Jump to content

முதன் முதலில்... சனிக் கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர். காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 1 person and text that says 'கபிலர்' May be an image of text
 
1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு!
 
கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். ... இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி. மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்திலேயே சனிக்கிரக்தை கணடறிந்தவர்கள் நம் முன்னோர்கள்.
 
சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள்.
‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்று இதனைக் கபிலர் பாடியுள்ளார்.
ஆகவே சங்கப் புலவர்கள் அக்கால அறிவு நிலையின்படி அவ்வப்போது தெரிந்த கோள்களைப் பற்றிப் பாடியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.
 
அந்தப்பாடல்:
தந்தை நாடு! தொகு
பாடியவர் : கபிலர்
திணை: பொதுவியல் துறை:
 
"கையறுநிலை மைம் மீன் புகையினும், தூமம் தோன்றினும்,
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்,
வயல்அகம் நிறையப், புதற்பூ மலர,
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடு நிறை நன்புல் ஆரக்,
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப்,
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத் ததுவே;
பிள்ளை வெருகின் முள் லெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்"
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே.
 
விளக்கம்:
117. தந்தை நாடு!
பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 - இல் காணலாம்.
பாடலின் பின்னணி: பாரி இருந்த பொழுது வளமாக இருந்த பறம்பு நாடு அவன் இறந்த பிறகு வளம் குன்றியதைக் கண்டு மனம் கலங்கிய கபிலர் தன் வருத்தத்தை இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல். கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.
 
அருஞ்சொற்பொருள்:
1.மை = கருநிறம்; மைம்மீன் = சனி; புகைதல் = மாறுபடுதல், சினங்கொள்ளுதல்; தூமம் = புகை (வால் நட்சத்திரம்). 2. மருங்கு = பக்கம்; வெள்ளி = சுக்கிரன். 4. அமர் = அமைதி, விருப்பம். 5. ஆமா = பால் கொடுக்கும் பசு; ஆர்தல் = புசித்தல். 6. பல்குதல் = மிகுதல். 7. பெயல் = மழை; புன்புலம் = புன்செய் நிலம். 8.வெருகு = பூனை; எயிறு = பல்; புரைய = போன்ற. 9. முகை = மலரும் பருவத்தில் உள்ள அரும்பு. 10. ஆய் = அழகு.
உரை: சனி சில இராசிகளிலிருந்தாலும், வால் நட்சத்திரம் தோன்றினாலும், சுக்கிரன் தெற்கு நோக்கிச் சென்றாலும் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்பது சோதிடர்களின் நம்பிக்கை. அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் காலத்திலும், பறம்பு நாட்டில் வயல்களில் விளைவு மிகுந்திருக்கும்; புதர்களில் பூக்கள் நிரம்ப மலர்ந்திருக்கும்; வீடுகளில் கன்றுகளை ஈன்ற பசுக்கள் தங்கள் கன்றுகளை விருப்பத்துடன் நோக்கும் கண்களோடு நல்ல புல்லை நிரம்பத் தின்னும்; செம்மையான ஆட்சி நடைபெறுவதால் சான்றோர்கள் மிகுதியாக இருப்பர்; புன்செய் நிலங்களில்கூட மழை தவறாமல் பெய்யும். பூனைக்குட்டியின் முள்போன்ற பற்களை போன்றதும், பசுமையான முல்லை அரும்பு போன்றதும் ஆகிய பற்களை உடைய, அழகிய வளையல்களை அணிந்த பாரி மகளிரின் தந்தையின் நாடு அவன் ஆட்சிக் காலத்தில் வளம் குன்றாமல் இருந்தது. ஆனால், இன்று வளம் குன்றியது.
நன்றி மதன். கோபால்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு

கபிலர் வெற்றுக்கண்களால் பார்த்திருப்பார். அதுபோல உலகின் பிறபகுதிகளில் வாழ்ந்தவர்களும் பார்த்திருப்பர். பபிலோனிய நாகரீக காலத்தில் (கி.மு. 6ஆம் நூற்றாண்டு) சனிக்கிரகம் குறிக்க்கப்பட்டுள்ளது.

வெற்றுக் கண்களால் பார்க்கப்பட்ட சனிக்கிரகத்தை கலிலியோ தொலைநோக்கி மூலம் மேலும் துல்லியமாக அவதானித்தார். முதன் முதலில் கபிலர் கண்டுபிடித்தார் என்பது பேஸ்புக்கில் லைக்குகள் அள்ளப் போட்ட வசனம்!

History of observation and exploration

180px-Galileo.arp.300pix.jpg
 
Galileo Galilei first observed the rings of Saturn in 1610

The observation and exploration of Saturn can be divided into three phases. The first phase is ancient observations (such as with the naked eye), before the invention of modern telescopes. The second phase began in the 17th century, with telescopic observations from Earth, which improved over time. The third phase is visitation by space probes, in orbit or on flyby. In the 21st century, telescopic observations continue from Earth (including Earth-orbiting observatories like the Hubble Space Telescope) and, until its 2017 retirement, from the Cassini orbiter around Saturn.

Ancient observations

See also: Saturn (mythology)

Saturn has been known since prehistoric times,[125] and in early recorded history it was a major character in various mythologies. Babylonian astronomerssystematically observed and recorded the movements of Saturn.[126] In ancient Greek, the planet was known as Φαίνων Phainon,[127] and in Roman times it was known as the "star of Saturn".[128] In ancient Roman mythology, the planet Phainon was sacred to this agricultural god, from which the planet takes its modern name.[129] The Romans considered the god Saturnus the equivalent of the Greek god Cronus; in modern Greek, the planet retains the name CronusΚρόνος: Kronos.[130]

The Greek scientist Ptolemy based his calculations of Saturn's orbit on observations he made while it was in opposition.[131] In Hindu astrology, there are nine astrological objects, known as Navagrahas. Saturn is known as "Shani" and judges everyone based on the good and bad deeds performed in life.[129][131] Ancient Chinese and Japanese culture designated the planet Saturn as the "earth star" (土星). This was based on Five Elements which were traditionally used to classify natural elements.[132][133][134]

In ancient Hebrew, Saturn is called 'Shabbathai'.[135] Its angel is Cassiel. Its intelligence or beneficial spirit is 'Agȋȇl (Hebrew: אגיאל‎, romanizedʿAgyal),[136] and its darker spirit (demon) is Zȃzȇl (Hebrew: זאזל‎, romanizedZazl).[136][137][138] Zazel has been described as a great angel, invoked in Solomonic magic, who is "effective in love conjurations".[139][140] In Ottoman Turkish, Urdu and Malay, the name of Zazel is 'Zuhal', derived from the Arabic language (Arabic: زحل‎, romanizedZuhal).[137]

https://en.wikipedia.org/wiki/Saturn

Link to comment
Share on other sites

மின்சாரத்தை கண்டு பிடித்தவர் அகத்தியர் என்பதால் இதுவும் உண்மையாக இருக்கலாம்.  விமானத்தை இராவணன் கண்டுபிடித்தான்.  மோடி இந்திய அறிவியல் மகாநாட்டில் உரையாற்றும் போது கூறியதைப் போல் உடல் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சையை நம் முன்னோர்கள் எப்போது கண்டு பிடித்து  யானை தலையை மனித உடலில் ஒட்டி பிள்ளையாரை உருவாக்கினர். இப்படி பல  கொலரை எடுத்து மேலே விடும் பல பெருமைகள் உள்ளன.  ஆனால் தமிழருக்குள்  மட்டும் தான் இந்த விடயங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து மகிழலாம் என்பது தான் கவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரம் இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள் சுகபோகமாகத்தான் வாழ்ந்தார்கள். மிருகங்கள் பறவைகள் எல்லாம் நிம்மதியாக வாழ்ந்தன. கண்ட கண்ட அவசியமற்ற கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கண்ட கண்ட நோய்களும் உருவாகவில்லை. மின்சாரம் இல்லாத காலத்து மக்களும் உணவுகள் சமைத்தார்கள் உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் இன்றோ.........

இவ்வுலகில் ஒரு மணிநேரம் மின்சாரம் இல்லாவிட்டால் அதோ கதிதான். உலகமே செய்வறியாமல் தவிக்கும். தேனீர் கூட  குடிக்க முடியாது. ஏன் ஒருசில இடங்களில் மலசல கூடம் கூட இயங்காது. இன்றைய கண்டுபிடிப்புகளையும் விஞ்ஞானங்களையும் நம்பினால் எல்லாமே அழிவில்தான் முடிகின்றது.

கபிலர் விடயம் பொய் என்றால்.......  பிரமிட் போன்ற உலகில் உள்ள பல விடயங்களின் முடிச்சுகள் இன்னும் அவிட்கப்படாமலே உள்ளது.அன்றைய பாரிய பிரமாண்டங்களை இன்றைய மனித தொழில் நுட்பங்களால் செய்ய முடியாமல் இருக்கின்றது.ஏன் தஞ்சை கோபுரம் கூட உலக அதிசயம். எப்படி செய்து முடித்தார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிர்.

 

தலைமை தச்சர் குஞ்சரமல்லனின் நிலத்தேர்வு | tanjore big temple land -  hindutamil.in

Cairo and Hurghada Egypt Holiday, Red Sea Holiday Vacation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இருந்தவற்றை கண்டுபிடிக்கவேண்டிய அவசியமில்லை. இது கோள்கள், கிரகங்கள், வால் நச்சத்திரங்களுக்கும் பொருந்தும்.  எனவே சனி கிரகத்தை முதலில் யார் கண்டறிந்தார் அல்லது அவதானித்தார் என கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.

விஞ்ஞானவியலில் ஒருவர் ஒரு பொருளை கண்டறிதல் (discover) என்பது அவர் ஏற்கனவே இருந்த ஒரு பொருளை முதலில் அவதானித்தார் என்றும்,  கண்டுபிடித்தல்(invention) என்பது புதிதாக ஒன்றை முதன்முதலாக அவர் உருவாக்கினார் என்பதும் ஆகும்.

இந்த மாறாட்டம் தமிழில் பொதுவாக உள்ள ஒன்றுதான். மேலே கிருபன் இணைத்த ஆங்கில பதிவில் இந்த இரண்டையும் சரியாக கையாண்டிருப்பதை அவதானிக்கமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் உலகம் சுற்றுவதை எப்போதோ கூறிவிட்டார் - சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்.... ஆனால் உரையாசிரியர்கள் யாருக்கும் திருவள்ளுவர் உலகம் சுற்றுவதைக் குறிப்பிட்டார் என்பதைக் கூறத் தைரியம் வரவில்லை.
குறள் பொருள் - உலகம் எவ்வளவு தான் சுற்றினாலும் ஏரைத்தான் நம்பியிருக்க வேண்டும்.  அதனால் சிரமமான தொழிலாயிருந்தாலும் உழவே தலையாயது. என்பதாம்.  எல்லோரும் திருக்குறளுக்கு ஏதோ உரையெழுதுகிறோமென்று விட்டு பரிமேலழகரையும் மணக்குடவரையும் தான் நம்பியிருக்கிறார்கள்.  அப்படித்தான் நம்மவர்கள் ஏற்கனவே கண்டுபிடித்தவற்றை ஏற்றுக் கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.