Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிறக்குதனை விரித்து நாம் பறப்பதெப்போ

சுதந்திரமாய் நாமெம்மை உணர்வதெப்போ

சிந்தனைச் சிறகை ஒடித்து வைத்து

அடக்குமுறைக்குள் எமைச் சிறைப்பிடித்து

அழகாய்ப் பூட்டி வைத்துவிட்டார் ஆண்கள்

பெண்கள் இன்றி பேரண்டமும் இல்லை

உலகில் மனிதப் பெருக்கமும் இல்லை

மகிழ்வு கொள்ளவும் எதுவுமே இல்லை

மானிட வாழ்வில் பெருமையும் இல்லை   

உணர்வுக் குவியலின் உன்னதமும் அவள்

உறவைப் பிணைத்திடும் ஊக்கியும் அவளே

உயிர் காத்திடும் மருந்தும் அவளே

உலக மாந்தரின் உயிர்ப்பும் அவளே   

உணர்வுகள் தந்து உறவுகள் காக்க

தன்னைக் கரைத்து தவறுகள் மறந்து

சொந்தம் காக்க சொற்கள் குறைத்து

பந்தம் போற்றப் பலதும் துறந்து

உதிரம் தந்துயிர் தந்திடுவாள்

பெற்றவர்க்காகப் பெருமை துறந்து

மற்றவர்க்காக மனதைப் புதைத்து

கற்றிருந்தாலும் கலைகள் மறந்து

பற்றியிருக்கும் பணிகள் நிறைந்து

பார்த்திருக்கும் கண்கள் நிறைக்க

பாரங்கள் பலவும் சுமந்திடுவாள்

குடும்பங் காக்கும் இயந்திரமாய் அவள்  

தன்னிகரில்லா பெண்ணின் தாய்மை

தயங்காது  உழைத்திடும் அவளின் மேன்மை

திடமாய்க் கொண்டிடும் அவளின் வாய்மை

தேசங்கள் எங்கிலும் தெரிந்த உண்மை

ஆயினும் அவள் இன்றும் ஆணின் அடிமை

கனவுகளும் கற்பனைகளும் காட்சிகளாய் விரிவது பெண்மனம்

காரணங்கள் தேடி அலைவதும் கட்டுடைத்துப்  போவதும்

கொண்டாடி மகிழ்வதும் கொதித்து எழுவதும் அவளே

கண்டங்கள் தாண்டிய கற்பனைகளில் விரிவதும்

காட்சிகள் கொண்டு கனவாய் இசைபவளும் அவளே

திண்ணிய மனதுடன் திடமாய் இருப்பவள்

மற்றவர்களுக்காய் மயங்கியே மானமிழந்தே வாழ்கின்றாள்

பத்து மாதங்கள் பத்திரமாய்ப் பிள்ளைகளைச் சுமந்திடுவாள்

பாசத்துடன் வேடமேற்றுப் போற்றியும் வளர்த்திடுவாள்

பருவம் கடந்தபின்னும் பிறந்த குழந்தையாய்ப் பார்த்திடுவாள்

பேரன் பேர்த்தி கண்ட பின்னும் பிள்ளைகள் நலனை புறம் தள்ளி

சும்மா இருந்து சுகம் காண என்றும் அவளால் முடிவதில்லை

கொடிய விலங்குகள் சூழ நின்றிட அச்சம் இன்றியே 

கூட்டத்தின் தலைவியாய் குடும்பம் காத்தாள் அன்று  

கட்டியே போட்ட குடும்ப அமைப்பில் அத்தனை பேரிடம்

குட்டுகள் வாங்கியே குனிந்த தன் தலையை

நிமிர்த்தவும் அஞ்சிக் குனிந்தே வாழ்கின்றாள் இன்றும்

பெண்ணுக்காய் அவளின்றி மேன்மை கொண்டிட

அத்தனை பேருக்கும் அவள் வேண்டும் எனினும்

பொத்திப் பொத்தியே வீட்டினுள் வளர்க்கும் பெற்றோர்  

ஆணவம் கொண்டு அவளை அடக்கிடும் அறிவற்ற கணவன்

ஆதிக்கம் கொண்டே அவளை ஏய்த்திடும் பிள்ளைகள்

ஆராதிப்பதாய்ப் பூட்டி வைக்கும் உறவுகள் இப்படி

உலகம் முழுதும் பெண்ணை அடக்கிட நடிப்பவர் அதிகம்

உன்னால் முடியும் உணர்ந்துகொள் எல்லாம் முடியும் எழுந்து நில்

பெண்ணே உன் பலம் தெரியவிடாது உறவுகள் உன்னைச் சூழந்திடும்

மண்ணில் உன்னை மேன்மை கொள்ள விடாது உன்னைக் காத்திடும்

மாயப் பிம்பம் பலதும் காட்டி மயக்கம் கொள்ள வைத்திடும்

தேடித் தேடிக் கதைகள் சொல்லி தெரியாதவளாய் ஆக்கிடும்

கூடிக் கூடிக் கதைத்தே உன்னைக் குற்றுயிராயும் ஆக்கிடும்

பேதை என்று பேடியர் கூடப் பிதற்றித்திரிய வைத்திடும்

காமம் கொண்ட கண்கள் பலதும் முன்னும் பின்னும் பார்த்திடும்

பொறாமை கொண்டு பொருமியபடியே மண்ணில் புதைக்கக் காத்திடும்

ஆதலால் உன்னை திமிராய் நீ உணர்ந்து கொள் பெண்ணே

ஊனம் எதுவும் உன்னிடம் இல்லை உயிர்ப்புடன் நீ எழுந்திடு

எத்தனை பேரின் எள்ளல் கண்டும் ஏக்கம் துறந்து மீண்டிடு

உறவுகள் எல்லாம் உடன் வரமாட்டா உண்மை அதை உணர்ந்திடு

உயிர் வாழும் காலம் கொஞ்சம் உன்னை நீயும் அறிந்திடு

துணிவு கொண்டு துயர் கடந்து தூக்கம் கலைந்து எழுந்திடு

காலம் கடந்து எண்ணுவதெல்லாம் கானல் நீராய் ஆகிவிடும்

கவலை கொண்டே நீயும் இருந்தால் உன் கோலம் கூட மாறிவிடும்

கட்டிப்போட்ட கயிறுகள் அனைத்தும் நீயே அறுத்திட வேண்டுமடி

காலம் தானாய்க் கனிந்திடாது காத்திருப்பும் மீண்டிடாது   

காற்றாய் நீயும் மாறிவிடு கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகி

துயரங்கள் எல்லாம் தூசாய் மாற உன் நினைவுகள் மட்டும் போதாது

மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது

அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட

சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

 • Like 15
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னவொரு உணர்ச்சிமிகு & ஆவேச கவிதை, பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு,

யார் குனிந்து நிற்பது நாம் தான்😢, இதை தட்டி கேட்கவொரு ஆணினமில்லையா, கல்யாணமென்ற மாயையில் எம்மை வீழ்த்தி கட்டில் ஆட்சி புரிபது யார் யார் யார்???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நியாயமான ஆக்ரோஷமான வார்த்தைகள் . ஆனாலும் முன்பை விட சில அடக்குமுறைகள் விளங்க வைக்க பட்டு பல தடைகளை  விலக்கி இவற்றையெல்லாம் கடந்தும்  வாழ்கிறார்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே.

ராணித் தேனீக்கு உதவியாக ஆண் தேனீக்கள் இருப்பதுபோல மனிதரும் இருந்திருக்கலாம். 😀

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

கன காலத்திற்குப் பின்னர் கவிதாநிகழ்வு ஒன்றுக்குப் போன உணர்வு!

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்!!

பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும்; சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான்”

Link to comment
Share on other sites

Quote

மனம் என்னும் மாயக் குதிரையின் மகுடியில் நீயும் மயங்காது

அறிவின் ஆழம் தனைக் கடைந்து துணிவின் தூரம் தொட்டுவிட

சிந்தனை என்னும் சிறகை விரித்து சிகரம் தொடும் தூரம் வரை

பெண்ணே நீயும் தலை நிமிர்ந்து தடைகள் தாண்டிப் பறந்துவிடு

Swati Mohan - Wikipedia

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...!
புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...!

அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது!

அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண்  கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா?

இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்?

இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...!

கவிதை....அழகு..!

Edited by புங்கையூரன்
எழுத்துப் பிழை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, உடையார் said:

என்னவொரு உணர்ச்சிமிகு & ஆவேச கவிதை, பாராட்டுக்கள், நன்றி பகிர்வுக்கு,

யார் குனிந்து நிற்பது நாம் தான்😢, இதை தட்டி கேட்கவொரு ஆணினமில்லையா, கல்யாணமென்ற மாயையில் எம்மை வீழ்த்தி கட்டில் ஆட்சி புரிபது யார் யார் யார்???

அத்தனைக்கும் ஆண்கள் வீக் என்றுதானே அர்த்தம் 😂

19 hours ago, ஈழப்பிரியன் said:

ஆவதும் பெண்ணாலே

அழிவதும் பெண்ணாலே.

அதற்கும் ஆண்தானே காரணம் அண்ணா. அதிக இடம் கொடுப்பது. கேட்கவேண்டிய நேரம் வாய் மூடி இருப்பது என்று.. ... 

13 hours ago, நிலாமதி said:

நியாயமான ஆக்ரோஷமான வார்த்தைகள் . ஆனாலும் முன்பை விட சில அடக்குமுறைகள் விளங்க வைக்க பட்டு பல தடைகளை  விலக்கி இவற்றையெல்லாம் கடந்தும்  வாழ்கிறார்கள் 

இருந்தாலும் இன்னும் கிராமங்களில் மட்டுமன்றி மேற்குலக நாடுகளில் கூடப் பெண்கள் பல அடக்குமுறைக்குள் தான் இருக்கின்றனர்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

ராணித் தேனீக்கு உதவியாக ஆண் தேனீக்கள் இருப்பதுபோல மனிதரும் இருந்திருக்கலாம். 😀

கன காலத்திற்குப் பின்னர் கவிதாநிகழ்வு ஒன்றுக்குப் போன உணர்வு!

ஆசான் இப்படிச் சொல்லியிருக்கின்றார்!!

பெண்ணுக்கு எல்லாமே வேண்டும். ஆண் முரடனாகவும் இருக்கவேண்டும்; சொன்னபேச்சும் கேட்கவேண்டும். கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; புகழும் வேண்டும். ஒன்று குறைந்தாலும் மனக்குறைதான்”

வசிட்டரின் வாயால் வாழ்த்து. நன்றி 😀

பெண்கள் அப்படி ஆசைப்பட்டதனால்த்தான் ஆண்கள் இந்தளவாவது முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

11 hours ago, nunavilan said:

Swati Mohan - Wikipedia

இலட்சத்தில் ஒருவரை வைத்து பெண்ணினத்தின் சுதந்திரத்தை வரையறுக்க முடியாது நுணா

10 hours ago, புங்கையூரன் said:

பூவாக இருக்கும் வரை தான், அவள் ஒரு பெண்ணாக இருப்பாள்...!
புயலாக மாறும் போது, பெண்மை அவளிடமிருந்து விடை பெற்று விடும்...!

அர்த்த நாரீஸ்வரம்.....அது தான் முழு உலகத்துக்கும் நல்லது!

அது சரி....அமெரிக்க உப ஜனாதிபதி கமலா Harris அவர்களின் காரியாலயத்தில் ஒரு ஆண்  கூட இல்லையாமே? இது செருக்கு இல்லையா?

இது ஒரு ஆணின் காரியாலத்தில்,நடந்திருந்தால் அவர் என்ன பாடு படுத்தப் பட்டிருப்பார்?

இருந்தாலும்...ஆண்கள் மனது பெரிய மனது தான்...!

கவிதை....அழகு..!

இதுதானே முதற் தடவை ஆண்கள் இல்லாத காரியாலயம் .. ............செருக்கும் இல்லை என்றால் பெண்ணை என்ன பாடு படுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......!

நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப்  பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத  அடிமையாய்  வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ !  😎

 • Like 2
 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

Quote

இலட்சத்தில் ஒருவரை வைத்து பெண்ணினத்தின் சுதந்திரத்தை வரையறுக்க முடியாது நுணா

அடி எடுத்து தந்தால் அடியையொற்றி போக வேண்டும். stop complaining🤣

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
 
Edited by குமாரசாமி
 • Like 1
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்கும் ஆண்தானே காரணம் அண்ணா. அதிக இடம் கொடுப்பது. கேட்கவேண்டிய நேரம் வாய் மூடி இருப்பது என்று.. ... 

இப்படிப்பட்ட எண்ணம் மாற வேண்டும், சுயமாக பெண்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், இப்பவும் ஆண்களில் தானே குறை கூறுகின்றீர்கள்😄

என்னிடம் கேட்கமல் என் கடனட்டையைப்பாவித்து மனைவி பிள்ளைகளுடன் உதவியுடன் ஒன் லைனில் சாமான் வாங்கி குவிக்க நொந்து போய் அந்த கடனை அடைக்கும் எனக்குதான் பெண் சுதந்திரத்தின் வலி தெரியும்  😢

 • Like 2
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
 
தெய்வமே ........!   🙏

Samantha Vijay GIF - Samantha Vijay Thalapathy - Discover & Share GIFs | Samantha, Gif, Girly facts

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 08:37, suvy said:

நல்ல கருத்துக்கள் உடைய கவிதை சகோதரி.......!

நீங்கள் தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களைப்  பிரித்துப் பார்க்கின்றீர்கள். ஆண்கள் ஒருபோதும் அப்படி இருப்பதில்லை.நீங்கள் இவ்வளவு சுதந்திரமாக எழுதுவதற்கும் ஒரு ஆண்தானே துணையாக இருக்கின்றார் என்பதை மறுக்க முடியுமா. நாங்கள் ஒருபோதும் பெண்களை பிரித்துப் பார்ப்பதில்லை. நாங்களே விரும்பாவிடினும் அவர்கள் காலால் இட்ட வேலையை சிரமேற்கொண்டு செய்து முடிக்கின்றோம்.எங்களது உயிரையே அவர்களிடம் தந்து விட்டு அந்த பாவத்திற்காக ஆயுள் முழுதும் விலங்கில்லாத  அடிமையாய்  வாழ்ந்து சாகிறோம்.நாங்கள் ரொம்ப பாவம் தாயே, கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்........ !  😎

நல்ல ஆண்களைப் போற்றியும் ஒரு கவிதை எழுதிவிடுகிறேன் 😀

நன்றி அண்ணா கருத்துக்கு

On 16/3/2021 at 10:04, nunavilan said:

அடி எடுத்து தந்தால் அடியையொற்றி போக வேண்டும். stop complaining🤣

எல்லோரும் ஒரே வழியே எப்படிப் போவது? ஒவ்வொருவரின் இயல்புகள், தேவைகள் வே றுவேறானவையல்லவா 

எனக்கு Pfizer ஊசி போட்டதுக்குப் பிறகு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அனைத்து  உறவுகளின் பதிவுக்கும் மூன்று நாட்கள் செல்ல வந்து கருத்தை எழுதுகிறேன். குறை நினைக்க வேண்டாம்.

முக்கியமாய் இதில் குமாரசாமி எழுதியதை பார்த்தே களை தொட்டுட்டுது.🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு Pfizer ஊசி போட்டதுக்குப் பிறகு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை. அனைத்து  உறவுகளின் பதிவுக்கும் மூன்று நாட்கள் செல்ல வந்து கருத்தை எழுதுகிறேன். குறை நினைக்க வேண்டாம்

ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள்  ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது!

போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. 

அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது.

முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 22:56, குமாரசாமி said:
புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு என்ன?
புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள். புத்தியுள்ளவள் அவனை ராஜாவாக்கி ராணியாக வாழுகிறாள்.
புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி கோழையுடன் வாழுவாள். புத்தியுள்ள பெண் அவனுக்கு சுதந்திரம் அழித்து, தன்னிடம் இருக்கும் தைரியத்தையும் மகிழ்ச்சியையும் அவனுடன் பங்கிட்டு தைரியசாலி கணவனுடன் தைரியமாக வாழுவாள்.
புத்தியில்லாதவள் என் வீட்டில் நான் அப்படி வாழ்ந்தேன் இப்படி வாழ்ந்தேன் என்று முடிந்து போனதை கணக்கிட்டு கையில் இருப்பதை ஏற்றுக் கொள்ள மறுத்து வாழ்கிறாள். புத்தியுள்ள பெண் எதைக் கையில் கொடுத்தாலும் அதை அழகாக்க முயற்சிக்கிறாள். இடிந்து போன வீட்டை இவள் கட்டுகிறாள். நன்றாக இருக்கும் வீட்டையும் அவள் சிதைத்துவிடுகிறாள்.
புத்தியுள்ள பெண் வருமானத்திற்குள் செலவு செய்து மீதம் எடுக்கிறாள். புத்தியில்லாதவள் ஆடம்பரத்திற்கு வாழ்க்கையை அடகு வைத்து கண்ணீர் சிந்துவாள்.
புத்தியுள்ள பெண் நிதானமாகவே செயல்படுவாள். கண்ணாடி குவளையை கையில் ஏந்தி நின்றாலும் உடைத்து விட மாட்டாள். புத்தியில்லாதவள் பொன் குடத்தையும் உடைத்து விடுவாள். நிதானம் இவர்களின் அடையாளம்.
புத்தியுள்ள பெண் பகைவரை சம்பாதிக்க விரும்ப மாட்டாள். 
புத்தியில்லாதவளுக்கோ அண்டை வீட்டுக் காரரும் எதிராளிகளே.
புத்தியுள்ள பெண் வீட்டாருக்கு ஆகாரம் அளிக்கிறாள், வேலைக்காரர்களுக்கு படி அளக்கிறாள். புத்தியில்லாத பெண் வேலைக்காரியாகவே வாழ்ந்து முடித்து விடுவாள்.
புத்தியுள்ள பெண் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அழகாக்கி அழகான குடும்பத்தை சமூகத்தில் முன் நிறுத்துகிறாள். புத்தியில்லாதவளுக்கு சுத்தம், தூய்மை அழகு பற்றிய அக்கறை இருப்பதில்லை.
புத்தியுள்ள பெண் தனக்கானதை எடுத்துக் கொள்கிறாள். புத்தியில்லாதவள் என் கனவிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என ஆதங்கப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் திருமணம் என்னும் ஒரு நாள் கூத்திற்காக வேலையை இராஜினாமா செய்வதில்லை. புத்தியில்லாதவள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட காரணத்திற்காகவே வேலையை விட்டு விட்டு ஆறு மாதம் கழித்து வேலை தேடி அழைகிறாள்.
புத்தியுள்ள பெண் உருவாக்குகிறாள். புத்தியில்லாதவள் அழித்து போடுகிறாள்.
புத்தியுள்ள பெண் தன் மக்களை கொண்டாடுகிறாள். புத்தியில்லாதவள் நீ எல்லாம் எங்கே உருப்பட போற? என்று தன் மக்களை சபித்துக் கொண்டே இருப்பாள்.
புத்தியுள்ள பெண் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினரின் தவறுகளை சுட்டி காட்ட மாட்டாள். புத்தியில்லாதவள் அனைவரின் முன்னிலையிலும் குழந்தையை திட்டுவார், அசிங்கப்படுத்துவார்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினரை சரி செய்வாள். புத்தியில்லாதவள் குடும்பம் தான் சமூகம் என்ற அறிவில்லாமல் இருப்பாள்.
புத்தியுள்ள பெண் குடும்பத்தினருக்கும் உடன் இருப்பவர்களுக்கும் தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிப்பாள். புத்தியில்லாத பெண்ணுடன் இருப்பவர்களுக்கு இருட்டு கூட பயம் தான்.
புத்தியுள்ள பெண் சேகரிப்பாள், பாதுகாப்பாள், பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் தொலைப்பாள், உடைப்பாள் தூக்கி எறிவாள்.
சுறுசுறுப்பு புத்தியுள்ள பெண்ணின் மற்றொரு அடையாளம். புத்தியில்லாத பெண்ணின் வீட்டின் அடையாளம் சிலந்தி கூடுகளே.
புத்தியுள்ள பெண் இந்த வாழ்க்கை மிகச்சிறந்த வாழ்க்கை என நம்புகிறாள். புத்தியில்லாதவள் பிறருடன் ஒப்பிட்டு பார்க்கிறாள்.
புத்தியுள்ள பெண் உட்கார்ந்து வரவு செலவு கணக்கை கணக்கிடுகிறாள். புத்தியில்லாதவள் கணக்கிட்டு பார்க்கவும் சோம்பேறித்தனப்படுகிறாள்.
புத்தியுள்ள பெண் எல்லாருடனும் ஒரு சிறிய இடைவெளியை கடைபிடிக்கிறாள் தன்னை பாதுகாக்கிறாள். புத்தியில்லாதவள் எல்லாரையும் தன் முதல் வட்டத்திற்குள் வந்து செல்ல அனுமதிக்கிறாள்.
புத்தியுள்ள பெண் "நோ" சொல்ல தைரியம் கொண்டிருக்கிறாள். புத்தியில்லாத பெண் தன்னை கெட்டவளாக நினைத்துவிடுவார்களோ என்று அச்சம் கொள்கிறாள்.
புத்தியில்லாதவள் குற்றப்படுத்திக் கொண்டே இருப்பாள். புத்தியுள்ளவளின் கண்களுக்கு தவறு செய்தல் மனித இயல்பு என்பது தெரியும்.
புத்தியில்லாதவள் என்றோ செய்த தவறை இன்றும் நினைவில் வைத்து காயப்படுத்துவாள். மனதை காயப்படுத்துவதில் இவளுக்கு ஒரு மகிழ்ச்சி. புத்தியுள்ள பெண் எப்பொழுதுமே பாராட்டுபவளாக தான் இருப்பாள்.
புத்தியுள்ளவள் தவறை கடிந்து கொள்வாள். புத்தியில்லாதவள் தவறுக்கு ஒத்துழைப்பு தருவாள்.
புத்தியுள்ள பெண் எதையும் இரட்டிப்பு ஆக்குவாள். புத்தியில்லாதவள் எதை செய்தாலும் நஷ்டம் தான் முடிவு.
புத்தியுள்ள பெண் குழந்தைகளையும் கனப்படுத்துவாள், உயர்வாக எண்ணுவாள். புத்தியில்லாதவளுக்கோ 80 வயது பெரியவர்களின் அருமை தெரிவதில்லை. அவர்களின் முதுமையை கொண்டாடாமல் உதாசினப்படுத்துவாள்.
புத்தியுள்ள பெண் மீதம் எடுக்க சமைப்பாள். புத்தியில்லாதவளோ மூன்றுக்கு பதில் ஏழு பேர் வந்து விட்டால் செய்வதறியாது திகைப்பாள்.
புத்தியுள்ள பெண் பத்திரப்படுத்துவாள். புத்தியில்லாதவள் எப்பொழுதும் அதை எங்கே வைத்தோம் இதை எங்கே வைத்தோம் என தேடிக் கொண்டே இருப்பாள். தேடுவதிலே பாதி நேரத்தை விரயம் செய்வாள்.
புத்தியுள்ள பெண் மனிதர்களின் மேன்மையை உணர்ந்தவள். புத்தியில்லாதவள் குடும்பத்தினரையும் அண்ட விடுவதில்லை…
புத்தியுள்ளவளின் முகம் எந்த சூழ்நிலையிலும் புன்னகைக்கும். புத்தியில்லாதவளின் முகத்தில் எப்பொழுதும் ஒரு எரிச்சல் இருக்க தான் செய்கிறது… 
 
உப்பிடிக்க சொல்லிச் சொல்லியே பெண்களை முட்டாள்களாக்கி தங்கள் காரியங்களைச் சாதிக்கும் ஆண்கள் புத்திசாலிகள் தான்.

On 17/3/2021 at 20:30, கிருபன் said:

ஓஹோ.. நீங்கள் குருதி உறைந்துவிடும் என்று பயந்த ஆட்கள்..! தடுப்பூசி சும்மா களைப்பை தருகிற மாதிரி இருக்கும். ஆனால் எல்லாம் இரண்டொரு நாளில் சரியாகிவிடும்.

ஐரோப்பிய யூனியனில் இருக்கும் சில நாடுகள்  ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா குருதி உறைவில் பிரச்சினை தரும் என்று சொன்னதும் சிலர் பயந்து அதனைப் போடாமல் no show ஆகியதால் எனக்கு ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி போட வாய்ப்பு கிடைத்தது!

போய்க் குத்திவிட்டு வந்தேன். அன்று ஏதும் செய்யவில்லை. 

அவர்கள் தந்த பிரசுரத்தில் இருந்ததில் side effects இல் ஒன்றிரண்டு அடுத்தநாள் வந்தது.

முதலில் உடல் சில்லென்று சில மணிநேரம் குளிர்ந்த மாதிரி இருந்தது. பின்னர் சாடையாக சூடாகவும் அடிச்சுப் போட்ட மாதிரியும் இருந்தது. ஊசி போட்ட இடத்தில் நோ இருந்தது. ஆனால் 24 மணி நேரத்திலேயே எல்லாம் நோமலாகிவிட்டது!😀

எனக்கு மூன்று நாட்கள் குளிர் காய்ச்சலும் நான்காம் நாள் முதன் முதல் என் நினைவு தெரிந்து சூடான காய்ச்சலும் வந்து ஐந்தாம் நாள்த்தான் ஓக்கேயானது. கோவிட் தொற்று ஏற்பட்ட போது கூட  அத்தனை கடினமாக உணரவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு மூன்று நாட்கள் குளிர் காய்ச்சலும் நான்காம் நாள் முதன் முதல் என் நினைவு தெரிந்து சூடான காய்ச்சலும் வந்து ஐந்தாம் நாள்த்தான் ஓக்கேயானது. கோவிட் தொற்று ஏற்பட்ட போது கூட  அத்தனை கடினமாக உணரவில்லை.

என்ன இது புதுக்கதையாய் கிடக்கு!!!!!  உங்களுக்கு எப்ப கொரோனா வந்தது? சொல்லவேயில்லை? :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உப்பிடிக்க சொல்லிச் சொல்லியே பெண்களை முட்டாள்களாக்கி தங்கள் காரியங்களைச் சாதிக்கும் ஆண்கள் புத்திசாலிகள் தான்.

பெண்கள் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் மாதிரி.😀
எதை ஆயுதமாக எடுத்தால் வெற்றிநடை போடலாம் என்பதை தெரிந்து வைத்து அவ்வப்போது மேடையேற்றுவார்கள்.😂
சாதி அரசியல்,இனவாத அரசியல்,மதவாத அரசியல்,நிறவாத அரசியல் என அரசியல்வாதிகள் ஒரு டையரி வைத்திருப்பார்கள். அது போல் மாண்புமிகு மதிப்புக்குரிய பெண்களும் பெண்ணடிமை எனும் ஒரு சொல்லை வைத்து காலத்தை ஓட்டுவார்கள்.😷

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

என்ன இது புதுக்கதையாய் கிடக்கு!!!!!  உங்களுக்கு எப்ப கொரோனா வந்தது? சொல்லவேயில்லை? :cool:

இரண்டு மாதானக்கள் ஆகுது। அது பற்றியும் ஒரு வீடியோ போடுறன் 😀

4 minutes ago, குமாரசாமி said:

பெண்கள் கிட்டத்தட்ட அரசியல்வாதிகள் மாதிரி.😀
எதை ஆயுதமாக எடுத்தால் வெற்றிநடை போடலாம் என்பதை தெரிந்து வைத்து அவ்வப்போது மேடையேற்றுவார்கள்.😂
சாதி அரசியல்,இனவாத அரசியல்,மதவாத அரசியல்,நிறவாத அரசியல் என அரசியல்வாதிகள் ஒரு டையரி வைத்திருப்பார்கள். அது போல் மாண்புமிகு மதிப்புக்குரிய பெண்களும் பெண்ணடிமை எனும் ஒரு சொல்லை வைத்து காலத்தை ஓட்டுவார்கள்.😷

நான் பெண்ணியவாதி அல்ல அல்ல 😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இரண்டு மாதானக்கள் ஆகுது। அது பற்றியும் ஒரு வீடியோ போடுறன் 😀

 அந்த அனுபவத்தை கெதியிலை சொல்லுங்கோ......
பலருக்கு பிரயோசனமாய் இருக்கும்.

 இந்த காலகட்டத்திலை பலருக்கு பிரயோசனமாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

போட்டாச்சு குமாரசாமி 😀

Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பொது வேட்பாளருக்கான ஓட்டம் புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்றிட்டங்களை எதிரணிக்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. இவர்களுக்குப் போட்டியாக ராஜபக்‌ஷர்களை ஏற்கெனவே தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னை மீண்டும் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். ஆட்சியில் இருக்கும் தலைவருக்கு எதிராக, பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஓட்டத்தில், எப்போதுமே ஒருவர் அல்லது இருவரைச் சுற்றியே, எதிரணியும் சிவில் சமூக கட்டமைப்புகளும் ஒளிவட்டங்களை வரைய ஆரம்பிக்கும். ஐக்கிய தேசிய கட்சியின் இரு தசாப்தகால ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக, சந்திரிகா குமாரதுங்கவை எதிரணிகள் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. அவரை, சமாதானத்தின் தேவதையாகவே தென் இலங்கை முன்னிறுத்தியது. அதனை, வடக்கிலும் கிழக்கிலும் நம்ம வைக்கும் அளவுக்கான ஒருங்கிணைப்பு, எதிரணியிடம் அப்போது காணப்பட்டது. அதுதான், ஐ.தே.கவை சுமார் இரு தசாப்தகாலம், எதிரணியில் உட்கார வைக்கக் காரணமானது. 2002இல் ரணில், இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் பிடித்தாலும், ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, ஆட்சியை ஆட்டி வைத்தார். பாராளுமன்றத்தைக் கலைக்கவும் செய்தார். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், ராஜபக்‌ஷர்கள் யுத்த வெற்றிவாதத்தில் திளைத்துக் கொண்டு நடத்திய தேர்தல்களில், தன்னால் வெற்றி பற்றி சிந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் ரணில், இன்னொரு யுத்த வெற்றி வீரரான சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக மாற்றினார். ராஜபக்‌ஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய இராணுவத் தளபதியை, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் பொது வேட்பாளராக தமிழ்த் தேசிய கட்சிகளை ரணில் ஏற்க வைத்தார். சிங்கக் கொடியை சம்பந்தன் ஏந்தி, பொன்சேகாவுக்காகப்  பிரசாரம் செய்யும் காட்சிகள் அரங்கேறின. தமிழ் மக்களும் அந்தத் தேர்தலில், பொன்சேகாவுக்கு ஓரணியில் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால், அப்போது பொது வேட்பாளர் யுக்தி வெற்றியளிக்கவில்லை. ரணில் தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காக பொன்சேகாவை பகடையாக்கினார். ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தன. அதுவும் தேர்தல் அறிவிக்கப்படும் இறுதி நாள்கள் வரையில், எதிரணி தயார்படுத்தும் பொது வேட்பாளர் யார் என்பதை, ராஜபக்‌ஷர்களுக்கு தெரியாமல், எதிரணியில் உள்ளவர்கள் மிக மிக இரகசியமாகப் பேணியமை, ராஜபக்‌ஷர்களின் தோல்விக்கு காரணமானது. அது, மாத்திரமல்லாமல், மஹிந்த ஆட்சியில் மிக முக்கியமான நபராக,  அனைத்து ராஜபக்‌ஷர்களாலும் மதிக்கப்பட்ட மைத்திரியை, அவர்களுக்கு எதிராகவே பொது வேட்பாளராகத் தயார்படுத்தியமை, தென் இலங்கை மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. அது, ராஜபக்‌ஷர்களை தோற்கடிப்பதற்கான அலையை தோற்றுவிக்கவும் காரணமானது. நல்லாட்சி உருவாகவும் 18ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கவும் வித்திட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்தோடும் பகிரப்பட்டது. அதன்மூலம் ஜனநாயக ஆட்சிக்கான தத்துவம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆட்சித் தலைவர்களாக இருந்த மைத்திரியும் ரணிலும் தங்களுக்குள் முரண்பட்டு, நல்லாட்சியை இடைநடுவில் போட்டுடைத்தபோது, ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை உறுதி செய்யப்பட்டது. 69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்று, மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்த போது, குறைந்தது ஒரு தசாப்தகாலத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி பற்றிய கனவைக் காணும் வாய்ப்பு இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால், அந்த நிலையை சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்கள் இல்லாமல் செய்தனர். இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். யார் யாரெல்லாம் ராஜபக்‌ஷர்களை நாட்டின் பாதுகாவலர்களாக முன்னிறுத்தினார்களோ, அவர்கள் எல்லாமும் நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களின் ஆட்சி, இப்படியே இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால், நாடு முழுமையாகத் திவாலாகிவிடும் என்று தென் இலங்கை சக்திகள் நம்பத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்டத்தில் இருந்துதான், பொது வேட்பாளருக்கான ஓட்டம் சூடுபிடித்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்துவிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேயே அவர்களுக்கு ஆதரவளித்து, ஆட்சியில் பங்காளியாகிவிட்ட மைத்திரிக்கு, மீண்டும் பொது வேட்பாளராகும் ஆசை வந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளை விட, அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்து வருபவர் மைத்திரிதான். ஆனால், அவரது கட்சி இன்னமும் அரச பங்காளியாகவே இருக்கின்றது. கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தன்னைப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் மைத்திரியிடம் இருக்கலாம். அவ்வாறான எண்ணம் அவரிடத்தில் இருப்பதை, ராஜபக்‌ஷர்கள் ஏற்கெனவே கண்டுகொண்டதால், அவரைத் தன்னுடைய முக்கிய அமைச்சர்களைக் கொண்டு, அதிகமாக விமர்சிக்க வைத்தனர். முன்னாள் ஜனாதிபதி, ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியின் தலைவர் என்கிற வரைமுறைகள் தாண்டி, மைத்திரியை நோக்கி, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள்  கைகளை நீட்டினார்கள். ஒரு கட்டம் வரையில் பொறுமை காத்த மைத்திரி, தனக்காக யாரும் வாதாட இல்லாத நிலையில், தானே தனக்காகக் களமாடத் தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாகத் தன்னைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளைத் தொடங்கினார். ஆட்சியில் பங்காளிகளாக இருந்தாலும், தங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல, ராஜபக்‌ஷர்கள் நடத்துகிறார்கள் என்கிற வெப்பியாராம், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் தொடர்ச்சியாக இருந்தது. அப்படியான நிலையில்தான், மீண்டும் மைத்திரியை பொது வேட்பாளராக்கும் திட்டத்துக்கு அவர்கள் வலுச் சேர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், மைத்திரி தன்னை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்த போதிலும், அவரை எதிர்க்கட்சிகள் எதுவும் சீண்டவே இல்லை. ஏற்கெனவே ஜனாதிபதியாகி, ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷர்களிடம் ஆட்சியைக் கையளிக்க முனைந்தமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான சிக்கல் என, மைத்திரி மீதான அதிருப்தி, ஐக்கிய மக்கள் சக்தியிடம் நீடிக்கின்றது. அத்தோடு, தொடர்ச்சியாக நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு சிக்கலை, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தங்களது கட்சிக்கு வெளியில் இருந்து வேட்பாளர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. இந்தக் கட்டத்தைப் ஏற்கெனவே புரிந்து கொண்ட சம்பிக்க ரணவக்க, தான் அங்கம் வகித்த ஜாதிக  ஹெல உறுமயவிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.  சஜித் பிரேமதாஸவுக்கு பௌத்த பீடங்களிடம் செல்வாக்கு இல்லை. அந்தப் புள்ளியில் தன்னைப் பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்துவது இலகுவானது. தென் இலங்கையில் கடும்போக்கு சக்திகள் தன்னை ஆதரிக்கும் என்கிற விடயங்களை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகலாம் என்பது  சம்பிக்க ரணவக்கவின் எதிர்பார்ப்பு. அதை முன்னிறுத்தியே, அவர் புதிய செயலணியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறார். ஆனால், சஜித் பிரேமதாஸ தனக்குப் பதிலாக இன்னோருவரை வேட்பாளராக ஏற்கும் நிலையில் இல்லை. ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் அபிமானம், பெரும் வீழ்ச்சிப் புள்ளியில் இருக்கின்ற நிலையில், அதைப் பயன்படுத்தாதுவிட்டால், என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவரது எண்ணம். அதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் சரியாகச் செயற்படவில்லை என்கிற எண்ணம், கட்சியினரிடத்திலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. அது, இன்னொரு புறத்தில் சந்திரிகா குமாரதுங்கவை களத்தில் இறக்கியிருக்கின்றது. மைத்திரியைப் பொது வேட்பாளராக்கியதில் தன்னுடைய பங்கு இருந்ததைக் காட்டிலும், இம்முறை கிங்மேக்கராகத் தன்னை உயர்த்தும் கட்டத்தில் சந்திரிக்கா நிற்கிறார். அதற்காக, ஏற்கெனவே ராஜபக்‌ஷர்களால் பழிவாங்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துகிறார். அது தவிர, தென் இலங்கையின் முற்போக்கு சக்திகள், வழக்கமாகவே அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு 30 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஆரம்பித்திருக்கின்ற பொது வேட்பாளருக்கான ஓட்டம், எவ்வாறு முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ராஜபக்‌ஷர்கள் தற்போது வீழ்ச்சிப் பாதையில் இருந்தாலும், அவர்களைத் தோற்கடிப்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல; அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். முதலில், ஆளுமையுள்ள ஒருவரை எதிரணிகள் ஓரணியில் நின்று தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் யுகம், இருண்ட யுகமாகத் தொடரும்.     https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொது-வேட்பாளருக்கான-ஓட்டம்/91-290044
  • நூறுகதை நூறு சினிமா: 58 – காதல் July 24, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் சினிமா தொடர்கள் சினிமா யதார்த்தம் என்பது எப்போதும் கேள்விக்குரியது நிஜநிகர் என்ற ஒன்று சினிமாவில் இல்லவே இல்லை. -க்ரிஸ்பின் க்ளோவர் சினிமா எதையும் பூடகமாய்ச் சொல்லும். நேரடியாகப் பேசுவதன் கடினத்தை அனாயாசமாகக் கையாளும். அது தனி மனிதர்களின்மீது எய்யப்படும் ஒற்றை அம்பைப்போலத் தோற்றமளித்தாலும்கூட நிசத்தில் அது கூட்டத்தின்மீது கட்டவிழ்க்கப் படுகிற கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒத்தது. சினிமா காலம் கடந்த பிற்பாடும் கேள்வியெழுப்பும். அது ஒரு நிழல் நீதி மன்றம். இயல்புக்கு அருகே சினிமா உருவாக்கம் வருகையில் நல்லதோர் யதார்த்தப் படம் உண்டாகிறது. எதிர்பார்ப்புக்கு மேலாக நிசத்தின் அருகே அமர்விக்கப்படுகையில் கண்ணுறும் ரசிகன் விதிர்விதிர்க்கிறான். மற்ற எந்தக் கலையின் விளைதல்களைவிடவும் சினிமா மூலமான பண்படுத்துதலுக்கான பலாபலன் அதிகம். மேலும் சினிமா மக்களுக்கு என்றென்றும் ப்ரியமான ஊடகம். அதனை விஞ்ச அடுத்தவோர் கலை இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம்.   சமூகம் விடாப்பிடிவாதத்தோடு பற்றிக் கொண்டிருக்கிற தவறான பிடிமானங்களினின்றும் மெல்லிய சேலையை முட்பரப்பினின்றும் சின்னதொரு கிழிசலும் ஏற்பட்டுவிடாமல் அகற்றுவதுபோலவே வெகுதூரம் அழைத்துச் செல்கிற வேலையைப் பண்பாடும் கலாச்சாரமும் நிரந்தர முழக்கங்களாக வைத்திருக்கின்றன. அப்படியான முழக்கங்களை மீண்டுமீண்டும் நிகழ்த்துவதற்கு உபயோகமாகும் தொடர்சாலையாகவே அடுத்தடுத்த சினிமாக்களின் வருகை தேவையாகிறது. மாபெரிய மாற்றத்துக்கு ஒற்றை சினிமா போதவே போதாது. சினிமா என்பது மறைமுகமாகவும் நேரடியாகவும் சரி மற்றும் தவறு ஆகிய இரண்டு தரப்புக்களை ஓங்கி ஒலிப்பதான பிரச்சாரத்தைவிடாமல் செய்தவண்ணம் இருந்தே ஆகவேண்டும் அல்லாமற்போனால் சமூகம் தன்மீது குறித்த காலங்களில் பெய்ய வேண்டிய குளிர்மழை அற்றுப்போய் வெம்மையின் உக்கிரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டி வரும். சாதிகளுக்கு இடையில் நிரந்தரமாய்ப் பேணப்பட்டு வருகிற பகையும் ஒவ்வாமையும் நாடெங்கிலும் சாதி ஆணவத்திற்குப் பலியானவர்களின் கண்ணீர்வற்றாத கதைகளும் சமூகத்தின் எல்லா மௌனங்களையும் எப்போதும் ஆட்சேபித்த வண்ணம் பல கலைகளின் மூலமாகவும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. கலை என்பது ஒரு போராட்ட முறை. கலை என்பது கலகம். எல்லாவற்றுக்கும் மாறாகக் கலை என்பது இன்றளவும் தீர்ந்திடாத வழக்குகளின் மேல் முறையீடு. கலை என்பது சமரசத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திடாத கொள்கைவாதியின் வினா. ஒயின் ஷாப் அதிபரின் செல்ல மகள் ஐஸ்வர்யாவுக்கும் மெகானிக் முருகனுக்கும் இடையில் பதின்பருவத்தின் கடைவாசலில் அன்பு பூத்துக் காதலாகிறது. வழியற்ற வழியில் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுச் சென்னை செல்கின்றனர். பெண்ணின் உறவினர்கள் நைச்சிய மௌனத்தோடு புதுமணத் தம்பதியினரை அன்போடு அரவணைப்பதுபோல பாசாங்கு காட்டித் தங்களூருக்கு அழைத்து வருகின்றனர். முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை நெருங்கியவுடன் அவளது தாலி பறிக்கப்படுகிறது. அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்தவன் அடித்து நொறுக்கப்பட்டு அவனுடலில் உயிர் மட்டும் எஞ்சுகிறது. தான் யாரென்பதையே மறந்த முருகன் நினைவுகளை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்வு சிதைந்து பைத்தியமாய்க் காணக்கிடைக்கிறான். தன் கணவன் குழந்தை சகிதம் அந்தச் சாலையில் எதிர்ப்படும் ஐஸ்வர்யா முருகனின் நிலை கண்டு அழுதுவெடிக்கிறாள். காதல் திரைப்படம் முற்றுப்பெறுகிறது. பாலாஜி சக்திவேலின் படைப்பு நேர்மையும் சமரசம் செய்துகொள்ளாத உருவாக்கத் திறனும் காதல் படத்தை உலகளவிலான ஒன்றாக நிகழ்த்தின. ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் சார்பாக பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் எழுத்தில் உனக்கென இருப்பேன் சாகாவரப் பாடலாயிற்று. விஜய் மில்டன் ஒளிப்பதிவு உன்னதமான இருளாகவும் இயல்பான ஒளியாகவும் காணவாய்த்தது. தண்டபாணி க்ரூரமான வில்லனாகத் தோற்றமளித்தார். பரத், சந்தியா இருவருக்கும் இடையே உலர்மலராகக் காதல் காண்பவர் நம்பகங்களின் நிரம்பிற்று. சுகுமார் சரண்யா பசங்க சிவக்குமார் ஆகியோரும் குறித்த நடிப்பை நல்கிச் சிறந்தார்கள். சாதி ஆணவம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் விட்டு அகல வேண்டிய காட்டுமிராண்டித் தனம். அடுத்தடுத்த காலத்திற்குத் தன் மனமறைபொருளாக சாதியை மேலெழுதி வருவதும் சின்னஞ்சிறிய பிஞ்சுகளின் மனதிலும் சாதி நஞ்சைவிடாமல் புகட்டிவருவதும் ஒப்புக்கொள்ளவே முடியாத செயல்பாடுகள். என்றைக்கு மனிதன் முழுவதுமாய் சாதியினின்றும் அகலுகிறானோ அன்றைக்குத்தான் இருளற்ற புதிய ஒளியை அவனடைவதாகப் பொருள். சாதியின் வன்மத்தை காதல் திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒளி பாய்ச்சிற்று.   https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-58-காதல/  
  • தனிமை – மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப்போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாரும்தனிமையில் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. விதவைகள், மனைவியை இழந்தோர், நோயாளிகள்,ஆகியோர் தனிமையாக வாழவில்லை. எந்த மனிதரும் சமூகத்தில் அடுத்தவர் துணையின்றிவாழமுடியாது. பண்டமாற்றம் நிகழ்ந்தது. தேவைகளையும், நிறைவுகளையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் நவீன வாழ்க்கை முறை எத்தனையோ மனிதர்களைத்தனியனாக்கியுள்ளது. வீடிருந்தும் வீடற்றவர்களாக உணர வைக்கிறது.  18ம் நூற்றாண்டுக்குப் பிறகு தொழிற் புரட்சி வந்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டது. தனியார், பொதுத்துறை, தனிநபர், சமூகம் என பெரிய அளவில் ஏற்றம் கண்டன. சந்தைப்பொருளாதாரம் உருவாகி முதலாளித்துவத்தின் குழந்தையாக தனிமை பிறந்தது. கடந்த ஐம்பதுஆண்டுகளில் அதிகமான விவாகரத்துகளினாலும், பிறப்பு விகிதம் குறைவினாலும், கணவன்,மனைவி இருவரும் வெளியே வேலைக்குச் செல்வதாலும் தனியாக வாழும் நபர்களின் எண்ணிக்கைஉயர்ந்துகொண்டே வருகிறது. குடும்பம் சிதைவதாலும், சமுதாய நெருக்கடிகளாலும் சிலர்தனிமையில் வாழ்கிறார்கள். சக மனிதர்களிடமிருந்து விலகியோ, விலக்கி வைத்தோஇருப்பதிலிருந்துதான் தனிமை உருவாகிறது. செய்த பாவங்களுக்குத் தண்டனையாக கூட சிலர்தனிமையை நினைக்கிறார்கள். அவர்கள் நரகத்திலோ, சுடுகாட்டிலோ, பாலைவனத்திலோஇருப்பது போல் உணர்கிறார்கள். நகரங்களின் நெருக்கமும், இரைச்சலும் தனிமையை மேலும்வளர்க்கிறது.  தற்கால தனிமை என்பது மற்றவர்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பது மட்டுமல்ல, தனிமைமக்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது. குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், காதலி,காதலன் உடனிருந்தாலும் கூட சிலர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். சமூகத்தைப்பற்றிய பயமும் தனிமையை உறுதி செய்கிறது. மனதளவில் உறுதியானவர்கள் கூட தனிமைப்பட்டுதளர்ந்துவிடுகிறார்கள். மேலும் தனிமையில் இருப்பவர்களுக்கு மனம் விரைவில்வெறுமையடைகிறது. தனிமை என்பது காரணம் தெரியாத உடல் நலக் குறைவா? நோயியலில் இருதயக் கோளாறு, நீரழிவு நோய், சிறுநீரகப் பிரச்சனை ஆகியவற்றை விட தற்காலத்தில் பொதுவாக அறியக்கூடியதுதனிமைதான். தொற்று நோயைப் போல பரவிவரும் தனிமை எவ்வாறு உருவாகிறது, அதைத்தீர்ப்பததற்கு வழி என்னவென்று பல முனைகளில் ஆய்வு செய்து வருகிறார்கள். தனிமை என்பது ஒருஉணர்வு. ஒரு நிகழ்ச்சியில் நூறுபேர் இருந்து, அவர்களில் நமக்கு ஒருவருமே தெரியாமல்இருந்தால் நாம் தனிமையை உணர்கிறோம்.    சுமார் 1500 பேர் உங்கள் முகநூலில் இணைந்திருக்கலாம். அதில் பாதிப்பேருக்கு மேல் “லைக்” போட்டு உங்களை தொடர விரும்பாதவர்கள். மீதியுள்ளோர் பள்ளி கல்லூரித் தோழர்கள்,குறிப்பிட்ட அரசியல், சாதி அமைப்பைச் சேர்ந்தவர்கள், திடீர் நண்பர்கள் ஆகியோர் இருக்கலாம். இவர்களிடம் நாட்டு நடப்புகள், சமூக நிகழ்வுகள், மேற்போக்கான குடும்ப விஷயங்கள், தன்னுடைய“சாதனைகள்” ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவர்களோடு இணையம் மூலம் உரையாடல்நடத்தலாம்;. ஆனால் இவர்களெல்லாம் நமக்கு அப்பால் இருப்பவர்கள். இது படிப்படியாக உயர்ந்துபின் போதையாக மாறிவிடுகிறது. இவற்றினால் தனிமையைப் போக்க முடியாது. தனியர்களுக்குசமூகப் பாதுகாப்புதான் முக்கியமே தவிர, இணைய தளம் அல்ல. ஒருவர் கூட்டு குடும்பத்தில் வாழ்கிறார். இருபது பேர் ஒரே வீட்டில் பழகுகிறார்கள். ஒன்றாகஉணவருந்துகிறார்கள். யாரிடமும் மனதளவில் உறவு இல்லை. மனம் விட்டு பேசமுடியாது. சமூகத்தோடு இணைந்து வாழமுடியவில்லை. இதுதான் தனிமை.     ஒருவர் தனியாக இருக்கலாம். ஆனால் அவருக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் நேசிக்கிறார்கள். அவர் தனிமை கிடையாது.   உதாரணமாக ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் தனியாக சோதனை செய்கிறார். பல அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிடுகிறார். ஆனல் உலகம் முழுக்க அவருக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர்நேசிக்கிறார்கள் அது தனிமை இல்லை. மனிதனின் ஒவ்வொரு பருவத்திலும் அதற்கான தனிமை உண்டு. ஒவ்வொரு தனிமையும் ஒரு வகை. தனிமை மானுடனின் இயல்பான நிலை எனப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு தனிமைஇல்லாமலிருப்பது சிறுவர்களாக இருக்கும் போது மட்டும்தான். இளமைக் காலத்தில் நாம் ஓர்ஆழ்ந்த தனிமையை உணர்கிறோம். நண்பர்கள் சூழ  இருந்தாலும் அந்த தனிமை கூடவேஇருக்கிறது. அதைப் போக்குவதற்கு வாசிப்பும், செயல்பாடும் சிறந்த வழியாக இருக்கும்.   நாம் ஏன்செயல்பட வேண்டும்? இரண்டு விஷயங்களை நாடுகிறோம். ஒன்று நம் இருப்பை வெளிப்படுத்தசெயல்படுகிறோம்; நம்மை பிறருக்குத் தெரிவதும், அவர்கள் நம்மை மதிப்பதும்இன்றியமையாததாக உள்ளது. நாம் சிலவற்றை சிறப்புற செய்துகொண்டிருக்கிறோம் என்று நாம்உணர வேண்டியிருக்கிறது. அங்கீகாரம், மனநிறைவு இரண்டும் தனிமையை அகற்றுபவை.      என்னால் எங்கும் தனிமையாக இருக்க முடியும். எனக்குத் தனிமைதான் பிடிக்கும் என்று சிலர்சொல்லக்கூடும். கைபேசியும், இணையதளமும் இல்லாவிடில் அத்தகைய தனிமை அவருக்குகுட்டிச் சாவாக இருக்கும். பக்கத்தில் மனிதர்கள் இல்லாமல், வம்புகளில்லாமல் வாழவேமுடியாதவர்களாக இருப்பார்கள். சமூக வலைத் தளங்களில் வம்புகளைத் தேடியலைந்துகொண்டிருப்பார்கள்.  முதுமையில் குடும்பம் எனும் பொறுப்பு இல்லாமலாகி, உறவுகள் சற்று சம்பிரதாயமானவையாக ஆகிவிடுகின்றன. ஏனென்றால் அடுத்த தலைமுறை வாழும் உலகம் நாம் புரிந்துகொள்ளமுடியாததாக, அயலானதாக உள்ளது. இலக்கு இல்லாமல், செயற்களம் இல்லாமல் இருப்பதன்சலிப்பு தனிமையை உருவாக்குகிறது. சிலர் அரசியல், சாதி, மதச் செயல்பாடுகள், குடும்பசிக்கல்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு தங்களை மூழ்கடித்துக் கொள்கிறார்கள். மனதிற்குப் பிடித்தஏதாவது ஒரு துறையில் சேவையில் ஈடுபடுவது தனிமையை இல்லாமலாக்கும். இத்தனிமையின்விளைவான சோர்வை அழித்து ஊக்கம் கொண்டவர்களாக ஆக்கும். இதில் மாற்றம் இல்லாதவர்கள்அன்றாடத்தில் சலிப்புறுகிறார்கள். குடி உட்பட சிக்கலில் சென்று சிக்கிக்கொள்கிறார்கள்.       உலகில் உள்ள முதியவர்களில் பத்தில் ஒருவர் இந்தியாவில் உள்ளார். இதில் பாதிப் பேர்தனிமையில் வாழ்கிறார்கள். வறுமை, நோய், தனிமை ஆகியவை பெரும்பாலான முதியவர்களைப்பீடித்திருக்கிறது. இந்த மூன்றில் மனரீதியாக அதிக துயரமளிப்பது தனிமையே. பிள்ளைகள் விலகிவெளிநாடுகளுக்கு, வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். குடும்பத்தில் இருக்கும்போதே மரியாதைக் குறைவாக நடத்துதல், கவனிப்பு இன்மை, அலட்சியம் போன்றவைகள்உளவியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு தனிமை உணர்வை உருவாக்குகின்றன. எண்ணங்களைப்பகிர்ந்துகொள்ள முடியவில்லை. உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க முடியாமல்தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் தங்களைப் புதைத்துக் கொள்கிறார்கள். குடும்பத்திலும்,வெளியிலும் அவமானங்கள் வருகின்ற போது எதற்காக இந்த உசிரை வச்சிக்கிட்டு இருக்கனும். செத்துத் தொலைக்கலாம் என்ற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். சிலர் குடிபோதைக்கு அடிமையாகிதங்களை அழித்துக் கொள்கிறார்கள். சிலருக்கு மனநல பாதிப்பு ஏற்படுகிறது. இலக்கியத்தில் தனிமையைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? 1667ல் ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் தனது இழந்த சொர்க்கம் என்ற கவிதைத் தொகுப்பில் தனிமையைப் பற்றிவிவரித்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் தனிமையைப் பற்றி முதன்முதலாக வந்த செய்தி இதுதான் என அறியப்படுகிறது. ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செகாவ் எழுதிய, உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான “பந்தயம்”என்ற கதையில் பணத்திற்காக ஆசைப்பட்டு ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தனிமைப்பட்டு, கதைமுடிவில் பணம் பெரிதல்ல, தனிமனித வாழ்க்கையும், சுதந்திரமுமே முக்கியம் என்பதைகதாபாத்திரத்தின் மூலம் செகாவ் வெளிப்படுத்தியிருப்பார். தனிமையில் இருந்த காலத்தில் அந்தமனிதன் உலக இலக்கியங்களையும், தத்துவ நூல்களையும் வாசித்தே தனிமையைவீழ்த்தியிருப்பான். தனிமையில் வாழ்ந்து வரும் பேக்கரி உரிமையாளரான ஒரு முதிர்கன்னி, தனது வாடிக்கையாளர் ஒருவருடன் ஒரு தலைக் காதல் ஏற்பட்டு, எதிர்பாரா முடிவாக அக்காதல் தோல்வியில் முடியும். பின்னர் அப்பெண் தனது வாழ்வாதாரமான பேக்கரித் தொழிலையும், அதன் தொடர்ச்சியானஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் அடிப்படையாகக் கொண்டு தனிமையை வெல்லுவாள் என ஓ.ஹென்றி “சூனியக்காரியின் ரொட்டித்துண்டு” என்ற கதையில் விவரித்திருப்பார்.    தமிழில் ராஜம் கிருஷ்ணன் எழுதிய “தனிமை” என்ற சிறுகதையில், வயதான தாயாரை தனமையில்விட்டுவிட்டு, அவளுடைய இரண்டு பெண் மக்கள் வேலை தேடி வெளிநாடு சென்று விடுகிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண் வந்து விசாரித்து விட்டு, வளர்ப்பு மகளான நானே எனது பெற்றோரைவிட்டுப் பிரிவதில்லை. பெற்ற மகள்களான அவர்கள் ஏன் உங்களைத் தனிமையில் விட்டுச்சென்றார்கள் என்று கேட்பாள். தனிமை எவ்வாறு உருவாகிறது என்பதை கதாசிரியர் விரிவாகச்சொல்லியிருப்பார்.    தனிமை மன அழுத்தத்தை தணிக்கும் என்பது திசை திருப்பும் முயற்சியே. தனிமையின் சோகம்சரிசெய்யக்கூடியது தான். காலத்திற்கு காலம் தனிமை மாறுபடுகிறது. நவீன கால தனிமையைப்போக்குவதற்கு பல வழிகள் திறந்திருக்கின்றன. அதே வேளையில் பலரும் நினைப்பது போலகேளிக்கைகள், பொழுது போக்குகள் எவருக்கும் தனிமையைப் போக்குவதில்லை. நாம் வாழ்நாள்முழுக்க ஓய்வு, கேளிக்கைக்காக ஏங்கியிருந்திருப்போம். ஆகவே முதிய வயதில் முழு நேரமும்ஓய்வும், கேளிக்கையுமாக வாழ வேண்டுமென்று கற்கனை செய்திருப்போம். ஆனால் அதிகம்போனால் ஓராண்டு அவ்வாறு ஈடுபட முடியும். அதன் பின் சலிப்பே எஞ்சும். ஏனென்றால்கேளிக்கையில் நாம் பார்வையாளர்கள். எந்த வகையிலும் பங்கேற்பாளர்கள் அல்ல. வெறும்பார்வையாளர்களாக இருப்பதில் செயலின்மை உள்ளது. மானுட உடலும், உள்ளமும் செயலுக்காகவடிவமைக்கப்பட்டவை. செயலின்மையால் சோர்வும், சலிப்பும் அடைபவை. மற்ற ஈடுபாடுகளுடன்ஒப்பிடுகையில் வாசிப்பு மிக மேலானது. ஏனென்றால் அதில் நமது பங்கேற்பு இல்லாமல் முடியாது. வாசிப்பையொட்டி எழுதவும் ஆரம்பித்தால் அது செயற்களமே. ஆனால் அது அனைவராலும்செய்யக்கூடியது அல்ல.  இலக்கிய வாசிப்பு மன அழுத்தத்தை, வெறுமையைக் குறைத்து, கதையில் உலவும்பாத்திரங்களோடு உரையாட வைக்கிறது. கதையோடு இணைந்து புத்தகம் வாசிப்பவரும் புதியவாழ்க்கையை வாழ முடியும். நேருக்கு நேர் உரையாடலும், எழுதுதலும் மனிதரின் தனிமையைக்குறைக்கும். வாசிப்பதினால் உலகில் எப்போதும் தனிமையை பொழுது போக்கு அம்சமாகவே நாம்உணரலாம். வாசித்த இலக்கியக் கதாபாத்திரங்களின் அனுபவங்களை நம் அனுபவங்களாகஉணர்ந்து, அதன் நாயகர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டு, அது அளிக்கும்வெவ்வேறு உலகங்களில் நாம் மானசீகமாக வாழலாம்.                              https://bookday.in/thanimai-article-by-matha/    
  • வேப்பவெட்டுவான் வீதி மண்கொள்ளையர்களின் தலைவர்கள் பிள்ளையான், வியாழேந்திரன் பங்கு என்ன?  இதற்குத்தானா பிள்ளையானை தெரிவு செய்தோம்?   
  • நித்திரை கொள்ளேக்கயும் காலாட்டிக்கொண்டு இருக்கவேணும்.. இல்லாட்டி அடக்கம் பண்ணிப்போடுவாங்கள்.. 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.