Jump to content

ஐபிஎல் T20 2021 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

அத்துடன் அந்தப் போட்டிக்காக ஐசிசி வரிச்சலுகை கோருவது தொடா்பாக மத்திய அரசிடம் பேசவும் பிசிசிஐ தயாராகியுள்ளது. வரி விலக்கு கிடைக்காத பட்சத்தில் பிசிசிஐக்கு 900 கோடி நஷ்டமாகும்.

சாமியே சைக்கிளில் போறாரு..

Screenshot-2021-05-31-20-38-17-733-org-m

பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம் ..

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல்; எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது!

‍ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள 2021 ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளுக்கான கால அட்டவணையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

IPL_0_1200x768.jpeg?7yZ24NTovITIA.YLCi5V

இதில் 27 நாட்களில் மொத்தமாக 31 போட்டிகள் நடைபெறும்.

கொவிட்-19 தொற்று நோயைத் தொடர்ந்து கடந்த மே மாதம் ஒத்திவைக்கப்பட்ட 14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்  எஞ்சிய போட்டிகள், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான பிளாக்பஸ்டர் மோதலுடன் செப்டம்பர் 19 ஆம் திகதி துபாயில் மீண்டும் தொடங்கும்.

எஞ்சிய 31 போட்டிகளில் 13 ஆட்டங்கள் துபாயிலும், 10 ஆட்டங்கள் சார்ஜாவிலும், 08 ஆட்டங்கள் அபுதாபியிலும் நடைபெறும்.

சூப்பர் லீக் சுற்றின் இறுதி ஆட்டம் ஒக்டோபர் 30 ஆம் திகதி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே துபாயில் நடைபெறும்.

அதேநேரம் தொடரின் இறுதிப் போட்டி ஒக்டோபர் 15 துபாயில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VIVO-IPL-2021-Match-Schedule-__0-1200x33

 

 

https://www.virakesari.lk/article/110064

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

14 ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் ஆரம்பம் ; சென்னை - மும்பை இன்று மோதல்

2021 இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் பதிப்பு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் ஆட்டத்தில் நடப்புசாம்பியனான மும்பை இந்தியன்ஸும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.

PAN_4563.jpg?width=2000&height=1333

இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.

ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் 14 ஆவது சீசன் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 

29 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன. 

இந்நிலையில் இடையில் நிறுத்தப்பட்ட இந்த தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. 

இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று தொடங்கி எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கிறது.

எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறும்.

அதன்படி துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடைபெறும்.

இந்த சீசனில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் டெல்லி 12 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சென்னை 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பெங்களூரு 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், மும்பை 8 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், ராஜஸ்தான் 6 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும், பஞ்சாப் 6 புள்ளிகளுடன் ஆறாம் இடத்திலும், கொல்கத்தா 4 புள்ளிகளுடன் ஏழாம் இடத்திலும் மற்றும் ஹைதராபாத் 2 புள்ளிகளுடன் எட்டாம் இடத்திலும் உள்ளன.

 

https://www.virakesari.lk/article/113591

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட் 'நம்பமுடியாத' ஆட்டத்தால் கிடைத்த வெற்றி

4 மணி நேரங்களுக்கு முன்னர்
கோப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோப்புப் படம்

ஒரு அணியில் ஒரேயொருவர் சிறப்பாக ஆடி ரன்களைக் குவித்துவிட்டால் எதிரணிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விட முடியும் என்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட பொல்லார்ட். அவர் குறிப்பிட்டது சென்னை சூப்பர் கிங்க் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் பற்றி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இதே கருத்தைக் கூறினார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு துபாயில் தொடரும் ஐபிஎல் போட்டிகளின் முதல் ஆட்டத்தின் பெரும்பகுதியை ருதுராஜ் கெய்க்வாட் ஆக்கிரமித்துக் கொண்டார். 58 பந்துகளில் அவர் அடித்த 88 ரன்கள் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

தொடக்க ஓவர்களிலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனியொருவராக நின்று மரியாதையான எண்ணிக்கையை எட்ட உதவினார் கெய்க்வாட்.

டாஸ் வென்ற தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது தவறாகிப் போய்விடுமோ என்று எண்ணும் அளவுக்கு மும்பையின் பந்துவீச்சு இருந்தது. கடந்த பல போட்டிகளாக அதிக விக்கெட் எடுக்காத போல்ட், இந்தப் போட்டியில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அத்துடன் அம்பதி ராயுடு காயமடைந்து வெளியேறி இருந்தார். இப்படி ஒரு நிலைக்குப் பிறகு வெற்றி பெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

ஏனென்றால் ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளிலும் 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த அணி இதற்கு முன் ஒரேயொருமுறைதான் வெற்றி பெற்றிருக்கிறது. இப்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அந்தப் பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்திருக்கிறது.

டூ பிளெஸ்ஸிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, தோனி என அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் கெய்க்வாட் நங்கூரம் பாய்ச்சிபடி மறுமுனையில் விளாசிக் கொண்டிருந்தார். அவருக்கு நல்வாய்ப்பு ஒன்றும் அமைந்தது.

19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் குயின்ட்டன் டி காக் தவறவிட்டார். போட்டி முடிந்த பிறது அது குறித்து அவர் நிறையவே வருத்தப்பட்டிருப்பார். ஏனென்றால் அதன் பிறகுதான் கெய்க்வாட் பட்டாசாக வெடித்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அற்புதமான பவுண்டரிகள், நம்ப முடியாத சிக்கர்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார் கெய்க்வார்ட். பிரேவாவும் கெய்க்வாடுடன் சேர்ந்து கடைசி ஓவர்களில் நாலாபுறமும் பந்தை அடித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இதயத்துடிப்பை எகிற வைத்தார்.

போல்ட் வீசிய 19-ஆவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டன. அதில் பிராவோ இரண்டு சிக்சர்களும் கெய்க்வாட் ஒரு சிக்சரும் அடித்தனர். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான போல்ட் டி-20 ஆட்டம் ஒன்றில் அதிக ரன்களைக் கொடுத்தது இந்த ஓவரில்தான்.

உலகின் மற்றொரு முன்னிலை பந்துவீச்சாளரான பும்ராவையும் கெய்க்வாட் விட்டுவைக்கவில்லை. ஆட்டத்தின் கடைசிப் பந்தை முட்டிபோட்டி லெக் திசையில் சிக்சருக்கு தூக்கினார். வர்ணணையாளர்கள் இதை நம்பமுடியாத சிக்சர் என்றார்கள்.

பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ரன்கள் குறைவாகவே எடுக்க முடிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் பாதியை எப்படி ஆடியதோ அதேபோலவே மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டமும் இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியிலும் தடுமாறியதால் அந்த அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கெய்க்வாட் ஆடிய ஆட்டங்களிலேயே இது சிறப்பானது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்னும் இதுவே. ஆட்ட நாயகன் விருதும் அவருக்குக் கிடைத்தது.

அணி தடுமாறிக் கொண்டிருக்கும்போது நிதானமாக ஆடுவதே வீரர்களின் வழக்கம். ஆனால் கெய்க்வாட், "வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறினார்.

விக்கெட்டுகள் சரிந்த நிலையில் ஏற்பட்ட அழுத்தத்தை எப்படி எதிர்கொண்டீர்கள் என்று கேட்டபோது, தோனி பின்னால் இருக்கிறார் என்பதால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று நம்பிக்கையாகக் கூறினார் கெய்க்வாட்.

அவர் கூறியது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் தோனியின் பங்கும் இருந்தது. மூன்றாவது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரான டி காக் சாஹர் வீசிய பந்தை காலில் வாங்கினார்.

பெரிய அளவில் முறையிட்ட போதும் நடுவர் அதற்கு அவுட் தரவில்லை. உடனடியாக தோனி ரிவ்யூ கேட்டார். அதில் பந்து ஸ்டம்புகளை நோக்கிச் செல்வது தெரிந்தது. அதனால் டி காக் அவுட் என அறிவிக்கப்பட்டார். தோனியின் இந்த முடிவு மும்பையின் அஸ்திவாரத்தை அசைத்ததில் முக்கியப் பங்கு வகித்தது.

https://www.bbc.com/tamil/sport-58620751

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது Pollard இன் மோட்டு captaincy ஆல் CSK க்கு கிடைத்த வெற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 RCBvsKKR: விராட் கோலியின் 200-ஆவது போட்டி பெருமைப்பட ஏதுமில்லாமல் முடிந்தது

3 மணி நேரங்களுக்கு முன்னர்
விராட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் 200 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி. ஆனால் ஆட்டத்தின் போக்கோ, முடிவோ அவர் பெருமைப்படத் தக்கதாக இல்லை. 200-ஆவது ஆட்டத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும் அவர் விரும்ப மாட்டார்.

அந்த அளவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மிக மோசமாகத் தோற்றுப் போயிருக்கிறது கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. வெறும் 92 ரன்களை எடுத்த பெங்களூர் அணியை பத்தே ஓவர்களில் கொல்கத்தா அணி வீழ்த்திவிட்டது.

இந்தப் போட்டியில் விராட் கோலி முதல் அணியின் கடைசி ஆட்டக்காரர் வரை வந்தார்கள், சிறிது நேரம் நின்றார்கள், பெவிலியனுக்குத் திரும்பினார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.

ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தால் நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று ஒரு பேட்டியில் விராட் கோலி கூறியிருப்பார். ஆனால் இப்போது சூழல் வேறு மாதிரியாக மாறியிருக்கிறது என்பதையே அவரது சமீபத்திய முடிவுகள் காட்டியிருக்கின்றன.

இந்திய டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகல் என பெரிய முடிவுகளை எடுத்த பிறகு ஏற்பட்டிருக்கும் கடுமையான நெருக்கடிக்கு மத்தியிலேயே விராட் கோலி இந்த ஆட்டத்தில் பங்கேற்றார்.

தனக்கேயுரிய அற்புதமான கவர் ட்ரைவ் மூலமாக ஆட்டத்தைத் தொடங்கினார். அவரது கவர் ட்ரைவின் அழகை பல கோணங்களில் ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். ஆனால் பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த பந்திலேயே எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆனார். அந்த முடிவை எதிர்த்து ரிவ்யூ கேட்டு, அந்த வாய்ப்பையும் பறிகொடுத்தார்.

விராட் கோலியின் ரசிகர்கள் பலர் அந்தக் கணத்திலேயே தொலைக்காட்சியை அணைத்துவிட்டுப் போயிருப்பார்கள் என்றே கூற வேண்டும்.

விராட் கோலி வீழ்ந்த பிறகு, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், படிக்கல் என நட்சத்திர வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால், வெறும் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பெங்களூரு அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்தப் போட்டியில் டாஸ் வென்றவர் கோலிதான். முதலில் பேட் செய்து நல்ல ஸ்கோரை எட்ட வேண்டும் என்றும் அவர் கணித்திருக்கக் கூடும். நேரம் ஆக ஆக பிட்ச் மெதுவாக மாறும் என்று அவர் நினைத்ததால், அவர் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் அது அவருக்கு நேர் எதிராக முடிந்துபோனது. புதிதாக வந்தவர்களும், அனுபவ வீரர்களும் சோபிக்கவில்லை.

போட்டி முடிந்த பிறகு சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை வெகுவாகப் பாராட்டினார் கோலி. அவரைப் போன்றவர்கள் இந்திய அணிக்கு ஆதாரமாக இருப்பார்கள் என்று புகழ்ந்தார். அதற்கும் காரணம் உண்டு. தனது லெக் ஸ்பின் மூலம் ஒரு போல்ட், ஒர கேட்ச், ஒரு எல்பிடபூள்யூ என மூன்று பெங்களூரு விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, நான்கு ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

92 ரன்களுக்குள் கொல்கத்தா அணியைச் சுருட்ட வேண்டுமானால் ஏதாவது மாயஜாலம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. பெங்களூர் அணியின் பந்துவீச்சை சர்வசாதாரணமாக பவுண்டரிகளுக்கு விரட்டி இலக்கை எட்டியது கொல்கத்தா அணி. சுப்மன் கில் ஆறு பவுண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 7 பவுண்டரி ஒரு சிக்சருடன் 41 ரன்களும் குவித்திருந்தனர். ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கொல்கத்தா இழந்திருந்தது.

இந்தத் தோல்வியால் பெங்களூரு அணிக்கு எல்லாம் முடிந்து போய்விடவில்லை. முதற்கட்டப் போட்டிகளில் பெற்ற தொடர் வெற்றிகள் மூலமாக புள்ளிப் பட்டியலில் இன்னும் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த போட்டிகள் அந்த அணிக்கும் தனிப்பட்ட முறையில் விராட் கோலிக்கும் கூடுதலான நெருக்கடியாகவே இருக்கும்.

https://www.bbc.com/tamil/sport-58634209

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் RCBஇன் NRR படு பாதாளத்திலயெல்லோ போய் நிக்கிது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PBKS vs RR: 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
கே எல் ராகுல், பஞ்சாப் கிங்ஸ் தலைவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கே எல் ராகுல், பஞ்சாப் கிங்ஸ் தலைவர்

ஐபிஎல் 2021 சீசனின் 32ஆவது போட்டியாக, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குமிடையில் நேற்று (செப்டம்பர் 21) இரவு துபாய் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச தீர்மானித்தது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கி நிதானமாக ரன்களைக் குவித்தனர்.

20 ஒவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களைக் குவித்தது ராஜஸ்தான். யஷஸ்வி 49 ரன்களும், மஹிபால் லோம்ரோர் 43 ரன்களும் விளாசி ராஜஸ்தானை நல்ல நிலையில் வைத்தனர். ராஜஸ்தானின் விக்கேட்டுகள் சரிந்தாலும் யஷஸ்வி விட்டுச் சென்ற இடத்தை மஹிபால் சிறப்பாகவே நிரப்பினார். 17 பந்தில் அவர் அடித்த 43 ரன்கள் ராஜஸ்தான் ரசிகர்களுக்கு நல்ல விருந்து எனலாம்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 32 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பார்வையாளர்களை அட போட வைத்தார். எவின் லெவிஸ், லியம் லிவிங்ஸ்டன், மஹிபால் ஆகிய முக்கிய விக்கெட்டுகள் இதில் அடக்கம். அவரைத் தொடர்ந்து மொஹம்மத் ஷமி 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள்மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தீபக் ஹூடா மற்றும் அதில் ரஷீத்தின் பந்துகளில் ராஜஸ்தான் வீரர்கள் தங்கள் ரன் ரேட்டை உயர்த்திக் கொண்டனர்.

20 ஓவரில் 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய பஞ்சாபின் தொடக்க ஆட்டக்காரர்களான பஞ்சாப் அணித் தலைவர் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் வெகு சிறப்பாகவே ஆட்டத்தைத் தொடங்கினர். 11.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த பிறகு தான் ரஜாஸ்தானால் முதல் விக்கெட்டையே வீழ்த்த முடிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

17ஆவது ஓவர் முடிவில் 18 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் நிகோலஸ் பூரன் மற்றும் மக்ரம் இருந்தனர். அப்போது பஞ்சாப் 168 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. 17.1ஆவது பந்தில் கூட மக்ரம் ஒரு சிக்ஸர் அடித்து பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார்.

அதுவரை ஆட்டம் பஞ்சாபின் வசம் இருந்ததாகத் தான் தோன்றியது.

18ஆவது ஓவர் முடிவில் கூட 178 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு என, 12 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என களத்தில் இருந்தனர். அதன் பிறகு என்ன ஆனதோ, ஏதானதோ தெரியவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மென்களின் அதிரடி ஆட்டம் மங்கத் தொடங்கியது.

எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் போது கூட இத்தனை நிதானமாக ஆட வேண்டுமா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ராகுல் - மயங்க் இணைக்குப் பிறகு வெற்றிகரமான இணை போலத் தெரிந்த மக்ரம் - பூரன் ஜோடி கடைசி இரு ஓவர்களில் தடுமாறியதை வெளிப்படையாக பார்க்க முடிந்தது.

கார்த்திக் தியாகி வீசிய 19.3ஆவது பந்தில் பூரன் தன் விக்கெட்டை பறிகொடுத்தார், அடுத்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் தீபக் ஹூடா 19.5ஆவது பந்தில் தன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

கார்த்திக் தியாகி வீசிய கடைசி ஓவரை பாராட்டி ஜஸ்ப்ரீத் பும்ரா ட்விட்டரில் வாழ்த்தி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாபை வென்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 8 போட்டிகளில் 4-ல் வென்று முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன.

இப்போட்டியில் தோல்வியுற்ற பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி என புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தோல்வி பஞ்சாப் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பையே கடுமையாக பாதித்திருக்கிறது.

தொடக்கத்தில் பிரகாசமாக இருந்த பஞ்சாபின் வெற்றி வாய்ப்பு, கடைசி மூன்று ஓவர்களில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் தவறவிடப்பட்டிருக்கிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு, துபாய் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் மோதவிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/sport-58647136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சப் எப்பவும் பினிசிங்கில் சொதப்புவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்

ஐபிஎல் 2021 சீசனின் 33ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 22, புதன்கிழமை) நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனாயாசமாக வென்றது.

ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பியதோடு, அவ்வணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி பேட்ஸ்மென்களை வீழ்த்த முடியாமல் திணறியது டெல்லியின் வெற்றியை எளிதாக்கியது.

கொரோனா காரணமாக தமிழகத்தின் நடராஜன் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை பங்கேற்றிருந்தால் இடது கை சீமரைப் பயன்படுத்தி ஹைதராபாத் அணி, டெல்லியோடு இன்னும் சிறப்பாக மோதிப் பார்த்திருக்கலாம்.

135 மட்டுமே இலக்கு

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் ரன்கள் ஏதும் எடுக்காமல் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். விரித்திமான் சாஹா 18 ரன்களுக்கும், அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களின் இந்த விக்கெட் சரிவு ஹைதராபாத்துக்கு பெரும் பின்னனைவை ஏற்படுத்தியது.

20 ஓவர் முடிவு வரை தொடர்ந்து ஒரு வலுவான பேட்டிங் இணையை அமைக்க முடியாமல் தடுமாறியது ஹைதராபாத் அணி. ஹைதராபாத் தரப்பில் வில்லியம்சன் மற்றும் மணீஷ் பாண்டே ஜோடி மட்டுமே 30 பந்துகளில் 31 ரன்களை குவித்தது. மற்ற எல்லா இணைகளும் காலூன்றி நிற்பதற்குள் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினர்.

இந்த போட்டியில் அப்துல் சமத் அடித்த 28 ரன்கள் தான் ஹைதராபத் அணி வீரர்களிலேயே குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள். அவரைத் தொடர்ந்து பந்துவீச்சாளர் ரஷீத் கான் அடித்த 22 ரன்கள் தான் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

19.5ஆவது பந்தில் ரிஷப் பந்த் புவனேஷ்வர் குமார் - சந்தீப் ஷர்மா ஜோடியை ரன் அவுட் செய்ய முயன்றார், ஆனால் ரிஷப்பின் இலக்கு தவறியதால் விக்கெட் தப்பியது. ஆனால், அடுத்த பந்தையும் அதே போல வீசி 19.6ஆவது பந்திலும் சந்தீப் ஷர்மாவை ரன் அவுட் செய்து, 10ஆவது விக்கெட்டை வீழ்த்தினார் டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த்.

அன்ரிச் நார்ட்ஜ், ககிஸோ ரபாடா, அக்ஸர் படேல், அவேஷ் கான், அஸ்வின் என அனைத்து டெல்லி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.

ரபாடா விரித்திமான் சாஹா, அடித்து விளையாடிய அப்துல் சமத் உட்பட 3 விக்கெட்டுகளையும், நார்ட்ஜ் டேவிட் வார்னர் உட்பட 2 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் கேன் வில்லியம்சன் உட்பட இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அவேஸ் கான் மற்றும் அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் ஹைதராபாத்தின் ரன்ரேட் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டனர்.

13 பந்துகளுக்கு முன்பே ஆட்டத்தை முடித்த டெல்லி

டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைவர் ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைவர் ரிஷப் பந்த்

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா 11 ரன்களில் வில்லியம்சன்னிடம் கேட்ச் கொடுத்த விக்கெட்டை பறிகொடுத்தார். ஷிகர் தவான் 42 ரன்களில் வீழ்ந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் (47 ரன்கள்) மற்றும் டெல்லி அணித் தலைவர் ரிஷப் பந்த் (35 ரன்கள்) குவித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.

ஹைதராபாத் பந்துவீச்சாளர்களில் இடது கை யார்க்கர் நடராஜன் இல்லாத குறை இருந்தது. ஹைதராபாத்தால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாததன் விளைவாக டெல்லி அனாயாசமாக 17.5ஆவது பந்திலேயே, எட்டு விக்கெட் கையிருப்போடு 139 ரன்களை எடுத்து வெற்றிக்கனியைப் பறித்தது.

ஷிகர் தவான் முதலிடம்

ஆரஞ்ச் கேப் உடன் ஷிகர் தவான்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஆரஞ்ச் கேப் உடன் ஷிகர் தவான்

ஐபிஎல் 2021 சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மென்கள் பட்டியலில் 422 ரன்களோடு முதலிடத்தில் இருக்கிறார் ஷிகர் தவான்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடர் தோல்விகளால் கடைசி இடத்தில் இருக்கிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (4ஆவது இடத்தில் இருக்கிறது) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (6ஆவது இடத்தில் இருக்கிறது) அணிகளுக்கு இடையில், அபுதாபி மைதானத்தில் பலப்பரிட்சை நடக்கவிருக்கிறது. இரு அணிகளுமே ப்ளே ஆஃப்க்கு முன்னேற இது முக்கியமான போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sport-58660534

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 - MI Vs KKR: ரஜினி 'பக்தரின்' அதிரடி; ரோஹித் படைத்த வரலாறு

9 மணி நேரங்களுக்கு முன்னர்
ரோஹித்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதியும், வெங்கடேஷ் அய்யரும் ஆடிய அதிரடி ஆட்டத்தால் வியாழக்கிழமை நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லாமல் போனது.

அண்மையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை மிக எளிதாக வென்ற உற்சாகத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை அணியை 155 ரன்களுக்குள் முடக்கியது. 156 ரன்கள் என்ற இலக்கை வெறும் 15.1 ஓவரில் எட்டி வெற்றியையும் வசமாக்கியது.

கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 42 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து இறுதி வரை களத்தில் நின்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து 52 பந்துகளில் 88 ரன்களை எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது. மும்பை அணி ஆறாவது இடத்துக்கு சறுக்கியது.

ரோஹித் படைத்த வரலாறு

இந்தப் போட்டியில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டிகளில் ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா.

விராட் கோலி டேவிட் வார்னர் போன்றோரெல்லாம் இந்தச் சாதனையில் இவருக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் இது அவரது அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

சுனில் நரைனின் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுக்கும் வழக்கமும் மாறிவிடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் ஏழாவது முறையாக சுனில் நரைன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை எடுத்தார். இந்த முறை ரோஹித் சர்மாவின் ஸ்வீப் ஷாட் நேரந் தவறியதால் லாங் ஆனில் கேட்சாக மாறிவிட்டது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்கம் அதிரடியாகவும் அதே நேரத்தில் வலுவாகவும் இருந்தது. குயின்டன் டி காக்கும் ரோஹித் சர்மாவும் சேர்ந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்களைப் பதற வைத்தார்கள்.

எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஃபெர்குசன், பிரசித் கிருஷ்ணா, ரஸ்ஸல் என முன்னணி பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துவீச்சையும் சிக்சர்களும், பவுண்டரிகளுமாகப் பறக்க விட்டார்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தொடக்க பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டைப் பறி கொடுக்காமல் 56 ரன்களை மும்பை அணி எடுத்திருந்தது. சுனில் நரேன் பந்துவீச்சைத் தொடங்கிய போது ஆட்டத்தின் போக்கே மாறிப் போனது. அவரது பந்தில் ரோஹித் சர்மா வெளியேறிவிட மும்பையின் ரன் குவிப்பு வேகமும் குறைந்து போனது.

பத்தாவது ஓவருக்கு மேல் மும்பை வீரர்கள் நத்தை வேகத்தில் ரன்களை எடுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இறுதியாக பொலார்டின் கடைசி நேர அதிரடியால் மும்பை அணி 155 ரன்களை எடுத்தது.

அய்யர், திரிபாதியின் அதிரடி

மும்பையின் 156 என்ற வெற்றி இலக்கு கொல்கத்தா அணிக்கு எதுவுமில்லை என்பது போல தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் அமைந்திருந்தது. உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான ட்ரென்ட் போல்ட்டும், பும்ராவும் ரன்களை வாரிக் கொடுக்க வேண்டியிருந்தது.

சுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், அடுத்து வந்த ராகுல் திரிபாதி ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி நிலைகுலைந்து போய்விட்டது. மும்பை அணிக்கு எந்தவொரு தருணத்திலும் வெற்றிக்கான நம்பிக்கையை அவர்கள் தந்துவிடவில்லை.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய வெங்கடேஷ் அய்யர் ரஜினி பக்தர் என்று தன்னைக் கூறிக் கொள்பவர். படையப்பா திரைப்படத்தின் "என் வழி... தனிவழி..." என்பது தனக்குரிய வசனமும்கூட என்று கூறுபவர்.

ஐபிஎல்லில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடி 41 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவிய அவர், இரண்டாவது போட்டியில் அரைச் சதம் அடித்து நம்பிக்கை அளித்திருக்கிறார். அவரை இன்னொரு யுவராஜ் சிங் என்று புகழ்ந்திருக்கிறார் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல்.

https://www.bbc.com/tamil/sport-58673939

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB vs CSK: ப்ராவோ உடைத்த பெங்களூரு அரண், அனாயாசமாக பெங்களூரை பந்தாடிய சென்னை - பிரகாசமான ப்ளே ஆஃப் வாய்ப்பு

4 மணி நேரங்களுக்கு முன்னர்
விராட் கோலி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

விராட் கோலி

ஐபிஎல் 2021ஆம் ஆண்டுக்கான 35ஆவது போட்டி, நேற்று (செப் 24, வெள்ளிக்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலியின் பெங்களூரு அணியும், மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

பெங்களூரு 156 ரன்கள் மட்டுமே குவித்தது. அதை சென்னை 11 பந்துகளுக்கு முன்பே அடித்து போட்டியை வென்றது. வழக்கம் போல தோனியின் பாணி இந்த போட்டியிலும் கை கொடுத்தது என இணையமே புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறது. ப்ராவோ பந்துவீச்சு பெங்களூருவின் ரன்ரேட்டுக்கு மிகப்பெரிய வேகத்தடையாக அமைந்தது, சென்னை அனாயாசமாக வெற்றி பெற வழிவகுத்தது.

கோலி - படிக்கல் அரண்

டாஸ் வென்ற சென்னை, பெங்களூரை பேட்டிங் செய்ய அழைத்தது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அவ்வணியின் தலைவர் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

13.2 ஓவர் வரை இருவரும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 111 ரன்கள் வரை குவித்தனர். இருவருமே அரை சதம் விளாசியதும் பாராட்டுக்குரியது. பெங்களூருக்கு இந்த இரு பேட்ஸ்மென்களும் இரும்பு அரண் போல நின்று ரன்களைக் குவித்துக் கொண்டிருந்த போது, சென்னை விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறியது போலத் தெரிந்தது.

ஹேசல்வுட், ஜடேஜா, ப்ராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என சென்னையின் அனைத்து பந்து வீச்சாளர்களும் ஒரு சுற்று வந்துவிட்டனர். அப்போதும் பெங்களூரின் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது, ப்ராவோவின் 13.2ஆவது பந்தில், விராட் கோலி அடித்த பந்து ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது. பெங்களூரின் பேட்டிங் அரண் தகர்ந்தது.

பெங்களூரு ஒப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பெங்களூரு ஒப்பனர்கள்

வலுவான பேட்டிங் லைன் அப்பைக் கொண்டிருக்கும் பெங்களூரு அணி, அடுத்தடுத்து சிறப்பாக அடித்து ஆடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, ஏ பி டிவில்லியர்ஸ், தேவ் தத் படிக்கல், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல் என எல்லா முன்னணி பேட்ஸ்மென்களும் சீட்டு கட்டு போல சரிந்தது சோகத்திலும் சோகம். கோலி, படிக்கல் தவிர எந்த ஒரு பெங்களூரு பேட்ஸ்மென்னும் 15 ரன்களைக் கூட தொடவில்லை.

13 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு விக்கெட் எதுவும் பறிகொடுக்காமல் ஆடி வந்த பெங்களூரு, அடுத்த 7 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளைப் பரிகொடுத்து 45 ரன்களை மட்டுமே குவித்தது.

பெங்களூரின் பேட்டிங் அரணைத் தகர்த்த ப்ராவோ, 4 ஓவர்களுக்கு 24 ரன்களை விட்டுக் கொடுத்து, கோலி, மேக்ஸ்வெல் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து 4 ஓவர்களை வீசிய ஷர்துல் தாகூர் 29 ரன்களைக் கொடுத்து ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் தேவ்தத் படிக்கல்லின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

14ஆவது ஓவர் முதல் ஆட்டம் சென்னையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. அதன் பிறகு ஆட்டம் நிறைவடையும் வரை அவர்களே ஆதிக்கம் செலுத்தி வென்றனர்.

பெங்களூரின் ஆட்டத்துக்குப் பிறகு, ஷார்ஜா போன்ற மைதானத்தில் சென்னை போன்ற அணிக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே குவித்திருப்பது போதாது என கூறப்பட்டது.

எளிய இலக்கு

ஃபாஃப் டூப்ளசி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஃபாஃப் டூப்ளசி

157 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்கோடு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாப் டூப்ளசி ஜோடி சிறப்பாகத் தொடங்கினர்.

8.2ஆவது ஓவரில் 38 ரன்களோடு ரிதுராஜும், 9.1ஆவது ஓவரில் 31 ரன்களோடு ஃபாஃப் டூப்ளசியும் தங்கள் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இருப்பினும் சென்னையின் பேட்டிங் லைன் அப் வலுவானது என்பதால், அடுத்தடுத்து வந்த மொயின் அலி, அம்பதி ராயுடு ஆகியோரும் அடித்து விளையாடினர்.

கடைசியில் சுரேஷ் ரெய்னா, தோனி இணை நிதானமாக ரன்களைக் குவித்து வெற்றி பெற்றனர். இந்த ஜோடி இணைந்து ஐபிஎல் போட்டிகளை நிறைவு செய்வது இது நான்காவது முறை.

போட்டி நிறைவடைந்த பிறகு எங்களால் 175 ரன்களைக் குவித்திருக்க முடியும், அப்படி ஒரு இலக்கை வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கூறினார் விராட் கோலி.

ஏப்ரல் மாதம் ஐபிஎல் 2021 சீசன் தொடங்கிய போது பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகளை வெற்றி கொண்டனர்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி

2021 ஏப்ரல் 25 அன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான முதல் போட்டியில், தோல்வி கண்டது பெங்களூரு. அப்போது முதல் அவ்வணியின் சறுக்கல் தொடர்ந்து வருகிறது. அதன் பிறகு டெல்லி கேப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் மட்டுமே வென்றது பெங்களூரு.

இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் வென்று 14 புள்ளிகளோடு சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திலும், பெங்களூரு அணி 9 போட்டியில் 5-ல் வென்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

இன்று (செப் 25, சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், இரவு 7.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்று பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதவிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/sport-58688343

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DC vs RR: தனியொருவனாக போராடிய சஞ்சு சாம்சன் - ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
டெல்லி ஒப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி ஒப்பனர்கள்

ஐபிஎல் 2021 சீசனின் 36ஆவது போட்டி நேற்று (செப்டம்பர் 25, சனிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

155 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்கு வைத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸை 121 ரன்களில் சுருட்டியது.

நல்ல தொடக்கம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. 3.1ஆவது பந்தில் வெறும் 8 ரன்களோடு ஷிகர் தவானை வீழ்த்தியது, 4.1 ஓவரில் 10 ரன்களில் ப்ரித்வி ஷாவை வீழ்த்தி, சிறப்பாகத் தொடங்கியது ராஜஸ்தான்.

ஆனால் அடுத்தடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஷிம்ரான் ஹெட்மேயர் டெல்லியை கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினர். இதில் ஸ்ரேயாஸ் 32 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியிலேயே ஷ்ரேயாஸ் - ரிஷப் ஜோடி தான் அதிகபட்சமாக 45 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தது. அதன் பிறகு அப்படியொரு நல்ல இணை உருவாகவிடாமல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர்.

டெல்லி அணியினர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி அணியினர்

ராஜஸ்தானின் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 ஓவர்களில் 22 ரன்களைக் கொடுத்து ரிஷப் பந்த் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சேதன் சகாரியா 4 ஒவர்களில் 33 ரன்களைக் கொடுத்து ப்ரித்வி ஷா உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் தீவாட்டியா 3 ஓவர்களுக்கு 17 ரன்களை கொடுத்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஷ்ரேயாஸின் விக்கெட்டை வீழ்த்தி டெல்லியின் ரன் ரேட்டை மட்டுப்படுத்தினார்.

சில தினங்களுக்கு முன் பஞ்சாபுக்கு எதிராக கடைசி ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெறச் செய்த கார்த்திக் தியாகி, இந்த போட்டியில் 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்து ஷிகர் தவானின் விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.

20 ஒவர் முடிவில் 154 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. 155 அடித்தால் வெற்றி என களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்த பேட்ஸ்மேன்கள்

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

சஞ்சு சாம்சன்

லியாம் லிவிங்ஸ்டன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் என ராஜஸ்தானின் இரு தொடக்க வீரர்களும் முறையே 1 மற்றும் 5 ரன்களில் முதல் இரு ஓவர்களில் வீழ்ந்தனர். தத்தளித்துக் கொண்டிருந்த அணியைக் காப்பாற்ற அவ்வணியின் தலைவர் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

டெல்லி அணியில் முதல் 10 ஓவர்களில் அமைந்த ஷ்ரேயாஸ் - ரிஷப் போன்ற ஒரு வெற்றிகரமான இணையை, ராஜஸ்தான் பேட்ஸ்மென்களால் அமைக்க முடியவில்லை. 11.5ஆவது ஓவருக்குப் பிறகு தான் ராகுல் தீவாட்டியா - சஞ்சு சாம்சன் ஜோடி 33 பந்துகளுக்கு 44 ரன்களைக் குவித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். கடைசி ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள் மீதான அவர்களின் பிடி இறுகிக் கொண்டே போனதால், வெற்றி இலக்கை நோக்கி ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினர்.

ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் (53 பந்துகளுக்கு 70 ரன்கள்) மற்றும் மஹிபால் லாம்ரோர் (24 பந்துகளுக்கு 19 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மெனும் 10 ரன்களைத் தாண்டவில்லை. ராஜஸ்தான் பேட்டிங் லைன் அப் அத்தனை பலவீனமாக இருந்தது.

சஞ்சு சாம்சன் & டேவிட் மில்லர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

சஞ்சு சாம்சன் & டேவிட் மில்லர்

இதில் மற்றொரு சுவாரஸ்ய செய்தி என்னவென்றால், டெல்லி அணி சார்பில் பந்து வீசியவர்கள் அனைவருமே விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். அன்ரிக் நார்ட்ஜ் 4 ஓவர்களில் 18 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அவேஸ் கான் 4 ஓவர்களுக்கு 29 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டையும், அஸ்வின் 4 ஓவருக்கு 20 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும், ககிசோ ரபாடா 4 ஓவருக்கு 26 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும், அக்ஸர் படேல் 4 ஓவருக்கு 27 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டெல்லி பந்துவீச்சாளர்களிலேயே அதிகபட்சமாக 29 ரன்கள் கொடுத்தது அவேஸ் கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியால் டெல்லி 10 போட்டிகளில் 8-ல் வென்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராஜஸ்தான் அணி 9 போட்டியில் 4-ல் வென்று 7ஆவது இடத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

PBKS vs SRH: பஞ்சாபை இரக்கமின்றி பந்தாடிய ஜேசன் ஹோல்டர் - இருப்பினும் தோல்வி கண்ட ஹைதராபாத்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பஞ்சாப் ஓப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பஞ்சாப் ஓப்பனர்கள்

ஐபிஎல் 2021 சீசனுக்கான 37ஆவது போட்டி நேற்று (செப் 25, சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இப்போட்டி சான்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டி என்பதை விட ஜேசன் ஹோல்டர் மற்றும் பஞ்சாபுக்கு எதிரான போட்டி எனலாம். அந்த அளவுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பிரமாதப்படுத்தினார் ஹோல்டர். இருப்பினும் ஹைதராபாத் அணியால் போட்டியை வெல்ல முடியவில்லை என்பது தான் வருத்தமான செய்தி.

பஞ்சாப் பேட்டிங் - சரிந்த விக்கெட்டுகள்

டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் என இரு முக்கிய பேட்ஸ்மென்களையும் தன் 4ஆவது ஓவரில் வீழித்தி பெவிலியன் அனுப்பினார் ஜேசன் ஹோல்டர்.

அடுத்து வந்த க்ரிஸ் கெயிலை ரஷீத் கானும், கொஞ்சம் பஞ்சாப் அணியின் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்துக் கொண்டிருந்த ஏய்டன் மக்ரமை அப்துல் சமத்தும் வீழ்த்தினர்.

பஞ்சாப் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா ஆகியோரையும் ஹைதராபாத் பந்துவீச்சாளர்கள் நிலை பெறவிடாமல் வீழ்த்தினர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே குவித்திருந்தது பஞ்சாப்.

ஹைதராபாத்தின் பந்துவீச்சாளர்களில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களுக்கு 19 ரன்களை மட்டும் கொடுத்து கே எல் ராகுல், மயங்க் அகர்வால், தீபக் ஹூடா என 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், அப்துல் சமத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சொதப்பிய பேட்ஸ்மென்கள் - சிக்ஸர் மழை பொழிந்த ஜேசன்

கேன் வில்லியம்சன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

கேன் வில்லியம்சன்

126 ரன்களைக் குவித்தால் வெற்றி என்கிற எளிய இலக்கோடு களமிறங்கிய ஹைதராபாத்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களான டேவிட் வார்னர் (2 ரன்கள்), கேன் வில்லியம்சன் (1 ரன்), ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

கடந்த முறை டெல்லிக்கு எதிரான போட்டியிலும் டேவிட் வார்னர் வெகு சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. விரித்திமான் சாஹா மட்டுமே 37 பந்துக்கு 31 ரன்களை அடித்து ஹைதராபாத் அணியை நிலை பெறச் செய்தார்.

மணீஷ் பாண்டே (13 ரன்கள்) , கேதர் ஜாதவ் (12 ரன்கள்), அப்துல் சமத் (1 ரன்) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களும் நிலைபெற்று ரன் குவிப்பில் இறங்கவில்லை.

ஜேசன் ஹோல்டர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஜேசன் ஹோல்டர்

14ஆவது ஓவரில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் தான் ஹைதராபாத்தின் ரன் ரேட்டை அதிகரிக்கத் தொடங்கினார். 29 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். கடைசி வரை தன் விக்கெட்டையும் பறிகொடுக்காமல் விளையாடி ஹைதராபாத்தை ஒரு கெளரவமான ஸ்கோருக்கு நகர்த்தினார் ஜேசன் ஹோல்டர்.

ஹைதராபாத்தின் பேட்ஸ்மென்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் நிறைய பந்துகளையும் வீணடித்தனர். இந்த போட்டியில் ஜேசன் ஹோல்டர், கேதர் ஜாதவ் தவிர ஹைதராபாத் அணியில் யாருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 85 சதவீதத்துக்கு மேல் இல்லை.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத்தால் 120 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.

மொஹம்மத் ஷமி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மொஹம்மத் ஷமி

பஞ்சாபின் அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி, டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சனின் விக்கெட்டுகளை வீழ்த்தி டாப் ஆர்டர் பேட்ஸ்மென்களை பெவிலியன் அனுப்பினார்.

மணீஷ் பாண்டே, கேதர் ஜதவ், அப்துல் சமத் என ஹைதராபாத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களை பிட்சிலிருந்து வெளியேற்றினார் ரவி பிஷ்னோய்.

ராஜஸ்தான் உடனான போட்டியில் 5 விக்கேடுகளை வீழ்த்திய அர்ஷ்தீப், இப்போட்டியில் விரித்திமான் சாஹாவின் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாபின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார்.

125 என்கிற குறைந்த ஸ்கோரை மட்டுமே அடித்திருந்தாலும், அதை திறம்பட டிஃபெண்ட் செய்ததில் பஞ்சாபின் இந்த மூன்று பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே தொடர்கிறது.

https://www.bbc.com/tamil/sport-58695821

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்ஷல் படேல் ஹெட்ரிக் ; 56 ஓட்டங்களினால் மும்பையை வீழ்த்திய பெங்களூரு

ஹர்ஷல் படேலின் ஹெட்ரிக் சாதனையுடன் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 54 ஓட்டங்களினால் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.

_AI_1163.JPG?width=2000&height=1333

2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற 39 ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பெங்களூருவுக்கு வழங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு, இரண்டாவது ஓவரின் நான்காவது பந்து வீச்சிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது

அதன்படி தேவ்தூத் படிக்கல் எதுவித ஓட்டமின்றி பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரான டிகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக கைகோர்த்த விராட் கோஹ்லி - ஸ்ரீகர் பாரத் ஆகியோரின் இணைப்பாட்டம் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்கச் செய்தது.

RON_4300.jpg?width=2000&height=1333

அதனால் 8 ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்களை குவித்தது பெங்களூரு.

பின்னர் 8.5 ஆவது ஒவரில் ஸ்ரீகர் பாரத் 32 (24) ஒட்டங்களுடன், ராகுல் சஹாரின் பந்து வீச்சில் சூர்யகுமார் யாதவிடம் பிடிகொடுத்துச் சென்றார்.

தொடர்ந்து களமிறங்கிய மெக்ஸ்வெல்லுடன் கைகோர்த்த விராட் கோஹ்லி 14.1 ஆவது ஓவரில் அரைசதம் கடந்தார். 

எனினும் அவர 15.5 ஆவது ஓவரில் மொததமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 16 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, 126 ஓட்டங்களை பெற்றிருந்தது.

எனினும் 17 மற்றும் 18 ஆவது ஓவர்களை மெக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடியினர் எதிர்கொண்டபோது அதிரடியான அனல் பறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தினர்.

அந்த இரு ஓவர்களில் மாத்திரம் 30 ஓட்டங்கள் பெறப்பட, அணியின் ஓட்ட எண்ணிக்கையும் 18 ஓவர்கள் நிறைவில் 156 ஆக உயர்ந்தது.

இந் நிலையில் 19 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட பும்ரா மெக்ஸ்வெல்லையும், டிவில்லியர்ஸையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார்.

மெக்ஸ்வெல் 37 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களுடனும், டிவில்லியர்ஸ் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கலாக 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிந்தனர்.

இதனால் பெங்களூரு அணியின் வேகம் குறைவடைந்தது.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை பெற்றது பெங்களூரு.

166 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணியின் ஆரம்ப வீரர்களான ரோகித் சர்மாவும், டிகொக்கும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் பவர் - பிளேயின் முதல் ஆறு ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றது மும்பை.

_AI_0822.JPG?width=2000&height=1333

அதன் பின்னர் 6.4 ஆவது ஓவரில் டிகொக் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, 79.2 ஆவது ஒவரில் ரோகித் சர்மா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவர்களின் வெளியேற்றங்களை அடுத்து மும்பை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து தகர்த்து எறியப்பட்டன.

குறிப்பாக 17 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஹர்ஷல் படேல் ஹர்த்திக் பாண்டியா, பொல்லார்ட் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்கச் செய்து ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

Singh67_1546.jpg?width=2000&height=1333

இறுதியாக மும்பை அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 56 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்தது.

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பில் ஹர்சல் படேல் 4 விக்கெட்டுகளையும், சாஹல் 3 விக்கெட்டுகளையும், மெக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதேவ‍ேளை அபுதாபயில் நேற்று மாலை இடம்பெற்ற 38 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கள் நிறைவுக்கு 171 ஓட்டங்களை குவித்தது. பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

19 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரவீந்திர ஜடேஜாவின் வெறியாட்டம் சென்னையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் அடுத்தடுத்து விளாசித் தள்ளினார்.

SNDY4486.JPG?width=2000&height=1333

இது இவ்வாறிருக்க இன்றிரவு டுபாயில் நடைபெறவுள்ள 40 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளன.

Photo Credit ; IPL

 

https://www.virakesari.lk/article/114115

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

27 செப்டெம்பர் 2021, 01:47 GMT
CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI/IPL

அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.

கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தில் மட்டுமல்லாது அதன் ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.

கொல்கத்தா அணிக்காக அதிகபட்சமாக ராகுல் த்ரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ரானா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சாளர்களை பொருத்தவரை சென்னை அணியின் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

நான்கு ஓவர்கள் வீசிய தாக்கூர் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் நன்றாகவே இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரிதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 40 ரன்களும், பஃப் டூப்ளெசீஸ் 30 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக்

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

கொல்கத்தா அணியின் தினேஷ் கார்த்திக்

அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஆனால் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.

16-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன்பின்பு மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

மகேந்திர சிங் தோனி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வருண் சக்ரவர்த்தியின் பந்தில் பவுல்டு-அவுட் ஆனார்.

ஆட்டத்தின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க பரபரப்பும் அதிகரித்தது .18-வது ஓவரில் சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ். தோனி ஆகிய இருவருமே ஆட்டமிழந்தனர். 15 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது.

கடைசி ஓவரின் போது சென்னை அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரன் ஆட்டமிழந்தார்.

இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பொழுது கடைசி ஓவரின் 5வது பந்தில் 22 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டார்.

சென்னை வெல்லுமா, சூப்பர் ஓவர் தேவை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சூப்பர் ஓவர் வீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.

ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த பின்பு அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய தீபக் சஹார், சுனில் நரைன் பந்து வீச்சில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அந்த ஒற்றை ரன்னை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம்

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த சீசனில் இதுவரை தாம் விளையாடியுள்ள 10 ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதே போல பத்துக்கு எட்டு போட்டிகளில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணியை விட பின்தங்கி இருப்பதால் தற்போது அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

இதுவரை விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும், பத்தில் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு முந்தைய இடம் அதாவது 7-வது இடத்திலும் உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-58702541

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SRH vs RR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 82 ரன்கள் எடுத்திருந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 82 ரன்கள் எடுத்திருந்தார் கேப்டன் சஞ்சு சாம்சன்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்த அணியால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தபோது தொடக்க வீரர் எவின் லெவிஸ் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வல் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 57 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மூன்று சிக்சர்களுடன் 82 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஆனால் இவரது இந்த ஆட்டம் சிறப்பாக இருந்தும் ராஜஸ்தான் அணியால் பெரும் அளவில் ஸ்கோர் எடுக்க முடியவில்லை. அதற்குக் காரணம் இவரைத் தவிர பிற ஆட்டக்காரர்கள் யாரும் அதிரடியாக ஆடவில்லை.

கடைசிவரை நிலைத்து நின்று ஆடிய சஞ்சு சாம்சன் ஆட்டம் முடிய 4 பந்துகளில் இருந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் சித்தார்த் கௌலின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டருக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 164 ரன்களை எடுத்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் இழந்து 5 விக்கட்டுக்களில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியின் சித்தார்த் கௌல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அமர்க்களம்

ஜேசன் ராய்

பட மூலாதாரம்,BBCI/IPL

 
படக்குறிப்பு,

ஜேசன் ராய்

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணிக்கு சேசிங் ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லை.

சன்ரைசர்ஸ் தொடக்க வீரர் ஜேசன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க வீரர் வ்ருத்திமான் சஹா 16 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்.

அடுத்ததாக வந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன் பிரியம் கர்க் ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனாலும் இது அந்த அணிக்கு ஒன்றும் பெரிய பாதிப்பாக இருக்கவில்லை.

13வது ஓவரின் கடைசி பந்தில் அவர் ஆட்டமிழந்த பொழுது சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே 119 ரன்களை எடுத்திருந்தது.

இறுதியாக ஆட்டம் முடிய 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 167 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். இதன் மூலம் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ளது ஹைதராபாத் அணி. ஆனால் நேற்றைய வெற்றிதான் இந்த அணிக்கு 2வது வெற்றி.

மீதமுள்ள எட்டு போட்டிகளிலும் இந்த அணி தோல்வியையே இதுவரை சந்தித்துள்ளது வெறும் நான்கு புள்ளிகளுடன் தற்போதைய புள்ளிப் பட்டியலிலும் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலேயே இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-58715763

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள்

28 செப்டெம்பர் 2021
நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் சார்ஜா ஆடுகளத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் அழுத்தம் கொடுத்த சுனில் நரைன் கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா அணி நான்காவது இடத்தை வலுவாகப் பிடித்திருக்கிறது. தோல்வியடைந்திருந்தாலும் டெல்லி அணி தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 127 ரன்களை மட்டுமே எடுத்தது. நான்கு ஓவர்களை வீசிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

தொடக்கத்தில் டெல்லி அணி சிறப்பான அடித்தளத்தை அமைத்திருந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தன.

வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் அய்யர், ஃபெர்குசன் என கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் டெல்லி அணியை ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினர்.

ஒருபுறம் ரிஷப் பண்ட் ரன் எடுத்துக் கொண்டிருந்த நிலையில், மறு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன.

ஸ்டீவன் ஸ்மித், ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோரைத் தவிர மற்றவர்கள் யாரும் களத்துக்குள் நீடித்து நிற்கவில்லை, கணிசமாக ரன் எடுக்கவும் இல்லை. இறுதியில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே டெல்லி அணி எடுத்தது.

அச்சுறுத்திய சார்ஜா ஆடுகளம்

கொல்கத்தாவின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்துவிடவில்லை. டெல்லி அணியின் பந்துவீச்சு கொல்கத்தாவையும் தடுமாற வைத்தது. 14-ஆவது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது அந்த அணி. சற்று சறுக்கினாலும் தோல்வியடையும் நிலை இருந்தது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

எனினும் நிதிஷ் ராணா சிறப்பாக ஆடி 36 ரன்களை எடுத்திருந்தார். கடந்த சில போட்டிகளில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத சுனில் நரைன் இந்தப் போட்டியில் பந்துவீச்சைப் போலவே பேட்டிங்கிலும் அசத்தினார். கொல்கத்தா அணி தடுமாறிக் கொண்டிருந்தபோது, பத்தே பந்துகளில் 21 ரன்களை எடுத்து வெற்றிக்கு அருகில் அணியைக் கொண்டு வந்தார் நரைன்.

கடைசியில் 10 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஒரு பவுண்டரியை அடித்து டெல்லி அணிக்கு வெற்றிபெற வைத்தார் ராணா.

பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்ட சுனில் நரைன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

சார்ஜா மைதானத்தின் மிக மெதுவான ஆடுகளமே இரு அணிகளும் ரன் எடுக்கத் தடுமாறியதற்கு முக்கியக் காரணம். அதிரடி ஆட்டம் பெரும்பாலும் எடுபடவில்லை. இந்த நிலைமையை கொல்கத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டார்கள்.

கொல்கத்தாவில் ஆண்ட்ரே ரஸல் இல்லாத நிலையிலும் அந்த இடத்தை வெங்கடேஷ் அய்யர் நிரப்பினார்.

பழிதீர்த்த அஸ்வின்

முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது கடைசி ஓவரில் அஸ்வின் அவுட் ஆனார். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கனுக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. தினேஷ் கார்த்திக் குறுக்கே வந்து அவர்களைத் தடுத்தார். இதற்குப் பதிலடியாக கொல்கத்தா பேட்டிங் செய்யும்போது, இயான் மார்கனை இரண்டாவது பந்திலேயே ரன் எதுவும் எடுக்காத நிலையில் அஸ்வின் வெளியேற்றினார். அப்போது மார்கனை நோக்கி குரல் எழுப்பியபடி ஓடிவந்து பழிதீர்த்துக் கொண்டார்.

https://www.bbc.com/tamil/sport-58726042

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்: பஞ்சாப் கிங்ஸை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI / IPL

நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றியை ருசித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

நேற்று அபுதாபியில் நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

இதற்கு முன்பு அந்த அணி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியையே சந்தித்திருந்தது.

நேற்றைய போட்டியிலும் தோல்வியடைந்திருந்தால் மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் மங்கி இருக்கும்.

ஆனால் நேற்றைய வெற்றியின் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான நம்பிக்கையை தங்கள் ரசிகர்கள் இழக்க வேண்டாம் என்று உணர்த்தியுள்ளனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர்.

நேற்று நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்யத் தீர்மானித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் முறையே 21 மற்றும் 15 ரன்களை எடுத்தனர்.

அடுத்ததாக வந்த கிறிஸ் கெயில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

MI vs PBKS ஐபிஎல் 2021 கிரிக்கெட்

பட மூலாதாரம்,BBCI / IPL

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஸ்கோர் எடுத்தவர் 42 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 135 ரன்கள் எடுத்திருந்தது.

மும்பை அணிக்காக பும்ரா மற்றும் பொல்லார்டு ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உதவிகரமாக இருந்தனர்.

சௌரப் திவாரி 37 பந்துகளில் 45 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 40 ரன்களும் எடுத்து இருந்தனர்.

19வது ஓவரின் இறுதியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்களை எட்டியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றுள்ளது.

நேற்றைய வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மேலே செல்வதற்கு உதவியுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தற்போதைய நிலவரப்படி தான் விளையாடிய 11 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றியும் ஆறில் தோல்வியும் அடைந்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 10 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியை விட அதிகமாக உள்ளது.

எனவே மும்பை அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாது, அதிக ரன்கள் எடுத்து வெல்ல வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

டெல்லி கேபிட்டல்ஸ், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக தொடர்ந்து இரு தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் அணி, நேற்றைய போட்டிக்கு முன்பு விளையாடிய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது. நேற்று மும்பைக்கு எதிரராக மீண்டும் தோற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

இப்போது அந்த அணி 11 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

https://www.bbc.com/tamil/sport-58729805

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன?

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ரியான் பராக் கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ரியான் பராக் கோப்புப் படம்

ஐபிஎல் 2021 சீசனின் 43ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 29, புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் பெங்களூரு வெற்றி என்கிற ஒற்றை இலக்கோடு, ஓரணியாக மோதி ராஜஸ்தானை வென்றது.

டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

சரியான நேரத்தில் 31 ரன்களோடு யஷஸ்வியின் விக்கெட்டை வீழ்த்தி இந்த இணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டேன் க்றிஸ்டின்.

5 பவுண்டரியுடன் மூன்று சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டிக் கொண்டிருந்த எவின் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானின் அதிவேக ரன் குவிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜார்ஜ் கார்டன். அப்போது ராஜஸ்தான் 11.1 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு இரு விக்கெட்டை இழந்திருந்தது.

அதன் பிறகு வந்த அணித் தலைவர் சஞ்சு சாம்சன் உட்பட எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்கவில்லை. சஞ்சு சாம்சன் 19 ரன்கள் மற்றும் க்றிஸ் மோரிஸ் 14 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ரன்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சஞ்சு சாம்சன் கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

சஞ்சு சாம்சன் கோப்புப் படம்

ராஜஸ்தானின் மிடிஸ் ஆர்டர் பேட்டர்களான மஹிபால் லோம்ரார், லியாம் லிவிங்ஸ்டன், ராகுல் தீவாட்டியா, ரியான் பராக் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை குவித்திருந்தது ராஜஸ்தான்.

முதல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எந்த அளவுக்கு முக்கியம் என விளையாடியதோ, அதே வேகத்தோடு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூரு.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற ஆபத்தான பேட்டர்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி, பெங்களூரின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஹர்ஷல் படேல், இந்த முறையும் க்றிஸ் மோரிஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானை கட்டுக்குள் வைத்தார்.

யுவேந்திர சாஹல், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பெங்களூரு அணி ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

150 எடுத்தால் வெற்றி

பெங்களூரு ஓப்பனர்கள் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பெங்களூரு ஓப்பனர்கள் - கோப்புப் படம்

பெங்களூரு தரப்பில் களமிறங்கிய விராட் கோலி 25 ரன்களோடும், தேவ்தத் படிக்கல் 22 ரன்களோடும் பெவிலியம் திரும்பினர்.

சென்னைக்கு எதிரான போட்டியில் ஓப்பனர்கள் இருவரும் 110 ரன்களுக்கு மேல் அடித்துக் கொடுத்த பிறகு கூட, எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நிற்காமல் சீட்டு கட்டு போல சரிந்ததை பார்த்திருக்கிறோம்.

அப்படி இந்த முறையும் நடந்துவிடுமோ என பெங்களூரு ரசிகர்கள் அச்சத்தில் இருந்த போது, ஸ்ரீகர் பரத் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கைகொடுத்தனர்.

அந்த ஜோடி, நிதானமாக ரன்களைக் குவித்து அணியை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர். மேக்ஸ்வெல் 30 பந்துகளுக்கு 50 ரன்களைக் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடக்கம்.

பெங்களூரு அணி 17 பந்துகளுக்கு முன்பே தன் வெற்றி இலக்கை அனாயாசமாக அடைந்தது.

ராஜஸ்தான் அணியும் ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தது. ஆனால் அது பெங்களூருவின் ரன் குவிப்பை தடுக்கவோ, விக்கெட்டுகளை வீழ்த்தவோ உதவவில்லை.

முஸ்தஃபிசுர் ரஹ்மான் மட்டுமே 3 ஓவர்களுக்கு 20 ரன்களைக் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

க்றிஸ் மோரிஸ்ஸின் 4 ஓவர்களில் 50 ரன்கள் போனது. தொடக்க வீரர்களை வீழ்த்திய வேகத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தவில்லை. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பரத் இணை வலுவாக நிலைபெற்று ரன்களை அடிக்கவிட்டது ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமானது.

திரும்பி வந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரு அணி கோப்புப் படம்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பெங்களூரு அணி கோப்புப் படம்

ஏப்ரல் 2020-ல் இந்த ஐபிஎல் சீசன் தொடங்கிய போது பெங்களூரு அணி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் என தொடர் வெற்றிகளைக் குவித்தது.

செப்டம்பர் மாதம் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது கொல்கத்தாவிடம் தோல்வி, சென்னையிடம் தோல்வி என துவண்டிருந்த அணி, மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தின் வீழ்த்தி தன்னை போட்டியில் நிலைநாட்டிக் கொண்டது.

நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி ஒரு அணியாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது பெங்களூரு.

ஒரு சில பேட்டர்கள் மட்டுமே ரன்களைக் குவிப்பது, டாப் ஆர்டர் பேட்டர்கள் வீழ்ந்தால் மொத்த அணியும் சடசடவென சரிவது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, டீம் ஸ்பிரிட்டோடு விளையாடத் தொடங்கியுள்ளனர்.

பிரத்யேகமாக மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து பேட்டை சுழற்றத் தொடங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 3ஆம் தேதி பஞ்சாபையும், 6ஆம் தேதி ஹைதராபாத்தையும், 8ஆம் தேதி டெல்லியையும் எதிர்கொள்ளவிருக்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.

கடந்த இரு போட்டிகளைப் போல வரும் போட்டிகளிலும் ஜொலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

சீசனின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு தற்பொது 11 போட்டிகளில் 7-ல் வென்று புள்ளிகள் பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்திருகிறது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் 11 போட்டிகளில் 5-ல் வென்று 4 மற்றும் 5ஆவது இடத்தில் உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-58744219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SRH vs CSK: சென்னையை அலறவிட்ட ஜேசன் ஹோல்டர், ஹெலிகாப்டர் ஷாட்டில் கரை சேர்த்த தோனி

3 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹைதராபாத் - சென்னை போடி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஹைதராபாத் - சென்னை போடி - கோப்புப் படம்

ஐபிஎல் 2021 சீசனின் 44ஆவது போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

சென்னை போன்ற வலுவான அணிக்கு எளிய இலக்கு இருந்த போதிலும் திடீரென விக்கெட்டுகள் வீழ்ந்ததால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. சென்னை அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி, தன் அக்மார்க் சிக்ஸர் அடித்து சூப்பர் கிங்ஸை கரை சேர்த்தார்.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ஜேசன் ராய் 2 ரன்களோடு வெளியேறினார். மறு புறம் விரித்திமான் சாஹா நிதானம் காட்டி ரன்களைக் குவித்தாலும், மறு பக்கம் கேன் வில்லியம்சன் 11 ரன்களோடும், ப்ரியம் கார்க் 7 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர். விரித்திமான் சாஹாவுக்கு ஈடு கொடுத்து நின்று விளையாட ஆள் இல்லாமல் தடுமாறினார்.

12.3ஆவது ஓவரில் விரித்திமான் சாஹாவும் வீழ்ந்தார். அப்போதே ஹைதராபாத் 4 விக்கெட் இழந்து 74 ரன்களை மட்டுமே அடித்திருந்தது.

அவருக்குப் பின் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா, அப்துல் சமத் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் முறையே 18, 18, 5 ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

சொல்லப் போனால் சன்ரைசர்ஸ் அணியிலேயே அபிஷேக் மற்றும் அப்துல் ஜோடி தான் அதிகபட்சமாக 35 ரன்களைக் குவித்தனர். கடைசி சில ஓவர்களில் களமிறங்கிய ரஷீத் கான் 17 ரன்களை அடித்தார்.

இதெல்லாம் போக சென்னை அணிகூடுதலாக 10 ரன்களைக் கொடுத்திருந்தது. 20 ஓவர் முடிவில் 134 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது ஹைதராபாத்.

சென்னையின் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களுக்கு 24 ரன்களைக் கொடுத்து ஜேசன் ராய் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ட்வெயின் ப்ராவோ 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து கேன் வில்லியம்சன் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஹைதராபாத்தின் ரன் ரேட்டுக்கு பெருந்தடை ஏற்படுத்தினார்.

ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 37 ரன்களை கொடுத்து ஜேசன் ஹோல்டரின் விக்கெட்டையும், ரவீந்திர ஜடேஜா 3 ஓவர்களில் 14 ரன்களை கொடுத்து விரித்திமான் சாஹா விக்கெட்டையும் வீழ்த்தினர்.

135 இலக்கு... இருப்பினும் தடுமாறிய சென்னை

ஜேசன் ஹோல்டர்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ஜேசன் ஹோல்டர், கோப்புப் படம்

எளிய இலக்கோடு களமிறங்கிய ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளசி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். 10.1ஆவது பந்தில் ரிதுராஜ் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் நல்ல ரன்களோடு டூப்ளசி ஆடிக் கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்தடுத்த வந்த மொயின் அலி 17 ரன்களோடும், சுரேஷ் ரெய்னா 2 ரன்களோடும் சடசடவென சரிந்தனர். அவர்களைத் தொடர்ந்து டூப்ளசியும் வெளியேற்றப்பட்டார்.

10.1 ஓவரில் 75 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்றிருந்த நிலை, 15.5 ஓவரில் திடீரென 108 ரன்களுக்கு 4 விக்கெட் என சென்னையை கதிகலங்கச் செய்தது.

இதற்கு ஒற்றை காரணம் ஜேசன் ஹோல்டர். ஆம், அந்த ஒற்றை மனிதர் தான் ரிதுராஜ், ரெய்னா, டூப்ளசி என சென்னையின் முக்கிய பேட்டர்களை வெளியேற்றி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை கொண்டு சென்றார்.

4 விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பதி ராயுடு இணை களத்தில் நிதானம் காட்டி அணியை வெற்றி பெறச் செய்தது.

குறிப்பாக தோனி அடித்த அந்த சிக்ஸரை இணையவாசிகள், தோனி ரசிகர்கள் மற்றும் சென்னை விசிறிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி, கோப்புப் படம்

இப்போட்டியின் வெற்றி மூலம் சென்னை முதல் அணியாக தன் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து சென்னை அணி 2020ஆம் ஆண்டு தவிர மற்ற எல்லா சீசனிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் அணி இந்த ஐபிஎல் சீசனில் அதிகாரபூர்வமாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியதிலிருந்து நடைபெற்ற நான்கு (அனைத்து) போட்டிகளிலும் சென்னை வெற்றி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய கடும் போட்டி நிலவும் நிலையில் இன்று கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரிட்சை நடத்தவிருக்கின்றன. நாளை டெல்லியும், மும்பையும் மோத உள்ளன.

https://www.bbc.com/tamil/sport-58757679

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல். தொடரிலிருந்து கிறிஸ் கெய்ல் விலகல்

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக கரீபியன் புயல் கிறிஸ் கெய்ல் திடீரென அறிவித்துள்ளார்.

Virender Sehwag, Kings XI Punjab have saved IPL 2018 by picking me: Chris  Gayle | Cricket - Hindustan Times

பஞ்சாப் கிங்ஸ் அணியும் இந்த தகவலை வியாழக்கிழமை பிற்பகுதியில் உறுதிபடுத்தியுள்ளது.

எதிர்வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக மேற்கிந்தியத்தீவுகள் அணியில் ஆட தன்னை புத்துணர்வாக வைத்துக் கொள்ள ஐ.பி.எல். பயோபபுள் சூழலிலிருந்து விடுபடுவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத்துக்காக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் வரை அவர் டுபாயில் தங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

https://www.virakesari.lk/article/114402

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KKR vs PBKS: கே எல் ராகுல் அதிரடி, கோட்டைவிட்ட கேட்ச்களால் மூழ்கிய கொல்கத்தா கப்பல் - சிக்கலாகும் ப்ளே ஆஃப் கணக்குகள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
பஞ்சாப் vs கொல்கத்தா

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

பஞ்சாப் vs கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (அக்டோபர் 01, வெள்ளிக்கிழமை) துபாய் மைதானத்தில் மோதின.

பஞ்சாப் அணி சார்பாக க்றிஸ் கெயில், மந்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் விளையாடவில்லை. ஃபேபியன் ஆலன், மயங்க் அகர்வால், ஷாரூ கான் ஆகியோர் களம் கண்டனர். இந்த மாற்றம் பஞ்சாபுக்கு சாதகமாகவே அமைந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடிய கொல்கத்தாவின் வெற்றி அணியில் இருந்த லோகி ஃபெர்குசன் மற்றும் சந்தீப் வாரியருக்கு பதிலாக சிவம் மவி மற்றும் டிம் சைஃபர்ட் களமிறங்கினர்.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் கொல்கத்தாவை பேட் செய்ய அழைத்தது.

சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இணை நிலைபெறத் தொடங்குவதற்குள் 2.2ஆவது பந்தில் அர்ஷ்தீப் சுப்மனை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 34 ரன்களுக்கு ரவி பிஷ்னோயால் வெளியேற்றப்பட்டார்.

கொல்கத்தா தரப்பில் ராகுல் திரிபாதி - வெங்கடேஷ் ஜோடி 55 பந்துகளுக்கு 72 ரன்களைக் குவித்தனர். அவரைத் டொடர்ந்து வெங்கடேஷும் ரவியால் வெளியேற்றப்பட்டார். அப்போது கொல்கத்த ஆணில் 14.4 ஓவரில் 120 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இயான் மார்கன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

இயான் மார்கன்

அடுத்து வந்த நிதிஷ் ரானா 31 ரன்களைக் குவித்தார், அவரைத் தொடர்ந்து வந்த பேட்டர்களை பஞ்சாபின் பந்துவீச்சுப் படை அதிரடியாக வெளியேற்றி ரன்ரேட்டை கட்டுக்குள் வைத்தது.

கடந்த சில முக்கிய போட்டிகளில் அதகளப்படுத்தி வரும் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியிலும் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து சுப்மன் கில், நிதிஷ் ரானா உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 22 ரன்களை கொடுத்து வெங்கடேஷ் மற்றும் ராகுல் திரிபாதியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.

அனுபவமிக்க பந்துவீச்சாளரான மொஹம்மத் ஷமி 4 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்து இயான் மார்கனின் விக்கெட்டை வீழ்த்தினார்.

20 ஓவர் முடிவில் 165 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. 166 ரன்களைக் குவித்தால் வெற்றி என களமிறங்கியது பஞ்சாப்.

பொறுப்போடு ஆடிய ராகுல்

கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இணை பஞ்சாப் அணிக்கு பிரமாதமான தொடக்கத்தைக் கொடுத்தது.

முதல் ஓவரிலேயே மயங்க் அகர்வால் கொடுத்த கேட்சை இயான் மார்கன் தவறவிட்டார்.

27 பந்தில் 40 ரன்களைக் குவித்திருந்த அதிரடி வீரர் மயங்க் அகர்வாலை ஒருவழியாக வீழ்த்தியது கொல்கத்தா.

அடுத்து வந்த நிகோலஸ் பூரன் 12 ரன்களில் வெளியேற, ஏய்டன் மக்ரம் கே எல் ராகுலுக்கு ஜோடியாக களமிறங்கினார். அவரும் 18 ரன்களில் வெளியேற தீபக் ஹூடா 3 ரன்களில் வெளியேறினார்.

16.4ஆவது ஓவரில் ஷாரூ கான் களமிறங்கி ராகுலுக்கு பக்க பலமாக நின்றார். ஒரு பக்கம் பேட்டர்கள் நிலைபெறாத போதும் கே எல் ராகுல் தலைவராக தன் விக்கெட்டை இழக்காமல் ரன்களை குவித்துக் கொண்டிருந்தார்.

18 பந்துகளில் 24 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழலில் ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. இரு பேட்டர்களும் லாவகமாக பேட்டைச் சுழற்றத் தொடங்கினர்.

18.3ஆவது ஓவரில் ராகுல் திரிபாதி பிடித்த ஒரு கேட்ச், மூன்றாம் நடுவரால் மறுக்கப்பட, ஆட்டம் பஞ்சாபின் பக்கம் சாய்ந்தது.

கடைசி ஓவரை வெங்கடேஷ் வீச, 19.2ஆவது பந்தில் கே எல் ராகுலின் விக்கெட் வீழ்ந்தது, ஆனால் ஷாரூ கான் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து பஞ்சாபின் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்தார்.

சொதப்பிய கொல்கத்தா

மயங்க் அகர்வால்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மயங்க் அகர்வால்

தொடக்கத்தில், பஞ்சாபை கட்டுப்படுத்தி வந்த கொல்கத்தா கடைசி ஐந்து ஓவர்களில் கோட்டை விட்டது. 30 பந்தில் 45 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்த போட்டி சுனில் நரேன் வீசிய 16ஆவது ஓவரில் இருந்து மாறத் தொடங்கியது

ஏகப்பட்ட முக்கிய கேட்ச்களை கொல்கத்தா கொட்டை விட்டது, போட்டி பஞ்சாபுக்கு சாதகமானதற்கு முக்கிய காரணம்.

"தொடக்கத்திலேயே நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. பல கேட்ச்களை கோட்டைவிடோம். நான் கூட கேட்சை தவறவிட்டேன். அது எங்களுக்கு பேரிழப்பாகிவிட்டது" என போட்டி நிறைவடைந்த பிறகு கொல்கத்தாவின் கேப்டன் மார்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

ப்ளே ஆஃப் கணக்கு

கே எல் ராகுல்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

கே எல் ராகுல்

இந்த வெற்றியால், பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளோடு ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவும் 10 புள்ளிகளோடு ரன் ரேட் அடிப்படையில் 4ஆவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் நாளை பெங்களூரு உடனும், அக்டோபர் 7ஆம் தேதி சென்னையோடும் மோதவிருக்கிறது. கொல்கத்தா அணிக்கு நாளை ஹைதராபாத்தோடும், அக்டோபர் 7ஆம் தேதி ராஜஸ்தானோடும் விளையாட உள்ளது.

இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் ராஜஸ்தான் வென்றால், புள்ளிகள் பட்டியலில் நான்கு அணிகள் 10 புள்ளிகளோடு இருக்கும் என்பதால் இனி ஒவ்வொரு அணியின் வெற்றியும், தோல்வியும் மற்ற அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/sport-58771190

Link to comment
Share on other sites

சென்னை அணியை அடுத்து 2 வது அணியும் Play Off சுற்றுக்கு தகுதி -முழுமையான விபரம்..!

 
Polish_20211002_010851252-696x522.jpg

பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது டெல்லி; புள்ளிகள் பட்டியல் – முழு விவரம்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது அணியாக டெல்லி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் சுற்றுகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

அணிகள் புள்ளிகள் பட்டியல் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 9 வெற்றி, 2 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெற்ற பஞ்சாப்-கொல்கத்தா இடையேயான போட்டியில் பஞ்சாப் வெற்றிபெற்றதை தொடர்ந்து புள்ளிகள் அடிப்படையில் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

FB_IMG_1632579756605.jpg

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 11 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

FB_IMG_1633111330565.jpg

பஞ்சாப் கிங்ஸ் – 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 11 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் 2 வெற்றி, 9 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்ற பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

https://vilaiyaddu.com/சென்னை-அணியை-அடுத்து-2-வது/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே - ராஜஸ்தான் ரோயல்ஸ்  ஆட்டத்தில் கெய்க்வாட்டின் ஆட்டம் அதிரடி சரவெடி.

எதிர்கால இந்திய அணியின் சேவாக்காக வருவாரோ தெரியவில்லை. 

முன்பு எல்லாம் தோனி அவுட்டாகாமல் இருந்தால் ஒரு போட்டியின் முடிவு என்ன வேண்டுமாகவும் இருக்கலாம் என்று இருக்கும், இப்போ ஜடேஜா அவுட்டாகாமல் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார்,

சத்தமில்லாமலே ஜடேஜா ஒரு சாதனை புரிந்து வருகிறார்,

சச்சினுக்கு அப்புறம் இந்திய அணியில் மிக நீண்டகாலம் அனைத்து விதமான போட்டிகளிலும் அசுரதனமான ஆற்றல் கொண்டவராக மிக நீண்டகாலம் ஆடி வருகிறார்.

ஏறத்தாழ 12 வருஷம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.