Jump to content

“கூட்டு சமஷ்டி முறைமையே தீர்வாக அமையும்”: புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“கூட்டு சமஷ்டி முறைமையே தீர்வாக அமையும்”: புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்

இலங்கையின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவினரை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒற்றை ஆட்சியின் கீழ் பெரும்பான்மை சிங்கள மக்கள் முழுமையான அதிகாரங்களை தமக்குக் கீழ் வைத்துக்கொண்டு இந்த நாட்டின் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இதுவே கடந்தகால முரண்பாடுகளுக்கு பிரதான காரணமாகவும் அமைந்துள்ளது என்பதை கூறியிருந்த அவர்,  பொருளாதார ரீதியில் நாடு பின்னடைவை சந்திக்கவும் இதுவே பிரதான காரணமாகும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நாடு பல்லின, பல மதங்களை கொண்ட பல்லினத்தன்மை கொண்ட நாடாகும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுகொண்டது. எனவே இந்த யதார்த்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு சகலரும் இணைந்து பயணிக்கும் வழிமுறையை கையாள வேண்டும் என்பதையும் அவர் கூறியிருந்தார்.
-(3)
 

http://www.samakalam.com/கூட்டு-சமஷ்டி-முறைமையே-த/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கிருபன் said:

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதும் இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுகொண்டது. எனவே இந்த யதார்த்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு சகலரும் இணைந்து பயணிக்கும் வழிமுறையை கையாள வேண்டும் என்பதையும் அவர் கூறியிருந்தார்.

இன்னும் இருக்கிறதையும் பிடுங்கிக்கொண்டு, சர்வதேசத்தை ஏமாற்ற கண்துடைப்புக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.