Jump to content

சீமான் எனும் தமிழ் சாவர்க்கர் - ஆர். அபிலாஷ்

Recommended Posts

தமிழ்நாட்டின் வரலாற்றை தமது விருப்பப்படி சொந்தமாக எழுதிவிட்டு தமது கருத்துக்கு தாம் புனைந்த வரலாற்றை அடிப்படையாக கொள்ளுவது சிறப்பாக உள்ளது. 

கலைஞர் கருணாநிதி இருபதுகள் வரை தெலுங்கராக இருந்து அதன் பின்னரே தமிழராக சிந்திக்க தொடங்கியதாக,  வரலாற்றை புனைந்தால் கருத்து அதற்கேற்ப தான் இருக்கும்.  தனது 18 வயதில் முரசொலி பத்திரிகையையும் 20 வது வயதில் மாணவநேசன் என்ற பத்திரிகையையும் கையெழுத்து பத்திரிகையாக தமிழில்  ஆரம்பித்தவர் கருணாநிதி.  1952 ல் பராசக்தி திரைப்பட வசனத்தையும் 1954 ல் மனோகரா திரைப்பட வசனத்தையும் எழுதுவதற்கு எவ்வளவு தமிழறிவு தேவை என்பதை கூட சிந்திக்காது சீமான் உரைத்த பொய் புரட்டுக்களை  மட்டும் நம்பி தமிழக வரலாற்றை திரித்து கருத்து எழுதுவது அபத்தம். 

கருணாநிதியின் அரசியலில் தவறுகளோ முரண்பாடோ இருக்கலாம். ஆனால் அதற்காக வரலாற்றை திரிக்கவேண்டிய அவசியம் இல்லை. சீமானும் சாதாரண ஏமாற்று தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர்தான். 

Edited by tulpen
 • Like 2
Link to comment
Share on other sites

 • Replies 145
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

MullaiNilavan

எனக்கு உங்களின் பந்தியில் உடன்பாடு இல்லை சில விடயங்களை இந்த பந்தியின் ஊடாக நானும் தெளிவுற்று நீங்களும் தெளிவுபட நட்பு கலந்து பதில் அளிக்க விரும்புகிறேன். திரு சீமான் அவர்கள் திமுக ஒழிப்பே பிரதான

குமாரசாமி

சீமானை மட்டும் நோக்கி சுட்டுவிரலை நீட்டுபவர்கள் ஏன் இதர கட்சிகளின் தவறுகளை/ஊழல்களை பற்றி  கருத்துக்கள் சொல்வதில்லை? ஒரு சில திராவிட கட்சி தலைவர்களால் தமிழை கூட ஒழுங்காக பேச முடிவதில்லையே? அது மட்டும

nedukkalapoovan

இதே யாழ் களத்தில் இதே கிருபன் அண்ணர்.. சீமான் இராமசாமியை கொண்டாடித் திரிந்த போது.. சீமானின் பேச்சுக்களை தேடி தேடி ஒட்டி வந்ததையும் மறக்கக் கூடாது.  இன்று சீமான் தமிழகத்தில் தமிழர் உணர்வை தமிழ் தே

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

தனது 18 வயதில் முரசொலி பத்திரிகையையும் 20 வது வயதில் மாணவநேசன் என்ற பத்திரிகையையும் கையெழுத்து பத்திரிகையாக தமிழில்  ஆரம்பித்தவர் கருணாநிதி.  1952 ல் பராசக்தி திரைப்பட வசனத்தையும் 1954 ல் மனோகரா திரைப்பட வசனத்தையும் எழுதுவதற்கு எவ்வளவு தமிழறிவு தேவை என்பதை கூட சிந்திக்காது சீமான் உரைத்த பொய் புரட்டுக்களை  மட்டும் நம்பி தமிழக வரலாற்றை திரித்து கருத்து எழுதுவது அபத்தம். 

சரியான தகவல்களுக்கு நன்றி. சீமானால் புலம்பெயர் தமிழர்கள் தவறான தகவல்களை காவி திரிபவர்களாக மாறிவருவதை நானும் அறிந்தேன்.
அதில் ஒன்று பழனிசாமி ஒரு அப்பாவி ஏழை விவசாயி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

தமிழ்நாட்டின் வரலாற்றை தமது விருப்பப்படி சொந்தமாக எழுதிவிட்டு தமது கருத்துக்கு தாம் புனைந்த வரலாற்றை அடிப்படையாக கொள்ளுவது சிறப்பாக உள்ளது. 

கலைஞர் கருணாநிதி இருபதுகள் வரை தெலுங்கராக இருந்து அதன் பின்னரே தமிழராக சிந்திக்க தொடங்கியதாக,  வரலாற்றை புனைந்தால் கருத்து அதற்கேற்ப தான் இருக்கும்.  தனது 18 வயதில் முரசொலி பத்திரிகையையும் 20 வது வயதில் மாணவநேசன் என்ற பத்திரிகையையும் கையெழுத்து பத்திரிகையாக தமிழில்  ஆரம்பித்தவர் கருணாநிதி.  1952 ல் பராசக்தி திரைப்பட வசனத்தையும் 1954 ல் மனோகரா திரைப்பட வசனத்தையும் எழுதுவதற்கு எவ்வளவு தமிழறிவு தேவை என்பதை கூட சிந்திக்காது சீமான் உரைத்த பொய் புரட்டுக்களை  மட்டும் நம்பி தமிழக வரலாற்றை திரித்து கருத்து எழுதுவது அபத்தம். 

கருணாநிதியின் அரசியலில் தவறுகளோ முரண்பாடோ இருக்கலாம். ஆனால் அதற்காக வரலாற்றை திரிக்கவேண்டிய அவசியம் இல்லை. சீமானும் சாதாரண ஏமாற்று தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர்தான். 

நீங்கள் ரொமபவே அப்பாவியாக இருக்கிறீர்கள். காசை கொடுத்தால், எழுதிக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள், நம்ம பெயரை போட்டுக்கலாம். இதைத்தான் கலைஞர் செய்தார்... என்று நம்ம ஆளு சொல்லி இருக்கிறாரே, வாசிக்க வில்லையா?

அருந்ததி ராய், பிரிட்டனின் புகழ் மிக்க bookers prize வெற்றியாளர். ஆங்கிலேயர்களுடன் போட்டி போட்டு எழுத, எவ்வளவு ஆங்கில அறிவு இருக்கவேண்டும். ஆகவே அவரை வெள்ளை இன பெண்மணியாக கருதலாமா?

அருந்ததி ராய், ஆங்கிலம் நன்கறிந்த இந்தியர் என்பது போலவே, கருணாநிதி, தமிழ் நன்கறிந்த தெலுங்கர் என்பதில் என்ன சிக்கல்?

****

திருட்டு தனமா டிக்கெட் இல்லாமல் சென்னை வந்தவர் (என்று அவரே சொன்னது) குடும்பம், எழுதியே இவ்வளவு சொத்து சேர்த்தது என்று மனசாட்சியுடன் சொல்வீர்களா?

குடும்ப கஷடத்தில் நாடகம் நடிக்க வந்த, கனிமொழி அம்மா,  ராசாத்தி என்னும் பெண்ணை, பலாத்காரம் செய்து, பிள்ளைதாச்சி ஆக்கி தப்பிக்க முனைந்தது. கூடவே நடித்த ஆச்சி, அண்ணாத்துரைக்கு முறையீடு செய்ததால், துணைவி ஆக்கியது எல்லாம், நாலு எழுத்து எழுதினால், சரியாகி விடுமா?

கண்ணதாசன் எழுதும் சுஜ சரித்திரத்தில், ஏழ்மைக்காக உடலை விற்ற, விலைமாதுவிடம் போய், பல மணிநேரம்  இருந்து விட்டு, நல்லா ஒத்து உழைக்கவில்லை என்று பொய் சொல்லி, காசு கொடுக்காமல் கிளம்பிய கேவலமும் நடந்ததாக சொல்லி உள்ளாரே.

எமக்கு செய்ததை விடுவோம். இவர்களை ஒரு மனித ஜன்மமாக கருத முடியுமா?

****

இலங்கை மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலையில் அமெரிக்க மிஷனரி குடும்பத்தில் பிறந்த 14 வயது வரை அங்கேயே படித்த வெள்ளையர் ( William Chester Minor) இங்கிலாந்து வந்து கொலை குற்றசாட்டில் சிறையில் இருக்கும் போது, தான் இலங்கையில் படித்த அறிவை வைத்து, 10,000 சொற்களை ஆங்கில அகராதிக்கு வழங்கினார்.

ஆங்கில மொழிக்கு அவர் செய்த சேவைக்காக, தனது அறையினை திருடும் நோக்கில் உடைத்தார் என்று, இளைஞர் ஒருவரை தேடிப்போய் சுட்டு செய்த கொலை,  இல்லாமல் போய் விடுமா என்ன?  

அல்லது, அவர் மானிப்பாயில் பிறந்ததால், ஆங்கிலத்துக்கு சேவை செய்த தமிழர் என்பீர்களா?

Edited by Nathamuni
 • Thanks 1

ஐயா,
எனது சொல்லாடலை ஒரு தடவை பாருங்கள் “20 வயதுகளில் தமிழ் சார்ந்து”.

அதன்பின் நீங்கள் குறிப்பிட்டதுபோல் பின் ஊட்டி வாசித்துப் பாருங்கள் உண்மை புலப்படும்,

“20 வயதுகளில் தமிழ் சார்ந்து”.
“தனது 18 வயதில் முரசொலி பத்திரிகையையும் 20 வது வயதில் மாணவநேசன் என்ற பத்திரிகையையும் கையெழுத்து பத்திரிகையாக தமிழில்  ஆரம்பித்தவர் கருணாநிதி”.
 
Link to comment
Share on other sites

57 minutes ago, Nathamuni said:

நீங்கள் ரொமபவே அப்பாவியாக இருக்கிறீர்கள். காசை கொடுத்தால், எழுதிக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள், நம்ம பெயரை போட்டுக்கலாம். இதைத்தான் கலைஞர் செய்தார்... என்று நம்ம ஆளு சொல்லி இருக்கிறாரே, வாசிக்க வில்லையா?

அருந்ததி ராய், பிரிட்டனின் புகழ் மிக்க bookers prize வெற்றியாளர். ஆங்கிலேயர்களுடன் போட்டி போட்டு எழுத, எவ்வளவு ஆங்கில அறிவு இருக்கவேண்டும். ஆகவே அவரை வெள்ளை இன பெண்மணியாக கருதலாமா?

அருந்ததி ராய், ஆங்கிலம் நன்கறிந்த இந்தியர் என்பது போலவே, கருணாநிதி, தமிழ் நன்கறிந்த தெலுங்கர் என்பதில் என்ன சிக்கல்?

****

திருட்டு தனமா டிக்கெட் இல்லாமல் சென்னை வந்தவர் (என்று அவரே சொன்னது) குடும்பம், எழுதியே இவ்வளவு சொத்து சேர்த்தது என்று மனசாட்சியுடன் சொல்வீர்களா?

குடும்ப கஷடத்தில் நாடகம் நடிக்க வந்த, கனிமொழி அம்மா,  ராசாத்தி என்னும் பெண்ணை, பலாத்காரம் செய்து, பிள்ளைதாச்சி ஆக்கி தப்பிக்க முனைந்தது. கூடவே நடித்த ஆச்சி, அண்ணாத்துரைக்கு முறையீடு செய்ததால், துணைவி ஆக்கியது எல்லாம், நாலு எழுத்து எழுதினால், சரியாகி விடுமா?

கண்ணதாசன் எழுதும் சுஜ சரித்திரத்தில், ஏழ்மைக்காக உடலை விற்ற, விலைமாதுவிடம் போய், பல மணிநேரம்  இருந்து விட்டு, நல்லா ஒத்து உழைக்கவில்லை என்று பொய் சொல்லி, காசு கொடுக்காமல் கிளம்பிய கேவலமும் நடந்ததாக சொல்லி உள்ளாரே.

எமக்கு செய்ததை விடுவோம். இவர்களை ஒரு மனித ஜன்மமாக கருத முடியுமா?

****

இலங்கை மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலையில் அமெரிக்க மிஷனரி குடும்பத்தில் பிறந்த 14 வயது வரை அங்கேயே படித்த வெள்ளையர் ( William Chester Minor) இங்கிலாந்து வந்து கொலை குற்றசாட்டில் சிறையில் இருக்கும் போது, தான் இலங்கையில் படித்த அறிவை வைத்து, 10,000 சொற்களை ஆங்கில அகராதிக்கு வழங்கினார்.

ஆங்கில மொழிக்கு அவர் செய்த சேவைக்காக, தனது அறையினை திருடும் நோக்கில் உடைத்தார் என்று, இளைஞர் ஒருவரை தேடிப்போய் சுட்டு செய்த கொலை,  இல்லாமல் போய் விடுமா என்ன?  

அல்லது, அவர் மானிப்பாயில் பிறந்ததால், ஆங்கிலத்துக்கு சேவை செய்த தமிழர் என்பீர்களா?

என்னைத் தெரிந்தவர்கள் அப்பவே கூறினார்கள், நீர் கட்டாயம் தெரிந்தவற்றை எழுதவும். ஆனால் நான் எனக்கு  இருந்த சில வேதனைகளின் பொருட்டு ஒதுங்கியே இருந்தேன். உங்களைப்போல உள்ளுறையும், பொழிப்புரையும் தெரிந்தவர்கள் இருக்கும் பொழுது சடுகுடு வை எப்பொழுது ஆரம்பித்திருக்கலாம்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

நீங்கள் ரொமபவே அப்பாவியாக இருக்கிறீர்கள். காசை கொடுத்தால், எழுதிக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள், நம்ம பெயரை போட்டுக்கலாம். இதைத்தான் கலைஞர் செய்தார்... என்று நம்ம ஆளு சொல்லி இருக்கிறாரே, வாசிக்க வில்லையா?

நான். கருணநிதி பற்றி கதைக்க விரும்பவில்லை. ஆனால்  கருணநாதியின் தமிழ் பற்றி கதைக்க விரும்புகிறேன்.  கருணநிதி  தமிழை நன்றாக வளைத்தார்..தமிழும் நன்றாக  அவருக்கு  வளைத்து கொடுத்து. அவர் செய்த  சரி..பிழை....அனைத்துக்கும் சுத்தத்தமிழ் கொண்டு சாயம் பூசினார்...அவர்  தமிழைப் பயன்படுத்தியாதால் தமிழ்.  நனறு  வளர்த்தது..தமிழ்நாட்டில் தமிழ் வளர்த்ததிற்க்கு  கருணநிதியும் ஒர் காரணம்.  தமிழ் வளர வேணடுமென்று சொன்னால். தமிழ்பேசும்...தெலுக்கன்.   கன்னடன்...மளையாளி....பஞ்சாபி..சிங்களவன்....ஆங்கிலேயன்.   இப்படியானவர்களை. ஆதரியுங்கள்.   இப்படியானவர்களால் தமிழ் வளர்கிறது...

Fachbook இல்.  ஒருவருக்கு. இனிய. பிறந்தநாள் வாழ்த்துக்கள். என  எழுதினேன்..மேலும் தொடர்ந்து பார்த்தபோது....

Happy  Birthday to you. என. பல.  பல.  தமிழர்கள்.  பதிவு. செய்திருத்தார்கள்..இவர்களால். தமிழ் வளருமா? அல்லது அழியுமா? இந்தத்தமிழர்களுடன். ஓப்பிடும்போது.  தெலுங்கன்.  கருணநிதி. பல.  பல.  மடங்கு  உயர்தவன்..அந்தக் கருணநிதிக்கு. தமிழை எழுதிக் கொடுத்து காசு. வேண்டியது  என்பது  தான்  உலகிலே. மிகச்சிறந்த பொய்யாகும்..எதிருங்கள் பிற மொழிகளில் எழுதும்...பெசும். தமிழர்களை.  (தமிழர்களுடன்)😍😍😍😍😝

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

குடும்ப கஷடத்தில் நாடகம் நடிக்க வந்த, கனிமொழி அம்மா,  ராசாத்தி என்னும் பெண்ணை, பலாத்காரம் செய்து, பிள்ளைதாச்சி ஆக்கி தப்பிக்க முனைந்தது. கூடவே நடித்த ஆச்சி, அண்ணாத்துரைக்கு முறையீடு செய்ததால், துணைவி ஆக்கியது எல்லாம், நாலு எழுத்து எழுதினால், சரியாகி விடுமா?

கண்ணதாசன் எழுதும் சுஜ சரித்திரத்தில், ஏழ்மைக்காக உடலை விற்ற, விலைமாதுவிடம் போய், பல மணிநேரம்  இருந்து விட்டு, நல்லா ஒத்து உழைக்கவில்லை என்று பொய் சொல்லி, காசு கொடுக்காமல் கிளம்பிய கேவலமும் நடந்ததாக சொல்லி உள்ளாரே.

எமக்கு செய்ததை விடுவோம். இவர்களை ஒரு மனித ஜன்மமாக கருத முடியுமா?

அப்படியே அதற்கான ஆதாரங்களையும், கண்ணதாசன் சுயசரிதை உட்பட, போட்டால் நல்லது பாஸ்.😀

யாழ் களத்தில் தரமாகவும், சுயமாகவும் எழுதுவது என்பது மித்திரன் ரேஞ்சில் கிசுகிசுக்களையும், கிளுகிளுப்புக்களையும் எழுதும் ரப்லொயிட் பாணி என்று எனக்கும் தெரியாமல் போச்சே.😆 இனி நானும் ஜனங்கள் சுவாரசியமாக வாசிக்க பெரிய அரசியல் தலைவர் முன்னர் எந்த நடிகை உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பரதம் ஆடினார் என்றும் எழுதலாம்😂

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

நீங்கள் ரொமபவே அப்பாவியாக இருக்கிறீர்கள். காசை கொடுத்தால், எழுதிக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள், நம்ம பெயரை போட்டுக்கலாம். இதைத்தான் கலைஞர் செய்தார்... என்று நம்ம ஆளு சொல்லி இருக்கிறாரே, வாசிக்க வில்லையா?

கலைஞர் எழுதியதையே வாசிக்காத மூடர் கூட்டம்தான் அவர் காசைக்கொடுத்து பிறரைக்கொண்டு எழுதி தன் பெயரைப் போட்டுக்கொண்டார் என்று நம்பும். அவர்கள்தான் திருக்குவளை என்ற ஊர் தெலுங்குதேசத்தில் உள்ள ஊர் என்று சொன்னாலும் நம்பும். மதுரையை நாயக்கர்கள் ஆண்டதால் தென் தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி, வேதாரணியம் போன்ற இடங்களுக்கிடையில் உள்ள திருக்குவளையில் தெலுங்கில்தான் பாடசாலைகளில் படிப்பித்தார்கள் என்பதையும் நம்பும்😂🤣

Link to comment
Share on other sites

29 minutes ago, கிருபன் said:

ஆனால் அப்படி அதை நம்பும் மூடர் கூட்டம் சிறிய அளவில் உள்ளது என்பது தெரிகிறது. 🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

ஆனால் அப்படி அதை நம்பும் மூடர் கூட்டம் சிறிய அளவில் உள்ளது என்பது தெரிகிறது. 🤣

அப்படி நீங்களே சொல்லி கொள்கிறீர்கள் .

Link to comment
Share on other sites

கலைஞர் கருணாநிதி மட்டுமல்ல  அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தமது சொந்த கட்சி அரசியல் தான் முக்கியமானது.  அது அனைத்து அரசியல் வாதிகளுக்குமான பொதுவான விதி. 

ஆனால் திமுக ஆட்சியில் 1989 /1990 காலப்பகுதியில் தனது அதிகாரத்தை பாவித்து விடுதலை புலிகளுக்கு பல உதவிகளை செய்தார். இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த அக்காலப்பகுதியில்  பல போராளிகள் தமிழகத்தில் இருந்தார்கள். வைத்திய வசதிகள் பெற்றா்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த போராளிகளே அங்கு இருந்த‍து எனக்கு தெரியும்.  கருணாநிதி தனது அதிகார வரம்மை மீறி உள்துறை அமைச்சு மூலம் அதை செய்தார். புலிப்போராளிகளால் சுப்பக்காக்கா என்று அன்பாக அழைக்கபட்ட திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அன்று காவற்துறைக்கு பொறுப்பான உள்துறை அமைச்சராக அன்று இருந்தார். ஆனால் எதற்காக செய்தார் என்றால் நிச்சயமாக தனது அரசியலுக்காக தான். அது இயல்பானதே. எம்.ஜி.ஆரும் அதை தான் செய்தார். இன்று சீமான் கத்தி திரிவதும் தனது சொந்த அரசியலுக்காக தான். 

ஆனால் பத்மநாபா உட்பட ஈபிஆர்எல் எப்  இன்  20 க்கு மேற்பட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்டபோது அன்றிருந்த மத்திய அரசின் அழுத்தங்களுக்கு திமுக ஆளானது.  புலிகளின் நடமாட்டங்களை கட்டுப்படுத்த தவறிய குற்றச்சாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்ட்டது. இன்று வெட்டுவேன், புடுங்குவேன் என்று கத்தி திரியும்  சீமான் ஆட்சியில் இருந்திருந்தாலு சட்டம் ஒழுங்கை காக்கும் பொறுப்புள்ள முதலைமைச்சசராக என்ன நடவடிக்கையை எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.  அதன் பின்னர் ராஜீவ் கொலை போன்றன திமுகவுக்கு பல நெருக்கடிகளை கொடுத்த‍து. திமுக வை புலி என்று முத்திரை குத்தி பாரிய பிரச்சாரம் செய்து அவரது ஆட்சியை புலிகளை சாட்டியே கலைக்க வைத்து திமுகவை ஈழப்பிரச்சனையில் இருந்து ஒதுங்க வைத்த ஜெயல‍லிதா  பின்னாளில் ஈழத்தாய் என்று சுயலநல மோசடி, பொய் புரட்டு  அரசியல்வாதிகளால் வர்ணிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். 1996 ல் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்ட போது புலிகளுக்கு கருணாநிதி மீண்டும்  உதவுகிறார. என்ற குற்றச்சாட்டி மத்திய அரசுக்கு பல முறை மனு கொடுத்தவர் ஜெயல‍லிதா. 2006 ல் முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியில் தயவில் ஆட்சி நடத்தவேண்டிய நிலையில் இருந்த கருணாநிதி ஈழப்பிரச்சனையை திரும்பி பார்க்கவில்லை என்பது உண்மை. அதற்குள் அவரது சுயநல கட்சி அரசியலை காப்பாற்றும் தேவையும் இருந்த‍து.  ஆனால் போராட்டம் நடத்தியவர்களே பொறுப்பில்லாமல் போராட்டத்தை அவல நிலையை நோக்கி நகர்த்தி  சென்ற நிலையில் அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவதில் பயனில்லை. 

ஈழப்போராட்டத்தை தவறான திசையில் வழிநடத்திய புலம்பெயர் தமிழ் தேசிய மோசடியாளர்கள் தமது தவறுகளை மறைப்பதற்காக தாம் விரும்பிய ரீதியில் தமிழக வரலாற்றை எழுதுவது வேடிக்கை.  ஈழத்தை அமைப்போம் என்று  கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து  கொள்ளையடித்த  திருடர்கள் தான் தமது தவறுகளை மறைப்பதற்காக முழு பழியையும் அடுத்தவர் மீது போட்டு தப்பிக்க பார்கிறார்கள்.  புலம் பெயர் தமிழ் தேசிய திருடர்களிடம் பணத்தை பறி கொடுத்து கடனாளியாகிய பல தமிழ் மக்கள் தமது பிள்ளைகளின் பாடாசாலை செலவுக்கு கூட பணமின்றி  கஷ்ரப்பட்ட அனுபவங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் உண்டு.  கடந்த 10 வருடங்களாக  மாதாந்தம் தமது சம்பளத்தில் மூன்றிலொரு பங்கு பணத்தை வங்கி கடன் மீள்ளிப்பு கட்டணமாக கட்டிவந்துள்ளார்கள். தேசியம், தன்னாட்சி என்று பாசாங்கு செய்தவர்களே இப்படி திருடர்களாக இருக்கும் போது தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளில் ஊழல் உள்ளது சாதாரணமானதே.  அவர்களின் ஊழல்களை இந்த திருடர்கள் அல்லது தமிழ் தேசிய திருட்டுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் கேட்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. 

போராட்டம் நடைபெற்ற போது உண்மையுடன் உதவிய பலர் தமிழ் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ளார்கள். அவர்களை எல்லாம் இன்று முளைத்த சீமானின் பேச்சை கேட்டு துரோகியாக்க வேண்டிய தேவையோ, சீமானின் ஏவல் நாய்களாக செயற்பட்ட வேண்டிய தேவையோ ஈழத்த‍மிழ் மக்களுக்கு இல்லை.  அது எமக்கு நீண்ட கால போக்கில் பின்னடைவையே கொண்டு வரும்.  ஆனால் ஒரு சிறிய கூட்டத்திற்கு அந்த தேவை உண்டு. ஏனென்றால் அவர்கள் மடியில் கனம் இருப்பதால் அதை மறைக்க அது தேவையாக இருக்கலாம். 

Edited by tulpen
 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

நீங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை சவாரி செய்வதை விடுத்து கொஞ்சம்்தலையை வெளியே எடுத்து பார்த்தால் நன்று.

அரசியல் கட்சி ஆட்சி குடும்பம் என்பது வேறு அவை சார்ந்த சில விட்டு கொடுப்புக்களை சகித்துக் கொள்ளலாம்

ஆனால் துரோகத்தை முதுகில் குத்துவதை நரித்தனங்களூடாக ஒரு இனத்தின் அழிவுக்கே காரணமாவது ??

கனக்க தூரம் போகவேண்டும் என்றில்லை கருணாநிதியின் கடைசி உண்ணாவிரதம்??

அதற்காக சொல்லப்பட்ட காரணம்?

அதனால் ஏற்பட்ட விளைவு?

சும்மா மறந்து மன்னிச்சு போறதுக்கானதா அது???

நீங்கள் உங்க கதைகள் எழுதும் விடயத்தை வேறு எங்காவது விற்பது நல்லது? யாழ் களம் அதற்கு உகந்தது அல்ல.

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

நீங்கள் குண்டு சட்டிக்குள் குதிரை சவாரி செய்வதை விடுத்து கொஞ்சம்்தலையை வெளியே எடுத்து பார்த்தால் நன்று.

அரசியல் கட்சி ஆட்சி குடும்பம் என்பது வேறு அவை சார்ந்த சில விட்டு கொடுப்புக்களை சகித்துக் கொள்ளலாம்

ஆனால் துரோகத்தை முதுகில் குத்துவதை நரித்தனங்களூடாக ஒரு இனத்தின் அழிவுக்கே காரணமாவது ??

கனக்க தூரம் போகவேண்டும் என்றில்லை கருணாநிதியின் கடைசி உண்ணாவிரதம்??

அதற்காக சொல்லப்பட்ட காரணம்?

அதனால் ஏற்பட்ட விளைவு?

சும்மா மறந்து மன்னிச்சு போறதுக்கானதா அது???

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது நீங்கள் தான் விசுகு. கருணாநிதியில் உண்ணாவிரதம் என்பது ஒரு அரசில் ஸ்ரண்ட். அதை நான் மறுக்குவில்லை. இன்று சீமான் செய்வதை போல் ஈழப்பிரச்சனையில் தனக்கு அக்கறை இருப்பதாக அன்று  காட்ட கருணாநிதி மேற்கொண்ட அரசியலே அது.  ஆனால் அதற்காக முள்ளிவாய்க்கால் அனர்த‍த்தின் முழு பழியையும் கருணாநிதி மீது போடுவது என்பது ஈழ தேசிய மோசடி திருடர்கள் தமது திருட்டை மறைக்க எடுக்கும் ஒரு பரப்புரை. 

அத்தனை வல்லரசுகளும் எமக்கு எதிராக சண்டை செய்தன என்று ஒரு பக்கம் கொலரை இழுத்து வீரம் பேசிக்கொண்டு மட்டுபடுத்தப்பட்ட அதிகாரங்களை கொண்ட ஒரு மாநில முதலமைச்சர்  மீது பழிபோடுவது தான் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் அரசியல். 

துரோகம் என்று எதை சொல்லுகின்றீர்கள். தமிழீழம் என்ற தீர்மானத்தை கருணாநிதி எடுத்தாரா?  அல்லது ஈழ போராட்ட  அரசியல் முடிவுகளில் அவர் தலையிட்டாரா?  நாமே போராடி எமது அரசியல் தவறால் தோல்வியடைந்து விட்டு அடுத்தவன் மீது பழிபோடுவது நேர்மையற்ற செயல். 

Edited by tulpen
Link to comment
Share on other sites

On 8/4/2021 at 11:37, கிருபன் said:

பொருளாதார திட்டத்தில் விவசாயம் தவிர்ந்த திட்டங்கள் சொல்லியிருக்கின்றாரா? கார் தயாரிக்கும் தொழிற்சாலை, கப்பல் கட்டும் தொழிற்சாலை இப்படி பாரிய திட்டங்கள் எதுவுமில்லை. அத்தோடு திட்டங்கள் போட்டால் மட்டும் போதாது. அவற்றை நிறைவேற்ற பட்ஜெற் தேவையல்லவா. பணம் எப்படி வரும் என்று சொல்லாத திட்டங்கள் பேப்பரில்தான் இருக்கும். பலாப்பழம் விற்ற காசும், பால் விற்ற காசும் பத்தாது.

கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற பொல்பொட் அமுல்படுத்திய கட்டாய உழைப்புக்கும் சீமானின் பொருளாதார சிந்தனைக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அப்படியே ‘’தன்னலமற்ற அன்பான சர்வாதிகார, ஊழலற்ற ஆட்சியை’’ தமிழ் நாட்டில் ஸ்தாபிக்கப்போவதாக சீமான் கூறி வருகின்றார். அது என்ன அன்பான சர்வாதிகாரம்?

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, tulpen said:

குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது நீங்கள் தான் விசுகு. கருணாநிதியில் உண்ணாவிரதம் என்பது ஒரு அரசில் ஸ்ரண்ட். 

இதைத்தான் சொல்கிறேன் அது தந்த வலி மறக்க மன்னிக்க கூடியது அல்ல.

உங்களுக்கு விருப்பமானவர்கள் செய்தால் அதை ஸ்ரண்ட் என்று கடந்து போகக்கூடியதல்ல 

அதை ஸ்ரண்ட் என்று மற்றவர்களும் செய்கிறார்கள் தானே என்று கடந்து போகும் உயரத்தில் கருணாநிதி இருக்கவில்லை. அவர் செய்ய வேண்டியது இல்லை அந்த மக்களின் விருப்பத்திற்கு கூட அனுமதிக்கவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வலியும் அந்த முதுகில் குத்துதலும் புரிய வாய்ப்பில்லை.

டொட். 

8 minutes ago, இசைக்கலைஞன் said:

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

ரிக்கற்றுக்கு காசில்லாமல் ரயிலில் வந்த கருணாநிதியால் உலக பணக்காரர்கள் வரிசையில் வரமுடிந்ததை கண்கூடாக காண்கிறோம் ஆனால் அதே மாநிலத்தில் எமது வளங்களை பயன்படுத்தி சொந்த காலில் நிற்போம் என்றால் பணம் எப்படி வரும் என்று சந்தேகிப்போம். 

Edited by விசுகு
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இசைக்கலைஞன் said:

பணம் எங்கிருந்து வரும் என கேட்டார் கிருபன்.

நிலையான உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர் பெறச்செய்ய கூட்டிணைவு நிறுவனங்களை உருவாக்கி தமிழ் தேசிய முதலாளிகளை உருவாக்கும் திட்டத்தை கொடுத்துள்ளார்கள். இதை போன்றதொரு நடவடிக்கை கனேடிய நடுவண் அரசினாலும் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக Cameco Corporation யுரேனிய அகழ்வில் ஈடுபட்டுள்ளது. மேலும் உலக வங்கி போன்றவற்றின் கடன்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

வணக்கம் இசை,

“வந்தேறி” முதலாளிகளை ஓட ஓட விரட்டி விட்டு, தமிழ் முதலாளிகளை பிரதீயீடு செய்து, பின்னர் சர்வதேச நாணய நிதிநிறுவனம், உலக வங்கி போன்றனவற்றிடம் இருந்தும் கடன் வாங்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாம் என்று சொல்கின்றீர்கள்.

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றன எத்தகைய நிபந்தனைகளைக் கொடுக்கும், அவை எவ்வாறு மேற்கு நாடுகளின் பொருளாதார நலன் சார்ந்து இருக்கும் என்று ஒரு கருத்து மேலே வைத்திருந்தேன். கவனிக்கவில்லைப் போலுள்ளது.

பால்மா தொழிற்சாலை கட்டினால்கூட, தங்கள் பால்மாவை குறைந்த விலையில் விற்கவேண்டும் என்று இந்த நிறுவனங்கள் நிபந்தனை வைக்கும். அதுபோல பால்மாவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் வரி விதிப்பார்கள். 

இல்லை என் வழி தனி வழி என்றால் வெனிசுவேலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தாலும் வறிய நாடாக மாற்றுவார்கள்!

இதெல்லாம் நன்றாகவே நாம் தமிழர் பொருளாதார நிபுணர்களுக்கு தெரியும்.

 • Like 1
Link to comment
Share on other sites

On 5/4/2021 at 09:20, கிருபன் said:

348DAD88-A8BD-41FC-A691-3E77E90AA8D9.jpeg
 
D768A66F-7CFD-4627-8951-823F3C2614A1.jpeg
 
எனக்கு சீமானின் மேடை உடல் மொழி, பேச்சுத்திறன், அவருடைய சூழலியல், மாநில தன்னுரிமை குறித்த கருத்துக்கள் பிடிக்கும் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். திமுக எதிர்ப்பை அவர் கூவிக்கூவி விற்பதாலும் எனக்கு அவர் மீது கோபமில்லை. திமுக ஒழிப்பை அவர் தன் இலக்காகவும் வைக்கலாம். ஒரு கட்சியின் இலக்கு என்கிற விதத்தில் தப்பில்லை. ஆனால் இந்த மேற்பூச்சுகளை சுரண்டி எடுத்து விட்டால் சீமானிடம் ஒன்றுமில்லை என்பதே பிரச்சனை. இந்த புரட்சிகர கருத்துக்களும் சீமானுடைய சொந்த கருத்துக்கள் அல்ல என்பதே பிரச்சனை. அவர் கல்வி, வேலை வாய்ப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு வைக்கும் மாற்றுகள் பற்றி பேசும் போது அவருடைய போதாமை, அவருக்குள் ஒளிந்திருக்கும் சமூக, பொருளாதார அறியாமை வெளிப்படுகிறது என்பதே பிரச்சனை. அதை விட ஆகப்பெரிய பிரச்சனை ஜனநாயக ஆட்சிமுறையில் அவருக்கு அடிப்படையிலேயே நம்பிக்கை இல்லை என்பது. இந்த சுவாரஸ்யமான வெறும் பேச்சால் அவர் இளந்தலைமுறையினரில் அரசியல் புரிதலோ சமூக வரலாற்று வாசிப்போ முதிர்ச்சியோ இல்லாதவர்களை ஈர்த்து வருகிறார், அவர் எதிர்காலத்தில் ஒரு கவனிக்கத்தக்க சக்தியாக வளர்ந்து விடலாம், (கமலைப் போன்றே) எதிர்காலத்தில் பாஜகவுக்கான கலாச்சார களத்தை அவர் தயாராக அமைத்திடலாம் என நினைக்கும் போது எனக்கு நிஜமாகவே கவலை ஏற்படுகிறது.

சீமானின் கல்விக் கொள்கைக்கு முதலில் வருகிறேன். அவர் அரும்பு, மொட்டு, மலர் என ஒரு திட்டத்தை வைக்கிறார். இது மேம்போக்காக கேட்க ஏதோ மனிதாபிமான சிந்தனை கொண்ட புரட்சித் திட்டம் எனத் தோன்றும். ஆனால் அவருடைய பேச்சுக் கவர்ச்சியில் இருந்து வெளிவந்து என்னதான் அவர் சொல்ல வருகிறார் என ஊன்றி கவனித்தால் இது எவ்வளவு அபத்தமான ஆபத்தான கல்விக் கொள்கை என புரியும்:

 ஐந்தாம் வயது முதல் ஒரு குழந்தை முறையான கல்வியை ஆரம்பித்தால் போதும் என்கிறார். சரி தான். அடுத்து தான் விவகாரமே துவங்குகிறது - ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார். அதாவது இந்த பாடங்களை electivesஆக மாற்றலாம் என்கிறார். அதுவும் தேர்வில்லாத தேர்வுப்பாடங்கள். கேட்க நன்றாக இருக்கிறதல்லவா, ஆனால் இங்கே தான் சிக்கலே. ஒரு குழந்தைக்கு ஆங்கிலம் வேண்டாம் என்றால் தமிழ் மட்டுமே படிக்கலாம். கணிதம், அறிவியல் கூட தவிர்த்து விடலாம் என்பது சீமானின் கொள்கை. எனில் நாளை இந்த குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படைகள் எப்படி புரியும்? நியூட்டனின் மூன்றாவது விதி என்றால் பெயரளவில் கூட புரியாமல் போய் விடும். கேல்குலேட்டர் இல்லாமல் சின்ன பெருக்கல் போட தெரியாமல் போய் விடும். வரலாறு படிக்காத ஒரு குழந்தைகளிடம் நாம் அனைவரும் ஆரியர்கள் என சங்கிகள் சொன்னால் அதை மறுத்துப் பேசும் அறிவு கூட இராது. தமிழ் மொழியின் வளர்ச்சியில் மாற்று மொழியை தாய்மொழியாய் கொண்டவர்களின் பங்களிப்பு என்னவென்று தெரியாது. பொன்னியின் செல்வன் படித்தால் அதில் ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி மதப்போர் புரிகிறான் எனப் புரியாது. ஆங்கிலத்தில் பேசவோ எழுதவோ தெரியாத ஒரு குழந்தைக்கு இந்த உலகின் அறிவுச்செல்வங்கள் எப்படி போய் சேரும்? இதை ஏன் சீமான் வலியுறுத்துகிறார் என்றால் தன்னை கேள்வி கேட்காத ஒரு மூடக் கூட்டத்தை அவர் உருவாக்க விரும்புகிறார் என்பதும், அவருக்கு போதுமான முறையான கல்வி கிடைக்காததன் போதாமை இருக்கிறது என்பதையுமே காரணங்களாக காண வேண்டி உள்ளது. ஏனென்றால் மண்டையில் மசாலா உள்ள எந்த கல்வியாளனுமே இந்த அரும்பு, மொட்டு பின்னாத்தல்களை ஏற்க மாட்டான்.

சீமான் அடுத்து சொல்வதைப் பாருங்கள்:

 சின்ன வயதிலேயே என்ன திறனை, ஆர்வத்தை ஒரு குழந்தை வெளிப்படுத்துகிறதோ அதில் மட்டுமே அக்குழந்தைக்கு பயிற்சி அளிக்க வேண்டும், வேறு விசயங்களில் அதை ஈடுபடுத்த அவசியமில்லை என்கிறார். இதற்கு அவர் உதாரண்மாக காட்டுவது சச்சினையும் ஏ.ஆர். ரஹ்மானையும். ரஹ்மான் அடிப்படை பள்ளிக்கல்வி பெற்றவர். நவீன காலத்தின் அனுகூலங்களை அனுபவித்து தன் இசையை விரிவுபடுத்தியவர். அவரும் சரி, சச்சினும் சரி விதிவிலக்குகள். ஒரு குழந்தை சின்ன வயதில் பாட்டில் ஆர்வம் காட்டுகிறது என்பதற்காக பாட்டு மட்டுமே பயின்றால் போதும் என வளர்ப்பது ஆபத்தானது - ஏனென்றால் ஒருவருடைய திறன் என்பது வெளிப்பட்டு, அதில் முழுமையான ஈடுபாடும் தோன்ற ஒரு குழந்தைக்கு பதின்வயதைத் தாண்ட வேண்டி வரலாம் என உளவியல் கூறுகிறது. எட்டு வயதில் இசையில் ஆர்வம் காட்டும் ஒரு குழந்தை பதிமூன்று வயதில் விமானப் பயணியாக விரும்பலாம். பதினாறு வயதில் நிர்வாகவியல் படிக்க விரும்பலாம். அப்போது என்ன செய்வீர்கள்? அதுவரை வேறெதையுமே படிக்காத அந்த குழந்தையின் நிலை என்னவாகும்? அம்போவென தெருவில் விட்டு விடுவீர்களா?

இதே பரிந்துரையைத் தான் பாஜகவின் புதிய கல்விக்கொள்கையும் வைக்கிறது - என்ன தேர்வுகளை சீமான் தவிர்க்கிறார், அதைத் தவிர அவருக்கும் சங்கிகளின் கல்விக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. இதை அவர் குறிப்பிட்டு பெருமைப்பட்டு வேறு கொள்கிறார். கேவலமாக இல்லையா? மேலும் சங்கிகளின் குலக்கல்வி பரிந்துரையையும் சீமான் வேறுவடிவில் (தொழிற்கல்வி) முன்வைக்கிறார்.

அடுத்து சீமானின் வேலை வாய்ப்பு, வணிக, உற்பத்தி கொள்கைகளுக்கு வருவோம். இங்கு தான் அந்த பிரசித்தமான ஆடு, மாடு வளர்ப்பு கொள்கை வருகிறது. தமிழர்களின் பூர்வீக தொழில்களுக்கு நாம் மீள வேண்டும் என்கிறார். அது என்ன? கடலை மிட்டாய் செய்வதில் இருந்து பயிர்களை விளைவிப்பது வரை குறிப்பிட்டு இவற்றை செய்து வெளிநாட்டுக்கு உற்பத்தி செய்தால் நாம் பல மடங்கு வளர்ச்சியை பெறலாம் என்கிறார். இதற்கெல்லாம் சீமானுக்கு எந்த புள்ளிவிபர ஆதாரமும் இல்லை. தமிழ் நாட்டில் இருந்து பல லட்சம் கோடிகளுக்கு கடலை மிட்டாய், நீராகாரம், வேம்புக்குச்சி போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ய எந்த வெளிநாட்டு எம்.என்.சியும் இன்னும் அவரை அணுகியதாக தெரியவில்லை. அவர் பாட்டுக்கு அடித்து விடுகிறார். யாரும் அறிவுசார் வேலைகளுக்கு போக வேண்டியதில்லை, கார் தொழிற்சாலைகளை வெளியேற்றுவோம், இங்கு எந்த அயல் தொழில்களுக்கும் இடமில்லை, “அண்ணாமலை”, “சூரிய வம்சம்” பாணியில் பால்விற்றும், பேருந்து ஓட்டியும் நாம் பெரும்பணக்காரர்கள் ஆகி விடலாம் என்கிறார். எந்த பொருளாதார, சமூக அறிவும் இல்லாத ஒரு மாக்கானால் மட்டுமே இப்படியெல்லாம் தனக்கு நிபுணத்துவம் இல்லாத துறைகளை சீர்திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை தயக்கமின்றி சொல்ல முடியும். அதனால் தான் சொல்கிறேன் - சீமானுக்கு (நமது ஜியைப் போன்றே) சொந்த அறிவு இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்டதை கடன்பெற்று கண்ணை உருட்டி, மீசையை முறுக்கி, அங்கிங்கு திரும்பி போஸ் கொடுத்து, கையை நீட்டி முழக்கி நடித்துக் காட்டி பேசி கைதட்டு வாங்கத் தெரியும். அவருடைய சொந்த சரக்கை எடுத்து விடும் போது தான் இவர் ‘மிக ஆபத்தான ஒரு பேதை’ என நமக்குப் புரிகிறது. 

அடுத்து, அவருடைய ‘வடுகர்களை ஒழிப்போம்’ கொள்கைக்கு வருவோம் - தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தபட்ட சாதிகளின் பட்டியல் இணையத்தில் கிடைக்கிறது. அதைத் திறந்து பாருங்கள். நம்மிடைய வாழும் பற்பல சாதி மக்களின் தாய்மொழி தமிழ் மட்டுமல்ல, அது தெலுங்காக, சௌராஷ்டிராவாக, கன்னடாவாக, உருதுவாக வேறு மொழிகளாக உள்ளது. இவர்கள் பல தலைமுறைகளாக இங்கு இருப்பவர்கள்.  இங்கே உழைத்து, வரி செலுத்தி, வாக்களித்து நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு, கலாச்சார, அரசியல் எழுச்சிக்கு பங்களித்தவர்கள். இவர்களா வந்தேறிகள்? 

 சீமான் இயக்குநராக இருந்த போது அவர் தமிழர்களிடம் மட்டும் தான் பணியாற்றினாரா? அவருக்கு பெயர் பெற்றுத் தந்த “தம்பி” படத்தின் தயாரிப்பாளர் ஒரு கன்னடியர். “எவனோ ஒருவனை” தயாரித்தது வட இந்தியர். சீமானின் பட நாயகிகள் அனேகமாக வேற்று மொழிப் பெண்கள். வட இந்தியர்களை அடித்து துரத்தும் சீமானுக்கு சினிமா என்று வந்தால் மட்டும் அவர்களுடைய தயவு தேவைப்பட்டதா? கீர்த்தி ரெட்டி, சிவரஞ்சனி எல்லாரும் வடுகர்கள் அல்லவா? சினிமாவில் மட்டும் தனித்தமிழ் கொள்கை கிடையாதா? இல்லை, நீங்கள் வட இந்தியர்களை ஓட விடும் போது கோடம்பாக்கத்துக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பீர்களா?

இவர்கள் அந்நியர்கள், எந்த அதிகாரத்துக்கும் வரக் கூடாது என சீமான் சொல்வதை நிறைவேற்றினால் தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? ஒன்று சீமானுக்கு இங்கு வாழும் பலதரப்பட்ட மக்களின் மொழிப்பின்னணி பற்றி, அவர்களுடைய தாய்மொழி குறித்த புள்ளிவிபரங்கள் தெரியாது. அல்லது அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறார். ஆனால் ஒருவேளை சீமானைப் போன்றவர்களிடம் ஆட்சி போனால் பாஜக ‘இஸ்லாமிய வந்தேறிகளுக்கு’, ‘இந்து விரோதிகளுக்கு’ சி.ஏ.ஏ முகாம்களை அமைப்பது போல சீமான் மொழிசார்ந்த வந்தேறிகளின் அடிப்படை உரிமைகளை பறித்து, அவர்களுக்கு முகாம்கள் அமைத்து சிறைவைப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. பல பேச்சுகளில் அவர் இத்தகைய மக்களை சிங்களவருடன் ஒப்பிடுவதை கவனியுங்கள். சிங்களவர்கள் தமிழரை அழித்ததற்கு பழிவாங்குவோம் என்கிறார். எவ்வளவு ஆபத்தான பேச்சு இது.

“வடமாநில தொழிலாளர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் பெட்டியை தூக்கிக் கொண்ட ஓட வேண்டியது தான்” என்று சிரிக்கிறார். அவர்கள் என்ன தப்பு செய்தார்கள்? அவர்கள் குறைந்த கூலிக்கு நமது பொருளாதார வளர்ச்சிக்கு நல்கும் பங்களிப்பு முக்கியமில்லையா? உழைக்கும் வர்க்கத்தை ஏதோ கொள்ளைக்காரர்களைப் போன்றா வர்ணிப்பது? சரி நீங்கள் இவர்களை துரத்திய பின் இதையே வேறு மாநில அரசுகள் அங்கு பணி செய்யும் தமிழர்களுக்கு செய்தால் என்னவாகும்? தாராவியில் உள்ள தமிழர்களை சிவசேனா ஆட்கள் சட்டமியற்றி வெளியேற்றினால் அவர்கள் எங்கு போவார்கள்? அவர்களுக்கு நீங்களா வேலை கொடுப்பீர்கள்? அவர்களுக்கு நீங்களா இங்கு வீடு கட்டித் தருவீர்கள்? வெளிமாநிலங்களில் இருந்து துரத்தப்படும் தமிழ் மென்பொருளாளர்களுக்கு, மருத்துவர்கள், வியாபாரிகளுக்கு என்ன வேலை தருவீர்கள்? கருப்பெட்டி, கடலைமிட்டாய் உற்பத்தியா? பால் கறப்பதா? இல்லை நீங்களே பரிந்துரைப்பது போல டீக்கடை வைப்பதா? ஏஸியில் உட்கார்ந்து, வசதியாக வேலை செய்து லட்சங்களில் சம்பாதிக்கிறவர்கள் எதற்கு பால்கறந்து, சாணி அள்ளி, டீ அடித்து அதே பணத்தை ஈட்ட வேண்டும்? உங்கள் ஆட்சியில் உண்மையில் அப்படி ஒரு புலம்பெயர்வு நடந்தால் வேலை இழந்து இங்கு வரும் நிலை ஏற்பட்டால் ஒரு பெருங்கூட்டத்துக்கு உடனடி வேலையளிக்க நமக்கு எந்த கட்டமைப்பும் இல்லை, அவர்கள் கடைசியில் சோறின்றி சாலையில் கிடந்து இரப்பார்கள் என்பதே உண்மை.

 மேடைக்கு மேடை பாஜகவை, மோடியை சீமான் விமர்சித்தாலும் அவர் மோடியை போன்றே ஆபத்தான, மனதளவில் ஹிட்லருக்கு இணையான ஒருவர் என்பதில் எனக்கு இப்போது சந்தேகமில்லை. மோடி ஒரு கற்பிதமான ஆதி இந்து தேசத்தை கனவு காண வைத்தால், அந்த அடையாள பெருமிதம் மூலம் வடமாநில வாக்குகளை வென்றால், சீமானோ அதே மாதிரி ஒரு கற்பிதமான பழந்தமிழ் நிலச்சுவாந்தார் சமூகத்தை மீளமைக்க முயல்கிறார், அது ஒரு பரிசுத்தமான உயர்வான சமூக நிலை என கதை விடுகிறார், அப்படி கதைவிட்டு வாக்குகளை வெல்லலாம் என கனவு காண்கிறார். இருவருமே நடைமுறைக்கு பொருந்தாத விசித்திர திட்டங்களை முன்வைத்து அரசியல் பண்ணுகிறார்கள்; இத்திட்டங்களின் விளைவுகள் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லாமல் இருக்கிறார்கள். இருவருமே மாற்றுத்தரப்புடன் விவாதம் செய்கிற, எதிர்கருத்துக்களை பரிசீலிக்கிற ஜனநாயக மாண்பு இல்லாதவர்களாக இருப்பதுடன் தமது தொண்டர்களையும் அவ்வாறே பயிற்றுவிக்கிறார்கள். இருவருமே பேசிப் பேசியே ஆட்சியைப் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். இருவருமே அறிவியல், வரலாற்றுப் புரிதல் சற்றும் இல்லாதவர்கள். இருவருமே, முக்கியமாக, தன்னை சதா முன்னிறுத்துகிற தன்விருப்ப மனநிலை கொண்ட சர்வாதிகாரிகள். ஒரு உதாரணம் தருகிறேன்:

ஒரு உரையில் சீமான் தன்னுடைய ஆட்சியில் நா.த.க செயல்படுத்தும் (தோன்றித்தனமான) முடிவுகளுக்கு எதிராக சிலர் நீதிமன்றம் போவார்கள் எனறு சொல்லி விட்டு “ஹா ஹா ஹா” என சிரிக்கிறார். அடுத்து அத்தகையோரை நாங்கள் ரோட்டில் வைத்து வெட்டுவோம் என்கிறார். அதாவது இவர்களை விமர்சிக்கும், கேள்வி கேட்கும், எதிர்த்து போராடும் யாரையும் படுகொலை செய்வார்களாம். இவருக்கு கைதட்டி ஆதரவு தரும் இளைஞர் கூட்டம் எவ்வளவு கொடூரமானவரக்ளாக இருக்க வேண்டும்? இப்போது ஆளும் அரசை விமர்சித்ததற்காக அந்த ஆளுங்கட்சியின் தொண்டர்கள் உங்கள் சகோதரனை, சகோதரியை, தாய், தந்தையை ரோட்டில் வைத்து வெட்டினால் இப்படி கைதட்டி மகிழ்வீர்களா?

ஒரு காலத்தில் சீமானுடன் நெருக்கமாக இருந்த அமீர் அண்மையில் ஒரு பேட்டியில் பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நா.த.கட்சியில் ஊடுருவி உள்ளதாக குறிப்பிட்டதை, சீமானும் பொன்.ராதாகிருஷ்ணனும் மறைமுக புரிந்துணர்வுடன், நட்புடன் அரசியல் செய்து வருவதாக சொன்னதை இங்கு குறிப்பிட வேண்டும். எனில் ஏன் நா.த.கட்சி பாஜகவை எதிர்க்கிறது?

சீமான் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மோடியை திட்டுவதும், ஒரு மனிதகுல விரோதி என அவரை வர்ணிப்பதும் ஒரு ஈடிபல் காம்பிளக்ஸ் என நினைக்கிறேன் - தந்தை உருவாக உள்ள மோடி மீது மகன் உருவான சீமானுக்கு உள்ள பொறாமையும், தந்தை உருவின் பிம்பத்தை மறுத்து அவரது அதிகாரத்தை தான் கைப்பற்ற வேண்டும் எனும் இச்சையே இங்கு வெளிப்படுகிறது. உள்மனத்தில் அவர் ஒரு ‘தமிழக மோடியாக’ உருவாகவே ஆசைப்படுகிறார். ஆனால் தந்தையின் இடத்தை அடைய விரும்பும் எந்த மகனையும் போல அதை ஒப்புக்கொள்ள விரும்பாமல் கசப்பாக வெளிப்படுத்துகிறார்.

சீமானுக்கெல்லாம் இவ்வளவு சீரியஸான பதிவு தேவையா என சிலர் கேட்கலாம் - நா.த.க ஒரு வளர்ந்து வரும் கட்சி, அது தன்னுடைய தொண்டர்களை விரிவுபடுத்தி வருகிறது, அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் வளரும் என்று புரிந்தே இதை எழுதுகிறேன். இதைப் போன்ற அபத்தமான கருத்துக்கள் அன்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்ஸால் பேசப்பட்டு பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டன அல்லவா! ஆனால் அவை இன்று வளர்ந்து பாஜகவின் சித்தாந்தமாகி நம்மை அடிமைப்படுத்தவில்லையா? சீமான் ஒரு தமிழ் சாவர்க்கர். அவரை நாம் இப்போதே அடையாளம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்!

பின்குறிப்பு: சீமான் குறித்து நான் இங்கு சொல்லி உள்ளவை தமிழ் தேசிய இயக்கம் மீதான என் விமர்சனம் அல்ல. தமிழ் தேசியம் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. அதன் ஒரு சீரழிந்த பாசிச வடிவம் மட்டுமே சீமான் உளறிக் கொட்டுவது.

http://thiruttusavi.blogspot.com/2021/04/blog-post_36.html

/ஆங்கிலம், தமிழ், வரலாறு, அறிவியல், கணிதம் போன்ற அடிப்படை பாடங்கள் எவையும் கட்டாயமாக கற்பிக்க தேவையில்லை, இவற்றில் தேர்வு எழுதவும் அவசியம் இல்லை என்கிறார்./

திருட்டு சாவிக்கு இணைய தளம் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வெளியே வரவேண்டும்! 😁 யாராவது கணித பாடத்தை வேண்டாம் என்பார்களா?!

நாம் தமிழர் சொல்வது, தனித்திறன் கல்வியை. எனக்கு உயிரியல் துறையில் ஆர்வம் என்றால், அது குறித்த கல்விதான் முதன்மைப் பாடங்கள். கணிதம், வரலாறு, புவியியல் எல்லாம் துணைப்பாடங்கள். இதைத்தான் நாம் தமிழர் வலியுறுத்துகிறது.

இதை தற்போதைய மிழக கல்வித் திட்டத்தில் இருந்து நோக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் ஒரு பிரிவு உண்டு. அதில் உயிரியலும், கணிதவியலும் முதன்மைப் பாடங்கள். தேர்ச்சி பெறும் மாணவர்கள் பொறியியலுக்கும் விண்ணப்பிப்பார்கள்; மருத்துவத்துக்கும் விண்ணப்பிப்பார்கள். மருத்துவம் கிடைத்தால் பொறியியலை கைவிடுவார்கள்.

இதுபோன்ற அபத்தமான கல்வித் திட்டம் அங்கே உள்ளது. அதன் பொருட்டுதான் கல்விச் சீழ்திருத்தத்தை முன்மொழிகிறார்கள். இது கனடா போன்ற நாடுகளில் உள்ள திட்டம்தான்.

Link to comment
Share on other sites

3 minutes ago, கிருபன் said:

வணக்கம் இசை,

“வந்தேறி” முதலாளிகளை ஓட ஓட விரட்டி விட்டு, தமிழ் முதலாளிகளை பிரதீயீடு செய்து, பின்னர் சர்வதேச நாணய நிதிநிறுவனம், உலக வங்கி போன்றனவற்றிடம் இருந்தும் கடன் வாங்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாம் என்று சொல்கின்றீர்கள்.

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றன எத்தகைய நிபந்தனைகளைக் கொடுக்கும், அவை எவ்வாறு மேற்கு நாடுகளின் பொருளாதார நலன் சார்ந்து இருக்கும் என்று ஒரு கருத்து மேலே வைத்திருந்தேன். கவனிக்கவில்லைப் போலுள்ளது.

பால்மா தொழிற்சாலை கட்டினால்கூட, தங்கள் பால்மாவை குறைந்த விலையில் விற்கவேண்டும் என்று இந்த நிறுவனங்கள் நிபந்தனை வைக்கும். அதுபோல பால்மாவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் வரி விதிப்பார்கள். 

இல்லை என் வழி தனி வழி என்றால் வெனிசுவேலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தாலும் வறிய நாடாக மாற்றுவார்கள்!

இதெல்லாம் நன்றாகவே நாம் தமிழர் பொருளாதார நிபுணர்களுக்கு தெரியும்.

வணக்கம் கிருபன். வந்தேறி முதலாளிகள் என நான் எதுவும் சொல்லவில்லையே?!

தமிழ் தேசிய முதலாளிகள் என்பவர்கள் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள் எனும் பொருளில் காண வேண்டும். நாசகார திட்டங்களுக்கு அவர்கள் துணை போக மாட்டார்கள்.

எனது தமிழக கல்லூரி நண்பர் மாற்று மொழி பேசுபவர். கணினித்துறையில் டாட்டா TCS இல் நல்ல பொறுப்பில் உள்ளார். அவர் இன்று பகுதி நேர தொழிலாக இயற்கை ஆட்டுப்பண்ணை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றார். இப்போது காலம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது பழைய கல்லூரி மாணவர்களை சந்தித்தபோது, யாரும் என் மீது வெறுப்பை உமிழவில்லை. நான் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன் என்பது பலருக்கும் தெரியும். இணையத்திலும், கட்சி வட்டாரங்களிலும் மட்டுமே வெறுப்பை கக்குகின்றார்கள். காரணம் அரசியல் எனும் தொழில் பாதிக்கப்படுகிறது எனும் காரணம்தான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அப்படியே அதற்கான ஆதாரங்களையும், கண்ணதாசன் சுயசரிதை உட்பட, போட்டால் நல்லது பாஸ்.😀

யாழ் களத்தில் தரமாகவும், சுயமாகவும் எழுதுவது என்பது மித்திரன் ரேஞ்சில் கிசுகிசுக்களையும், கிளுகிளுப்புக்களையும் எழுதும் ரப்லொயிட் பாணி என்று எனக்கும் தெரியாமல் போச்சே.😆 இனி நானும் ஜனங்கள் சுவாரசியமாக வாசிக்க பெரிய அரசியல் தலைவர் முன்னர் எந்த நடிகை உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் பரதம் ஆடினார் என்றும் எழுதலாம்😂

3 hours ago, கிருபன் said:

கலைஞர் எழுதியதையே வாசிக்காத மூடர் கூட்டம்தான் அவர் காசைக்கொடுத்து பிறரைக்கொண்டு எழுதி தன் பெயரைப் போட்டுக்கொண்டார் என்று நம்பும். அவர்கள்தான் திருக்குவளை என்ற ஊர் தெலுங்குதேசத்தில் உள்ள ஊர் என்று சொன்னாலும் நம்பும். மதுரையை நாயக்கர்கள் ஆண்டதால் தென் தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடி, வேதாரணியம் போன்ற இடங்களுக்கிடையில் உள்ள திருக்குவளையில் தெலுங்கில்தான் பாடசாலைகளில் படிப்பித்தார்கள் என்பதையும் நம்பும்😂🤣

நானும், இன்றுவரை, நிழலி , இணையவன், நந்தன் போல நீங்களும், புலிகளையும், பிரபாகரனையும் இழுத்து அரசியல் செய்கிறார் சீமான், என்ற ஆதங்கத்தில் எழுதுகிறீர்கள், என்று நினைத்தேன்.

முதலாவது, கண்ணதாசனின் 'வனவாசம்', மின்னம்பலத்தில் வர, இன்னும் ஒரு பத்து வருடங்கள் ஆகலாம். அதன் பின்பே copy right இல்லாமல் போய் யாரும் பகிரலாம். ஆகவே, வாங்கி வாசியுங்கள் ஆதாரம் வேண்டும் என்றால். நான் மட்டும் அல்ல... சில உறவுகளும் கண்ணதாசனின் 'வனவாசம்' குறித்து பதிந்து உள்ளார்கள்.

கண்ணதாசனுடன் போனவர்கள் இருவர். அந்த இருவருமே தமிழகத்தின் முதல்வராக வந்தார்கள். அதுவே தமிழகத்தின் துயரம்.

அடுத்தது, கனிமொழி அக்கா.

நான் இது குறித்து முன்னர் பதிந்த போது, ஆதாரம் உள்ளதா என்று கேட்டவர், நம்ம தமிழ்சிறியர். கருணாநிதியே, மேடையில், ரஜனி, கமல் மற்றும் முக்கியமாக, ஆச்சி மனோரமாவை வைத்துக்கொண்டே, கீழே கனிமொழி, துணைவி ராசாத்தி இருக்க கூடியதாக, எவ்வாறு தனது வீர தீர பராக்கிரமத்தினையும், ஆச்சி எப்படி மாட்டிவிட்டார் என்பதனையும் விளக்கமாக சொன்ன விடியோவை இணைத்தேன்.

நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்ல மாட்டேன். தூங்குபவரை, எழுப்பலாம், தூங்குபவர் போல நடிப்பவரை எழுப்ப முடியாது என்பது போல, ஆதாரம் கொண்டு வா என்றால், எமக்கு வேறு வேலை இல்லையா? தேடிப்பாருங்கள். கிடைக்கும்.

மூன்றாம் நபர் அல்ல, அவரே ஒத்துக் கொண்டது. அதேவேளை, கனிமொழி பிறப்பு விவகாரத்தினை துப்பறிந்து, தகப்பன் பெயர் கருணாநிதி என்று பிறப்பு சான்றிதழ் பத்திரத்தில் உள்ளது, அது முதல்வரா என்று கேட்க மறுத்து, அந்த நிருபர் சண்முகநாதன், சில நாட்களில் மேலே போக காரணமானவர் என்ற குற்றச்சாட்டும் உங்கள் பாசத்துக்குரிய தலைவர் மேலே உள்ளதே.  

அனைத்துக்கும் மேலாக, எம்தமிழ் இனத்துக்கு, கட்டுமரம் செய்த அநியாயத்துக்காக, அவர் உயிருடன் இருக்கும் போதே, அவரது மகளை தூக்கி திகாரில் போட்டு, களி தின்ன வைத்தது, யாரு... அதே காங்கிரஸ். இன்று அந்த கட்சிக்கு வாக்கு கேட்க்கிறார்.

சீமானை எதிர்ப்பது வேறு, அதுக்காக திமுகவை ஆதரிப்பது வேறு. நீங்கள் துல்பன் அய்யாவுடன் நின்று ஆதரவு கொடுக்கிறீர்கள் என்பதே எனது பெரும் கவலை. 
 
Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இசைக்கலைஞன் said:

வணக்கம் கிருபன். வந்தேறி முதலாளிகள் என நான் எதுவும் சொல்லவில்லையே?!

தமிழ் தேசிய முதலாளிகள் என்பவர்கள் தமிழ் தேசியத்தை நேசிப்பவர்கள் எனும் பொருளில் காண வேண்டும். நாசகார திட்டங்களுக்கு அவர்கள் துணை போக மாட்டார்கள்.

எனது தமிழக கல்லூரி நண்பர் மாற்று மொழி பேசுபவர். கணினித்துறையில் டாட்டா TCS இல் நல்ல பொறுப்பில் உள்ளார். அவர் இன்று பகுதி நேர தொழிலாக இயற்கை ஆட்டுப்பண்ணை வைத்து நன்றாக சம்பாதிக்கின்றார். இப்போது காலம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் எனது பழைய கல்லூரி மாணவர்களை சந்தித்தபோது, யாரும் என் மீது வெறுப்பை உமிழவில்லை. நான் ஒரு தமிழ் தேசிய ஆதரவாளன் என்பது பலருக்கும் தெரியும். இணையத்திலும், கட்சி வட்டாரங்களிலும் மட்டுமே வெறுப்பை கக்குகின்றார்கள். காரணம் அரசியல் எனும் தொழில் பாதிக்கப்படுகிறது எனும் காரணம்தான்.

இவர்களின் நோக்கம் வேறு தம்பி

நாம் எமது காலில் நிற்போம் என்றால் அது எப்படி மற்றவர்களை துரத்துவதாகும்?

தமிழ் தேசியம் பேசினாலே அது மற்றவரை துரத்துவது தான் என்று இவர்கள் சொல்வதே ஒருவகை விசம் தான்.

அப்படி அதை நேசிப்போர் சொல்வதில்லை நினைப்பதில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

வணக்கம் இசை,

“வந்தேறி” முதலாளிகளை ஓட ஓட விரட்டி விட்டு, தமிழ் முதலாளிகளை பிரதீயீடு செய்து, பின்னர் சர்வதேச நாணய நிதிநிறுவனம், உலக வங்கி போன்றனவற்றிடம் இருந்தும் கடன் வாங்கி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாம் என்று சொல்கின்றீர்கள்.

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றன எத்தகைய நிபந்தனைகளைக் கொடுக்கும், அவை எவ்வாறு மேற்கு நாடுகளின் பொருளாதார நலன் சார்ந்து இருக்கும் என்று ஒரு கருத்து மேலே வைத்திருந்தேன். கவனிக்கவில்லைப் போலுள்ளது.

பால்மா தொழிற்சாலை கட்டினால்கூட, தங்கள் பால்மாவை குறைந்த விலையில் விற்கவேண்டும் என்று இந்த நிறுவனங்கள் நிபந்தனை வைக்கும். அதுபோல பால்மாவை மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும் வரி விதிப்பார்கள். 

இல்லை என் வழி தனி வழி என்றால் வெனிசுவேலா போன்ற எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தாலும் வறிய நாடாக மாற்றுவார்கள்!

இதெல்லாம் நன்றாகவே நாம் தமிழர் பொருளாதார நிபுணர்களுக்கு தெரியும்.

பிரச்சனை என்னவென்றால், கிருபன் சொந்தமாக கருத்துக்களை வைப்பதில்லை. நீங்கள் வைத்த வாதங்களுக்கு, பதிலை மின்னம்பலத்தில் தேடுவார். கிடைக்காவிடில் காணாமல் போவார்.

பதில் என்று அவர் கருதுவதை கொண்டாந்து அவர் ஓட்டும் போது, நாம், அதன் பின்னர் பதியப்பட்ட, வேறு ஒரு நூறாவது திரியில் இருப்போம்.  🤦‍♂️

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சீமானை எதிர்ப்பது வேறு, அதுக்காக திமுகவை ஆதரிப்பது வேறு. நீங்கள் துல்பன் அய்யாவுடன் நின்று ஆதரவு கொடுக்கிறீர்கள் என்பதே எனது பெரும் கவலை. 

நான் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவாளர் இல்லை. அரசியல் செய்வதே தங்களையும், தங்கள் சந்ததியினரையும் பெரும் செல்வந்தர்களாக்கத்தான் என்றுதான் பலர் முதலீடு செய்கின்றார்கள். 

ஆனால் கலைஞர் தமிழரே இல்லை என்று சொல்வதும், அவரின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை இகழ்வதும் வெறும் அவதூறு பரப்பும் செயல்கள்தான். கண்ணதாசன் தனது செல்வாக்கைப் பாவித்து அவதூறு செய்திருக்கலாம். ஆனால் நான் அதைப் படிக்கவில்லை.

1 minute ago, Nathamuni said:

பிரச்சனை என்னவென்றால், கிருபன் சொந்தமாக கருத்துக்களை வைப்பதில்லை. நீங்கள் வைத்த வாதங்களுக்கு, பதிலை மின்னம்பலத்தில் தேடுவார். கிடைக்காவிடில் காணாமல் போவார்.

பதில் என்று அவர் கருதுவதை கொண்டாந்து அவர் ஓட்டும் போது, நாம், அதன் பின்னர் பதியப்பட்ட, வேறு ஒரு நூறாவது திரியில் இருப்போம்.  🤦‍♂️

நல்லது. நான் மின்னம்பலம் மட்டும்தான் படிக்கின்றேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்களின் அறிவின் கொள்ளளவைத்தான் காட்டுகின்றது. அதற்காக நான் என்ன படிக்கின்றேன் என்று பட்டியல் இடப்போவதில்லை😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

நான் திமுக, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளின் ஆதரவாளர் இல்லை. அரசியல் செய்வதே தங்களையும், தங்கள் சந்ததியினரையும் பெரும் செல்வந்தர்களாக்கத்தான் என்றுதான் பலர் முதலீடு செய்கின்றார்கள். 

ஆனால் கலைஞர் தமிழரே இல்லை என்று சொல்வதும், அவரின் தமிழ் மொழிக்கான பங்களிப்பை இகழ்வதும் வெறும் அவதூறு பரப்பும் செயல்கள்தான். கண்ணதாசன் தனது செல்வாக்கைப் பாவித்து அவதூறு செய்திருக்கலாம். ஆனால் நான் அதைப் படிக்கவில்லை.

அவர் தமிழர், இல்லை என்பதா இப்போது கேள்வி. இன படுகொலை நடந்த போது, அதனை தடுக்க டெல்லி போனாரா அல்லது குடும்ப உறவுகளுக்கு பதவி கேட்டு டெல்லிக்கு போனாரா?

கண்ணதாசன் உடன் சென்றவர்கள், கருணாநிதி, எம்ஜிஆர். இது தமிழகத்தில் யாரை கேட்டாலும் சொல்லும், வனவாச செய்தி. அதனை நீங்கள் வாசிக்காவிடின் அல்லது மறுப்பதால், பொய்யாகிவிடாது. 

கருணாநிதி பணம் கொடுக்க மறுக்க, இவர்கள் இருவரும், சேர்த்தே கொடுத்து விட்டு வந்தார்கள் என்பதும், இவர் மேலும் எழுதி தன்னை நாறடிப்பார் என்றே, அவரை தமிழக அரசவை கவிஞர் என்று புது பதவியை உருவாக்கி கண்ணதாசனை அமர்த்தினார் எம்ஜிஆர் என்பது உங்களுக்கு தெரிய வேண்டுமாயின், மின்னம்பலத்தில் கேளுங்கள், யாராவது பதில் சொல்வார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அவர் தமிழர், இல்லை என்பதா இப்போது கேள்வி. இன படுகொலை நடந்த போது, அதனை தடுக்க டெல்லி போனாரா அல்லது குடும்ப உறவுகளுக்கு பதவி கேட்டு டெல்லிக்கு போனாரா?

இதனை 2009 இலிருந்து பல திரிகளில் அலசியாயிற்று. கலைஞர் நாலுமணி நேரம் “உண்ணாவிரதம்” இருந்து தமிழக மக்களின் கொந்தளிப்பை அடக்க முயன்றதும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டதும் சுயநலத்தால்தான் என்பது எவரும் அறிந்ததே. அவர் உதவுவார் என்று தலைவர் பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இதனை 2009 இலிருந்து பல திரிகளில் அலசியாயிற்று. கலைஞர் நாலுமணி நேரம் “உண்ணாவிரதம்” இருந்து தமிழக மக்களின் கொந்தளிப்பை அடக்க முயன்றதும், தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டதும் சுயநலத்தால்தான் என்பது எவரும் அறிந்ததே. அவர் உதவுவார் என்று தலைவர் பிரபாகரன் கூட நம்பியிருக்கவில்லை. 

தமிழர் இல்லாத, மலையாளி எம்ஜிஆர் செய்ததை கூட உங்கள் பெரும் தமிழர் கருணாநிதி செய்யவில்லை என்கிறீர்களா?

அதுசரி, கலைஞர் படம் சட்டை பையில் எப்போதும் இருக்குமோ? 

உண்மையிலேயே உங்களுடன் விவாதம் செய்தது குறித்து கவலை கொள்கிறேன். 

மீண்டும் சொல்கிறேன்.சீமான் எதிர்ப்பு வேறு. கருணாநிதி ஆதரவு வேறு. முதலாவது ஆகக்குறைந்த அளவில் நியாயமாவது இருக்கும்.

இரண்டாவது, ஆகக்கூடிய அளவில், இறந்து போன எமது இன மக்களுக்கு இழைக்கும் பெரும் துரோகம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.