Jump to content

நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றல்- அதிர்ச்சியில் மக்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்றுவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், ஒரு வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரமான விவிபாட் இயந்திரமும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளம், ஹவுரா மாவட்டத்திலுள்ள துள்சிபேரியா என்ற கிராமத்தில் வைத்தே இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டின் முன்பு தேர்தல் ஆணையகத்தின் அடையாளம் ஒட்டப்பட்ட வாகன நிற்பதை அப்பகுதி மக்கள் அதிகாலையில் கண்டநிலையில் தேர்தல் ஆணையகத்துக்கு தகவல் வழங்கினர்.

இதையடுத்து, அங்கு சென்றிருந்த தேர்தல் ஆணையக அதிகாரிகள், இவ்வாறு தேர்தல் மின்னணு இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த நான்கு மின்னணு இயந்திரங்களும் தற்போது நடைபெற்றுவரும் மூன்றாம் கட்டத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் மாநில தேர்தல் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

https://athavannews.com/2021/1207968

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நான்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் கைப்பற்றல்- அதிர்ச்சியில் மக்கள்!

உதை வீட்டை கொண்டுபோய் வைச்சு என்ன செய்யப்போறாங்கள்?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

உதை வீட்டை கொண்டுபோய் வைச்சு என்ன செய்யப்போறாங்கள்?😜

கொண்டுபோனாவர் காங்கிரஸ் ஆள் எப்படி அதை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று விஞ்சான ரீதியா ஆராயபார்த்து இருப்பினம் .😁

Link to comment
Share on other sites

43 minutes ago, பெருமாள் said:

கொண்டுபோனாவர் காங்கிரஸ் ஆள் எப்படி அதை வைத்து ஆட்சியை பிடிக்கலாம் என்று விஞ்சான ரீதியா ஆராயபார்த்து இருப்பினம் .😁

காங்கிரஸ் அல்ல, இது திரிணாமூல் காங்கிரஸ். இரும்புப் பெண் மம்தா பனர்ஜி தலைவராக இருக்கும் கட்சி. இதுவும் பா.ஜ.க வின் சதியோ என்று ஒரு சந்தேகம் இருக்கு எனக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.