Jump to content

ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ROHYPNOL – Date Drug: உண்மையும் பொய்யும் !!
===============================

” Rohypnol என்ற மாத்திரை காமத்தை தூண்டும் பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…! - கண்டிப்பாக பகிரவும்..!” என்ற தலைப்போடு சிலவருடங்களுக்கு முன்னர் சுற்றி விடப்பட்ட ஒரு பதிவு மீண்டும் ஒரு சுற்றுக்குத் தயாராகிறது.

இதன் சாராம்சம் “வடகிழக்கின் போதை வியாபார முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரையின் பின்னால் இளம் சமூகத்தை சீரழிப்பதுடன் தமிழ் சமூகத்தில் குழந்தை பிறக்கும் விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது. இம்மருந்து அளிக்கப்பட்ட பெண் தன் வாழ்க்கையில் தாய்மை அடையவே முடியாது” என்பதுதான்.

தற்போது, இலங்கையில் தமிழ் மக்களின் இனப்பெருக்க வீதம் குறைவடைந்து செல்லும் சந்தர்ப்பத்தில் அது தொடர்பாகப் பலரும் கரிசனம் காட்டும் சூழ்நிலையில் இந்த பதிவு மீண்டும் ஒரு பெரிய சுற்று வந்தாலும் வரக்கூடும்.

உண்மையில் இந்த மாத்திரையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது நல்லதே. ஆனால் நாம் குறிப்பிட்ட செய்திக் குறிப்பில் சில உண்மையான விபரங்களுடன் பல கற்பனைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த விடயத்தைப் பற்றி கதைக்கலாம் என்று நினைத்தோம். 

Flunitrazepam என்ற பொதுப்பெயர் கொண்ட Rohypnol என்ற மருந்து மருத்துவத் துறையில் தூக்கமின்மைக்கு தற்காலிக மருந்தாகவும் சத்திர சிகிச்சையின்போது மயக்கநிலையை ஏற்படுத்தவும் பயன்பட்டது. 

ஆனாலும் தொண்ணூறுகளின் பின்னர் சட்டவிரோதமாக கொக்கெயின் போன்ற போதை மருந்தினால் ஏற்படக்கூடிய மனவழுத்தத்தை குறைக்கப் பயன்படுத்தத் தொடங்கினர். அதேபோல பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்யவும் இந்த மருந்தை பயன்படுத்தத் தொடங்கினர். இதனாலேயே இது date-rape drug என்று அழைக்கப்படத் தொடங்கியது. பொதுவாக பார்ட்டி நடைபெறும்போது பெண்களை இலக்கு வைத்து இது குடி பானத்தில் கலக்கப்படுவதால் “Club drug” என்றும் இதைச் சொல்வார்கள்.

முதல் கூற்று  - “இந்த மருந்து சுவை, மணம் நிறம் அற்றது, மிக விரைவாக கரைந்துவிடும்  என்பதால் குடிபானத்தில் கலந்திருந்தாலும் இலகுவில் கண்டுபிடிக்கவே முடியாது”. 
இதில் உண்மையுள்ளது. ஆனால்  1997 இன் பின்னர் இந்த மருந்து வில்லை மெதுவாகவே நீரில் கரையும்படி மாற்றியமைக்கப்பட்டது. அதுபோலவே நிறமற்ற திரவத்தில் கலந்தால் நீலநிறமாகவும் மாறிவிடும்படி மாற்றம் செய்யப்பட்டது. கடும் நிறம் கொண்ட பானத்தில் கலந்தால் அதனை மேலும் இருண்ட நிறமாக்கிவிடும். (ஆனால் Rohypnol அல்லாத பொது மருந்து வில்லையாயின் நிறம் மாறாது)
  
இந்த மருந்தை உட்கொண்டவர்கள் சுமார் 30 நிமிடங்களின் பின்னர் அரை மயக்கநிலைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் உடல்மீது நடாத்தப்படும் எந்த ஒரு தாக்குதலுக்கும் அவர்களால் எதிர்வினை ஆற்ற முடியாது. இந்த நிலை இரண்டிலிருந்து 12 மணிநேரங்கள் கூட நீடிக்கலாம். இந்தக் காலப்பகுதியில் நடைபெறும் விடயங்கள் அவர்களுக்கு நினைவிருக்காது. 

ஆனால் நாம் குறிப்பிட்ட பதிவில் சொன்னதுபோல “இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்து விடுவார், இந்த மருந்து பெண்ணின் காம உணர்வைத் தூண்டும்” என்பதில் உண்மையில்லை. இது தமிழ் சினிமாவில் பார்த்த காட்சிகளின் பாதிப்பால் வந்த கற்பனையே. 

இம்மருந்தை தொடர்ந்து பாவித்து வந்தால் மருந்துக்கு அடிமை ஆகிவிடுவார்கள் என்பதும் அதனால் வேறு பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதும் உண்மைதான். 

அடுத்த கூற்று “பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டு பிடிக்க முடியாது”. இதுவும் உண்மையில்லை. உடனடியாகவே வைத்திய சாலைக்குச் சென்று மாதிரிகளைக் கொடுத்து பரிசோதிப்பதன் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். 

அதோடு குறித்த பெண்ணை இந்த மருந்து நிரந்தர மலடாக்கிவிடும் என்பதும் இவர்களின் எச்சரிக்கையாக இருக்கிறது. இதைத்தான் தமிழர்களுக்கு எதிரான சதியென்று வதந்தி பரப்புவோர் சொல்கிறார்கள்.

இது போன்ற வதந்திகள் உண்மையில் 2000 ஆண்டிலிருந்தே பரப்பப்படுகின்றன. அந்த வதந்திச் செய்தியில் Rohypnol  உடன் progesterex என்ற இன்னொரு மருந்தும் சேர்த்துக் கொடுக்கப்படுவதாகவும், அந்த மருந்து குறித்த பாலியல் தாக்குதலின்போது கர்ப்பம் தரிக்காது தடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளான பெண்ணையும் நிரந்தர மலடாக ஆக்கிவிடும் என்று பரப்பப்பட்டு வந்த வதந்தியில் இப்போது progesterex என்ற மருந்தை நீக்கி விட்டு அதே செய்தியை இடத்துக்கு ஏற்றமாதிரிப் பரப்புகிறார்கள் என்று தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் progesterex என்பதே ஒரு கற்பனைப் பெயர்தான்; அப்படி ஒரு மருந்தே இல்லையென்கிறது மருத்துவ உலகம். 
 

இவையெல்லாம் தவறான செய்திகளாக இருந்தாலும், இதன் பின்னால் உள்ள எச்சரிக்கையை பெண்களை புறம் தள்ளிவிடக்கூடாது. ஏனெனில் இவ்வாறு பெண்களை விருந்து மண்டபங்கள், சமூக ஒன்றுகூடல்களின்போது குடிபானத்தில் மருந்தைக் கலந்து பின்னர் துஸ்பிரயோகம் செய்யக்கூடியவர் எமக்குத் தெரியாமலே எம் மத்தியில் இருக்கக்கூடும். 

பலநேரங்களில் நமக்கு நன்கு தெரிந்தவர்களே இவ்வாறு செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளது. எனவே வெளியில் குறிப்பாக இரவில் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களுக்கு தனியே செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 

STAY SAFE AND STAY AWAY FROM DRUGS !

குறிப்பு: சமூக அக்கறையோடு பதிவுகளைப் பகிர்பவர்கள் தயவு செய்து அவற்றைப் பகிர்வதற்கு முன்னர் தரவுகள் சரிதானா என்று சரி பார்த்த பின்னர் பகிருங்கள்.
 

 

https://www.facebook.com/101881847986243/posts/299112768263149/?d=n

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.