Jump to content

சமஸ்கிருதமாக்கி... அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருதமாக்கி.. அழிக்கப்பட்ட, தமிழ்ச் சொற்கள்...

பூவை புஷ்பமாக்கி
அழகை சுந்தரமாக்கி
முடியை கேசமாக்கி
தீயை அக்னியாக்கி
காற்றை வாயுவாக்கி
பிணத்தை சவமாக்கி
கெட்டதை பாவமாக்கி
முகத்தை வதனமாக்கி
அறிவைப் புத்தியாக்கி
அவையை சபையாக்கி
ஆசானை குருவாக்கி
இசையை சங்கீதமாக்கி
குண்டத்தை யாகமாக்கி
பெரியதை மஹாவாக்கி
மக்களை ஜனங்களாக்கி
நிலத்தை பூலோகமாக்கி
அமிழ்தை அமிர்தமாக்கி
அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி
ஆடையை வஸ்திரமாக்கி
உணர்வற்றதை சடமாக்கி
ஓவியத்தை சித்திரமாக்கி
கலையை சாஸ்திரமாக்கி
விண்ணை ஆகாயமாக்கி
குளியலை ஸ்நானமாக்கி
தொழுதலை பூஜையாக்கி
தண்ணீரைத் தீர்த்தமாக்கி
மாணவனை சிஷ்யனாக்கி
வேண்டுதலை ஜெபமாக்கி
முறைகளை ஆச்சாரமாக்கி
பத்தாம் நாளை தசமியாக்கி
திருவிழாவை உற்சவமாக்கி
பருவமடைதலை ருதுவாக்கி
உறக்கத்தை நித்திரையாக்கி
திருமணத்தை விவாகமாக்கி
பயணத்தை யாத்திரையாக்கி
செருப்பை பாதரட்ஷையாக்கி
படையலை நைவய்தியமாக்கி
பள்ளிகளை வித்யாலயமாக்கி
பிள்ளைப்பேறை பிரசவமாக்கி
வணக்கத்தை நமஸ்காரமாக்கி
அன்பளிப்பை தட்சணையாக்கி
ஒன்பதாம் நாளை நவமியாக்கி
அறிவியலை விஞ்ஞானமாக்கி
படிப்பித்தலை அப்பியாசமாக்கி
கருவறையை கர்ப்பகிரகமாக்கி
வேளாண்மையை விவசாயமாக்கி
குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி
 
எப்படி, எப்படி.. அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன...
அனைத்து இடங்களிலும் தமிழ்ச்சொற்களை பயன்படுத்த உறுதியேற்போம்.
* தாய்மொழி, தமிழ்_மொழியைப்_பேணுவோம்...
 
  • Like 1
  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அடிமையாகிவிட்டோம் மீண்டு வருவது கடினம். தமிழையே ஆங்கிலத்தில் ரமில் (Tamil) என்றுதான் கொச்சையாகச் சொல்லி எழுதுகிறோம், ஏன் தமிழ் என்று எழுத வரவில்லை.....?? (தமிழ் Thamil)

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Paanch said:

அடிமையாகிவிட்டோம் மீண்டு வருவது கடினம். தமிழையே ஆங்கிலத்தில் ரமில் (Tamil) என்றுதான் கொச்சையாகச் சொல்லி எழுதுகிறோம், ஏன் தமிழ் என்று எழுத வரவில்லை.....?? (தமிழ் Thamil)

எண் சாத்திரம் பார்த்து.... பெயர் வைக்கும் போது, சில குழப்பம் வரத்தான் செய்யும். 😁

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.