Jump to content

சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம்.. 400 மீட்டர் ராட்சத கப்பல் தரைதட்டியது..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூயஸ் கால்வாயில் டிராபிக் ஜாம்.. 400 மீட்டர் ராட்சத கப்பல் தரைதட்டியது..  

சூயஸ் கால்வாயில் சரக்குகள் தேக்கம்

உலகின் மிகவும் பிசியாக இருக்கும் சூயஸ் கால்வாயில் தைவான் நாட்டின் எவர்கீரின் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற 400 அடி நீளம் கொண்டு ராட்சத சரக்கு கப்பல் இக்கால்வாயின் இரு பக்கத்தின் தரையில் மோதி சிக்கிக்கொண்டு உள்ளது. இதனால் உலகக் கடல் வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் கொண்டு வரும் சரக்குக் கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது.

சூயஸ் கால்வாயில் சரக்குகள் தேக்கம் சுமார் 2.20 லட்சம் டன் எடை கொண்ட இந்தக் கப்பலைத் தரையில் இருந்து விடுவிக்கவும், போக்குவரத்து வழியைச் சரி செய்யவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில், உலக நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சரக்குகள் சூயஸ் கால்வாயில் தேக்கம் அடைந்து பெரும் சுமையாக மாறியுள்ளது.



re-routing செய்யத் திட்டம்

 

re-routing செய்யத் திட்டம் சூயஸ் கால்வாய் வாயிலாக ஒரு நாளில் 50 க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்கள் செல்லும் நிலையில் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்தத் தைவான் நாட்டுக் கப்பலான எவர் கிவன் சிக்கியுள்ளது. இந்தக் காரணத்தால் சரக்குக் கப்பல்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய வழித்தடத்திற்கு re-routing செய்யப்படத் திட்டமிட்டு வருகிறது.
15 நாட்கள் கூடுதல் காலம் இந்த மாற்று வழி பயணத்தின் மூலம் கப்பல் போக்குவரத்து நேரம் சுமார் 15 நாட்கள் அதிகமாகும் என்பதால் உலக நாடுகளும், உலக நிறுவனங்களும் சரியான நேரத்தில் பொருட்கள் பெற முடியாமல் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதோடு போககுவரத்து செலவும் பெரிய அளவில் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
 

 

இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய்

 

இந்தியாவிற்குக் கச்சா எண்ணெய் சூயஸ் கால்வாய் வாயிலாகத் தான் இந்தியாவிற்குத் தினமும் சுமார் 5,00,000 பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டு உள்ள டிராபிக் ஜாம் பிரச்சனையால் இந்தியா அதிகளவில் பாதிப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

15 நாட்கள் கூடுதல் காலம்

 

தென் ஆசிய நாடுகள் இந்தியாவைத் தொடர்ந்து சீனா, தென் கொரியா, சிங்கப்பூர், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அதிகப்படியான கச்சா எண்ணெய் இந்தச் சூயஸ் கால்வாய் வாயிலாகச் செல்கிறது. கடல் வழி போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இந்த டிராபிக் ஜாம் பிரச்சனையால் தென் ஆசிய நாடுகள் அதிகப் பாதிப்பு அடைய உள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான ரஷ்யா, சவுதி அரேபியா, ஈராக், லிபியா, அல்ஜீரியா ஆகிய நாடுகள் சூயஸ் கால்வாய் வழியாகத் தினமும் குறைந்தபட்சம் தலா 2,00,000 பேரல் கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு அனுப்புகிறது. இந்தப் போக்குவரத்து தடையால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

தென் ஆசிய நாடுகள்

Read more at: https://tamil.goodreturns.in/world/ever-given-container-ship-aground-at-suez-canal-could-impact-india-s-oil-delivery/articlecontent-pf115663-022991.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய 'எவர் கிவன்' கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம்

  • ஜஸ்டின் ஹார்ப்பர்
  • வணிகச் செய்தியாளர், பிபிசி நியூஸ்

உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள்.

இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதாகும்.

மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் இந்த சூயஸ் கால்வாய் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான சுருக்கமான கடல்வழி. இதற்கு மாற்று என்றால் ஆப்பிரிக்காவில் உள்ள நன்னம்பிக்கை முனை வழியாக சுற்றிக்கொண்டு செல்வதே ஆகும். இது மிகவும் நீளமான சுற்றுவழி.

ஒவ்வொரு நாளும் இந்த கால்வாய் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 510 கோடி அமெரிக்க டாலர் என்றும், கிழக்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்தின் மதிப்பு 450 கோடி அமெரிக்க டாலர் என்றும் கப்பல் போக்குவரத்து வல்லுநர் லாயிடு தருகிற தரவுகள் தெரிவிக்கின்றன.

கப்பலை மீட்கும் முயற்சிகள் நடந்துவருகின்றன. ஆனால், இந்த வேலை முடிய வாரக்கணக்கில் ஆகும் என்று தெரிகிறது.

"திடீரென வீசிய பலத்த காற்றால் பாதை மாறிப்போன இந்தக் கப்பல் துரதிர்ஷ்டவசமாகத் தரை தட்டியது என்று சந்தேகிக்கப்படுவதாக" எவர்க்ரீன் மரைன் நிறுவனம் கூறுகிறது.

'எவர் கிவன்' என்ற இந்தக் கப்பலை தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் மெரைன் என்ற நிறுவனம் இயக்கி வருகிறது.

இதன் நான்கு கால்பந்து திடல் அளவு நீளம் கொண்ட இந்த கப்பல் உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று. 2 லட்சம் டன் எடை கொண்ட இந்த கப்பல் 20 ஆயிரம் கண்டெயினர்களை கொண்டு செல்லவல்லது.

இந்த கப்பல் குறுக்காகத் திரும்பி தரைதட்டிக்கொண்டதால் அந்த வழியாகச் செல்லவேண்டிய பிற கப்பல்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ல்லவேண்டிய பிற கப்பல்கள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி

பட மூலாதாரம்,SUEZ CANAL AUTHORITY

 
படக்குறிப்பு,

தரைதட்டிய கப்பலை மீட்கும் பணி

உலக வணிகத்தின் அளவு அதிகரித்துவிட்டதால், கடந்த பத்தாண்டில் கண்டெயினர் கப்பல்களின் அளவு கிட்டத்தட்ட இருமடங்காகப் பெருத்துவிட்டது. இதனால், அவை சிக்கிக்கொண்டால் அவற்றை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயலாக மாறிவிட்டது.

உலக வர்த்தகத்தில் 12 சதவீதம் இந்த வழியாகவே நடக்கிறது.

பெட்ரோலியம் தரவி, துணி, அறைகலன்கள், கார்கள், ஆலைத் தயாரிப்புகள் போன்ற நுகர்பொருள்கள் இந்த கால்வாய் வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன.

லாயிடு தரும் தரவுகளின்படி கால்வாயின் இரு புறமும் 160 கப்பல்கள் தற்பது காத்துக்கொண்டிருக்கின்றன. இவற்றில் 41 பெரிய சரக்குக் கப்பல்கள், 24 கச்சா எண்ணெய் கப்பல்கள்.

ஒவ்வொரு நாள் தாதமத்தையும் சரி செய்ய இரண்டு நாள்கள் தேவைப்படும் என்கிறார் ஓ.எல். யுஎஸ்ஏ என்ற போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஆலன் பேயர்.

தரைதட்டியிருக்கும் கப்பலில் பல்லாயிரக்கணக்கான நுகர்பொருள் கண்டெயினர்களோடு ஏற்றுமதிக்குத் தேவையான காலி கண்டெய்னர்களும் உள்ளன.

அவசர காலத் திட்டம்

தரைதட்டிய கப்பலால் ஏற்படும் தாமதம் சில நாள்களாக இருந்தால், பெரும்பாலான நிறுவனங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், மீட்புப் பணி சில வாரங்கள் வரையில்கூட ஆகலாம் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர். இதனால், ஏற்கெனவே கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக விநியோக வலைப்பின்னல் இன்னுமொரு பேரிடியை சந்திக்கிறது.

கப்பலில் கண்டெயினர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மீட்புப் பணிக்கு எத்தனை நாள்கள் ஆகும் என்று சொல்ல முடியாத நிலை நீடிக்குமானால், கப்பல்கள் ஆப்பிரிக்காவிந் நன்னம்பிக்கை முனையை சுற்றிக்கொண்டு போகவேண்டும். இதற்கு 7 முதல் 9 நாள்கள் கூடுதலாகத் தேவைப்படும் என்று தெரிவிக்கிறார் பேயர்.

சில நிறுவனங்கள் அதிக விலையுள்ள சரக்குகளை விமானத்திலோ, ரயிலிலோ அனுப்ப நினைக்கலாம்.

ஆனால், சரக்குகள் ஏற்கெனவே கப்பலில் ஏற்றப்பட்டுவிட்டால், கப்பல் போக்குவரத்து நிறுவனமோ, கொள்முதல் செய்தவர்களோ, இந்த சரக்குகள் வந்து சேரும் நேரத்தை மாற்றியமைக்க எதுவும் செய்ய முடியாது என்கிறார் அவர்.

மேயர்ஸ்க், ஹபக்-லாயிடு என்ற இரண்டு பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழியை தவிர்ப்பது குறித்து ஆலோசித்துவருவதாக கூறியுள்ளன.

பிரும்மாண்ட மண்வாரி இயந்திரங்கள், தூர்வாரி இயந்திரங்கள், இழுவைப் படகுகள் ஆகியவற்றின் துணையோடு தரைதட்டிய கப்பலை மீட்க தம்மாலான அனைத்தையும் செய்துவருவதாக எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையம் கூறுகிறது.

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய 'எவர் கிவன்' கப்பல்: தினமும் 70 ஆயிரம் கோடி ரூபாய் சரக்கு தேக்கம் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு என்னதான் புத்திகூர்மை  மிதமிஞ்சி இருந்தாலும் இயற்கை ஒரு சின்ன சிலுப்பு சிலுப்பினாலே உலக பொருளாதாரம் ஆடிப்போய்விடும்.:cool:
கொரோனாவையும் சேர்த்து தான் சொல்லுறன்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லியன்கணக்கில் உழைக்கிறார்கள் இப்படியான விபத்துக்கள்  நடந்தால் என்ன செய்வது என்பதை பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்கள்  ஒரே ஒரு புல்டோசர் படங்களில் காணப்படுது  2லட்சம் டன் கப்பலுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

எவர் கிவன்' என்ற இந்தக் கப்பலை தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் மெரைன் என்ற நிறுவனம் இயக்கி வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பெருமாள் said:

பில்லியன்கணக்கில் உழைக்கிறார்கள் இப்படியான விபத்துக்கள்  நடந்தால் என்ன செய்வது என்பதை பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்கள்  ஒரே ஒரு புல்டோசர் படங்களில் காணப்படுது  2லட்சம் டன் கப்பலுக்கு .

வெள்ளைக்காரன் தன்ரை நன்மைக்காக மூளையை பாவித்தான். அவ்வளவுதான்....😁
அதோடை முடிஞ்சுசுது ஆசிய ஆபிரிக்க  வளர்ச்சி.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of outdoors
முக்கிய பாதையில் அபூர்வ விபத்து!
 
புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி
சூயஸ் கால்வாயை முடக்கியது!!
பிரான்ஸின் துளுசில் உள்ள CNES - Airbus விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளி யிட்ட செய்மதிப் படத்தையே கீழே காண் கின்றீர்கள்.
படத்தில் தெரிகின்ற பாரிய சரக்குக் கப்பல் (mega-container ship) சூயஸ் காலவாய்க்குக் குறுக்கே-இடக்கு முடக்காக- கரைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு கால்வாயை மூடி கடற்போக்கு வரத்தை அடைத்தபடி நிற்கின்றது.
இதனால் உலகின் படு பிஸியான ஒடுங்கிய கடல் வழி தடுக்கப்பட்டிருப்பது சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை உலுக்கி விட்டிருக்கிறது.
வீதியின் நடுவே விபத்து நடந்தால் வாகனங்கள் இருபுறமும் தடைப்பட்டு நிரையாக நிற்பது போல் 120 மைல் நீளமான கால்வாயைக் கடப்பதற்காக 206 கப்பல்கள் வரை இருபக்கமும் காத்து நிற்கின்றன. அவற்றில் 41 பாரிய கப்பல்களும் 21 மசகு எண்ணெய்த் தாங்கிகளும் அடங்கும்.சில கப்பல்கள் திசை திருப்பி விடப்பட்டு நடுக்கடலில்
நக்கூரமிட்டுள்ளன.
உலக கப்பல் போக்குவரத்து மார்க்கத் தின் மிக முக்கிய கேந்திரமான சூயஸ் கால்வாய் தடைப்பட்டிருப்பது பல பில்லியன் டொலர்கள் வர்த்தகத்தை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முடக்கி உள்ளது.உலக சந்தையில் எரிபொருள் விலைகள் எகிறி உள்ளன.
கப்பலுக்கு என்ன நடந்தது?
பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட "எவர் கிவ்வின்" (Ever Given) என்ற பெயர் கொண்ட கப்பலே இவ்வாறு சிக்கி உள்ளது. நான்கு உதைபந்தாட்டத் திடல்களின் மொத்தப் பரப்பைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கொள் கலன் கப்பல்களில் ஒன்று அது. ஜப்பானிய உரிமையாளர் ஒருவருக்குச் சொந்தமானது. தாய்வானின் 'எவகிறீன் மரைன் (Evergreen Marine) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 20 மாடிக் கட்டடத்தின் உயரத்தை ஒத்த 400 மீற்றர்கள் (1400 அடி)
நீளமும் 59 மீற்றர் அகலமும் கொண்டது.
200 ஆயிரம் தொன் நிறையுடைய அக் கப்பலில் 20 ஆயிரம் பாரிய கொள்கலன் கள் ஏற்றப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து நெதர்லாந்தின் றொட்டடாம்(Rotterdam) துறைமுகத்துக் குச் சென்றுகொண்டிருந்த வழியில் அது செங்கடல் ஊடாக எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் நுழைந்த சமயம் கடும் புயல் காற்றில் சிக்கியது என்று கூறப்படுகிறது.மணல் புளுதியுடன் கூடிய புயல் காற்று அந்த ராட்சதக் கப்பலின் கட்டுப்பாட்டை மாலுமியிடம் இருந்து பறித்தெடுத்ததுவிட்டது.
புயலின் வேகம் 200 ஆயிரம் தொன் எடை கொண்ட கப்பலை நிலைகுலையச் செய்து பயண வழிக்குக் கிடையாக- கால்வாய்க்குக் குறுக்கே- திருப்பி விட்டுள்ளது. கப்பலின் முன்னும் பின்னுமான இரு புறங்களும் கால் வாயின் இரு பக்க மணல் கரைகளோடும் தரை தட்டியதால் இடக்கு முடக்காக நடுவில் இறுக்குப்பட்டு நிற்கிறது கப்பல்.
கப்டன் உட்பட இருபது மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேறி உள்ளனர். கப்பலுக்கு சேதங்களோ எண்ணெய்க் கசிவுகளோ இன்னும் ஏற்படவில்லை.
கப்பலை மீட்க முடியுமா?
பொறிக்குள் சிக்கியது போலக் காணப் படுகின்ற அந்தக் கப்பலை மீட்டெடுத்து மீண்டும் அதன் பயண வழிக்குத் திருப்பு கின்ற பகீரத முயற்சிகள் பெருமெடுப்பில் தொடங்கப்பட்டுள்ளன.
அதன் பாரிய எடை காரணமாக மீட்பு முயற்சி இலகுவானது அல்ல என்று நிபு
ணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு நாட்கள், வாரங்கள் ஆகலாம் என்று மதிப்பிடப்படுகிறது. கப்பலின் சுமையைக் குறைத்தால் மட்டுமே அதனை நகர்த்த முடியும் என்ற நிலை. எனவே முதலில் அதிலிருந்து கொள்க லன்கள் வேறு சிறிய படகுகளுக்கு இறக் கப்பட்டு வருகின்றன. ஆனால் அது இலகுவானதல்ல. வெற்றியளிக்கும் அறிகுறி தெரியவில்லை.
கப்பலின் முன், பின் பகுதிகள் கால் வாயின் கரையோர மண்ணில் பொறுத் துப்போய் நிற்பதால் பாரிய இயந்திரங் களின் உதவியோடு மண்ணை அகழ்ந்து கரைப்பகுதிகளை அகலப்படுத்தும் வேலைகளும் முழு மூச்சில் இரவு பகலாக நடைபெறுகின்றன. சேதம் இன்றிக் கப்பலை நகர்ந்துவதற்கு கால்வாய்க் கரைகளை அகழ்ந்து ஆழமாக்குவதே
ஒரே வழி என்று நிபுணர்கள் கூறுகின் றனர்.
எகிப்தின் கோரிக்கையை அடுத்து நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட Royal Boskalis என்ற நிறுவனம் தனது நிபுணர்கள், இயந்திரங்கள் சகிதம் கப்பலை மீட்கும் அணியில் இணைந்து கொண்டுள்ளது. கடற்போக்குவரத்து
மற்றும் கடற்கட்டுமானங்கள், பராமரிப்பு தொடர்பான சேவைகளை சர்வதேச ரீதி
யில் வழங்கிவருகின்ற பெரிய, நிபுணத் துவம் வாய்ந்த நிறுவனம் Royal Boskalis ஆகும்.
எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் (Suez Canal) மாபெரும் மனித உழைப்பினால் 1869 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்
டது. மத்திய தரைக்கடலையும் செங் கடலையும் இணைக்கின்ற அது ஆபிரிக்
காவை ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வட்டகைகளில் இருந்து பிரிக்கின்றது.
சூயஸ் கால்வாய் இதுபோன்ற ஒரு
கப்பல் விபத்தால் துண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இதற்கு முன்பு போர்கள், போர் பதற்றங்கள் காரணமாக கால்வாய் மூடப்பட்டதுண்டு.
உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளில்
12 சத வீதம் சூயஸ் கால்வாயில் தங்கி இருக்கிறது. அதில் எரிபொருள் முக்கிய மானது. மனித முயற்சியால் நூற்றாண்டு டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட அந்தக் கால்வாயூடான கடற் போக்குவரத்து தடைப்படுவது நாளொன்றுக்கு 9.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகப் பொருள்களை முடக்குகின்றது எனக் கப்பல் போக்கு வரத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற சர்வதேச கடல் வர்த்தக நடவடிக்கை
களை சூயஸ் கால்வாயின் இந்த முடக்கம் மேலும் தாக்கியுள்ளது என்று பொருளா தார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.
-------------------------------------------------------------------
குமாரதாஸன். பாரிஸ்.

############   ##############   #############

On 27/3/2021 at 10:04, பெருமாள் said:

பில்லியன்கணக்கில் உழைக்கிறார்கள் இப்படியான விபத்துக்கள்  நடந்தால் என்ன செய்வது என்பதை பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்கள்  ஒரே ஒரு புல்டோசர் படங்களில் காணப்படுது  2லட்சம் டன் கப்பலுக்கு .

May be an image of outdoors and text that says 'EVERGREEN'

கப்பலை, இப்படித்தான்...  தூக்க  வேண்டும் போலுள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலில் உள்ள  ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்

கெய்ரோ, 

எகிப்தில் சூயஸ் கால்வாயில் சிக்கிய ராட்சத சரக்கு கப்பலை நகர்த்துவதில் சிக்கல் தொடர்கிறது. இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக உள்ளது. 1869-ம் ஆண்டு திறக்கப்பட்ட 193 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கால்வாய் உலகின் முக்கிய நீர்வழிகளில் ஒன்றாகும்.


ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச்செல்ல வேண்டியதை தவிர்த்து பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயண தூரத்தை குறைக்கும் நோக்கில் இந்த கால்வாய் கட்டப்பட்டது.‌ சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்தில் இந்த சூயஸ் கால்வாயின் பங்கு மிக முக்கியமானது. உலகளாவிய வர்த்தக கப்பல் போக்குவரத்தில் சுமார் 12 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது.

இந்நிலையில் சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.

இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 280-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு நாளும் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள் தெரிவிக்கின்றன.

அதாவது ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப்போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த ராட்சத சரக்கு கப்பலை கால்வாயின் கரையில் இருந்து நகர்த்தி மீண்டும் மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் கடந்த 5 நாட்களாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதனால் சூயஸ் கால்வாயின் தெற்கு முனையில் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 10 இழுவைப் படகுகளும், இரண்டு அகழ்வு எந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் மேலும் இரு இழுவை படகுகள் கப்பலை மிதக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

வெள்ளிக்கிழமை அந்த கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், கப்பலின் இடது பக்கத்தில் இருக்கும் மணல் மற்றும் சகதியை நீக்கும் முயற்சிகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் எவர் கிவன் கப்பலுக்கு தொழில்நுட்ப மேலாண்மை செய்யும் பெர்னார்டு ஷூல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு 2,000 கியூபிக் மீட்டர் சக்தியை உறிஞ்சி எடுக்கும் அகழ்வு எந்திரம் வியாழன் முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த கப்பலின் உரிமையாளரான ஜப்பானைச் சேர்ந்த ஷோய் கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ கப்பலை மீண்டும் மிதக்கவைப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும், இவை எதுவுமே பலன் தராத பட்சத்தில் கப்பலில் உள்ள கன்டெய்னர்கள் அனைத்தையும் அகற்றி விட்டு கப்பலை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். ஆனால் இது சற்று கடினமானதாக அமையும் என்று அவர் கவலை தெரிவித்தார்.

இதனிடையே கப்பலை நகர்த்தும் பணியில் எந்தவித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் கடலில் காத்திருக்கும் கப்பல்களில் சில தங்கள் பாதையை மாற்ற தொடங்கியுள்ளன.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு சுமார் 2 வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவு கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும். இதனால் பெரும்பாலான கப்பல்கள் சூயஸ் கால்வாய் திறப்புக்காக தொடர்ந்து காத்து நிற்கின்றன.

இந்த நிலையில், சிக்கிக்கொண்டுள்ள சரக்கு கப்பலில் உள்ள  25 பணியாளா்களும் இந்தியா்கள் என்றும், எகிப்து நாட்டின் கால்வாய் ஆணையத்தின் இரண்டு மாலுமிகளும் கப்பலில் உள்ளனா் கப்பல் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/World/2021/03/28062804/They-are-all-Indians-25member-crew-of-giant-ship-blocking.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூயஸ் கால்வாயில் சிக்கி கொண்ட சரக்குக் கப்பலை மீட்க முடியாமல் திணறல் மணிக்கு ரூ. 2,900 கோடி இழப்பு
 

சூயஸ் கால்வாயில்  சிக்கி கொண்ட சரக்குக் கப்பலை மீட்க முடியாமல்  திணறல்  மணிக்கு ரூ. 2,900 கோடி இழப்பு

 

சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் சிக்கி, அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதன் காரணமாக மணிக்கு 40 கோடி டாலர்( இந்திய மதிப்பில் ரூ.2,900 கோடி) இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிவு: மார்ச் 26,  2021 22:52 PM

ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும் ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீர்வழித்தடமாக சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக அறியப்படுவது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் இந்த பாதையைப் பயன்படுத்தி வருகின்றன.


குறித்த கப்பலை கூடிய விரைவில் மீட்கவில்லை என்றால் உலகப்பொருளாதாரமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

1869-ஆம் ஆண்டில் நிறைவுசெய்யப்பட்ட அந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, குறுக்கே சிக்கிக் கொண்ட கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

400 மீட்டர் நீளமும் 2 லட்சம் டன் எடையும் கொண்ட அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா்.இந்த நிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள பிரம்மாண்டமான சரக்குக் கப்பல் காரணமாக அந்த கடல்வழிப் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மணிக்கு ரூ.2,900 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதி புயலால் சிக்கி நின்ற சரக்குக் கப்பலை மீட்க முடியாமல் கப்பல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் அதனைத் தொடர்ந்து வந்த 150 கப்பல்கள் காத்து நிற்கின்றன.

 

https://www.dailythanthi.com/News/World/2021/03/26225256/New-attempt-to-refloat-ship-blocking-Suez-Canal-fails.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில்  இருந்து வரும் தேங்காய் பெரிய வெங்காயம் போன்ற பல பொருள்கள் ஐரோப்பா அமெரிக்கா கனடா  போன்ற நாடுகளில் விலையேற்றம் கொள்ளும் அடுத்துவரும் கிழமைகளில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பலில் உள்ள ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள் எனத் தகவல்

புரோகிராம் தெரியாமலே வேலைக்கு  வெளிநாடு கிளம்பி வருவது போல் கப்பல் வேலைக்கு வந்து உள்ளார்கள் போல் உள்ளது .

இன்று சற்று திரும்பி உள்ளது நல்ல செய்தி என்கிறார்கள் ஆனால் இரண்டு லட்ஷம் தொன்  பாரத்துடன் எவ்வளவுக்கு இறுக்கமான புதை மணலில் மாட்டு பட்டுள்ளது என்பதை கணக்கிடாமல் டக் போட்டுக்களால் இரண்டு பக்கமும் போட்டு தள்ளுகிறார்கள் சிலசமயம் அழுத்தம் அதிகமாகி விரும்பத்தகாத நிகழ்வு நிகழ சாத்தியம் அதிகம்.

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஆசியாவில்  இருந்து வரும் தேங்காய் பெரிய வெங்காயம் போன்ற பல பொருள்கள் ஐரோப்பா அமெரிக்கா கனடா  போன்ற நாடுகளில் விலையேற்றம் கொள்ளும் அடுத்துவரும் கிழமைகளில் .

இதை காரணமாய் வைச்சு பெற்றோல் டீசல் விலை கூடா விட்டால் சந்தோசம் 😁

Link to comment
Share on other sites

USA and Canada do not depend on Suez canal, Not a single America bound ships crossed the Suez since 1998. 
Canada and America are self sufficient in Onion production and exports Onion.
அமெரிக்காவும் கனடாவும் சூயஸ் கால்வாயைச் சார்ந்து இல்லை, 1998 ஆம் ஆண்டிலிருந்து ஒரு அமெரிக்கா செல்லும் கப்பல்கள் கூட சூஸைக் கடக்கவில்லை. 
கனடாவும் அமெரிக்காவும் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவை மற்றும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Sean said:

USA and Canada do not depend on Suez canal, Not a single America bound ships crossed the Suez since 1998. 
Canada and America are self sufficient in Onion production and exports Onion.
அமெரிக்காவும் கனடாவும் சூயஸ் கால்வாயைச் சார்ந்து இல்லை, 1998 ஆம் ஆண்டிலிருந்து ஒரு அமெரிக்கா செல்லும் கப்பல்கள் கூட சூஸைக் கடக்கவில்லை. 
கனடாவும் அமெரிக்காவும் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றவை மற்றும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்கின்றன.

நன்றி தகவலுக்கு .

பெரிய வெங்காயம் மும்பாயில் இருந்து கனடா வுக்கு ஏற்றுமதி என்று செய்தியில் படித்த நினைவு .

Link to comment
Share on other sites

25 minutes ago, பெருமாள் said:

நன்றி தகவலுக்கு .

பெரிய வெங்காயம் மும்பாயில் இருந்து கனடா வுக்கு ஏற்றுமதி என்று செய்தியில் படித்த நினைவு .

உந்த வெங்காயக் கதை எல்லாம் தேவையில்லை. தேங்காய் வராவிட்டால் என்ன? மாங்காய் வராவிட்டால் என்ன? என் வீட்டுக்காறிக்கு கறிவேப்பிலை மட்டும் தடைப்படாமல் வந்தால் போதும்.😋 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கடலோடும் நாள் முழு பவுர்ணமி பலரும் எதிர்பார்க்கிறார்கள் இன்று தவறினால் அரோகரா 

23 minutes ago, Paanch said:

உந்த வெங்காயக் கதை எல்லாம் தேவையில்லை. தேங்காய் வராவிட்டால் என்ன? மாங்காய் வராவிட்டால் என்ன? என் வீட்டுக்காறிக்கு கறிவேப்பிலை மட்டும் தடைப்படாமல் வந்தால் போதும்.😋 

ஸ்பெயினில் சோதனை வளர்ப்பு கறிவேப்பிலை  வெற்றியடைந்து உள்ளது ஏற்கனவே வட்டக் கத்தரிக்காய் போன்றவை அங்கிருந்து வரதொடங்கி விட்டது இனி தம்புள்ள  இரசாயன வட்டக் கத்தரிக்காய் தேவைப்படாது சிங்களவர்களே சாப்பிட்டு மோட்ஷம் அடையட்டும் .

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரன் தன்ரை நன்மைக்காக மூளையை பாவித்தான். அவ்வளவுதான்....😁
அதோடை முடிஞ்சுசுது ஆசிய ஆபிரிக்க  வளர்ச்சி.:cool:

ஆசிய ஆபிரிக்க தலைகளுக்குள் இருப்பது பெரிய வெங்காயமா, மூளை இல்லையா? 😃

Link to comment
Share on other sites

11 minutes ago, பெருமாள் said:

இன்று கடலோடும் நாள் முழு பவுர்ணமி பலரும் எதிர்பார்க்கிறார்கள் இன்று தவறினால் அரோகரா 

நிலவிலும் பொருள் எடை இழக்கும், நீரிலும் பொருள் எடை இழக்கும், காதலில் கூட எடை இழக்கும் இன்று கண்டேனடி.

Link to comment
Share on other sites

Most of the fresh vegetables are imported from from Mexico, Caribbean Islands, Central America and South America 
towards North America. Canada and USA do not need to import any edible items from Asia. 
But Asian immigrant are adamant about their country produce.
மெக்ஸிகோ, கரீபியன் தீவுகள், மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து வட அமெரிக்கா நோக்கி புதிய காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஆசியாவிலிருந்து எந்த உண்ணக்கூடிய பொருட்களையும் இறக்குமதி செய்ய தேவையில்லை. 
ஆனால் ஆசிய குடியேறியவர்கள் தங்கள் நாட்டு உற்பத்தியைப் பற்றி பிடிவாதமாக உள்ளனர்.
Suez canal and Panama canal blockage is essential to block Asian exports.
ஆசிய ஏற்றுமதியைத் தடுக்க சூயஸ் கால்வாய் மற்றும் பனாமா கால்வாய் அடைப்பு அவசியம்.
Asians wants to export all their garbage to West.
ஆசியர்கள் தங்கள் குப்பைகளை மேற்கு நோக்கி ஏற்றுமதி செய்ய விரும்புகிறார்கள்.
Trade only with Europe, Caribbean, Central America, South America and Africa is beneficial to to North America.
ஐரோப்பா, கரீபியன், மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவுடன் மட்டுமே வர்த்தகம் செய்வது வட அமெரிக்காவிற்கு நன்மை பயக்கும்.
Middle East and Asia trade are traps for North America.
மத்திய கிழக்கு மற்றும் ஆசியா வர்த்தகம் வட அமெரிக்காவின் பொறிகளாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

ஆசிய ஆபிரிக்க தலைகளுக்குள் இருப்பது பெரிய வெங்காயமா, மூளை இல்லையா? 😃

இவ்வுலகில் எல்லா உயிரினங்களுக்கும் மூளை இருக்கின்றது அல்லவா. அதன் ஆற்றல்  ஒவ்வொரு உயிரினத்திற்கும்  வேறு படுவது போல்........ 
ஒவ்வொரு  மனிதனுக்கும் மூளை இருக்கின்றது. ஆனால் அதன் ஆற்றல் மனிதனுக்கு மனிதன் வேறுபடும் என்பதை தெரிந்து கொள்ள உங்கள் போன்றோருக்கு இவ்வுலகம் அழிந்தாலும் ......? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இன்று கடலோடும் நாள் முழு பவுர்ணமி பலரும் எதிர்பார்க்கிறார்கள் இன்று தவறினால் அரோகரா 

ஸ்பெயினில் சோதனை வளர்ப்பு கறிவேப்பிலை  வெற்றியடைந்து உள்ளது ஏற்கனவே வட்டக் கத்தரிக்காய் போன்றவை அங்கிருந்து வரதொடங்கி விட்டது இனி தம்புள்ள  இரசாயன வட்டக் கத்தரிக்காய் தேவைப்படாது சிங்களவர்களே சாப்பிட்டு மோட்ஷம் அடையட்டும் .

எண்டாலும் வெய்யிலில் விளையும் மரக்கறிகள் வித்தியாசம். சுவையும் வேறு பட்டது. ஆசிய/தென்னமெரிக்க நாடுகளில் விளையும் மரக்கறி இறைச்சி வகைகளுக்கு எப்பவும் ஒரு  மவுசு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

உந்த வெங்காயக் கதை எல்லாம் தேவையில்லை. தேங்காய் வராவிட்டால் என்ன? மாங்காய் வராவிட்டால் என்ன? என் வீட்டுக்காறிக்கு கறிவேப்பிலை மட்டும் தடைப்படாமல் வந்தால் போதும்.😋 

கொத்தமல்லி இலை சரி வராதோ? 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய வேறு திட்டங்களை வகுக்குமாறு எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் மாற்று வழியை யோசித்து விரைந்து செயற்படுமாறு சூயஸ் கால்வாய் ஆணையத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தைவான் நிறுவனத்திற்குச் சொந்தமான எவர் கிவன் என்ற சரக்குக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயல் கால்வாயைக் கடக்கும்போது புயலில் சிக்கி கால்வாயின் குறுக்கே சிக்கிக்கொண்டது.

இதன் காரணமாக இருபுறமும் சுமார் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாமல் இரு புறமும் சிக்கிக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இழுவைக் கப்பல் மூலம் எவர் கிவன் கப்பலை இழுக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் ஆறாவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், காற்றின் வேகம் காரணமாக அதிகாரிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இதையடுத்து கப்பலில் உள்ள 18 ஆயிரம் கண்டெய்னர்களை இறக்கி கப்பலை இழுக்கும் முயற்சியை மேற்கொள்ள நீண்ட நாட்களாகுமென கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே, மாற்று வழியை யோசித்து விரைந்து செயற்படுமாறு  எகிப்து ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1205619

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக தகவல்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.