Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்.

நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார்.

இறுதிக் கிரியைககள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து இன்று வெள்­ளி­விழாக் காண்­கிறார்.
இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக 1992ஆம் ஆண்டு முதல் 25 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார்.

1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்­வு­நிலை ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை உட்­பட இலங்­கையின் ஏனைய ஆயர்கள் புடை­சூழ மரு­த­மடு அன்னை ஆல­யத்தில் ஆய­ராகத் திருப்­பொ­ழிவு செய்­யப்­பட்டார்.

யுத்தக் காலத்திலும் அதற்கு பின்னரான காலத்திலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காக முன்னின்று செயற்பட்டவர்களில் இவரும் ஒருவராவார். இவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று பல்வேறு தரப்பினரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். -(3)

 

http://www.samakalam.com/மன்னார்-மாவட்ட-முன்னாள்/

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து இன்று வெள்­ளி­விழாக் காண்­கிறார்.

யோசேப் ஆண்டகை அவர்கள் தானும் ஒரு வெள்ளியாக வானத்தில் வீற்றிருந்து வெள்ளிவிழாவைக் கொண்டாடி அனைவரையும் ஆசீர்வதிக்க இறைவனை வேண்டுகிறேன். 😌:100_pray: 

Link to comment
Share on other sites

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்

 

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டனை தனது 80 ஆவது வயதில் இன்று (01) அதிகாலை சுகயீனம் காரணமாக காலமானார்.

குறித்த தகவலை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உறுதி படுத்தியுள்ளார்.

நீண்ட காலம் உடல் சுகவீனம் காரணமாக ஓய்வு நிலையில் இருந்த மறைமாவட்ட ஆயர், யாழ்ப்பாணம் திருச்சிலுவை கண்ணியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் காலமானதாக அவர் தெரிவித்தார்.

ஆயரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என குரு முதல்வர் மேலும் தெரிவித்தார்.
 

-மன்னார் நிருபர் லெம்பட்-

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார் (adaderana.lk)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆயரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

முள்ளிவாய்க்கால் இனக்கொலை யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மையான எண்ணிக்கையான ஒன்றரை லட்சம் தமிழர்களின் கொலைகளை முதன்முறையாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரச அதிபர்களை மேற்கோள் காட்டி வெளிக்கொணர்ந்தவர்.

தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகப் பேசியதற்காக ரிஷாத் பதியுதீனால்பகிரங்க கொலைப் பயமுருத்தலுக்கு ஆளானவர். ராணுவத்தினரின் மனிதவுரிமை மீறல்களை விமர்சித்தமைக்காக பலமுறை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டவர். இவர் சுகயீனமுற்றபோது ராணுவத்தினரால் வழங்கப்பட்ட தேனீரில் விஷம் கலந்திருந்ததாகக் கூறப்பட்டதும் நினைவிலிருக்கலாம். அதன்பிறகு ஆயர் மீண்டும் தனது பழைய ஆரோக்கிய நிலையினை அடையவில்லையென்பதும் குறிப்பிடத் தக்கது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.

https://www.ucanews.com/news/retired-sri-lankan-bishop-risked-life-for-tamils-say-activists/75017

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மறைந்த மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி நிகழ்வுகள் மன்னாரில் நடைபெறும் – மன்னார் ஆயர் தகவல்

 
1-7-696x392.jpg
 4 Views

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் மன்னார் மறைமாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் இன்று (1) காலை 11 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் சுடர் விட்டு பிரகாசித்த ஒளி விளக்கு இப்போது அணைந்து விட்டது. ஆயர் அவர்களின் திருவுடல் யாழ் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்படும்.

நாளை (April 2) காலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் மறை மாவட்டத்திற்கு பவனியாக எடுத்து வரப்படும். பின்னர் மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நாளை பெரிய வெள்ளி அன்று சிற்றாலயத்தில் மதியம் 2 மணியில் இருந்து அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மக்கள்  இறுதி அஞ்சலியை செலுத்த முடியும். ஞாயிற்றுக்கிழமை மாலை 3  மணியளவில் ஒரு பவனியாக அவரது பூதவுடல் ஆயர் இல்லத்தில் இருந்து மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் திங்கட்கிழமை மதியம் 2pm மணி வரை பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாலை 3  மணி அளவில் பேராலயத்தில் இறுதி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

இலங்கையின் அனைத்து ஆயர்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள். அதனைத் தொடர்ந்து பூதலுடல் பேராலயத்தில் அடக்கம் செய்யப்படும்.

இறுதி சடங்கு கட்டுப்பாட்டுடன் இடம் பெற உள்ளமையினால் மக்கள் அதற்கு முன்னதாக உங்களின் இறுதி அஞ்சலியை மன்னார் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் அல்லது பேராலயத்தில் செலுத்திக் கொள்ள முடியும்.

இறுதி இடக்க திருப்பலியில் அனைவரும் ஒன்று கூடக்கூடிய சந்தர்ப்பம் இல்லை.கொரோனா தொற்று நோய் காரணத்தினால் சுகாதார கட்டுப்பாடுகளுடன் திருப்பலி இடம் பெற உள்ளது.எனவே நேரத்துடன் வந்து ஆயருக்கு இறுதி அஞ்சலியை செலுத்திக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=46139

மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர் ஆயர் – சம்பந்தன் இரங்கல்

 
SAMPANTHAN025.png
 5 Views

“ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆண்டகையின் மறைவை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:

“முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்திரு இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவானது தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.

ஆண்டகை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் மக்களின் உரிமைக்குரலாக பல தசாப்தங்களாக திகழ்ந்தவர். மக்களோடு மிகவும் நெருங்கிப்பழகிய ஆயர் அவர்கள் தமிழ் மக்களின் இக்கட்டான அனைத்து கட்டங்களிலும் தாம் நேசித்த மக்களிற்காக முன்னின்று போராடிய ஒருவராவார். இன மத மொழிகளிற்கப்பால் சாதாரண மக்களின் உரிமைகளிற்காக எவ்வித தயக்கமும் பாரபட்சமும் இல்லாமல் அயராது பணியாற்றிய ஒரு தலைவரை இன்று நாம் இழந்துள்ளோம்.

மக்களின் உரிமைகளிற்காக போராடிய மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் பிரயத்தனங்கள் மெய்ப்பட வேண்டும் என நாம் இறைவனை பிரார்த்திப்பதோடு, ஆண்டகையின் மறைவால் துயறுற்றிருக்கும் அவரது உறவினர்கள் திருச்சபை மக்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அன்னாரது ஆன்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்போம்

 

https://www.ilakku.org/?p=46135

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் சாட்சியொன்று சரிந்தது….

 
1-19.jpg
 20 Views

ஈழத்தின் சாட்சியொன்று சரிந்தது….

அதி வணக்கத்துக்குரியவரும்,

மக்கள் மனங்களில் நீங்காது நிலைத்தவரும்,

இறைமீது நம்பிக்கை கொண்டு

இன்னல் பட்ட மக்களின் இதயத் துடிப்பாய்

இயங்குநிலை பேராயர் காலத்திலும்,

உடல் தளர்ந்தும்

உறுதி தளராத ஓய்வுநிலை வேளையிலும்

நேரில் கண்ட இறை தூதனாக

நம்பிக்கையின் சாட்சியாக

தமிழ்பேசும் இனத்துக்கு விடிவெள்ளியாக

எம் தாயகத்தில் இருந்து ஒளிர்ந்த சுடரே…..

இன்று(01.04.2021)

சமூக வலைத்தளத்துள் நுழைகையில்

பரந்து விரிந்து பலரும் இரங்கல் பகிர்கையில்

இடியாய் வீழ்ந்தது உங்கள் பேரிழப்பின் செய்தி எமக்கு……

இனத்துக்குள்ளேயே விலைபோகும் துரோகத்துள்

நின்று நிலைத்து

பலவகை நெருக்கடிகளையும்,சவால்களையும்

நெஞ்சுறுதி கொண்டு தகர்த்து……

இறுதிவரை உறுதி தளராது பயணித்த

தாயகத்தின் மன்னார் முன்னைநாள் மறைமாவட்ட பேராயர் மேன்மை மிகு இ்ராயப்பு யோசப்

ஆண்டகை அவர்களின்

பாதம் தழுவிய எமது இறுதி

மரியாதையுடனான வணக்கம்….

இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால்

இன்று

புகழ்மாலை சூடி,

தோள் சுந்து,வீர மரியாதை தாங்கி

விடைகொடுத்து வழியனுப்பி வைத்திருப்பர்…..

பேரன்பின் பேராயரே……

நீங்கள் வயது முதிர்வால் இறைபாதம் சென்றாலும்

எம் விழிகலங்குகிறது வாழ் நாளில் எமக்கு நம்பிக்கையாய் இருந்தீர்கள்….

ஈழ மக்களுக்கு

இன்னும் தீரவில்லை துயரம்…

வழிநெடுக சோகம்

நீங்கள் எதிர்பார்த்த சாந்தியும்,சமாதானமும் இன்னமும் கிடைக்கவில்லை எம்மினத்துக்கு…..

ஆதலால் உங்கள் ஆத்மா

ஏக்கத்தோடு போகும் என்பதே உண்மை.

இருந்தாலும்

உங்கள் அயராத உழைப்புக்கு

நிச்சயம் நீதி கிடைக்கும்

அதில் உங்கள் கருணையும் இணைந்திருக்கும்….

அதுவரை விண்ணுலகில்

உங்கள் விருப்பத்துக்குரிய செல்வங்களோடு அமைதியில் இளைப்பாற பிரார்த்தித்து..

சிரம் தாழ்த்தி நினைவுகளால் அர்ச்சிக்கிறோம்….

து.திலக்(கிரி),

 

https://www.ilakku.org/?p=46130

தமிழருக்காக ஒலித்த ஒரு ஆன்மீகக் குரல் மௌனித்தது – சுரேஷ் அஞ்சலி

 
suresh-premachandran-011.png
 6 Views

மன்னார் மறைமாவட்ட ஆயரும் தமிழ்த் தேசியத்தின் மீது அளவிலா பற்றுக்கொண்டவருமான இராயப்பு ஜோசப் அவர்களின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும் தமிழ் மக்களின் விடியலுக்காகக் குரல்கொடுத்து வந்த ஒரு ஆன்மீகக் குரல் மௌனித்து விட்டது என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆயருக்கு அஞ்சலி செலுத்தி அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

“ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களின் மரணம் என்பது தமிழ் மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கின்றது. தமிழ் இனத்தின் குரலாக தமிழ் தேசத்தின் குரலாக தனது இறுதிவரை ஒலித்து வந்தவர். தமிழ் இனத்தின் மீதும் தமிழ் மொழியின் மீதும் நீங்கா பற்றுகொண்ட துணிச்சல் மிக்க ஒரு போர்வீரனாகத் திகழ்ந்தவர். தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தவர். யுத்தத்தின்பொழுது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில், ஒரு இலட்சத்து 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பியவர். அதுவே அரசாங்கம் புரிந்த பாரிய இன அழிப்பை சர்வதேச மட்டத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த முதல் சம்பவமாகும்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து மடு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தபோது அவர்கள் அனைவரையும் பராமரித்துப் பேணி பாதுகாத்தவர் ஆயர் பெருந்தகை. யுத்தம் முடிந்து மிக மோசமான துன்பச் சூழலுக்குள் மக்கள் அநாதரவாகவும் அச்சத்துடனும் முகாம்களில் அடைபட்டுக்கிடந்த பொழுது தமிழ் மக்களுக்கு துணிச்சலையும் தைரியத்தையும் கொடுத்து நம்பிக்கையூட்டியவர்.

ஆயருக்கும் எனக்கும் இடையில் நிகழ்ந்த தனிப்பட்ட சந்திப்புகளில்கூட நாம் எம் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்தும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு அனைத்து தமிழ்த் தலைமைகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்துமே பேசியிருந்தோம். அவருடனான சந்திப்புகள் மிகவும் நட்பு ரீதியாகவும் சமூக அக்கறை கொண்டதாகவுமே இருந்து வந்தது.

அன்னாருக்கு எனது சார்பாகவும் எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாகவும் தமிழ் மக்கள் சார்பாகவும் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவரது பிரிவால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தினருடனும் திருக்குடும்பதினருடனும் கத்தோலிக்க சமூகத்தினருடனும் மன்னார் மறைமாவட்ட மக்களுடனும் எமது துயரைப் பகிர்ந்துகொள்கிறோம்.”

https://www.ilakku.org/?p=46133

 

 • Like 1
Link to comment
Share on other sites

போர்க்காலத்தில் அவலப்படும் மக்களிற்கு சாட்சியாக, அவர்களின் குரலாக, அவர்களுக்குள்ளே தானும் ஒருவராக வாழ்ந்து குரல் கொடுத்த ஆண்டகைக்கு கண்ணீர் அஞ்சலி.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்­டகை கடந்து வந்த பாதை – சில தகவல்கள்!

 
1-6.jpg
 62 Views

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை, ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து வெள்­ளி­விழாக் காண்­கிறார். இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்தார். நெடுந்­தீவு றோ.க. பாட­சாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி ஆகி­ய­வற்றில் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்தார்.

கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம் ஆகி­ய­வற்றில் குருத்­துவக் கல்­வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமி­லி­யா­னுஸ்­பிள்ளை ஆண்­ட­கை­யினால் யாழ். மரி­யன்னை பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ ப­டுத்­தப்­பட்டார்.

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார்.

1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்­வு­நிலை ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை உட்­பட இலங்­கையின் ஏனைய ஆயர்கள் புடை­சூழ மரு­த­மடு அன்னை ஆல­யத்தில் ஆய­ராகத் திருப்­பொ­ழிவு செய்­யப்­பட்டார்.

ஆயர் இரா­யப்பு யோசப்பு ஆண்­டகை, தன்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மறை­மா­வட்டம் மட்­டி­லான தனது கட­மை­களை செவ்­வனே நிறை­வேற்றி வந்தார். திருப்­பலி, திரு­வி­ழாக்கள், பங்­குத்­த­ரி­சிப்­புக்கள், ஆலோ­ச­னைகள், கூட்­டங்கள், மாநா­டுகள், ஆலய மற்றும் பங்­கு­மனைக் கட்­டு­மா­னங்கள், ஏழை­க­ளுக்­கான உத­விகள் என அவர் தன் கட­மை­களை மேற்­கொண்டு வந்தார்.
பம்­பை­ம­டுவில் அன்னை திரே­சாவின் அருட்­ச­கோ­த­ரி­களை வர­வ­ழைத்து முதியோர் மற்றும் கைவி­டப்­பட்­ட­வர்­களைப் பரா­ம­ரிக்க ஒரு இல்­லத்தை ஆரம்­பித்தார்.

முருங்­கனில் டொன் பொஸ்கோ குருக்­களை வர­வ­ழைத்து இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான தொழிற்­ப­யிற்­சி­களை வழங்க ஆவன செய்தார். அடம்­பனில் இயேசு சபைக் குருக்­களை வர­வ­ழைத்து அவர்­களின் பணி மறை­மா­வட்­டத்­திற்கு கிடைக்க வழி­செய்தார்.

May be an image of 1 person, standing, outdoors and tree
துன்­புற்ற மக்­களின் துயர் துடைத்தார்

ஒரு கொடூ­ர­மான போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­நின்ற மக்­களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும்­பா­டு­பட்டார்.

சிறை­களில் வாடும் கைதி­களை அவர் அடிக்­கடி சென்று பார்­வை­யிட்டு அவர்­களின் விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்தார். அவர்­க­ளோடு தனிப்­பட்ட தொடர்­பா­டல்­களை வைத்­தி­ருந்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பாக நின்று அவர்­களைக் கண்­டு­பி­டிக்க அல்­லது அவர்­களின் கதியை வெளிக்­கொ­ணர ஓயாது உழைத்தார்.

யுத்­தத்தால் தமது இல்­லி­டங்­களை இழந்­த­வர்­க­ளுக்கு வீடு­களைக் கட்­டிக்­கொ­டுக்க முயற்­சி­களை மேற்­கொண்டார். முள்­ளிக்­கு­ளத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும், விடத்­தல்­தீவில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும் அவர் காணி­களை, வீடு­களை வழங்­கி­யமை இதற்கு உதா­ர­ண­மாகும்.

யுத்­தத்தால் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வாழ்­வோ­தய நிறு­வ­னத்தின் உத­விக்­கரம் பிரிவு மூலம் உத­வி­களைப் புரிந்தார். வவு­னியா பம்­பை­ம­டுவில் அமைந்­  துள்ள வரோட் நிறு­வ­னத்தின் ஊடா­கவும் இவர்­களின் புனர்­வாழ்­வுக்­காகப் பாடு­பட்டார்.

யுத்­தத்­தாலும், சுனா­மி­யி­னாலும் பெற்­றோரை இழந்து ஆத­ர­வற்று நின்ற பெண் சிறார்­க­ளுக்கு வவு­னி­யாவில் சலே­சிய அருட்­ச­கோ­த­ரி­களின் பரா­ம­ரிப்பில் இல்­லத்தை ஆரம்­பித்தார். அதேபோல் மன்­னா­ரிலும் ஆண் சிறார்­க­ளுக்­கான ஓர் இல்­லத்தை ஆரம்­பித்தார். இவ்­வாறு இன்னும் பல துயர்­து­டைப்புப் பணி­களை முன்­னெ­டுத்தார்.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசா­லையில் கடற்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­த­லின்­போது இரண்­டா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் பேசாலை புனித வெற்­றி­நா­யகி அன்னை ஆல­யத்தில் அடைக்­கலம் புகுந்­தி­ருந்­தனர்.

ஆல­யத்தை நோக்கி துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­துக்­கொண்டு கடற்­ப­டை­யினர் செல்­கின்ற செய்­தியை அறிந்த ஆயர் ஆபத்­தான அந்தச் சூழ்­நி­லையில் அன்­றைய மன்னார் பிர­தேச செய­லாளர் திரு­மதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் பேசா­லைக்கு சென்று நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்தார். இச்­சம்­பவம் தொடர்பில் வத்­திக்­கா­னுக்கு தக­வல்­களை அனுப்­பினார்.

2007ஆம் ஆண்டு ஜன­வரி 2ஆம் திகதி இலுப்­பைக்­க­டவை பட­கு­த்துறைப் பகு­தியில் விமானக் குண்­டுத்­தாக்­கு­தலில் இரண்டு குழந்­தைகள் உட்­பட 13 அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­போது அந்தத் தாக்­குதல் நடந்த சில மணித்­தி­யா­லங்­களில் குரு­மு­தல்வர் விக்ரர் சோசை அடி­க­ளா­ருடன் அந்த இடத்­திற்கு சென்று அம் மக்­களின் துய­ரத்தில் பங்­கு­கொண்­ட­தோடு கொல்­லப்­பட்­ட­வர்கள் கடற்­பு­லிகள் என்ற அரசின் செய்­தியை மறுத்து பொது­மக்­கள்தான் கொல்­லப்­பட்­டனர் என்ற செய்­தியை உல­கத்­திற்குத் தெரி­யப்­ப­டுத்­தினார்.

மன்­னாரில் 2011 ஜன­வ­ரியில் இடம்­பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்­க­ளோடு இணைந்து மக்­களின் பிரச்­சி­னை­களை எழுத்து மூல­மாக அறிக்­கை­யாக முன்­வைத்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள புலிகள் இயக்க சந்­தேக நபர்கள், சட்­டத்­திற்குப் புறம்­பான கொலைகள், போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் புனர்­வாழ்வு போன்ற உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பல விட­யங்கள் மற்றும் அர­சியல் தீர்வின் அவ­சியம் போன்ற விட­யங்­களை அவர் இந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். வன்­னியில் இருந்த மக்­களில் 146,679 பேருக்கு என்ன நடந்­தது? என்ற கேள்­வியை கேட்டு அர­சாங்­கத்தை ஆட்­டம்­காணம் செய்தார்.

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்­ட­னங்­க­ளுக்கு ஆயரின் விளக்கம்

பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்!
2012ஆம் ஆண்டு லக்­பிம என்ற சிங்­களப் பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தன்­னைப்­பற்­றிய பல விமர்­ச­னங்­க­ளுக்கு அவர் பதில் அளித்­தி­ருந்தார். நீங்கள் சர்ச்­சைக்­கு­ரிய ஆயர்­ என அழைக்­கப்­ப­டு­கின்­றீர்கள். இது­பற்­றிய உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்­விக்கு அவ­ரு­டைய பதில், நான் சர்ச்­சைக்­கு­ரிய ஆயர் என அழைக்­கப்­ப­டு­கின்றேன். ஏனென்றால் சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் நடை­பெ­று­கின்­றன. நான் அந்த விட­யங்­கள்­ பற்றிப் பேசும்­ போது சர்ச்­சைக்­கு­ரிய ஆளாக மாறு­கின்றேன்.

நான் உண்­மையைப் பேசு­வதால் வெளிப்­ப­டை­யாகப் பேசும் ஆயர் என்­கின்­றனர். நான் ஏழை­கள் மேல் கரி­சனை கொண்டு நீதிக்­காகக் குரல் கொடுத்தால் நான் இலங்­கைக்கு எதி­ரா­னவன், புலிகள் அல்­லது பிரி­வி­னை­வாதி என்­கின்­றனர். இப்­பெ­யர்­க­ளைப்­பற்றி நான் அலட்­டிக்­கொள்­வது இல்லை. நான் தொடர்ந்தும் அநீ­திக்கு எதி­ராகக் குரல் எழுப்­புவேன். மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராகப் போரா­டுவேன்.

நீங்கள் விடு­தலைப் புலி­யா? அல்­லது அந்த அமைப்பின் தீவிர ஆத­ர­வா­ளரா? என்ற கேள்­விக்கு அவர் அளித்த பதில், நான் ஏன் அவ்­வாறு அழைக்­கப்­ப­டு­கிறேன் என்­பது எனக்குத் தெரி­யாது. என்னை அப்­படி அழைப்­பது அவர்­களின் பல­வீனம்.

நான் விடு­தலைப் புலி­களின் சில செயற்பாடுகளையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் அவற்றை கண்­டித்­தி­ருக்­கிறேன்.

ஒரு குரு என்ற வகையில், உண்­மையையும், வாழ்­வையும், வழி­யையும் வெளிப்படுத்தி வன்­மு­றைக்குப் பலி­யான இயேசுவை பின்­பற்­று­கி­றவன் என்ற வகையில் நான் எனது கட­மை­களைச் செய்கின்றேன் என்றார்.

பணி ஓய்வு

1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவர் சுகவீனமடையும்வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கிவந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக பாப்பரசர் பிரான்சிஸிஸ் அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார்.

2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கம் “இனமான ஏந்தல்” என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு கம்பன் புகழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

குறிப்பாக ஈழத்துத் திருச்சபையின் பணியாளர்கள் ஆயரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விளைய வேண்டும்.

May be an image of one or more people, people standing and indoor

காலத்தின் தேவைக்கு ஏற்ப துணிவோடு, உறுதியோடு செயலாற்ற வேண்டும். ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும் இன்றைய, நாளைய தலத்திருச்சபைக்கு சவாலாக, விழிப்புணவர்வாக, உந்துதலாக அமைய வேண்டும்.

புகைப்படங்கள் – முக நுாலில் இருந்து…

 

https://www.ilakku.org/?p=46120

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடி கட்டி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

(எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடி கட்டி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ்தேசிய மண்ணிலே தமிழ் மக்களுடைய உரிமைக்காகவும் அவர்களுடைய வாழ்வுக்காகவும் ஒரு நீண்ட பெரும் பாதையிலே தன்னுடைய ஆழமான பங்கினை ஆத்மார்த்தமாகவும் உணர்வாகவும் வெளிப்படுத்திய ஆன்மா ஒன்று மீளாத்துயரில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீதும் அதிகமான பற்று கொண்ட ஒரு மனிதனாக நின்று அவர் தன்னை அர்ப்பணித்து இன்று உறக்கம் கொள்கின்ற அவரை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது .

இப்படியான ஒரு ஆயர் இனி கிடைப்பாரா என்பது சந்தேகமே தமிழ் மக்களுடைய உரிமைக்காக வாழ்வுக்காக வாழ்வாதாரத்துக்காக இருப்புக்காக குரல் கொடுத்த ஒரு மனிதன்.

இலங்கையினுடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் சென்று மிகத் துணிச்சலோடு ஆதாரத்தோடு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து க்கும் மேற்பட்ட மக்கள் காணாமல் போய் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியை வெளிப்படையாக துணிச்சலுடன் சொன்ன ஒரு மனிதர்.

நெடுந்தீவில் பிறந்திருந்தாலும் வடக்கு-கிழக்கு தாயகம் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழர்கள் மீதும் தமிழ் மண்மீதும் உறுதியான ஒரு பற்றுக்கொண்ட ஒரு மனிதனை தமிழ் மக்கள் இழந்து தவிக்கிறார்கள்.

அவருடைய இறுதி திருப்பலி இடம்பெறும் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடிகளோடு அவருடைய உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் கேட்டுக்கொள்கின்றேன். எனவே ஆயரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்கமுடியாத ஒன்று என்றார்.

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடி கட்டி அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை | Virakesari.lk

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக அயராது குரல் கொடுத்தவர் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை – சி.சிறீதரன் அஞ்சலி

 
image0-2-696x520.jpeg
 50 Views

ஈழத் தமிழர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை 80 வயதில் இன்று காலை 06.30 மணிக்கு இயற்கை எய்தினார்

இந்நிலையில், ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,  தமிழ்தேசியத்துக்காய் உணர்வுடன்  அவர் செய்த சேவைகள் காலத்திற்கும் அழியாது தன் ஓய்வு காலம் வரை தமிழ்த்தேசியத்திற்காய் குரல் கொடுத்தவர் என்று தெரிவித்தார்.

image1-1.jpeg

மேலும் அவருடைய இறுதி திருப்பலி இடம்பெறும் நாளான எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு கிழக்கு எங்கும் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் கறுப்பு கொடிகளோடு அவருடைய உருவப்படங்கள் தாங்கிய நிலையில் அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நான் கேட்டுக்கொள்கின்றேன். எனவே ஆயரின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஏற்கமுடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்தார்.

 

https://www.ilakku.org/?p=46113

“ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவு எம்மை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது“-க.வி.விக்னேஸ்வரன் இரங்கல்

 
1-8.jpg
 11 Views

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் 01.04.2021 ம் திகதி யாழ் .திருச்சிலுவை கன்னியர்மட வைத்தியசாலையில் இயற்கை எய்திய செய்தி எம்மை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  க.வி.விக்னேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் மறைவையடுத்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

“ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் ஆத்மா இறைவனடி சேர்ந்து சாந்தி பெற நாம் யாவரும் யாசிக்கின்றோம். கத்தோலிக்க மக்களின் புனிதவாரம் அனுஷ;டிக்கப்படும் இந்த வாரத்தில் அவர் இறையடி சேர்ந்தமை அவரின் இறை வாழ்க்கையைக் கோடிட்டுக் காட்டுகின்றது.

ஆயர் பணியில் 25 வருடங்கள் சிறப்பாக பணியாற்றி ஓய்வுபெற்ற போதும் அவர் வெறுமனே இறைபணியுடன் மட்டும் நின்றுவிடாது மக்கள் பணியிலும் விசேடமாக தமிழ் மக்கள் சார்பான நலன்கள் தொடர்பில் அதீத அக்கறை காட்டியதுடன் அனைவரும் இந்ந நாட்டின் குடிமக்களாக சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் நேரிய வழிகாட்டியாக வாழ்ந்து எம்மையெல்லாம் அரவணைத்துச் சென்ற ஆண்டகை ஆவார்.

அவர்களின் 75 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். அவர் புகழின், பணியின் உச்சநாளாக அன்றைய தினம் அமைந்திருந்தது. அவரின் முகத்தில் ஒருவித அமைதி, அன்பு, இறைமை போன்றவற்றை நான் கண்டேன். சில நாட்களுக்குள்ளேயே அவரின் தேகநிலை மாற்றமடையப் போகின்றது என்பதனை எவரும் அறிந்திருக்கவில்லை. அதன்பின்னர் அவரின் தேகநிலை மோசமடைந்து அவர் திடகாத்திரத்தை இழந்து வாழ்ந்தார்.

மன்னார் செல்லும் போதெல்லாம் ஆண்டகையைத் தரிசிக்காது திரும்பமாட்டேன். பேச்சுத்திறன் குறைந்திருந்த போதும் அவர் எம்மை அடையாளம் கண்டுகொண்டார்.
ஒரு மக்கள் சேவகரை, மகானை தமிழ் மக்கள் இழந்து நிற்கின்றோம.; அவரின் ஆத்மா சாந்தியடைவதாக” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/?p=46152

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். போர் காலங்களில் அவரின் பங்களிப்பு மகத்தானது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு தொண்டு செய்த ஒரு உயிர்.

கண்ணீர் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆண்டகையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person 

ஆயர் அவர்களின், ஆன்மா நித்தியத்தில் இளைப்பாறட்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இறைவனுக்காக தன்னை அர்ப்பணித்து , மக்களுக்கு தொண்டு செய்து ,உரிமைக்காக குரல் கொடுத்த  ஆயர் அவர்களுக்கு என் அஞ்சலிகள்.   

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • குமரன் பத்மனாதன் எனப்படும் கே பி இன் கைது நாடகம் பற்றி அந்த நாடகம் நடந்த சில மாதங்களின் பின்னர் மெலேசியாவிலிருந்து லங்கா கார்டியன் பத்திரிக்கைக்கு அங்கிருந்து முகம்மத் எனும் செய்தியாளர் எழுதிய கட்டுரை காலம் : ஆவணி, 2021 துரோகங்களுக்கிடையிலான போட்டி   புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவுகளுக்குப் பொறுப்பாகவிருந்த கே பி எனப்படும் குமரன் பத்மனாதன் இலங்கை அரசாங்கத்தினதும், அதன் ராணுவ உயர் மட்டங்களினதும் செல்லப்பிள்ளையாக வலம் வரத் தொடங்கியிருப்பதுடன் இலங்கை அரசாங்கத்தினால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மிக உல்லாசமான வாழ்க்கையினையும் அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது.   அவன் அண்மையில் வெளியிட்டிருக்கும் சில கருத்துக்களால, இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் கடுமையான சீற்றம் அடைந்திருப்பதும் தெரிகிறது. தனக்கும் இலங்கையரசுக்கும் இடையில் இருக்கும் அந்நியோன்னியத்தை வெளிப்படையாகக் காட்டிவருவதன் மூலம் கே பீ தமிழர்களில் பல எதிரிகளைச் சம்பாதித்து வருகிறார் என்பது தெளிவு. அவர் அண்மைக்காலங்களில் வழங்கிவரும் பல செவ்விகளில் தான் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டுதபற்றி மேலெழுந்தவாரியாகச் சொல்லிவரும் அதேவேளை, தான் கொழும்பிற்கு இலங்கை ராணுவ புலநாய்வுத்துறையினரின் ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அழைத்துவரப்பட்டதுபற்றி வாய்திறக்கத் தொடர்ச்சியாக மறுத்தே வருகிறார்.  இந்தியாவின் சர்வதேச புலநாய்வுத்துறை அதிகாரிகளின் கருத்துப்படி கே பீ யின் கைது என்பது கே பீ இற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே மிகவும் ரகசியமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நாடகம் ஒன்றின்மூலமே அரங்கேற்றப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.  புலிகளின் தலைமையினால் சிறிதுகாலம் சர்வதேச ஆயுதக் கொள்வனவுக்கான பொறுப்பிலிருந்து இறக்கப்பட்டு பின்னர் மீளவும் இறுதி யுத்த காலத்தில் புலிகளின் தலைமையினால் முகவராக அழைக்கப்பட்ட கே பீ, அப்போதிருந்தே இலங்கை ராணுவத்தின் உளவாளியாகவும், புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராகவும் இயங்கி வந்திருக்கிறார் என்று அவர்கள் மேலும்  கூறுகிறார்கள்.    2001 இல் செய்துகொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தக் காலத்தில் புலிகளின் சர்வதேச ஆயுதமுகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவராகவும் இருந்த தன்னை புலிகளின் தலைமைப்பீடம் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றிற்காக பதவியிறக்கம் செய்தமையினால் அவர் கடும் சீற்றம்  கொண்டிருந்ததாகத் தெரிகிறது. புலிகளைப் பழிவாங்க ஏதாவது செய்தாகவேண்டும் என்கிற கோபத்தில் இருந்த கே பீ இற்கு எவரை அணுகுவது என்பது அப்போது பெரும் பிரச்சினையாகவே மாறியிருந்தது. 2001 இன் பின்னர் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கும் ஆயுதக் கொள்வனவுக்கும் பொறுப்பாக காஸ்ட்ரோ எனப்படும் வீரகுலசிங்கம் மணிவண்ணன் பிரபாகரனால் நியமிக்கப்பட்டதால் கடும் சினமுற்றிருந்த கே பீ தனது நெருங்கிய சகாக்களிடம் தனக்கு இயக்கம் மீதான நம்பிக்கை முற்றாக போய்விட்டதென்றும், தலைவர் சரியான காரணங்களைத் தனக்குக் கூறாமல் தன்னை பதவியிலிருந்து அகற்றியதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதென்றும், பிரபாகரன் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று கறுவியிருக்கிறார்.   புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் கே பீயை இலங்கையின் ராணுவப் புலநாய்வுத்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரனவோடு தொடர்புகளை ஏற்படுத்துமளவிற்குச் சென்றிருக்கிறது. இதன் அடிப்படையில் கபில ஹெந்தவிதாரணவும் கே பீ யும் பலதடவைகள் பங்கொக்கில் சந்தித்துப் பேசியிருப்பதாக இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே காலப்பகுதியில் புலிகளின் முன்னாள்த் தளபதியாகவிருந்து பின்னர் ராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், ஆரம்பகாலப் பேச்சுவார்த்தைகளில் புலிகளின் சார்பாக பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருந்தவருமான  கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் கே பி ரகசியப் பேச்சுக்களில் ஈடுபடத் தொடங்கியிருந்ததாகவும் பாங்கொக்கின் காட்டுப்பகுதியொன்றில் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்றதாகவும், அப்போதிருந்தே புலிகளுக்கெதிரான தனது செயற்பாடுகள் குறித்து கே பீ கருணாவுடன் பேசிவந்ததாகவும் அவ்வதிகாரிகள் கூறுகின்றனர். ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரியொருவரான "சாம்" என்று புனைபெயருடன் அழைக்கப்பட்ட ஒரு முஸ்லீம் அதிகாரியும், அவரது சகாவுமே கே பீ இற்கும் கபில ஹெந்தவிதாரனவிற்குமிடையையிலான தொடர்பினை தாய்லாந்தில் வெற்றிகரமாகக் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. காஸ்ட்ட்ரோ தலைமையில் புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஆயுதக் கொள்வனவில் இறங்கி அடைந்த பல தோல்விகள், செயற்பாட்டாளர்களின்  கைதுகளுக்குப் பின்னர் கே பி யை பிரபாகரன் மீண்டும் தனது சர்வதேச ஆயுத முகவராகவும், சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமாக  பதவியில் அமர்த்திய காலத்தில் கே பி இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி விட்டிருந்தார் என்றும், அரச , ராணுவ தலைமைப்பீடங்களுக்கு கே பி மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தாரென்றும் இந்திய புலநாய்வுத்துறை கூறுகிறது. தனது பழிவாங்கலுக்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கே பீ இற்கு பிரபாகரன் மீண்டும் தன்னை பதவியில் அமர்த்தியது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகிப் போனது. பிரபாகரன் கேட்டுக்கொண்டபடியே புலிகளுக்கான சில ஆயுதங்களை கொள்வனவு செய்து கப்பல்களில் ஏற்றியனுப்பிய கே பீ, தவறாமல் ராணுவப் புலநாய்வுத்துறைக்கும் இக்கப்பல்களின் அமைவிடம், பாதைகள் தொடர்பான தகவல்களை வழங்கிவரத் தொடங்கினார். கே பீ யிடம் இருந்து தமக்குக் கிடைத்த வரப்பிரசாதமான புலிகளின் கப்பல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை விமானப்படையும் கடற்படையும் புலிகளின் ஆயுதக் கப்பல்களை நடுக்கடலில் தாக்கியழித்துக்கொண்டிருந்தன. இறுதியுத்த காலத்தில் கடுமையான ஆயுதத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டிருந்த புலிகளுக்கு கே பி யின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டு தாயகத்திற்கு கொண்டுவரப்படும் என்று அவர்கள்  நம்பிக்கையுடன் காத்திருந்த பல ஆயுதக் கப்பல்கள் அதே கே பி யினால் அரசிற்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக கடலில் தாக்கியழிக்கப்பட்டமை கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும்.  கே பியின் ஊடாக தமக்குக் கிடைத்த விலைமதிப்பற்ற புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பான தகவல்களையடுத்து மிகுந்த உற்சாகத்துடன் செயல்ப்பட்ட கபில ஹெந்தவிதாரனவும் அவரது இலங்கை பாதுகாப்புத்துறையும் தமது திட்டத்தின்படி புலிகளுக்கான ஆயுத வழங்கல்கள் முற்றாக வரண்டுபோவதுகண்டு மகிழ்வுடன் காணப்பட்டதாக இந்திய உளவுத்துறை மேலும் கூறுகிறது. புலிகளுக்கான ஆயுத வழங்கல்களைத் தடுத்து நிறுத்தி, இறுதிப்போரில் முற்றாக  அவர்களை அழிப்பதற்கான கே பியின் உதவிக்குப் பிரதியுபகாரமாக இலங்கைக்கு அவர் மீளவும் வந்து அரசியலில் பங்களிப்புச் செலுத்தும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அரசாங்கம் அவருக்கு உறுதியளித்திருந்தது.  கே பியினை இலங்கைக்கு கொன்டுவரும் தமது திட்டத்தினை செயற்படுத்தவே மலேசியாவில் இடம்பெற்ற கடத்தல் நாடகம் கே பி யினாலும், இலங்கை அரசாலும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கே பி யின் கைதில் மலேசிய அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என்றும் தெரியவருகிறது. மலேசியாவில் கூலிக்கு வேலைசெய்யும் சில ஆயுததாரிகளின் உதவியுடன் கே பி கைதுசெய்யப்பட்டதாக நடத்தப்பட்ட நாடகத்தில் , மலேசிய அரசும் இலங்கை அரசும் சேர்ந்தே இந்தக் கைதில் ஈடுபட்டதாக செய்தி கசியவிடப்பட்டதன் மூலம் மலேசிய அரசும் தமிழருக்கெதிரான தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக உள்ளூரில் காட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே கே பி இற்கும், கபில ஹெந்தவிதாரனவிற்கும் இடையில் செய்துகொள்லப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் இக்கைது நாடகத்தில் கே பி எதிர்ப்பின்றி கைதாவது போன்று பாசாங்கு செய்ய, இலங்கை அரசு இக்கைதினை தனது புலநாய்வுத்துறையின் வெற்றியாகப் பறைசாற்றிக்கொண்டது. தனிப்பட்ட விமானத்தில் கொழும்பிற்குக் கொண்டுவரப்பட்ட கே பி, ஊடகங்களின் பார்வையிலிருந்து விலக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பாக அரசாங்கத்தின் ரகசிய இடமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். புலிகளை வீழ்த்தி முற்றாக அழிப்பதற்கு கருணா இலங்கையரசிற்குச் செய்த பங்களிப்பைக் காட்டிலும் கே பி செய்த துரோகம் அதிகமானது என்று நம்பப்படுகிறது. கே பி இற்கு வழங்கப்பட்டிருக்கும் ஆடம்பரச் சலுகைகளும், வசதிகளும் புலிகளை வீழ்த்த முன்னின்று போராடிய ராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்குக்கூட எக்கட்டத்திலும் வழங்கப்பட்டிருக்கவில்லையென்பதும், இன்று அரசுக்கெதிராகச் செயற்பட்டார் என்கிற காரணத்திற்காக சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.  இலங்கை அதிகாரிகளின் கூற்றுப்படி புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்பாக மிகவும் சரியான தருணத்தில் தமக்கு வழங்கப்பட்ட துல்லியமான தகவல்களே அக்கப்பல்களை அழித்து, புலிகளின் ஆயுத வழங்கல்களைத் தடுத்து, அவர்களின் முதுகெலும்பினை உடைக்க உதவின என்று உறுதியாக நம்புகிறார்கள். இதற்குப் பிரதியுபகாரமாகவே கே பி கேட்கும் அனைத்து சலுகைகளையும் அரசு அவருக்குச் செய்துகொடுத்து வருவதாகவும், அரசியலில் அவர் செயற்படுவதற்கான வெளியினை அரசே ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருப்பதாகவும் தெரிகிறது.  இலங்கையின் நல்லிணக்க இணக்கப்பட்டு கவுன்சிலின் அமர்வுகளுக்கு கே பீ யும், சரத் பொன்சேக்காவும் நிச்சயம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள்,  ஆனால், அவர்கள் இருவரையும் ஏதோ ஒருவகையில் இந்த அமர்வுகளிலிருந்து அகற்றிவருகிறது இலங்கையரசு. ஆயுத நடவடிக்கைகளில் ஈடுபடாத புலிகளின் அரசியல்த்துறைத் தலைவர்களான பாலகுமார், யோகி ஆகியோர் ராணுவத்தினரிடம் சரணடைந்த வேளையில் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், புலிகளின் போராட்டக் காலத்திலிருந்து இறுதிவரை அவர்களின் சர்வதேச ஆயுத முகவராகச் செயற்பட்டு வந்த கே பீற்கு அரசின் செல்லபிள்ளை எனும் அந்தஸ்த்துக் கொடுக்கப்பட்டு வருவதுபற்றி பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.   அரசுக்குச் சார்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள கே பி, தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இருந்து வரும் சிலரைத் தொடர்புகொண்டு, மீதமிருக்கும் புலிகளின் சர்வதேச வலையமைப்பினை முற்றாகச் சிதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது. http://www.srilankaguardian.org/2010/08/kp-and-sl-government-must-tell-truth.html
  • சசி வர்ணம் அவர்களுக்கு!
  • மாம்பழம் சுவையானதுதான் அதன் சுவையை அவரவர்தான் ரசித்து சுவைத்து அனுபவிக்க வேண்டும்.....அவரவரும் சின்னவீடு பெரியவீடு வைப்பு சொப்பு எல்லாம் வைத்துக் கொண்டு பிறகும் அலையுறார்களே எதற்காக ஒன்றுபோல் இன்னொன்று இல்லை ஒவ்வொன்றும் தனித்துவமானது என்பதினால்தான்.......!😎
  • மீன் அறுத்தல், கோழி அறுத்தல், ஆடு அறுத்தல், மாடு அறுத்தல் இப்படியே இந்த பட்டியல் நீளும். இஸ்லாமியர்களின் புரியாத  தமிழாக்கம். !!
  • எனது பிறந்தநாளுக்கு உளம்கனிந்து  வாழ்த்திய சொந்தங்கள் தமிழ் சிறி அண்ணா, புங்கையூரன் அண்ணா, சகோதரர் நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, கிருபன் ஜீ, சகோதரி ஜெகதா துரை, புரட்சிகர தமிழ்தேசியன் அண்ணா, சுவீ அண்ணா, வாத்தியார் ஐயா, சகோதரர் நுணா, வாதவூரான் அண்ணா, சகோதரி ரதி, சகோதரர் நொச்சி, குமாரசாமி அண்ணர், சகோதரர் பெருமாள்,  நிலாமதி அக்கா , சகோதரர் துல்பென், சகோதரர் ஓணாண்டியர், சகோதரர் கந்தையா,  சகோதரர் சுவைப்பிரியன், சகோதரர் சபேஸ், சகோதரர் எப்போதும் தமிழன், சகோதரர் கோஷன், சகோதரர் ஏராளன், நிழலி சாமியார்  மற்றும்  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.  உங்கள் வாழ்த்துக்களில் அகம் மகிழ்ந்து கரைந்து போகிறேன். 🙏
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.