Jump to content

இனி இளவேனில் காலம் - நிழலி


Recommended Posts

இனி இளவேனில் காலம் - நிழலி

வெயில் சரம் பிடித்து 
நிலம் நோக்கி
இறங்குகின்றது

வானை வகுந்தெடுத்து
பெரும் காற்று வீசுகின்றது
பனிக்காலத்தை பெயர்த்து
இளவேனில் விதைகளை
விதைத்து செல்கின்றது

வசந்தகாலத்தின் முதல்
பாடல்களை சுமந்த வண்ணம்
வனக் குருவிகள்
ஊர் திரும்புகின்றன
குளிர்காலம்
இராப்பாடகனின்
தொலைதூர குரலை போல்
மெல்ல தேய்கின்றது

முதன் முதலில்
குறுக்கு கட்டியவளின்
மார்பின் சரிவுகளில்
தேங்கிய நீர்த் துளி போல்
இலைகள் துளிர்க்க
தொடங்குகின்றன

வனம் இனி 
சூல் கொள்ளும்
சிற்றாறுகள் உறைவிலிருந்து
உருக்கொள்ளும்
முத்தங்களுக்கிடையில் பரிமாற
ரோசாக்கள் பூக்கத்தொடங்கும்

கட்டைக் கால் தாராக்கள்
குஞ்சுகளுடன் வெளிவரும்
ரக்கூன்கள் குட்டிகளுடன்
முற்றத்தில் வந்து நின்று
விடுப்பு பார்க்கும்
ஒரு நாளும்
கேட்காத பாடல்களை
சிறுகுருவிகள் பாட
புதிய காலைகள் மலரும்

பகல் ஒரு நீண்ட
ரயிலாக வளைந்து
செல்ல
இரவு கடைசிப் பயணியாக
வந்து அமரும்

காலம் மீண்டும்
தப்பாமல்
இளவேனில் காலத்தை
கொண்டுவரும்


(இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது)
 

Edited by நிழலி
ஒரு எழுத்து திருத்தப்பட்டது
  • Like 21
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனம் இனி சூல்  கொள்ளும்
சிற்றாறுகள் உறைவிலிருந்து
உருக்கொள்ளும்
முத்தங்களுக்கிடையில் பரிமாற
ரோசாக்கள் பூக்கத்தொடங்கும்

 

அழகான வர்ணனை பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

காலம் மீண்டும்
தப்பாமல்
இளவேனில் காலத்தை
கொண்டுவரும்

மொத்தத்தில் ஊரை மறந்திருக்கும் காலம் வருகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இது கவிதை.......எத்தனை கவிஞர்கள் எத்தனை முறை பாடியபோதும் வசந்தம் சலிப்பதில்லை......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவேனில் காலத்தை இனிமையாக காணப்போகிறோம் என்ற வர்ணனை இனிமையாக இருக்கின்றது. அருமையான வரிகள் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

முதன் முதலில்
குறுக்கு கட்டியவளின்
மார்பின் சரிவுகளில்
தேங்கிய நீர்த் துளி போல்
இலைகள் துளிர்க்க
தொடங்குகின்றன

கவிஞனின் கற்பனைக்குக் கரை இருக்கக் கூடாது என்று நம்புவர்களில் நானும் ஒருவன்...!

அரும்புகளை ஒப்பிட்ட விதம் அருமை...!

மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது...!

7 hours ago, நிழலி said:

இன்று நீண்ட நாட்களின் பின் வெப்பநிலை நேர் 11 இற்கு வருகின்றது. என் சிறு பூந்தோட்டத்தின் செடியில் இவ் வருத்தின் முதல் துளிர் தெரிகின்றது

எனது வீட்டு மாதுளம் மரத்தின்....முதலாவது இலையில்...மெல்லிய மஞ்சள் நிறம் தெரிகின்றது...!

மொழியால்...பிறப்பால் ஒரு இனமாகப் பிறந்து....வெவ்வேறு துருவங்களில் வாழ்கின்றோம் என்பதை நினைக்க நம்ப முடியாமல் உள்ளது! இது வளர்ச்சியா...அல்லது இழப்பா என்று முடிவு செய்ய இயலாமல் உள்ளது..!

அதே வேளை யாழ் என்னும் பாலம்...எத்தனை பேரை...நூல் அறுந்து போன பட்டங்கள் போல அல்லாது....எவ்வாறு இணைத்து வைத்திருக்கின்றது என்பதையிட்டு மிகவும் பெருமையாக உள்ளது...!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின்  இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இனி இளவேனில் காலம் -

உங்களுக்கு இளவேனில் காலம் எங்களுக்கு இலையுதிர்காலம் வரபோகின்றது ...அருமையான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍

Link to comment
Share on other sites

On 10/3/2021 at 10:19, நிலாமதி said:

வனம் இனி சூல்  கொள்ளும்
சிற்றாறுகள் உறைவிலிருந்து
உருக்கொள்ளும்
முத்தங்களுக்கிடையில் பரிமாற
ரோசாக்கள் பூக்கத்தொடங்கும்

 

அழகான வர்ணனை பாராட்டுக்கள் 

நன்றி நிலாமதி அக்கா. 

ஆரம்பத்தில் நான் 'சூழ்' என்று எழுதியிருந்தேன், ஆனால் நீங்கள் சரியாக அதை 'சூல்' என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். நான் இக் கவிதையை என் முகனூலில் பகிரும் போது நண்பரும் ஊடகவியலாளருமான விக்கினேஸ்வரன் இவ் எழுத்து பிழையை (சூழ் எனும் போது அர்த்தமும் பிழைக்கின்றது) குறிப்பிட்ட பின்னரே நான் உணர்ந்து கொண்டு திருத்தி விட்டேன்.

On 10/3/2021 at 10:25, ஈழப்பிரியன் said:

மொத்தத்தில் ஊரை மறந்திருக்கும் காலம் வருகிறது.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா

இளவேனில் காலம் ஊர் தொடர்பான பல நினைவுகளை கொண்டு வரவும் தயங்குவதில்லை. முக்கியாம பிள்ளைகள் ஊஞ்சல் ஆடும் காட்சி எப்பவும் என் சிறு வயது நினைவுகளை கொண்டு வருவன.

21 hours ago, suvy said:

கவிதை இது கவிதை.......எத்தனை கவிஞர்கள் எத்தனை முறை பாடியபோதும் வசந்தம் சலிப்பதில்லை......!  👍

உண்மை.. .இளவேனில் காலம் அப்பதான் தலையில் முழுகி முடித்து ஈரத்துவாயை தலையில் சுற்றி வந்து நிற்கும் இளம்பெண் போன்று அழகானதுது

21 hours ago, பசுவூர்க்கோபி said:

இளவேனில் காலத்தை இனிமையாக காணப்போகிறோம் என்ற வர்ணனை இனிமையாக இருக்கின்றது. அருமையான வரிகள் பாராட்டுக்கள்

நன்றி பசுவூர்கோபி. உங்களது கவிதைகளுக்கு நானும் ரசிகன்

17 hours ago, Kavallur Kanmani said:

ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின்  இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.

நன்றி அக்கா

நானும் ஜக்கெட் போடாமல் ஒரு மெல்லிய சுவற்றர் மட்டும் போட்டு காலாற வெளியில் சென்று நடந்து வந்தேன்.

 

10 hours ago, putthan said:

உங்களுக்கு இளவேனில் காலம் எங்களுக்கு இலையுதிர்காலம் வரபோகின்றது ...அருமையான கவிதை

நன்றி புத்தன்.

அங்கும் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்று நிறம்மாறி அழகாக காட்சி தருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவிதையில் இரண்டு இடத்தில் எழுத்துப் பிழை இருந்தது (சுழ்)சூல் மற்றும் இன்னும் ஒன்று திருத்த படாமலே இருக்கிறது..இறுதி வரிகளில் இவ் வருத்தின்(வருடத்தின்)நான் திருத்தி வாசித்து விட்டு போய் விட்டேன்.🌻👋🤭

Edited by யாயினி
Link to comment
Share on other sites

18 hours ago, புங்கையூரன் said:

கவிஞனின் கற்பனைக்குக் கரை இருக்கக் கூடாது என்று நம்புவர்களில் நானும் ஒருவன்...!

அரும்புகளை ஒப்பிட்ட விதம் அருமை...!

மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது...!

எனது வீட்டு மாதுளம் மரத்தின்....முதலாவது இலையில்...மெல்லிய மஞ்சள் நிறம் தெரிகின்றது...!

மொழியால்...பிறப்பால் ஒரு இனமாகப் பிறந்து....வெவ்வேறு துருவங்களில் வாழ்கின்றோம் என்பதை நினைக்க நம்ப முடியாமல் உள்ளது! இது வளர்ச்சியா...அல்லது இழப்பா என்று முடிவு செய்ய இயலாமல் உள்ளது..!

அதே வேளை யாழ் என்னும் பாலம்...எத்தனை பேரை...நூல் அறுந்து போன பட்டங்கள் போல அல்லாது....எவ்வாறு இணைத்து வைத்திருக்கின்றது என்பதையிட்டு மிகவும் பெருமையாக உள்ளது...!

எழுதத் தொடங்கும் போது எதைப்பற்றி எழுதப்போகின்றேன் என்ற கரு மட்டுமே மனதில் இருக்கும், வார்த்தைகளும் வரிகளும் அதன் போக்கில் இழுத்துச் சென்று எழுத வைக்கின்றன. முதன் முதலாக குறுக்கு கட்டியவள் என்ற படிமம், அது எழுதும் போது தானாக வந்த படிமம்.

மாதுளளையின் தளிரின் நிறத்தை மனசு அணுகின்றது. எவ்வளவு நாட்கள் அதைப் பார்த்து...!

நாம் வெவ்வேறு துருவங்களில் வாழக்கிடைத்ததன் பின்னாலும் எமக்கு தெரியாத ஒரு காரணம் இருக்கலாம். சில தசாப்தங்களின் பின் நாம் ஒரு பெரும் பொருளாதார பலமிக்க, நன்கு கற்ற, பல நுட்பங்கள் அறிந்த ஒரு இனமாக நாளை எழுவதற்காகத்தான் இன்று இப்படி சிதறுண்டு வாழ்கின்றோமோ என்று அடிக்கடி நினைப்பதுண்டு. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

மார்பின் மெல்லிய சாய்வுகளில்....நீர்த்துளி தங்கும் போது ...எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையிலேயே எனது இன்றைய பொழுது கழியப்போகின்றது

மாவுக்கட்டுடன் இன்றைய பொழுது கரையப்போகின்றது. 😁

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/3/2021 at 02:35, நிழலி said:

 

 

நன்றி புத்தன்.

அங்கும் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்று நிறம்மாறி அழகாக காட்சி தருமா?

இங்கும் உண்டு அதிகம் தலைநகர் கன்பராவில் இப்படியான காட்சிகளை காணலாம்,சிட்னி நகரமாயமாக்கப்பட்டமையால் குறைவு என சொல்லலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. உங்கள் அயல்தான் இந்தக் கவிதை எழுதிய வைத்ததோ ???

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.