Jump to content

நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் -  சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் -  சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச புதிய அரசிலமைப்பில்  நாட்டின் பெயர்  தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக  காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.

அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 உத்தேச  புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபணர் குழுவிடம் நேற்று சனிக்கிழமை தமது யோசனைகளை முன்வைத்ததன் பின்னர் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் ஊடகங்களுக்கு கூறியதாவது :

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர்

 புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசு நாடாக வலுப்படுத்தப்படவேண்டும்.  அதிகார பகிர்வு எவ்விதத்திலும் இடம்பெற கூடாது.  

மத்திய அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபை நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு  முன்னுரிமை வழங்கும் போது இனம், மத  மற்றும் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்க கூடாது.

 உள்ளுராட்சி மன்ற தேர்தல், பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய தேர்தல்கள் நாட்டின் பிரதான தேர்தல்களாக காணப்பட வேண்டும். பல்வேறு வழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாகாணசபை தேர்தல்குறித்து புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.

 5 வருட கால பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு நாடு சொந்தமல்ல. ஜனாதிபதி தற்காலிக பொறுப்புதாரி மாத்திரமே தேசிய வளங்களை ஜனாதிபதி, அமைச்சரவை உறுப்பினர் ஆகிய குறுகிய தரப்பினரது தீர்மானத்தை கொண்டு மாத்திரம் கையாள கூடாது. 

தேசிய வளங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களின் அபிப்ராயத்தை  கோருவது கட்டாயமானதாகும். இதற்கான வழிமுறைகள் புதிய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட  வேண்டும்.

ஸ்ரீ ரோஹண பீடம் - மோரே கஸ்ஸப்ப தேரர்

நாட்டின் பெயர் சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக காணப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம்  ஆகிய மொழிகள் இரண்டாம் மொழியாக  செயற்பட வேண்டும். புத்த மதத்தை பாதுகாக்கவும், வளர்ச்சி பெற செய்யவும் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

எல்லே குணவங்ச தேரர்

அரச அதிகாரத்துடன் சுற்றுசூழல் அழிக்கப்படுவதை காண கூடியதாக உள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய அரசியலமைப்பில்   விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மக்களின்  உரிமைகளை பாதூக்கவும், நாட்டின் இறையான்மையினையினை பாதுகாக்கவும் விசேட பொறிமுறை வகுக்க வேண்டும். 

 

https://www.virakesari.lk/article/103248

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பெயரை தனி சிங்களத்தில் வைக்க பௌத்த மதகுருமார்கள் வலியுறுத்தல்

 
1-32.jpg
 51 Views

உத்தேச புதிய அரசியல் அமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தின் பிரநிதித்துவப்படுத்துவதாக  காணப்பட வேண்டும். சிங்கள மொழி மட்டும் அரச கரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் 2ம் மொழியாக காணப்பட வேண்டும் என மூத்த பௌத்த மத தலைவர்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளனர்.

அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது . ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க சிறப்பு பொறிமுறை செயற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே மூத்த பௌத்த மத தலைவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

 

https://www.ilakku.org/?p=46405

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

தமிழ், ஆங்கிலம் மொழிகள் 2ம் மொழியாக காணப்பட வேண்டும் என மூத்த பௌத்த மத தலைவர்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளனர்.

அப்போ சீன மொழிக்கு என்னானது.... ???🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அப்போ சீன மொழிக்கு என்னானது.... ???🤨

இன்னும் சில வருடங்களில் இலங்கை சைனீஸ் மாகாணம் ஆகப்போகுது அதுக்கிடையில் என்ன பெயரும் வைத்து துளைக்கட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சிங்களப் பெயர் தானே வைச்சிருக்குது. ஏற்கனவே சிங்கள பெளத்த நாடென்று தானே எழுதி வைச்சிருக்கினம்.

அதனால் தானே தமிழர்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் தனிச் சுதந்திர ஆட்சி கோரி வருகின்றனர். அதற்கு தமிழீழம் என்று பெயரும் இட்டுள்ளனர்.

சிங்களத்தின் ஒட்டுமொத்த மனநிலை என்பது இன்னும்.. பேரினவாதம் உச்சம் பெற்ற நிலையில் தான் இருக்கிறது.

புலிகள் அழிந்தால்.. இதோ தமிழர்களுக்கு எல்லாம் கிடைத்திடும் என்று சொல்லி.. ஒரு இனப்படுகொலைப் போரை ஆதரித்து நின்ற..  தமிழர் அதி சாணக்கியசாலிகள் கூட இவை குறித்து மூச்சும் விடுவதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு இனவாதம் தலைக்கு ஏறி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் -  சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள்

 

5 hours ago, உடையார் said:

நாட்டின் பெயரை தனி சிங்களத்தில் வைக்க பௌத்த மதகுருமார்கள் வலியுறுத்தல்

May be an image of 1 person and text that says 'இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா கோப்பால்...'

இந்த வியாதிக்கு... மருந்தே இல்லையா... கோப்பால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

இன்னும் சில வருடங்களில் இலங்கை சைனீஸ் மாகாணம் ஆகப்போகுது அதுக்கிடையில் என்ன பெயரும் வைத்து துளைக்கட்டும் .

சிங்களம் சீன மொழியுடன் சேர்ந்து திரிபு அடைந்தாலும், பௌத்த மத விரிவாக்கத்தை சீனோசிங்கள முழுமையாக ஏற்று கொள்ளும்.

2019 Sri Lankan presidential election - Wikipedia

 

என்னதான் குத்தி முறிஞ்சாலும் எப்பவும் இதுதான் நிலைமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

May be an image of 1 person and text that says 'இந்த வியாதிக்கு மருந்தே இல்லையா கோப்பால்...'

இந்த வியாதிக்கு... மருந்தே இல்லையா... கோப்பால்.

மருந்து இருந்தது கோப்பால்!
அதை எம்மவர்களும் சேர்ந்து அழித்து விட்டார்கள் கோப்பால். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள குடியேற்றங்களை ஊக்குவிக்கவே கோட்டபாய வடக்கிற்கு பயணம் -ஊடகங்களுக்கும் அனுமதி மறுப்பு

 
image-1-696x435.png
 118 Views

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வடக்கு மாகாணத்திற்கான முதல்  பயணமாக  வவுனியாவில் உள்ள சிங்கள குடியேற்ற கிராமமான கலாபோகஸ்வெவ பகுதிக்கு  பயணம் செய்தார்.

17ஆவது கிராமத்துடன் கலந்துரையாடல் நிகழ்வு வடக்கு மாகாணத்திலே முதன்முறையாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட கோட்டபாய ராஜபக்ச கலாபோகஸ்வெவ  பகுதி  மக்களின் குறைநிறைகள் தொடர்பாக கேட்டறிந்து,  கிராமிய அபிவிருத்தி தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார் என தெரிய வருகின்றது.

முதன்முறையாக வடக்கு  மாகாணத்திற்கு பயணம் செய்த  கோட்டபாய, போரினால்   பாதிக்கப்பட்ட  தமிழ் கிராமங்களுக்கு செல்லவில்லை.  ஆனால் சிங்களக் கிராமம் ஒன்றுக்கு  சென்றிருப்பது, தமிழ் மக்கள் மீதான அவருடைய வெறுப்பையே காட்டுகின்றது.

போரின் பின்னர், தமிழ் மக்களின் காணிகளை பௌத்த குருமார்கள் மற்றும் இராணுவம், காவல்துறையினரின் துணையுடன்  சிங்கள மக்கள் அபகரித்து வருகின்றனர்.

இவ்வாறு அபகரித்து உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்ற கிராமமே வவுனியா  கலாபோகஸ்வெவ. இது இவ்வாறிருக்க,   கலாபோகஸ்வெவ சிங்கள கிராமத்திற்கு கோட்டபாய  பயணம் செய்தமை குறித்த   எவ்வித  தகவல்களும் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு  ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

சிங்கள குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் ஊக்குவிப்பதற்கும், அவ்வாறு குடியேறியவர்களுக்கு அரசின் உதவி ஒத்தாசைகளை வழங்குவதற்காகவுமே கோட்டபாயவின் பயணத்தின் நோக்கம் அமைந்துள்ளது.   இதன் ஊடாக தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து துரும்பும் எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்க்கவும் கூடாது என்பதனையே உணர்த்தி நிற்கின்றது.

 

https://www.ilakku.org/?p=46439

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

நாட்டின் பெயர் சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக காணப்பட வேண்டும்.

மாற்றுவதெல்லாம் மாற்றி, அபகரிப்பதெல்லாம் அபகரித்து சீனாவுக்கு தாரை வார்த்துவிட்டு வாயைப் பிளந்துகொண்டு நில்லுங்கோ. நாடு அதல பாதாளத்தில நிக்குது, விபரம் புரியாமல் கிறுக்கு பிடிச்சு அலையுதுகள் காவியள். மக்கள் கஷ்டத்தில் வயிறு வளர்த்தால் உப்பிடித்தான் ஆடச் சொல்லும்.  உந்த சும்மா இருந்து  வயிறு வளக்கிறதுகளுக்கு  அளப்பதை மக்கள் நிறுத்தி, கஷ்ரப்பட்டு உழைத்து சாப்பிட வைக்க விட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'BcT NEWS 4h 心 Like Page நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் பௌத்தமத்குருமார் வேண்டுகோள் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என பெௌத்தமத்குருமார் யோசனையொன்றை முன்வைத்துள்ளனர். புதிய அரசமைப்பிற்கான யோசனைகளை சமர்ப்பி;த்துள்ள பெௌத்தமத்குருமார்கள் குழுவொன்று நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்துள்ளது. ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட பௌத்தமதகுரு ஒருவர் நாட்டின் பெயரை சிங்கலே என மாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சிங்களமே உத்தியோகபூர்வ மொழியாக காணப்படவேண்டும், ருகுணு பிஹிட்டி மாயா என்ற அடிப்படையில் பிரதேசங்கள் பிரிக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். SRI LANKA'

ஸ்ரீலங்காவின் பெயரை...  "சிங்கலே"  என மாற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.