Jump to content

சுவிற்சர்லாந்தில் பர்தா தடை சட்டம் நிறைவேறுமா?


Recommended Posts

SVP-Schweiz-Extremismus-stoppenசுவிற்சர்லாந்தில் மூன்று முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான சட்டமூலங்களுக்கான பொதுசன வாக்கெடுப்பு இன்று நடைபெற்றாலும் அதில் முக்கியமாக மக்கள் பேசுபொருளாக இருப்பது பர்தா எனப்படும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதை தடை செய்வதற்கான சட்டமூலம் ஆகும். இச்சட்டத்தின் பிரகாரம் பொது இடங்களில் முகத்தை மூடும்  ஆடைகளை எவரும் அணிய முடியாது.  இருந்தாலும் சுகாதாரகாரணங்கள்,காலநிலை, வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். 

சுவிற்சர்லாந்தில் பல ஆண்டுகளாக இத்தடை சட்டமூலம் பற்றிய பல வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சட்டமூலத்திற்கு ஆதரவான தரப்பினர்  மூன்று வாதங்களை முன்வைக்கின்றார்கள். அதன் கருத்தில், முகத்தை மறைப்பது ஒரு சுதந்திர சமுதாயத்தில் ஒன்றாக வாழ்வதில் முரண்படுகிறது; இது பெண்களின் அடக்குமுறையின் வெளிப்பாடாகும், எனவே சம உரிமைகளுக்கான உரிமையுடன் பொருந்தாது; இறுதியாக, மறைப்பதற்கான தடை பாதுகாப்பு மற்றும் குற்றங்களுக்கு எதிரான  காவற்துறையின் நடவடிக்கைகளுக்கு இது  உதவுகிறது.

சுவிஸ் கூட்டாட்சி அரசாங்கமும் பாராளுமன்றமும் இச்சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு மக்களுளை கேட்டுள்ளது. அவர்களின் பார்வையில், முகத்தை மூடுவது சுவிட்சர்லாந்தில் ஒரு சிறிய நிகழ்வு மட்டுமே. கூடுதலாக, இந்த பகுதியில் விதிகளை வெளியிடுவது கன்டோன்களின் பொறுப்பாகும். உள்ளூர் நிலைமைகளை அவர்கள் நன்கு அறிவார்கள். கூடுதலாக, தற்போதைய சட்டத்தின் கீழ், ஒரு பெண்ணை முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தும் எவரும் கிரிமினல் குற்றமாகும். ஆகவே இந்த புதிய சட்டமூலம் அவசியமற்றது.  இச்சட்டமூலத்திற்கு பதிலாக புதிய சட்ட முன்பொழிவை அரசாங்கம் வைக்கின்றது. அதாவது இவ்வாறான ஆடைகளை அணிவோர் அடையாள சோதனையின் போது மக்கள் தங்கள் முகங்களை அதிகாரிகளுக்கு காட்ட வேண்டும். கூடுதலாக, எதிர் முன்மொழிவு பெண்களின் உரிமைகளை வலுப்படுத்த நிதி திட்டங்களுக்கு வழங்குகிறது. மக்களல் இச்சட்டமூலம்  நிராகரிக்கப்படும்போது இந்த எதிர் முன்மொழிவை தாம் நடைமுறை படுத்துவதற்கான வரைவை அரசாங்கம் கொடுத்துள்ளது.  

இருப்பினும் சுவிற்சர்லாந்தின் தேசியவாத கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி இச்ட்டமூலத்திற்கு ஆதரவாக கடந்த சில வாரங்களாக பாரிய பரப்புரைகளை மேற்கொண்டுள்ளது ஏற்கனவே  நாற்புறமும் தூபிகளை கொண்ட மசூதிகளின் கட்டுமானத்திற்கான தடை சட்டம்  இந்த கட்சியால் 2009  ல் கொண்டு வரப்பட்டு மக்களின் ஆதரவுடன் (57.7 வீத ஆதரவு) நிறைவேற்றபட்டது.

பாராளுமன்றத்தில் 77 வாக்குக்கள் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் எதிராக 133 வாக்குகளும் கிடைத்துள்ளன மாநிலங்கள் அவையில் ஆதரவாக 7 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்துள்ள நிலையில் மக்களின் முடிவுகளுக்காக சுவிற்சர்லாந்து காத்திருக்கிறது.

https://www.admin.ch/gov/de/start/dokumentation/abstimmungen/20210307/volksinitiative-ja-zum-verhuellungsverbot.html

 

 

 

Link to comment
Share on other sites

இஸ்லாமிய மதம் மீது எனக்கு கடுமையான விமர்சனம் உண்டு, இன்னும் நாகரிகம் அடையாத, கற்காலத்தில் வாழும் சமயம் இஸ்லாம் ஆகும். பெண்களை மிகவும் மோசமாக நடத்தும் சமயமும் அதுவேயாகும்.ஆனால், தலிபான்கள் போல் தடை செய்து பர்தா பிரச்சனை தீர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை, இதன் மூலம் அவர்கள் மற்ற சமூகங்களுடன் இருந்து  விலகியே இருப்பார்கள்.கலந்துரையாடல் , பெண்கள் வலுவூட்டல்(empowerment), மற்றைய சமூகங்களுடன் ஒருங்கிணைப்பு(integration) மூலம் இதற்க்கு தீர்வுகாண முடியும் என நான் நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, zuma said:

தலிபான்கள் போல் தடை செய்து பர்தா பிரச்சனை தீர்க்க முடியும் என நான் நினைக்கவில்லை

தலிபான்கள் பர்தா பெண்கள் அணியாவிட்டால் அடித்தே கொன்று விடுவார்கள். ஈரான் முஸ்லிம் அரசில் மறுத்த பெண்களுக்கு 72 சவுக்கு அடி. பர்தா அணி மறுக்கும் பெண்கள் முஸ்லிம் நாடுகளில் கவுரவ கொலையும் செய்யபடுவார்கள்.
சுவிச்சர்லாந்தில்   இந்த தடை சட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய அன்பர்களை கேட்டால் சொல்லுவார்கள் ,

கணவனுக்கு காண்பிக்க வேண்டிய அழகை பிறருக்கு காண்பிக்க கூடாது என்பதற்காகவே முகத்தை பெண்கள் மூட வேண்டும் என்ற உயரிய கொள்கை இஸ்லாத்தில் கடைப்பிடிக்கபடுகிறது என்று சொல்வார்கள்.

ஐரோப்பாவில் வாழ்ந்த காலத்தில் அந்த நாடுகளுக்கு அகதியாக நுழையும் இஸ்லாமிய ஆண்கள் முகாமுக்கு வந்தவுடனயே முதல் செய்யும் வேலை குளிச்சிட்டு டிஸ்கோ போயி அன்றைக்கே கையில காலில விழுந்து ஒரு வெள்ளைக்காரியை பிடிப்பதுதான்.

ஆண்கள் அரைகுறை ஆடையில் திரியும் எந்த நாட்டுக்காரியை வேண்டுமென்றாலும் பிடிக்கலாம், ஆனால் பெண்கள் அவர்களோட மதக்காரனை தவிர வேற யார் முன்னாடியும் முகத்தை காட்டிகூட போக முடியாது.

உயரிய இஸ்லாம் கொள்கைகள் எல்லாம் இஸ்லாம் பெண்களுக்கு மட்டுமே. ஆண்களுக்கு அல்ல.

அவர்கள் விதிப்படி ஒருத்தன் ஆறு பெண்களை திருமணம் செய்யலாம் மத சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறது.

ஒரு பெண் ஆறுபேருடன் தாம்பத்திய உறவை பகிர்ந்தால் அவளுக்கு விதம் விதமா பட்டம் கொடுக்கும் அவர்கள் சமூகம்,

ஆறு பெண்கள் ஒருத்தனுடன் படுக்கையை பகிர்ந்தால்  அது மார்க்க நெறிமுறை என்று வக்காலத்து வாங்குகிறது.

எடு விளக்குமாத்தை................,

நான் போய் வீடு கூட்டபோறேன்.

Link to comment
Share on other sites

38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தலிபான்கள் பர்தா பெண்கள் அணியாவிட்டால் அடித்தே கொன்று விடுவார்கள். ஈரான் முஸ்லிம் அரசில் மறுத்த பெண்களுக்கு 72 சவுக்கு அடி. பர்தா அணி மறுக்கும் பெண்கள் முஸ்லிம் நாடுகளில் கவுரவ கொலையும் செய்யபடுவார்கள்.
சுவிச்சர்லாந்தில்   இந்த தடை சட்டம் நிறைவேற வாழ்த்துக்கள்.

இந்த சட்டமூலம்  தொடர்பாக ஆதரவான நிலைப்பாடு ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் பலவேறு தரப்பின்  வாத பிரதிவாதங்களும்  சுவிஸ் மக்கள் கட்சியின் தேசியவாத கூச்சல்களும் எனது மனதை மாற்றியிருந்தன. இருந்தாலும் மதத்தின் பெயரால் சமூகத்தின் ஒரு பிரிவினர் மீது அவர்களின் விருப்புக்கு மாறாக நேரடி , மறைமுக சமூக அடக்குமுறை புரிவோரை கட்டுப்படுத்த இப்படியான சட்டங்கள் தவறில்லை என்ற முடிவினால் சட்டமூலத்திற்கு ஆதரவாக “ஆம்” என்றே இறுதியில் வாக்களித்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

ஆண்கள் அரைகுறை ஆடையில் திரியும் எந்த நாட்டுக்காரியை வேண்டுமென்றாலும் பிடிக்கலாம், ஆனால் பெண்கள் அவர்களோட மதக்காரனை தவிர வேற யார் முன்னாடியும் முகத்தை காட்டிகூட போக முடியாது.

எல்லாம் முகமது விதித்த கட்டளையின் விளைவு 🤦‍♂️

9 hours ago, tulpen said:

நேரடி , மறைமுக சமூக அடக்குமுறை புரிவோரை கட்டுப்படுத்த இப்படியான சட்டங்கள் தவறில்லை என்ற முடிவினால் சட்டமூலத்திற்கு ஆதரவாக “ஆம்” என்றே இறுதியில் வாக்களித்தேன். 

👍

பெண்கள் மீதான மதத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக வாக்களித்துள்ளீர்கள் பாராட்டுகள்.
முகத்தை மூடும்படி கட்டாயப்படுத்தினால் குற்றம் என்று ஏற்கெனவே சில நாடுகளில் சட்டங்களில் இருந்தாலும் பயத்தினாலும் குடும்பத்தில் பிரச்சனை வேண்டாம் என்பதற்காகவும் இது தான் வழி என்று பல முஸ்லிம் பெண்கள் ஆண்களின் முகத்தை மூடும்படி உத்தரவிற்கு எதிர்ப்பு காட்டுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது இட‌ங்க‌ளில் பெண்க‌ள் த‌ம் முக‌த்தை முழுமையாக‌ மூடுவ‌து அல்ல‌து மாஸ்க் போன்று மூடுவ‌தை சுவிர்ச‌லாந்து த‌டை செய்திருப்ப‌தை நாம் வ‌ர‌வேற்கும் அதே வேளை இவ‌ற்றால் தீவிர‌வாத‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த முடியும் என‌ நினைப்ப‌து ப‌டு முட்டாள்த்த‌ன‌ம் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

 

 

  • FB_IMG_1615173386062.jpg

 

 

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்திருப்ப‌தாவ‌து,

 

 

முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் மூட‌த்தான் வேண்டும் இஸ்லாத்தின் புனித‌ குர்ஆனும் ந‌பி வ‌ழியும் போதிக்க‌வில்லை.

 

 

புர்க்கா, நிகாப் (ஆங்கில‌த்தில் மாஸ்க்) அணித‌ல் என்ப‌து யூத‌ர்க‌ள் கால‌த்திலிருந்து வ‌ரும் ம‌த்திய‌ கிழ‌க்கின் ப‌ழைமை வாய்ந்த‌ க‌லாசார‌மும். இந்த‌ வ‌ழ‌க்க‌ம் அர‌பு முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் இருந்த‌ போதும் இவ்வாறு முக‌த்தை ம‌றைக்க‌ வேண்டும் என‌ இறுதி இறைத்தூத‌ர் க‌ட்ட‌ளையிட‌வில்லை. மாற்ற‌மாக‌ ஒரு பெண், முக‌ம், ம‌ணிக்க‌ட்டு கை த‌விர‌ அனைத்தையும் ம‌றைக்க‌ வேண்டும் என‌ முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) சொன்ன‌த‌ன் மூல‌ம் முஸ்லிம் பெண் முக‌ம் மூடுவ‌து ந‌பியின் வ‌ழிகாட்ட‌லுக்கு மாற்ற‌மான‌தாகும்.

 

 

ஆனாலும் பிற்கால‌த்தில் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாக‌ வெளியே செல்வ‌த‌ற்காக‌ முக‌ம் மூடும் வ‌ழ‌மை வ‌ந்த‌து.

 

 

க‌றுப்பு நிற‌ அபாயா அணிவ‌தும் யூத‌, ம‌ற்றும் சேசுவின் தாய், புனிதாவ‌தி மேரியின் க‌லாசார‌மாக‌ இருந்த‌ போதும் அத‌னை இஸ்லாம் அனும‌தித்துள்ள‌து. இறைதூத‌ர் கால‌த்து முஸ்லிம் பெண்கள் க‌றுப்பு ஆடை அணிந்த‌தாக‌ ஆதார‌ம் உள்ள‌ன‌. அன்னை தெரேசா கூட‌ இள‌ம் வ‌ய‌தில் க‌றுப்பு அபாயாவே அணிந்தார்.

 

 

முஸ்லிம் பெண் த‌ன‌து முக‌த்தை ம‌றைத்து நிகாப், மாஸ்க் அணிந்தால் அவ‌ள் மூல‌மான‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லை த‌டுக்க‌லாம் என்றால் கொரோனா கார‌ண‌மாக‌ உல‌க‌ம் முழுவ‌தும் ஒரு வ‌ருட‌த்துக்கும் மேலாக‌ ஆணும் பெண்ணும் முக‌ம் மூடி மாஸ்க் மூடியிருக்க‌ வேண்டும் என்ற‌ ச‌ட்ட‌ம் உள்ள‌ போது மிக‌ இல‌குவாக‌ தாக்குத‌ல்க‌ளை ந‌ட‌த்தியிருக்க‌ முடியும். மாஸ்க் அணிவ‌தும், நிகாப் அணிவ‌தும் ஒன்றுதான். அப்ப‌டி மாஸ்க் அணிந்து வ‌ந்த்ச் பெண் த‌ற்கொலை தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌தாக‌ செய்திக‌ள் இல்லை.

 

 

அப்ப‌டித்தான் த‌ன் உயிரை மாய்த்துக்கொள்ள‌ வ‌ரும் பெண் நிச்ச‌ய‌ம் முக‌ம் மூடித்தான் வ‌ருவாள் என‌ எண்ணுவ‌து எல்லாவ‌ற்றையும் விட‌ ம‌ட‌த்த‌ன‌மாகும். ராஜிவ் காந்தியை த‌ற்கொலை குண்டு வைத்து கொன்ற‌ பெண் மாஸ்க்கோ, புர்க்காவோ அணிந்து வ‌ர‌வில்லை. சாக‌ப்போகிறோம் என‌ நினைக்கும் பெண் எந்த‌ ஆடையிலும் வ‌ருவாள்.

 

 

இவ்வாறு தீவிர‌வாத‌த்தை த‌டுப்ப‌த‌ற்காக‌ முக‌ம் ம‌றைத்த‌லை த‌டை செய்வ‌தாக‌ நினைப்ப‌து த‌ற்கொலை தாக்குத‌ல்க‌ளை இல‌கு ப‌டுத்துவ‌தாகும். தாக்குத‌லுக்கு வ‌ரும் பெண் முக‌ம் மூடி வ‌ருவாள் என்றுதான் இராணுவ‌ம் எதிர்பார்த்திருக்கும். ஆனால் ஜீன்ஸ் சேட் போட்டு முக‌ம் மூடும் பெண் வ‌ந்து தாக்கினால் என்ன‌ செய்வ‌து என்ற‌ சாதார‌ண‌ அறிவு கூட‌ ஐரோப்பாவுக்கு இல்லை என்ப‌தே க‌வ‌லையான‌ விச‌ய‌ம்.

 

 

முஸ்லிம் பெண்க‌ள் முக‌ம் மூட‌ தேவையில்லை என்ப‌தை உல‌மா க‌ட்சி 2006 முத‌ல் சொல்லி வ‌ருகிற‌து. அந்த‌ வ‌கையில் எந்த‌ப்பெண்ணும் முக‌ம் மூட‌த்தேவையில்லை என‌ சுவிஸ் ச‌ட்ட‌ம் கொண்டு வ‌ருவ‌து வ‌ர‌வேற்க‌த்த‌க்க‌து. கார‌ண‌ம் முக‌ம் மூடுவ‌தால் முஸ்லிம் அல்லாத‌ ஆண், அல்ல‌து பெண் திருட‌ர்க‌ளும் அவ்வாறான‌ ஆடையை ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்ளைய‌டித்து விட்டு முஸ்லிம்க‌ள் மீது ப‌ழி போட‌ முடியும் என்ப‌தால் இச்ச‌ட்ட‌த்தை நான் வ‌ர‌வேற்கிறோம். ஆனாலும் பெண்க‌ள் மாஸ்க் அணிவ‌தால் தீவிர‌வாத‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியும் என‌ சுவிஸ் அர‌சு நினைக்குமானால் அதைப்போன்ற‌தொரு முட்டாள்த‌ன‌ம் இருக்க‌ முடியாது என்ப‌தையும் சொல்லி வைக்கிறோம்.

 

https://annachinews.com/archives/15311

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1615173386062.jpgஅப்ப‌டித்தான் த‌ன் உயிரை மாய்த்துக்கொள்ள‌ வ‌ரும் பெண் நிச்ச‌ய‌ம் முக‌ம் மூடித்தான் வ‌ருவாள் என‌ எண்ணுவ‌து எல்லாவ‌ற்றையும் விட‌ ம‌ட‌த்த‌ன‌மாகும். ராஜிவ் காந்தியை த‌ற்கொலை குண்டு வைத்து கொன்ற‌ பெண் மாஸ்க்கோ, புர்க்காவோ அணிந்து வ‌ர‌வில்லை. சாக‌ப்போகிறோம் என‌ நினைக்கும் பெண் எந்த‌ ஆடையிலும் வ‌ருவாள்.

அட இந்த சாத்தான் சுவிசுக்கும் வேதம் ஓதுது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.