Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

seeman-introduces-234-candidates  
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

16151302272027.jpg

2010ல் ஆரம்பித்த பயணம்

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய சீமான், "அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது" எனக் கூறினார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

16151306092027.jpg

16151306692027.png

16151307122027.png

16151307622027.png

16151308252027.png

16151308762027.png

16151309392027.png

16151309882027.png

16151310322027.png

16151310922027.png

16151311342027.png

16151311722027.png

16151312122027.png

16151312682027.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

2 hours ago, zuma said:

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

முழு வீடியோவையும் பார்த்தால் விடைகிடைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி தோல்விக்கப்பால் இத்தனை ஆயிரம் மக்களை ஒழுங்கமைத்ததற்காகவே பாராட்டணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட கொள்கையை காப்பி அடிக்கிறாங்க கேரளா : கிண்டலடித்த சீமான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், எடுத்துள்ள வியூகத்தைப் பார்க்க...

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்.... திண்டாடப் போகுது போலை கிடக்கு. 

Link to comment
Share on other sites

சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

1 hour ago, இசைக்கலைஞன் said:

சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. 

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

Link to comment
Share on other sites

33 minutes ago, Kapithan said:

இப்படி உண்மையை எழுதக்கூடாது 

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

ஐயா நீங்கள், நான் எழுதியவற்றில்  எது சேறடிப்பு என்று சுட்டிக்காட்டினால், தகுந்த விளக்கம் அளிக்கப்படும். உண்மைகளை நீங்கள் சேறடிப்பு என்று சொன்னால் அதற்க்கு யாம் பொறுப்பு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, zuma said:

ஐயா நீங்கள், நான் எழுதியவற்றில்  எது சேறடிப்பு என்று சுட்டிக்காட்டினால், தகுந்த விளக்கம் அளிக்கப்படும். உண்மைகளை நீங்கள் சேறடிப்பு என்று சொன்னால் அதற்க்கு யாம் பொறுப்பு அல்ல.

வாசிப்பவர்கள் ஒன்றும் சிறுவர்கள் அல்லவே... 😂

Link to comment
Share on other sites

4 hours ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

1) சமஸ்கிருதம்: தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் கோயில்கள் உள்ளன. அங்கே ஒரு ஐயர் சமஸ்கிருத்த்தில் ஓதினால், தலைதெறிக்க வெளியே ஓடுதல் முறையல்ல. 😁

2) பெரியார் வழிகாட்டி. ஏனெனில் தமிழக உரிமைகள் சிலவற்றுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆனால் அதே சமயம் அவர் ஒரு வந்து ஏறிய பரம்பரையில் வந்தவர்தான். நாளடைவில், நாவற்குழியில் வந்து ஏறிய சிங்களவர் கூட வந்தேறிகள் எனவே அழைக்கப்படுவார்கள். குடிவரவாளர்களுக்கும், வந்தேறிகளுக்கும் வேறுபாடு உண்டு!

3) ச சிகலா அம்மையார் சிறைத்தண்டனை முடித்து வந்துவிட்டார். ஆகையால் அவர் சாதாரணமான ஒரு மனிதரே! அவரை சென்று சந்திப்பதில் தவறில்லை. தவறென நீங்கள் வாதாடும் பட்சத்தில், அது ஒருவகை நவீன தீண்டாமை என கருத இடமுண்டு.

4) திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதைப் பேசுவதே அருவருப்பானது.

5) தமிழ்நாட்டில் பாதி பேர் தமிழர் இல்லை என்பது எந்தக் கணக்கெடுப்பில் வந்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வாறது வந்து ஒருவரியில சீமான் கெட்டவன் என்று எழுதிப் போட்டு ஓடிர்ரது... ஏதோ அம்பது வருசமா சீமான் கட்சி தமிழ் நாட்ட ஆண்டு நாசமாக்கி ஓய்ஞ்சு போய் கிடக்குற மாதிரி கதை விடுறாங்க.. கேக்குறவன் கேனையன் என்டா எரும மாடு ஏரோப் பிளேன் ஓடுமாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சும்மா வானது வந்து ஒருவரியில சீமான் கெட்டவன் என்று ஒரு வரியில எழுதிப் போட்டு ஓடிர்ரது... ஏதோ அம்பது வருசமா சீமான் கட்சி தமிழ் நாட்ட ஆண்டு நாசமாக்கி ஓய்ஞ்சு போய் கிடக்குற மாதிரி கதை விடுறாங்க.. கேக்குறவன் கேனையன் என்டா எரும மாடு ஏரோப் பிளேன் ஓடுமாம்..

ஐம்பது வருஷத்தில தமிழ்நாடு நாசமாகியிருக்கா? வளர்ச்சி அடைஞ்சிருக்கா?

ஒவ்வொரு தசாப்தத்திலும் வந்த ஒவ்வொரு படத்தையாவது பார்த்து சொல்லுங்கையா!

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஐம்பது வருஷத்தில தமிழ்நாடு நாசமாகியிருக்கா? வளர்ச்சி அடைஞ்சிருக்கா?

ஒவ்வொரு தசாப்தத்திலும் வந்த ஒவ்வொரு படத்தையாவது பார்த்து சொல்லுங்கையா!

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

வளர்ச்சி அடைஞ்சிருக்கு தலைவரே! .ஆனால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது  தமிழ் அழிந்து கொண்டிருக்கு......சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இடமில்லை தலைவா  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.

சீமான் முன்னேற்றிக்கொண்டிருக்கின்றார். இன்னும் ஆட்சியே அமைக்கவில்லை. அதற்குள் இவ்வளவு பதட்டங்கள் ஏன் தங்களுக்கு?

அவர் தவறு செய்தால்  முதலில் தட்டிக்கேட்பவர்கள் நாங்களாகத்தானிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர்.

spacer.png

16 minutes ago, விசுகு said:

தூரம் அதிகமில்லை

spacer.png

விசுகு ஐயா, யதார்த்தமும் கனவும் ஒன்றாக கலந்த கலவை !

Link to comment
Share on other sites

நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம். இதோ அரசியல் விற்பன்னர் ரவீந்திரன் துரைசாமி சொல்லக் கேட்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

spacer.png

spacer.png

இந்த கேலிச்சித்திர விளையாட்டு என்னுடன் வேண்டாம் கிருபன். இதுவே கடைசியும் முதலுமாக இருக்கட்டும் 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

விசுகு ஜ‌யா இது முற்றிலும் த‌ப்பான‌ பார்வை ?

பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் வேண்டின‌ ஓட்டை விட‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக்க‌ ஓட்டு கிடைக்கும்  , பொறுத்து இருந்து பாருங்கோ 

க‌ல்யாண‌சுந்த‌ர‌மோ ராஜீவ் காந்தி க‌ட்சியை விட்டு வெளி ஏற்றிய‌ போது க‌ட்சிக்குள் சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்த‌ன‌ ,

பின்னைய‌ நாட்க‌ளில் அவ‌ர்க‌ள்    நாஞ்சில் சம்பத்த‌ மிஞ்சும் அளவுக்கு அவ‌ர்க‌ளின் செய‌ல் பாடு இருந்திச்சு 

ராஜிவ்காந்தி என்ற‌ அறிவுச்செல்வ‌னிட‌ம் ஆர‌ம்ப‌த்தில் ஒரு திற‌மையும்  இல்லை ஊட‌க‌ விவாத‌த்தில் கூட‌  ப‌ல‌த‌ட‌வை சுத‌ப்பி அடிச்ச‌வ‌ர் , மேடையில்  த‌ன்னை ஏற்ற‌ வேண்டாம் த‌ன‌க்கு பேச‌ வ‌ராது என்று ப‌ல‌ புல‌ம்ப‌ல் பின்னாளில் அண்ண‌ன் சீமான் கூடுத்த‌ ஊக்க‌த்தால் கொஞ்ச‌ம் வ‌ள‌ந்து அண்ண‌ன் சீமானுக்கே பின்னால் குத்த‌ வெளிக்கிட்ட‌வ‌ர் 

இப்போது ப‌ல‌ரும் சொல்லுவ‌து இந்த‌ ம‌க்கா பிராடுக‌ளை அண்ண‌ன் சீமான் க‌ட்சியை விட்டு நீக்கின‌தில் த‌ப்பே இல்லை என்று ?

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் நோகாம‌ல் நொங்கு சாப்பிட‌ கூடிய‌வ‌ர் , இப்போது ஆதிமுக்காவில் சேர்ந்து எவ‌ள‌வோ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திக்கிறார் ?

க‌ட்சியை யாரும் சிதைக்க‌ வில்லை க‌ட்சி முன்பை போல‌ இப்ப‌வும் வீறு ந‌டை  போடுது?

தேர்த‌ல் முடிவோடு க‌ல்யான‌ சுந்த‌ர‌த்தையும் ராஜிவ் காந்தியை எந்த‌ ஊட‌க‌த்திலும் பார்க்க‌ முடியாது , 

திராவிட‌ க‌ட்சிக‌ளே இவ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி போடுவின‌ம் ?

பெரும் இளைஞ‌ர் ப‌டை அண்ண‌ன் சீமான் பின்னால் ,

முன்பை விட‌ க‌ட்சி வ‌ள‌ந்திட்டு இது ப‌ல‌ருக்கு வெளிப்ப‌டையாய் தெரிந்த‌ ஒன்று ?

ஆனால் திராவிட‌ம் இப்ப‌வே ப‌ல‌ மிர‌ட்ட‌ல்க‌ள் விட‌ தொட‌ங்கிட்டின‌ம் , 

திராவிட‌ ஊட‌க‌ங்க‌ளில் யாரையாவ‌து கூப்பிட்டு சீமானை ப‌ற்றி புல‌ம்பும் ப‌டியா பேட்டி எடுத்து வெளியிடுன‌ம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இசைக்கலைஞன் said:

நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம். இதோ அரசியல் விற்பன்னர் ரவீந்திரன் துரைசாமி சொல்லக் கேட்போம்.

https://youtu.be/E3eVWo_0pUk

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 7ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் ப‌ஞ்சாப் வெற்றி என‌ ந‌டுவ‌ர் தெரிவித்துள்ளார் ம‌ழை பெய்த‌தால் ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெற்றி............... 
    • நான் நேற்று விடுதலை பார்த்தேன். வெற்றிமாறனின் இன்னுமொரு கனதியான, ஒவ்வொரு காட்சியும் அதன் உச்ச செலுமையுடன் எடுக்கப்பட்ட, தரமான ஒரு தமிழ் படம். அதிகாரத்துக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடும் சமூகத்தின் குரலாகவும் அதை ஒடுக்க முனையும் அதிகாரத்தின் கோர முகமுமாக படம் அமைந்திருப்பதால் பல காட்சிகளை எம் போராட்ட வாழ்வுடன் connect பண்ண முடிகிறது.  சூரியால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றார்.. அதுவும் காதலியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் எனும் தவிப்பில் அவர் அங்கும் இங்கும் ஓடும் போது முழு audience சையும் அவர் பின்னால் ஓட வைக்கின்றார். விஜய் சேதுபதியின் காட்சிகள் குறைவு. ஆனால் வந்து போகும் அனைத்துக் காட்சிகளிலும் தன் உச்ச நடிப்பை தருகின்றார். இளையராஜாவின் இசை! படத்தின் ஆன்மாவை எமக்குள் நிரப்பும் இசை. இத்தனை வயதிலும் அவரால் எப்படி இப்படி இசையமைக்க முடிகிறது..! பின்னனி இசையை ஒரு album ஆகவே வெளிவிடலாம். வெற்றிமாறனின் உழைப்பும் ஒவ்வொரு காட்சிக்கு அவர் கொடுக்கும் நேர்த்தியும், detailing மும் அருமை! மகளையும் கூட்டிக் கொண்டு போய் பார்த்தோம். அதிகாரத்தின் brutality பற்றியும் அதை எம் மக்கள் இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் அவளுக்குள் கடத்த முடிந்தது.  கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
    • ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு இருக்கு..................ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெல்வ‌தா அம்பிய‌ர் அறிவிக்க‌ கூடும்...................
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா? ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.   ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொ டுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது. டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர்.   டிரம்ப் தரப்பு கூறுவது என்ன? ட்ரம்பின் வழக்கறிஞர் ஜோ டகோபினா, முன்னாள் அதிபர் ட்ரம்பால் "அரசியல் துன்புறுத்தல்" என்று அழைப்படுவதின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு உள்ளது என்று கூறுகிறார்.   டொனால்ட் ட்ரம்பை தவிர வேறு யாராவது இருந்தால் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்காது என்று சிபிஎஸ் ஊடகத்திடம் டகோபினா கூறியுள்ளார்.   டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சிக்கலான வழக்கு என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம் என்று எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.   "தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. ஆனால், அவர் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார். அவர் அரசியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.   ஜோ பைடன் கருத்து என்ன? வெள்ளை மாளிகையில் கூடியிருந்த நிருபர்கள் அதிபர் ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.   அதற்கு அவர், `டிரம்ப் தொடர்பாக என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை` என்று பதிலளித்துச் சென்றார்.   2016ஆம் ஆண்டில், ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சில ஊடகங்களைத் தொடர்புகொண்டு, 2006ஆம் ஆண்டில் ட்ரம்புடன் தனக்கு திருமண பந்தத்தைக் கடந்த தொடர்பு இருந்ததாகக் கூற முன்வந்தார்.   ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் மிச்செல் கோஹென் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறாமல் இருக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. ஆனால், மைக்கேல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.   மேலும் இது ட்ரம்பின் பொய்யான வணிகப் பதிவுகளுக்குச் சமம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், இது சிறிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றொரு குற்றத்திற்கான கருவியாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக மாறும்.   இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடலாம். ஏனென்றால், டேனியல்ஸுக்கு அவர் பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகக் கருதப்படும்.   டிரம்ப் மீதான பதவி நீக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட இது ஒரு தெளிவான வழக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.   டிரம்ப் கைதாகிறாரா? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணையை மேற்கொண்டு வரும் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் அலுவலகம், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில், டிரம்ப்பின் சரணடைதல் தொடர்பாக அவரது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஃப்லோரிடாவில் உள்ள டிரம்ப் திங்களன்று நியூயார்க் சென்று செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டதாக சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.   இந்த விவகாரத்தில் டிரம்ப் ஒத்துழைப்பை வழங்குவார் என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படாது.   டிரம்ப்பின் கைரேகை எடுக்கப்படுமா? கைகளில் விலங்கிடப்படுவாரா? மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக தனிப்பட்ட நுழைவாயில் வழியாக டிரம்ப் அனுமதிக்கப்படலாம்.   உள்ளே நுழைந்ததும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற நபர்களுக்கு செய்வதுபோன்றே டிரம்ப்பின் கை ரேகையும் எடுக்கப்படலாம்.   பொதுவாக இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கைவிலங்கிப்படுவது வழக்கம். ஆனால், ட்ரம்பிற்கு அவ்வாறு நடக்காமல் இருக்க அவரது வழக்கறிஞர்கள் குழு முயற்சிகளை மேற்கொள்ளும்.   விசாரணை எப்போது? டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்முதலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து டிரம்ப் குற்றம் செய்தாரா இல்லையா என்று கேட்கப்படும்.   நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் விசாரணை நடைபெறும் பகுதிகளில் கேமராக்கள் இடம்பெறலாம்.   விசாரணைக்குப் பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம்.   பொதுவாக Felony(பெருங்குற்றம்), Misdemeanor(சிறிய குற்றம்) என இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. சிறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்படும்.   ஒருவேளை, டிரம்ப் பெருங்குற்றத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.   அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா? தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.   என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.   1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.   எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும் https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/will-trump-be-arrested-123040100029_1.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.