Jump to content

“என்ன கட்சி, நம்ம கட்சி?”


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெறுனர்:
முத்துசாமி, தலைவர்
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி
தலைமைச் செயலகம்
--------------------??

“என்ன கட்சி, நம்ம கட்சி?”
***************************
அன்புள்ள முத்துசாமி அவர்களுக்கு,
முதலில் உங்கள் இலங்கை பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் திடீரெண்டு கட்சி தொடங்கினது எங்களுக்கெல்லாம் சரியான அதிர்ச்சியெண்டால், அதைவிட அதிர்ச்சி நீங்கள் ஆறு மாசத்துக்கு முதலே இந்தக் கட்சி தொடங்கிட்டன் என்று சொன்னதுதான்.

உங்கட ஊடக மகாநாட்டில நீங்கள் கதைச்சதைக் கேட்டாப் பிறகு உங்களை நிறையக் கதைக்கோணும், கேள்விகள் கேட்கவேணும் போல கிடந்துது. அதுதான் இந்தக் கடிதம் எழுதுறன்.

போன மாசம்தான் திடீரெண்டு திரிபுரா முதல்வர், இலங்கையிலையும் நேபாளத்திலையும் பா.ஜ.க. கட்சி கிளை திறக்கப்போறதா ஒரு அறிக்கை விட்டார். அதைக் கேட்ட உடன எங்கட சிங்கள தலைவர்மார் அதுக்கு எதிரா அறிக்கை விட்டினம். எங்கட சிலோன் சிவசேனைத் தலைவர், இலங்கையில் பாஜக கிளையை தொடங்க இங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்றும் அப்பவே அறிக்கை விட்டார். 

உதை உப்பிடியே விட்டாப் பிரச்சினையெண்டு,  இலங்கை தமிழர் பகுதிகளில் தேவையற்ற விதத்தில் அழுத்தங்களை உண்டாக்குவதற்காக இவ்வாறான கருத்தொன்று வெளியிடப்பட்டுள்ளதா என்று அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சொன்னார். போதாதுக்கு இலங்கைத் தேர்தல் ஆணையாளரும், அப்பிடியெல்லாம் இங்கை அவை வந்து கட்சி தொடங்கேலாது என்றும் சொன்னார். 

பிறகு ஒரு சத்தம் சந்தடியில்லாம நீங்கள் மீடியாவைக் கூப்பிட்டு இலங்கை பாரதிய ஜனதா கட்சி தொடங்கினதா சொன்னீங்கள். ஆனால், “கட்சி தொடங்கிற திட்டமிருக்கு” என்று சொன்ன சச்சி அங்கிளை உங்களோடை காணேல்லை. என்ரை கேள்வியே என்னெண்டா, அதுதான் இதுவா? இல்லையெண்டா, அவருக்கு முந்திக் கொண்டு நீங்கள் தொடங்கிட்டீங்களா? அல்லது சினிமாக்காரன் நல்ல படத் தலைப்புகளை பதிவு செய்து வச்சிட்டு தேவைப்படுகிற தயாரிப்பாளருக்கு விக்கிற மாதிரி சச்சி அங்கிளிட்டை இந்தக் கட்சியை பிறகு நல்ல விலைக்கு விக்கிற பிளான் ஏதும் இருக்குதா?

உங்கட கட்சி இப்போதைக்கு தேர்தலில போட்டியிடாதெண்டு சொல்லிட்டியள். ஆனால் உங்கட கட்சியின்ர பேர் “இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி”. இதைத் தமிழிலை சொன்னா, “இலங்கை இந்திய மக்கள் கட்சி”. அப்பிடியெண்டா எதிர்காலத்தில இரண்டு நாட்டிலையும் தேர்தலில போட்டியிடுவீங்களா?

இந்தக் கட்சியை நீங்கள் தொடங்கி ஆறு மாசமாச்சு என்றும் கூட்டதில நீங்கள் சொன்னீங்கள். அப்ப ஆயிரத்து ஐநூறு பேர் கட்சியில இருந்ததாவும் சொன்னீங்கள். இப்ப இந்தக் கட்சிப் பெயரை அறிவிச்ச உடனை அவையெல்லாம் விட்டிட்டுப் போட்டினம் என்று நீங்கள் சோகமாச் சொன்னதைக் கேட்க எனக்கே அழுகை வந்திட்டுது. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?  ஆனாலும் இந்தக் கதையைக் கேட்கேக்கை எனக்கென்னவோ facebookஇல இருந்த 1502 friendsஇல திடீரெண்டு    1500 பேர் unfriend பண்ணிட்டாங்கள் என்று சொல்லுறீங்களோ எண்ட மாதிரித்தான் இருந்துது.

என்ர கேள்வி என்னென்டா, ஆறுமாசத்துக்கு முதல் உங்கட கட்சியின்ர பேர் என்ன? கொள்கைகள் என்ன? இந்தப் பெயரை ஏன் அவைக்குப் பிடிக்கேல்லையாம்? பாரதிய ஜனதாக் கட்சியை தொடங்குற யோசனை இருக்கெண்டு போனமாதம் சொன்ன சச்சி அங்கிளுக்கு நீங்கள் ஆறுமாதத்துக்கு முன்னமே கட்சி தொடங்கினது எப்பிடித் தெரியாமல் போச்சு?

 இப்ப இருக்கிற தமிழ் கட்சிகள் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுக்கேல்லை என்று சொல்லுற நீங்கள் உங்கட கட்சி மேம்பாட்டுத் திட்டங்களிலை கவனம் செலுத்தும் என்றும் சொல்லுறீங்கள். நீங்கள் கல்வி, ஆங்கிலக் கல்வி, விளையாட்டு, வருமான ஊக்குவிப்பில கவனம் செலுத்தும் என்றும் சொல்லுறீங்கள். அப்பா நீங்களும் அடிப்படை உரிமைக்காகக் குரல் கொடுக்க மாட்டீங்களா? அல்லது ஆங்கிலக் கல்வியும் விளையாட்டும்தான் அடிப்படை உரிமை என்று சொல்லுறீங்களா?

நீங்கள் கட்சி அறிவிச்சு இரண்டு நாளிலை ஆனந்த சாகர என்ற தேரர், இப்பிடி இந்தியக் கட்சிகள் இலங்கையில கிளை திறக்கிறது இலங்கைக்கு ஆபத்து என்றும், இனிமேல் இப்படியான ஊடகவியலாளர் சந்திப்புகளை நடக்க விடக்கூடாதென்றும் சொல்லியிருக்கிறார். 

அவர் சொன்னதைக் கேட்டாப் பிறகுதான் நீங்கள் யார் என்று சனங்கள் இன்னும் சந்தேகப்படுகினம். அதாவது திரிபுரா முதல்வரும் எங்கடை இலங்கை சிவசேனைத் தலைவரும் சொன்ன மாதிரி கட்சி தொடங்கமுன்னமே அதே பெயரில கட்சி தொடங்கினது தெற்கு அரசியல்வாதிகளின் திட்டமிட்ட செயற்பாடோ என்று இப்ப நிறையப்பேர் சந்தேகப்படுகினம். 

அதைவிட, அரசாங்கம் தான் முகம் கொடுக்கிற பொருளாதார அரசியல் நெருக்கடிகளை மறைக்கவும் மக்களைத் திசை திருப்பவும் இப்பிடிச் செய்யுதோ என்ற கேள்வியையும் ஆக்கள் கேட்கத் தொடங்கிட்டினம். இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி குடுக்க இந்தியாதான் உங்களைப் பாவிக்குது என்றும் சிலர் சொல்லுகினம். இப்பிடி ஆளாளுக்கு ஒரு கதை சொல்லுகினம். இதில எதுதான் உண்மையென்றதைச் சொன்னால் உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

அது ஒரு பக்கமெண்டால், இவை எதுக்காக யாழ்ப்பாணத்தில போய்க் கூட்டம் வைச்சவை என்று இன்னொரு குரூப் கேள்வி கேக்குது. உங்கட ஊர் யாழ்ப்பாணம் இல்லையெண்டு நீங்கள் பேசுற தமிழிலையே தெரியுது. அதனால்தான் எனக்கும் அந்தக் கேள்வியைக் கேட்கவேணும் போல கிடந்தது. நீங்கள் ஏன் உந்தக் கூட்டத்தை கொழும்பில அல்லது கண்டியல வைக்கேல்லை. அங்கை வச்சிருந்தா சிங்கள ஆங்கில ஊடகங்களும் வந்திருக்குமெல்லோ? உங்கட கட்சிக்கும் நிறைய ஆக்களைச் சேர்த்திருக்கலாமேல்லோ?

 உங்கட கட்சி தொடர்பாக பிக்குமாரும் சில அரசியல்வாதிகளும் சந்தேகப்படுறதுக்கு நீங்கள் நல்லா இருக்கு என்று சொல்லி வைச்சுக் கொண்ட பெயர்தான் காரணம். நீங்கள் ஆறுமாதத்துக்கு முன்னம் கஷ்டப்பட்டுச் சேர்த்த ஆயிரத்து ஐந்நூறு பேரும் உங்களைக் கைவிட்டதுக்கும் உந்தப் பெயர்தான் காரணம் என்று நீங்களே சொல்லுறீங்கள். பிறகேன் அந்தப் பெயரைக் கட்டிபிடிச்சுக் கொண்டு நிக்கிறியள்?

எனக்கொரு யோசனை வருகுது. உங்களுக்குப் பிடிச்சிருந்தா செய்யுங்கோ! உங்கட “கட்சி” மாணவர்களின் கல்வியையும் விளையாட்டையும் வளர்க்கவே எண்டு சொல்லியிருக்கிறீங்கள். ஆனால் “பாரதிய” என்ற சொல்லுத்தான் ஆக்களைக் குழப்புது. எனக்குத் தெரிஞ்சு பிள்ளைகள் கல்வியோடு விளையாட்டிலையும் ஈடுபடவேணும்என்று சொன்னவர் மகாகவி பாரதியார். அதைவிடத் தமிழ் ஆக்கள் எல்லாருக்குமே பிடிச்ச தமிழ்க் கவிஞர் வேறை. பேசாமல் உங்கடை கட்சிக்கு “இலங்கை பாரதியார் மக்கள் கட்சி” என்று பெயரை வையுங்கோ. உங்கடை குறிக்கோளுக்கும் பொருத்தமா இருக்கும். சின்னத்துக்கும் சிரமப்படத் தேவையில்லை. மக்களும் உங்களோட சேர்ந்தாலும் சேருவினம்.

சின்னம் என்டதும்தான் ஞாபகம் வந்துது. நீங்கள் உங்கட கட்சிக்கு என்ன சின்னத்தைத் தெரிவு செய்திருக்கிறீங்கள்? இந்திய பா.ஜ.க. தாமரையைப் பாவிக்குது. இலங்கையில ஒரு கட்சி ஏற்கனவே தாமரை மொட்டைப் பாவிக்குது. நீங்கள் பேசாமல் தாமரை இலையைப் பாவிக்கலாம். ஏனென்டால், நீங்கள் பிறகு தேர்தலில போட்டி போடுற யோசனை வந்தாலும் மக்களுக்கு தாமரை இலையை ஞாபகப்படுதுறது சுலபமேல்லோ. வேணுமெண்டால் தாமரை இலையில ஊர் ஊரா அன்னதானம் போட்டால் சனம் கடைசிவரைக்கும் உங்கடை சின்னத்தை மறக்காது. 

கழகம், சங்கம் என்று பெயர் வைச்சா அரசாங்கம் கணக்கெடுக்காது. அரசியல் கட்சியென்றால் அரசாங்கத்தைச் சந்தித்துப் பேசலாம் என்று தேர்தலில போட்டியிடாமல் “கட்சி” என்று பெயர் வைச்சதுக்கு நீங்கள் சொன்ன காரணம்தான் என்னைப் புல்லரிக்க வைச்சிட்டிது. ஆனால் இந்த விஷயம் மட்டும் சில புலம்ஸ் பெயர் மக்களுக்குத் தெரிந்தால் அவர்களில் சிலர் தாங்களும்  சனாதிபதியை சந்திக்க இதுதான் வழியென்று ஆளுக்கொரு கட்சி தொடங்குவார்களோ என்று நினைச்சாலே வயிற்றைக் கலக்குது.

அதேமாதிரி, நீங்கள் இப்ப உப்பிடி ஒரு பெயரில கட்சி தொடங்கினதைப் பாத்திட்டு ஆராவது “இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம்”, “இலங்கை அ.திமு.க.”, “இலங்கை நாம் தமிழர் கட்சி” என்றெல்லாம் கட்சி தொடங்கி இல்லாத புதுப் பிரச்சினைகளைக் கொண்டு வருவாங்களோ என்றுதான் எனக்குப் பயமாக் கிடக்கு.

கடைசியா, கடிதத்தை முடிக்க முன்னம் ஒரேயொரு கேள்வி. உங்கட spoken English class எப்ப தொடங்குறீங்கள்? நானும் சேர ஆவலா இருக்கிறன்.

நன்றி, வணக்கம் !!
இப்படிக்கு,
பாமரன்.
 

https://www.facebook.com/101881847986243/posts/289692099205216/?d=n

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.