Jump to content

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல’ – க.வி.விக்னேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல’ – க.வி.விக்னேஸ்வரன்

 
1-24-1.jpg
 97 Views

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை” என வாரத்துக்கொரு கேள்வி என்ற பதிவில் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் வழங்கியுள்ள கேள்வி பதிலில்,

கேள்வி: இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச பகிரங்கமாகக் கூறியுள்ளாரே. அது பற்றிய உங்கள் பார்வை என்ன?

பதில்: மேன்மைதகு ஜனாதிபதி அவர்களின் தப்பான சிந்தனையின் வெளிப்பாடு இது. ஏதோ இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, தமிழர்கள் வந்தேறு குடிகள், எங்கிருந்தோ வந்த அவர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக வசிப்பதால் தமக்கென நாட்டின் ஒரு பகுதியைத் துண்டாடப் பார்க்கின்றார்கள் என்பது அவரின் கருத்து.

ஆனால் உண்மை அதுவல்ல. இலங்கை நாடானது என்றுமே தமிழ்ப் பேசும் இடங்கள் சிங்களம் பேசும் இடங்கள் என்று பிரிந்து தான் இருந்து வருகின்றது. இப்பொழுதும் புகையிரத வண்டி மதவாச்சியைத் தாண்டியதும் தமிழர்கள் சற்று மிடுக்குடன் தமிழில் குரல் எழுப்பிப் பேசுவார்கள். அதுவரையில் பெட்டிப் பாம்பு போல் அடங்கி இருந்தவர்கள் இராணுவத்தினர் வண்டிக்குள் இருந்தால்க் கூட சற்று குரல் எழுப்பி தமிழில் பேசுவதைக் காணலாம். அதன் பொருள் தமிழ்ப் பேசும் இடங்களை நோக்கி புகையிரதம் புறப்பட்டு விட்டது என்பதே.

இந்த நாடு சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. இலங்கையைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணமும் வல்லரசுகளிற்கு இல்லை. இதை கோட்டாபய இராஜபக்ச என்ற இளைப்பாறிய முன்னைய இராணுவ அதிகாரி புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பௌத்த பிக்குகள் சிலர் கூறும் தப்பான சரித்திரத்தை முன்வைத்து தப்பான முடிவுகளுக்கு அவர் வரக் கூடாது. அவர் புரிந்து கொண்டால்த் தான் மேன்மைதகு ஜனாதிபதி அவர்கள் உண்மையைப் புரிந்து கொள்வார்கள். முழு நாட்டுக்கும், சகல மக்களுக்கும் நான் ஜனாதிபதி என்று கூறியவர் எவ்வாறு சிங்கள பௌத்த சிந்தனையில் இருந்து கொண்டு நாட்டைப் பாரபட்சமின்றி நிர்வகிக்கப் போகின்றார் என்பது முக்கியமான ஒரு கேள்வி.

அவரின் கூற்று தவறானது. இது சிங்கள பௌத்த நாடல்ல

இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழ்ப் பேசியவர்களே என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. பௌத்தம் இலங்கைக்கு கொண்டு வந்த போது அதனை ஏற்றவர்கள் தமிழர்கள். தேவனை நம்பிய தீசன் தமிழன். அவனின் தந்தை மூத்த சிவன் தமிழன். சிங்கள மொழி அப்போது பிறந்திருக்கவில்லை. அப்பொழுதிருந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே சிங்களம் என்ற ஒரு மொழி பரிணமித்தது. பௌத்தம் இலங்கைக்கு அறிமுகம் செய்த காலத்தில் தமிழ் மொழியில் பௌத்தக் கருத்துக்கள் கொண்ட நூல்கள் வெளிவந்தன. சிலப்பதிகாரம், மணிமேகலை இதற்குதாரணம்.

பின்னர் பெறப்பட்ட பௌத்த எச்சங்களும் தமிழர் காலத்தவையே. தமிழ் பௌத்தர்களின் காலத்து எச்சங்களே அவை. ‘தமிழ் பௌத்தர்கள்’ என்ற நூலை சிங்கள மொழியில் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன எழுதியுள்ளார்.

சைவர்களாக இருந்த இலங்கையின் ஆதிக் குடிகளான தமிழ் மக்கள் பலர் பௌத்தர்களாக மாறி பின்னர் காலாகாலத்தில் பௌத்தத்தைக் கைவிட்டு சைவ சமயத்திற்குத் திரும்பவும் மாறினார்கள். அற்புதங்கள் நிகழ்த்திய நாயன்மார்களின் வருகை அதற்கு உந்து கோலாக அமைந்தது. இன்றும் பௌத்தர்கள் பலர் அற்புதம் நிகழ்த்திய சாயி பாபா போன்றவர்களைச் சார்ந்து வாழ்வதைக் காணலாம்.

முன்னர் சைவம் தழைத்தோங்கிய இந்த நாட்டில் சில காலம் பௌத்தம் கோலோச்சியது. பௌத்தம் வர முன்னரே இலங்கையை ஐந்து ஈஸ்வரங்கள் (இலிங்கங்கள்) காத்து வந்திருந்தன. கீரிமலை நகுலேஸ்வரம், மாந்தோட்டை திருக்கேதீஸ்வரம், சிலாபத்து முன்னேஸ்வரம், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், தேவேந்திரமுனை (Dondra) தொண்டேஸ்வரம் என்ற ஐந்து இலிங்கங்கள் இலங்கைக்குக் காவல் அரண்களாக இருந்து வந்துள்ளன. ஆகவே தமிழ்ச் சைவ நாட்டில்த் தான் இன்று சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இன்றும் சிங்கள பௌத்தர் அல்லாத தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினர். எனவே முழுநாட்டையும் சிங்கள பௌத்த நாடு என்று அடையாளம் காட்டுவது மடமையின் உச்சக்கட்டம்.

தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்லர்

குமரிக் கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் பற்றி ஆய்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. குமரிக் கண்டமானது தற்போதைய இலங்கையையும் உள்ளடக்கி மடகஸ்கார், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் வரையில் விரிந்து இன்றைய இந்திய சமுத்திரப் பரப்பில் குடிகொண்டிருந்தது.

ஏழு நாடுகளை அது உள்ளடக்கி இருந்தது. ஏழு, எலு, ஈழம் போன்ற சொற்கள் இலங்கையைக் கொண்ட அந்த நாட்டைக் குறித்தது. சரித்திர காலத்திற்கு முன் தொடக்கம் தமிழ் மொழி பேசுபவர்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். முதற் சங்கம் (கூடல்) தென் மதுரையில் 4440 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. 89 பாண்டிய மன்னர்கள் அக் காலகட்டத்தில் ஆண்டார்கள்.

இறைவனார் அகப்பொருள் என்ற பின்னைய சங்க நூல் 549 புலவர்கள் அக்காலகட்டத்தில் பிரசித்தி பெற்றமை பற்றிக் கூறுகின்றது. முதற் சங்கத்தின் போது 16149 நூலாசிரியர்கள் முதற்சங்கக் கூட்டங்களில் பங்குபற்றியமை பற்றிக் கூறுகின்றது. அகஸ்தியமே அப்போதைய இலக்கண நூல். முரஞ்சியூர் முடி நாகர் என்ற யாழ்ப்பாண நாக மன்னர் முதற் சங்கத்தில் கலந்து கொண்டதாக வரலாறு உண்டு.

சித்த மருத்துவம் முதற் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்தது. (‘தமிழர்கள் பாரம்பரியம் – சித்த வைத்தியம்’ என்ற நூலைப் பார்க்கவும்) மேலும் ரிசட் வெயிஸ் (Richard Weiss) என்பவர் 2009ம் ஆண்டில் வெளியிட்ட “Recipes for immortality: Medicine,
Religion and Community in South India” (Oxford University Press) என்ற நூலைப் பார்க்க.

இரண்டாவது சங்கம் 3700 ஆண்டுகள் நிலைபெற்றிருந்தது. 59 புலவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

மூன்றாவதும் கடைச் சங்கமமுமான தமிழ்ச் சங்கம் 1850 வருடங்கள் நிலை பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. 49 புலவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

இவை பற்றிக் கூறுவதற்குக் காரணம் குமரிக் கண்டம் பற்றிய தகவல்கள் ருசுப்படுத்தப் படும் போது குமரிக் கண்டத்துள் இலங்கை இருந்தமையும் அங்கு தமிழர்கள் வாழ்ந்து வந்ததையும் நிரூபிக்க முடியும் என்பதால்.

எனவே தமிழர்கள் வந்தேறு குடிகள் எனும் போது குமரிக் கண்டம் காலத்தில் இருந்தே தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கையில் வசித்து வந்தமையை நாம் மறத்தல் ஆகாது. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள் என்ற பலர் படையெடுத்து வந்திருந்தாலும் சரித்திர காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ப் பேசும் நாகர்கள் இங்கு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இங்கு வாழ்ந்து வந்த ஆதித் தமிழ்க் குடிகளுடன் பின்னைய தமிழர்களும் ஐக்கியமாகி இன்றைய தமிழர்கள் இங்கு வாழ்;ந்து வருகின்றார்கள் என்பதே உண்மை.

தமிழர்கள் நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை.

முப்பது வருடகாலப் போரின் பின்னர் தமிழ்ப் பேசும் மக்கள் உலக நாடுகளின் கருத்தை அறிந்த பிறகு போர்க்கால குறிக்கோள்களை விட்டு இந் நாட்டில் தமிழ்ப் பேசும் மக்கள் எவ்வாறு நீதி, நியாயம், மதிப்பு, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் ஒரே நாட்டுக்குள் தொடர்ந்து வாழ முடியும் என்ற கேள்விக்குப் பதில் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தற்போது நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை. ஒரே நாட்டில், நடைமுறையில் இருக்கும் வித்தியாசத்தை, வேற்றுமையை, தனித்துவத்தைப் பேணி பல் இனங்கள் ஒருமித்துப் பயணிக்க முடியுமா என்ற விடயத்தையே ஆராய்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரே நாட்டினுள் இருக்கும் வேற்றுமைகளை அனுசரித்து எப்படிப் பல் இனங்கள் பயணிக்க முடியும் என்றே கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.

நாட்டைத் துண்டாட வேண்டும் என்ற எண்ணம் வல்லரசுகளிற்கு இல்லை.

பொதுவாக நாடுகள் துண்டாடப்படுவதைச் சர்வதேச நாடுகள் எதிர்க்கின்றன. அதாவது ஒவ்வொரு சிறிய மக்கட் கூட்டமும் தாமிருக்கும் நாட்டில் தனித்துத் தமக்கென ஒரு அலகை உண்டாக்க முற்பட்டால் அது கூட்டு சேர்ந்திருக்கும் பல பெரிய வல்லரசுகளுக்குப் பாதகமாய்ப் போய்விடும். உதாரணத்திற்கு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒவ்வொரு அலகும் தனியாக இயங்கக் கோரிக்கை விடுத்தால் என்ன நடக்கும்? அமெரிக்காவின் தற்போதைய பலம் குன்றிவிடும். இரஷ்ய நாட்டில் இதுவே நடந்தது.

ஆகவே நாடுகளைப் பலம் குன்றச் செய்வது வல்லரசுகளின் குறிக்கோள் அல்ல. நாடுகள் தமது அலகுகளின் உரிமைகளை ஏற்று ஒன்றுபட்டு ஒரே நாடாக முன்னேற வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள். அவர்களுள் பலர் இவ்வாறு பலமுடன் ஒன்று சேர்ந்து பயணிக்க சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி முறையையே தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

எவர் எது கூறினாலும் இலங்கையின் வடகிழக்கு பாரம்பரியமாகத் தமிழ்ப் பேசும் இடங்கள். அங்கு பெரும்பான்மையாகத் தமிழர்கள் 3000 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களின் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதே தமிழர்களினதும் சர்வதேச நாடுகளினதும் எதிர்பார்ப்பாகும்.

மேற்படி கூற்றில் மேலும் ஒரு விடயத்தை நாம் அவதானிக்க முடிகிறது. வல்லரசுப் போட்டியில் அவை பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என்று கூறும் போது வேறொரு கருத்து தொக்கி நிற்கின்றது.

அதாவது இந்தியாவும் மேற்கு நாடுகளும் தருணம் பார்த்து தமிழர்களுக்குச் சார்பாக நாட்டைப் பிரிக்கப் பார்க்கின்றார்கள் என்பதே அது.

பூனைகள் இரண்டு ஒரு ரொட்டியைப் பிரிக்க முடியாமல் குரங்கிடம் ஆலோசனை கேட்டன. ‘பிரித்துக் கொடுத்தால் போச்சு’ என்று குரங்கு பிரித்தது. பின்னர் ஒரு துண்டு சற்றுப் பெரிது என்று கூறி பெரிய துண்டின் ஒரு பகுதியைத் தான் தின்றது பின்னர் பெரிய துண்டு சிறுத்து விட்டது என்று முன்னைய சிறிய துண்டின் ஒரு பகுதியை அது தின்றது. கடைசியில் முழு ரொட்டியுமே குரங்கின் வயிற்றில் தஞ்சம் அடைந்தது.

மற்றைய நாடுகள் எம் நாட்டை பிரிக்க ஏன் கங்கணம் கட்டுகின்றார்கள்? மாண்புமிகு ஜனாதிபதி சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந் நாடு சிங்கள பௌத்த நாடு என்ற பொய்யை முன்வைத்து அரசாங்கம் நடத்தினால் கட்டாயம் அந்தப் பொய்யை சிறுபான்மையினர் உலகெங்கும் எடுத்துக் கூற வேண்டி வரும். உலக நாடுகள் தமது காரியங்களுக்காக இங்கு எட்டிப் பார்க்க நேரிடும்.

அதை விட்டு விட்டுத் தமிழர்கள் இந்த நாட்டின் ஆதிக்குடிகளே அவர்கள் வடக்கு  கிழக்கில் 3000 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்றார்கள் என்ற உண்மையை ஏற்று தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் சுதந்திரத்துடனும் வாழ வழி வகுத்தால் பிற நாடுகள் ஏன் எங்கள் பக்கம் தலை வைத்துப் படுக்கப் போகின்றன! அளவுக்கு மேலான செலவுகள், சீனாவின் பிடிக்குள் சிக்கியமை போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு இலகுவான வழியுண்டு.

இலங்கையைக் கூட்டு சமஷ்டி நாடாக மாற்றுங்கள். இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் யாவரையும் அணைத்து, அரவணைத்து அரசியல் செய்யுங்கள். அப்போது உலக நாடுகளில் வாழும் அத்தனை தமிழர்களும் ஏன் முஸ்லீம் நாடுகளும் இலங்கையைப் பொருளாதார ரீதியாக வாழ வைப்பார்கள். வல்லரசுகளைக் குறை கூறாமல் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் தமது பிழைகளை எடைபோட்டுப் பார்த்து எம்முடன் சமாதானம் ஏற்படுத்த முன்வரட்டும். நாட்டில் சமாதானம் நிலைக்கும். சௌஜன்யம் உருவாகும். பொருளாதார ரீதியாக மறுமலர்ச்சி உண்டாகும்.

 

https://www.ilakku.org/?p=46592

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல.

இலங்கை சிங்கள பவுத்த நாடு என்பது உண்மையாக இருந்திருந்தால் இப்படி கூவி கூவி ஏலம் போடத்  தேவையே இல்லையே. இல்லாத ஒன்றை சொல்லிச் சொல்லி தமதாக்கப் பார்க்கிறார்கள்.  தாம் அபகரித்ததை மீண்டும் கைப்பற்றி விடுவார்கள் என்கிற பயம். பஞ்ச பாண்டவருக்கு ஒரு ஈயிருக்கிற இடந்தானும் தரமாட்டேன் என்று அடம்பிடித்த துரியோதனன் யாவற்றையும் இழந்து இறந்த கதையை யாராவது இவனுகளுக்கு  சொல்லி வையுங்கோ. 

Link to comment
Share on other sites

5 minutes ago, satan said:

இலங்கை சிங்கள பவுத்த நாடு என்பது உண்மையாக இருந்திருந்தால் இப்படி கூவி கூவி ஏலம் போடத்  தேவையே இல்லையே. இல்லாத ஒன்றை சொல்லிச் சொல்லி தமதாக்கப் பார்க்கிறார்கள்.  தாம் அபகரித்ததை மீண்டும் கைப்பற்றி விடுவார்கள் என்கிற பயம். பஞ்ச பாண்டவருக்கு ஒரு ஈயிருக்கிற இடந்தானும் தரமாட்டேன் என்று அடம்பிடித்த துரியோதனன் யாவற்றையும் இழந்து இறந்த கதையை யாராவது இவனுகளுக்கு  சொல்லி வையுங்கோ. 

நீங்கள் எதைச் சொன்னாலும் அதுகளின்ரை மண்டையில் நிற்காது கண்டியளோ. வழுக்கி விழுந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் பல தடவை சொல்லி இருந்தேன்,  நான் வாய்வழியாக அறிந்ததாக, கிந்தியா  மற்றும் பிஜேபி என்பவை இப்போதைய நிலையில் இலங்கைத்தீவில் பூர்விக குடிகளை இந்து, பௌத்த மக்கள் ஆகவே பார்க்கின்றது என்றும், முன்பு பெரும்பான்மை இந்துவாக இருந்தவர்களே, இப்பொது பௌத்தர்களாக உள்ளனர் என்றும் கிந்தியா, பிஜேபி இன் புரிதல் இருக்கிறது என்றும்.

உண்மையான வரலாற்றின் அடிப்படையில், இதில் பிழையும் இல்லை, உண்மையும் கூட.

இலங்கைத் தீவை பற்றிய பிஜேபி இன் நிலைப்பாடு , பிஜேபி இன் காஷ்மீர்ரில் இருக்கும் நிலைப்பாட்டுடன்  உடன் ஒத்துவருகிறது என்றும்   , அதாவது முன்பு இந்துவாக இருந்த மக்கள் கூட்டத்தில் பெரும்பகுதியிரே, இப்போதைய காஷ்மீர் முஸ்லிம்கள், அதனால் காஸ்மீரில் இந்துக்களின் உரிய இடம் இப்போதைய அரசியல், சமூக, பொருளாதார நிலைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதும்.

இலங்கை தீவில், பிஜேபி இன் நிலை, இந்து பிரதேசம், பௌத்த பிரதேசம் ஆக வெவ்வேறு உச்ச மற்றும் உயர்  நிர்வாக   அலகுகள் இருக்க வேண்டும் என்பதும் என்று இங்கு சொல்லி இருந்தேன். 

பிஜேபி இன் இலங்கைத்தீவை பற்றிய புரிதல், ஈழத்தமிழ் இனம்/ தேசம்  என்பதை கவனத்தில் எடுக்கவில்லை ஆயினும்,  இப்போதைய  நிலையில் இலங்கைத் தீவில் உள்ள எல்லா தமிழ் மக்களில் இந்து மதம் பெரும்பான்மையாக இருப்பாதலும், அங்குள்ள தமிழரில் மதம் என்பது தீவிர தன்மை இல்லாததாலும் (அங்கங்கே மத பிரச்சனைகள் இருப்பது வேறு), இப்போதைய நிலையில் எமது இருப்பை பாதுகாப்பதற்கு பிஜேபி இன்  நிலைப்பாட்டை மறுக்காமல் (அதுவே இப்போதைய யதார்த்தமும் கூட) விடுவதும், அதன் மூலம் கிடைக்கும் பிரதேச, நிர்வாக வரையறுப்புகளை வரவேற்றப்பதும் ஏறத்தாழ முழு தமிழரின் இருப்பையும், பாதுகாப்பையும் தாக்க வைத்து கொள்ள உதவும் என்றும் எனது கருதாக  இருந்தது.    

ஆனால், இப்பொது, RAW, Hindian establishment (political, military, media  etc.), மற்றும் தமிழ் இனம்/ தேசம் சிங்களத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற (பிராமண) கூட்டங்கள்,  ஆக குறைந்தது ஒருபகுதியினர்,   போன்றவை, தமது நிலைப்பாட்டை பாரிய அடிப்படை மாற்றத்துக்கு கொண்டுவந்துள்ளதாக, அவர்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.  

இது வாய்வழியாக அல்ல, குறிப்பிட்ட இருவரின் ஆய்வுகளில் இருந்து. இவர்களை எல்லோரும் அறிவார்கள். ஒருவர், M. R. நாராயண் சுவாமி, RAW இன் பகிரங்க முகம், செய்தி ஆய்வாளர் என்ற முறையில். மரற்றவர், கேர்ணல்  ஹரிஹரன், முன்னாள் IPKF இந்த ராணுவ புலனாய்வு தலைமை பதவியை வகித்தவர்.      

M. R. நாராயண் சுவாமி, ஒன்றுமில்லாத 13 ஐ கூட சிங்களத்தின்  விருப்பதின்  படி விட்டு விடவேண்டும் என்பது.
https://telanganatoday.com/sri-lankas-u-turn-shouldnt-shock-india      

முழுமையாக வாசித்தால் புரியும், நாராயண் சுவாமி சொல்ல வருவது.

கேர்ணல்  ஹரிஹரன், இலங்கைத்தீவு தேரவாத சிங்களவருக்குக்கு மட்டுமே தாயகம்  என்பதும்.

https://www.colombotelegraph.com/index.php/sri-lanka-learning-from-unhrc-resolution/

"That would require promoting ethnic reconciliation while recognising Sri Lanka as the home of Theravada Buddhist Sinhalas, tolerating the practise of other religions and ensure human rights are respected by rule of law with full accountability through amendment to the constitution or drafting a new one."

இந்த நிலைப்பாடுகள், இவர்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என்று எண்ண முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஐயா கொளுத்தி போட்டுவிட்டு ஓடிபோய் மெளனமாய் இருந்துடுவாரு, அதுக்கு பிறகு உண்டாகும் அரசியல் கொதி நிலையில் பங்கெடுத்து கொள்ளவே மாட்டாரு.

இதுக்கு முதலும் அப்படித்தான், கொஞ்சம் சுமுகமா போய் கொண்டிருக்கும்போது ....

பிரபாகரன் முதல் கொண்டு பிரதேச பிரச்சனைகள்வரை தமிழகத்திலிருந்து தாயகம்வரை பொழந்து கட்டினாரு...

அதுக்கு பிறகு கம்முனு இருந்திட்டாரு, பிரச்சனைகளை சந்திச்சதெல்லாம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி கு்ரூப்பும், அங்கு வாழும் மக்களும்.

ஐயா உங்கள் உணர்வு பூர்வமான கருத்துக்களில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அந்த கருத்துக்களுடன் தொடர்ந்து  எங்களுடன் நின்று எந்த வடிவத்திலும்  சிங்களவனுடன் மோத வேண்டும்.

அதைவிட்டு  ஆவேச கருத்துக்கள் சொல்லிவிட்டு பிறகு அமைதியாய் இருந்து விடுவது.

தங்களின் அரசியல் இருப்பை தக்க வைக்க,

உங்களின் மிக நீண்டகால சட்ட புலமையை பயன்படுத்தி எங்களை வைச்சு கிட்டி புள்ளு விளையாடுகிறீர்கள் என்றே பலருக்கு எண்ண தோன்றும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.