Jump to content

வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுப் படைப்புக்களைப் பாதுகாப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்!

AdminMarch 29, 2021
ltte-logo-768x809.jpg?resize=640%2C674

தமிழீழ    விடுதலைப்போராட்டத்தின்    தியாகங்களையும்    எழுச்சிகளையும் வெளிப்படுத்தியஉணர்ச்சிமிகுபடைப்புக்களில் மாற்றம்செய்யும்  செயல் என்பது எமது போராட்ட வரலாற்றை அழிக்கும் செயலுக்கு ஒப்பானது.எமது தாயகவிடுதலைப்போராட்டம் செயற்கரிய உன்னத உயரீகங்கள் ஊடாக இந்த  உலகம்  வியந்துபோகும்  அளவிற்குப்  பெருவளர்ச்சி  கண்டுள்ளது. இப்பெருவளர்ச்சியின்     வல்லமைகளாய்     திகழ்பவர்கள்     மாவீரர்கள்.

தாயகத்தினதும் தாயக மக்களினதும் விடிவிற்காகத் தங்களின் இன்னுயிர்களைக் கொடையாக்கிச்  சென்ற  இம்மாவீரர்கள்  எமது  தேசவிடுதலை  வரலாற்றின் அழியாதபடிக்கற்கள்.   2009   மே   18இல்   எமது   ஆயுதப்போர் அமைதியடைந்தபோதும்,  எமது  தேசத்தினதும்  மக்களினதும்  விடுதலையுணர்வு எமது  மனங்களில்  நிறைந்திருக்கிறது.  மாவீரர்களினதும்,  தேசவிடுதலைப்போரில் சாவடைந்த  மக்களதும்  விடுதலைக்  கனவை  நனவாக்கவேண்டிய  பொறுப்பு தமிழ்மக்கள் அனைவருக்கும் உரித்தானது.

செந்நீரும் கண்ணீரும் இறைத்து, உயிர் ஒப்புவிப்புகளோடு கட்டிவளர்க்கப்பட்ட எமது  போராட்டத்தின்  வரலாறு,  திரிபுகள்,  புனைவுகள்  ஏதுமற்று  காலத்தின் சாட்சியாக   எம்   அடுத்தடுத்த   தலைமுறையினருக்குக்   கடத்தப்பட்டுக் கையளிக்கப்படவேண்டும்    என்பதே  எமது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது  எண்ணம்.  அதனாலே  தான்  வரலாறு  எனது வழிகாட்டி என அவர் உரைத்துள்ளார்.

அண்மைக்காலத்தில் எமது உண்மையான வரலாற்றிற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில்  சில நிகழ்வுகள்  நடைபெறுவது  வரலாற்றை  நேசிக்கும்  மக்களுக்கு மிகுந்த மனத்துயரையும் சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  குறிப்பாக,‘‘இந்தமண்  எங்களின்  சொந்த  மண்”  ஒலிப்பேழையில்  வெளிவந்த இந்தமண் எங்களின்  சொந்த  மண் எனும்  பாடல், இந்தப்  பாடல்  தயாரிப்பில் எந்தவித  தொடர்புமற்ற  ஒரு  சிலரால்  உருச்சிதைப்பு  செய்யப்பட்டு, இசையை மாற்றுவது வரலாற்றுக்கு ஏற்படுத்தும் களங்கமாகவே அமையும்.

எனவே,  அன்பானவர்களே  எமது  தேசவிடுதலைக்கான  கலைப்பயணத்தை முன்னெடுக்கும்  அனைவருக்கும்  எமது  ஒத்துழைப்பையும் உற்சாகமூட்டலையும் நாம்   தொடருவோம்.   ஆனால்,   யாரும்   விரும்பியோ, அறியாமலோ தாயகவிடுதலை  வரலாற்றை  களங்கப்படுத்தும்  செயல்களில்  ஈடுபடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.‘‘

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கலைபண்பாட்டுக் கழகம்,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்

spacer.png

 

http://www.errimalai.com/?p=62691

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Similar Content

  • By shanthy
   "இந்த மண் எங்களின் சொந்த மண்" பாடல் குறுந்தட்டு வெளியீடு 13.03.21 அன்று சென்னையில் நடைபெற்றது.
   பாடல்களுக்கான இசையை மண்வாசக் கலைஞர் முனைவர் சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் பார்த்திருக்கிறார்.
   இந்நிகழ்வில் தமிழின உணர்வாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 
   செங்கோல் படைப்பகத்தின் அமைப்பாளர் சுதன் தலைவனின் தம்பி அவர்கள் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது.
   1990 வெளியான கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் பாடலை தற்காலத்துக்கு ஏற்ற வடிவில் மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
   இக்குறுந்தட்டில் மேலும் எட்டுப் பாடல்கள் வெளியாகியுள்ளது. 
   தமிழகக் கவிஞர்கள் இளையகம்பன் , கவிபாரதி , ஆகியோருடன் எங்கள் கவிஞர்கள் பேராசிரியர் திருக்குமரன் , அகதன், துளசிச்செல்வன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
   பாடல்கள்
   ------------
   1) இந்தமண் எங்களின் சொந்தமண் - புதுவை இரத்தினதுரை - புதுவை சித்தன் 
   2) எந்தை நிலம் நீ எனக்கு - திருக்குமரன் - புதுவை சித்தன் 
   3) புலி பிறந்தது வலி மறைந்தது - துளசிச்செல்வன்  - திவாகர் 
   4) பறையிசை முழங்க பகையினம் நடுங்க- இளையகம்பன்- புதுவை சித்தன் 
   5) வெடிமருந்து கிடங்காய் வெடித்து எழு தமிழா- இளையகம்பன் - புவைசித்தன், மாலதி, சின்னப்பொண்ணு 
   6) தமிழே தமிழே வணக்கம்- கவிபாஸ்க்கர்- புதுவை சித்தன் 
   7) அடிங்கடா அடிங்கடா பறை தாளத்தை - கவிபாஸ்க்கர்- புதுவைசித்தன் 
   😎 அருள்தேடி அலைகின்றோம் - அகதன்- வைஷ்ணவி ,விபுர்ணன் 
   9) எங்களின் தேசமோ எமக்கு வேண்டும்- அகதன்- தமிழ்த்தேன், பிரணவி, திருத்திகா
   யூடியூப்பில் பாடல்களை கேட்கலாம். 
 • Topics

 • Posts

  • இலங்கையில் புதுவகையான கொரோனா வைரஸ் ? April 22, 2021 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் அதிகரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும்  நோயாளர்களின்  எண்ணிக்கையும் அதிகரிப்பு  ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.  குறித்த பதிவில் காணப்படுவதாவது,  இலங்கையில் இதுவரை காணப்படாத புது வகையான கொரோனா வைரசு இனங்காணப்பட்டு  கடந்த சில நாட்களில் பதிவாகியுள்ளது. இது குறித்த விஞ்ஞான ரீதியானஆய்வு மற்றும் தகவல் மதிப்பீட்டாய்வு தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில், பொது மக்கள் அனைவரும்  அதிக கவனம் செலுத்துதல் அவசியம். நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் நோய் பரவுவதை மிக விரைவாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நாம் அனைவரும் கடந்த காலத்தில் கண்டு கொண்டுள்ளோம்.  கடந்த பண்டிகை காலங்களைத் தொடர்ந்து இச்சுகாதார வழிகாட்டுதல் நடைமுறைகளை கடைப்பிடித்தல்  படிப்படியாகக் குறைந்து வந்ததே  இந்த புதிய பாதிப்பு உருவாக சந்தேகத்திற்கு இடமின்றி வழிவகுத்தது. மீண்டும் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவது மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் போன்ற செயல்களைத் தவிர்ப்பதற்கு, ஒரு சமூகமாக செயற்பட எமக்கு நோய் நிவாரணிக்கான பொறுப்பை மீளவும் நினைவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.  இந்த தடுப்பு நடவடிக்கைகளில் கைகளை சுத்தமாக வைத்திருத்தல், முகக்கவசம் அணிவது, மக்களிடையே இடைவெளி பேணல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, இருமல், தொண்டை நோ அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் சன நெருக்கமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல், சன  நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்ப்பது ஆகியவை அடங்கும். ஏற்கனவே சுகாதார வழிகாட்டுதல்களை உரியவாறு  முறையாகக் கடைப்பிடித்து நடைமுறைப்படுத்தியமையால் கடந்த சில மாதங்களாக இலங்கை வாசிகள் அனைவருக்கும் ஒருவித விடுதலை உணர்வை  அனுபவிக்க முடியுமாயிருந்தது. ஆதலால்   நாம்  மீண்டும் நோய்த்தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது என்பது கடினமான காரியமல்ல. ஆகையால், எதிர்வரவிருக்கும் காலம் முழுவதும், மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு முழுமையாகப் பின்பற்றி, தேவையற்ற போக்குவரத்துப் பயணங்களை  முடிந்தவரை குறைத்து, தமக்கு நோயறிகுறிகள் தென்பட்டால் ஏனையோரை பாதுகாக்கும் வகையில் செயற்பட்டு, மீண்டுமொரு முறை நாடு முழுவதும் கொரொனா நோய்த்தொற்று பரவாது தடுக்க  பொறுப்புணர்ந்து செயற்படுமாறு சுகாதார அமைச்சின் சார்பாக இலங்கை வாழ் சகலரிடமும் வேண்டிக் கொள்கின்றோம். என பதிவிடப்பட்டுள்ளது   https://globaltamilnews.net/2021/159821/
  • யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு April 23, 2021 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.  இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களின் கடும் அழுத்தத்தை அடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு முன்வந்த பல்கலை நிர்வாகம் கடந்த ஜனவரி 11ஆம் திகதி காலை துனைவேந்தரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அதேவேளை இன்றைய தினம் தூபி திறந்து வைக்கப்படவிருந்த நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு  துனைவேந்தர் மாரடைப்பு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , தொடர்ந்து வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.     https://globaltamilnews.net/2021/159832/
  • வணக்கம் வருக .!. தங்களின் மேலான கருத்துக்களை தருக..!
  • கச்சதீவு அதிபர்... இரண்டு நாள் நல்லெண்ண விஜயமாக,  கைலாசா  நாட்டுக்கு சென்றார்.  அவரை  விமான நிலையத்திற்கு சென்று... கைலாசா  அதிபர் நித்தியானந்தா வரவேற்றார். 🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.