Jump to content

விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு  புரிந்து  கொள்வது??

எந்தவகையில்  நீ போராடினாலும் எந்த வகையிலும்  நீ கவனிக்கப்படமாட்டாய்

இது சிறீலங்கா சொல்வதல்ல  உலகம்

ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது?

இன்றைய ஈழத்தமிழினத்தின்  மௌனநிலை  என்பதும்   கூட

மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல

ஈழத்தமிழினம் தன்னால்  இதற்கு மேல் அழிவை  சந்திக்கமுடியாது

இதற்கு  மேலும்  தன்னிடம்  போராடும்  வலு கிடையாது என்பதனால்  வந்தது

அப்போ ஈழத்தமிழினத்தின் அடுத்த  கட்டம்  என்ன??

மீண்டும்  உண்ணாவிரதம்

ஊர்வலங்கள்?

ஒன்றை  மதிப்பவரிடம் அல்லது மனித  மாண்புகளை  கொண்டோரிடம்

நாம்  பரீட்சிக்கவேண்டியவை  இவை

கொலைகாரர்களிடம்

அதற்கு துணைபோனவர்களிடம்

அதற்காக ஆயுத விநியோகம் செய்தவர்களிடம் ....

எவ்வாறு  ஒரு படியாவது  அவர்கள் முன்னகர்த்துவர்???

அவர்களுக்கு ஆப்பிழுத்த குரங்கின்  கதை  தெரியாதா???

நான் பிரான்சில் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன்

ஐரொப்பாவில் நடாத்தப்படும் அநேக ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன்

ஐநா வுக்கு முன்னால் நடாத்தப்படும் அத்தனை ஊர்வலங்களுக்கும் சென்றிருக்கின்றேன்

இது  வருடத்துக்கு 2 அல்லது  3 ஆக  இருக்கும்

இவ்வாறு செல்வதென்பது  எவ்வளவு கடினமானது 

எவ்வளவு  நேரத்தை  விழுங்கக்கூடியது

எவ்வளவு  செலவானது  என்று பல  தமிழருக்கும்  தெரிவதில்லை

(அவ்வாறு  தெரிந்தால் அவை  பற்றி கிண்டலடிக்கமாட்டார்கள்)

2 நாட்கள்  லீவு வேண்டும்

மற்றும் எல்லைகளில் சோதனை என்ற பெயரில் நடக்கும் அவமதிப்புக்கள்  திருப்பி  அனுப்புதல்கள்....???

மற்றும்  செலவுகள்??

இதையெல்லாம் தாண்டித்தான்  போவதுண்டு

போய்  கால்  கடுக்க பல  மணி நேரம்  நின்று நடந்து ஊர்வலமாக  சென்றால்

அங்கே எதையுமே  கணக்கெடுக்கமாட்டார்கள்

இத்தனை  வருடங்களாக இவ்வளவு ஆயிரம் பேர் அமைதியாக  வருகிறார்களே

எமது  கட்டுப்பாடுகளுக்கு  கட்டுப்பட்டு நாம் சொல்வதையெல்லாம்  கேட்டு திரும்பி  சென்று

மீண்டும்  மீண்டும்  அமைதியாக வந்து  கெஞ்சுகிறார்களே

என்று  எந்த மனச்சாட்சியும் அற்ற  செயற்பாடற்ற நிலை  தான்  ஒவ்வொரு முறையும்.

கடைசியாக நான்  சென்றது 2018.

அன்று அதே நடைமுறை

அதே நடை  ஊர்வலம் மேடைப்பேச்சு...

இவை நடந்து  கொண்டிருந்தபோது ஐநா வாசலில் சில கூக்குரல்கள்  கேட்டன

அங்கே  சென்று பார்த்தபோது சில  இளைஞர்கள்   ஐநாவுக்குள் உட்புக எத்தனித்துக்கொண்டிருந்தார்கள்

காவலர்கள்  இவர்களை  தடுத்து வைத்திருந்தாலும் அமைதியாக  ஆனால் ஆக்ரோசமாக இளைஞர்கள்  உட்புக எத்தனித்தனர்

இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக கூட்டம் அதிகரிக்கத்தொடங்கியது

நானும்  அவர்களுடன்  சேர்ந்த  கொண்டேன்

மேலும்  நின்றிருந்த காவல்த்துறையினர் தம்மால்  முடியாது போவதை  உணர்ந்து

மேலதிக  காவல்த்துறையினரை  வரவளைத்து சுற்றி வளைத்தனர்.

ஆனால்  இளைஞர்கள் எவரும் பின் வாங்கவோ வன்முறையை  பாவிக்கவோ  இல்லை

இறுதியாக  இனியும் முன்னேறுவது என்றால்  வன்முறையை  தவிர  வேறு  வழியில்லை  என்பதால் 

அழுதபடியும்  திட்டியபடியும்  எல்லோரும் பின்  வாங்கினர்.

நானும்  தான்  அதற்கு  பின்னர் நான்  ஐநா ஊர்வலத்துக்கு  போவதில்லை

ஏனெனில்  அவர்கள்  எம்மிடம்  வன்முறையை மட்டுமே விட்டு  வைத்திருக்கின்றனர்.

இந்த யுத்தத்துக்கு உதவிய அனைவரும் அழிந்து

உலகம் தலைகீழாக  மாறினால் மட்டுமே

எமக்கு  இழைக்கப்பட்ட  கொடூரங்களுக்கு 

எம்மினத்தின்  மேல்  நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் அட்டூழியங்களுக்கு 

நியாயம் கிடைக்க  சிலவேளைகளில் வழியுண்டு..

அதைவிடுத்து

அமைதி  வழி  இவர்களுக்கு  புரியும்  என்று அப்பாவித்தனமாக  நம்பி

திலீபனாக

பூபதி  அம்மாவாக

முருகதாசாக 

இறுதியாக அம்பிகை  அம்மாவாக ....

கைவிடப்படுவீர்கள்?????

(ஆனால் அதே  கதவை இன்றும்  இன்னும்  பலர்  தட்டியபடி  தான்  உள்ளனர். தட்டுங்கள்)

Edited by விசுகு
  • Like 8
  • Thanks 3
Link to comment
Share on other sites

நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி  உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. 

மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன.

இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.

Edited by கற்பகதரு
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

உங்களது கருத்தை முழுமையாக ஒத்துக்கொள்கின்றேன் கடைசி  இரு சொற்களைத்தவிர....

நான் அடிக்கடி சொல்வதும்  செய்வதும் தான்

பிரான்சிலே 2009க்கு  பின்னர்  பொறுப்புக்கள்  சம்பந்தமாக வந்த  அழைப்புக்களையெல்லாம் 

புறந்தள்ளியமைக்கு  காரணம்

எனது பைலை நோண்டினார்கள்  என்றால்

நான்  அவன்  என்பது  தெரிந்து  விடும்

எனவே அந்த  முத்திரை  அற்றவர்கள்

இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் என.

வருடங்கள்  தான் ஓடுது

கண்களுக்கெட்டியவரை...................????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் நடந்த போது திட்டினார்கள்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது சொன்னோம் பலித்து விட்டது என்றார்கள்.
பத்து வருடங்கள் கழிந்து விட்டது. அவர்கள் இதுவரை எதுவுமே செய்ததில்லை.வெளிநாடுகளில் நலமே வாழ்கின்றார்கள். புலிகளால் தொல்லை ஆபத்து என்றவர்கள் பத்து வருடங்களாகியும் ஊர் திரும்பி வாழ எத்தனிக்கவில்லை. மாறாக இன்று மனித உரிமைபோராட்டம் செய்பவர்களை பார்த்து உலக அரசியல் தெரியாதவர்கள் என ஏளனம் மட்டும் செய்கின்றார்கள்.

கொடுத்த தொழிலை செவ்வனே செய்கின்றார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி  உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. 

மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன.

இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.

என்ன ? இயற்கை  கூடவா  அப்படி இயங்குகிறது ...நம்பமுடியவில்லை....

புதிய வழிமுறையை தேடுவதற்கு உங்கள். ஆலோசனை தேவை....இலங்கையரசு.  தமிழர்களப் பார்த்து  நீங்கள் பிரிந்து போங்கள் என்று கூறுவதற்கு என்ன  செய்யலாம்?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

என்ன ? இயற்கை  கூடவா  அப்படி இயங்குகிறது ...நம்பமுடியவில்லை....

இயற்கையும் தன்னாலான வரை போராடுது?

இயலாமல் போனதும் போராட்ட முறையை மாத்திப் பாக்குது!

அது தான் கொரோனாவைச் சொன்னேன்!😄

இன்னொரு திரியில் சொல்லப்படுகின்றது...இன்னும் 24 வகை , ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் கண்டு பிடிக்கப் பட்டிருக்காம்!

ம்ம்...இயற்கையிடம்...இன்னும் பல ஆயுதங்கள் கை வசம் இருக்குது!🥱

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம்

தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள்.
சரி பரவாயில்லை.

போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம்

தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள்.
சரி பரவாயில்லை.

போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?

யாரைக் கேட்க்கிறிர்கள்? உங்கடை நாடு  நினைத்தால் ,முடியும்..இப்ப உப ஐனதிபதி பதவியும்..உங்கள் கையிலுண்டு...முயற்ச்சி செய்து பாருங்கள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

போராட்டம் நடந்த போது திட்டினார்கள்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் போது சொன்னோம் பலித்து விட்டது என்றார்கள்.
பத்து வருடங்கள் கழிந்து விட்டது. அவர்கள் இதுவரை எதுவுமே செய்ததில்லை.வெளிநாடுகளில் நலமே வாழ்கின்றார்கள். புலிகளால் தொல்லை ஆபத்து என்றவர்கள் பத்து வருடங்களாகியும் ஊர் திரும்பி வாழ எத்தனிக்கவில்லை. மாறாக இன்று மனித உரிமைபோராட்டம் செய்பவர்களை பார்த்து உலக அரசியல் தெரியாதவர்கள் என ஏளனம் மட்டும் செய்கின்றார்கள்.

கொடுத்த தொழிலை செவ்வனே செய்கின்றார்கள்.

இவர்கள் பற்றி சொல்வதென்றால் அவர்களும் எமக்கு வன்முறையை தவிர வேறு எந்த தெரிவையும் விட்டு வைக்கவில்லை அண்ணா.

அதைத்தவிர அனைத்தையும் நாம் செய்து பார்த்தாகிவிட்டது.

19 hours ago, Kandiah57 said:

புதிய வழிமுறையை தேடுவதற்கு உங்கள். ஆலோசனை தேவை....இலங்கையரசு.  தமிழர்களப் பார்த்து  நீங்கள் பிரிந்து போங்கள் என்று கூறுவதற்கு என்ன  செய்யலாம்?

உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியவில்லை

வச்சுக்கொண்டா அவர் வஞ்சகம் செய்கிறார்??

பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்??

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, புங்கையூரன் said:

இயற்கையும் தன்னாலான வரை போராடுது?

இயலாமல் போனதும் போராட்ட முறையை மாத்திப் பாக்குது!

அது தான் கொரோனாவைச் சொன்னேன்!😄

இன்னொரு திரியில் சொல்லப்படுகின்றது...இன்னும் 24 வகை , ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் கண்டு பிடிக்கப் பட்டிருக்காம்!

ம்ம்...இயற்கையிடம்...இன்னும் பல ஆயுதங்கள் கை வசம் இருக்குது!🥱

புழு பூச்சி கூட தனக்கு தன் இனத்துக்கு ஆபத்து வரும் போது ஒன்று திரள்கின்றன எதிரி எந்த பெரிய ஆளாக இருந்த போதும் எந்த பலசாலியாக இருந்தபோதும் தம்மால் முடிந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டும் போது நம்ம இனம் மட்டும்??

வைதனையே மிஞ்சுகிறது அண்ணா.

20 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம்

தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள்.
சரி பரவாயில்லை.

போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?

இந்த கேள்வி என்னுள்ளும் உள்ளது அண்ணா ஆனால் விடைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

யாரைக் கேட்க்கிறிர்கள்? உங்கடை நாடு  நினைத்தால் ,முடியும்..இப்ப உப ஐனதிபதி பதவியும்..உங்கள் கையிலுண்டு...முயற்ச்சி செய்து பாருங்கள்

2015இல ராஜபக்ச ஆட்சியைப் பிடித்திருந்தால் எமக்கு சார்பாக பல விடயங்கள் நடந்திருக்கும்.

அதனால்த் தான் ராஜபக்ச ஆட்சி வர வேண்டுமென இங்கே சொன்னேன்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம்

தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள்.
சரி பரவாயில்லை.

போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை.

உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?

👍👍👍👍👍👍👍👍

இந்த கேள்வி பிரபல தமிழ் அரசியல்வாதிகள் சர்வதேசத்தை பார்த்து கேட்க வேண்டிய கேள்வி. ஐநா சபையில் எதிரொலிக்க வேண்டிய கேள்வி.

உந்த மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்களை நினைக்கத்தான் வயிறு பத்தியெரியுது. உலக அரசியல் தெரியேல்லையாம்.சரி மற்றவனுக்கு உலக அரசியல் தெரியேல்லை எண்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே?

கண்ணன்மாரே! பத்து வருசமாய் என்ன செய்யிறியள்?

சிங்களவனை சாந்தப்படுத்தி வெல்ல வேணும் எண்டு நினைக்கினம் போல....
ஆனால் அதுவும்....????????????? பழைய கதை அப்பன். 😎

  • Like 1
Link to comment
Share on other sites

On 15/3/2021 at 16:31, Kandiah57 said:

புதிய வழிமுறையை தேடுவதற்கு உங்கள். ஆலோசனை தேவை....இலங்கையரசு.  தமிழர்களப் பார்த்து  நீங்கள் பிரிந்து போங்கள் என்று கூறுவதற்கு என்ன  செய்யலாம்?

10 hours ago, விசுகு said:

உங்களுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியவில்லை

வச்சுக்கொண்டா அவர் வஞ்சகம் செய்கிறார்??

பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்??

இப்படி எழுதும் நீங்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன குறைவு என்று ஒதுங்கி போவதே சிறப்பு.

7 hours ago, குமாரசாமி said:

உந்த மாற்றுக்கருத்து மாணிக்க மன்னர்களை நினைக்கத்தான் வயிறு பத்தியெரியுது. உலக அரசியல் தெரியேல்லையாம்.சரி மற்றவனுக்கு உலக அரசியல் தெரியேல்லை எண்டால் நீங்கள் செய்ய வேண்டியது தானே?

கண்ணன்மாரே! பத்து வருசமாய் என்ன செய்யிறியள்?

வன்முறை அல்லது உண்ணாவிரதம் தவிர வேறு எதை பற்றி பேசுபவர்களுக்கும் இங்கே இடம் இல்லை. அப்படியான கருத்துகளை கொண்டிருப்பவர்களை துரோகிகளாக பார்ப்பது ஈழத்தமிழரின் வழக்கம். ஆகவே உங்களுக்கு எஞ்சியுருப்பது:

7 hours ago, விசுகு said:

வைதனையே மிஞ்சுகிறது அண்ணா.

இந்த கேள்வி என்னுள்ளும் உள்ளது அண்ணா ஆனால் விடைதான் கண்ணுக்கெட்டிய தூரம் வரை???

உங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கு காரணம் நீங்கள் பார்க்க விரும்பாததே. வேறெதுவும் இல்லை.

Edited by கற்பகதரு
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

இப்படி எழுதும் நீங்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன குறைவு என்று ஒதுங்கி போவதே சிறப்பு.

உங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கு காரணம் நீங்கள் பார்க்க விரும்பாததே. வேறெதுவும் இல்லை.

ஐயா

நான்  எல்லாவற்றையும் செய்து  பார்த்த வரலாற்றுடனும்

எனது  சொந்த அனுபவத்துடனும்  இருந்து  கொண்டு

அதன் உச்ச விரக்தியில்  பேசுகின்றேன்

ஆனால்  உங்களுடைய கருத்துக்களை  பார்க்கும்போது

சிங்களமும்  சர்வதேசமும் தமது  இரு கரங்களிலும் தீர்வை  ஏந்தியபடி தவமிருப்பது  போலவும்

தமிழர்கள் அதை  வாங்காதிருப்பது  போலவும்

அல்லது  உங்களிடம் தீர்வுக்கான  பாதை  இருப்பது  போலவும்

அதனை  தமிழர்கள்  முழுமையாக  அழியும்வரை

நீங்கள்  வெளியடுவதில்லை என்ற உறுதியிலிருப்பது  போலவும்

திருட்டுத்தனமாக  இருக்கிறது

நாம்  தான் சொல்கின்றோமே

எங்களையும்  சேர்த்து

அல்லது  சேர்க்காமல் எதையாவது  செய்யுங்கள்  செயலில்  காட்டுங்கள் என்று???

  • Like 2
Link to comment
Share on other sites

On 15/3/2021 at 14:54, கற்பகதரு said:

நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி  உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. 

மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன.

இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.

நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும். 

நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2021 at 23:03, ஈழப்பிரியன் said:

2015இல ராஜபக்ச ஆட்சியைப் பிடித்திருந்தால் எமக்கு சார்பாக பல விடயங்கள் நடந்திருக்கும்.

அதனால்த் தான் ராஜபக்ச ஆட்சி வர வேண்டுமென இங்கே சொன்னேன்.
 
அந்தப பல விடயங்களை இப்போ ஏன்செய்யக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, manimaran said:

நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும். 

நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும் 

இது தெரியும் .அந்தவகை என்ன மார்க்கம் எனத் தெரியவில்லை? தெரிந்த ஒரேயாள் கற்பகதருவும் சொல்லுகிறாரிலில்லை.சில சமயம் அது விற்பனைக்குரியவிடயமே தெரியவில்லை

Link to comment
Share on other sites

11 hours ago, விசுகு said:

ஆனால்  உங்களுடைய கருத்துக்களை  பார்க்கும்போது

சிங்களமும்  சர்வதேசமும் தமது  இரு கரங்களிலும் தீர்வை  ஏந்தியபடி தவமிருப்பது  போலவும்

தமிழர்கள் அதை  வாங்காதிருப்பது  போலவும்

மாற்று வழி மாணிக்கங்களான எங்கள் தீர்வுக்கான பாதைகள் உங்களுக்கு துரோகங்களாக தெரியும் என்று ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் இல்லையா? ஆகவே அவை பற்றி இந்த களத்தில் கருத்து பரிமாற்றம் சாத்தியமற்றது.

11 hours ago, விசுகு said:

அல்லது  உங்களிடம் தீர்வுக்கான  பாதை  இருப்பது  போலவும்

அதனை  தமிழர்கள்  முழுமையாக  அழியும்வரை

நீங்கள்  வெளியடுவதில்லை என்ற உறுதியிலிருப்பது  போலவும்

திருட்டுத்தனமாக  இருக்கிறது

மீண்டும், .... இந்தவிதமான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தூர விலகிவிடுவதே என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பானது.

11 hours ago, விசுகு said:

நாம்  தான் சொல்கின்றோமே

எங்களையும்  சேர்த்து

அல்லது  சேர்க்காமல் எதையாவது  செய்யுங்கள்  செயலில்  காட்டுங்கள் என்று???

தனியொருவராக இதனை செய்ய முடியாது. சிலரோடு சேர்ந்து. செய்ய முயன்றாலும் வேகமாகவே துரோகிகளாக காட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். ஆகவே நானும் என்னை போன்ற தீர்வுக்கான பாதை தெரிந்த பலரும் ஒதுங்கி இருக்கிறோம். 

இந்த மாற்றுவழிகளை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் ஈழத்தமிழரின் பொதுசன தொடர்புசாதனங்களையும் சமுக இணையங்களையும் மக்கள் அமைப்புக்களையும் தமது ஆதிக்கத்துள் வைத்திருப்பவர்கள் இவ்வாறாக புதியதொரு பிறப்புக்கு உண்மையாக மனச்சுத்தத்துடன் முயற்சிக்க வேண்டும். 

முன்னர் ஈழத்தமிழரின் நிலை பற்றி சர்வதேச மாநாடுகள் நடந்தன. இப்போதும் சில இணையவழி கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மாற்று தீர்வுகள், மாற்று வழிகள் பற்றி இவை போன்ற கலந்துரையாடல்கள்   நேர்மையுடனும் உண்மையாகவே மாற்றுவழிகளையும் மாற்று தீர்வுகளையும் காணும் நோக்கத்துடனும் இடம் பெற வேண்டும்.

இவற்றை ஏற்பாடு செய்யுங்கள், அங்கே சந்திக்கலாம்.

3 hours ago, Kandiah57 said:

அந்தவகை என்ன மார்க்கம் எனத் தெரியவில்லை? தெரிந்த ஒரேயாள் கற்பகதருவும் சொல்லுகிறாரிலில்லை.சில சமயம் அது விற்பனைக்குரியவிடயமே தெரியவில்லை

விலை கொடுத்து பெறாதவற்றின் பெறுமதிக்கு நாம் மதிப்பு கொடுப்பது குறைவு. மாவீரர் நாள் நிகழ்வு முடிய மண்டபம் நிறைந்த மக்கள் வெளியேறும் போது இலவசமாக கொடுக்கப்பட்ட தேசிய தலைவரின் படம் இருந்த வெளீயீட்டின் பிரதிகள் மண்டபத்தின் தரை  எங்கும் சிதறியிருக்க, அவரின் முகத்தை ஏறி மிதித்துக் கொண்டு வெளியேறும் மக்களை கண்டு சகிக்க முடியாமல் அவர்களை ஏசி விரட்டிவிட்டு அந்த படங்களை எடுத்து மேசைமீது அடுக்கி வைத்த எனக்கு இலவசத்தின் பெறுமதி தெரியும். இத்தனைக்கும் இதே தேசியத்தலைவரே முள்ளிவாய்க்காலில் எனது உறவுகள்  பலியானதுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியதும் நானே.

இலவசமாக கொடுத்தால் என்னையும் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போவார்கள் என்று தெரியும். ஆகவே இலவசமாக கொடுப்பதற்கு நான் அவரல்ல.

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கற்பகதரு said:

மாற்று வழி மாணிக்கங்களான எங்கள் தீர்வுக்கான பாதைகள் உங்களுக்கு துரோகங்களாக தெரியும் என்று ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் இல்லையா? ஆகவே அவை பற்றி இந்த களத்தில் கருத்து பரிமாற்றம் சாத்தியமற்றது.

மீண்டும், .... இந்தவிதமான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தூர விலகிவிடுவதே என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பானது.

தனியொருவராக இதனை செய்ய முடியாது. சிலரோடு சேர்ந்து. செய்ய முயன்றாலும் வேகமாகவே துரோகிகளாக காட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். ஆகவே நானும் என்னை போன்ற தீர்வுக்கான பாதை தெரிந்த பலரும் ஒதுங்கி இருக்கிறோம். 

இந்த மாற்றுவழிகளை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் ஈழத்தமிழரின் பொதுசன தொடர்புசாதனங்களையும் சமுக இணையங்களையும் மக்கள் அமைப்புக்களையும் தமது ஆதிக்கத்துள் வைத்திருப்பவர்கள் இவ்வாறாக புதியதொரு பிறப்புக்கு உண்மையாக மனச்சுத்தத்துடன் முயற்சிக்க வேண்டும். 

முன்னர் ஈழத்தமிழரின் நிலை பற்றி சர்வதேச மாநாடுகள் நடந்தன. இப்போதும் சில இணையவழி கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மாற்று தீர்வுகள், மாற்று வழிகள் பற்றி இவை போன்ற கலந்துரையாடல்கள்   நேர்மையுடனும் உண்மையாகவே மாற்றுவழிகளையும் மாற்று தீர்வுகளையும் காணும் நோக்கத்துடனும் இடம் பெற வேண்டும்.

இவற்றை ஏற்பாடு செய்யுங்கள், அங்கே சந்திக்கலாம்.

விலை கொடுத்து பெறாதவற்றின் பெறுமதிக்கு நாம் மதிப்பு கொடுப்பது குறைவு. மாவீரர் நாள் நிகழ்வு முடிய மண்டபம் நிறைந்த மக்கள் வெளியேறும் போது இலவசமாக கொடுக்கப்பட்ட தேசிய தலைவரின் படம் இருந்த வெளீயீட்டின் பிரதிகள் மண்டபத்தின் தரை  எங்கும் சிதறியிருக்க, அவரின் முகத்தை ஏறி மிதித்துக் கொண்டு வெளியேறும் மக்களை கண்டு சகிக்க முடியாமல் அவர்களை ஏசி விரட்டிவிட்டு அந்த படங்களை எடுத்து மேசைமீது அடுக்கி வைத்த எனக்கு இலவசத்தின் பெறுமதி தெரியும். இத்தனைக்கும் இதே தேசியத்தலைவரே முள்ளிவாய்க்காலில் எனது உறவுகள்  பலியானதுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியதும் நானே.

இலவசமாக கொடுத்தால் என்னையும் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போவார்கள் என்று தெரியும். ஆகவே இலவசமாக கொடுப்பதற்கு நான் அவரல்ல.

இப்படி கனக்க பார்த்தாச்சு 

புதுசா ஏதாவது விடுங்கள்

இதை மாதிரி கதை விட்டு கொண்டு இருக்கும் சாணக்கியர் பலர் மக்களால் தூக்கி எறியப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

கதை தொடர் எல்லாவற்றையும் 10 வருடங்களுக்கு மேலும் ஓட்ட முடியுமா என்ன??

Link to comment
Share on other sites

46 minutes ago, விசுகு said:

இப்படி கனக்க பார்த்தாச்சு 

புதுசா ஏதாவது விடுங்கள்

இதை மாதிரி கதை விட்டு கொண்டு இருக்கும் சாணக்கியர் பலர் மக்களால் தூக்கி எறியப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

கதை தொடர் எல்லாவற்றையும் 10 வருடங்களுக்கு மேலும் ஓட்ட முடியுமா என்ன??

On 15/3/2021 at 06:14, விசுகு said:

ஈழத்தமிழினத்தின் இனறைய நிலையை எவ்வாறு  புரிந்து  கொள்வது??

எந்தவகையில்  நீ போராடினாலும் எந்த வகையிலும்  நீ கவனிக்கப்படமாட்டாய்

இது சிறீலங்கா சொல்வதல்ல  உலகம்

ஏன் மக்களை காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐநா சொல்வது?

இன்றைய ஈழத்தமிழினத்தின்  மௌனநிலை  என்பதும்   கூட

மற்றவர்களால் கேட்கப்பட்டு அல்லது தேவைப்பட்ட ஒன்றல்ல

ஈழத்தமிழினம் தன்னால்  இதற்கு மேல் அழிவை  சந்திக்கமுடியாது

இதற்கு  மேலும்  தன்னிடம்  போராடும்  வலு கிடையாது என்பதனால்  வந்தது

On 17/3/2021 at 07:51, விசுகு said:

ஐயா

நான்  எல்லாவற்றையும் செய்து  பார்த்த வரலாற்றுடனும்

எனது  சொந்த அனுபவத்துடனும்  இருந்து  கொண்டு

அதன் உச்ச விரக்தியில்  பேசுகின்றேன்

அப்படியா? என்ன செய்வது, உங்கள் விதி அப்படி. 

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

இலவசமாக கொடுத்தால் என்னையும் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போவார்கள் என்று தெரியும். ஆகவே

பகிங்கரமாக உங்கள் யோசனையை  அறிவியுங்கள் தீர்வு கிடைக்கப்பெற்றபின். உங்களுக்கான  படி வழங்கப்படும். (எனக்கு முழு நம்பிக்கையுண்டு  தீர்வு கிடைக்காது ) ஆனால் இப்போதே  உறுதி தருகிறோம்  இனிமேல் உங்களை எறி மிதிப்பதில்லையென...

Link to comment
Share on other sites

2 hours ago, Kandiah57 said:

பகிங்கரமாக உங்கள் யோசனையை  அறிவியுங்கள் தீர்வு கிடைக்கப்பெற்றபின். உங்களுக்கான  படி வழங்கப்படும். (எனக்கு முழு நம்பிக்கையுண்டு  தீர்வு கிடைக்காது ) ஆனால் இப்போதே  உறுதி தருகிறோம்  இனிமேல் உங்களை எறி மிதிப்பதில்லையென...

ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு இன்னமும் விரக்தி, வேதனை எல்லாம் ஆரம்பமாகவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை இல்லை  உங்கள் பதிவுகளைத்தொடர்த்தும் படித்தால்  இனி  வரலாம்.😍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

இது வரை இல்லை  உங்கள் பதிவுகளைத்தொடர்த்தும் படித்தால்  இனி  வரலாம்.😍

கையில் வைத்துக் கொண்டு தரமாட்டேன் தரமாட்டேன் என்று வேடிக்கை காட்டினால் விரக்தி வேதனையா வரும்???

வாழ்க மௌனம்......

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.