Jump to content

Recommended Posts

4 hours ago, Justin said:

(பியர் - ஓட்டம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்😉)

அதுக்கு முதல் ஸ்பரிச உணர்ச்சியின் மகிமை பற்றி ஒன்று எழுதுவதாக சொன்னீர்களாம், ஏன் இன்னும் எழுதவில்லை என்று பிழம்பார் கவலையில் கேட்கின்றார்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • Replies 130
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

7 hours ago, நிழலி said:

நான் மட்டும் இதில் கலந்து கொண்டிருந்தால், 29,999 இடத்தில் வந்து இருப்பேன். 

பாரட்டுகள் இணையவன். நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன் (காலநிலை ஒத்துழைத்தால்), ஆனால் என்னால் ஓடுவதை கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அத்துடன் ஓடுவதால் கால்களுக்கு பிரச்சனை பின்னாட்களில் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கின்றது (46 வயதின் பின் 'பின்னாட்கள்' என்று ஒன்று இருக்குதா என்ற கேள்வியும் உள்ளது)

நன்றி நிழலி.

நடக்கும்போது 5ஆவது கிலோ மீற்றரில் 5 நிமிடங்கள் உங்களால் முடிந்த அளவு மெதுவாக ஓடிப் பாருங்கள்.

கால்களுக்குப் பிரச்சனை வரும் என்பது தவறான அபிப்பிராயம். எதுவும் அளவுக்கு மீறினாக் கூடாது. மேலே குறிப்பிட்டபடி ஓட்டம் எலும்புகளுக்கும் நார்களுக்கும் புத்துயிர் அளித்து உறுதியாக்கும். இதைத் தவிர உங்கள் இதயம் உறுதியாகும். 50 வயதின்பின் வாழ்க்கையின் இன்னொரு பகுதி ஆரம்பமாகிறது. அனுபவிக்க வேண்டும். 🙂

 • Like 1
Link to comment
Share on other sites

8 minutes ago, இணையவன் said:

மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன்.

முகம் தெரியாத எத்தனை பேர் எம்மை எம் வாழ்வில் ஊக்குவித்துக் கொண்டு இருக்கின்றார்கள்!

7 கிலோமீற்றர் என்பது பெரிய தூரம், அதை களைத்த பின் இரண்டு சீனிக்கட்டிகளுடன் ஓடியிருக்கின்றீர்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தையும் கொண்டு வரும் அல்லவா?

Link to comment
Share on other sites

6 hours ago, suvy said:

Rose Congratulations GIF - Rose Congratulations Red Rose - Discover & Share GIFs

வாவ்......வாழ்த்துக்கள் இணையவன் .........!  💐  👏  

நன்றி சுவி அண்ணா. எப்போதும் தொடர்ச்சியான உங்கள் பாராட்டுகள் என்னை உற்சாகப்படுத்துகிறது.

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இணையவன்! 26 மைல்கள் 3 மணி 39 நிமிடமென்றால் உங்கள் சராசரி pace 8.4 நிமிடங்கள்! - இது சிறப்பான வேகம்!

ஒரு வாரத்தில் 25 மைல்கள் ஓடுகிறேன் - ஆனால் மரதனுக்குப் பயிற்சி எடுக்க முனைந்த ஒவ்வொரு முறையும் ஏதாவது கால் பாதிப்பு வந்து விடுகிறது -இது வரை கனவாக இருக்கிறது என் மரதன். 

நன்றி ஜஸ்ரின்,

நீங்களும் ஓடுகிறீர்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாரத்தில் 25 மைல்கள் ஓடும் நீங்கள் நிச்சயமாக மரதன் ஓட வேண்டியவர். பயிற்சியின்போது கால் வலிகள் ஏற்படுவது சாதாரணம். என்ன விதமான வலி என்பது தெரியவில்லை. ஓட முடியாது என்று உணர்ந்தால் நிறுத்தி ஓய்வு எடுக்கத் தயங்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

மரதன் ஓடுவதற்கு வயது கால எல்லை தடையில்லை. விரைவில் நீங்களும் மரதன் ஓட வாழ்த்துகள்.

6 hours ago, ஏராளன் said:

வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா.

நன்ற்றி ஏராளன். அவதார் படத்தைப் பார்த்து என்னைவிட வயதானவர் என்று நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 🏃🏾 @இணையவன்👏👏👏 

மரதன் ஓடுவது இலகுவானது அல்ல என்பதை 25 கிலோமீற்றர்கள் அண்மையில் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.

Link to comment
Share on other sites

5 hours ago, Sasi_varnam said:

நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!!
எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும்.
நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
 தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. 
ஸ்டெமினா காணாது என நினைக்கிறன்.

உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? 

படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது 👌  

நன்றி சசி. நீங்கள் லீக் தரத்தில் விளையாட்டுகளில் ஈடுபடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி. மூச்சு இரைத்துக் களைப்படைவது பற்றி மேலே விளக்கியுள்ளேன். உணவுக் கட்டுப் பாடுகள் பெரிதாக எதுவும் இல்லை. முன்னர் keto diet செய்திருந்தேன். இப்போது low carb செய்கிறேன். தவிர்க்க வேண்டியவை சோறு மா சீனி மட்டுமே. ஏனையவற்றைத் தாராளமாகச் சாப்பிடுகிறேன். உடற்பயிற்சியும் செய்வதால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஐஸ்கிறீம் கேக் போன்றவற்றைச் சாப்பிடத் தயங்குவதில்லை.

பியர் பற்றி ஜஸ்ரின் எழுதப் போவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 😀

3 hours ago, tulpen said:

வாழ்த்துக்கள் இணையவன். 

மிக்க நன்றி துல்பன். 

Link to comment
Share on other sites

29 minutes ago, நிழலி said:

7 கிலோமீற்றர் என்பது பெரிய தூரம், அதை களைத்த பின் இரண்டு சீனிக்கட்டிகளுடன் ஓடியிருக்கின்றீர்கள். ஆனால் இப்படி செய்வது ஆபத்தையும் கொண்டு வரும் அல்லவா?

ஓடத் தொடங்கினால் 7 கிலோ மீற்றர்கள் பெரிய தூரம் இல்லை. 🙂

ஆபத்து எதுவுமில்லை. ஓட்டத்தின்போது சில விதிகளைக் கடைப்ப்பிடித்தால் போதுமானது. முக்கியமானது, திடீரென வேகமாக ஓடக் கூடாது. 

19 minutes ago, கிருபன் said:

வாழ்த்துக்கள் 🏃🏾 @இணையவன்👏👏👏 

மரதன் ஓடுவது இலகுவானது அல்ல என்பதை 25 கிலோமீற்றர்கள் அண்மையில் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.

நன்றி கிருபன். 25 கிலோமீற்றர்கள் நடப்பது என்பது மிகக் கடினமானது என்பதை ஒத்துக் கொள்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக மெதுவான ஓட்டத்தோடு நடந்து பாருங்கள். காலப் போக்கில் இலகுவாக இருக்கும்.  சிலர், குறிப்பாக மிக வயதானோர் மரதன் போட்டியில் பங்கு பற்றி ஓட்டமும் நடையுமாக 5 - 6 மணித்தியாலத்தில் 42 கிலோமீற்றர்களைக் கடக்கின்றனர். 

Link to comment
Share on other sites

7 hours ago, நிழலி said:

நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன்

இசை கேட்டபடியே இன்னும் ஒரு 500 Steps  நடந்தால் 8 கிலோ மீற்றராகிவிடும் அல்லவா

Link to comment
Share on other sites

32 minutes ago, இணையவன் said:

நன்றி ஜஸ்ரின்,

நீங்களும் ஓடுகிறீர்கள் என்பதை அறிவது மகிழ்ச்சியாக உள்ளது. வாரத்தில் 25 மைல்கள் ஓடும் நீங்கள் நிச்சயமாக மரதன் ஓட வேண்டியவர். பயிற்சியின்போது கால் வலிகள் ஏற்படுவது சாதாரணம். என்ன விதமான வலி என்பது தெரியவில்லை. ஓட முடியாது என்று உணர்ந்தால் நிறுத்தி ஓய்வு எடுக்கத் தயங்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. 

மரதன் ஓடுவதற்கு வயது கால எல்லை தடையில்லை. விரைவில் நீங்களும் மரதன் ஓட வாழ்த்துகள்.

இணையவன், ஓட்டம் என்பது உடற்பயிற்சிக்காக என்பது மாறி ஒரு addiction ஆகி விட்டது எனக்கு! 

கடந்த 20 ஆண்டுகளாக தூர ஓட்டம் செய்கிறேன். கடந்த 5 வருடங்களாக வாரம் 25 முதல் 30 மைல்கள் என்று ஓடிக் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு 46 வயது முடிந்த கையோடு ஒரு முழங்கால் வலியோடு ஓய்வெடுத்து விட்டு மருத்துவரைப் பார்த்தேன். வலது முழங்காலில் அதிக ஓட்டம் காரணமாக மிதமான அழற்சி - இனி ஓடுவதைக் குறைக்க வேண்டுமென்று ஆலோசனை சொன்னார். ஒரு மாதம் ஓய்வெடுத்து வேறேதாவது செய்வோமா என்று முயன்றேன் - எதுவும் அந்த ஒரு மணி நேர ஓட்டம் தரும் எண்டோர்பின் கிக்கைத் தரவில்லை. 

இப்போது புதிதாக trail running ஆரம்பித்திருக்கிறேன். ஒரு தரமான trail running சப்பாத்தும், காட்டில் பூச்சி புழு அண்டாமல் காக்கும் ஸ்ப்றேயும் எடுத்துக் கொண்டு காட்டில் சனி -ஞாயிறு காணாமல் போய் விடுவேன்.  2 நாட்கள் ட்ரெயில் ஓட்டத்திலும்  2 - 3  நாட்கள் சாதாரண தெரு ஓட்டத்திலும் வாரம் 25 மைல்களைக் கடந்து கொண்டிருக்கிறேன்!  

47 minutes ago, நிழலி said:

அதுக்கு முதல் ஸ்பரிச உணர்ச்சியின் மகிமை பற்றி ஒன்று எழுதுவதாக சொன்னீர்களாம், ஏன் இன்னும் எழுதவில்லை என்று பிழம்பார் கவலையில் கேட்கின்றார்.

😂எழுதுவேன் எழுதுவேன்..நேரம் தான் பிரச்சினையாக இருக்கு!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

சென்ற ஆண்டு 46 வயது முடிந்த கையோடு ஒரு முழங்கால் வலியோடு ஓய்வெடுத்து விட்டு மருத்துவரைப் பார்த்தேன்.

அப்ப  யாழ்களத்திலே வயது குறைந்தவர் நீங்களாகத்தான் இருக்கனும் .

Link to comment
Share on other sites

6 minutes ago, பெருமாள் said:

அப்ப  யாழ்களத்திலே வயது குறைந்தவர் நீங்களாகத்தான் இருக்கனும் .

😂பெருமாள், பையன், நன்னியர் என்று ஒரு இளவட்டப் பட்டாளமே இருக்கிறதே? நாங்கள் முந்தின ஜெனரேசன்!

Link to comment
Share on other sites

5 minutes ago, Justin said:

இணையவன், ஓட்டம் என்பது உடற்பயிற்சிக்காக என்பது மாறி ஒரு addiction ஆகி விட்டது எனக்கு! 

கடந்த 20 ஆண்டுகளாக தூர ஓட்டம் செய்கிறேன். கடந்த 5 வருடங்களாக வாரம் 25 முதல் 30 மைல்கள் என்று ஓடிக் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு 46 வயது முடிந்த கையோடு ஒரு முழங்கால் வலியோடு ஓய்வெடுத்து விட்டு மருத்துவரைப் பார்த்தேன். வலது முழங்காலில் அதிக ஓட்டம் காரணமாக மிதமான அழற்சி - இனி ஓடுவதைக் குறைக்க வேண்டுமென்று ஆலோசனை சொன்னார். ஒரு மாதம் ஓய்வெடுத்து வேறேதாவது செய்வோமா என்று முயன்றேன் - எதுவும் அந்த ஒரு மணி நேர ஓட்டம் தரும் எண்டோர்பின் கிக்கைத் தரவில்லை. 

இப்போது புதிதாக trail running ஆரம்பித்திருக்கிறேன். ஒரு தரமான trail running சப்பாத்தும், காட்டில் பூச்சி புழு அண்டாமல் காக்கும் ஸ்ப்றேயும் எடுத்துக் கொண்டு காட்டில் சனி -ஞாயிறு காணாமல் போய் விடுவேன்.  2 நாட்கள் ட்ரெயில் ஓட்டத்திலும்  2 - 3  நாட்கள் சாதாரண தெரு ஓட்டத்திலும் வாரம் 25 மைல்களைக் கடந்து கொண்டிருக்கிறேன்!  

😂எழுதுவேன் எழுதுவேன்..நேரம் தான் பிரச்சினையாக இருக்கு!

நான் பயிற்சி எடுக்கும் கிளப்பில் உள்ள சிலருக்கும் இந்த addiction பிரச்சனை உள்ளது. சரியான ஓய்வெடுத்து காலைக் குணப்படுத்தாமல் ஓடி மறுபடி வலியை உண்டாக்கிக் கொள்வார்கள். இந்த வருட ஆரம்பத்தில் 2 நாட்கள் தொடர்ச்சியாக முழங்காலில் நின்றபடியே வீட்டுத் திருத்த வேலை ஒன்று செய்ததால் முழங்காலில் சவ்வு சிதைவடைந்து ஓட முடியாமல் போனது. வைத்தியர் முழங்காலில் ஊசி போட்டு 15 நாளைக்கு அசையக் கூடாது என்று சொன்னார். அதன்பின் ஓடலாமா என்று கேட்டதற்கு, நிச்சயமாக ஓட வேண்டும் என்று சொன்னார். நான் நன்றாகக் குணமாகிய பின்னரும் ஒரு மாதம் மேலதிகமாக ஓய்வெடுத்து அதன்பின் ஓடினேன். trail running உங்களுக்குத் தோதாததாகப் படவில்லை. இடைக்கிடை சைக்கிள் ஓட்டம் அல்லது நீச்சல் நல்ல பலனைத் தரும்.

'எப்ப பாத்தாலும் ஓட்டம்' என்று வீட்டில் யாரும் முணுமுணுக்காவிட்டால் நானும் சனி ஞாயிறில் காணாமல் போவேன் 🤣

2 minutes ago, Justin said:

😂பெருமாள், பையன், நன்னியர் என்று ஒரு இளவட்டப் பட்டாளமே இருக்கிறதே? நாங்கள் முந்தின ஜெனரேசன்!

இள வட்டங்கள் இருந்தால் என்ன ? வயது என்பது வெறும் இலக்கங்களே என்று எங்கள் பாட்டில் இருப்போம். 😀

16 minutes ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் இணையவன்.

நன்றி ஈழபிரியன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஓட்டம் ஓட்டம் என்று சொல்கிறீர்கள் சைக்கிள் ஓட்டம் எப்படி ?

கொஞ்ச ஊர் பொடியன்கள் 4 , 5 பேர் செட் ஆகி சமர் நேரம் 10 கிலோமீட்டர் சைக்கிள் ஓடுவோம்... என்ன ஆளாளுக்கு கையில 4 பியர் கானையும் கொண்டல்லே  வாறாங்கள். 😂
 
Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

14 minutes ago, Sasi_varnam said:

ஓட்டம் ஓட்டம் என்று சொல்கிறீர்கள் சைக்கிள் ஓட்டம் எப்படி ?

கொஞ்ச ஊர் பொடியன்கள் 4 , 5 பேர் செட் ஆகி சமர் நேரம் 10 கிலோமீட்டர் சைக்கிள் ஓடுவோம்... என்ன ஆளாளுக்கு கையில 4 பியர் கானையும் கொண்டல்லே  வாறாங்கள். 😂
 
பியர் கான் இல்லாவிட்டால் 4, 5 பேர்கூட செட் ஆகாது என்பது சைக்கிளில் 10 கிலோமீற்றர் தூரம் ஓடிவதிலேயே தெளிவாகிறது. ஆகவே சாதகமாகத்தான் இருக்கும். எதுக்கும் ஜஸ்ரின் எழுதட்டும், மேற்கொண்டு முடிவு பண்ணுவம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

நன்றி நிழலி.

நடக்கும்போது 5ஆவது கிலோ மீற்றரில் 5 நிமிடங்கள் உங்களால் முடிந்த அளவு மெதுவாக ஓடிப் பாருங்கள்.

கால்களுக்குப் பிரச்சனை வரும் என்பது தவறான அபிப்பிராயம். எதுவும் அளவுக்கு மீறினாக் கூடாது. மேலே குறிப்பிட்டபடி ஓட்டம் எலும்புகளுக்கும் நார்களுக்கும் புத்துயிர் அளித்து உறுதியாக்கும். இதைத் தவிர உங்கள் இதயம் உறுதியாகும். 50 வயதின்பின் வாழ்க்கையின் இன்னொரு பகுதி ஆரம்பமாகிறது. அனுபவிக்க வேண்டும். 🙂

லவ்யூ.. எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்…  எண்பதுகளில் வரவேண்டிய சிந்தனைகளுடன் இருக்கிறேன்.. எல்லாம் பொய் இந்த வாழ்க்கையே சுத்தம் பத்தம் ஏன் நான்கூட ஒருநாள் இல்லாமல் போய்விடுவேன் என்ற உண்மையை முப்பதுகளிலேயே உணர்ந்தபின் இன்றுவரை பிரக்ஞை பிடித்தவன் போல் வாழ்ந்துகொண்டிருக்கும்போது உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரையும் வாழ்வோம் என்று இந்த வாழ்க்கையின்மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறீர்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 8/4/2021 at 16:23, shanthy said:

உங்களுக்கு Fersensporn என நினைக்கிறேன். மருத்துவ ஆலோசனை பெறுங்கள். 

எல்லா சோதனைகளும் செய்து பார்த்தாச்சு ஒரு பிரச்சினையும் இல்லை. கால் நோ குறையவில்லை. முழங்காலில் ஸ்ரோரைட் ஊசி போட்டார்கள் அதன் பின்பும் எந்த மாற்றமும் இல்லை. நின்றால் மட்டும் நோ .படுத்தாலோ .இருந்தாலோ நோவதில்லை. முழங்காலுக்கு கீழே தான் நோகிறது.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் இணையவன்
தொடர்ந்து உங்கள் பாதையில் செல்லுங்கள்
எத்தனையாவது என்பதைவிட என்ன செய்தொம் என்பதே முக்கியம்

எனது ஊர் அண்ணா ஒருவரும் இதில் கலந்துகொண்டிருந்தார் (சிவா அண்ணை) 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விடாமுயற்சிக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.  . 

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

நான் மட்டும் இதில் கலந்து கொண்டிருந்தால், 29,999 இடத்தில் வந்து இருப்பேன். 

பாரட்டுகள் இணையவன். நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன் (காலநிலை ஒத்துழைத்தால்), ஆனால் என்னால் ஓடுவதை கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அத்துடன் ஓடுவதால் கால்களுக்கு பிரச்சனை பின்னாட்களில் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கின்றது (46 வயதின் பின் 'பின்னாட்கள்' என்று ஒன்று இருக்குதா என்ற கேள்வியும் உள்ளது)

எத்தனையாவது இடத்தில் வருவது என்பதை விட இந்த மாதிரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, எங்களது ஆரோக்கியத்தின் மீதான அக்கறை ஆர்வம் போன்றவைதான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று நிழலி அண்ணா.. 

இங்கே எழுதிய கருத்துக்கள் பார்க்கும் பொழுதுதான் விளங்கியது இந்த பதிவு எத்தனை பேரை ஊக்குவித்திருக்கிறது என்று..

எனக்கு ஓட்டப்பயிற்சியில் நாட்டமில்லை..ஆனால் இங்கே வந்த பொழுதில் நீச்சல் வகுப்பில் சேர்ந்து நீந்தக்கற்றுக்கொண்டேன்.. மிகவும் பிடித்த ஒன்று…COVIDனிலால் இடைநிறுத்தவேண்டியதாயிற்று.cycling 🚴‍♀️ செய்வதுண்டு(அவ்வப்பொழுது).. அதே நேரம் வாரத்தில் 3 நாட்கள் Zumba classes உள்ளது..இதற்கு மேல் முடியாது என்பதால் இதுதான் எனது உடற்பயிற்சி.. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

y-PMBP16713-original.jpg

Résultats Google Recherche d'images correspondant à http://vincentloy.files.wordpress.com/2… | Congratulations images, Congratulations pictures, Congratulations gif

வாழ்த்துக்கள் இணையவன்.  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

அதுக்கு முதல் ஸ்பரிச உணர்ச்சியின் மகிமை பற்றி ஒன்று எழுதுவதாக சொன்னீர்களாம், ஏன் இன்னும் எழுதவில்லை என்று பிழம்பார் கவலையில் கேட்கின்றார்.

அவர் முதலில் பியர் பற்றி எழுதட்டும், பியர் அடிச்ச பின் ஸ்பரிசம் வந்தால்தான் ஒரு கிக் இருக்கும்......!  😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இணையவன் said:

'எப்ப பாத்தாலும் ஓட்டம்' என்று வீட்டில் யாரும் முணுமுணுக்காவிட்டால் நானும் சனி ஞாயிறில் காணாமல் போவேன் 🤣

நீங்கள் ஓட்டத்தில் பைத்தியமாய் இருக்கிறியள் எண்டு நல்லவடிவாய் தெரியுது. தேகாரோக்கியத்துக்கு உடற்பயிற்சி செய்யிறது வேறை.வாழ்க்கை முழுக்க உடற்பயிற்சி எண்டு அலையுறது வேறை.....😁

Link to comment
Share on other sites

On 21/10/2021 at 07:33, இணையவன் said:

ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது.

3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். 

இதோ சில படங்கள் 🙂

classement.png

y-IMG_0904.jpg

y-PMAA6472-original.jpg

y-PMBP16713-original.jpg

பின்னால் ஓடியவர்கள், நின்றவர்களைத் தான் திரும்பி பார்க்க முடியவில்லை, முன்னுக்கு ஒயிலாக ஓடுகின்றவ மயிலின் பெயர், விலாசம் அல்லது ஆகக் குறைந்தது தொலைபேசி இலக்கமாவது வாங்கினீர்களா? 😄

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.