங்களை பகிர்ந்த திரு பரதன் நவரட்னத்திற்கு நன்றிகள். இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் அனுபவங்கள் தொகுப்பாக ஆவணப்படுத்தப்படவேண்டும். இதுவே எதிர்காலத்தில் வரலாறு எழுதுவதற்கு பெருமளவுக்கு உதவும். இயக்கங்களால் Propaganda நோக்கில் வெளியிடப்பட்ட பதிவுகளை விட, இவ்வாறாக போராட்டங்களில் பங்கெடுத்த முன்னாள் போராளிகளின் பல வித்தியாசமான அனுபவப்பகிர்வுகளே உண்மையான வரலாற்றை கூறும் ஆவணங்கள்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.