Jump to content

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

ஐநா தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு தந்திருக்கின்றார்கள். இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். எனவே சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் செங்கலடியில் இடம்பெற்ற தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுற்ற தருவாயில் இருந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தக் காலத்தில் கூட பாரிய நெருக்கடிகள் தரப்பட்டன. ஆனால், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனைச் சிறந்த முறையில் கையாண்டு முறியடித்துவிட்டார். ஆனால், தற்போதைய சூழ்லில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினை இரண்டு தரப்பும் இருந்து பேசித் தீர்க்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏனெனில் இலங்கை என்பது உண்மையில் நாணயம் மிக்க தனித்துவமான நாடு. இந்து சமுத்தரப் பிராந்தியத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகவும் இருக்கின்றது. அந்த வகையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றத்தினூடான சில தகவல்ளை அரசாங்கத்திற்கு அவர்கள் தந்திருக்கின்றார்கள். இது சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி மதிப்பிற்குரிய கோத்தபாய அவர்கள் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார். குறைந்தது ஆறு மாதத்திற்குள் நிறைவேற்றும்படி இந்தத் தீர்மானத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது. எனவே ஜனாதிபதி சிறந்த முறையில் இந்த மாற்றங்களை உருவாக்கி மீண்டும் இந்த ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளை சிறந்த முறையில் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையில் சிறந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதற்காக பாராளுமன்றத்தில் கூட விசேட ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டு அதனூடாக இன்று அனைத்துத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே அரசியல் இலாபங்களுக்காக விரோதமான கருத்துக்களை முன்வைப்பதை விட சிறந்த ஒரு அரச கட்டமைப்பு அந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. அதனூடாக சிறந்த முடிவுகள் வரும் என நினைக்கின்றேன் என்று தெரிவித்தார்

https://www.meenagam.com/ஐநா-தீர்மானம்-சம்மந்தமாக/

Link to comment
Share on other sites

  • Replies 142
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

புலிகளின் எதிர்த்தாக்குதல்[தொகு]

அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின்தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

https://ta.wikipedia.org/wiki/ஜெயசிக்குறு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

அது உங்கள் கருத்து. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போதும் புலிகள் அழிந்துவிடுவார்கள் என்றுதான் ஆருடம் கூறப்பட்டது.

ஆனால் 2004 இல் கருணா தமிழினம் அதுவரை சந்தித்திராத துரோகத்தைச் செய்தபோது புலிகளின் முடிவும், தமிழரின் போராட்டத்தின் முடிவும் எழுதப்பட்டது. தான் அன்று செய்ததன் தாற்பரியம் அவனுக்கு புரியாது இருந்திருக்கலாம். ஆனால் அழிவு தெரிந்தபின்னரும் தொடர்ந்தும் தனது துரோகத்தினை முன்னெடுத்தான் பாருங்கள், அங்கேதான் அவனது துரோகத்தின் முழுத் தாக்கம் தெளிவாகியது.

Just now, விசுகு said:

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

அண்ணை, அவர் வழமைபோல குட்டையைக் குழப்புகிறார். கொளுத்திவிடப் பார்க்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

நீங்கள் குறிப்பிடும் நபர் யாரின் கீழ் இருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

பைத்தியக்காரமான எழுத்துக்கள் என்று வரலாற்றின் போக்கை தட்டிக் கழித்து அப்பால் போகமுடியாது. கருணா அம்மானின் ஒருங்கிணைப்பின் கீழ்தான் பல புகழ்பெற்ற தளபதிகள் இயங்கினர். 

முடிந்திருக்கலாம் என்பது வேறு

முடிந்திருக்கும் என்று எழுதுவது ஒருவரை மட்டுமே வரலாறாக்கி மற்றைய அனைத்தையும் கேவலப்படுத்துவது.

இந்த பைத்தியக்காரத்தனமானவர்களை கண்டும் காணாமல் போகமுடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நீங்கள் குறிப்பிடும் நபர் யாரின் கீழ் இருந்தார்?

படைத்தளபதி கோத்தபாயவின் கீழ்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

படைத்தளபதி கோத்தபாயவின் கீழ்😃

87இல் கரும்புலி மில்லர் வெடிக்காது விட்டிருந்தால் 87இலும் முடிந்திருக்கும்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

முடிந்திருக்கலாம் என்பது வேறு

முடிந்திருக்கும் என்று எழுதுவது ஒருவரை மட்டுமே வரலாறாக்கி மற்றைய அனைத்தையும் கேவலப்படுத்துவது.

இந்த பைத்தியக்காரத்தனமானவர்களை கண்டும் காணாமல் போகமுடியாது. 

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

கிழக்கிலிருந்து தழிமீழம் நோக்கி போராடுவேன் என்றவர் தப்பியோடியதும் வரலாறு 

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

இதென்ன பல்தேர்வு வினாவா?? மதவாச்சியில் ஏறிய சிங்களவன் :99_muscle:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

புலிகள் என்பது ஒரு அமைப்பல்ல அழிந்து போக.

அது ஒரு குறியீடு.

தமிழர்களின் தாகம் இருக்கும் வரை தமிழர்கள் அடக்கப்படும்வரை அதுவும் இருக்கும்.

அந்த ........ யின் பெயரை நீங்கள் திரும்ப திரும்ப சிறீ கிருஷ்ணா லெவலுக்கு எழுதுவது எனக்கு புரிந்தது. எனவே தொடர்வதால் எதுவும் யாழில் எனக்கு ஏற்படுத்தி விட முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

புலிகள் என்பது ஒரு அமைப்பல்ல அழிந்து போக.

அது ஒரு குறியீடு.

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

கருத்தை 

தத்துவங்களை அதனூடாக எதிர் கொள்ள முடியாத ஓநாய்களின் கடைசி ஆயுதம் இது என்பதை அறிவோம். போய் வேறு எங்காவது சொறியுங்கள்.

டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

கருத்தை 

தத்துவங்களை அதனூடாக எதிர் கொள்ள முடியாத ஓநாய்களின் கடைசி ஆயுதம் இது என்பதை அறிவோம். போய் வேறு எங்காவது சொறியுங்கள்.

டொட்.

தத்துவம் வேறயா?? ஹஹ்ஹா!!!

புலிகள் இல்லாத இடத்தில் ஓநாய்கள்தான் புலிவேஷம் போட்டுக்கொண்டு நாடகமாடுகின்றார்கள். 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

புலிகளின் எதிர்த்தாக்குதல்[தொகு]

அதுவரை தங்களது போராட்ட வரலாற்றில் மிகநீண்ட மறிப்புச்சமரைச் செய்திராத தமிழீழ விடுதலைப்புலிகள் ஜெயசிக்குறு நடவடிக்கையை எதிர்த்து நீண்டகால கடுமையான மறிப்புச்சமரைச் செய்தனர். விடுதலைப்புலிகள் தமது அனைத்து வளங்களையும் வன்னியில் ஒருங்கிணைத்து இம்முறியடிப்புச்சமரைச் செய்தனர். கிழக்கு மாகாணத்திலிருந்து அப்போதைய விடுதலைப்புலிகளின் தளபதியும் பின்னாளில் பிரிந்து சென்றவருமான கருணா அம்மானின்தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் வன்னிக்கு வந்திருந்தனர். புலிகளின் எதிர்ப்புச்மருக்கான ஒருங்கிணைப்புத் தளபதியாக கேணல் கருணா அம்மான் செயற்பட்டார். நேரடிக் களமுனைத் தளபதிகளாக கேணல் தீபன், கேணல் ஜெயம் ஆகியோர் செயற்பட்டனர்.

https://ta.wikipedia.org/wiki/ஜெயசிக்குறு

பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் ...🤥

1 hour ago, விசுகு said:

முடிந்திருக்கும் என்று எவ்வாறு எழுத முடிகிறது??

அனைத்து தளபதிகள் போராளிகளும் கிள்ளுக்கீரைகளா??

பைத்தியக்காரத்தனமான எழுத்துக்கள் எதுக்கும் உதவப்போவதில்லை

அவரை விடுங்கள் விசுகர். ஏன் அதை இங்கே இணைத்தேன் என்று அவருக்கே தெரிந்திராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

கருணாதான் பிரபாகரனுக்கு போராட்டத்தைக் கற்றுக் கொடுத்தார் என்று கூறாதவரை கிருபனின் கடி ஜோக்குகளை சகிக்க வேண்டியதுதான்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவும் வரலாறுதான்..

அம்மான் இல்லாவிட்டால் 1997/1998 இலும் போராட்டம் முடிந்திருக்கும்..

வேறு வழி கண்டு ஓடிய விடிவெள்ளி இன்றுவரைக்கும் சிங்கள இனவாதத்திற்கு வக்காலத்து வாங்குகின்றாரே தவிர  இது வரைக்கும் தீர்வு காண முடியவில்லை. மாறாக சிங்கள இனவாத அடக்குமுறை கிழக்கில் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

அதை விட பெரிய கதை தேர்தலில் போட்டியிட்ட தொகுதியிலேயே இவரால் வெற்றி பெற முடியவில்லை.

நம்பிக்கை துரோகிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் எப்படியானவர்களாக இருப்பார்கள் என்று கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கற்பகதரு said:

இவனை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து, தனது மெப்பாதுகாவலராக கூடவே வைத்திருந்து பின்னர் தென் தமிழீழத்துக்கே பொறுப்பாக்கி தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டார் —- யாரவர்?

typical கற்பகதரு.

தியாகத்தை அசிங்கப்படுத்தவும், துரோகத்தைக் கொண்டாடவும் வேறு யாரால் முடியும்.. 😂😂

வன்னியை விட்டு வெளியேற pass கிடைக்காத கோபத்தில் போராட்டத்திற்கு எதிராக விடம் கக்கும் அதே இழி பிறவிகளின் ஆத்திரம் பிரபாகரன் மீது திரும்புவது வழமை.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, கிருபன் said:

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

ஆதாரத்திற்கு அப்படியான நிறுவனங்கள்/ கழகங்களின் பெயர்களை சொல்லுங்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

புலிகளை குறியீடாக்கி மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம், பட்டம் கொடுக்கும் கழகங்கள் எல்லாம் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பது உண்மைதான். 

பங்குதாரராக முடியவில்லை என்கின்ற கோபமோ... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

பங்குதாரராக முடியவில்லை என்கின்ற கோபமோ... 😂

இந்த கேள்வி  என் மனதில் கன நாட்களாகவே இருந்தது. இப்போதும் கேட்பமா என நினைத்து விட்டு......ஏன் பொல்லாப்பு என இருந்து விட்டேன் 🤣

புலிகளால் நன்னடத்தை தண்டனை வாங்கியவர்கள் தான் இன்றுவரைக்கும் .....அவர்களின் கொள்கை விரோதிகளாக இருக்கின்றார்கள்........இது நான் அறிந்த/தெரிந்த வரையில்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.