Jump to content

நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நவீன கைத்தொழில் ஒன்றின் பின்னடைவு

நவீன கைத்தொழில் ஒன்றின்  பின்னடைவு

   — வேதநாயகம் தபேந்திரன் — 

தென்னம் மட்டையை (பொச்சுமட்டையை) தூசாக்கி உரம் மண் கலந்து உருவாகும் பசளைப் பொதி வெளிநாடுகளுக்கு அனுப்பும் கைத்தொழில் ஆசிய நாடுகளில் அண்மையில் அறிமுகமாகிய ஒரு தொழிலாகும். 

இந்தப் பசளைப் பொதிப் பயிர்ச்செய்கையில் கிடைக்கும் பசளை, பூந்தோட்டம், பூச்சாடிகளுக்கு குளிர்தேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

எம்மவர்கள் அதிகமாக வாழும் புலம்பெயர் தேசங்களுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. 

வடக்கில் வேகமாக வளர்ந்து வந்த இந்த நவீன கைத்தொழில் வறண்டுபோகும் நிலையை அடைந்துவிட்டது. 

பொச்சுமட்டை என அழைக்கப்படும் தேங்காய் மட்டைகளை தும்பு ஆக்கி, தூசு ஆக்கி ஏற்றுமதிக் கம்பனிகளுக்கு விற்று இலாபமீட்டிய தொழில் இன்று இறங்குமுகத்தை அடைந்துள்ளது. 

எம்மவரின் தொலை நோக்கு இல்லாத பழக்கமே இதற்குக் காரணம். அதாவது ஒருவர் ஒரு தொழிலில் உழைத்து இலாபம் கண்டால் அதனைப் பார்த்துப்பலர் அந்தத் தொழிலைத் தொடங்குவார்கள். 

ஒரு தொழிலில் நிறையப் பேர் ஈடுபடும்போது உற்பத்திக்கான மூலப்பொருளைப் பெறுதல், தொழிலாளர்களைப் பெறுதல் உட்பட யாவுமே சவால் மிக்கதாக மாறிவிடும். 

அத்துடன் உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த முடியாமல் அல்லது அடிமாட்டு விலைக்கு விற்று முயற்சியாளர்கள் பலர் நட்டப்படும் நிலை உருவாகும்.  

இந்தப் பின்னடைவைத் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு போதுமான வகையில் வழங்கப்படுவதில்லை. 

வடக்கின் அறிவு மையமாகிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொழில் முயற்சியாளர்களுடன் இணைந்து அல்லது வழிப்படுத்தும் முகமாகச் செயற்படவில்லையென்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே கூறப்பட்டுவருகிறது. 

தென்னை மட்டையை தூசாக்கித் தும்பாக்கி ஏற்றுமதி செய்யும் இந்தத் துறையில் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே வைத்திருக்கின்றனர். 

வடபகுதியில் இயங்கும் இந்தத் தொழிற்சாலைகளின் உற்பத்திகளைக் குருணாகல், புத்தளம் மாவட்டங்களுக்கே எடுத்துச் சென்று விற்றுக் காசாக்கி வருகின்றனர். 

உற்பத்திகளில் குறைபாடுகள் உள்ளதாகச் சுட்டிக் காட்டி கிலோ ஒன்றுக்கான விலையில் குறைவை ஏற்படுத்தி ஏற்றுமதியாளர்கள் தம்மைச் சுரண்டுவதாகத் தொழில் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

வட பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கு தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஏற்றுமதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கு யாருமே இதுவரை நாட்டம் காட்டவில்லை.  

கல்யாண மண்டபங்கள் ஏட்டிக்குப் போட்டியாக நூற்றுக் கணக்கில் அமைக்கப்பட்டுள்ளன, அமைக்கப்பட்டுவருகின்றன. 

இதற்குக் கோடி கோடியாகச் செலவழிக்கும் எம்மவர்கள் தென்னை மட்டைகளைப் பயன்படுத்தி பெறப்படும் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெறுவது குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.  

தேங்காய் உரித்துத் தென்னை மட்டைகள் உருவாகும் வேகத்தைத் திடீரெனக் கூட்ட முடியாது.  

இயற்கையில் கிடைக்கும் விளைபொருளை அது கிடைக்கும் அளவில்தான் பெறமுடியும். 

ஆனால் இதன் உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாகிய வேகம் அதிகமாக உள்ளன. அத்துடன் ஒரு நாளுக்கு 10 முதல் 15 ஆயிரம் தென்னை மட்டைகளை அரைக்கும்  இராட்சத இயந்திரங்களைக் கொள்வனவு செய்து வைத்துள்ளனர். 

இந்த இயந்திரங்களுக்குத் தீனி போடும் அளவுக்குத் தென்னை மட்டைகளை வாங்க முடியாமல் கஸ்டப்படுகின்றனர். 

C40B7F50-D1CC-4376-B192-4342A130686F.jpe

அதேவேளை தென்பகுதி தொழிலதிபர்கள் வடக்கில் முகவர்களை அமர்த்தி அவர்கள் மூலமான கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது ஒரு ரூபா விற்ற தென்னை மட்டைகள் 4 ரூபா வரையில் விலையேறி விட்டுள்ளன. 

இதனால் இத்துறையில் ஈடுபட்ட சிறிய நடுத்தரத் தொழில் முயற்சியாளர்கள் நட்டப்பட்டுத் தொழிலில் இருந்து விலகும் நிலையை அடைந்துள்ளனர். 

வடக்கில் தென்னை வளம் சிறப்பாக உள்ளது. தேங்காய் உரித்த பின்பாகத் தென்னம் மட்டைகளைப் பெற்று அவற்றை இயந்திரத்தில் அரைத்துப் பொதி செய்து விற்கும் தொழிலில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஈடுபட்டனர். 

தற்போது இத்தொழிலில் ஏராளம் பேர் இணைந்ததால் கழுத்தறுப்பு நிலையில் தொழில் வந்துவிட்டது. சராசரியாக ஒரு தென்னம் மட்டை 2 ரூபாவுக்கு விற்பனையாகினால் இத் தொழில் இலாபகரமாக நடக்கும்.  

ஆனால் இத் தொழிலில் நிறையப் பேர் ஈடுபட்டதனால் ஒரு மட்டை 4 ரூபா விலைக்கு உயர்ந்து விட்டது. 

அதே வேளை ஒரு நாளுக்குப் பல ஆயிரம் மட்டைகளை அரைக்கும்  இராட்சத இயந்திரங்களைத் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர். 

இந்த இயந்திரங்களின் ஆனைப்பசிக்குச் சோறு போடக் கூடியளவு தென்னம் மட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியவில்லை. 

CD490645-4E74-438F-B82D-D0259A113D0D.jpe

அதேவேளை புத்தளம், குருணாகல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் இங்கு இந்த உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்தை வைத்துக்கொண்டு தொழிலில் ஈடுபடுவதனால் இலாபம் ஈட்ட முடிகிறது. 

ஆனால் வடக்கில் உள்ளோர்கள் தமது உற்பத்திகளைத் தென்பகுதி வியாபாரிகளுக்குக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதனால் அவர்களால் சிறந்த இலாபம் ஈட்ட முடியவில்லை. 

அத்துடன் வடக்கில் தொழிலாளர்களின் கூலி மட்டங்களும் உயர்வாக உள்ளன. இதனால் உற்பத்திச் செலவு அதிகரிக்க இலாப வீதம் குறைகின்றது. 

பாரம்பரிய தொழில்களைத் தாண்டி நவீன தொழில்களைத் தேடுவோரை வெற்றிகரமான முயற்சியாளராக மாற்றவேண்டியது எம் கைகளில்தான் உள்ளது. 

போரைக் காரணம் காட்டிய காலங்கள் போய்விட்டன. தாயகத்தின் வளங்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய நவீன தொழில்களை ஊக்குவிக்க வேண்டியது எமது கைகளில்தான் உள்ளது. 
 
https://arangamnews.com/?p=4517

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மட்டும் இல்லை இன்னும் பல தொழில்கள் இப்படித்தான்.கன்டிப்பாக மாத்தி யோசிக்க வேணும்.

Link to comment
Share on other sites

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 23:33, நிழலி said:

உங்களுடைய கருத்துடன் மேலதிகமாக சில கருத்துகள், உணவு விடுதிகளைப்பொறுத்தவரை உற்பத்தி செலவு (மூலப்பொருள்களின் செலவு விகிதம் 35% + வேலை செய்பவர்களின் சம்பள விகிதம் 25%) மொத்த வருமானத்தில் ( இலாபம் அல்ல) 60 சதவிகிதமாக இருந்தால் மிகவும், மூலப்பொருள்களின் செலவு விகிதம் 37% மேல் செல்வது நல்லதல்ல அதே போல் வேலை செய்பவர்களின் சம்பள விகிதம் 28% மேல் செல்வது நல்லதல்ல மூன்றாவதாக வாடகை 5% இவற்றை கருத்தில் கொள்வதுடன்
மேலதிகமாக விற்றல் என்ற உத்திகளை பயன்படுத்தலாம் உதாரணமாக பெரிய நிறுவனங்களின் உணவு விளம்பரத்தில் தமது உற்பத்தி செலவைவிட மலிவாக விற்பனை செய்ய விளம்பரம் செய்வார்கள், அதனை வாடிக்கையாளர்களை கவர உபயோகிப்பார்கள் அதனை வாங்க வருபவர்களிடம் அந்த பொருளுக்கு மேலதிகமாக விற்று விடுவார்கள், சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிப்பது போல, வர்த்தகத்தில் இதனை விற்பனை கூம்பகம் என்று கூறுவார்கள், உங்கள் நிறுவனங்கள் ஒரு போத்தில் போன்றது அதன் களுத்து எப்படி குறுகியுள்ளதோ அதேயளவுதான் வாடிக்கையாளர், விற்பனை உத்தி என்பது அதனுள் கூம்பக குழாயினூடாக ஒரு போத்தினுள் தண்ணீரை விடுவது போல.
ஜாக் மா சொல்வது போல சாத்தியமேயில்லை என்ற இடத்தில்தான் வாய்புகள் இருக்கும்
ராபர்ட் கியசாகே சொல்வது போல ஒரு தொழில் முனைவன் என்பவன் விமானத்திலிருந்து பாரசூட் இல்லாமல் குதித்து இடைப்பட்ட குறுகிய அவகாசத்திலே ஆகாயத்திலேயே தனக்கான பாரசூட்டை தயாரித்துக்கொள்பவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 13:33, நிழலி said:

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 
யூதனோ குஜராத்தி யோ தங்கள் வியாபாரங்களை மற்றைய சமூக மக்களுக்கும் விரிவு படுத்துகிறார்கள் அதனால் அவர்கள் நட்டமடையும் வாய்ப்பு குறைவு நாங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வெளிக்கிட்டால் முகம் குப்புற விழுவது தவிர்க்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முன்னமும் சொல்லி இருக்கிறேன், எமது மக்களிடம் தொலைநோக்கும், அறிவார்ந்த சிந்தனைகளும் இல்லை.

ஊர்க்கல்வி அப்படி. ஆங்கில அறிவை வளர்க்கும் நோக்கமும் கிடையாது.

17ம் நூறாண்டில், அகதியாக பிரித்தானியாவுக்கு, பிரான்சில் இருந்து ஓடிவந்தார்கள் 120,000 யூதர்கள்.

ஆங்கிலத்தில் புலமை பெற்று, முன்னேறினார்கள், 19ம் நூறாண்டில் விக்டோரியா மகாராணி காலத்தில், பிரிட்டிஷ் பிரதமரானார் பெஞ்சமின் டிஸரேலி. முதல் யூத பிரிட்டிஷ் பிரதமர்.

அவரது, நினைவு இல்லத்தில், unlikely prime minister in Victorian time  என்று போட்டு இருக்கிறார்கள். கேட்டபோது, சொன்னார்கள், நீ பார்க்கும் இங்கிலாந்து வேறு, அன்றய இங்கிலாந்து வேறு. இன, நிற துவேசத்தினை கடந்து அன்று அவர் அடைந்த உயரம் பிரமிக்கத்தக்கது என்றார்கள்.

அவர்கள் வங்கியியலில் சரித்திரம் படைத்தனர். ரோத்சைல்டு வங்கியை அமைத்த (அவர்கள் வாரிசு, அண்மையில் இலங்கை சென்று வந்தார்) குடும்பம், தாங்கள் கட்டிய பெரிய மாளிகை ஒன்றுக்கு, கட்டிட பொருட்கள் கொண்டு சொல்ல தனி ரயில் பாதையே அமைத்தார்கள்.

History of the house – Waddesdon Manor

அந்த மாளிகை தங்களுக்கு ராசி இல்லை என்று, தானமாக, நேஷனல் டிரஸ்ட் அமைப்புக்கு கொடுத்து விட்டனர்.

aerial view of Waddesdon Manor near Aylesbury, a Rothschilds Mansion Stock  Photo - Alamy

எமது மக்கள், தகமை கற்றலுக்கு (skill learning ) முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். 

****

இவரது சிந்தனைக்கு காரணம் கனேடிய கல்வியாக இருக்கலாம்

https://yarl.com/forum3/topic/256764-sikaram-thodum-manitharkal-with-nanthan-nandhakumaran/?tab=comments#comment-1530326

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து என்னவென்றால் 90% சிறிய வியாபாரங்கள் முதல் 2 வருடத்தில் தோல்வி அடைகிறது அடுத்த 5 வருடத்தில் 5% வியாபாரங்கள்தோல்வி அடைகிறது, என்று கூறப்படுகிறது அது ஒரு உலகலாவிய உண்மை, எம்ம்வர்களும் விதிவிலக்கல்ல அதற்குக்காரணம் வியாபாரம் தொடர்பான புரிதல் இல்லை என்பதாகும், ஆனாலும் முயற்சி செய்வதால் ஏற்படும் பண இழப்பு, மன உழைச்சல்,நேர விரயம் என்பவற்றிற்கு மேலாக பெறும் அனுபவ அறிவு எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும், அதனால் முயற்சி செய்பவர்களை குறை சொல்லாதீர்கள், மாறாக ஊக்கப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

முயற்சி புதுமையாக இருக்கவேண்டும். நானும் கடையை திறப்பேன் என்றல்ல.

நான் இருக்கும் பகுதியில் உண்மையில் நடந்தது. ஒருவர் ரெஸ்டூரண்ட் திறந்தார். நல்ல யாவாரம். கல்லாவில் மனைவி. அவர் சாப்பாடு தயாரிப்பில். 

பலர் வந்தார்கள். அதில் ஒருவருக்கு, சாப்பாடு பிடித்து விட்டது. மெதுவாக விசாரித்தார், யாரு உங்களது சமையல் காரர், வரச்சொல்லுங்கள் நன்றி சொல்லி பாராட்ட வேண்டும் என்றார்.

பெண்மணி தனது கணவர் என்று சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை ஆகவே, சமையல் காரரை கூப்பிட்டு விட, அவரும் தனது பெயரை சொல்லி, அறிமுகமானார்.

மறுமுறை வந்தார், சாப்பிட்டார், இம்முறை அவரது போன் இலக்கத்தினை வாங்கிப்போனார். கேட்டரிங் ஆர்டர் ஒன்று தர வேண்டும், அங்கே வந்து சமைத்து தர வேண்டும் என்று.

மறுநாளே அழைப்பு வந்தது. தான் ஒரு ரெஸ்டூரண்ட் நகரின் இன்னுமொரு பகுதியில் திறப்பதாகவும், இவரை வேலைக்கு வருமாறும், அதிக சம்பளம் தருவதாகவும் சொன்னார்.

தான் தான் உரிமையாளர் என்று சொன்ன அவர், இவர் அவருக்கு அறிவுரை சொன்னார். உங்களை நம்பி மட்டுமே தொடங்குங்கள், சமையல் காரர்களை நம்பி தொடங்கினால், அவர்கள் இப்படியே விலகினால், வியாபாரம் படுத்து விடும். அவர்கள் போனாலும், நீங்கள் சமைக்க கூடியதாக இருக்கவேண்டும்.

அவர், ரெஸ்டூரண்ட் தொடங்கும் ஐடியாவை விட்டு விட்டார். எந்த தொழிலாயினும், தெரிந்தே தொடங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஈ மித் மீளாய்வு ஏன் அதிகளவான சிறிய வியாபாரங்கள் நட்டமடைகின்றன எனும் புத்தகம் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம், எனக்கு எனது முன்னாள் முதலாளி அந்த புத்தகத்தைப்பரிசாகத்தந்திருந்தார் அப்புத்தகத்தில் தொழில் முனைவராக வருபவர்கள் நீங்கள் சொல்வது போல பெரும்பாலும் தொழில்சார் திறனாளிகள் அப்படியானவர்கள்தான் அதிகமாக தோல்விகளைத்தளுவார்கள்.
அனைத்து சம கால உணவங்கள் உணவு சமைக்கும் முறை விரிவாக பயிற்சியில் சேர்த்து கொள்வார்கள் அதனால் புதிய தொழிலாளர்களை பயிற்றுவிப்பது சிரமமல்ல.(உணவு பொருளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருதளின் அளவு விலை என்பது விற்பனை விலையுடன் ஒப்பீடு செய்யும் பி ஒ எஸ் ).

சில உணவங்களில் திங்கள் கிழமை வருமானம் அந்த நாளுக்குரிய நடைமுறை செலவைவிட குறைவாகவும், சில உணவகங்களில் திங்கள், செவ்வாய் கிழமை வரையும் சில உணவகங்களில் அது புதன் வரையும் நீழும், ஆனால் ஒட்டு மொத்த வார வருமானம் அதை ஈடுகட்டி விடும்,
அந்த குறிப்பிட்ட நாழில் செலவைக்குறைக்க எடுக்கப்படும்  (வேலை அளவைக்குறைத்தல்) நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும், அதனால்தான் 2 வாங்கினால் 1 இலவசம் என வாடிக்கையாளர்களைக்கவர்ந்து, மேலதிகமாக விற்றல் போன்ற உத்திகளை கையாள்கிறார்கள்.

பலர் சொல்லக்கேள்விப்பட்டுளேன் போரும் வியாபாரமும் அடிப்படையில் ஒன்றே, இரண்டின் முடிவும் ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடும்.

தொழில்துறை திட்டமிடலில் ஆரம்பிக்கப்படாத தொழிலுக்கே 2 வருட நாளாந்த வரவு செலவு எதிர்வு கூறல் அறிக்கை ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கவேண்டும் (முதலாந்தர ஆய்வு + இரண்டாந்தர ஆய்வு) 
திட்டமிடப்படாத நிகழ்வு பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் மாறும் சமூக முறைமைக்கு அமைவாக்கம் செய்தல் என பல விளைவுகளையும் திட்டமிடுகிறார்கள்.

வியாபாரத்தில் மீளாய்வு திட்டமிடல் என்பது 2 வருடங்கள் கால அளவைக்கொண்டது, அப்படி செய்யாவிட்டால் இலாபகரமான வியாபாரம் கூட தோற்று விடும் என்பார்கள்.

நாங்கள் வியாபாரம் செய்வது ஒரு நிறைபோட்டிச்சந்தை என்பதால், நாங்களும் அதற்கு ஏற்ப எங்களை உத்திகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும் 

நான் விதண்டாவாதம் செய்வது போல நானே உணர்கிறேன், உங்கள் எல்லோரினது கருத்தும் சரியானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில்.... மிக அருமையான கருத்துக்களை பதிந்த.... 
நிழலி, வாசி, பெருமாள், நாதமுனி ஆகியோருக்கு பாராட்டுக்கள்.
வியாபாரம் ஆரம்பிக்க நினைப்பவர்கள்... கட்டாயம்  வாசிக்க வேண்டிய தலைப்பு இது.

 தலைப்பை ஆரம்பித்த... கிருபன் ஜீக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

ஈ மித் மீளாய்வு ஏன் அதிகளவான சிறிய வியாபாரங்கள் நட்டமடைகின்றன எனும் புத்தகம் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து வாசிக்கலாம், எனக்கு எனது முன்னாள் முதலாளி அந்த புத்தகத்தைப்பரிசாகத்தந்திருந்தார் அப்புத்தகத்தில் தொழில் முனைவராக வருபவர்கள் நீங்கள் சொல்வது போல பெரும்பாலும் தொழில்சார் திறனாளிகள் அப்படியானவர்கள்தான் அதிகமாக தோல்விகளைத்தளுவார்கள்.
அனைத்து சம கால உணவங்கள் உணவு சமைக்கும் முறை விரிவாக பயிற்சியில் சேர்த்து கொள்வார்கள் அதனால் புதிய தொழிலாளர்களை பயிற்றுவிப்பது சிரமமல்ல.(உணவு பொருளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருதளின் அளவு விலை என்பது விற்பனை விலையுடன் ஒப்பீடு செய்யும் பி ஒ எஸ் ).

சில உணவங்களில் திங்கள் கிழமை வருமானம் அந்த நாளுக்குரிய நடைமுறை செலவைவிட குறைவாகவும், சில உணவகங்களில் திங்கள், செவ்வாய் கிழமை வரையும் சில உணவகங்களில் அது புதன் வரையும் நீழும், ஆனால் ஒட்டு மொத்த வார வருமானம் அதை ஈடுகட்டி விடும்,
அந்த குறிப்பிட்ட நாழில் செலவைக்குறைக்க எடுக்கப்படும்  (வேலை அளவைக்குறைத்தல்) நடவடிக்கைகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும், அதனால்தான் 2 வாங்கினால் 1 இலவசம் என வாடிக்கையாளர்களைக்கவர்ந்து, மேலதிகமாக விற்றல் போன்ற உத்திகளை கையாள்கிறார்கள்.

பலர் சொல்லக்கேள்விப்பட்டுளேன் போரும் வியாபாரமும் அடிப்படையில் ஒன்றே, இரண்டின் முடிவும் ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிடும்.

தொழில்துறை திட்டமிடலில் ஆரம்பிக்கப்படாத தொழிலுக்கே 2 வருட நாளாந்த வரவு செலவு எதிர்வு கூறல் அறிக்கை ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கவேண்டும் (முதலாந்தர ஆய்வு + இரண்டாந்தர ஆய்வு) 
திட்டமிடப்படாத நிகழ்வு பாதுகாப்பு பொறிமுறைகள் மற்றும் மாறும் சமூக முறைமைக்கு அமைவாக்கம் செய்தல் என பல விளைவுகளையும் திட்டமிடுகிறார்கள்.

வியாபாரத்தில் மீளாய்வு திட்டமிடல் என்பது 2 வருடங்கள் கால அளவைக்கொண்டது, அப்படி செய்யாவிட்டால் இலாபகரமான வியாபாரம் கூட தோற்று விடும் என்பார்கள்.

நாங்கள் வியாபாரம் செய்வது ஒரு நிறைபோட்டிச்சந்தை என்பதால், நாங்களும் அதற்கு ஏற்ப எங்களை உத்திகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும் 

நான் விதண்டாவாதம் செய்வது போல நானே உணர்கிறேன், உங்கள் எல்லோரினது கருத்தும் சரியானது.

அதன் ஆங்கில பெயரை தாருங்கள், தேடிப்பார்க்கிறோம். அல்லது ebook ஆக இருந்தால் பகிருங்கள். google drive போடலாம்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் ஒண்டாரியோ மாநில பிரதமர், டக் போர்ட் வருமானம் 2019ம் ஆண்டில் 3மில்லியன் இருந்தது, 2021ல் 50மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது.

அவர் செய்த யாவாரம்: கொரோனா தொடர்பில், ஸ்டிக்கர் பிரிண்ட் செய்து அதனை ஒன்லைன் மூலம் வியாபாரம் செய்தார். 

பிரதமராக இருப்பதால், கனடாவின் சகல வியாபார நிறுவனங்களும் இதை வாங்கி ஓட்டி விடவேண்டும் என்பதையும், என்ன வகை ஸ்டிக்கர் தேவை என்பதை முதலே அறிந்து இருந்தாலும், காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளவும் அவரது வியாபார மூளை தான் பின்னே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

பலர் இது போல இணையத்தினூடாக பல வகையிலும் வருமானம் ஈட்டுகிறார்கள் 
1. சிபார்சு செய்தல் (நீங்கள் தெரிவு செய்யும் சந்தயைப்பொறுத்து வருமானம் பெறலாம் உ+ம் சில 50% வரை)
2.சந்தைப்படுத்தல் ( சீன வினியோகிப்பாளரிடமிருந்து அவரது பொருளை விள்ம்பரம் மூலம் வாடிக்கையாளரைப்பெற்று சீன வினியோகிப்பாளர் மூலம் வாடிக்கையாளருக்கு விற்றல் , இது முதலாவதை விடவருமானம் விகிதம் குறைவு)
3.சீன் உற்பத்தியாளர் மூலம் உடைகளில் வடிவங்களை அச்சிட்டு விற்றல் மற்றும் பொருதளைத்தாயாரித்து சொந்தமாக கடை இணையத்தளம் ஊடாகவும் அமேசன்,ஈபே மூலமாகவும் விற்றல்
4.பணச்சந்தை நாணய சந்தை ஊடாக வருமானம் ஈட்டல் 
மேலே குறிப்பிட்டவை நான் அறிந்தவை இவை தவிர வேறு மார்க்கங்களும் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 16:39, Nathamuni said:

முயற்சி புதுமையாக இருக்கவேண்டும். நானும் கடையை திறப்பேன் என்றல்ல.

நான் இருக்கும் பகுதியில் உண்மையில் நடந்தது. ஒருவர் ரெஸ்டூரண்ட் திறந்தார். நல்ல யாவாரம். கல்லாவில் மனைவி. அவர் சாப்பாடு தயாரிப்பில். 

பலர் வந்தார்கள். அதில் ஒருவருக்கு, சாப்பாடு பிடித்து விட்டது. மெதுவாக விசாரித்தார், யாரு உங்களது சமையல் காரர், வரச்சொல்லுங்கள் நன்றி சொல்லி பாராட்ட வேண்டும் என்றார்.

பெண்மணி தனது கணவர் என்று சொல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை ஆகவே, சமையல் காரரை கூப்பிட்டு விட, அவரும் தனது பெயரை சொல்லி, அறிமுகமானார்.

மறுமுறை வந்தார், சாப்பிட்டார், இம்முறை அவரது போன் இலக்கத்தினை வாங்கிப்போனார். கேட்டரிங் ஆர்டர் ஒன்று தர வேண்டும், அங்கே வந்து சமைத்து தர வேண்டும் என்று.

மறுநாளே அழைப்பு வந்தது. தான் ஒரு ரெஸ்டூரண்ட் நகரின் இன்னுமொரு பகுதியில் திறப்பதாகவும், இவரை வேலைக்கு வருமாறும், அதிக சம்பளம் தருவதாகவும் சொன்னார்.

தான் தான் உரிமையாளர் என்று சொன்ன அவர், இவர் அவருக்கு அறிவுரை சொன்னார். உங்களை நம்பி மட்டுமே தொடங்குங்கள், சமையல் காரர்களை நம்பி தொடங்கினால், அவர்கள் இப்படியே விலகினால், வியாபாரம் படுத்து விடும். அவர்கள் போனாலும், நீங்கள் சமைக்க கூடியதாக இருக்கவேண்டும்.

அவர், ரெஸ்டூரண்ட் தொடங்கும் ஐடியாவை விட்டு விட்டார். எந்த தொழிலாயினும், தெரிந்தே தொடங்க வேண்டும்.

உண்மையில் என்னிடம் இப்படி ஒரு நல்ல வியாபார ஐடியா இருக்கிறது 
இப்போது எல்லா சூழலாலும் எனக்கு காலம் கனிந்தும் வந்து உள்ளது 

இந்த ஒரே ஒரு திண்டாடடம்தான் 
ஒரு நல்ல சமையல் காரரை முழுதாக நம்பியே ஆகவேண்டும் 
அவரை வெறும் சமையல் காரர் இல்லாது 25% -30% வரை 
பங்காளியாக சேர்ப்பது பற்றிக்கூட சிந்திக்கிறேன் 

ஆனால் சமையலில் அடிக்கடி மாறுதல் செய்ய கூடிய 
மனநிலை உள்ளவராகவும் இருக்கவேணும் 
 வியாபாரத்தை காலமாற்றத்துக்கு ஏற்றால் போல் 
மாற்ற கூடியவராகவும் வேண்டும்.

இது ரெஸ்டூரண்ட் அல்ல 
ஒரு வித்தியாசமான உணவு விநியோக ஐடியா 
சில வருடமாக வேலைசெய்துகொண்டு வருகிறேன் 

இதை நிவர்த்தி செய்ய உங்களிடம் ஏதாவது ஒரு ஐடியா இருந்தால் தாருங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

இதெல்லாம், தனிமடல் போட்டு கதையுங்கோ. ஐடியா சொன்னாப்பிறகு, கிருபன் அய்யா கிளம்பிடுவார் யாவாரம் செய்ய...

ஆள், ஊர் உலகத்து இணையத்தளம் எல்லாம், விழுந்தெழுப்பி திரியுறார், ஐடியா ஏதும் கிடைக்குமா எண்டு. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதெல்லாம், தனிமடல் போட்டு கதையுங்கோ. ஐடியா சொன்னாப்பிறகு, கிருபன் அய்யா கிளம்பிடுவார் யாவாரம் செய்ய...

ஆள், ஊர் உலகத்து இணையத்தளம் எல்லாம், விழுந்தெழுப்பி திரியுறார், ஐடியா ஏதும் கிடைக்குமா எண்டு. 😜

சாரி பாஸ்.. முதலாளித்துவத்திற்கு எதிர் என்பதால் நான் சில்லறை பார்க்க வியாபாரம் எல்லாம் பண்ணுவதில்லை.😎

அப்படியே போய் ஷோசல் காசு எடுக்க கியூவில நின்றால் போதும். வேண்டியது கிடைக்கும்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சாரி பாஸ்.. முதலாளித்துவத்திற்கு எதிர் என்பதால் நான் சில்லறை பார்க்க வியாபாரம் எல்லாம் பண்ணுவதில்லை.😎

அப்படியே போய் ஷோசல் காசு எடுக்க கியூவில நின்றால் போதும். வேண்டியது கிடைக்கும்😜

சோசிலுக்கு கனகாலம் போகேல்லை போலை கிடக்குது.

இப்பெல்லாம் எஅசி இல்லை பாஸ்... சரியான கஷ்டம்.

மூண்டு பரம்பரை விசயந்தாய் விலாவாரியா கேக்கிறாங்களாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2021 at 23:33, நிழலி said:

முக்கியமாக ஒருவர் ஒரு தொழிலை சிறப்பாக செய்தால், அதற்கான கேள்வி ஒரு அளவிற்குட்பட்டதாக இருப்பினும் கூட, அவரைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பலர் இதே தொழிலை செய்ய முற்படும் கழுத்தறுக்கும் குணத்தை திருத்திக் கொள்ள இனியாவது கொஞ்சம் முயல வேண்டும்.

இதே குணம் இங்கு கனடாவிலும் காணலாம். ஒருவர் ஒரு தமிழ்/ இலங்கை உணவு விடுதியை ஒரு பகுதியில் முதலாவதாக திறக்கும் போது கொஞ்ச காலத்துக்கு அவர் நட்டம் இல்லாமல் நடத்துவார். பின்னர், அவரைப் பார்த்து நாலு ஐஞ்சு தமிழாட்கள், அவரின் கடைக்கு அருகிலேயே தாமும் உணவு விடுதியை திறந்து, தாமும் நட்டப்பட்டு முதலாவதாக திறந்தவரையும் நட்டப்படுத்தி கடைசியில் போட்ட முதலையும் திரும்ப பெற முடியாமல் திண்டாடுவர். இதற்குள் போட்டி என்று சொல்லி உணவுகளின் விலையை குறைத்து தரம் / சுவை குறைந்த உணவையும் விற்பர்.

இதுவே யூதர்கள் அல்லது குஜாராத்திகள் என்றால், தமக்குள் கதைத்து (இதற்காக பல சங்கங்கள். அமைப்புகள் உள்ளன அவர்களிடம்) ஒருவருக்கு ஒருவர் போட்டி இல்லாமல் தொழில் நடத்துவர். அத்துடன் ஒருவர் ஒரு புது பகுதியில் கடை திறந்தால், தம் சமூகத்துக்குள் அவரை பற்றி அறியத்தந்து இலவச விளம்பரம் செய்து அவரை முன்னேற்றுவர்.
 
புலம்பெயர்ந்து வாழும் அனேகமான முதலாவது generation சேர்ந்தவர்களின் மனநிலையானது safe side life அதாவது ஒரு நிரந்தர வருமானம், வீடு, பிள்ளைகளின் படிப்பு etc.. ஊரில் நிறையவே இழந்து வந்திருப்பதால் safe side life style அதிகம் விரும்புகிறார்கள். இதனால் அதிகளவு risk எடுத்து போவதை விரும்பாமல் இந்த மாதிரி கடைகள், உணவகங்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்களோ என நினைப்கதுண்டு. 

இதனால்தான், ஒரு franchise எடுத்து(உதாரனமாக Subway, Operto or Nando’s, Property Sales ) நகரத்தைவிட்டு சற்று ஒதுங்கி தொழிலை நடத்த தயங்குகிறார்கள். அத்துடன் ஆங்கில மொழியில் பேச்சுதிறன்,   மற்ற சமூகங்களுடன் இணைந்து செயற்பட இருக்கும் தயக்கம், போன்றவையும் இங்கே எங்களவர்கள் பலசரக்கு கடை அல்லது உணவகங்களை தவிர வேறு தெரிவுகளை நாடுவதில்லை என நினைக்கிறேன். 

இதுவே ஒரு Accountant or Dr என்றால் tax agents or medical centers .. வட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பதில்லை.

நீங்கள் கூறியது போல வட இந்தியர்கள் துணிந்து வெளியிடங்களுக்கும் போவார்கள், தங்களுக்கிடையில் சங்கங்களை அமைத்து நடந்துகொள்வார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

புலம்பெயர்ந்து வாழும் அனேகமான முதலாவது generation சேர்ந்தவர்களின் மனநிலையானது safe side life அதாவது ஒரு நிரந்தர வருமானம், வீடு, பிள்ளைகளின் படிப்பு etc.. ஊரில் நிறையவே இழந்து வந்திருப்பதால் safe side life style அதிகம் விரும்புகிறார்கள். இதனால் அதிகளவு risk எடுத்து போவதை விரும்பாமல் இந்த மாதிரி கடைகள், உணவகங்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்களோ என நினைப்கதுண்டு. 

இதில் ஏதும் தவறிருக்கிறதா? 

தெரியாத இடம், அந்நிய மக்கள், எவரை நம்புவது, எஅவரை விடுவது என்கிற தயக்கம், வருமானம் ஒன்றில்லாவிட்டால் மீளவும் நாடு திரும்ப நேரிடலாம் என்கிற அச்சம் காரணமாக அவர்கள் சாதாரண, ஆனால் நிரந்தர ஊதியம் பெறுமொரு வேலையில் அமர்வதை எதிர்பார்ப்பது தவறில்லையே? 

அடுத்தது, பெரும்பாலான த்மிழர்கள் ஏனைய தமிழர்கள் வாழும் பகுதிகளில் வாழ விரும்புவதன் காரணம் அப்பகுதி பாதுகாப்பானது, தமது பிள்ளைகளை வளர்க்க உசிதமானது என்கிற காரணங்க்களாத் தான் என்பது எனது எண்ணம். இதுகூட தவறில்லையே? 

மேலும், திறமையினைக் காரணம் காட்டி இங்கே வருபவர்கள்தமது திறமைக்கு உகந்த வேலைகளைத் தேடுவதுதானே இயல்பு? அவர்களுக்கு கடைகளையோ, வேறு பிற நிறுவனங்களையோ நடத்தவேண்டிய தேவை இருக்கிறதா? 

17 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதனால்தான், ஒரு franchise எடுத்து(உதாரனமாக Subway, Operto or Nando’s, Property Sales ) நகரத்தைவிட்டு சற்று ஒதுங்கி தொழிலை நடத்த தயங்குகிறார்கள். அத்துடன் ஆங்கில மொழியில் பேச்சுதிறன்,   மற்ற சமூகங்களுடன் இணைந்து செயற்பட இருக்கும் தயக்கம், போன்றவையும் இங்கே எங்களவர்கள் பலசரக்கு கடை அல்லது உணவகங்களை தவிர வேறு தெரிவுகளை நாடுவதில்லை என நினைக்கிறேன். 

நகரத்தைவிட்டு வேறிடங்களுக்குப் போகத் தயங்குவதற்கான காரணம் தமது வியாபாரம் நட்டத்தில் சென்றுவிடும் என்கிற காரணமாக இருக்கலாம். அத்துடன், எவருமே தமது வருமானம் பாதிக்கப்படாதவகையில் ஒரு வியாபாரத்தை, உத்தரவாதத்துடன் நடத்தவே விரும்புவர். 

அடுத்தது ஆங்கில மொழியறிவு. இது சரியான தர்க்கமா என்று தெரியவில்லை. ஏனென்றால், பல சமூகங்களுடன் ஒப்பிடும்போது இலங்கைத் தமிழர்கள் ஆங்கில அறிவு மிகவும் அதிகமானது. பல புலம்பெயர் தேசங்களில் இலங்கைத் தமிழர்கள் அரச சேவைகளிலும், தனியார் நிறுவனங்களில் அதிகாரிகள் நிலையிலும் பணிபுரிகிறார்கள். இந்நாடுகளில் இலங்கைத் தமிழர்க்கென்று ஒரு தனி மதிபே இருக்கிறது. கடிண உழைப்பாளிகள், விசுவாசமானவர்கள், பழகுவதற்கு இனிமையானவர்கள் என்று இப்படிப் பல குணாதிசயங்கள். 

மற்றைய சமூகங்களுடன் நாம் இணைந்து பணிபுரிவதில்லை என்கிற விமர்சனத்தை நோக்கினால், மற்றைய சமூகங்கள் எம்மை உள்வாங்க முன்வருகின்றனவா? எம்மில் எத்தனை பேரை வேற்றுச் சமூகவாசிகள் சேர்ந்து செயற்பட அணுகியிருக்கிறார்கள்? 2009 இனக்கொலையைத் தடுக்க அயல் நாடான இந்தியர்கள் கூட முன்வரவில்லை, வீதியில் நின்று கேலிகளுடன் வேடிக்கைதான் பார்த்தார்கள். எமது சமூகம் தொடர்பான மிகவும் தவறான பார்வையினை இந்தியர்கள், குறிப்பாக வட இந்தியர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எம்முடன் சேர்ந்து பயணிப்பதென்பது அபத்தமானது. 

புலம்பெயர் தேசத்தில் தமிழர்கள் பலசரக்குக் கடை, புடவை நிலையம், சாப்பாட்டுக்கடை ஆகியவற்றைத்தவிர வேறு எதனையும் நடத்துவதில்லை என்று சொல்லும் நாம் இலங்கையில் இருக்கும்போது இதைத்தாண்டி எந்தவகையான கைத்தொழில் முறைகளையோ, அல்லது வியாபார முனைப்புக்களையோ மேற்கொண்டோம் என்று சிந்திக்கின்றோமா? இல்லையே. அங்கும் இதைத்தானே செய்துவந்தோம். சிறு சிறு குடிசைக் கைத்தொழில்களைத்தவிர பரந்த வியாபார நோக்கில் தமிழினம் வடக்குக் கிழக்கில் செய்துவந்த கைத்தொழில் முயற்சிகளை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். 

37 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதுவே ஒரு Accountant or Dr என்றால் tax agents or medical centers .. வட்டத்தைவிட்டு வெளியே சிந்திப்பதில்லை.

நீங்கள் கூறியது போல வட இந்தியர்கள் துணிந்து வெளியிடங்களுக்கும் போவார்கள், தங்களுக்கிடையில் சங்கங்களை அமைத்து நடந்துகொள்வார்கள்..

ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் சரியான , தவறான செயற்பாடுகள் இருக்கின்றன. இவை, அச்சமூகத்தின் பண்பாட்டு, கலாசார விழுமியங்களால் வழிநடத்தப்படுபவை. அச்சமூகத்தில் நாம் இருப்பதால் இவற்றினை எம்மால் விமர்சிக்க முடிகிறது. ஆனால், ஏனைய சமூகங்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் பற்றி எமக்குத் தெரியாதபோதும் நாம் அச்சமூகக்களை தரமானவை என்று கருத முற்படுகிறோம். 

என்னைப்பொறுத்தவரை தமிழ்ச் சமூகம் மற்றைய சமூகங்களோடு ஒப்பிடும்போது தரத்தில் குறைந்ததோ அல்லது கூடியதோ இல்லையென்பதே எனது நிலைப்பாடு. அவரவர் தத்தமது வசதிக்கேற்பவும், தகமைக்கேற்பவும் தமது வாழ்வாதாரத்தினைத் தெரிவுசெய்வதை விமர்சிப்பது கடிணமானது.

முதலவாது தலைமுறை தமது வாழ்க்கையை ஸ்த்திரப்படுத்தலினை முக்கியமாகக் கொள்வதில் தவறில்லை. அடுத்த தலைமுறைகள் நிச்சயம் வேறு வழிகளிலும் தமது கவனத்தைத் திருப்பும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. ஆகவே , முதலாவது தலைமுறை புலபெயர் தேசத்தில் அமைத்துக்கொண்ட வாழ்க்கைமுறையினை விமர்சிப்பதை விடுத்து இனிவரும் தலைமுறைகளை அவதானிப்பதே சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து அகற்றப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.