Jump to content

தடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா?- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசி போட்டவர்களை கோவிட்-19 தாக்குமா?- வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்

 
Dr-1-696x464.jpeg
 99 Views

தடுப்பூசி போட்டவர்களையும் கோவிட்-19 தாக்கும்’ என்பதனையும் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தாக்கத்திலிருந்து காப்பதே இத்தடுப்பூசியின் நோக்கம் என்கிறார்  யாழ்.பல்கலைக்கழக  மருத்துவதுறை பொது வைத்திய நிபுணர் பேராசிரியர்.தி.குமணன்.

அவரால் வரையப்பட்ட கோவிட்-19 தொடர்பான கட்டுரையிலேயே இவ்விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தகூடியவர்கள், அதன் பாதுகாப்பு முறைகள் மற்றும் அதன் தன்மை உள்ளிட்ட பல விடயங்களை அவர் இவ்வாறு விளக்குகின்றார்.

கோவிட் தடுப்பூசி (Covid Vaccine)  யார் எல்லாம் ஏற்றிக்கொள்ளலாம்?

கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் உபயோகம் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என மருத்துவ உலகம் கருதுகின்றது. ஆனால் யாரெல்லாம் இந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்பதில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகமும் பீதியும் நிலவுகின்றது.

அண்மையில் டெல்லியின் பொது வைத்திய நிபுணர்களின் அமையம் துறைசார்ந்த வல்லுனர்களுடன் நடத்திய நிகழ்நிலை கருத்தரங்கில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசி பற்றிய கருத்துக்களை ஒவ்வொன்றாக நோக்குவோம்.

1) அங்கீகரிக்கப்பட்ட எல்லா வகையான தடுப்பூசிகளுமே  (Pfizer, Moderna, Covishield and Covaxin )    நூற்றுக்கு நூறு வீதம் கோவிட்டால் உண்டாகும் உயிரிழப்பை தடுக்கும். மிக மோசமான கோவிட் தாக்கத்தை மிக வினைத்திறனுடனும் வீரியம் குறைந்த நோயை குறைந்த அளவிலும் (60-95%)  கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த தடுப்பூசிகளுக்கு உண்டு. ஆகவே இதன் நோய் கட்டுப்படுத்தும் திறனை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை.

2) எல்லா தடுப்பூசிகளுமே மிக தீவிரமான நோயை வினைத்திறனுடன் கட்டுப்படுத்துவதனால் பாரியளவில் ஒரு சமூகத்திற்கு தடுப்பூசியை வழங்குவதன் மூலம் மனித குலத்தை இந்த தடுப்பூசி அழிவிலிருந்து காக்கும்! இதனால் ஒவ்வொருவரும் இந்த தடுப்பூசியை பெறுவதற்கு முன்னிற்க வேண்டும் அல்லது ஊக்குவிக்கப்படவேண்டும்.

3) அமெரிக்காவில் கிட்டத்தட்ட 10,000 கார்ப்பமான பெண்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்து. அதன் பின் 3 மாதங்களுக்கு கண்காணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கர்ப்பமான பெண்களுக்கும் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

4) உணவு ஒவ்வாமை, மருந்து ஒவ்வாமை, செயற்கை றப்பர் (latex) ஒவ்வாமை, முன்னைய தடுப்பூசிகள் ஒவ்வாமை போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களும் இத்தடுப்பூசியை பாதுகாப்பாக ஏற்றிக்கொள்ளலாம்.

5) முன்னெப்போதாவது மிக பாரதூரமான ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு (ஊசிகள் ஏற்றபட்டு குணப்படுத்தப்பட்ட)  Anaphylaxis என்ற ஒவ்வாமை தன்மையுடையவர்களுக்கு இத்தடுப்பூசி உகந்ததல்ல, இவர்கள் மருத்துவ கண்காணிப்பில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

6) கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கும் 4-6 வாரங்களின் பின்பு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

7) ஏதாவது பாரதூரமான நோய்த்தொற்று / வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அந்நோயிலிருந்து தேறி 4-10 வாரங்களின் பின்பு இத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.

😎 நீரிழிவு நோயாளர்கள் உணவை உட்கொண்டபின் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

9) Prednisolone (Steroids) மாத்திரைகளை உள்ளெடுப்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதன் அளவை 7.5mg/day அளவுக்கு குறைத்த பின் 6 கிழமைகளில் தடுப்பூசியை பெறலாம் அல்லாவிடில் தடுப்பூசியின் பூரண நோயெதிர்ப்பு தன்மையை பெற முடியாது.

10) ஆஸ்துமா (Asthma) நோயாளர்கள் அவர்கள் பாவிக்கும் inhயடநசள inhalers (pumps)ஐ நிறுத்த தேவையில்லை.

11) தும்மல், ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை (Eczema) நோயுள்ளவர்கள் தடுப்பூசியை பாதுகாப்பாக பெற்றுக் கொள்ளலாம்.

12) நோயெதிர்ப்பு தன்மையை குறைக்கும் வாதம் மற்றும் பிற நோய்கள் சம்மந்தமான மாத்திரைகளில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைப்படி அம்மாத்திரைகளை 2 கிழமைக்கு முன் நிறுத்த வேண்டும். தடுப்பூசி ஏற்றியபின் இரண்டு வாரங்களில் மாத்திரைகளை மீள ஆரம்பிக்கலாம்.

13) குருதிப் புற்றுநோய் மற்றும் என்பு மச்சை மாற்று சிகிச்சை செய்தவர்கள் ஆக குறைந்தது 3 மாதங்களுக்கு பொறுத்திருக்க வேண்டும்.

14) சத்திரசிகிச்சைக்காக காத்திருப்பவர்கள் அதற்கு ஆகக் குறைந்தது 02 கிழமைக்கு முன்னதாக தடுப்பூசியைப் பெற்று தங்களது நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கலாம்.

15) கோவிட்டினால் ஏற்படும் உயிரிழப்பு வீதம் முதியோர்களில் மிக அதிகமாதலால் வயது முதிர்ந்தவர்கள் (எவ்வயதாயினும்) தடுப்பூசியை பெறுவதை ஊக்குவிக்க வேண்டும் ஃ உறுதி செய்ய வேண்டும்

16) அதீத ஞாபகமறதி, பாரிசவாதம் மற்றும் வயது முதிர்வினால் ஏற்படும் மூளை சம்மந்தமான நோய்களினால் அவதிப்படுபவர்களுக்கு பாதுகாப்பாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாம்.

17) நீண்ட நாள்பட்ட சிறுநீரக நோய்;(CKO),  இதய பலவீனம் (heart failure), ஈரல் செயலிழப்பு (chronic liver discus) போன்ற முக்கிய அங்கங்களின் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளலாம். ஆனால் தடுப்பூசியின் வினைத்திறன் குறைவாகவே இருக்கும்.

18) அஸ்பிரின் (Aspirin) குளோபிடோகிரில் (Clopidogrel) போன்ற குருதியுறைதலைத் தடுக்கும் மாத்திரைகளை உள்ளெடுப்போர் அவற்றை நிறுத்தத் தேவையில்லை.

19) குருதியுறையாமல் கொடுக்கும் மாத்திரைகளை உள்ளெடுப்போரும் அவற்றை நிறுத்துவது அவசியமில்லை.

20) உயர் குருதியமுக்கம், உயர் கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோய்கள் உள்ளவர்களுக்கும் கோவிட் தடுப்பூசி மிக பாதுகாப்பானது.

நிறைவாக முக்கியமான விடயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதனால் அந்நோய் தடுப்பூசி பெற்றவர்களுக்கு கோவிட்தாக்கம் ஏற்படுவதில்லை என்ற ஒரு தவறான அபிப்பிராயம் மக்கள் மத்தியில் உள்ளது.

‘தடுப்பூசி போட்டவர்களையும் கோவிட்-19 தாக்கும்’ என்பதனையும் இறப்பு மற்றும் தீவிர நோய்த்தாக்கத்திலிருந்து காப்பதே இத்தடுப்பூசியின் நோக்கம் என்பதனையும் கவனத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் முக கவசம், சமூக இடைவெளி மற்றும் கைகளின் சுத்தம் என்பவற்றை பேணி மனித குல அழிவை தடுப்போம்.

 

 

https://www.ilakku.org/?p=45919

 

  • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ROHYPNOL” என்ற மாத்திரை, காமத்தை தூண்டும்...  பேரினவாதத்தின்  புதிய ஆயுதம்…!   வடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது. . Rohypnol என்ற எளிதில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில்போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார். . இந்த மயக்கம் 11லிருந்து 12 மணி நேரம் வரை நீடிக்கும்…! பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது. . மேலும் இம்மருந்தை தொடர்ந்து அளித்து வந்தால் அடிமை ஆகி விடுவார்களாம். அதை விடகொடுமை இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது. மேலும் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். இதைப் போன்ற நிறைய மருந்துகள் உள்ளன. ஆனால் மிக மிக எளிதாக கிடைக்க கூடிய மாத்திரை தான் இந்த ரோஹைப்னால்..! . மயக்கம் தெளிந்த பின்னர் நடந்த எதுவுமே ஞாபகம் இருக்காது. எனவே பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முடிந்தவரை தனியே செல்லாதீர்கள். . மேலும் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். முடிந்த வரை வெளியிடங்களில் எதுவும் குடிக்காதீர்கள்…! ஃசீல் செய்து அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கூட ஊசிகள் மூலம் இவை ஏற்றப்படலாம்….! . குறிப்பாக இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நிலையில் பல தென்னிலங்கை முகவர்களால் இம் மாத்திரை பல இடங்களில் வினியோகிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பின் அதிகமான இடங்களில் இம் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது. . வடக்கில் உள்ள சிலர் தென்னிலங்கை போதைக் கும்பலுடன் தொடர்புடைய பலர் மூலம் இவற்றை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது இந்த பதிவை உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடமும் . பகிர்ந்து கொள்ளுங்கள் !! . விழிப்புணர்வு செய்யுங்கள் !!! தமிழரசி தமிழரசி
    • வாதவூரன், பாஞ், புலவர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்ல தயாராகும் ரணில்! ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்திற்குள் தனது கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் ஆசனத்தை ஏற்றுக்கொள்வார் என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலி பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியின் ஒருமித்த முடிவின் பேரில் ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1209840
    • எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் குறித்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு! எஸ் 400 ஏவுகணை தடுப்பு அலகுகள் தொடர்பான ஒப்பந்தத்தை செயற்படுத்துவதில் இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியாகவுள்ளதாக இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் நிகோலெய் குதாசேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், எஸ் 400 மற்றும் பிற ஒப்பந்தங்களை பொறுத்தவரை ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடு மற்றும் பிற கடப்பாடுகளை பூர்த்தி செய்ய இந்தியாவும், ரஷ்யாவும் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவதாகவும்  அவர் தெரிவித்தார். இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 அலகுகளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த அமெரிக்கா இராணுவ அமைச்சர் ஆஸ்டின் இந்த தடை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1209841
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.