Jump to content

யாழ்ப்பாணத்தில் இழுத்து மூடும் அபாய நிலையில் 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இழுத்து மூடும் அபாய நிலையில் 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகள்

யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மாத்திரம் அறுபது பாடசாலைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

pre_school.jpg

அண்மையில் மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இத் தகவலை குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,

தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாக குறைவடைந்துள்ளது.

மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு ஒரு மாணவர் கூட இணையவில்லை.

இது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். தற்சமயம் இலங்கையில் கல்வி அமைச்சு ஒரு அறிவித்தலை விடுத்துள்ளது.

அதாவது இருநூறு பிள்ளைகளுக்கும் குறைவாக காணப்படும் பாடசாலைகளை மூடுவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள அறுபது பாடசாலைகளில் 54 பாடசாலைகளே தற்சமயம் இயங்கி வருகின்றன.

ஆறு பாடசாலைகள் சில பல காரணங்களால் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. பொறுப்பு வாய்ந்த கல்வி அதிகாரி ஒருவரின் தகவலின் படி தென்மராட்சியில் முப்பது பாடசாலைகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களே கல்வி பயில்கிறார்கள்.

கல்வி அமைச்சின் யோசனை நடைமுறைக்கு வருமானால் தென்மராட்சி பிரதேசத்தில் மாத்திரம் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகளை மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும்.

ஒரு பாடசாலையை தீர்மானம் நிறைவேற்றி மூடுவது சுலபம். ஆனால் அதே பாடசாலையை ஆரம்பிப்பது மிகமிகக் கடினமான செயற்பாடு.

அத்துடன் தென்மராட்சியில் குறைந்த மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் சிலவற்றை அருகில் இருக்கும் பாடசாலைகளுடன் இணைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதனை நாம் தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/102967

Link to comment
Share on other sites

தமிழரிடமிருந்து எல்லாமே உருவப்படுகிறது. அதிவிரைவில் கோமணத்தையும் உருவக்கூடிய ஒருவரை அமைச்சரவையில் கோத்தா கோத்துவிடுவார்போல் தெரிகிறது.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதற்குக் காரணம் பெற்றோர் இப்போதெல்லாம் பிள்ளைகளை ஊர் பள்ளிகளில் விடாது கார் பிடித்து அல்லது ஓட்டோவில் இந்தியா போன்று பணம் செலவு செய்து நல்ல பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பலபள்ளிகளுக்கு அரசாங்க உதவித் திட்டம் இருந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்தாது அதிபர்கள் அசட்டையாக இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருந்த வேண்டிய விடயம்.😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்குக் காரணம் பெற்றோர் இப்போதெல்லாம் பிள்ளைகளை ஊர் பள்ளிகளில் விடாது கார் பிடித்து அல்லது ஓட்டோவில் இந்தியா போன்று பணம் செலவு செய்து நல்ல பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பலபள்ளிகளுக்கு அரசாங்க உதவித் திட்டம் இருந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்தாது அதிபர்கள் அசட்டையாக இருக்கின்றனர்.

வீட்டுக்கு வீடு வாசற்படி போல இது எல்லா ஊரிலும் உள்ள ஒரு பிரச்னையாக உள்ளது.  எமது ஊர் பாடசாலையும் அதே தான்.  அதே போல பாடசாலையில் ஊர் ஆசிரியர் மார் கற்பித்தும் அவர்கள் தங்களது சுயநல சே(தே)வைகளைத்தான் சிறப்பாக செய்கிறார்கள்.  அதில் நீ பெரிதா நான் பெரிதா என்ற போட்டி வேறை.... கவனிக்க வேண்டிய விடயம் சிறப்பாக செய்வதற்கு போட்டி இல்லை... எப்படி கெடுப்பது என்பதற்குத்தான் போட்டி.  அதற்குமேல் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாங்கள் ஊருக்கு போகும் போது கெத்து காட்டுவதற்கென்று திட்டமிட்டு நிகழ்ச்சிகளை போட்டி ஆசிரியர்களினூடாக சிறப்பாக முன்னெடுக்கிறார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்வித் திணைக்களத்தினால் ஓர் பாடசாலைக்கு வழங்கப்படும் பணத்தினை திருப்பி அனுப்பினால் அந்த பணம் பாதுகாப்பு அமைச்சிற்கு வழங்கப்படும். இதனை ஊக்கிவிப்பதற்காக பாடசாலை அதிபர்களுக்கு சிறிய தொகை வெகுமதியாக வழங்கப்படும்.

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதற்குக் காரணம் பெற்றோர் இப்போதெல்லாம் பிள்ளைகளை ஊர் பள்ளிகளில் விடாது கார் பிடித்து அல்லது ஓட்டோவில் இந்தியா போன்று பணம் செலவு செய்து நல்ல பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். பலபள்ளிகளுக்கு அரசாங்க உதவித் திட்டம் இருந்தாலும் அதை சரியாகப் பயன்படுத்தாது அதிபர்கள் அசட்டையாக இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊரிலும் இதே பிரச்சினைகள் உள்ளன.

நடைபெறும் பாடசாலைகளுக்கே பிள்ளைகள் இல்லை இதில் அழிந்து போன கைவிட பட்ட  பாடசாலைகளை பரம்பரை என்று சொல்லி லட்சக்கணக்கில் செலவு செய்து திருத்துகிறார்கள்.

உள்ள மாணவர்களையும் பரவலாக்கி???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே எமது நிலத்தையும் வளத்தையும் மனமுவந்து விட்டுக் கொடுக்கும் பல விடையங்களில் இதுவும் ஒன்று.😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வருந்த வேண்டிய விடயம்.😢

இது எம்மவர்களின் பிறப்பு வீத வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது.நாமிருவர் நமக்கிருவர் எனும் வரிகளை மாற்றியமைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊர் சிறிய பாடசாலையும் அதே தான்.

பெற்றோர் இப்போதெல்லாம் பிள்ளைகளை ஊர் சிறிய பாடசாலைகளுக்கு விடாது  பெரிய பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர்

Link to comment
Share on other sites

இங்கு புலம் பெயர்ந்த தமிழர் எல்லாம் 24 கரட் தங்கம் மாதிரி அல்லவா கதைக்கின்றார்கள்.இங்குள்ள அநேகர்  செய்வது  நல்ல பாடசாலை இருக்கும் இடத்தில் அதிக விலையில் வாங்குதல்,வீடு வாங்க முன் முதல் பார்ப்பது நல்ல பாடசாலை (கறுப்பினத்தினர் , குறைந்த வரிமாணம் உடைய பிள்ளைகள் இல்லாத பாடசாலை) ஆகும். அப்படி வீடுவாங்க முடியவில்லை என்றால் கள்ள விலாசம் கொடுத்து பாடசாலைக்கு விண்ணப்பித்து பெறுதல். இப்பிடி செய்து விட்டு தாயக மக்களுக்கு இலவசத்தில் அறிவுரை சொல்லுகின்றோம்.

என்ன பொறுத்தவரை மிக குறைந்த மாணவர்களுடன் பாடசாலை நடத்துவது மாணவர்களுக்கோ, ஆசிரியருக்கோ, அரசாங்கத்துக்கோ நன்மையில்லை. அதனை மூடிவிட்டு மாணவர்களை மற்றைய பாடசாலையுடன் இணைப்பது எல்லோருக்கும் நன்மையளிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலமைக்கு காரணம், நகர்புற பாடாசாலைகள் 5/6 மாடி என்று கட்டடங்களை கட்டி மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டுவது தான்.

90 களில் ஓர் வகுப்பில் ABCDE வரை இருந்த பிரிவுகள் இன்று A-J வரை வந்துவிட்டது, அத்துடன்  ஓர் வகுப்பில் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை இணைப்பதனாலும் கிராம்ப்புற பாடாசாலைகள் மாணவர்கள் இன்றி இந்த நிலைக்கு வந்துள்ளன.

யாழ் நகர பாடசாலைகளில் தற்போது மாணவர்களின் தொகை 3500 என்பது சாதாரணமானது. இதுவே 90களில் 1500.

எல்லாம் அட்மிசனின் போது வழங்கப்படும் டொனேசனுக்காக.

இது இந்த பாடசாலையின் வட பகுதி கட்டடம்,

C9-ED272-C-C147-4462-9-C85-0-E294464-D7-

அதே பாடாசாலையின் ஆரம்பப்பிரிவு Primary இன் 2021 இல் நிலை

06-CE9-B79-A4-FD-4-C84-8-CA0-46-E0-E862-

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

இது எம்மவர்களின் பிறப்பு வீத வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது.நாமிருவர் நமக்கிருவர் எனும் வரிகளை மாற்றியமைக்க வேண்டும்.

நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும். நாம் நால்லவர், நமக்கு நாற்பது என்பது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்கு பின் ஆண்கள் போதுமாக இல்லாத நிலையில் ஒரு ஆண் ஏழு மனைவியரையும், ஒவ்வொரு மனைவியும் முடிந்த அளவு பிள்ளைகளையும் கொண்டிருக்க வேண்டுமென்று வழி காட்டினார். போருக்கு பின்னான எரித்திரியாவில் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆணும் குறைந்தது நான்கு மனைவிகளை கொண்டிருக்க வேண்டும் என சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இலங்கையில் போருக்கு பின்னான தமிழரோ சாதகம், சீதனம், சாதி பொருந்தாத கன்னியர்களை பெருக்கி வருகிறது. 

எமது சமுகத்துக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போன்ற போருக்கு பின்னான தலைவர் கிடைத்தால் கட்டாயம் நான்கு மனைவியரும் ஒரு மனைவிக்கு குறைந்தது பத்து பிள்ளைகள் என்றும் வழி காட்டுவார். குமாரசாமி அண்ணை, நீங்கள் சரியான முறையில் சிந்திக்கிறீர்கள், தலைமை பொறுப்பை எடுக்கலாமே? நாம் நால்லவர், நமக்கு நாற்பது என்றே ஆரம்பிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேசிய பாடசாலைகளில் தரம் வாய்ந்த ஆசிரியர்கள் எனும் மாயை அவர்களிடம் கற்றால் பாஸ் ஆகுவார்கள் என்ற மாயை ஆசியர்களின் போஸ்ட்டர்கள் பிரத்தியோக வகுப்புக்கள்  இதனால் மாணவர்கள் தேசிய பாடசாலை நோக்கி படையெடுப்பதால் மாகாண சபை சிறிய பாடசாலைகளில் மாணவர்கள் தொகை மிக குறைவு .

மற்றது தமிழர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் தற்போது குறைவாகவுள்ளது ஒன்று அல்லது இரண்டு அதுவும் வருடங்கள் கழித்து பெற்றுக்கொள்வதால் பிறப்பு வீதம் குறைவு மட்டக்களப்பில் 3 பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஊக்கு விப்பு தொகை கொடுக்கப்படுகிறது 

அம்பாறையில் மனைவியால் இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாது சத்திரசிகிச்சை பண்ணுங்கள் என்று சொன்னாலும் முஸ்லீம்கள் பண்ணமுடியாது என சண்டை பிடிக்கிறார்கள் வைத்தியசாலையில் நண்பர் ஒருவர் சொன்ன கதை இது பெண் ஒத்துக்கொண்டாலும் அவரது கணவர்கள் ஒத்துக்கொள்ளவில்லையாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் வரவு குறைவான ஐம்பது பாடசாலைகளை மூடினால் 

மாணவர்களைவிட அதிகம் பாதிக்கப்படபோவது ஆசிரியர்களே.

மாணவர்களை பெற்றோர்கள் மாற்றுவழிகள் ஏதாவது கண்டுபிடித்து வேறு பாடசாலைகளில் சேர்த்துவிடுவார்கள்.

ஆனால் அங்கு கற்பித்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தொலை தூர பள்ளிகளுக்கு தூக்கியடிக்கபடுவார்கள், அல்லது வேலையிழப்பார்கள்.

பல ஆசிரியர்கள் அவர்களிடம் கற்கவரும் மாணவர்களைவிட வறுமையானாவர்கள், மாச சம்பளத்தை ஒவ்வொரு ரூபாயாக எண்ணிப்பார்த்து செலவு செய்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாயிரத்து ஒன்பதில் போர் நிறைவுக்கு வந்துவிட்டது. பன்னிரண்டு வருடங்களின் பின்னர் உணரப்படும் போரின் அழிவுகளில் இதுவும் ஒன்று.

எமது கல்வியில் கைவைத்துவிட்டான், தரப்படுத்தலில் எம்மை புறக்கணிக்கின்றான் என்று தொடங்கிய போராட்டத்தி்ன் முடிவில்  பாடசாலைகளுக்கே மூடுவிழா என்பது இன்னோர் அவலச்செய்தி.

மூடப்படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள பாடசாலைகளில் முன்னம் கல்விகற்ற பழைய மாணவர்கள்தான் தமது பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்பட உதவிக்கரம் கொடுக்கவேண்டும்.

பீ2பீ, உண்ணாவிரதம், வாகன பேரணி என சர்வதேசத்தை நோக்கி எங்களுக்கு சோலிகள் பல. ஆனால், அத்திவாரமே ஆட்டம் காண்கின்றது இங்கு.

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்பட்டதற்கு வந்த வானளாவிய எதிர்ப்பு எங்கே! தமிழ் பாடசாலைகள் மூடப்படுவதாய் அபாயமணி ஒலிக்கும்போது தமிழ் உணர்ச்சியாளர்கள் எங்கே?

விகாரைக்கு பக்தர்கள் வருவது இல்லை என்று ஒரு விகாரையை மூடமுடியுமா? ஆனால் எவ்வளவு சுலபமாக ஒரு பாடசாலையை மூடுவது பற்றி பேசப்படுகின்றது இங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 08:31, கற்பகதரு said:

நிச்சயமாக மாற்றியமைக்க வேண்டும். நாம் நால்லவர், நமக்கு நாற்பது என்பது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்கு பின் ஆண்கள் போதுமாக இல்லாத நிலையில் ஒரு ஆண் ஏழு மனைவியரையும், ஒவ்வொரு மனைவியும் முடிந்த அளவு பிள்ளைகளையும் கொண்டிருக்க வேண்டுமென்று வழி காட்டினார். போருக்கு பின்னான எரித்திரியாவில் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஒவ்வொரு ஆணும் குறைந்தது நான்கு மனைவிகளை கொண்டிருக்க வேண்டும் என சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இலங்கையில் போருக்கு பின்னான தமிழரோ சாதகம், சீதனம், சாதி பொருந்தாத கன்னியர்களை பெருக்கி வருகிறது. 

எமது சமுகத்துக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போன்ற போருக்கு பின்னான தலைவர் கிடைத்தால் கட்டாயம் நான்கு மனைவியரும் ஒரு மனைவிக்கு குறைந்தது பத்து பிள்ளைகள் என்றும் வழி காட்டுவார். குமாரசாமி அண்ணை, நீங்கள் சரியான முறையில் சிந்திக்கிறீர்கள், தலைமை பொறுப்பை எடுக்கலாமே? நாம் நால்லவர், நமக்கு நாற்பது என்றே ஆரம்பிக்கலாம், என்ன சொல்கிறீர்கள்?

நானும்  அதாரிக்கிறேன்..உங்கள். கருத்துககளில்  இது தங்கமான கருத்து ..ஆனால்.  எப்படிச்  செய்வது என்று. நீங்கள் தான் முதலில்  செய்து காட்டவேண்டும்..😍😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இரண்டாயிரத்து ஒன்பதில் போர் நிறைவுக்கு வந்துவிட்டது. பன்னிரண்டு வருடங்களின் பின்னர் உணரப்படும் போரின் அழிவுகளில் இதுவும் ஒன்று.

எமது கல்வியில் கைவைத்துவிட்டான், தரப்படுத்தலில் எம்மை புறக்கணிக்கின்றான் என்று தொடங்கிய போராட்டத்தி்ன் முடிவில்  பாடசாலைகளுக்கே மூடுவிழா என்பது இன்னோர் அவலச்செய்தி.

மூடப்படும் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள பாடசாலைகளில் முன்னம் கல்விகற்ற பழைய மாணவர்கள்தான் தமது பாடசாலைகள் தொடர்ந்தும் செயற்பட உதவிக்கரம் கொடுக்கவேண்டும்.

பீ2பீ, உண்ணாவிரதம், வாகன பேரணி என சர்வதேசத்தை நோக்கி எங்களுக்கு சோலிகள் பல. ஆனால், அத்திவாரமே ஆட்டம் காண்கின்றது இங்கு.

யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி ஒன்று இடிக்கப்பட்டதற்கு வந்த வானளாவிய எதிர்ப்பு எங்கே! தமிழ் பாடசாலைகள் மூடப்படுவதாய் அபாயமணி ஒலிக்கும்போது தமிழ் உணர்ச்சியாளர்கள் எங்கே?

விகாரைக்கு பக்தர்கள் வருவது இல்லை என்று ஒரு விகாரையை மூடமுடியுமா? ஆனால் எவ்வளவு சுலபமாக ஒரு பாடசாலையை மூடுவது பற்றி பேசப்படுகின்றது இங்கு.

தமிழன்ர குணமே இப்படித் தான் மற்றவன் செய்யட்டும். அவன் எங்கே? இவன் எங்கே? என்று வாய் வீச்சு தான்.

பழைய மாணவர்கள் தான் தாம் படித்த பாடசாலைக்கு உதவுக்கரம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் பிழையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 00:50, zuma said:

ஆகும். அப்படி வீடுவாங்க முடியவில்லை என்றால் கள்ள விலாசம் கொடுத்து பாடசாலைக்கு விண்ணப்பித்து பெறுதல்.

நீங்க இன்னும் 15 வருடங்களுக்கு முன்பு உள்ள காலப்பகுதியில் உறைநிலைக்கு போன ஆள் போல் உள்ளது .கள்ள விலாசம் கொடுப்பது அந்தக்காலம் ஆறுமாத  கவுன்சில் வரி காட்டணும் இப்ப  அத்துடன் மூன்று பள்ளிகளை நீங்களே தெரிவு செய்யும் உரிமை உங்களுக்கு இங்கு உள்ளது .இதை விடுங்க தாயகத்தை பற்றி ஆக்கபூர்வமாக கதைப்பது இந்த திரிக்கு அழகு .

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

நீங்க இன்னும் 15 வருடங்களுக்கு முன்பு உள்ள காலப்பகுதியில் உறைநிலைக்கு போன ஆள் போல் உள்ளது .கள்ள விலாசம் கொடுப்பது அந்தக்காலம் ஆறுமாத  கவுன்சில் வரி காட்டணும் 

நான் சொல்லுவது கனடாவில் உள்ள நிலைமையை, யாம் அறியேன் இங்கிலாந்தின் நிலைமை. அதுசரி, அப்ப வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் கவுன்சில் வரி கட்டுவது இல்லை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

நான் சொல்லுவது கனடாவில் உள்ள நிலைமையை, யாம் அறியேன் இங்கிலாந்தின் நிலைமை. அதுசரி, அப்ப வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் கவுன்சில் வரி கட்டுவது இல்லை தானே.

அவர்கள் பள்ளிகூடம் போவதில்லை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

நான் சொல்லுவது கனடாவில் உள்ள நிலைமையை, யாம் அறியேன் இங்கிலாந்தின் நிலைமை. அதுசரி, அப்ப வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் கவுன்சில் வரி கட்டுவது இல்லை தானே.

வாடகை வீட்டில் இருந்தாலும் வரி கட்டித்தான் ஆகணும் .

கனடாவில் இல்லையா ? இங்கு 90 களில்  தண்ணீர் பில் லாண்ட் லோர்ட் தான் கட்டுவது உண்டு .

அப்படி இப்படி என்று தண்ணி பில்லுக்கு தற்போது மீற்றர்  பூட்டி விட்டார்கள் .

Link to comment
Share on other sites

24 minutes ago, பெருமாள் said:

வாடகை வீட்டில் இருந்தாலும் வரி கட்டித்தான் ஆகணும் .

கனடாவில் இல்லையா ? இங்கு 90 களில்  தண்ணீர் பில் லாண்ட் லோர்ட் தான் கட்டுவது உண்டு .

அப்படி இப்படி என்று தண்ணி பில்லுக்கு தற்போது மீற்றர்  பூட்டி விட்டார்கள் .

எனக்கு தெரிந்த மட்டில், தண்ணி வரியும் வீட்டு வரியும் உரிமையாளர் தான் கட்டவேண்டும். நான் வசிப்பது ஒன்றாரியோ மாகாணம் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீறீலங்கா பாடசாலை பிரச்சனை கனடா & U.K.  வீட்டு வரியில் வந்து நிற்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

8-D19-F919-8-AC3-4-B09-847-B-A8436-A3-BF
 
கிளிநொச்சியில்........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.