Jump to content

2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.

2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. 

Ev23ij4UcAYs_-Q.jpg

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் களியாட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகும்.

உலகின் மிப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பிளேஆஃப்களையும் 2021 மே 30 ஆம் திகதி இறுதிப் போட்டியையும் நடத்தவுள்ளது.

ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் நான்கு இடங்களில் விளையாட உள்ளது. 56 லீக் போட்டிகளில், சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரு தலா 10 போட்டிகளையும், அகமதாபாத் மற்றும் டெல்லி தலா 8 போட்டிகளையும் நடத்துகின்றன.

விவோ ஐ.பி.எல்.லின் இந்த பதிப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று, அனைத்து போட்டிகளும் நடுநிலை இடங்களில் விளையாடப்படும், எந்த அணியும் தங்கள் சொந்த இடத்தில் விளையாடாது. அனைத்து அணிகளும் லீக் கட்டத்தில் 6 இடங்களில் 4 இடங்களில் விளையாடும்.

பிற்பகல் விளையாட்டுக்கள் 3:30 மணிக்கும், மாலைநேரப் போட்டிகள் இரவு 7:30 மணிக்கும் தொடங்கப்படும்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் கொண்டு போட்டியை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்திய பின்னர், வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்போடு ஐ.பி.எல். தனது சொந்த மைதானங்களிலேயே நடத்துவதில் பி.சி.சி.ஐ நம்பிக்கை கொண்டுள்ளது.

இந்த ஆண்டு விவோ ஐ.பி.எல். மூடிய கதவுகளுக்குப் பின்னால் விளையாடப்படும், மேலும் போட்டியின் பிற்பகுதியில் பார்வையாளர்களை அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2021 விவோ ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை‍ையை பார்வையிட கிளிக் செய்க

VIVO-IPL-2021-MATCH-SCHEDULE_Page_1.jpg

VIVO-IPL-2021-MATCH-SCHEDULE_Page_2.jpg

 

https://www.virakesari.lk/article/101704

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அப்படியே யாழ் கள போட்டியை  தொடங்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, சுவைப்பிரியன் said:

கிருபன் அப்படியே யாழ் கள போட்டியை  தொடங்கலாமே.

 வீட்டில் இருந்து வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகம். @ஈழப்பிரியன் அண்ணா தொடங்கினால் உதவலாம். 😀

தொடங்கவேண்டுமென்றால் அடுத்தவாரம் தயாராகவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 வீட்டில் இருந்து வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகம். @ஈழப்பிரியன் அண்ணா தொடங்கினால் உதவலாம். 😀

தொடங்கவேண்டுமென்றால் அடுத்தவாரம் தயாராகவேண்டும்!

கிருபன் ஒரு தடவை முயற்சித்தேன்.உங்களின் உதவியால் நகர்ந்தது.திரும்பவும் நீங்களே எல்லாம் தயாரித்து எனது பெயரில் ஓடவிடுவதை விட நீங்களே சகலதையும் செய்து முடித்துவிடலாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் ஒரு தடவை முயற்சித்தேன்.உங்களின் உதவியால் நகர்ந்தது.திரும்பவும் நீங்களே எல்லாம் தயாரித்து எனது பெயரில் ஓடவிடுவதை விட நீங்களே சகலதையும் செய்து முடித்துவிடலாம்.
 

என்ற‌ யாழ் அனுப‌வ‌த்தில் 2019உல‌க‌ கோப்பை யாழ்க்க‌ள‌ போட்டி தான் சிரிப்பாக‌வும் க‌ல‌க‌லப்பாக‌வும் போன‌து ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ?

அந்த‌ திரியை மீண்டும் பார்த்தாலே அட‌க்க‌ முடியாத‌ சிரிப்பு வ‌ரும் 😁😀?
 

Link to comment
Share on other sites

IPL போட்டிகள் ஏப்ரல் 9 இல் ஆரம்பம் - முதலாவது ஆட்டம் சென்னையில்!

 

உலக கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மட்டுமல்லாது இந்திய அணியின், மைதானங்களின், ரசிகர்களின் சாகசங்களினால் இந்கிலாந்தைப் பட்டை தீட்டி அனுப்பி வைத்தமை பாராட்டுக்குரியதென்றாலும், ஆட்டங்களின் பரபரப்பை அது குறைத்துள்ளது என்றே கூற வேண்டும். நீண்ட நாட்கள், மெதுவாக ஓட்டங்களைச் சேர்த்தல் என்பது பல ரசிகர்களைப் பவிலியனுக்குக் கொண்டுவரவில்லை என்றே கூற வேண்டும் (இந்திய தரத்துக்கு).

 

இதனால் எப்போதுமே ரசிகர்கள் பரபரப்புடன் விறுவிறுப்பையும் தரும் IPL போன்ற குறுகிய ஓவர்களில் ஆடி முடிக்கும் விளையாட்டுகளையே எதிர்பார்க்கிறார்கள். நடமாட்ட முடக்கம் ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையில் இந்த வருடம் இப் போட்டிகள் முடங்கிக்கிடந்த ரசிகர்களுக்கு மேலும் விறுவிறுப்பைத் தருமென எதிர்பார்க்கலாம்.

 

ஏப்ரல் 9 இல் ஆரம்பமாகும் IPL போட்டிகளின் முதலாவது ஆட்டம் சென்னையில் Mumbai Indians vs Royal Challengers Bangalore இற்குமிடையில் நடைபெறவுள்ளது.

 

2021 இற்கான IPL Season இற்கான விளையாட்டு அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது:

 

  • April 9th, 2021, Friday, 07:30 PM: Mumbai Indian vs Royal Challengers Bangalore in Chennai
  • April 10th, 2021, Saturday, 07:30 PM: Chennai Super Kings vs Delhi Capitals in Mumbai
  • April 11th, Sunday, 2021, 07:30 PM: Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders in Chennai
  • April 12th, Monday, 07:30 PM: Rajasthan Royals vs Punjab Kings in Mumbai
  • April 13th, Tuesday, 07:30 PM: Kolkata Knight Riders vs Mumbai Indians in Chennai
  • April 14th, 2021, Wednesday, 07:30 PM: Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore in Chennai
  • April 15th, 2021, Thursday, 07:30 PM: Rajasthan Royals vs Delhi Capitals in Mumbai
  • April 16th, 2021, Friday, 07:30 PM: Punjab Kings vs Chennai Super Kings in Mumbai
  • April 17th, 2021, Saturday, 07:30 PM: Mumbai Indians vs Sunrisers Hyderabad in Chennai
  • April 18th, 2021, Sunday, 03:30 PM: Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders in Mumbai
  • April 18th, 2021, Sunday, 07:30 PM: Delhi Capitals vs Punjab Kings in Mumbai
  • April 19th, 2021, Monday, 07:30 PM: Chennai Super Kings vs Rajasthan Royals in Mumbai
  • April 20th, 2021, Tuesday, 07:30 PM: Delhi Capitals vs Mumbai Indians in Chennai
  • April 21st, 2021, Wednesday, 03:30 PM: Punjab Kings vs Sunrisers Hyderabad in Chennai
  • April 21st, 2021, Wednesday, 07:30 PM: Kolkata Knight Riders vs Chennai Super Kings in Mumbai
  • April 22nd, 2021, Thursday, 07:30 PM: Royal Challengers Bangalore vs Rajasthan Royals in Mumbai
  • April 23rd, 2021, Friday, 07:30 PM: Punjab Kings vs Mumbai Indians in Chennai
  • April 24th, 2021, Saturday, 07:30 PM: Rajasthan Royals vs Kolkata Knight Riders in Mumbai
  • April 25th, 2021, Sunday, 03:30 PM: Chennai Super Kings vs Royal Challengers Bangalore in Mumbai
  • April 25th, 2021, Sunday, 07:30 PM: Sunrisers Hyderabad vs Delhi Capitals in Mumbai
  • April 26th, 2021, Monday, 07:30 PM: Punjab Kings vs Kolkata Knight Riders in Ahmedabad
  • April 27th, 2021, Tuesday, 07:30 PM: Delhi Capitals vs Royal Challengers Bangalore in Ahmedabad
  • April 28th, 2021 Wednesday, 07:30 PM Chennai Super Kings vs Sunrisers Hyderabad in Delhi
  • April 29th, 2021, Thursday, 03:30 PM: Mumbai Indians vs Rajasthan Royals in Delhi
  • April 29th, 2021, Thursday, 07:30 PM: Delhi Capitals vs Kolkata Knight Riders in Ahmedabad
  • April 30th, 2021, Friday, 07:30 PM: Punjab Kings vs Royal Challengers Bangalore in Ahmedabad
  • May 1st, 2021, Saturday, 07:30 PM: Mumbai Indians vs Chennai Super Kings in Delhi
  • May 2nd, 2021, Sunday, 03:30 PM: Rajasthan Royals vs Sunrisers Hyderabad in Delhi
  • May 2nd, 2021, Sunday, 07:30 PM: Punjab Kings vs Delhi Capitals in Ahmedabad
  • May 3rd, 2021, Monday, 07:30 PM: Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore in Ahmedabad
  • May 4th, 2021, Tuesday, 07:30 PM: Sunrisers Hyderabad vs Mumbai Indians in Delhi
  • May 5th, 2021, Wednesday, 07:30 PM: Rajasthan Royals vs Chennai Super Kings in Delhi
  • May 6th, 2021, Thursday, 07:30 PM: Royal Challengers vs Bangalore Punjab Kings in Ahmedabad
  • May 7th, 2021, Friday, 07:30 PM: Sunrisers Hyderabad vs Chennai Super Kings in Delhi
  • May 8th, 2021, Saturday, 03:30 PM: Kolkata Knight Riders vs Delhi Capitals in Ahmedabad
  • May 8th, 2021, Saturday, 07:30 PM: Rajasthan Royals vs Mumbai Indians in Delhi
  • May 9th, 2021, Sunday, 03:30 PM: Chennai Super Kings vs Punjab Kings in Bangalore
  • May 9th, 2021, Sunday, 07:30 PM: Royal Challengers Bangalore vs Sunrisers Hyderabad in Kolkata
  • May 10th, 2021, Monday, 07:30 PM: Mumbai Indians vs Kolkata Knight Riders in Bangalore
  • May 11th, 2021, Tuesday, 07:30 PM: Delhi Capitals vs Rajasthan Royals in Kolkata
  • May 12th, 2021, Wednesday, 07:30 PM: Chennai Super Kings vs Kolkata Knight Riders in Bangalore
  • May 13th, 2021, Thursday, 03:30 PM: Mumbai Indians vs Punjab Kings in Bangalore
  • May 13th, 2021, Thursday, 07:30 PM: Sunriers Hyderabad vs Rajasthan Royals in Kolkata
  • May 14th, 2021, Friday, 07:30 PM: Royal Challengers Bangalore vs Delhi Capitals in Kolkata
  • May 15th, 2021, Saturday, 07:30 Pm Kolkata Knight Riders vs Punjab Kings in Bangalore
  • May 16th, 2021, Sunday, 03:30 PM: Rajasthan Royals vs Royal Challengers Bangalore in Kolkata
  • May 16th, 2021, Sunday, 07:30 PM: Chennai Super Kings vs Mumbai Indians in Bangalore
  • May 17th, 2021, Monday, 07:30 PM: Delhi Capitals vs Sunrisers Hyderabad in Kolkata
  • May 18th, 2021, Tuesday, 7:30 PM: Kolkata Knight Riders vs Rajasthan Royals in Bangalore
  • May 19th, 2021, Wednesday, 07:30 PM: Sunrisers Hyderabad vs Punjab Kings in Bangalore
  • May 20, 2021, Thursday, 07:30 PM: Royal Challengers Bangalore vs Mumbai Indians in Kolkata
  • May 21st, 2021, Friday, 03:30 PM: Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad in Bangalore
  • May 21st, 2021, Friday, 07:30 PM: Delhi Capitals vs Chennai Super Kings in Kolkata
  • May 22nd, 2021, Saturday, 07:30 PM: Punjab Kings vs Rajasthan Royals in Bangalore
  • May 23rd, 2021, Sunday, 03:30 PM: Mumbai Indians vs Delhi Capitals in Kolkata
  • May 23rd, 2021, Sunday, 07:30 PM: Royal Challengers Bangalore vs Chennai Super Kings in Kolkata
  • May 25th, 2021, Tuesday, 07:30 PM: Qualifier 1 in Ahmedabad
  • May 26th, 2021, Wednesday, 07:30 PM: Eliminator in Ahmedabad
  • May 28th, 2021, Friday, 07:30 PM Qualifier 2 in Ahmedabad
  • May 30th, Sunday, 07:30 PM: Final in Ahmedabad
  • https://marumoli.com/கிரிக்கெட்-ஐ-பி-எல்-2021-ஆட்டங/?fbclid=IwAR0xJGLWUQWIS4ZcLBXW_QXUZ_IXwcy3KYQO7Zc-8IQEvv5xL0OQ7zc7MfE
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2021 at 07:01, கிருபன் said:

வீட்டில் இருந்து வேலை செய்தாலும் வேலைப்பளு அதிகம். @ஈழப்பிரியன் அண்ணா தொடங்கினால் உதவலாம். 😀

தொடங்கவேண்டுமென்றால் அடுத்தவாரம் தயாராகவேண்டும்!

வணக்கம் கிருபன்
போட்டிக்கான அட்டவணைகள் தயார் பண்ணுகிறீர்களா?
என்ன தான் நடக்கிறது?
இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளது.
உசார் உசார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் கிருபன்
போட்டிக்கான அட்டவணைகள் தயார் பண்ணுகிறீர்களா?
என்ன தான் நடக்கிறது?
இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளது.
உசார் உசார்.

இன்று இரவு போடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பத்து பேராவது பங்குபற்றினால்தான் போட்டி சுவாரசியமாக இருக்கும். இல்லையென்றால் கையைவிடவேண்டியதுதான்.

மற்றது @தமிழ் சிறி ஐயாவை கட்டாயம் பங்குபற்ற வைக்கவேண்டும்😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்று இரவு போடலாம் என்று நினைக்கிறேன். ஆனால் பத்து பேராவது பங்குபற்றினால்தான் போட்டி சுவாரசியமாக இருக்கும். இல்லையென்றால் கையைவிடவேண்டியதுதான்.

மற்றது @தமிழ் சிறி ஐயாவை கட்டாயம் பங்குபற்ற வைக்கவேண்டும்😬

10 பேருக்கு மேல் பங்கு கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

10 பேருக்கு மேல் பங்கு கொள்வார்கள் என எண்ணுகிறேன்.

என‌க்கும் என‌த‌ருமை ந‌ண்ப‌ன் ( எப்போதும் த‌மிழ‌ன் )

எங்க‌ளுக்கு ஜ‌பிஎல்லில் பெரிசா ஆர்வ‌ம் இல்லை ?

யாழ் க‌ள‌ உற‌வுக‌ளின் விருப‌த்துக்காக‌ க‌ல‌ந்து கொள்ளுவோம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா

கிருப‌ன் பெரிய‌ப்பா போட்டிய‌ சிற‌ப்பா ந‌ட‌த்துவார் அதில் மாற்று க‌ருத்து இல்லை ?

குசா தாத்தா கொப்பி அடிச்சு போடுவார் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் போட்டி ப‌திவை பார்த்து ?

2019ம் ஆண்டு உல‌க‌ கோப்பை போட்டியில் சிரித்து ம‌கிழ்ந்த‌ மாதிரி ஜ‌பிஎல்ல‌ இருக்காது சிரிக்க‌ முய‌ற்ச்சிப்போம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.