Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

செப்சிஸும் அம்மாவின் இழப்பும்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது..

செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது.

செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். 

குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். 

குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்)

நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்..

நாட்பட்ட நோய் கண்டவர்கள்..

தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்..

நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்..

நீரிழிவு நோய் கண்டவர்கள்..

தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்..

உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்..

விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்..

போதிய உணவின்மை..

போதிய ஊட்டச்சத்தின்மை..

வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை..

போதிய சுகாதார வசதிகள் இன்மை..

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்..

போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை..

இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. 

 

செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன..

1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும்

2. உடற்சோர்வு

3.சிறுநீர் உற்பத்தி குறைவு

4.மயக்க நிலை

5. அதிகரித்த இதயத்துடிப்பு

6. வாந்தி மற்றும் பேதி

7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல்

8. குறை குருதி அழுத்தம்

சுவாசத்தொற்று எனில்

சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்..

Sepsis | El Camino Health

 

அம்மாவின் விடயத்தில்..  அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன.

அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??!

இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை.

சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை.

செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock)  என்பது..

குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன.

குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது.

அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம்.

ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும்  Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை.

அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும்  Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும்.

அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை.

உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்..  இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம்.

தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். 

உசாத்துணை:

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/

(யாழிற்கான சுய ஆக்கம்)

Edited by nedukkalapoovan
மேலதிக விடயங்கள் சேர்க்கப்பட்டும்.. தட்டெழுத்துப்பிழை திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
 • Like 12
 • Thanks 6
 • Sad 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு தம்பி.

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

 • nedukkalapoovan changed the title to செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
 • கருத்துக்கள உறவுகள்

பதிவிற்கு நன்றி. இப்பதிவின் மூலம் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.

அம்மாவின் இழப்பை எதைக்கொண்டும் ஈடுசெய்ய முடியாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் முதலில் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அம்மா யாழ்இல் தான் இருந்தாவா?
வீட்டில் இருந்த அம்மாவுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது?

உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
42 minutes ago, ஈழப்பிரியன் said:

நெடுக்ஸ் முதலில் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
அம்மா யாழ்இல் தான் இருந்தாவா?
வீட்டில் இருந்த அம்மாவுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது?

உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி.

ஆம்.. அம்மாவும் அப்பாவும் கொழும்பில் வாழ்ந்து பின் யுத்தம் முடித்த பின் ஊருக்கு போக விரும்பி போய் தங்கள் பரம்பரை இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அது அவர்களின் சுய விருப்பமும் கூட. பிள்ளைகள் நாம் அதில் தலையீடு செய்யவில்லை. மாறாக அவர்களின் விருப்பத்திற்கு எம்மாலான ஒத்தாசை செய்தோம். 

அம்மாவுக்கு யாழில் நிலவிய கடும் மழை காலத்தின் பின் skin rash வந்தது. அதற்கு antibiotic cream பாவித்தே இருந்தார்கள். ஆனாலும்.. தன்னை அறியாமலே கையால் சொறிந்திருக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் பக்ரீரியா தொற்றுக்கு வாய்ப்புண்டு. சிறிய காயம் ஒன்றே போதும்... sepsis வருவதற்கு. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிப வயதினரில்... இது ஒரு பெரும் பிரச்சனை. என்ன தான் கவனமாக இருந்தாலும்.

இதில் அம்மா தனக்கான நோய் அறிகுறி தென்பட்டதும்.. அப்பா குடும்ப வைத்தியரை அழைத்து சிகிச்சை வழங்கித்தான் இருந்தார். ஆனால்.. குடும்ப வைத்தியர் ஏதோ காரணத்தால்.. செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் சாதாரண காய்ச்சல் போல் நிலைமையை கையாண்டது தான்.. பிரச்சனைக்கான தோற்றுவாய்.

இறுதியில் அம்மாவின் கடைசி 48 மணி நேரம்.. மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. குருதி அழுத்தம் குறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில் அம்மா கன நாள் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னது தான் மிகவும்.. கோபத்தை தூண்டியது.

ஆனாலும்.. நாங்கள் சோரவில்லை. உடனடியாக குடும்ப நண்பராக உள்ள வைத்தியரின் உதவியோடு.. உடனடியாக.. தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு  சென்று தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு.. தேறிவிடுவார் என்று நம்பிக்கை வளர்ந்திருந்த நிலையில்.. மிதமான இதயத் தாக்குக்கு ( Minor heart attack) உட்பட்டார். இருந்தாலும்.. மீண்டும் வைத்தியர்கள் விடா முயற்சி செய்தார்கள். சுமார் 12 மணி நேரத்துக்குள் இரண்டு இதயத்தாக்கு ஏற்பட்டு.. ஒக்சிசன் அளவு குருதியில் ஆபத்தான அளவுக்கு குறைந்த நிலையில்.. மரணம் சம்பவித்துவிட்டது.

அப்போதும் வைத்தியர்கள் கூடவே இருந்துள்ளார்கள்.

இதில்.. குடும்ப வைத்தியராக இருந்து அம்மாவை பாதுகாத்து வந்தவர்.. இறுதி நேரத்தில் நாட்டில்.. கொரோனா அதுஇதென்று சாட்டுச் சொல்லி.. அம்மாவை சரிவர கவனிக்காமல் விட்டதும்.. காய்ச்சல் வந்தும்.. அவருக்கு உரிய பரிசோதனைகளை செய்யாமல் விட்டதும்..தான்... அம்மாவின் இந்த திடீர் இழப்புக்கு முக்கிய காரணம் எனலாம். இது வழமையாக சோதனையில் பெயில் விட்டால் ஆசிரியர் மேல் பழிபோடுவது போன்ற நிலை அல்ல. ஏனெனில் அம்மா ஒரு high risk patient என்பதை அந்த வைத்தியர் நன்கு அறிந்திருந்தும்.. அவருடைய அலட்சியத்தன்மை ( negligence ) தான் அம்மாவுக்கு ஆபத்தும் ஆகிவிட்டது.  அம்மாவின் போதாத காலமும் கூடச் சேர்ந்துவிட்டதோ என்னவோ. 

ஆனால்.. நிச்சயமாக.. அம்மா மனதளவில்.. இந்தப் பூமியில் இருந்து விடைபெற தயார் இல்லாத நிலையில்... தான் அவர் விடைபெற்றிருக்கிறார். அதுதான் மிகக் கவலையாக அமைந்துவிட்டது. அதனை நினைக்கும் போது வலிதான் அதிகமாகிறது.

Edited by nedukkalapoovan
 • Like 1
 • Thanks 1
 • Sad 3
Link to comment
Share on other sites

விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்ஷ்.

என் அம்மா கொழும்பில் தனியாகவே இருக்கின்றார். கனடா தனக்கு சரிவரவில்லை என்று இங்கிருந்து போன பின் அங்குதான் தனியாக இருக்கின்றார். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக குறைக்கும் Acute lymphocytic leukemia வகையான புற்றுநோயும் கடந்த 5 வருடங்களாக - எந்தவிதமான பிரச்சனையும் கொடுக்காமல் - உள்ளது. இயல்பிலேயே உறுதியான ஓர்மம் கொண்டவர் என்பதால் 75 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் மட்டும் 7 பேரின் அம்மாக்காள் இறந்து விட்டனர். ஒவ்வொருவரினது அம்மாக்களின் இறப்பு செய்தி வரும் போது, நெஞ்சு பதறுகின்றது. கொரனா காலத்தில் ஏதும் நிகழ்ந்து விட்டால், போய் பார்க்க கூட முடியாமல் போய் விடுமோ என்று பயமாக உள்ளது.

ஒரு 40 வயதுக்கு மேற்பட்ட மகனுக்கோ, மகளுக்கோ அம்மா தான் நெஞ்சுடன் அணைத்து ஆறுதல் கொடுக்கும் நீண்ட கால நெருங்கிய உறவு.  மனைவியோ மகனோ மகளோ கணவனோ அத்தனை ஆண்டு காலம் உறவு கொண்டாடும் அளவுக்கு எம் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுள்காலத்தின் நாட்கள் விடுவதில்லை. அப்படியான ஒரு நிலைத்த நீண்ட உறவை சடுதியாக இழப்பது என்பது கடும் துயரம் தரும் விடயம்.

நெடுக்ஸ், உங்கள் துயரையும் இழப்பையும் காலம் ஆற்றுப்படுத்தட்டும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

விரிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி நெடுக்ஷ்.

என் அம்மா கொழும்பில் தனியாகவே இருக்கின்றார். கனடா தனக்கு சரிவரவில்லை என்று இங்கிருந்து போன பின் அங்குதான் தனியாக இருக்கின்றார். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியை கடுமையாக குறைக்கும் Acute lymphocytic leukemia வகையான புற்றுநோயும் கடந்த 5 வருடங்களாக - எந்தவிதமான பிரச்சனையும் கொடுக்காமல் - உள்ளது. இயல்பிலேயே உறுதியான ஓர்மம் கொண்டவர் என்பதால் 75 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாகவே உள்ளார்.

கடந்த ஒரு வருடத்தில் என் நண்பர்கள் வட்டத்தில் மட்டும் 7 பேரின் அம்மாக்காள் இறந்து விட்டனர். ஒவ்வொருவரினது அம்மாக்களின் இறப்பு செய்தி வரும் போது, நெஞ்சு பதறுகின்றது. கொரனா காலத்தில் ஏதும் நிகழ்ந்து விட்டால், போய் பார்க்க கூட முடியாமல் போய் விடுமோ என்று பயமாக உள்ளது.

ஒரு 40 வயதுக்கு மேற்பட்ட மகனுக்கோ, மகளுக்கோ அம்மா தான் நெஞ்சுடன் அணைத்து ஆறுதல் கொடுக்கும் நீண்ட கால நெருங்கிய உறவு.  மனைவியோ மகனோ மகளோ கணவனோ அத்தனை ஆண்டு காலம் உறவு கொண்டாடும் அளவுக்கு எம் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுள்காலத்தின் நாட்கள் விடுவதில்லை. அப்படியான ஒரு நிலைத்த நீண்ட உறவை சடுதியாக இழப்பது என்பது கடும் துயரம் தரும் விடயம்.

நெடுக்ஸ், உங்கள் துயரையும் இழப்பையும் காலம் ஆற்றுப்படுத்தட்டும். 

நன்றி நிழலி. உங்கள் அம்மாவை இயன்றவரை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். 

5 hours ago, விசுகு said:

நன்றி பதிவுக்கு தம்பி.

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

3 hours ago, ஜெகதா துரை said:

பதிவிற்கு நன்றி. இப்பதிவின் மூலம் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது.

அம்மாவின் இழப்பை எதைக்கொண்டும் ஈடுசெய்ய முடியாது.

உங்கள் அனைவரினதும் அக்கறைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்நெடுக்கண்ணா. வயதானவர்கள் என்பதால் இலங்கையில் சில வைத்தியர்கள் அவசியமான பரிசோதனைகளைக்கூட புறக்கணிப்பதுண்டு. என்னுடைய அப்பாவிற்கும் இப்படிநடந்தது.

Link to comment
Share on other sites

விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ   காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். 
இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சிலருக்கு பரம்பரையாக வர வாய்ப்பு உள்ளதாக அறிகிறோம்.
உங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அம்மா இறையடியில் அமைதியில் இளைப்பாறட்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விரிவான விளக்கத்துக்கு நன்றி . அம்மாவின் இழப்பு எந்த வயதிலும் தாங்க முடியாது . பிறப்பவர் எல்லோரும் ஒரு நாள் இறப்பார் நோய் துன்பத்தில் கஷ்டப்படாமல்   சென்று விடடார்  என தேற்றிக் கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நோய் பற்றிய விரிவான விளக்கத்துக்கு நன்றி நெடுக்கஸ். உங்கள் அம்மாவின் இழப்பின் துயரம் மிக வலி மிகுந்தது.  உங்களின் துயரில் நானும் பங்கு கொள்கிறேன். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மருத்துவ வசதிகள் நாம் நினைக்கும் வகையில் மட்டமாக இல்லாமல் திருப்திப்படும் அளவில் உள்ளதாக அறிந்தேன். அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் வைத்தியசாலைகளுக்கு நிகராக நோயாளிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவாம்.

முதியவர்கள் விடயத்தில் நாம் எவரையும் நம்ப முடியாது. பிள்ளைகள் சிரத்தை எடுப்பதுபோல் நிச்சயம் வெளியார் கவனம் எடுக்கமாட்டார்கள். குருதி, சிறுநீர் மாதிரிகளை ஆய்வுசாலைக்கு அக்கறையாக எடுத்து அனுப்புவது தொடக்கம் தவணை முறையில் தொடர்ச்சியாக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துவது, கவனமாக வெளியில் அழைத்து சென்று கவனமாக வீட்டுக்கு கூட்டிவருவது வரை பிள்ளைகளின் அல்லது கரிசனை உள்ள நெருங்கிய உறவுகளின் உதவி பெரியோருக்கு தேவை. யாரையும் நம்பினால் ஒன்றுக்கும் உத்தரவாதம் இல்லை. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று ...நீண்ட மருத்துவ விளக்கத்திற்கு நன்றி 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையாக இருக்கின்றது நெடுக்ஸ் ......உங்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்......இந்த வருத்தத்தின் விரிவான விளக்கத்துக்கு நன்றி.....!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளுக்கு இரங்கலுடன் அன்புடன் கூடிய உங்கள் பின்னூட்டங்களுக்கு. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈடு செய்ய முடியாத ஓர்  இழப்பு ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

ஆமாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இங்கு இப்போதெல்லாம்  பெரிதாகக் கவனம் எடுப்பதில்லை வயதுபோனவர்களுக்கு மட்டுமல்ல. வெளிநாட்டினருக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செப்சிஸும் பற்றி முன்னர் அறிந்திருக்கவில்லை.  உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
அங்கு வைத்தியர்களின் அல்டசியத்தன்மை மிகவும் மலிந்து போயுள்ளது.  நாங்களும் அதை அனுபவ ரீதியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தித்தோம். :(

உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் :(

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பின் துயரம்  வலி மிகுந்தது.  உங்களின் துயரில் நாங்களும்  பங்கு கொள்கின்றோம்.
விபரமான விளக்கத்திற்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று யாருமே இல்லை.. நாட்டை விட்டு ஓடித்தப்பிய புலிகளை தவிர என்றவர்.. எப்படி புலம்பெயர்ந்த தமிழர்களை இனங்கண்டு.. அழைப்பு விடுத்தார். ஒருவேளை அவரே இனங்கண்ட புலிகளோடு பேச அழைக்கிறாரோ..??! சொறீலங்காவின் எந்த உள்ளகப் பொறிமுறையும் தமிழர்களுக்கு தீர்வைத் தராது. வெளியார் மத்தியஸ்த்துடனான.. வெளியார் பங்களிப்புடனான.. ஐநா மேற்பார்வையில் அமையும்.. சுதந்திர தமிழீழத்துக்கான தேர்தல் நடத்துவதன் மூலமே.. தமிழர் பிரச்சனைக்கு முடிவு கட்ட முடியும். கோத்தாவின் இந்தப் பேச்சு.. சொறீலங்காவை பொருண்மிய.. பூகோளச் சிக்கலில் இருந்து மீட்கும் உள்நோக்கம் கொண்டதே அன்றி.. புலம்பெயர் தமிழர்களை இனங்காணவே மறத்த கோத்தா அவர்களை புலிகள் என்ற கோத்தா எப்படி.. இப்படி ஒரு கூவல் கூவுவார். ஆக இதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு.. சர்வதேச அழுத்தம் இன்னும் இன்னும் சொறீலங்கா மீது அதிகரிக்கச் செய்யப்படுதல் வாயிலாக மட்டுமே.. அதுவும் இன்றைய பொருண்மிய நெருக்கடி காலத்தில் அமைந்தால் மட்டுமே.. ஏதாவது அரைகுறையாவது கிடைக்க வாய்ப்பை ஏற்படுத்த சந்தர்ப்பம் அமையும். மற்றும்படி,.. இலவு காத்த கிளிகளாக வேண்டியதுதான்.. கோத்தா - மகிந்த கும்பலின் பசப்பை நம்பினால். 
  • அண்ணை... எதுக்கும் நீங்கள் சனிக்கிழமை, நவக்கிரகத்துக்கு...  எள்ளெண்ணெய் எரிச்சுப் போட்டு, சாப்பிட போங்கோ ஒண்டும் நடக்காது.  
  • கூப்பிடுவதற்கான தகுதியை அல்லது  தருணத்தை ஏற்படுத்துவதே முதல் வெற்றி  தானே? காலில்  விழுந்தவர்களை  அவர்  கணக்கே எடுக்கவில்லை  என்பதும் தெரிகிறது  
  • “மணியண்ணை ரைட்“ திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா. முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும். வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளுற கையில குத்து மதிப்பான நிறை , அன்றைய சந்தை விலை எல்லாம் மனதில வைச்சு கும்பல் கும்பலா மீனை பிரிச்சு வைச்சு கொண்டு அடுத்த வாடிக்கையாளருக்காக ஆச்சி பாத்துக்கொண்டிருந்தா. “எணை ,பொயிலை காம்பு துண்டொண்டு தாவன்” எண்டு மீன் பெட்டியை தூக்கிக் கொண்டு வந்த பெடி கேக்க , வலது பக்கத்து இடுப்பில இருந்த வெள்ளி லக்ஸ்பிறே bag ஐ தூக்கி குடுத்திட்டு இடது பக்கத்து சீலைத்தலப்பை கொஞ்சம் இறுக்கி செருகினா ஆச்சி . அவனும் “பொயிலைக் காம்போட இரண்டு சீவலும் கொஞ்ச சுண்ணாம்பும் எடுத்தனான்”எண்டு திருப்பிக் குடுத்தான். எல்லா வீட்டையும் மீன் வாங்க எண்டு தனி ஒரு bag இருக்கும் . ஒரு பழைய வயர் bag , கிழிஞ்ச ஓட்டைகளில பழைய துணியால ஒட்டுகள் போட்டு இருக்கும் . அதோட அதுக்குள்ள கசங்கிப் போன இரண்டு சொப்பிங் bag (ஏதோ கழிச்சுவிட்ட சாமானை வாங்கப் போற மாதிரி). மீன் வாங்கினாப்பிறகு “தம்பி bag வேணுமோ” எண்டு ஆச்சி கேக்க, சும்மா தாறாங்களாக்கும் எண்டு ஓம் எண்டால் bagல போட்டு தந்திட்டு , போகேக்க முன்னால bag காசு இரண்டு ரூபா குடுத்திட்டு போங்கோ எண்டுவா ஆச்சி. சந்தை வாசலில பழைய காலத்திலசீமெந்து bag பிறகு சொப்பிங் bagம் கறுத்த பெரிய கொஞ்சம் பாரம் தாங்க கூடிய Tulip எண்டு எழுதின bagம் விக்க இருக்கும். மீன் வாங்க சந்தைக்குள்ள போகேக்க பளுவேட்டையார்களை ஞாபகப்படுத்தும் உருவங்களை தாண்டி ஆச்சி மாரிட்ட போறது கொஞ்சம் பேசி கீசி வாங்கலாம் எண்டு. ஆனால் என்ன ஆச்சி கூடச்சொல்லிறியள் , மீனை பாத்தா நாறலா இருக்கு எண்டு ஏதாவது தேவேல்லாமல் சொல்லீட்டமோ அவ்வளவு தான் . நல்ல தமிழ் மணம் , மீன் சந்தையையும் தாண்டி மணக்கும். அந்த அவமானத்துக்கு பயந்து சொல்லிற காசுக்கு மீனை வாங்கீடுவம் . எண்டாலும் போகேக்க இந்தா பிடி எண்டு இரண்டு extra மீனை bagகுள்ள போட்டு விட்டிட்டு நெஞ்சுக்குள்ள இருந்து கொட்டைப் பெட்டிய எடுத்து தாற மிச்சக்காசை வாங்கி பொக்கற்றுக்க வைக்காம அப்படியே கையில பொத்திக்கொண்டு திரும்பி வீட்டை வாறனாங்கள். பத்து மணி தாண்ட பக்கத்தில திரும்பி இதையும் கொஞ்சம் பார் எண்டிட்டு போய் , வீட்டை இருந்து இரவு இரண்டு மணிக்கு கடலுக்குப் போன அந்தாளுக்கு செஞ்சு குடுத்ததில மிச்சம் இருந்த உழுத்தங்களியை கட்டிக் கொண்டந்து தண்ணியோட விக்க விக்க உருட்டி விழுங்கீட்டு வந்து மீண்டும் அரட்டையும் வியாபாரமும் ஒண்டா தொடர்ந்தா ஆச்சி. அப்ப ஆச்சிமார் மட்டுமே செய்யிற வியாபாரங்கள் சிலதுகள் இருந்தது. நல்லூரில இருந்து நாலு சந்தி வரை கடலைக் கடை எல்லாம் ஆச்சிமார் தான் . கடலைக்கடை ஆச்சிமார் எல்லாரும் காதிலும் பார்க்க பெரிசாக் கிழிஞ்ச ஓட்டை , அதில கிழிஞ்சு விழுறமாதிரி பித்தளை பாம்படத்தோடு , பவுண் மூக்குத்தி ,சுருங்கின நெத்தீல மூண்டு குறி , நல்ல வட்டமா பெரிய குங்குமம் எண்டு அம்சமாவகவே இருப்பினம் . சந்தியில கடை வைச்சிருக்கிறவை வீட்டை இருந்தே கச்சான் வறுத்துக் கொண்டு வருவினம். நெஞ்சளவு உயர வாங்கில பனையோலை தட்டிப்பெட்டீல குவிச்சு வைச்ச கச்சானும் சோளனும் வைச்சிருப்பினம் . பள்ளிக்கூடம் முடிஞ்சு வாற மத்தியானம் வெய்யிலுக்க நிண்ட படியே கச்சான் விப்பினம். ஆனால் நல்லூர் திருவிழா மூட்டம் set up மாறும் ,கொஞ்சம் அகலமான வாங்கில இரண்டு பெட்டீல கச்சான் , ஒண்டில சோளம் , ஒரு போத்ததில்ல பட்டாணி இருக்கும் . ஒரு பக்கம் மண்ணைப் போட்டு கச்சானை வறுத்துக் கொண்டே வியாபாரமும் செய்வினம் . ஆக்கள் வந்தால் விறகை வெளீல இழுத்திட்டு , சுடு கச்சான் இரண்டை சாப்பிடக் குடுத்திட்டு , வியாபாரம் முடிஞ்சோன்ன விறகைத் திருப்பி தள்ளீட்டு திருப்பியும் வறுக்கத் தொடங்கீடுவினம். வறுத்த கச்சானை சுளகில பிடைச்சட்டு சாக்கில போட்டு கட்டீட்டு , உள்ள போன சனத்தின்டை கணக்கை கொண்டு புது மூட்டையை அவிப்பினம். கச்சான் விக்கிறதோட இலவச செருப்பு பாதுகாப்பு சேவை செய்வினம் , எப்படியும் செருப்பு எடுக்க வரேக்க கச்சான் வாங்குவினம் ஒரு நம்பிக்கையில. ஆனால் செருப்பு திருப்பி எடுக்கேக்க கச்சான் வாங்காட்டியும் ஒண்டும் கேக்கவும் மாட்டினம். குடும்பமாப் போய் தனித்தனிய கும்பிட்டிட்டு திரும்பி வாறாக்களுக்கு , “அம்மா அப்பவே போட்டா, வரேக்க நாளைக்கு மரக்கறியும் வாங்கிக்கொண்டு கெதியா வரச்சொன்னவ “ எண்டு information நிலையமாகவும் இருந்தவை. சரி இவ்வளவு சொல்லுதே எண்டு இரண்டு ரூவாய்க்கு கச்சான் கேட்டா , லாபம் தானே எண்டு பாக்காம அம்மாவும் வாங்கிக்கொண்டு போனவ எண்ட பதில் வரும் . அந்தந்த ஊரில இருக்கிற , விளையிற சாமாங்களோட வீடு வீடா போய் ஆச்சி குறூப் ஒண்டும் இருந்தது. வெங்காயம் , புளி , நல்லெண்ணை, எள்ளு, எள்ளுப்பாகு, ராச வள்ளிக் கிழங்கு, கரணைக்கிழங்கு ஊர் முட்டை எண்டு கொண்டு திரிஞ்சு விக்கிறவை . காலமை பஸ் ஏறி முன்னுக்கு டிரைவர் சீட்டுக்கு எதிரா இருப்பினம் அங்க தான் கடகத்தை வைக்க இடம் இருக்கும், பின்னால சீட்டில் வைச்சால் கொண்டக்டர் புறுபுறுப்பார்.இப்படி திரியிற ஒரு ஆச்சீன்டை கடகத்துக்குள்ள தான் மணியண்ணை ரைட் கியரைப் போட்டவர். போற வீட்டில எங்கேயும் தேத்தண்ணி சில வேளை சாப்பாடும் கிடைக்கும் ஆன படியால் கண்டபடி காசை வீணாக்க மாட்டினம். இந்த வியாபாரம் பரம்பரை பரம்பரையாக தொடருறதும் இருக்கு. இந்த ஆச்சி மார் எல்லாம் எனக்கெண்டால் ஒரே மாதிரித்தான் இருந்ததாக ஞாபகம் . பச்சை, சிவப்பு, ஊதா எண்டு ஒரு மூண்டு கலரில தான் சீலை அதுவும், கைத்தறிச் சீலை தான் கட்டி இருப்பினம். நடக்க வசதியா சீலையை கொஞ்சம் குதிக்காலுக்கு மேல உயத்திக் கட்டியிருப்பினம் . கச்சை அணியாத கைநீட்டு வெள்ளை பிளவுஸ் ஆனாலும் கசக்கிக் கட்டின கந்தலோட தான் வருவினம். வெத்திலைப் பை , கொட்டைப் பெட்டி , சுருக்குப் பை எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும் . சீலை சுத்தின திருகணை , அகண்ட கடகம், கடகத்துக்குள்ள விக்கிற சாமாங்கள் , காறாத்ததல் , அரைறாத்தல் ஒரு றாத்தல் எண்டு மூண்டு படியோட ஒரு திராசு இது தான் கொண்டு திரியிற சாமாங்கள். தம்பி ஒரு கை பிடிச்சு விடு எண்ட கேக்கிற முகத்தில நிறைய அமைதி , கடைவாயில வெத்திலைச் சாறு , anaemia வில வெளிறின சொண்டு, வலது கை சுண்டு விரல் நுனீல சுண்ணாம்பு இது தான் அந்த உருவம் . திருகணை இல்லாட்டி சீலைத்தலைப்பை சுத்தி தலையில வைச்சிட்டு மேல கடகத்தை வைப்பினம. Head Balance எடுக்ககிறதுக்கு வைச்ச கடகத்தை மேல ஒரு எத்து எத்திப்போட்டு தோளை குலுக்கி இறங்கிற கடகத்தின்டை Centre of gravity ஐ சரியா பாத்து உச்சீல இறக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கிவினம். ஒரு கை கடகத்தை பிடிக்க மற்றது சும்மா வெத்திலை வாய்க்கு சுண்ணாம்பு தீத்திக் கொண்டு இருக்கும். சத்தியமாச் சொல்லுறன் இடை பெருத்த எந்த ஆச்சியையம் அப்ப காண ஏலாது. வித்துக் கொண்டு போய் தலையின்டை சுமை குறைய அகண்ட கடகத்தை அந்த ஒடுங்கின இடுப்புக்கு மாத்தி கொண்டு வீட்டை போவினம் . . அதோட seasonal ஆச்சி மாரும் இருக்கினம் , மாசீல பனங்கிழங்கு , வைகாசீல பாலைப்பழம் , ஆவணீல மாம்பழம் , புரட்டாதீல பனங்காய் பணியாரம் , ஐப்பசீல நாவல் பழம் , கார்த்திகையில விளாம்பழம் எண்டு part time வேலை செய்யிற ஆச்சிகள் இவை. வீட்டில ஏதாவது வேலைக்கும் முதலே சொல்லி வைச்சா இரண்டு ஆச்சி மார் வருவினம் . மாசம் மாசம் மாவிடிச்சு நெல்லுக்குத்த , விசேசங்களுக்கு பலகாரம் சுட , சமைக்க எண்டு பல குறூப்பா இருப்பினம் . வெத்திலை கூறு, இரண்டு நேரம் பிளேன்ரீ , மத்தியானம் மரக்கறி சாப்பாடு முடிஞ்சு போகேக்க காசோட சுட்ட பலகாரம் இல்லாட்டி மிஞ்சின சோறும் கறியும் கட்டிக்குடுக்க வேண்டாம் எண்டு சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவினம் . நாங்கள் ஆச்சி எண்டு கூப்பிட்டாலும் இவை அவ்வளவு oldies இல்லை . ஐம்பதை எட்டிற வயசு . பத்து பதினைஞ்சு வயசு வித்தியாசத்தில கட்டினவர் அநேமா குடிச்சே போய் சேந்திருப்பார் . கரைசேக்க இரண்டு குமர் , சொன்னா கேக்காத கழிசறை இரண்டு , கட்டினதைப் பெத்த உண்மையான கிழவி ஒண்டு , எண்டு எல்லாத்தையும் இவை தான் பா(மே)க்கிறவை.வீட்டு இறுக்கம் இவையில கொஞ்சம் வெளீலேயும் தெரியும். எல்லாப் பள்ளிக்கூட வாசலிலும் கடகம் ஒண்டோட ஒரு ஆச்சி மார் இருந்தவை. பரியோவானில பள்ளிக்கூட நேரம் எவருக்கும் போய் வர அனுமதி இல்லாத strict ஆன principal மார் காலத்திலும் , ஐஸ்கிறீம் சிவகுருக்கும் கச்சான் ஆச்சிக்கும் விசேட பாஸ் இருந்தது. தண்ணி டாங்குக்கு கீழை interval time ஆச்சி சேவிஸ் நடக்கும் . கச்சான் , சோளம் , மாங்காய் , பினாட்டு, பட்டுப்புளி எண்டு கட்டி கொண்டந்து வைச்சு விப்பா . ஆச்சிட்டை கூட்டமாப் போய் தள்ளி விழுத்தீட்டு களவெடுக்கிறதும் நடக்கிறது , அவவும் கோவம் வந்தா கடகத்தை மூடி வைச்சிட்டு சனம் குறைய திருப்பியும் விக்கத் தொடங்குவா , ஒரு நாளும் complain பண்ண மாட்டா. எல்லாரிட்டை favorite ஆகவும் அதேபோல் அப்பப்ப அம்மாட்டை பேச்சு வாங்கவும் பல வீட்டில ஒரு ஆச்சி இருந்தவ. இவைக்கு வேலையே வெளி ஆச்சிமார் வந்தா அவயை மேக்கிறது தான். வீட்டை இருந்த ஆச்சி மாருக்கும் வீட்டுக்கு வாற ஆச்சி மாருக்கும் நடக்கிற கதையை வைச்சு 4 வருச episodes சீரியலே எடுக்கலாம் . வேலை முடிச்ச ஆச்சி சில்லாலை பஸ்ஸில ஏற, மணியண்ணை ரைட் எண்ட பயணம் மீண்டும் தொடர்ந்தது. எல்லாருக்கும் வீட்டு ஆச்சியோ வெளி ஆச்சியோ , ஆச்சி ஒரு special தான் . ஆச்சி எண்டது உருவப் பெயர் அல்ல உருவகப் பெயர், உணர்வுகளின்.. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.