Jump to content

இணையத்தில் கசிந்த 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள்... ஃபேஸ்புக் சொல்வது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் கசிந்த 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள்... ஃபேஸ்புக் சொல்வது என்ன?

ஃபேஸ்புக் | Facebook

ஃபேஸ்புக் | Facebook

இணையத்தில் கசிந்த தகவல்களில் பயனர்களின் தகவல்களுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் மற்றும் துணை நிறுவனர்கள் சிலரின் தகவல்களும் கசிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

500 மில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்ஸன் ராக்-ன் (Hudson Rock) துணை நிறுவனரான ஆலன் கல் (Alon Gal) கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்.

106 நாடுகளைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனர்களின் பெயர், மொபைல் எண், இடம், பிறந்த தேதி மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 6 மில்லியன் இந்திய ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களும் இதில் அடக்கம்.

 

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கையில், "இந்தத் தகவல்கள் 2019-க்கு முன் ஏற்பட்ட பாதிப்பின் மூலம் ஹேக்கர்கள் சேகரித்திருக்கலாம். அந்தப் பாதிப்பு 2019-ம் ஆண்டே சரிசெய்யப்பட்டுவிட்டது. அதன் பின் எந்தத் தகவல் கசிவும் ஏற்படவில்லை. தற்போது இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் சில வருடங்களுக்கு முன்னர் கசிந்த தகவல்களே!" எனத் தெரிவித்துள்ளது.

மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg
 
மார்க் சக்கர்பெர்க் | Mark Zuckerberg

"சில வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட தகவல்களாக இருந்தாலும், அவை தற்போது இலவசமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாகப் பயனர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். தகவல்கள் முன்னரே திருடப்பட்டுவிட்டதால் ஃபேஸ்புக்கால் எதுவும் செய்ய முடியாது, எனினும் பயனர்களுக்கு இது குறித்த எச்சரிக்கை செய்யலாம். மேலும், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பயனர்கள் தங்கள் தகவல்களைக் கொடுக்கிறார்கள் எனில் அவற்றை மிகுந்த பாதுகாப்புடன் ஃபேஸ்புக் கையாள வேண்டும், அலட்சியமாக இருக்கக் கூடாது", இவ்வாறு ஆலன் கல் இந்தப் பிரச்னை குறித்து தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கசிந்த தகவல்களில் பயனர்களின் தகவல்களுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் மற்றும் துணை நிறுவனர்கள் சிலரின் தகவல்களும் கசிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து ஃபேஸ்புக் தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
 
 
https://www.vikatan.com/technology/tech-news/533-million-facebook-users-data-leaked
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் முகநூலில் கொடுக்கப்பட்ட அத்தனை தகவல்களும் போலியானவை நான் கவலைப்பட போவதில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

என்னால் முகநூலில் கொடுக்கப்பட்ட அத்தனை தகவல்களும் போலியானவை நான் கவலைப்பட போவதில்லை .

உதென்ன பெரிய விசயம்!
நான் இஞ்சை யாழ்களத்திலை குடுத்த தகவல் எல்லாமே பச்சைப்பொய் கண்டியளோ.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உதென்ன பெரிய விசயம்!
நான் இஞ்சை யாழ்களத்திலை குடுத்த தகவல் எல்லாமே பச்சைப்பொய் கண்டியளோ.😁

 

1 hour ago, பெருமாள் said:

என்னால் முகநூலில் கொடுக்கப்பட்ட அத்தனை தகவல்களும் போலியானவை நான் கவலைப்பட போவதில்லை .

 

1 hour ago, குமாரசாமி said:

உதென்ன பெரிய விசயம்!
நான் இஞ்சை யாழ்களத்திலை குடுத்த தகவல் எல்லாமே பச்சைப்பொய் கண்டியளோ.😁

உங்கள். உண்மைத்  தகவல்களைத்தெரிந்து. என்னத்தைச்செய்யமுடியும். ?😛

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.