Jump to content

தமிழ்நாட்டின் அடுத்த CM யார்? - The Imperfect Show சர்வே முடிவுகள்! TN Elections 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டின் அடுத்த CM யார்? - The Imperfect Show சர்வே முடிவுகள்! TN Elections 2021

r

சர்வே மூலம் நம் மனதில் எழுந்த பல கேள்விகளுக்கான விடைகளைத் துல்லியமாக உங்களுடன் சேர்ந்து கண்டிருக்கிறது The Imperfect Show டீம்!

2021 சட்டமன்றத் தேர்தல்... இருபெரும் அரசியல் தலைவர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடக்கப்போகும் முதல் சட்டமன்றத் தேர்தல். புதிதாக அரசியல் களம் காண்பவர்கள், சீட்டுக்கட்டைக் கலைத்துப்போட்டதைப்போல கூட்டணிக் கணக்கை மாற்றிப்போட்டிருக்கும் கட்சிகள், அரசியலில் வாழ்வா, சாவா என எதிர்காலத்தை மனதில் வைத்துச் செய்யப்படும் பலரின் பரப்புரைகள்... எனத் தமிழக மக்கள் வாழ்வில் பல்வேறுவிதமான எதிர்பார்ப்புகளையும் குழப்பங்களையும் விளைவித்துக்கொண்டிருக்கும் வித்தியாசமான தேர்தல் இது!

சுருக்கமாகச் சொன்னால் `தமிழக முதல்வர்' எனும் அந்த அரியணையில் அமரப்போகும் `பாகுபலி யார்?’, அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப்போகும் கூட்டணி எது, இந்தத் தேர்தலில் கவனம் ஈர்த்த முழக்கம் எது, வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த சக்தி எது... இப்படி நம் எல்லோரின் மனதிலும் எழுந்த கேள்விகளுக்குத்தான் விடைகள் காண விழைந்திருக்கிறோம்.

The Imperfect Show
 
The Imperfect Show

இந்த சர்வேக்காகவே பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி, நம் மனதில் எழுந்த 10 கேள்விகளைக் கேட்டிருந்தோம். தமிழ்நாட்டில் வசிப்போர் முதல் வெளிநாடுவாழ் தமிழர்கள் வரை தங்கள் கைப்பேசி எண்களைப் பதிந்து, மொத்தமாக 27,725 பேர் பங்குகொண்டு `தேர்தல் திருவிழாவுக்கான ஸ்பெஷல் சர்வே'-யைச் சிறப்பித்து ஆச்சர்யத்தில் திளைக்கவைத்திருக்கிறார்கள்!

ஆம்... இந்த சர்வே மூலம் நம் மனதில் எழுந்த பல கேள்விகளுக்கான விடைகளைத் துல்லியமாக உங்களுடன் சேர்ந்து கண்டிருக்கிறது The Imperfect Show டீம்!

அதன் முடிவுகள் இங்கே…

``இந்தத் தேர்தலில் பெரிதும் கவனம் ஈர்த்த முழக்கம் எது?’’

என்ற கேள்விக்கு ’ஸ்டாலின்தான் வராரு…’ என 43.60 % மக்கள் வாக்களித்து முதல் இடத்துக்கு அந்த முழக்கத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பெட்டிக்கடை முதல் யூடியூப் வீடியோ விளம்பரம் வரை கண்ணில்படும்படி ஷேர் செய்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இரண்டாம் இடத்தைப் பிடிப்பது எடப்பாடி பழனிசாமியின் அதிரிபுதிரி விளம்பரமான `வெற்றி நடைபோடும் தமிழகமே…’ என்ற முழக்கம்தான்.

முழக்கம்
 
முழக்கம்

இதற்கு 30.73 சதவிகிதத்தினர் ஆதரவு தருகிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் `சீரமைப்போம் தமிழகத்திற்கு’ 16.33 சதவிகிதமும், சீமானின் `புதியதோர் தேசம் செய்வோம்’ என்ற முழக்கம் கவனம் பெற்றதாக 9.32 % பேரும் சொல்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, `வெற்றி நடைபோடும் தமிழகமே…’ எனப் பத்திரிகைகளில் முதல் பக்கம் விளம்பரம், டி.வி சேனல்களில் நொடிக்கு நொடி என டெலிகாஸ்ட் செய்யப்பட்டாலும் இரண்டாம் இடத்தைத்தான் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

``இந்தத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்யப்போகும் முக்கியமான விஷயமாக எதை நினைக்கிறீர்கள்?’’

 

என்ற கேள்விக்கு ‘கூட்டணி பலம்’தான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. சுமார் பாதி விழுக்காடுகளுக்கு மேல், அதாவது 54.42 % மக்கள், கூட்டணி பலம்தான் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்யப்போவதாக எண்ணுகிறார்கள்.

வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான விஷயம்
 
வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான விஷயம்

ஐடி விங் பிரசாரத்தை 25.31 % மக்கள் தேர்ந்தெடுத்து, இரண்டாம் இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த சட்டமன்றத் தேர்தலில்தான் ஐடி விங் பிரசாரங்களின் தாக்கத்தை நம்மால் உணர முடிந்தது. `பண பலமும்' தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என 20.25 % மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

``நீங்கள் ஓட்டுப்போடுவது எதன் அடிப்படையில்?’’

என்ற கேள்விக்கு `வேட்பாளரை மனதில்வைத்தே...’ என்ற ஆப்ஷனை இரண்டாம்பட்சமாகத்தான் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்கு வெறும் 35.43 சதவிகித ஆதரவுதான் கிடைத்திருக்கிறது. ஆனால், ‘கட்சியை மனதில்வைத்தே...’ என்ற ஆப்ஷனுக்கு 64.56 சதவிகிதம் டிக் அடித்து முதலிடத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

எதன் அடிப்படையில் ஓட்டு?
 
எதன் அடிப்படையில் ஓட்டு?

தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களைவிட `எந்தக் கட்சி நிற்கிறது, எந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சி நிற்கிறது.... அதுதான் எங்களுக்கு முக்கியம்’ என மக்கள் நினைக்கிறார்கள். அதுதான் இந்த எண்களில் பிரதிபலிக்கிறது.

``அதிமுக அரசின் கடந்த 5 ஆண்டுகள் செயல்பாடு எப்படி?’’

என்ற கேள்வியை நாம் சர்வேயில் கேட்கும்போது, ‘திருப்தியளிக்கிறது’ என்ற ஆப்ஷனை முதலிலும், ‘பரவாயில்லை’, ‘மோசம்’ என அடுத்தடுத்து வைத்திருந்தோம். ஆனால், அப்படியே திருப்பிப்போட்டவாறு முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

அதிமுக அரசின் செயல்பாடு
 
அதிமுக அரசின் செயல்பாடு

அ.தி.மு.க ஆட்சி `மோசம்' என 63.14 சதவிகித பேரும், `பரவாயில்லை' என்று 25.93 சதவிகிதத்தினரும், `திருப்தியளிக்கிறது' என வெறும் 10.92 % பேரும் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, டாஸ்மாக் பிரச்னை, ஊழல் என அனைத்தையும் மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றே இந்த முடிவுகள் உணர்த்துகின்றன.


``இந்தத் தேர்தலில் காமெடியான கட்சியாக எதைப் பார்க்கிறீர்கள்?’
 

மக்கள் சில கட்சிகளைத் தொடர்ந்து கவனித்துவந்தாலும், அவற்றை காமெடியாகதான் அணுகுகிறார்கள் என்பதையே இந்தக் கேள்விக்கான தரவுகளில் நம்மால் உணர முடிகிறது. ``இந்தத் தேர்தலில் காமெடியான கட்சியாக எதைப் பார்க்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு முதலிடம் பிடித்திருப்பது தேமுதிக-தான். 29.46 சதவிகித மக்கள் தேமுதிக-வுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். இதில், முதலிடம் பிடிப்பதற்குப் பெரிதும் பாடுபட்டது விஜய பிரபாகரனாகத்தான் இருப்பார். அடுத்ததுதான் சுதீஷ், பிரேமலதா வருவார்கள்.

காமெடி கட்சி
 
காமெடி கட்சி

என்ன நடக்கிறது என்றே கள நிலவரம் புரியாமல் பேசினால் மக்கள் கவனிப்பார்கள். ஆனால், அவர்கள் பொழுதுபோக்குக்காகத்தான் கவனிக்கிறார்கள் என்பதை இந்த முடிவுகளில் அறிய முடிகிறது. அடுத்து தேசியக் கட்சியான, மத்தியில் ஆளும் பா.ஜ.க-வையும் நம் மக்கள் காமெடி கட்சியாகத்தான் கருதுகிறார்கள். சுமார் 24.73 சதவிகித மக்கள் காமெடி கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். (எல்.முருகன், ஹெச்.ராஜா, அண்ணாமலை... இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா... நோட் பண்ணுங்கப்பா...) அடுத்து அதிமுக 10.33 % பெற்று மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. திமுக 9.03 சதவிகிதமும், நாம் தமிழருக்கு 8.80 %, மக்கள் நீதி மய்யத்துக்கு 5.86 %, பா.ம.க-வுக்கு 5.49 %, அமமுக-வுக்கு 3.45 %, இதர என்ற ஆப்ஷனை 2.77 சதவிகித மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

``அடுத்த முதல்வர் யார்?’’

எனக் கணிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு `ஸ்டாலின்' என 58.16 % வாக்களித்து அவரை முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது இடம் எடப்பாடி பழனிசாமிக்கு... அவருக்கு 16.33 % மட்டுமே கிடைத்திருக்கிறது. சீமான் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறார். சீமான் முதல்வராக வருவார் என 12.37 % மக்கள் கருதுகிறார்கள்.

அடுத்த முதல்வர்
 
அடுத்த முதல்வர்

கமல்ஹாசனை 10.05 சதவிகிதம் பேரும், டி.டி.வி.தினகரனுக்கு 1.9 சதவிகிதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள். இதர என்ற ஆப்ஷனை 1.12 % தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், சரிபாதி சதவிகிதத்தினர் ஸ்டாலின் எனச் சொல்வது ஆச்சர்ய ட்விஸ்ட்தான்.

``உங்கள் ஓட்டு யாருக்கு?'

 

என்ற கேள்விக்கு `திமுக கூட்டணிக்கே' என 48.49 % மக்கள் அடித்துச் சொல்லி, திமுக-வை முதலிடம் பிடிக்கவைத்திருக்கிறார்கள். அதிமுக கூட்டணிக்கு 24.23 % பேரும், நாம் தமிழருக்கு 11.41 % பேரும் என இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை அவற்றுக்குத் தருகிறார்கள்.

உங்கள் ஓட்டு யாருக்கு
 
உங்கள் ஓட்டு யாருக்கு

நான்காவது இடம் கிடைத்திருப்பது மக்கள் நீதி மய்யக் கூட்டணிக்கு. சுமார் 10.70 சதவிகித மக்கள் ம.நீ.ம-வுக்கு வாக்களிப்பேன் என்கிறார்கள். அமமுக கூட்டணிக்கு வெறும் 2.5 சதவிகிதமும், இதர கட்சிகளுக்கு 2.49 % கிடைத்திருக்கிறது. இதிலும் அ.தி.மு.க-வை காட்டிலும் தி.மு.க சரிபாதி உயர்ந்திருக்கிறது.

``மூன்றாவது அணிக்கான ரேஸில் முந்தப் போவது யார்?’’

 

என்ற கேள்வி இந்தத் தேர்தலில் மிக முக்கியம். முதலிடத்துக்கு எப்படிப் போட்டி நடக்கிறதோ அதேபோல் மூன்றாம் இடத்துக்கான போட்டியையும் இந்தத் தேர்தலில் கூடுதலாகப் பார்க்க முடிகிறது. முதன்முதலாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறது மக்கள் நீதி மய்யம். இதற்கு முன் இரண்டு சட்டமன்றத் தேர்தல்களைச் சந்தித்து தனக்கென ஒரு வாக்குவங்கியை வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

மூன்றாவது அணி
 
மூன்றாவது அணி

`அதிமுக-வை மீட்பதே எங்கள் குறிக்கோள்' எனக் களம்காண்கிறது அமமுக. இவர்கள் மூவருக்குள் நடக்கும் மூன்றாவது அணிக்கான ரேஸில் முந்துவது மக்கள் நீதி மய்யம்தான். 43.87 சதவிகித மக்கள் `மய்யம்தான் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்’ என்கிறார்கள். அதற்கு அடுத்த இடம் நாம் தமிழருக்கு... அந்தக் கட்சிக்கு 32.89 சதவிகிதமும், கடைசி இடம் அமமுக-வுக்கு.... இந்தக் கட்சிக்கு 23.23 சதவிகிதமும் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தலா 10 சதவிகிதம் வித்தியாசத்தை இதில் பார்க்க முடிகிறது.

`வாரிசு அரசியல்’

 

என்ற கேட்டகிரியில் எப்போதும் மக்கள் மனநிலையில் முந்துவது தி.மு.க-தான். அதேதான் இந்த முடிவுகளிலும் நமக்குத் தெரியவருகிறது. ``வாரிசு அரசியலில் நம்பர் 1 கட்சி எது?’’ என்ற கேள்விக்கு, `சந்தேகமே வேண்டாம் திமுக-தான்’ என 68.27 % மக்கள் அடித்துச் சொல்கிறார்கள். `தி.மு.க கட்சிக்கு வாக்களிப்பேன்’ என்று சொல்பவர்கள்கூட, `தி.மு.க வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை அறிந்தே வாக்களிக்கிறேன்’ என்று சொல்வது நகைமுரண்தான்.

வாரிசு அரசியல்
 
வாரிசு அரசியல்

இரண்டாம் இடம் கிடைத்திருப்பது பா.ம.க-வுக்கு... 12.67 %. `என் குடும்பத்திலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள்' என்று ராமதாஸ் அடித்து சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னார். ஆனாலும் அன்புமணி தீவிர அரசியலில் இயங்குவதை வாரிசு அரசியலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. அதற்கு அடுத்த இடங்களைப் பெறுவது அ.தி.மு.க 10.95 %, காங்கிரஸ் 4.12 %, தேமுதிக 3.9 %.

எந்தெந்தக் கூட்டணி \ கட்சிகள் எத்தனை சீட்டுகள்

``இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உத்தேசமாக எந்தெந்தக் கூட்டணி \ கட்சிகள் எத்தனை சீட்டுகள் பெறும் எனக் கணிக்கிறீர்கள்?’’ என்ற கேள்விக்கு தி.மு.க-வே அதிக இடங்கள் வெல்லும் எனக் கருதுகிறார்கள்.

எத்தனை சீட்டுகள்
 
எத்தனை சீட்டுகள்

தி.மு.க 157 முதல் 172 வரையிலும், அ.தி.மு.க 59 முதல் 70 தொகுதிகள் வரையிலும் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கிறார்கள். 1 முதல் 3 இடங்கள் வரை அ.ம.மு.க-வும், நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் 1 முதல் 2 தொகுதிகள் வரையும் பெறுவார்கள் என்று கணக்கு போடுகிறார்கள் நம் சர்வேயில் கலந்துகொண்ட மக்கள். ஆக, இந்த 2021 சட்டமன்றத் தேர்தல் ரேஸில் முந்துவது தி.மு.க-வே என்று இந்த முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த 10 கேள்விகளுக்கான சர்வே முடிவுகளைப் பார்க்கும்போது இரண்டாம் இடமே அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கிறது. இந்த சர்வேயில் ஆர்வத்தோடு சில வெளிநாடுவாழ் தமிழர்களும் பங்குபெற்றிருப்பதால், அவர்கள் நிஜமான தேர்தல் திருவிழாவில் பங்குகொண்டால் மட்டுமே மிகத்துல்லியமான கணிப்பு கிடைக்கும் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள் மக்களே... இது வெறும் எண்கள் மட்டுமல்ல, மக்களின் எண்ணங்கள்.

இந்த சர்வே குறித்த அலசி ஆராய்ந்து ஒரு ஸ்பெஷல் ஷோவாக The Imperfect Show டீம் விகடன் வெப் டி.வி-யில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த வீடியோவையும் மறக்காமல் கீழே உள்ள லிங்க்கில் பாருங்கள். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநேக இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருப்பது ஆச்சரியமான மாற்றம் 

சில வருடங்களுக்கு முன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள படாத அமைப்பு இன்று முதலமைச்சர் தெரிவு வரை 3ம் இடத்துக்கு வந்திருப்பது அதன் தேவையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிழம்பு said:

அடுத்த முதல்வர் யார்?’’

எனக் கணிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு `ஸ்டாலின்' என 58.16 % வாக்களித்து அவரை முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது இடம் எடப்பாடி பழனிசாமிக்கு... அவருக்கு 16.33 % மட்டுமே கிடைத்திருக்கிறது. சீமான் மூன்றாம் இடத்தைப் பிடிக்கிறார். சீமான் முதல்வராக வருவார் என 12.37 % மக்கள் கருதுகிறார்கள்.

அடுத்த முதல்வர்

ஐயோ இந்த ஆமைக்கறி பயல் மூன்றாவதாய்  வந்திட்டானே !.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

ஐயோ இந்த ஆமைக்கறி பயல் மூன்றாவதாய்  வந்திட்டானே !.........................................

வையிரா, எங்கப்பா, இங்க பெருமாள் முந்தி விட்டாரே? 😁

***

விகடன், திமுக பினாமி பத்திரிகை. எதிர்பார்த்தது போலவே, கருத்து திணிப்பு நடந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

அநேக இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருப்பது ஆச்சரியமான மாற்றம் 

சில வருடங்களுக்கு முன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள படாத அமைப்பு இன்று முதலமைச்சர் தெரிவு வரை 3ம் இடத்துக்கு வந்திருப்பது அதன் தேவையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

க‌ட்சி பிள்ளைக‌ளின் க‌டின‌ உழைப்பு தான் அண்ணா ?

தேர்த‌ல் நேர‌ம் ம‌ட்டும் இல்லை தேர்த‌ல் முடிந்தாலும் க‌ட்சியை வ‌ள‌த்தெடுப‌தில் மும்ப‌ர‌மாய் வேலை செய்வார்க‌ள் ?

இனி ஆமைக் க‌றிய‌ விட்டு  ,  பொறாமையில் வேறு ஏதாவ‌து அவ‌தூர‌ கையில் எடுப்பின‌ம் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் 

இவ‌ர்க‌ளை எதிர் கொள்ள‌ நாமும் பெரும் ப‌டையை வைத்து இருக்கிறோம் ?

அண்டைக்கு தின‌க‌ர‌ன் ப‌த்திரிகை போலி செய்தியை ப‌ர‌ப்பின‌துக்கு என‌து த‌ம்பி அந்த‌ ஊட‌க‌த்துக்கு போன் போட்டு க‌தைச்சு அத‌ ம‌க்க‌ள் பார்க்கும் அள‌வுக்கு ஆதார‌த்தோடு வெளியிட்ட‌ நாங்க‌ள் ,

சீமான் விஜேப்பியுட‌ன் ர‌க‌சிய‌ ச‌ந்திப்பு என்ற‌ த‌லைப்பு ? க‌ட‌சியில் அந்த‌ புர‌ளிய‌ வெளியிட்ட‌ ப‌த்திரிகைக்கு தான் அவ‌ பெய‌ர்  😁😀

Link to comment
Share on other sites

38 minutes ago, விசுகு said:

அநேக இடங்களில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தில் இருப்பது ஆச்சரியமான மாற்றம் 

சில வருடங்களுக்கு முன் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள படாத அமைப்பு இன்று முதலமைச்சர் தெரிவு வரை 3ம் இடத்துக்கு வந்திருப்பது அதன் தேவையையும் வளர்ச்சியையும் காட்டுகிறது.

விசுகு,

மூன்றாவதாக வந்த கட்சி என்று என்று கூற முடியாது. இதில் இப்படி ஒரு கணிதம் இருக்கின்றது. 

திமுக கூட்டணி எனச் சொல்லும் போது அதில் காங்கிரஸ், வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இன்னும் சில சிறு கட்சிகள் உள்ளன. அவ்வாறே அதிமுக வில் பா.ஜ.க, பா.ம.க வும் இன்னும் சில கட்சிகளும் உள்ளன.கமலின் கட்சி யில் சரத்குமாரின் கட்சி (எனக்கு இன்னும் இவர்கள் இருவரின் கட்சிகளின் பெயர் சரியாக எழுத வராது) கூட்டணியில் உள்ளது. தினகரனின் கட்சியுடன் கொமடிக் கட்சி விசயகாந்தின் கட்சி உள்ளது. இவர்களது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேர்தலின் பின் வரிசைப்படுத்தினால், நா.க.த மூன்றாம் இடத்தில் வருவதற்கு வாய்புகள் இல்லை. 

ஒவ்வொரு கூட்டணியையும் தனித் தனி கட்சிகளாக கருதினால் மூன்றாவதாக வர கமலின் கட்சிக்கும் நா.க.த. இற்கும் நோட்டாவுக்கும் இடையில் போட்டி இருக்கும்.

22 minutes ago, Nathamuni said:

 

விகடன், திமுக பினாமி பத்திரிகை. எதிர்பார்த்தது போலவே, கருத்து திணிப்பு நடந்துள்ளது.

உங்களுக்கு உவப்பான முடிவுகள் வராவிடின், உடனே கருத்து திணிப்பு என்று சொல்கின்றீர்கள். தேர்தல் முடிவுகளும் இவ்வாறு வந்தால், தேர்தல் மோசடி என்பீர்கள் என நினைக்கின்றேன்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஐயோ இந்த ஆமைக்கறி பயல் மூன்றாவதாய்  வந்திட்டானே !.........................................

இப்போதைக்கு குஷியாக இருக்கலாம். ஆனால் வாத்துமுட்டை கிடைக்கும்போதும் அதே குஷியோடு இருக்கவேண்டும்😂

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

உங்களுக்கு உவப்பான முடிவுகள் வராவிடின், உடனே கருத்து திணிப்பு என்று சொல்கின்றீர்கள். தேர்தல் முடிவுகளும் இவ்வாறு வந்தால், தேர்தல் மோசடி என்பீர்கள் என நினைக்கின்றேன்.😀

சீமான் வென்று முதல்வராவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த கருத்து திணிப்புகளை நம்ம நான் தயாரில்லை.

அதனை நம்புவதும் அறிவுடைமையாகாது.

இந்த கருத்து திணிப்பு குறித்து மரிதாசும் வீடியோ போட்டிருக்கிறார். கிடைத்தால் போடுகிறேன்.

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஸ்டாலின் வெற்றி இலகுவானதல்ல. எடப்பாடி மீண்டும் முதல்வராகலாம். பிஜேபி அதற்கு உதவும்.

எடப்பாடி, நாலு ஆண்டுகள், முதல்வராக நிரூபித்து இருக்கிறார், ஸ்டாலின், பேச்சு, செயல் அனைத்திலும் சொதப்பிக்கொண்டு இருக்கிறார். தகப்பன், இருக்கும் போதே, பொறுப்பு கொடுக்கும் அளவுக்கு, தன்னை நிரூபிக்கவில்லை.

சட்டசபை தொடர்பான தேர்தல்களில், ஆர் கே நகர் முதல், நடந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும் அரசினை அமைக்கும் முயல்வில் தோல்வி. (எடப்பாடி, தனக்கு தேவையான இடங்களை, குறி வைத்து அடித்து வென்றார்)

ஆகவே, ஸ்டாலின் வெல்லுவார் என்று நம்பி காசை எறிந்து பந்தயம் பிடியாதீர்கள்.

கிருபன் பதிந்த வாத்து முட்டை, இந்த பக்கமும் சரியாய் பொருந்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

இப்போதைக்கு குஷியாக இருக்கலாம். ஆனால் வாத்துமுட்டை கிடைக்கும்போதும் அதே குஷியோடு இருக்கவேண்டும்😂

spacer.png

கிருபன் யாராலுமே  இவர் இப்படி இந்த இடத்துக்கு வருவார் என்று சொல்லமுடியாது தோல்வி என்பது தெரிந்தே போட்டியிடுகிறார்கள் எனவே வாத்து முட்டை பற்றி கவலைப்படுவதில்லை .

ஆனால் யார் கண்டது அரவிந்த் கெஜ்ரிவால் இரு பெரும் மாபெரும் கட்சிகளை  பின் தள்ளி முன்னுக்கு வருவார் என்று .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

சீமான் வென்று முதல்வராவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த கருத்து திணிப்புகளை நம்ம நான் தயாரில்லை.

அதனை நம்புவதும் அறிவுடைமையாகாது.

இந்த கருத்து திணிப்பு குறித்து மரிதாசும் வீடியோ போட்டிருக்கிறார். கிடைத்தால் போடுகிறேன்.

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஸ்டாலின் வெற்றி இலகுவானதல்ல. எடப்பாடி மீண்டும் முதல்வராகலாம். பிஜேபி அதற்கு உதவும்.

 

இப்ப‌டியான‌ க‌ருத்து க‌ணிப்புக‌ள் உல‌க‌கில் வாழும் அனைத்து த‌மிழ‌ர்க‌ளும் தாங்க‌ள் விரும்பும் அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு போட‌லாம் நாதா ?

நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு 8 இருந்து 10 ச‌த‌வீத‌ வாக்கு கிடைக்கும் ?

புதிய‌த‌லைமுறை தொலைக் காட்ச்சி 2016 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி முன்னுக்கு நிப்ப‌தா மாயை உருவாக்கினார்க‌ள் ?

ஆனால் 1புள்ளி வாக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைச்ச‌து ?

2021ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ப‌ல‌ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் ஆய்வாள‌ர்க‌ள் சொல்லின‌ம் சீமானுக்கு தான் அதிக‌ இளைஞ‌ர்க‌ளின் ஆத‌ர‌வு இருக்கு என்று , இது முற்றிலும் உண்மை , 2019 பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் 17ல‌ச்ச‌ ஓட்டு கிடைசது , 2021ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 35ல‌ச்ச‌ ஓட்டை எதிர் பார்க்க‌லாம் ?

கொரோனா கால‌த்தில் ம‌ட்டும் க‌ட்சியில் ஒரு ல‌ச்ச‌ம் பேர் இணைந்து இருக்கின‌ம் ?

ஊட‌க‌ ப‌ல‌ம் ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌ ஒரே க‌ட்சி என்றால் அது நாம் த‌மிழ‌ர் க‌ட்சி தான் ?

இன்னும் ஒரு மாத‌ம் இருக்கு தானே ? 
ந‌ல்ல‌ முடிவு வ‌ரும் டோன் வெறி குருநாதா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

ஆனால், ஒன்றை உறுதியாக சொல்கிறேன். ஸ்டாலின் வெற்றி இலகுவானதல்ல. எடப்பாடி மீண்டும் முதல்வராகலாம். பிஜேபி அதற்கு உதவும்.

ஒருவேளை சுடாலின்  வென்றாலும் இதே  பிஜேபியுடன் கூட்டு வைப்பார்கள் அவர்களுக்கு பதவி முக்கியமே ஒழிய தமிழக மக்களின் அபிலாசைகள் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

கிருபன் யாராலுமே  இவர் இப்படி இந்த இடத்துக்கு வருவார் என்று சொல்லமுடியாது தோல்வி என்பது தெரிந்தே போட்டியிடுகிறார்கள் எனவே வாத்து முட்டை பற்றி கவலைப்படுவதில்லை .

ஆனால் யார் கண்டது அரவிந்த் கெஜ்ரிவால் இரு பெரும் மாபெரும் கட்சிகளை  பின் தள்ளி முன்னுக்கு வருவார் என்று .

மே 2ம் திக‌தி ப‌ல‌ர் வாய் அடைத்து போவின‌ம் பெருமாள் அண்ணா ?

முட்டை கிடைத்தாலும்  அடுத்த‌ க‌ட்ட‌  ந‌க‌ர்வை இன்னும் வேக‌மாக‌ க‌ள‌ப் ப‌ணி செய்ய‌ பெரிதும் உத‌வும் ? 

ஓட்டு என்னிக்கையில் பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் கிடைத்த‌ ஓட்டை விட‌ இன்னொரு ம‌ட‌ங்கு அதிக‌ரிக்கும் ? ஜ‌மீன் 35ல‌ச்ச‌ ஓட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிடைக்கும் ? 

அண்ண‌ன் சீமானுக்கு அடுத்து
நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ம‌க்க‌ள் ம‌த்தியில் பெரிதும் தெரிய‌ ப‌ட்ட‌து வேட்பாள‌ர் என்றால் அது அக்கா காளிய‌ம்மாள் , த‌ம்பி  இசை ம‌திவாண‌ன் ,
அக்கா கீதால‌ச்சுமி , த‌ம்பி வினோத் ? இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் ?

முன்பை விட‌ இந்த‌ முறை தேர்த‌ல் ப‌ணிய‌ க‌ட்சி பிள்ளைக‌ள் சிற‌ப்பாய் செய்யின‌ம் 🙏
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

விசுகு,

மூன்றாவதாக வந்த கட்சி என்று என்று கூற முடியாது. இதில் இப்படி ஒரு கணிதம் இருக்கின்றது. 

திமுக கூட்டணி எனச் சொல்லும் போது அதில் காங்கிரஸ், வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இன்னும் சில சிறு கட்சிகள் உள்ளன. அவ்வாறே அதிமுக வில் பா.ஜ.க, பா.ம.க வும் இன்னும் சில கட்சிகளும் உள்ளன.கமலின் கட்சி யில் சரத்குமாரின் கட்சி (எனக்கு இன்னும் இவர்கள் இருவரின் கட்சிகளின் பெயர் சரியாக எழுத வராது) கூட்டணியில் உள்ளது. தினகரனின் கட்சியுடன் கொமடிக் கட்சி விசயகாந்தின் கட்சி உள்ளது. இவர்களது வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் தேர்தலின் பின் வரிசைப்படுத்தினால், நா.க.த மூன்றாம் இடத்தில் வருவதற்கு வாய்புகள் இல்லை. 

ஒவ்வொரு கூட்டணியையும் தனித் தனி கட்சிகளாக கருதினால் மூன்றாவதாக வர கமலின் கட்சிக்கும் நா.க.த. இற்கும் நோட்டாவுக்கும் இடையில் போட்டி இருக்கும்.

நீங்கள் சொல்வது புரியாததல்ல 

ஆனால் நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது போன்று அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்றாலும் நிலைமை அது தான்.

இது தனித்து நின்று நாம் தமிழர் கட்சி சாதித்ததன் பயன்.

இது அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது. 

ஏனெனில் கூட்டால் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கும் பலமிழத்தலும் சிதைவுகளும் நாம் தமிழர் கட்சியை மேலும் வலுப்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் வாக்கு 10 வீதத்துக்கு மேல் போகும்.

கடந்த தேர்தலிலும் குறைத்து மதிப்பிட்டார்கள்.
பார்ப்போம்.

Link to comment
Share on other sites

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

அதுக்கு முந்திய தேர்தல்களில் எவ்வளவு நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு  கிடைத்தது என்று விளக்கமா அடித்து விடுகிறது .......நாங்களும் நாதா வின் வீழ்ச்சியை பார்த்து பரவசம் அடையலாம் தானே 😀.

உங்களால் அது முடியாது சாதரணமாகவே திரிகளில் பின்வாங்கினால்  அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை இதில் கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கை எழுதிவிட்டு இம்முறை குறைவான வாக்குகளை பெறும்  திமுகா என்று நான் எழுதினால் இங்கு கெத கழிப்பிணம் பலர்  எனக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதுக்கு முந்திய தேர்தல்களில் எவ்வளவு நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு  கிடைத்தது என்று விளக்கமா அடித்து விடுகிறது .......நாங்களும் நாதா வின் வீழ்ச்சியை பார்த்து பரவசம் அடையலாம் தானே 😀.

உங்களால் அது முடியாது சாதரணமாகவே திரிகளில் பின்வாங்கினால்  அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை இதில் கடந்த தேர்தலில் கிடைத்த வாக்கை எழுதிவிட்டு இம்முறை குறைவான வாக்குகளை பெறும்  திமுகா என்று நான் எழுதினால் இங்கு கெத கழிப்பிணம் பலர்  எனக்கு .

அது அவ‌ர் எம்மை வெறுப்பு ஏத்த‌ எழுதின‌து ?

தேர்த‌ல் முடிந்த‌தும் புது ஜ‌டியில் வ‌ந்து எழுதுவார் அல்ல‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் அசுர‌ வ‌ள‌ர்சியை பார்த்து என்ன‌ செய்வ‌து என்று தெரியாம‌ குழ‌ம்பி போய் நிப்பார் பெருமாள் அண்ணா ?

நான் மேல‌ வ‌டிவாய் விப‌ர‌மாய் எழுதி இருக்கிறேன் , என்ற‌ க‌ணிப்பை போல‌ தான் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் கணித்து இருக்கிறார் , 

நாம் த‌மிழ‌ர் தேர்த‌ல் க‌ள‌ நில‌வ‌ர‌ம் நாம் ப‌ல‌ வ‌ழிக‌ளில் அறிகிறோம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

இந்தா.... வந்துட்டாரய்யா, வந்துட்டாரு...

காணேல்ல, என்று பதறி போனோம்.

சரி, அந்த அலுவல் நல்ல படியா முடிஞ்சுதா? ஆ.... ஆ.. முடிச்சு இருக்கும். இல்லேன்னா.... எதுக்கு, இந்த பக்கம் வாறீங்கோ? 😁

குறைவா, வாக்கு பெறும் என்று, 'ஸ்டாலின் கணக்கு' தானே பார்த்தீங்க? 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

 

Link to comment
Share on other sites

நான் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கும்  5-6 வீதமாக வரலாம் 
சில கணிப்பீடுகள் ஒரு அல்லது இரண்டு ஆசனங்களிற்கு வாய்ப்பு என சொல்கின்றது எனக்கு நம்பிக்கை இல்லை பார்க்கலாம் 
இந்த முறை திமுக தான் வரும் என அதும் 200  அளவான ஆசனங்களுடன் வர கூடுமென கணிப்பீடுகள் வர தொடங்கி உள்ளன சமூக வலைத்தளங்களில் திமுகவினரின் அலப்பறைகள் தாங்க முடியவில்லை 

Link to comment
Share on other sites

8 hours ago, zuma said:

நாம் தமிழர் கட்சி 2019 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 3.88% (1,645,222) வாக்குகளை பெற்றது. 
இம்முறை அதை விட மிகக்குவைவான வாக்குகளையே பெறும். 
 

ஆடு மாடு வளர்த்தல் அரசுப்பணியா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

 

No photo description available.

மூலம் :
  1.  Bureau, ABP News (18 January 2021). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: People In Bengal Satisfied With Mamata, TMC To Regain Power". ABP Live. Retrieved 18 January 2021.
  2. Bureau, ABP News (27 February 2021). "ABP-CVoter Election 2021 Opinion Poll LIVE: UPA Alliance Predicted To Shine In Tamil Nadu; Voters Mood Not In Favour Of BJP, MNM". ABP Live. Retrieved 18 January 2021.
  3.  "ABP CVoter Opinion Poll 2021". ABP Website.
  4. Puthiyathalaimurai News - APT Opinion Poll 2021". PuthiyathalaimuraiTV.
  5.  "Spick Media MCV Network Opinion Poll 2021". SpickMedia.
  6. "Tweet". Twitter.  Times Now.
  7.  "Tweet". Twitter. Democracy Times Network.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் போட்டியிடும் தொகுதியில் வெற்றிக்கு அருகில் 

இன்னும் தேர்த‌ல் ப‌ணிய‌ வேக‌மாக‌ செய்தால் வெற்றி பெருவ‌து உறுதி 🙏

20210328-142647.png 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சீமான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தாலும்2வது அல்லது 3 வது இடத்தில்தான் வைத்திருப்பார்கள். இது **** ஊடகங்களின் கருத்துத்திணிப்பு.பிரசாந் கிசோரின் திட்டங்களில் ஊடகங்களுக்கு பணம் கொடுத்து பொய்யான கருத்துத்திணிப்பை உசய்வதும் ஒரு அங்கமே. புதிய தலைமுறையில் திமுகவின் வெற்றிக்கு என்ன காரணம் என்ற கேள்வியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற மாதிரி அவர்களின் திட்டத்தை செளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.சீமான் 3வது சக்தியாக நிச்சயம் வருவார்.தினகரனின் கட்சி வாக்குகளைப் பிரிக்காவிட்டால் அதிமுக வே வெற்றி பெறக்கூடிய ஷழரல் இருந்திருக்கும். பாமர மனிதனாக இருக்கும் எடப்பாடியின் ஆட்சியை  கறைகள் பெரிய அளவில் இல்லை. தினகரன் பிளவும் 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட.சியில் இருப்பதால் ஒரு மாற்றம் வேண்டும் என்று வாக்களிப்பதால் திமுகவுக்கு சார்பான நிலை வரலாம். ஆனால் பல இடங்களில் கடும் போட்டி இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.