Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

large.0-02-05-cbd1d9980061c8cb1a79630838aac7a848eadade3004c700e4a767e5f48bc4ad_1c6da161f29868.jpg.e28a87345d1924d0576c3a6d4bb29c8e.jpg

ஊர் வம்பும், கைபேசியும்..!

*********************

அந்தக்காலம்..

நல்லதண்ணிக் கிணத்தில

நாலுபேர் கூடுமிடத்தில

பக்கத்து வீட்டு பழசுகள்-2

பவ்வியமாய் வந்தாலே

குலநடுங்கி போகுமாம்

குடும்பங்கள் எல்லாம்.

மூல வீட்டுப் பெட்ட

முளங்காலுக்கு மேல 

போடுது சட்ட

ஓல வீட்டுப் பொடியன்

ஒருத்தியோட  ஓடிட்டான்.

வேலைக்கு அவன் போக-வீட்ட

வேறொருவன் நிக்கிறான்

காலக் கொடுமையென

கதிராச்சி முடிக்க முன்ன..

குப்பத்தொட்டியில ஒரு

குழந்த கிடந்தது-அது

பக்கத்து வீட்டு 

பணக்காரச் சமாச்சாரம். 

எண்டு தொடங்கி

எல்லா வரலாறும்

சொண்ட நெளிச்சு

சொல்லி முடிக்குமாம்

மற்றது..

கடுகளவு உண்மையை

மடுவளவு பெரிதாக்கி

வதந்திய பரப்பிவிட்டு

வாயமூடு நமக்கேன்-ஊர் 

வம்பு என்று சொல்ல..

வந்த சனமெல்லாம்

வாயும் காதும் வைத்து

சொந்தங்களுக்குள்ளே

சொறிநாயாய் கடிபட்டு

வெட்டுக்குத்தில போய்-ஊரே

வெடிச்சு பிளந்து

உண்மை பொய் தெரியாமல்

ஓராயிரம் பிரச்சனைகள்.

கலியாணக்குளப்பமும்

கருமாரியும்-வதந்தி

கதை பேச்சால்  நடந்த

அந்தகாலம்.

இன்றும் வேறு வடிவில

வீட்டுக்குள்ள திரியுதாம்

எச்சரிக்கை..

கையில இருக்கிற

கை பேசியை நம்பிறதால்

பொய் வதந்தியெல்லாம்

பொட்டளமாய் கொட்டி

குடுப்பத்தை குலைத்து

கொடுமை நடக்கிறது.

கணவனுக்கு போண் வந்தால்

மனைவிக்கு தூக்கமில்லை

மனைவிக்கு மெசேச் வந்தால்

கணவனுக்கு வாழ்க்கையில்லை.

உள்ளத்து தூய்மையில்லா

உணர்வு எமக்கிருந்தால்

கள்ளப் போண் வருகுதென்று

கணவன் மனைவிக்கே

கை பேசி மூட்டி விட்டு-பல

கலவரங்கள் அது பார்க்கும்.

பிள்ளைகளை வழி நடத்த

முதலில்..

பெற்ரோரே முடிவெடுங்கள்

இல்லையேல்

ஒவ்வொரு மூலையாய்

உங்களைப் போல் 

பிள்ளைகளும்.

குரோதம் தவிர்த்து

குடும்பத்துக்குள்ளே

திறந்த மனதுடன்

திறப்பின்றிப்போணை

அனைவரும் பார்க்க

அனுமதித்தாலே

வதந்திகள் பயப்படும்

வாழ்வே ஒளி பெறும்.

அன்புடன்  -பசுவூர்க்கோபி-

07.03.2021

 • Like 17
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பசுவூர்க்கோபி said:

அந்தக்காலம்..

நல்லதண்ணிக் கிணத்தில

நாலுபேர் கூடுமிடத்தில

பக்கத்து வீட்டு பழசுகள்-2

பவ்வியமாய் வந்தாலே

குலநடுங்கி போகுமாம்

குடும்பங்கள் எல்லாம்.

கிணற்றடி மட்டுமல்ல வேலி எல்லைகளில் பெண்கள் ஒன்று கூடுவார்கள்.
சிலவேளை ஊரே பற்றி எரியும்.

 • Like 1
Link to post
Share on other sites

கவிதைக்கு நன்றி , கோபி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கிணற்றடி மட்டுமல்ல வேலி எல்லைகளில் பெண்கள் ஒன்று கூடுவார்கள்.
சிலவேளை ஊரே பற்றி எரியும்.

உண்மைதான் ஈழப்பிரியன் அவர்களே நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி , கோபி.

உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பசுவூர்க்கோபி said:

அந்தக்காலம்..

நல்லதண்ணிக் கிணத்தில

நாலுபேர் கூடுமிடத்தில

பக்கத்து வீட்டு பழசுகள்-2

பவ்வியமாய் வந்தாலே

குலநடுங்கி போகுமாம்

குடும்பங்கள் எல்லாம்.

நல்லதண்ணி கிணத்தடியையும் கைத்தொலைபேசியையும் இணைச்சது மிக பிரமாதம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்

 • Like 1
Link to post
Share on other sites
16 hours ago, பசுவூர்க்கோபி said:

கடுகளவு உண்மையை

மடுவளவு பெரிதாக்கி

வதந்திய பரப்பிவிட்டு

வாயமூடு நமக்கேன்-ஊர் 

வம்பு என்று சொல்ல..

தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. 

முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. 

கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன!

விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, யாயினி said:

இப்போ மட்டும் நம்மவர்கள் ஊர் வம்பு சும்மாவா இருக்கிறது..சில வேளைகளில் தொடர்ந்து போண் வந்தாலே அன்றைய நாள் தொலைஞ்சிடும்.இது உண்மை.

எனது கவிதைக்கேற்ற உங்கள் வார்த்தைகளும் அருமை யாயினி  நன்றிகள்

15 hours ago, குமாரசாமி said:

நல்லதண்ணி கிணத்தடியையும் கைத்தொலைபேசியையும் இணைச்சது மிக பிரமாதம்.

உளமார்ந்த நன்றிகள்;

Link to post
Share on other sites

விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு.

"என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க

மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். 

பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின்  பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

கவிதைக்கு நன்றி
 
 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிழலி said:

எங்கள் வீட்டிலும் இதையே பின்பற்றுகிறோம் 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

கவிதை நன்று . கை கால் வைத்த வதந்திக்கு பரவும் வேகமும் அதிகம். தொலை பேசி தொல்லைபேசியாய் போச்சு 

அன்பு வார்த்தைகள் நிறய எழுத தூண்டுகிறது உளமார்ந்த நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. 
நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

நிகழ் கால நியத்தை கவிதை வடிவில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பசுவூர்க்கோபி, இந்த தொலை பேசியால் பல பதிப்புகள் இருந்தாலும் நன்மைகள் இருக்கு, பாவிக்கும் விதத்தை பொறுத்து, பிள்ளைகளுக்கும் பழக்க வேண்டும்

நீங்கள் சொல்வது போல் கெட்டதை தவிர்த்து நல்லதை எடுக்க கற்ருக்கொண்டாலே வாழ்வு மேம்படும். உண்ணைமையே அன்பின் உடையாருக்கு நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 02:23, மல்லிகை வாசம் said:

தொழிநுட்பம் வளர வளர வதந்திகளும் அதற்கேற்றால் போல் கடுகதியில் உலகெங்கும் பரப்பப்படுகின்றன. 

முன்னைய காலங்களிலாவது அந்தந்த ஊர்களுக்குள்ளேயே வதந்திகள் உலாவும். ஆனால் தற்போது உலகமே கைப்பேசியினுள் அடங்கிய நிலையில் இவ்வாறான வதந்திகள் சர்வதேசம் எங்கும் சில நொடி நேரங்களிலேயே பரப்பப்படுகின்றன என்பது வேதனையான ஒன்று. 

கிணத்தடி, கிடுகுவேலிப் பழக்கங்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மாறிவிடுமா என்ன!

விழிப்புணர்வு தரும் நல்லதோர் கவிதைக்கு நன்றி பசுவூர் கோபி.

அன்புடன் நன்றிகள் மல்லிகை வாசம்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:15, நிழலி said:

விரலில் ஈரம், கைரேகை கொண்டு என்னால் போனை லொகின் பண்ண முடியுது இல்லை. திடீரென்று பாஸ்வேர்ட் டும் மறந்து போயிட்டு.

"என்ற போன் பாஸ்வேர்ட் என்ன" என்று நான் கேட்க

மனுசி, மகள், மகன் என்று மூன்று பேரும் என் போனின் பாஸ்வேர்ட் டினை சொல்கின்றார்கள். 

பசுவூர்கோபி, நீங்கள் குறிப்பிட்ட மாதிரி ஒளிவுமறைவு இன்று குடும்பத்தில் ஒருவரது போனை இன்னொருவர் பயன்படுத்தும் சூழல் இருக்குமாயின் குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் போனால் வராது. முக்கியமாக வளர்ந்த, பதின்ம வயது பிள்ளைகள் எனில், அவர்கள் 18 வயதை அடையும் வரைக்கும் அவர்களது கைபேசியின்  பாஸ்வேர்ட் டினை பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது.

கவிதைக்கு நன்றி
 
உண்மையை அழகாக தந்தீர்கள் நிழலி உளமார்ந்த நன்றிகள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் படித்தேன் நல்ல கவிதை கோபி.பாராட்டுக்கள்......!   👍

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 14:58, நந்தன் said:

எங்கள் வீட்டிலும் இதையே பின்பற்றுகிறோம் 

நன்றிகள் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2021 at 16:30, Kavallur Kanmani said:

இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. 
நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.

எனது கவிதையை உள்ளடக்கி சொல்லப்பட்ட வார்தைதைகள் அருமை அக்கா நன்றிகள்

Link to post
Share on other sites
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.