Jump to content

கொரோனா தடுப்பூசி மருந்தால் ரத்தம் உறைகிறதா? தீவிரமாகும் சர்ச்சை - திட்டத்தை தொடர ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி மருந்தால் ரத்தம் உறைகிறதா? தீவிரமாகும் சர்ச்சை - திட்டத்தை தொடர ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்

17 மார்ச் 2021
கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், REUTERS

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தயாரிப்பான ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு அறிகுறிகள் ஏற்படுவதற்கான ஆபத்து கிடையாது என்ற ஆய்வு நிறுவனத்தின் வாதத்தை உறுதிபட நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஐரோப்பிய மருந்துவ ஏஜென்ஜி தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரத்தில் முன்னர் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய தங்களின் அமைப்பு எடுத்த முடிவில் உறுதியுடன் இருப்பதாக அந்த அமைப்பின் தலைமை அதிகாரி எமெர் குக் தெரிவித்துள்ளார். 

ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி போட்டுக் கொண்ட நோயாளிகள் பலருக்கு ரத்தம் உறைவதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சில நாடுகள் அந்த தடுப்பூசி போடும் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி நடத்தி வரும் நிலையில், தடுப்பூசி திட்டத்தை நிறுத்த வேண்டாம் என சம்பந்தப்பட்ட நாடுகளை உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த நிலையில், ஐரோப்பாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 17 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 37 பேர் மட்டுமே ரத்த உறைவு பாதிப்பை எதிர்கொண்டது தெரிய வந்துள்ளதாக ஆஸ்ட்ராசெனீகா கூறியுள்ளது. இதேபோல, ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சியும் தடுப்பூசி போட்டுக் கொண்வடவர்களில் எல்லோருக்கும் இதுபோன்ற ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளது. 

அந்த அமைப்பின் தலைமை அதிகாரி எமெர் குக், "ரத்த உறைவு பிரச்னையால் பலரும் ஐரோப்பாவில் இருப்பதாக அறிகிறோம். ஆனால், அந்த பாதிப்பு, தடுப்பூசியின் விளைவா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இதேவேளை, கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றலை ஆஸ்ட்ராசெனீகா மருந்து பெற்றுள்ளது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார். 

இதுவரை ரத்த உறைவு பிரச்னையை எதிர்கொண்டவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முழுமையான முடிவுகளை ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி வரும் வியாழக்கிழமை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஐரோப்பிய நாடுகள் என்ன செய்கின்றன?

கொரோனா வைரஸ்

ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்பட்டதையடுத்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள், அந்த தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்தியிருக்கின்றன. ரத்த உறைவு என்பது ரத்தத்தின் ஓட்டத்தில் தடங்களை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதை உடனடியாக சீராக்காவிட்டால் அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக அமையும். 

இந்த நிலையில், தங்கள் நாட்டில் தடுப்பூசி திட்டம் இடைநிறுத்தப்பட்டது பற்றி ஜெர்மனி சுகாதார அமைச்சர் யென்ஸ் ஸ்ஃபான் கூறும்போது, "இது ஓர் தொழில்முறை முடிவு. நாட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பரிந்துரை பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை," என தெரிவித்தார். 

ஜெர்மனி நிதித்துறை அமைச்சர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், "ஐரோப்பிய மருந்துகள் ஏஜென்சி இந்த விவகாரத்தில் எடுக்கும் முடிவைத் தொடர்ந்து மீண்டும் ஆஸ்ட்ராசெனீகா மருந்தை பயன்படுத்துவது பற்றி முடிவு செய்யப்படும்," என கூறியுள்ளார். 

ஆஸ்ட்ராசெனீகா தடுப்பு மருந்தின் குறிப்பிட்ட சில விநியோக பிரிவுகளில் இருந்து வந்த மருந்துகளின் பயன்பாட்டை ஆஸ்திரியா நாடு இடைநிறுத்தியிருக்கிறது. இதேசமயம், பெல்ஜியம், போலாந்து, செக் குடியரசு, யுக்ரேன் ஆகிய நாடுகள், தொடர்ந்து ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளன. 

உலக அளவில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சமீப வாரங்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு மத்தியில் தடுப்பூசி திட்டங்கள் பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வந்தாலும், அதிகரிக்கும் பாதிப்புகளுக்கு இணையாக ஐரோப்பாவில் தடுப்பூசி மருந்துகளின் விநியோகம் இல்லை என்ற கவலை சில நாடுகளுக்கு உள்ளது. 

இதேவேளை, இத்தாலி நாட்டில் தடுப்பூசி பயன்பாட்டை இடைநிறுத்திய நடவடிக்கை ஓர் அரசியல் முடிவு என்று கூறியிருக்கிறார் அதன் மருந்துவ துறை தலைமை இயக்குநர் நிகோலா வரினி. "ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசி மருந்து மிகவும் பாதுகாப்பானது என்றும் அதை பெற்றுக் கொண்டவர்களின் விகிதத்துடன் ஒப்பிடுகையில், பரவலாக சாதகமான முடிவுகளே வந்துள்ளன" என்று அவர் தெரிவித்தார். 

ஆஸ்ட்ராசெனீகா விளக்கம் என்ன?

கொரோனா வைரஸ்

 

தடுப்பூசி காரணமாக ரத்த உறைவு ஏற்படும் அபாயம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் முழுவதும் 15 நரம்பு ரத்த உறைவு (டிவிடி) பிரச்னையை எதிர்கொண்ட நிகழ்வுகள், ஒரேயொரு நரம்பில் ரத்தம் உறைந்த நிகழ்வு மற்றும் நுரையீரல் தக்கை அடைப்பு தொடர்பான 22 நிகழ்வுகள், நுரையீரலுக்குள் நுழைந்த ரத்தம் உறைதல் ஆகிய நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. 

இந்த புள்ளிவிவரங்கள் "பொதுவான மக்கள் தொகையில் இயல்பாகவே காணப்படும் பிரச்னைகளின் அறிகுறியே தவிர, உலகின் பிற பகுதிகளில் தங்களின் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை குறைவு" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆக்ஸ்ஃபோர்டு-ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை தயாரித்த ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி குழுவின் இயக்குநர் பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்ட் பிபிசியிடம் பேசும்போது, "ஐரோப்பாவில் பெரும்பாலான தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனில் ரத்த உறைவு நிகழ்வு தொடர்ச்சியாக இருக்கவில்லை" என கூறியுள்ளார். 

பின்லாந்து நாட்டில் இந்த விவகாரம் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டதில் ஆபத்து அதிகரித்ததற்கான அறிகுறி இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த சிக்கலும் இல்லை என்பதுதான் இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய சாரம்சம் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 5.75 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அதன் உறுப்பு நாடுகளில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு திட்டங்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

 

https://www.bbc.com/tamil/global-56424733

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.