-
Tell a friend
-
Topics
-
Posts
-
கொஞ்சம் கொஞ்சமாய் நான் நீ என்று ஆளையால் போட்டுகுடுக்கும் காலம் வருகிறது கடைசியாக சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெகுவிரைவில் வரும் .
-
ஐபிஎல்: விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு! மின்னம்பலம் மும்பையில் நேற்று (ஏப்ரல் 22) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் படிக்கல், கோலியின் அபாரமான ஆட்டத்தால் ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். பட்லர் 8 ரன்னும், மனன் வோரா 7 ரன்னும், டேவிட் மில்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 21 ரன்னில் அவுட்டானார். சிவம் துபே 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டைப் பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து, பெங்களூரு அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கோலி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதமடித்தார். அவர் 101 ரன்னுடனும், கோலி 72 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. நேற்றைய (ஏப்ரல் 22) ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் மொத்தம் 6,021 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், மூன்றாவது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், நான்காவது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர். இன்று (ஏப்ரல் 23) இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. https://minnambalam.com/entertainment/2021/04/23/10/IPL-Bangalore-defeats-Rajasthan
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👍 -
By கிருபன் · பதியப்பட்டது
11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் குறித்தும் இந்த ஆணைக்குழு குறித்தும் நாட்டிற்கு விசர்பூனை ஆணைக்குழு என கூறினால்தான் தெரியும். அந்தளவு மோசமான, கிறுக்குத்தனமான ஆணைக்குழுவாகும். நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி சட்டத்தை ஆணைக்குழு கையில் எடுக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது. இந்த ஆணைக்குழு மூலமாக எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இன்று பிரச்சினை எழுகின்றது. ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமையொன்று பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எமக்கு தெரியவருகின்றது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள பலர் விருப்பமில்லை என்பதும் எமக்கு தெரியும். எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக செயற்பாடு அல்ல, இந்த செயற்பாடுகள் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வுகள் என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும். முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது. பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளிவந்த நேரத்தில் அவர்களை கொலைசெய்து கடலில் போட்டனர். இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம். அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார். அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதேபோல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. அதேபோல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார். https://www.virakesari.lk/article/104248
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.