Jump to content

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை!

Recommended Posts

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை!

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை!

நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகா ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காசோலை மோசடி வழக்கில் அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது என்ன மாயம் என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக ரேடியண்ட் நிறுவனத்திடம் பணம் பெற்ற விவகாரத்தில், பணத்தை திரும்ப அளிக்காததால், ரேடியண்ட் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது.

2014-ம் ஆண்டு ரூ.1.50 கோடி ரேடியன்ஸ் நிறுவனத்திடம் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளார். கடனைத் திருப்பி அளிப்பதில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மேஜிக் ப்ரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கும் நீதிமன்றம் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா அனுபவிக்கப் போகும்...   அந்த ஒரு ஆண்டு சிறைத் தண்டனை நேரம்,

அவரின் நாடகங்கள் பார்க்க முடியாமல், கன சனம் கஸ்ரப் படப் போகிறார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

ராதிகா அனுபவிக்கப் போகும்...   அந்த ஒரு ஆண்டு சிறைத் தண்டனை நேரம்,

அவரின் நாடகங்கள் பார்க்க முடியாமல், கன சனம் கஸ்ரப் படப் போகிறார்களே.

இனித்தான்  சனத்துக்கு அறிவு பிறக்கப்போகுது .

முத்தையா முரளிதரன் பிரச்சனையில் தான் ஒரு சிங்களத்தி என்று நிரூபித்தவ .

உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா??... பொன்னான வார்த்தைகளை கக்கியவர் .

Link to comment
Share on other sites

நல்ல தீர்ப்பு, இப்படியே திமுக, அதிமுக, நாதக( வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல்) களவாணிகளையும்  உள்ளே போடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கட்சியின் தலைவர்கள் மக்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள் இப்படி குளறுபடி செய்யலாமா?

Link to comment
Share on other sites

1 hour ago, zuma said:

நல்ல தீர்ப்பு, இப்படியே திமுக, அதிமுக, நாதக( வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல்) களவாணிகளையும்  உள்ளே போடவேண்டும்.

வாய் சவாலை விட்டு விட்டு ஆதாரமாக ஒன்றாய் போடவும் நாம் அவர்களை புறக்கணிக்குறோம் இல்லை என்றால் (சிவாஜி தாவணி கனவுகள் போல் பொத்தி கொள்ளளவும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவன், நம்ம நாட்டாமைக்கு தீர்ப்பு சொன்னவன்? 😎

6 minutes ago, appan said:

வாய் சவாலை விட்டு விட்டு ஆதாரமாக ஒன்றாய் போடவும் நாம் அவர்களை புறக்கணிக்குறோம் இல்லை என்றால் (சிவாஜி தாவணி கனவுகள் போல் பொத்தி கொள்ளளவும் )

அவர், ஒரு $1000 அனுப்பி இருக்கிறார். ஆதாரத்தினை இந்தியன் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைப்பார்.

தல எண்டால் சும்மாவே.... 😜

Link to comment
Share on other sites

24 minutes ago, appan said:

வாய் சவாலை விட்டு விட்டு ஆதாரமாக ஒன்றாய் போடவும் நாம் அவர்களை புறக்கணிக்குறோம் இல்லை என்றால் (சிவாஜி தாவணி கனவுகள் போல் பொத்தி கொள்ளளவும் )

உங்களுக்கு யாருடைய ஆதாரம் வேண்டும், திமுக அல்லது அதிமுக அல்லது நாதக?.
இப்படித்தான் ஒருவர் ஆதாரம் கேட்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, zuma said:

உங்களுக்கு யாருடைய ஆதாரம் வேண்டும், திமுக அல்லது அதிமுக அல்லது நாதக?.
இப்படித்தான் ஒருவர் ஆதாரம் கேட்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆

ஆதாரம் கேட்டா, சுஜ புராணம் சொல்லி கொலை போரடித்தால், ஓடுவினம் தானே ராஜா....

உங்களது, சொந்த குடும்ப கதை யாருக்கு தேவை? தெரிஞ்சு வைச்சு, ஒரு ஒத்தை டொலராவது உழைக்கலாம் எண்டாலாவது பரவாயில்லை.    😜

Link to comment
Share on other sites

7 minutes ago, zuma said:

உங்களுக்கு யாருடைய ஆதாரம் வேண்டும், திமுக அல்லது அதிமுக அல்லது நாதக?.
இப்படித்தான் ஒருவர் ஆதாரம் கேட்டு, பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆

பின்னர் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்.😆(தெரு நாயிடம் கேட்டிருப்பார் )ntk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத்குமார், ராதிகாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை

காசோலை மோசடி செய்த வழக்கில் சரத்குமார் - ராதிகா தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் சரத்குமாருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம் 2014ஆம் ஆண்டில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தைத் தயாரித்தது. இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தைத் திரும்பத் தந்துவிடுவதாகக் கூறப்பட்டது. ஆனால், பணத்தைத் தரவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பின. இது தொடர்பாக ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இது தொடர்பாக சரத்குமார் மீது ஏழு வழக்குகளும் ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டன. மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீஃபன் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டன. முதலில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிப்பதற்கான நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணைக்குவந்தபோது, தாங்கள் பணத்தைத் தரக்கூடாது என நினைக்கவில்லையென்றும் வட்டி கூடுதலாக இருந்ததால் பணத்தை உடனே திரும்பத் தரவில்லையென்றும் மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீஃபனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மூன்றாண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை என்பதால், மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார், லிஸ்டன் ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து இருவரது சிறை தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.

சரத்குமார், ராதிகாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையள் மோசடி/ஊழல் உறுதிப்படுத்தப்பட்டு சிறைக்கு போய்ட்டு வந்த உடன தியாகி ரேஞ்சில  செங்கம்பள வரவேற்பு குடுக்கவும் ஆக்கள் இருக்கினை தானே!

Link to comment
Share on other sites

36 minutes ago, வாலி said:

இவையள் மோசடி/ஊழல் உறுதிப்படுத்தப்பட்டு சிறைக்கு போய்ட்டு வந்த உடன தியாகி ரேஞ்சில  செங்கம்பள வரவேற்பு குடுக்கவும் ஆக்கள் இருக்கினை தானே!

ஊழலில், மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களை மரியாதை நிமிர்த்தமாக போய் சந்தித்து வாழ்த்தக் கூட ஆட்கள் இருப்பினம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

ஊழலில், மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களை மரியாதை நிமிர்த்தமாக போய் சந்தித்து வாழ்த்தக் கூட ஆட்கள் இருப்பினம். 

இது அண்ண‌ன் சீமானுக்கு தூர‌த்தில் இருந்து க‌ல் எறிவ‌து தெரியுது ?

அர‌சிய‌ல் வேறு ந‌ட்பு வேறு 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

ஊழலில், மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களை மரியாதை நிமிர்த்தமாக போய் சந்தித்து வாழ்த்தக் கூட ஆட்கள் இருப்பினம். 

ஊழல் மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களுக்கு ஓட்டுப் போட்டு அழகு பார்க்க கூட ஆட்கள் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

8 minutes ago, MEERA said:

ஊழல் மோசடியில் மாட்டுப்பட்டு உள்ளே இருந்து விட்டு வந்த ஆட்களுக்கு ஓட்டுப் போட்டு அழகு பார்க்க கூட ஆட்கள் இருக்கிறார்கள்.

உண்மைதான்! ஆனாலும் கொலைக்குற்றம் செய்து உள்ளே போனவரைக் கூட எம் பி ஆக்கி அழகு பார்க்கும் எம் தாயக மக்களை விட இது பரவாயில்லை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நிழலி said:

உண்மைதான்! ஆனாலும் கொலைக்குற்றம் செய்து உள்ளே போனவரைக் கூட எம் பி ஆக்கி அழகு பார்க்கும் எம் தாயக மக்களை விட இது பரவாயில்லை என நினைக்கின்றேன்.

இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை...🤣

ஏற்கனவே ரதி அக்கா தொடர்பை முறித்துவிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றங்கள்  செய்த அரசியல்வாதிகளும் கொலைகள் செய்த அரசியல்வாதிகளும் தந்திரோபயமாக தப்பித்து நீதிமன்றங்களிலிருந்தும் சாதிர்யமாக எதுவுமே நடக்காத மாதிரி வெளியே வந்து வெள்ளை வேட்டி அரசியல் செய்தால் அவர்கள் சுத்தவாளிகள் என நம்பும் மகா சனங்கள் இருக்கும் வரைக்கும்  கடவுளாலும் இந்த உலகை காப்பாற்ற முடியாது.

நிஜம் நிதர்தனம் இல்லாத மனிதர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப‌டியே க‌ணிமொழி ராசா போன்ற‌ பெரிய‌ திருட‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்டு அழ‌கு பார்க்க‌வும் எம் இன‌த்தில் ஆட்க‌ள் இருக்கின‌ம் ?

இந்த‌ உல‌கில் யார் தான் சுத்த‌ம் ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

அப்ப‌டியே க‌ணிமொழி ராசா போன்ற‌ பெரிய‌ திருட‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்டு அழ‌கு பார்க்க‌வும் எம் இன‌த்தில் ஆட்க‌ள் இருக்கின‌ம் ?

இந்த‌ உல‌கில் யார் தான் சுத்த‌ம் ஹா ஹா 😁😀

அந்த கனிமொழி முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு நன்றிக்கடன் சொல்லப்போனது போல் ஒரு நிகழ்வு நடந்தும் எங்கடை சனத்துக்கு ரோசம் மானம் வரேல்லை எண்டால்?

kanimozhi-rajapaksa.jpg

அதிலையும் இந்தியாவிலையே அலைக்கற்றை ஊழல்வழக்கு பெரிய வழக்கு....அதுவே இன்னும் ஒழுங்காய் முடியேல்லை......இந்த தேர்தல் முடிவை பார்த்து மீண்டும் தூசு தட்டுவார்கள்....

2ஜி வழக்கு விசாரணை ஜனவரியில் தனி அமர்வு | Dinamalar Tamil News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமல் உள்ளே வந்தால் ராதிகா சரத்குமார் உள்ளே செல்லத் தேவை இருக்காது
இவரது தனிமைப்படுத்தல் முடிவதற்குள்   தேர்தல் முடிவுகள் வந்துவிடும்  

தமிழ் நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய
அரசியலும் ஊழலிலும் ஏமாற்றுக்களிலும் தான் தொடர்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராதிகா ஏதாவது புதுசா சீரியல் தயாரிப்பில் இருப்பா.. வழக்கு கணக்கில் நேரம் செலவிட இயலாது தானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

இவையள் மோசடி/ஊழல் உறுதிப்படுத்தப்பட்டு சிறைக்கு போய்ட்டு வந்த உடன தியாகி ரேஞ்சில  செங்கம்பள வரவேற்பு குடுக்கவும் ஆக்கள் இருக்கினை தானே!

அதில் என்ன சந்தேகம்.  தமிழ்நாட்டில் ஊழல் செய்தவர்களை தண்டிக்க வந்த தலைவர் சசிகலாவையே சந்தித்தவர் இவர்களையும் சந்திப்பார்.

Link to comment
Share on other sites

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அதில் என்ன சந்தேகம்.  தமிழ்நாட்டில் ஊழல் செய்தவர்களை தண்டிக்க வந்த தலைவர் சசிகலாவையே சந்தித்தவர் இவர்களையும் சந்திப்பார்.

சந்தித்தது இருக்கட்டும். ஊழலுக்காக உள்ளே இருந்த கூட்டம் திரும்ப முதலமைச்சராவது பற்றி பேச ஒரு மனச்சாட்சி இருக்க வேண்டும். உலக்கை போன இடம் பாராது, ஊசி போன இடம் தேடும் கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை என்பதால், மேன்முறையீடு செய்யும்வரை குறித்த சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென வாதிடப்பட்ட நிலையில் நீதிமன்றம் தண்டனையை இடைநிறுத்தியுள்ளது. பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீபனுக்கும் இதேபோல் தண்டறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ராதிகா மற்றும் சரத்குமார் தம்பதியர் பங்குதாரர்களாகவுள்ள மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைபடத்தைத் தயாரித்திருந்தது.

இந்நிலையில், படத் தயாரிப்புக்காக ரேடியன்ற் என்ற நிறுவனத்திடமிருந்து மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் ஒன்றரை கோடி ரூபாயை கடனாகப் பெற்றிருந்தது. அத்துடன் குறித்த பணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச்சிற்குள் மீளச்செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

எனினும், பணம் மீளச் செலுத்தப்படவில்லை என்பதுடன் இது தொடர்பாக மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்த காசோலைகளும் பணமின்றித் திரும்பியதால் ரேடியன்ற் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது.

இதன்படி, சரத்குமார் மீது ஏழு வழக்குகள் போடப்பட்டதுடன் ராதிகா மீது இரு வழக்குகளும் மஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபன் மீது இரு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தன.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கு பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்ற நிலையில், தற்போது சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணைக்கு ராதிகா ஆஜராகாத நிலையில், அவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அவர், சிகிச்சை முடிந்ததும் நீதிமன்றில் ஆஜராவார் என அவரது சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1208351

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.