-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
இலங்கையில் புதுவகையான கொரோனா வைரஸ் ? April 22, 2021 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. குறித்த பதிவில் காணப்படுவதாவது, இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான கொரோனா வைரசு இனங்காணப்பட்டு கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது. இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும் அதிக கவனம் செலுத்துதல் அவசியம். நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நோய் பரவுவதை மிக விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் கடந்த காலத்தில் கண்டு கொண்டுள்ளோம். கடந்த பண்டிகை காலங்களைத் தொடர்ந்து இச்சுகாதார வழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடித்தல் படிப்படியாகக் குறைந்து வந்ததே இந்த புதிய பாதிப்பு உருவாக சந்தேகத்திற்கு இடமின்றி வழிவகுத்தது. மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற செயல்களைத் தவிர்ப்பதற்கு, ஒரு சமூகமாக செயற்பட எமக்கு நோய் நிவாரணிக்கான பொறுப்பை மீளவும் நினைவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும். இந்த தடுப்பு நடவடிக்கைகளில் கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிவது, மக்களிடையே இடைவெளி பேணல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, இருமல், தொண்டை நோ அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் சன நெருக்கமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல், சன நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும். ஏற்கனவே சுகாதார வழிகாட்டுதல்களை உரியவாறு முறையாகக் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியமையால் கடந்த சில மாதங்களாக இலங்கை வாசிகள் அனைவருக்கும் ஒருவித விடுதலை உணர்வை அனுபவிக்க முடியுமாயிருந்தது. ஆதலால் நாம் மீண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது என்பது கடினமான காரியமல்ல. ஆகையால், எதிர்வரவிருக்கும் காலம் முழுவதும், மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு முழுமையாகப் பின்பற்றி, தேவையற்ற போக்குவரத்துப் பயணங்களை முடிந்தவரை குறைத்து, தமக்கு நோயறிகுறிகள் தென்பட்டால் ஏனையோரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு, மீண்டுமொரு முறை நாடு முழுவதும் கொரொனா நோய்த்தொற்று பரவாது தடுக்க பொறுப்புணர்ந்து செயற்படுமாறு சுகாதார அமைச்சின் சார்பாக இலங்கை வாழ் சகலரிடமும் வேண்டிக் கொள்கின்றோம். என பதிவிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2021/159821/ -
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு April 23, 2021 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துனைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2021/159832/
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
வணக்கம் வருக .!. தங்களின் மேலான கருத்துக்களை தருக..! -
By தமிழ் சிறி · Posted
கச்சதீவு அதிபர்... இரண்டு நாள் நல்லெண்ண விஜயமாக, கைலாசா நாட்டுக்கு சென்றார். அவரை விமான நிலையத்திற்கு சென்று... கைலாசா அதிபர் நித்தியானந்தா வரவேற்றார். 🤣
-
Recommended Posts