-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்! தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு முன்னர் திட்டமிட்ட வாறு நடைபெறும். சுகாதார விதிமுறைகளை பின் பற்றி , மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறும். என தெரிவித்தார். தேசிய வெசாக் நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நயினாதீவு நாக விகாரையில் நடைபெறவுள்ளது. 24ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேவேளை எதிர்வரும் மூன்று வார கால பகுதி எச்சரிக்கை மிக்க கால பகுதி எனவும் ,சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும் , பண்டிகை நிகழ்வுகளை நிறுத்துமாறும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1211676 -
By தமிழ் சிறி · Posted
அதிக அளவு பூக்கள் பூத்தும்... மகரந்த சேர்க்கை இல்லாததால், முருங்கை உற்பத்தி பாதிப்பு. -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மீளமைக்கப்பட்டு இன்று.. திறக்கப்பட்டது! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 8ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். தற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவடைந்ததை தொடர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1211720 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்! தமிழகத்தில் மே மாதம் முதலாம் திகதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே மாதம் முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில், மே மாதம் முதலாம் திகதி முதல் தடுப்பூசியை வழங்குவதற்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி, ஆசிரியர்கள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1211722
-
Recommended Posts