Jump to content

தமிழரால் தமிழருக்கு ....... !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரால் தமிழருக்கு ....... !
====================

தமிழ் மக்கள் தமது தாயகப் பிரதேசங்களில் தமது இருப்பைத் தக்க வைக்கவும், தமக்கு எதிராக பேரினவாத அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நியாயம் வேண்டியும் ஜனநாயக முறையில் போராடும் வேளையில் தமிழ் மக்களின் முக்கியமான  பொதுப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளை நீர்த்துப் போகச் செய்யும் கருத்துக்களை தொடர்ச்சியாக காவிச் செல்லும் சக்திகள் யார்? திட்டமிடப்பட்ட பின்புலங்களின் செயல்பாடுகளே இவர்கள் மூலம் தொடர்ந்தும் காட்சிப்படுத்தப்படுகின்றன என்றே ஊகிக்க முடிகிறது.     

இத்தகைய பின்புலத்தில் பல கொடுமுடிகள் அணிவகுத்து நிற்பதும் அவர்கள் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்தும் புறவயச் சூழலுக்குள் தள்ளிவிட முனைவதையும் நாம் காணமுடியும். அந்தவகையில் சமூக ஊடகங்களில், சமூகங்களில் தமிழ் மக்கள் மத்தியில் அகக் குழப்பத்தை தோற்றுவிக்கும்  வகையில்  கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. இவை  நன்கு திட்டமிடப்பட்ட வகையில் உருவாக்கப்படுகின்ற கேள்விகளாக இருப்பதையும் காணமுடிகிறது.

பொதுவாக ஒரு உள்நாட்டுப் புரட்சி நடைபெறும் நாட்டில் மக்கள் புரட்சி முறியடிப்பில்  சமூகத்தை குழப்ப நிலையில் வைத்திருப்பதே இராணுவ/அரசியல்  மூலோபாயங்களில் முதன்மையானதாகக் காணப்படுகிறது. 2000 களின் முற்பகுதியில் இலங்கையின் இராணுவ மூலோபாயம் போரியல் மூலோபாயமாகவே கட்டி எழுப்பப்பட்டிருந்தது. இதில் மேற்குலக மூலோபாயங்களில் அதிகம் இலங்கை தங்கியிருந்தது. 

பாதுகாப்பு நெறி  கற்கைகளில்  இலங்கை கூடுதலாக பிரிட்டன், அமெரிக்கா, பாகிஸ்தான் , இந்தியா போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக் கொண்டது. இருப்பினும் 2000 களின் பின்தான் இலங்கை இந்தியாவிடம் இருந்து  மிக நேர்த்தியான புலனாய்வு மூலோபாயங்களை புரட்சி முறியடிப்பில் பயன்படுத்துவது குறித்த ஒத்துழைப்பையும், கற்கை நெறிகளையும் பெற்றுக் கொள்ளுவதில் தீவிரமாக இருந்தது.

2000 இன் ஆரம்பத்திலிருந்தே மக்களை உளவியல்ரீதியாக கையாள ஆரம்பித்திருந்தாலும் 2009 ன் பின்னர் ஆயுதப்போராட்டம் முடிவுறுத்தப்பட்ட பின்னர். இலங்கை மிக உயர் வினைத்திறனும், தொழில்திறனுமிக்க  புலனாய்வை கட்டமைப்பை பேணுகிறது.  அக்கட்டமைப்புகளே மக்களின் எழுச்சிகளை இலகுவாக கையாளும் கட்டமைப்பாக தொழிற்படுகிறது. 

ஒடுக்கு முறைக்கு எதிராக போராடும் சிந்தனைகளை மக்கள் மத்தியில்  முனைமழுங்கச் செய்தல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புதல், ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் இயல்பாகவே இருக்கும் பிளவுகளை மேலும் ஆழப்படுத்தல்,  புதிய புதிய பிளவுகளை தூண்டுதல் என்பவற்றை இலங்கை அரசு செய்து வருகிறது. 
 
அந்த வகையில் 2009 களின் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் வகை தொகையற்ற பிளவுகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு அல்லது தூண்டப்பட்டு தமிழ் பேசும் மக்கள் கூட்டம் இன்று  உளச்சிதைவுக்கு  உள்ளாக்கப்பட்ட இனமாக உருமாறி நிற்கிறது. 

தமிழ் மக்கள் மத்தியில் பிளவுவாதங்கள் அனைத்து அசைவியக்கத்திலும் மிகை நிரம்பி போயுள்ளன. அந்தவகையில் பிளவுகளை, குழப்பங்களை  தூண்டும் வகையில் பின்வரும் வகையிலான பல்வேறு கருத்தாடல்கள் தொடர்ச்சியாக எம்மத்தியில் வீசப்படுகின்றன.  

1.  2009 இன் பின்னர் “TNA அமைப்பு தமிழ் மக்களின் குரல் இல்லை” என்பதை தொடர்விவாதப் பொருளாக்கி இன்று பெரிதும் சிறிதுமாக 12 குழுக்களாக சிதறுண்ட போகுமளவுக்கு பொறுப்பற்ற  வாதப் பிரதி வாதங்களுக்குள் தமிழ் மக்கள் சிக்குண்டு இருக்கின்ற அளவு சூழலமைவு உருவாக்கப்பட்டமை.

 2. தமிழர்களிடைய இருக்கும் மத வேறுபாடுகளை தூண்டிவிடும் வகையில் தன்னை சைவசமயக் காவலனாக காட்டிக்கொள்ளும் ஒருவர் கடந்த தேர்தல் காலத்தில் தமிழ் கட்சிகள் சைவ சமயத்தவரையே வேட்பாளராக்க வேண்டும் என்று பகிரங்க அறிக்கை விட்டமை.

3. யாழ் பல்கலைக் காலத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைக்க வைத்து, எய்தவன் இருக்க அம்பையே (அதுவும் கடந்த காலங்களில் தமிழ் உணர்வாளராகவும் சாதனையாளராகவும் அறியப்பட்டவரை) தமிழ் மக்களைக் கொண்டே தமிழினத் துரோகியென வசைபாட வைத்தமை.

4. மன்னார் ஆண்டகையின் பல நற்காரியங்களைப் புறம்தள்ளி, திருக்கேதீஸ்வர வளைவு துவம்சம் செய்யப்பட்டு நந்திக்கொடி காலால் மிதித்து அவமதிக்கப்பட்டபோது மன்னார் ஆண்டகை தன் எதிர்ப்பை பதிவு செய்தாரா? மௌனமாக வழி மொழிந்தாரா?என்ற கருத்துரையை பொதுவெளியில் பரப்பியமை.

5. அண்மையில் முத்துசாமி என்பவரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்தல் செய்யப்பட்ட இலங்கை பா.ஜ.க. தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல் செய்யப்பட்டமை.

6. தமிழக அரசியல் தலைவர்களை எமது நட்பு சக்திகளாக மட்டுமே கருதிய காலம் போய் திராவிடம், தமிழ் தேசியம் என அவர்களை வேறாக்கி இருவேறு கோணங்களில் அணுகும் மனநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டமை.

7. தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர் குறித்து கதைப்பதால் ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள அரசால் அதிக ஆபத்தையும் நெருக்கடிகளையும் சந்திப்பதாக ஈழத்தமிழர்களை வைத்தே தமிழக அரசியல்வாதிகளை வாய் மூடவைத்தமை. (அதேநேரம் சில தமிழகத் தலைவர்கள் மிகைப்படுத்தலாக பேசுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறோம்).

8. போலிப்பட்டங்களுக்கு எதிராக செயற்பாடுகள் என்ற தலைப்பின்கீழ் பல தனியார் பல்கலைக்கழகங்களையும் போலியானவை என்ற விவாதத்தைத் தொடர்ந்து முன்னெடுத்தல். இதன்மூலம் தமிழ் மக்கள் மத்தியில், அரச பல்கலைப் கழகங்களில் உயர்கல்வி வாய்ப்பை பெறமுடியாத மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி உளவியல் பாதிப்புக்கு உட்படுகின்றனர். அதே நேரம் இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் மூலம் வெளிவரும் மாணவர்களையும் தனியார் கல்லூரி மாணவர்களையும் இரு துருவங்களாக மோதவிடும் சூழ்நிலையே இதனால் தூண்டப்படுகிறது.  இந்த விடயத்தை தமிழ் மாணவர்கள் மத்தியில் பாரிய விவாதப் பொருளாக்கியமை கூட ஒரு புலனாய்வு உத்தியின் வெளிப்பாடு தானோ எண்ணுவதில் எவ்வித தவறும் இருப்பதாக தெரியவில்லை.

அதே போன்று தான் P2P , கந்தன் கருணைப் படுகொலை நினைவு கூரல், கிறீஸ்தவ, சைவ சமங்களுக்கு எதிரான கருத்துரைப்புகள், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தாக்கப் புதுப்பித்தல் கிழக்கு மாகாண வடக்கு மாகாண பிளவுவாத கருத்துரைப்புகள் என இன்னும் பல நூறு கருத்தியல் பிளவுகள், பிற்போக்குவாதங்களை தூண்டுதல் என்பன மிக கனகச்சிதமாக தூண்டப்படுவதும் திட்டமிட்ட செயற்பாடுகளாகவே எண்ணத் தோன்றுகிறது.

இந்த இடைவெளிகளில் தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த நிலங்கள் உருமாற்றம்  செய்யப்படுகிறது; தொல்பொருள் பாதுகாப்பு, புத்தரின் அடிமுடி தேடல், வனப் பாதுகாப்பு, மீள்குடியேற்றம் என்ற பல்வேறு காரணங்கள் சொல்லி காடுகளும் நன்செய் நிலங்களும் கபளீகரம் செய்யப்படுகிறது. , அன்பையே போதித்த புத்த பெருமானும் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறார். தனது எழுபதாண்டு கால நிகழ்ச்சிநிரலின்படி ஒடுக்கு முறை இயந்திரமான சிங்கள பௌத்த பேரினவாதம் அகல கால்விரித்து இன அழிப்பை துரிதப்படுத்திச் செல்கிறது. இந்நிலை நீடிப்பின் இன்னுமொரு சந்ததிக் காலத்தில் இலங்கையில் சிறுபான்மை இனமொன்று வாழ்ந்ததற்கான சுவடே இன்றி அழிக்கப்பட்டுவிடும்.

-RG-
 

 

https://www.facebook.com/101881847986243/posts/303230081184751/?d=n

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இதில் 1 ஆவதற்கு முழுக்க முழுக்க த.தே.கூட்டமைப்பே அல்லது தமிழரசுக் கட்சியே பொறுப்பு.

  • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.