Jump to content

ஐபிஎல் T20 2021 - செய்திகள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் டி20 தொடர் நாளை தொடக்கம்- முன்னேற்றம் காணுமா கொல்கத்தா?

ஐபிஎல் டி20 தொடரில் கடந்த சீசனில் தொடக்க ஜோடி, நடுவரிசை, போட்டியை வெற்றிகரமாக முடித்து வைக்கும் வீரர்ஆகியோர் கண்டறியப்பட்டிருந்தாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் கொல்கத்தா அணி தடுமாற்றம் அடைந்தது. தொடரின் நடுப்பகுதியில் கேப்டன் மாற்றப்பட்டதும் பலன் கொடுக்கவில்லை.

ஆந்த்ரே ரஸ்ஸல் கடந்தசீசனில் பேட்டிங்கில் தடுமாறினார். அதேவேளையில் சுனில்நரேன் பந்து வீச்சு பாணி சர்ச்சைக்குள்ளானது. இவர்களின் பார்ம் ஒட்டுமொத்த அணியின் ஸ்திரத்தன்மையை பதம் பார்த்தது. விளைவு 2-வதுமுறையாக கொல்கத்தா அணியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.இந்த சீசனில் கொல்கத்தா அணிதனது முதல் ஆட்டத்தில் வரும்11-ம் தேதி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

பலம்: இங்கிலாந்தின் இயன்மோர்கன் இந்த சீசனில் முழுநேர கேப்டனாக செயல்படஉள்ளார். குறுகிய வடிவிலானபோட்டிகளில் புத்திசாலித்தனமாக செயல்படக்கூடிய மோர்கன் இம்முறை அணியை முன்னோக்கி அழைத்துச் செல்லக்கூடும். வங்கதேசத்தின் ஷிகிப்அல் ஹசன், ஆஸ்திரேலியாவின் பென் கட்டிங் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோருக்கு மாற்று வீரர்களாகஇருக்கக்கூடும். வேகப் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூஸிலாந்தின் லூக்கி பெர்குசன் ஆகியோருடன் இந்தியாவின் பிரஷித் கிருஷ்ணாவும் பலம் சேர்க்கக்கூடும்.

பலவீனம்; அணியின் சுழற்பந்து வீச்சு பலவீனமாக காணப்படுகிறது. இடது கை சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் கடந்த சீசனில் 5 ஆட்டங்களில் ஒருவிக்கெட் மட்டுமே கைப்பற்றினார். சுனில் நரேன் பந்து வீச்சுபாணி விதிமுறைகளுக்கு மாறாகஇருப்பதாக கடந்த முறை புகார்எழுந்தது.மேலும் கடந்த சீசனில்17 விக்கெட்கள் வீழ்த்திய தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி இம்முறை உடற்தகுதி பிரச்சினையில் சிக்கி உள்ளார்.

https://www.hindutamil.in/news/sports/656419-ipl-t20.html

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

 • Replies 89
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் ரோஹித் சர்மா- விராட் கோலி பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் நாளை வெள்ளிகிழமை (9ம் தேதி) முதல் துவங்க உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் மூடப்பட்ட மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை 5முறை கோப்பையை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த தொடரிலும் கோப்பை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் இந்த முறையாவது கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிகக்கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இவ்விரு அணிகளுள் எந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளின் முந்தைய பதிவுகளை பொறுத்தவரை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு படி முன்னே உள்ளது என்றே கூறலாம். இதுவரை இந்த இரு அணிகளும் நேருக்கு நேராக சந்தித்த 27 போட்டிகளில், மும்பை இந்தியன்ஸ் அணி 17 போட்டிகளையும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 போட்டிகளையும் வென்றுள்ளன. ட்ராவில் முடிந்த ஒரு போட்டியை, சூப்பர் ஓவரில் வென்றுள்ளது பெங்களூரு அணி.

வெற்றி வீதம்

மும்பை இந்தியன்ஸ் அணி, புனே வாரியர்ஸுக்கு எதிரான 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று, அதன் வெற்றி சதவீதத்தை 83.33 புள்ளிகளாக வைத்துள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் அந்த அணி மோதிய 27 போட்டிகளில் 21 வென்றுள்ளது. தொடர்ந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக 17 வெற்றிகளை பதிவு செய்துள்ள மும்பை அணி, அந்த அணிக்கு எதிராக 64.81 புள்ளிகளை சேர்த்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வரையிலான ஐபிஎல் தொடர்களில், இந்த இரு அணிகலும் மோதிய போட்டிகளில் மாறி மாறி வென்றுள்ளன. அதற்கு பிறகான போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மேலும் 2016 முதல் 2019 வரையிலான ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகெதிராக ஒரு போட்டியை கூட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெல்லவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும்.

இந்தாண்டு நடக்கவுள்ள தொடரில் இந்த இரு அணிகளும் வலுவான புதிய வீரர்களை களமிறக்கவுள்ளன. மேலும் இந்த தொடரில் எந்த அணியும் அதன் சொந்த மைதானத்தில் விளையாட போவதில்லை. எனவே இந்த சீசனில் சுவாரஷ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

 

https://tamil.indianexpress.com/sports/ipl-2021-tamil-news-mi-vs-rcb-2021-head-to-head-in-tamil-290019/

Link to comment
Share on other sites

 • கிருபன் changed the title to ஐபிஎல் T20 2021 - செய்திகள்
 • கருத்துக்கள உறவுகள்

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூரு மோதல்

14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் சார்பில், ஐ.பி.எல். டி-20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 

EygWhYIVcAI_8F5.jpg

இந்திய வீரர்கள் மட்டுமின்றி வெளி வீரர்களும் கால்பதிக்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு இருந்து வருகின்றது.

இ்ந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருந்ததால் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி ஐக்கிய அரபு எமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை என்றாலும் ஐ.பி.எல். போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது. 

அதன்படி 14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் மே 30 ஆம் திகதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். 

இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான ஆமதாபாத்தில் மே 30 அன்று நடைபெறும்.

வழக்கமாக ஒவ்வொரு அணிக்கும் உள்ளூர் மைதானங்களில் 7 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும். இது தான் அந்த அணிக்கும் சாதகமான அம்சமாக இருக்கும். ஆனால் முதல்முறையாக இந்த தொடரில் எந்த அணிக்கும் தங்களது சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. 

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் போட்டியை நடத்த வேண்டி இருப்பதால் வீரர்களின் அதிகமான போக்குவரத்தை தவிர்ப்பதற்காக போட்டி நடக்கும் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்வையிட ரசிகர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. இந் நிலையில் இந்த தொடரிலும் அதற்கான வாய்ப்புகள் ரசிகர்களுக்கு இல்லாது போய், மூடிய மைதானங்களிலேயே ஆட்டங்கள் அங்கேறும்.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வீரர்களுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை இந்த முறையும் தொடரும். எந்த வீரருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அந்த வீரர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்.

இவ்வாறான பின்னணியில் சென்னையில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் 5 முறை சம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

EygZGVbU4AADIaS.jpg
 

 

https://www.virakesari.lk/article/103550

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#MIvsRCB ஐபிஎல் 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கிய ஆர்சிபி..! மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி

spacer.png

ஐபிஎல் 14வது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டி காக், குவாரண்டினில் இருப்பதால், அவருக்கு பதிலாக கிறிஸ் லின் ஆடுகிறார். ரோஹித் சர்மாவும் கிறிஸ் லின்னும் தொடக்க வீரர்களாக இறங்கினர்.

கிறிஸ் லின் ஆரம்பத்தில் திணற, ரோஹித் சர்மா பவுண்டரி, சிக்ஸர் விளாசி வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். ரோஹித் சர்மா நன்றாக ஆடிக்கொண்டிருந்த 4வது ஓவரின் கடைசி பந்தில் கிறிஸ் லின் ரன்னுக்கு அழைத்துவிட்டு, பின்னர் மறுத்ததால், ரோஹித் சர்மா 19 ரன்னில் ரன் அவுட்டாகி வெளியேறினார். ரோஹித் அவுட்டாகும் போது மும்பை அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 24. 

ரோஹித்தை ரன் அவுட்டாக்கிவிட்டதால், கூடுதல் பொறுப்புடன் ஆடவேண்டிய கட்டாயத்தில் இருந்த கிறிஸ் லின், அதிரடியாக ஆடினார். லின்னும் சூர்யகுமாரும் இணைந்து அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் 31 ரன்னில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து லின்னும் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, அணியின் ரன்வேகம் குறைய தொடங்கியது. ஹர்திக் பாண்டியா(13), இஷான் கிஷன்(28), க்ருணல் பாண்டியா(7), பொல்லார்டு(7) ஆகியோரும் ஏமாற்றமளிக்க, 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 159  ரன்கள் மட்டுமே அடித்தது. ஹர்ஷல் படேல் அபாரமாக வீசி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, எங்கோயோ போயிருக்க வேண்டிய மும்பை அணியின் ஸ்கோரை  159 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்.

160 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக கோலியும் வாஷிங்டன் சுந்தரும் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனாவிலிருந்து அண்மையில் தான் மீண்டார். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் வாஷிங்டன் சுந்தர் தொடக்க வீரராக இறங்கினார். கோலி தொடக்க வீரராக இறங்குவது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால் சுந்தர் ஓபனிங்கில் இறங்கியது சர்ப்ரைஸ் தான்.

ஆனால் தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை சுந்தர் பயன்படுத்தி கொள்ளவில்லை. தொடக்கம் முதலே சரியாக ஷாட் கனெக்ட் ஆகாமல் திணறிய சுந்தர், 10 ரன்னில் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய அறிமுக வீரர் ரஜாத் பட்டிதார் 8 ரன்னில் பவர்ப்ளேயின் கடைசி பந்தில் போல்ட்டின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலியும் மேக்ஸ்வெல்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் இணைந்து 3 வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். கோலி - மேக்ஸ்வெல் பார்ட்னர்ஷிப்பை உடைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், பும்ராவை அழைத்துவந்தார் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா. அதற்கு பலன் கிடைத்தது. 13வது ஓவரில் கோலியை 33 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பும்ரா.

இதையடுத்து 15வது ஓவரில் மும்பை அணியின் அறிமுக பவுலர் ஜென்சனின் பந்தில் 39 ரன்னில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, ஷபாஸ் அகமது மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ்.

ஆனால் டிவில்லியர்ஸ் மட்டும் ஒருமுனையில் களத்தில் நின்றதாலும், இலக்கு கடினமானது இல்லை என்பதாலும், டெத் ஓவர்களை பும்ராவும் போல்ட்டும் வீசியபோதிலும் இலக்கை எளிதாக எட்ட உதவினார் டிவில்லியர்ஸ். இதையடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ஆர்சிபி. கடைசி ஓவரின் 4வது பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்தபோதிலும், கடைசி 2 பந்தில் 2 ரன் மட்டுமே தேவை என்பதால் அதை அடித்து ஆர்சிபி வெற்றி பெற்றது. இதையடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14வது சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது ஆர்சிபி.  

 

https://tamil.asianetnews.com/sports-cricket/rcb-beat-mumbai-indians-in-first-match-of-ipl-2021-qrb5t7

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் இன்று: சென்னை சூப்பர் கிங்ஸுடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்!

 

spacer.png

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று (ஏப்ரல் 10) மும்பையில் நடக்கும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இளம் வீரர்களைக் கொண்ட ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் டுபிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதிராய்டு, ருதுராஜ் கெய்க்வாட், டோனி ஆகியோர் உள்ளனர். ஆல்-ரவுண்டரில் ஜடேஜா, சாம் கர்ரன், கிருஷ்ணப்பா கவுதம், பந்துவீச்சில் தீபக் சாகர், ‌ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர், கரண் சர்மா, நிகிடி ஆகியோர் உள்ளனர். அணிக்குப் புது வரவாக புஜாரா, ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொய்ன் அலி ஆகியோர் வந்துள்ளார்.

கடந்த ஐபிஎல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏழாவது இடத்தைப் பிடித்து முதன்முறையாக அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் உள்ளனர். அந்த அணியில் ஷிகர் தவான், ரஹானே, ஸ்டீபன் சுமித், பிரித்விஷா, அஷ்வின், ஸ்டோனிஸ், சாம் பில்லிங்ஸ், நார்ஜே, ரபடா, சுமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கிறிஸ் வோக்ஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர். டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோள் பட்டையில் காயம் அடைந்ததால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனால் புதிய கேப்டனாக இளம் வீரர் ரி‌ஷப்பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (ஏப்ரல் 10) இரவு 7.30 மணிக்கு நடக்கும் இந்த ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றியுடன் போட்டி தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ளன.

 

https://minnambalam.com/entertainment/2021/04/10/10/Chennai-super-kings-to-play-against-delhi-capitals-today

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#CSKvsDC சிஎஸ்கேவை அசால்ட்டா ஊதித்தள்ளிய பிரித்வி ஷா, தவான்..! டெல்லி கேபிடள்ஸ் அபார வெற்றி

spacer.png

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதின. மும்பையில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, சுரேஷ் ரெய்னாவின் அதிரடி அரைசதம் மற்றும் சாம் கரன், ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 20 ஓவரில் 188 ரன்களை அடித்தது சிஎஸ்கே.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுப்ளெசிஸ் ரன்னே அடிக்காமல் ஆவேஷ் கானின் பந்தில் 2வது ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ருதுராஜ் கெய்க்வாட்டை கிறிஸ் வோக்ஸ் 5 ரன்னில் வீழ்த்த, 7 ரன்னுக்கே சிஎஸ்கே அணி 2 விக்கெட்டை இழந்தது.

கடந்த சீசனில் ஆடாமல், இந்த சீசனில் கம்பேக் கொடுத்த ரெய்னா, அதிரடியாக ஆடி செம கம்பேக் கொடுத்தார். ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அஷ்வின் மற்றும் மிஷ்ராவின் ஸ்பின் பவுலிங்கை ரெய்னாவும் மொயின் அலியும் இணைந்து அடித்து நொறுக்கினர். 

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 3வது விக்கெட்டுக்கு 53 ரன்களை சேர்த்தனர். அதிரடியாக ஆடிய மொயின் அலி, அஷ்வின் பந்தில் 36 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ராயுடுவும் ரெய்னாவுடன் இணைந்து அடித்து ஆடினார். ஆனால் அவரும் நிலைக்கவில்லை. அதிரடியாக ஆடிய ரெய்னா அரைசதம் அடித்து சிஎஸ்கே அணியில் செம கம்பேக் கொடுத்த வேளையில், ராயுடு 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ராயுடு விக்கெட்டுக்கு பின், ஜடேஜா ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். 16வது ஓவரின் முதல் பந்தை ஜடேஜா ஆட, அதற்கு 2வது ரன் ஓட முயன்றபோது ஜடேஜா, பவுலர் ஆவேஷ் கான் மீது மோதியதால் 2வது ரன்னை ஓட முடியாமல் திரும்ப, பாதி பிட்ச்சுக்கு ஓடிவந்த ரெய்னாவால் க்ரீஸுக்கு திரும்ப முடியவில்லை. எனவே 54 ரன்னில் ஆட்டமிழந்தார். தோனி, அதேஓவரில் ஆவேஷ் கானின் பந்தில் டக் அவுட்டானார்.

இதையடுத்து டெத் ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சாம் கரன் 15 பந்தில் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்தில் 26 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்கள் அடித்தது.

இதையடுத்து 189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷாவும் ஷிகர் தவானும் அந்த இலக்கை எளிதானதாக்கினர். தொடக்கம் முதலே பிரித்வி ஷாவும் தவானும் அடித்து ஆடினர். தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், சாம் கரன் ஆகிய அனைவரின் பவுலிங்கையும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி, பவர்ப்ளேயிலேயே 66 ரன்களை குவித்துவிட்டனர்.

அதன்பின்னர் மிடில் ஒவர்களிலும் அதிரடியாக ஆடினர். ரன் வேகம் கொஞ்சம் கூட குறையாமல் அபாரமாக அடித்து ஆடினர். பிரித்வி ஷா 27 பந்தில் அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து தவானும் அரைசதம் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து 13.3 ஓவரில் 138 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா, 38 பந்தில் 72 ரன்கள் அடித்து பிராவோவின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த தவான்,  85 ரன்கள் அடித்த நிலையில், ஷர்துல் தாகூரின் பந்தில் தவான் ஆட்டமிழந்தார். தவான் 53 பந்தில் 85 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பிரித்வி ஷாவும் தவானும் இணைந்து வெற்றியை உறுதியாக்கிவிட்டதால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.  

https://tamil.asianetnews.com/sports-cricket/delhi-capitals-beat-csk-in-ipl-2021-qrczrr

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021: வலிமையான சன் ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்ளும் கொல்கத்தா!

spacer.png

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்தியாவில் 14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை வழக்கமாக கொண்டுள்ளது வார்னரின் ஐதராபாத் அணி. கடந்தாண்டு கூட கடைசி அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, இரண்டாவது குவாலிபயர் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வியடைந்து மூன்றாவது இடம் பிடித்தது.

 

பெரும் தலைவலி
சென்னையில் நடக்கும் இந்த போட்டி முதல் போட்டியைப் போல மீண்டும் ரசிகர்களுக்கு ஒரு த்ரில்லர் போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜேசன் ராய், ஜேசன் ஹோல்டர் என ஐதராபாத் அணிக்கு பல வெளிநாட்டு வீரர்களின் தேர்வுக்கான வாய்ப்பு இருந்தாலும் வெறும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் பங்கேற்க முடியும் என்பதால், வார்னர், கேன் வில்லியம்சன் ஆகியோரின் இடங்களை தவிர்த்து மற்ற இரு வீரர்களை தேர்வு செய்யும் தலைவலி உள்ளது. அதே நேரம் பவுலர்களில் முஜீப் உர் ரஹ்மானையும் அந்த அணி கருத்தில் கொண்டால் எப்படி சிறந்த விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்வது என்ற சிக்கல் ஏற்படும். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் தலைமையில் டி நடராஜன், ரசித் கான் என வலிமையான வீரர்களின் வரிசை அந்த அணிக்கு கூடுதல் பலம்.

இது வரலாறு
இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ள போட்டிகளில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 12 போட்டிகளிலும், சன் ரைசர்ஸ் அணி 7 போட்டிகளிலும் வென்றது. சென்னை சேப்பாக்க ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் என்பதால் இன்றைய போட்டி கண்டிப்பாக பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். கடைசியாக கடந்தாண்டு அக்டோபர் 18 ம் தேதி இரு அணிகள் மோதிய போட்டி டை ஆனது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி வென்றது.

 

வார்னர் ஆதிக்கம்
இரு அணிகளில் உள்ள வீரர்களில் கொல்கத்தா அணிக்கு எதிராக கடந்த 2017 இல் ஐதராபாத் வீரர் வார்ன 59 பந்துகளில் 126 ரன்கள் விளாசியதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் வீரர் அடித்த ஒரே சதமாகும். மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக இதுவே ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராகவும் ஐதராபாத் அணிக்காக உள்ளது. தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் வார்னரே முதலிடத்தில் உள்ளார். இவர் 14 இன்னிங்சில் 26 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
 

https://www.updatenews360.com/sports/srh-take-on-kolkata-knight-riders-in-ipl-3rd-league-match/

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#IPL2021 பேர்ஸ்டோ, மனீஷ் பாண்டே அரைசதம்..! ஆனாலும் சன்ரைசர்ஸை வீழ்த்தி கேகேஆர் அபார வெற்றி

spacer.png

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னையில் நடந்தது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினார்.

நிதிஷ் ராணாவும் திரிபாதியும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த திரிபாதி 53 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ரசல்(5) மற்றும் மோர்கன்(2) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டெத் ஓவரில் அடித்து ஆடிய தினேஷ் கார்த்திக், 9 பந்தில் 22 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி 187 ரன்கள் அடித்தது.

188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் வார்னர் 2வது ஓவரில் 3 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ரிதிமான் சஹாவும் 7 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 10 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணியை பேர்ஸ்டோவும் மனீஷ் பாண்டேவும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர்.

அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோ அரைசதம் அடிக்க, மனீஷ் பாண்டே அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடினார். சிறப்பகா ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோ 55 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரன் வேகம் குறைந்தது. முகமது நபி 11 பந்தில் 14 ரன்களும், விஜய் சங்கர் 7 பந்தில் 11 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.

கடைசி 2 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 7ம் வரிசையில் இறங்கிய அப்துல் சமாத் 8 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் அடித்தார். 55 ரன்களுடன் மனீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனாலும் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 177 ரன்கள் மட்டுமே அடிக்க, 10 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.  
 

https://tamil.asianetnews.com/sports-cricket/kkr-beat-sunrisers-hyderabad-by-10-runs-in-ipl-2021-qreu7k

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#RRvsPBKS கேஎல் ராகுல், தீபக் ஹூடா காட்டடி பேட்டிங்..! 20 ஓவரில் 221 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ்

spacer.png

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால், 14 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் அறிமுக பவுலர் சக்காரியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கெய்ல் அதிரடியாக ஆடி 40 ரன்களை அடித்த நிலையில், ரியான் பராக்கின் சுழலில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடிய ராகுல், அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா, 20 பந்தில் அரைசதம் அடித்தார்.

3வது விக்கெட்டுக்கு ராகுலும் ஹூடாவும் இணைந்து 8 ஓவரில் 105 ரன்களை குவித்தனர். ஹூடா 28 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 91 ரன்கள் அடித்த ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. 222 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டிவருகிறது.  

 

https://tamil.asianetnews.com/sports-cricket/kl-rahul-and-deepak-hooda-fifties-lead-punjab-kings-set-tough-target-to-rajasthan-royals-in-ipl-2021-qrgl6i

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#RRvsPBKS அதிரடி சதமடித்து கடைசி பந்து வரை போராடிய சஞ்சு சாம்சன்..! கடைசி பந்தில் பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி

spacer.png

ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால், 14 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியின் அறிமுக பவுலர் சக்காரியாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த கெய்ல் அதிரடியாக ஆடி 40 ரன்களை அடித்த நிலையில், ரியான் பராக்கின் சுழலில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா, சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக ஆடிய ராகுல், அரைசதம் அடிக்க, தீபக் ஹூடா, 20 பந்தில் அரைசதம் அடித்தார்.

3வது விக்கெட்டுக்கு ராகுலும் ஹூடாவும் இணைந்து 8 ஓவரில் 105 ரன்களை குவித்தனர். ஹூடா 28 பந்தில் 64 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 91 ரன்கள் அடித்த ராகுல் கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

222 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பென் ஸ்டோக்ஸும் மனன் வோராவும் களமிறங்கினர். ஷமியின் முதல் ஓவரிலேயே ஸ்டோக்ஸ் ரன்னே அடிக்காமலும், மனன் வோரா 12 ரன்னிலும் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சாம்சனுடன் இணைந்து நன்றாக ஆடிய பட்லர் 26 ரன்னில் ஜெய் ரிச்சர்ட்ஸனின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் துபேவும் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியை தொடர்ந்த சாம்சன், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, ரியான் பராக் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 11 பந்தில் 25 ரன்களை அடித்து ஷமியின் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்துகொண்டே இருந்தாலும், மறுமுனையில் நிலைத்து அடித்து ஆடிய சஞ்சு சாம்சன், சதமடித்து கடைசி வரை களத்தில் நின்று போராடினார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் அடிக்காத சாம்சன், 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 3வது பந்தில் மோரிஸ் சிங்கிள் எடுக்க, 4வது பந்தில் சிக்ஸர் அடித்த சாம்சன், 5வது பந்தில் சிங்கிள் ஓட மறுத்தார். எனவே கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தை சிக்ஸர் விளாச வேண்டிய கட்டாயத்தில் இருந்த சாம்சன், பந்தை தூக்கியடிக்க, அது கேட்ச் ஆனது. இதையடுத்து 4 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி தோற்றிருந்தாலும், சஞ்சு சாம்சன் தனிநபராக போராடியது பார்க்க அருமையாக இருந்தது. சாம்சன் 63 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 119 ரன்களை குவித்தார்.  

https://tamil.asianetnews.com/sports-cricket/punjab-kings-thrill-win-against-rajasthan-royals-in-ipl-2021-qrgqpx

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த மட்ச்சில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு அப்பால் சம்சனுக்குகாக அந்த அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்;பாராட்டுக்கள் இளம் மற்றும் முதல் கப்ரனுக்கு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1618253882855929-0.png
1618253878696001-1.png
 
இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்ஸன் பஞ்சாப்புக்கு எதிராக அடித்த 63 பந்து 119 ஐ.பி.எல் வரலாற்றின் தலைசிறந்த சதங்களில் ஒன்று. 222 எனும் கிட்டத்தட்ட அசாத்தியமான இலக்கை கடைசி வரை நின்று அடித்து எட்டித் தொட முயன்றது சாதாரண சாதனை அல்ல. ஒருவேளை சஞ்சு இன்று வென்றளித்திருந்தால் கூட இந்த சதத்துக்கு இப்படி ஒரு காவிய அழகு வந்திருக்காது. வெற்றிக்கு பக்கத்தில் போய் தோற்கும் போது அதன் முற்றுப் பெறாத தன்மை அந்த முயற்சிக்கு ஒரு முடிவற்ற அழகைக் கொடுக்கிறது. இந்த விசயத்தில் அவர் பழைய சச்சினை நினைவுபடுத்துகிறார்!
 
துவக்க மட்டையாளர்கள் இன்னும் வேகமாக அடித்திருந்தாலோ பின்னால் ஆட வந்த திவாரியும் மோரிசும் அந்த நான்கு பந்துகளை வீணடிக்காமல் ஒற்றை ஓட்டங்கள் எடுத்திருந்தால் நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்காமல் இருந்திருப்பார்களோ?
 
அதுவும் திவாரி சற்று வைடாக விழுந்த பந்துகளை கவருக்கு மேல் அடிக்க முயன்றது தவறாகியது. அவருடைய ஷாட் தேர்வு இன்று சரியாக இருந்திருந்தால் கதையே வேறு. மோரிசும் அப்படியே - அடிக்க வேண்டிய நீளத்தில் விழுந்த இரு பந்துகளை அவரால் சரியாக அடிக்க முடியவில்லை. ஒரு சின்ன விசயம் தான் - அது ஆட்டத்தின் தலைவிதியை மாற்றியது.
 
பஞ்சாப்பை பொறுத்த மட்டில் ஹூடாவின் அந்த சூறாவளி இன்னிங்ஸுக்குப் பிறகு பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் காட்டிய நிதானம், புத்திசாலித்தனம் வெற்றிக்கு உதவியது.
 
மறக்க முடியாத ஆட்டம்!
 
 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

 

spacer.png

சென்னையில் நேற்று (ஏப்ரல் 13) இரவு நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 5ஆவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இதன்படி விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோஹித் சர்மாவும் மும்பை அணியின் இன்னிங்ஸைத் தொடங்கினர். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் முதல் ஐந்து ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன் ஆகியோரை மோர்கன் பயன்படுத்தினார். டி காக் (2 ரன்), வருண் சக்ரவர்த்தி வீசிய பந்தைத் தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டினார். ஹர்பஜன் சிங்கின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி ஓடவிட்டார். இதேபோல் பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சருடன் அரை சதத்தை நிறைவு செய்தார்.

சூர்யகுமார் களத்தில் நின்றது வரை மும்பையின் ஸ்கோர் 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் அவர் வீழ்ந்ததும் நிலைமை தலைகீழானது. அணியின் ஸ்கோர் 86 ரன்களாக (10.3 ஓவர்) உயர்ந்த போது சூர்யகுமார் யாதவ் 56 ரன்களில் (36 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ஷகிப்பின் சுழலில் சிக்கினார்.

அடுத்து வந்த இஷான் கிஷன் (1 ரன்) ரன் ரேட்டை அதிகப்படுத்தும் நோக்கில் அவசரகதியில் விளையாடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோஹித் சர்மா 43 ரன்களில் (32 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கம்மின்சின் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா (15 ரன்), பொல்லார்ட் (5 ரன்) அடுத்தடுத்து வெளியேற ரன் வேகம் வெகுவாக தளர்ந்தது. இறுதிக்கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் அவர்களை அச்சுறுத்தினார். கடைசி ஓவரில் 2 பவுண்டரி அடித்து ஒரு வழியாக 150 ரன்களை தொட வைத்த குருணல் பாண்ட்யா (15 ரன்) அதே ஓவரில் கேட்ச் ஆனார்.

20 ஓவர்களில் மும்பை அணி 152 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. கடைசி 5 ஓவர்களில் அந்த அணி 38 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல் 5 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, ஷகிப் அல்-ஹசன், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணாவும், சுப்மான் கில்லும் 72 ரன்கள் (8.5 ஓவர்) திரட்டி வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைக்கீழாக மாறியது.

சுப்மான் கில் 33 ரன்னிலும் (24 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிதிஷ் ராணா 57 ரன்னிலும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) ராகுல் சாஹரின் சுழற்பந்து வீச்சுக்கு பலியானார்கள். மிடில் ஓவர்களில் அவர் கொடுத்த அழுத்தத்தில் கொல்கத்தா அணியினர் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

திரிபாதி (5 ரன்), கேப்டன் மோர்கன் (7 ரன்), ஷகிப் அல்-ஹசன் (9 ரன்) ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. மும்பையின் பந்து வீச்சில் கடைசி 5 ஓவர்களில் ரன் எடுப்பது எப்படி என்றே தெரியாமல் கொல்கத்தா அணியினர் தடுமாறினர்.

கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. அதிரடி சூரர்கள் தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல் களத்தில் இருந்தனர். பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசினார். அட்டகாசமாக பந்து வீசிய பவுல்ட், ரஸ்செல் (9 ரன்), அடுத்து வந்த கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் மும்பை அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது. சென்னையில் நடக்கும் இரண்டாவது ஆட்டத்தில் ஆடிய மும்பைக்கு இது முதலாவது வெற்றியாகும்.

இன்றைய (ஏப்ரல் 14) ஐபிஎல் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சென்னையில் மோதுகின்றன.

https://minnambalam.com/entertainment/2021/04/14/10/ipl-Mumbai-Indians-beat-Kolkata

 

 

 

Link to comment
Share on other sites

நடந்த 5 மேட்சுலயும்.. "மேன் ஆப் மேட்ச்" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ? By Saravanamanoj M Updated: Wednesday, April 14, 2021, 16:28 [IST] சென்னை:
 
ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர். போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது.
 
ஹர்ஷல் பட்டேல்
 
பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 
நிதிஷ் ராணா
 
ராணா கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது.
 
சஞ்சு சாம்சன்
 
 
கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
ராகுல்  சஹார்
 
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னணி பின்னணி இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர்.
 
அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும்.

Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2021-only-indian-players-has-won-the-man-of-the-match-award-in-last-5-matches-026080.html?ref_medium=Desktop&ref_source=MK-TA&ref_campaign=Similar-Topic-Slider
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி

ஐ.பி.எல். தொடரில் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி ஆறு ஓட்டங்களினால் திரில் வெற்றி பெற்றுள்ளது.

Ey8lgjEUcAQgoun.jpg

14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆறாவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

போட்டியில் ஐதராபாத் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பை தேர்வுசெய்ய, பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரர்களாக அணித் தலைவர் விராட்கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் வீசினார். அந்த ஓவரில் 2 ஆவது பந்தை விராட்கோலி பவுண்டரிக்கு விரட்டி ஓட்ட கணக்கை தொடங்கினார். 

அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசிய படிக்கல் 2.5 ஆவது ஓவரில் புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் மொத்தமாக 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷபாஸ் அஹமட் அதிரடியாக ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். பவர்பிளேயான முதல் 6 ஓவரில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின்னர் 6.1 ஆவது ஓவரில் ஷபாஸ் அஹமட் 14 ஓட்டங்களுடன்  ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் ரஷித் கானிடம் பிடிகொடுத்தார். அடுத்து மெக்ஸ்வெல் களம் இறங்கினார். 

முதலில் நிதானத்தை கடைப்பிடித்த மெக்ஸ்வெல் 11 ஆவது ஓவரில் ஷபாஸ் நதீம் பந்து வீச்சில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். 

Ey8dEJmUUAA4uJ0.jpg

நிலைத்து நின்று ஆடிய விராட்கோலி 33 ஓட்டங்களில் ஜோசன் ஹோல்டர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

சுழற்பந்து வீச்சில் கலக்கிய ரஷித் கான் தனது அடுத்தடுத்த ஓவர்களில் டிவில்லியர்ஸ் (1 ஓட்டம்), வொஷிங்டன் சுந்தர் (8 ஓட்டம்) விக்கெட்டை கைப்பற்றினார். 

அடுத்து வந்த டேன் கிறிஸ்டியன் ஒரு ஓட்டத்துடன் நடராஜன் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் விருத்திமான் சஹாவிடம் பிடி கொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

இறுதி கட்டத்தில் மெக்ஸ்வெல் அடித்த பவுண்டரி, சிக்ஸரால் அந்த அணி சற்று சவாலான ஓட்ட இலக்கை எட்டியது. 

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களை குவித்தது.

மெக்ஸ்வேல் 20 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 59 ஓட்டங்களுடன் (41 பந்து, 3 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழக்க மறுபக்கம் ஹக்ஷர் படேல் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பின்னர் 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஒரு ஓட்டத்துடன் மொஹமட் சிராஜின் பந்து வீச்சில் மெக்ஸ்வலிடம் பிடிகொடுத்தார்.

அடுத்து மனிஷ் பாண்டே டேவிட் வோர்னருடன் இணைந்து நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 13.2 ஓவரில் 96 ஆக இருந்த போது டேவிட் வோர்னர் 54 ஓட்டங்களில்  (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) கைல் ஜோமிசன் பந்து வீச்சில் கிறிஸ்டியனிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

Ey8vUG_UUAMOJzF.jpg

அதன் பின்னர் 17 ஆவது ஓவரில் ஷபாஸ் அஹமட் தனது மாயாஜால சூழலில் ஜோனி பேர்ஸ்டோ (12 ஓட்டம்), மனிஷ் பாண்டே (38 ஓட்டம்) அப்துல் சமாத் (0) ஆகிய 3 விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் சாய்த்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.

Ey84GUMVEAIWk-f.jpg 

அடுத்து வந்த விஜய் சங்கர் 3 ஓட்டங்களிலும், ஹோல்டர் 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இறுதி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். 

அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 9 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. 

இறுதியாக ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 143 ஒட்டங்களை மாத்திரம் பெற்றது. இதனால் பெங்களூரு அணி 6 ஓட்ட வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. 

Ey88uPzVgAIb7JM.jpg

போட்டியின் ஆட்டநாயகனாக மெக்ஸ்வேல் தெரிவானார்.

Ey9KnY2VcAA0rPe.jpg

பெங்களூரு அணி தொடர்ச்சியாக பெற்ற 2 ஆவது வெற்றி இது என்பதுடன் ஐதராபாத் அணிக்கு இது 2 ஆவது தோல்வியாகும்.

 

https://www.virakesari.lk/article/103803

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மில்லர் - மோரிஸின் அதிரடியால் ராஜஸ்தானிடம் வீழ்ந்தது டெல்லி

மில்லர் மற்றும் கிறிஸ் மோரிஸின் அதிரடி ஆட்டத்தினால் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ரோயல்ஸ்.

cLdSZlN7.jpg

14 ஆவது ஐ.பி.எல். தொடரின் 7 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு மும்பையில் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முன்னணி வீரர்களான பிரித்வி ஷா (2), ஷிகர் தவான் (9), ரகானே (8) ஆகியோரை  இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட் இன் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற்றினார்.

அடுத்து மார்கஸ் ஸ்டாய்னிஸை டக்அவுட்டில் வெளியேற்றினார் முஸ்தாபிசுர் ரஹ்மான். இதனால் டெல்லி அணி 37 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அணித் தலைவர் ரிஷாத் பந்த் ஒருபக்கம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 51 ஓட்டங்களை எடுத்து ரன்அவுட் ஆனார்.

அதன் பின்னர் லலித் யாதவ் 20 ஓட்டங்களுடனும், டொம் கர்ரன் 21 ஓட்டங்களுடனும், கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்தது.

148 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர்.

டெல்லி அணியின் சிறப்பான பந்து வீச்சுகளினால் பட்லர் (2), வோரா (9), சஞ்சு சாம்சன் (4), ஷிவம் டூபே (2), ரியான் பராக் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

EzB3NGEVgAQTS9g.jpg

ராஜஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 42 ஓட்டங்களை எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் அரை சதமடித்து 47 பந்தில் 62 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ராகுல் திவாட்டியா 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

இறுதியில் கிறிஸ் மோரிஸும், உனத்கட்டும் கிடைத்த பந்துகளில் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினர்.

இறுதி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

கிறிஸ் மோரிஸ் 2 சிக்ஸருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மோரிஸ் மொத்தமாக 18 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்களுடனும், உனத்கட் 11 ஓட்டங்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். 

HyLjf5UC.jpg

இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் மீதமாக 2 பந்துகள் இருக்க ராஜஸ்தான் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக உனத்கட் தெரிவானார்.

EzCX8dUVcAEyItv.jpg

 

https://www.virakesari.lk/article/103847

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாப்பைச் சாய்த்த சிஎஸ்கே!

 

spacer.png

எட்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியின் அபாரமான பந்துவீச்சால் 20 ஓவர்களில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 15.4 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திய ஐபிஎல் தொடரின் 8ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 16) நடைபெற்றது.

 

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். கடந்த ஐந்து போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறிய தீபக் சாஹர் பந்து வீச்சு நேற்று மின்னல்போல ஊடுருவியது.

முதல் ஓவரின் நான்காவது பந்தில் மயங்க் அகர்வால் (0), இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் கே.எல்.ராகுல் (5) ரன் அவுட், மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் கிறிஸ் கெய்ல் (10), நான்காவது பந்தில் நிக்கோலஸ் பூரன் (0), நான்காவது ஓவரின் இரண்டாவது பந்தில் தீபக் ஹூடா (10) ஆகியோர் வீழ்ந்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 6.2 ஓவரில் 26 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. தீபக் சாஹர் நான்கு ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகள் சாய்த்து, பஞ்சாப் அணியை பதம் பார்த்தார்.

அதிலிருந்து பஞ்சாப் அணியால் மீண்டு வர முடியவில்லை. ஷாருக் கான் 36 பந்தில் 47 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி 106 ரன்களே எடுத்தது.

 

இதைத் தொடர்ந்து 107 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 5 ரன்களில் வெளியேற அதன் பிறகு வந்த மொயின் அலி, டு பிளெசிஸுக்குப் பக்கபலமாக இருந்து 31 பந்துகளில் 46 ரன்களைச் சேர்த்தார்.

மொயில் அலி அரை சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அஷ்வின் வீசிய பந்தில் வெளியேறினார். அதன் பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 8 ரன்களிலும், அம்பத்தி ராயுடு ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய சாம் கரன் 5 ரன்கள் அடித்து வெற்றி இலக்குக்கு அணியை அழைத்துச் சென்றார். டு பிளெசிஸ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட 107 ரன்களை எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பாண்டு ஐபிஏல் போட்டியில் சிஎஸ்கே அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இன்று (ஏப்ரல் 17) இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடக்கும் 9ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

https://minnambalam.com/entertainment/2021/04/17/7/IPL-CSK-wins-Punjab

 

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐதராபாத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த மும்ப‍ை

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

EzMVzLcVcAE3bBr.jpg

14 ஆவது ஐ.பி.எல். டி-20 தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்களாக அணித் தலைவர் ரோகித் சர்மாவும் டிகொக்கும் களமிறகி, பவுண்டரியுடன் ஓட்ட கணக்கை தொடங்கினர். முஜீப் ரஹ்மான், புவனேஷ்வர்குமாரின் ஓவர்களில் சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ரோகித் சர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை உருவாக்கினார். 

இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 53 ஓட்டங்களை திரட்டினர். எனினும் இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளர் விஜய் சங்கர் பிரித்தார். 

அதன்படி 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் துடுப்பெடுத்தாடிய ரோகித் சர்மா 6.3 ஆவது ஓவரில் விஜய் சங்கரின் பந்து வீச்சில் விராட் சிங்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவையும் 10 ஓட்டங்களுடன் வெளியேற்றினார் விஜய் சங்கர்.

அதன் பிறகு மும்பையின் ஓட்ட வேகம் வெகுவாக தளர்ந்தது. 

தொடர்ந்து டிகொக் 40 ஓட்டங்களுடனும், இஷான் கிஷன் 12 ஓட்டங்களுடனும், ஹர்த்திக் பாண்டியா 7 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கடினமான இந்த ஆடுகளத்தில் இறுதிக் கட்டத்தில் பொல்லார்ட் மாத்திரம் ஆறுதல் அளித்தார். 

சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரஹ்மானின் பந்துவீச்சில் விளாசிய ஒரு சிக்சர் 105 மீட்டர் தூரத்துக்கு பறந்தது. இந்த சீசனில் மெகா சிக்ஸர் இது தான். இதே போல் புவனேஷ்வர்குமாரின் ஓவரில் கடைசி இரு பந்தையும் சிக்ஸராக்கி 150 என்ற சவாலான ஓட்டத்தை அடைவதற்கு வழிவகுத்தார். 

20 ஓவர்கள் நிறைவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றது.

பொல்லார்ட் 35 ஓட்டங்களுடனும் (22 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்), குருணல் பாண்டியா 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

151 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஐதராபாத்தின் தொடக்க வீரர்களாக அணித் தலைவர் டேவிட் வோர்னரும், ஜோ பெயர்ஸ்டோவும் களம் புகுந்தனர். 

பெயர்ஸ்டோ வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸரை பெற்று அதிரடி காட்டினார். அது மாத்திரமன்றி ஆடம் மில்னேவின் பந்து வீச்சில் 2 சிக்ஸரையும் தெறிக்க விட்டார். 

இதனால் பவர்-பிளேயில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 57 ஓட்டங்களை எடுத்து வலுவான நிலையில் இருந்தது.

EzMEPV2VcAsZsrR.jpg

எனினும் எதிர்பாராதவிதமாக பேர்ஸ்டோ 43 ஓட்டங்களுடன் ஸ்டம்பை மிதித்து ‘ஹிட் விக்கெட்’ ஆகிப்போனார். அதேபோல் வோர்னர் 36 ஓட்டங்களுடன் அநாவசியமாக ரன்-அவுட் ஆக, ஆட்டத்தின் போக்கு மும்பை பக்கம் திரும்பியது. 

நடுத்தர வரிசையில் விஜய் சங்கர் மாத்திரம் 28 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக ஐதராபாத் அணி 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 13 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

EzMIuW5VcAUknny.jpg

மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ராகுல் சஹார் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குருணல் பாண்டியா தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக பொல்லார்ட் தெரிவானர்.

இந்த வெற்றி மும்பையின் இரண்டாவது வெற்றி என்பதுடன், ஐதராபாத் அணியின் மூன்றாவது தோல்வியும் ஆகும்.

 

https://www.virakesari.lk/article/103938

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

#IPL2021 ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஆர்சிபி ஹாட்ரிக் வெற்றி..! கேகேஆரை வீழ்த்தி அபார வெற்றி

spacer.png

ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த சீசனை சிறப்பாக தொடங்கி முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது.

கேப்டன் கோலியும்(5), ரஜாத் பட்டிதரும்(1) 2வது ஓவரிலேயே ஆட்டமிழக்க, 9 ரன்னுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர் தேவ்தத் படிக்கல்லும் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் இந்த சீசனில் அபாரமாக ஆடிவரும் க்ளென் மேக்ஸ்வெல் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாகவே ஆடிய மேக்ஸ்வெல்லால் சென்னை வெயிலை தாங்கமுடியாமல் திணறினார்.

அதிரடியாக ஆடி 49 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் அடித்து 17வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் ஸ்கோர் செய்யும் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த டிவில்லியர்ஸ், ரசல், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் சிக்ஸர் மழை பொழிந்து 34 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆர்சிபி அணி 20 ஓவரில் 204 ரன்களை எட்ட உதவினார்.

20 ஓவரில் 204 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 205 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்தது. 205 ரன்கள் எண்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியில் அதிரடியாக தொடங்கிய கில் 9 பந்தில் 21 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ராணா(18), திரிபாதி(25), தினேஷ் கார்த்திக்(2), மோர்கன்(29), ஷகிப் அல் ஹசன்(26) ஆகியோர் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கேகேஆர் அணிக்கு அழுத்தம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் 20 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழக்க, 20 ஓவரில் கேகேஆர் அணி வெறும் 166 ரன்கள் மட்டுமே அடித்து 38 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றியின் மூலம், இந்த சீசனில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது ஆர்சிபி அணி. ஐபிஎல்லில் முதல் முறையாக ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்றுள்ளது.  
 

https://tamil.asianetnews.com/sports-cricket/rcb-beat-kkr-by-38-runs-in-ipl-2021-qrrjtl

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி!

spacer.png

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (ஏப்ரல் 18) ஒரே நாளில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் 196 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 11ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

 

டெல்லி அணியில் ரஹானே, டாம் கர்ரன் நீக்கப்பட்டு ஸ்டீவன் சுமித், புதுமுக வீரர் லுக்மன் மெரிவாலா சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் ஒரே மாற்றமாக முருகன் அஸ்வினுக்கு பதிலாக ஜலஜ் சக்சேனா இடம் பெற்றார். ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய அழைத்தார்.

இதன்படி பஞ்சாப்பின் இன்னிங்ஸை கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் தொடங்கினர். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் இருவரும் டெல்லி பந்து வீச்சை பின்னியெடுத்தனர். ஒரு சில கேட்ச் ஆபத்தில் இருந்து தப்பித்த இவர்கள் ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் 59 ரன்கள் சேகரித்தனர்.

தொடர்ந்து பம்பரமாகச் சுழன்ற இவர்கள் ரபடாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டி அவரை மிரள வைத்தனர். 10.1 ஓவர்களில் பஞ்சாப் 100 ரன்களைக் கடந்தது.

ஸ்கோர் 122 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை ஒரு வழியாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மெரிவாலா பிரித்தார். அவரது பந்து வீச்சில் மயங்க் அகர்வால் (69 ரன், 36 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் தனது 23ஆவது அரை சதத்தை நிறைவு செய்த லோகேஷ் ராகுல் 61 ரன்களில் (51 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) ரபடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி பகுதியில் ரன் வேகம் சற்று குறைந்தது. கிறிஸ் கெய்ல் 11 ரன்னும், நிகோலஸ் பூரன் 9 ரன்னும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இறுதி ஓவரில் தமிழக ஆல்-ரவுண்டரான ஷாருக்கான் 2 பவுண்டரியும், ஒரு சிக்சரும் ஓடவிட்டு அணியின் ஸ்கோரை 190 ரன்களை எட்ட வைத்தார்.

 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. தீபக் ஹூடா 22 ரன்னுடனும், ஷாருக்கான் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். டெல்லி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மெரிவாலா, ரபடா, அவேஷ்கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் (5.3 ஓவர்) எடுத்து அருமையான தொடக்கம் தந்தனர். தவானின் ரன் மழையால் டெல்லி அணி இலக்கை நோக்கி வேகமாகப் பயணித்தது.

சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான் 92 ரன்களில் (49 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்), ஜய் ரிச்சர்ட்சனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதற்கிடையே ஸ்டீவன் சுமித் 9 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரிஷப் பண்டும் (15 ரன்) தாக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் தவான் கொடுத்த அடித்தளத்தை பஞ்சாப் பவுலர்களால் அசைக்க முடியவில்லை.

டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கஸ் ஸ்டோனிஸ் 27 ரன்னுடனும், லலித் யாதவ் 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். பஞ்சாப் சந்தித்த இரண்டாவது தோல்வியாகும்.

 

இன்று (ஏப்ரல் 19) இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன.


https://minnambalam.com/entertainment/2021/04/19/9/IPL-Delhi-defeats-Punjab

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் அணி எந்தப் பெரிய இலக்கை நிர்னையித்தாலும் எதிரனி எட்டிப் பிடிக்குது.பஞ்சாப்பின் ராசி அப்படி.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

பஞ்சாப் அணி எந்தப் பெரிய இலக்கை நிர்னையித்தாலும் எதிரனி எட்டிப் பிடிக்குது.பஞ்சாப்பின் ராசி அப்படி.

மற்றவர்கள் மொட்டையும் தொப்பியுமாய் இருக்கிறார்கள் பிடிக்கிறது கஷ்டம், இவர்கள் ஒன்பது கஜம் துணி கட்டி இருப்பதால் எளிதில் எட்டிப்பிடித்து விடுகிறார்கள்......!  😁

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது வெற்றியும், இரண்டாவது தோல்வியும்

ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

EzWk7xoVUAQ6PmJ.jpg

14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தான் ரோயல்ஸும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய, சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், டூப்பிளஸியும் தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். பவுண்டரியுடன் ஓட்ட கணக்கை ஆரம்பித்த சென்னை சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. 

அதன்படி ருதுராஜ் 10 ஓட்டங்களுடனும், ஜெய்தேவ் உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி அதிரடி காட்டிய டூப்பிளஸ்ஸி 33 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரய்னா 18 ஓட்டங்களுடனும், அம்பத்தி ராயுடு 27 ஓட்டங்களுடனும், தோனி 18 ஒட்டங்களுடனும், ஜடேஜா 8, சாம் கர்ரன் 13 ஆட்டமிழந்து வெளியேறினர்.

EzV95qtVEAE_Uok.jpg

இறுதிகட்டத்தில் பிராவோவின் அதிரடியால் அணியின் ஓட்ட எண்ணிக்கை 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ஓட்டங்களை குவித்தது. 

ஆடுகளத்தில் பிராவோ 8 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 20 ஓட்டங்களுடனும், தீபக் சாஹர் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சு சார்பில் ராஜஸ்தான் தரப்பில் சகாரியா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

189 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்று ஆட மறுபக்கம் சென்னை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்களின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. 

மனன் வோரா 14 ஓட்டங்களுடனும், சஞ்சு சாம்சன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற, ராஜஸ்தானின் நடுவரிசை வீரர்களில் துடுப்பாட்டத்தை சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான மொயீன் அலியும், ரவீந்திர ஜடோஜாவும் சீர்குலைத்தனர். 

ஜோஸ் பட்லர் 49 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும் இவர்களின் சுழலில் சிக்கி ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து நடையை கட்டினர்.

இதனால் 20 ஓவர்கள் நிறைவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 45 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

சென்னை சார்பில் பந்து வீச்சில் மொயின் அலி 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளையும், தாகூர் மற்றும் பிராவோ தலா  ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொயின் அலி தெரிவானார்.

EzW6lIKVUAkJZ2X.jpg

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் இரண்டாவது வெற்றி இது என்பதுடன், ராஜஸ்தானின் இரண்டாவது தோல்வியும் ஆகும்

 

https://www.virakesari.lk/article/104042

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய டெல்லி

ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

Ezb5qgkVoAQk7ES.jpg

14 ஆவது ஐ.பி.எல். தொடரின் 13 ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், டிகொக்கும் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் வீசிய 3 ஆவது ஓவரின் முதல் பந்தில் டிகொக் 2 ஓட்டங்களுடன் விக்கெட் காப்பாளர் ரிஷாத் பந்திடம் பிடிகொடுத்தார்.

EzbH9iSVIAc_l-v.jpg

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 15 பந்துகளை எதிர்கொண்டு, 4 பவுண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அரைசதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மாவும் 44 ஓட்டங்களுடன் அமித் மிஷ்ராவின் பந்து வீச்சில் பிடிகொடுத்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய நடுத்தர வரிசை வீரர்களான ஹர்திக் பாண்டியா(0), குருணல் பாண்டியா (1), பொல்லார்ட்(2) ஆகியோரின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால், அணியின் ஓட்ட வேகம் வெகுவாக குறைந்தது. 

இதனிடையே சற்று நேரம் தாக்குப் பிடித்தாடிய இஷான் கிஷனும் 26 ஓட்டங்களில் போல்ட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றது.

138 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். 

ப்ரித்வீஷா 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்ட சேகரிப்பில் ஈடுபட்டது. 

எனினும் தவான் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 45 ஓட்டம் எடுத்த நிலையில் ராகுல் சஹாரின் பந்து வீச்சில் குருணல் பாண்டியாவிடம் பிடிகொடுத்தார்.

தொடர்ந்து பொல்லார்ட் வீசிய பந்தில் ஸ்டீவ் ஸ்மித் 33 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்.யூ முறையில் ஆட்டமிழக்க, ரிஷப் பந்தும் 7 ஓட்டங்களில் வெளியேறினார்.

EzbnsbQVkAkyzSq.jpg

பின்னர் ஆட்டம் மெதுவாக மும்பை அணிக்கு சாதகமாக திரும்பியது. ஆனால் இறுதி ஓவர்களில் லலித் யாதவ்-சிம்ரன் ஹெட்மேயர் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றி, டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தது.

இறுதியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை பெற்று தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அமித் மிஷ்ரா தெரிவானார்.

EzcLu0MVoAIS6wo.jpg

 

https://www.virakesari.lk/article/104113

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்ற ஹைதராபாத்!

spacer.png

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (ஏப்ரல் 21) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஐபிஎல்லின் 13ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், அகர்வால் களம் இறங்கினர். கே.எல்.ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் வெளியேறினார்.

 

அடுத்ததாக கெய்ல் - அகர்வால் ஜோடி நிதானமாக ஆடியது. பஞ்சாப் 39 ரன்கள் எடுத்திருந்தபோது அகர்வால் 22 ரன்னில் வெளியேறினார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட இழந்தனர். கிறிஸ் கெய்ல் 15, பூரன் 0, தீபக் ஹூடா 13, ஹென்ரிக்ஸ் 14, ஆலன் 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ள பூரன் நான்கு ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களில் ரன் எதும் எடுக்காமல் ஆட்டம் இழந்துள்ளார். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஷாருக் கான், அகர்வால் 22 ரன்கள் எடுத்திருந்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளும் சித்தார்த் கவுல், ரஷித் கான், புவி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் பேர்ஸ்டோ சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 10.1 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது ஹைதராபாத் முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 37 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோ உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆடுகளம் ஸ்லோவாக இருந்தாலும் விக்கெட்டை இழக்கவில்லை. குறைந்த இலக்கு என்பதால் வெற்றியை நோக்கி சென்றனர்.

 

16 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நான்கு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. 17ஆவது ஒவரில் நான்கு ரன்கள் அடித்தது. கடைசி 3 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஓவரில் 7 ரன்கள் அடித்தது. கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் பேர்ஸ்டோ ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் 18.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் 63 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் ஹைதராபாத் அணி விளையாடிய நான்கு போட்களில் முதல் வெற்றியை ருசித்துள்ளது.

https://minnambalam.com/entertainment/2021/04/22/9/IPL-Hyderabad-wins-Punjab-and-gets-first-victory

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.