Jump to content

ஐபிஎல் T20 2021 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs RR: ராயுடு விட்ட அந்த ஒரு கேட்ச்... ருத்ர தாண்டவமாடிய சிவம், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - படுதோல்வி கண்ட சென்னை

3 மணி நேரங்களுக்கு முன்னர்
தோனி & சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

தோனி & சஞ்சு சாம்சன்

ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள போராடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய (அக் 02, சனிகிழமை) போட்டி ஐபிஎல் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

189 ரன்களை அடித்துவிட்டு அனாயாசமாக இருந்த சென்னைக்கு எதிராக, 15 பந்துகளுக்கு முன்பே 190 ரன்களைக் குவித்து வெற்றி பெற்று ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது ராஜஸ்தான்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானித்தது. ரிதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபாஃப் டூப்ளசியின் தொடக்கம் சராசரியாக இருந்தது. 6.5 ஓவரில் 25 ரன்களுக்கு வெளியேறினார் டூப்ளசி.

அவரைத் தொடர்ந்து வந்த சுரேஷ் ரெய்னா 3 ரன்களுக்கும், மொயின் அலி 21 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

கடைசியாக ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளுக்கு 32 ரன்கள் அடித்து சென்னை ஸ்கோரை எகிர வைத்தார். மறுபக்கம் முதல் ஓவரில் களமிறங்கிய ரிதுராஜ் 60 பந்துகளில் 101 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழக்காமல் மாஸ் காட்டினார்.

சென்னை தரப்பில் டூப்ளசி - ரிதுராஜ் இணை 41 பந்துகளுக்கு 47 ரன்களும், மொயின் அலி - ரிதுராஜ் ஜோடி 36 பந்துகளுக்கு 57 ரன்களும், ஜடேஜா - ரிதுராஜ் ஜோடி 22 பந்துகளுக்கு 55 ரன்களையும் குவித்து சென்னை ரசிகர்களை சிலிர்க்க வைத்தனர்.

ரிதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ரிதுராஜ் கெய்க்வாட்

20 ஓவர் முடிவில் 189 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை. இதில் 16 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களும் அடக்கம்.

முஸ்தஃபிசுர் ரஹ்மான் வீசிய 4 ஓவர்களில் 51 ரன்கள் பறிபோனது. ராகுல் தீவாட்டியா டூப்ளசி, ரெய்னா, மொயின் அலி விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னையின் ரன் ரேட்டை கட்டுப்படுத்தினார்.

டார்கெட் 190

ஐபிஎல் 2021 சீசனில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டிகளில், இதுவரை 189 ரன்கள் தான் அதிகபட்ச ரன்கள் என்பதால் ராஜஸ்தான் வெல்வது கடினம் என்கிற எண்ணத்தோடு தான் ரசிகர்கள் பலரும் இருந்தனர்.

ஆனால் ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் எவின் லெவிஸ் ஆடத் தொடங்கிய சில ஓவர்களிலேயே, ராஜஸ்தான் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பது போலத் தெரிந்தது.

பவர் ப்ளேவில் மட்டும் ராஜஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 81 ரன்களைக் குவித்தது, ஐபிஎல் ரசிகர்களை 'அட' போட வைத்தது. அப்போதே கிட்டத்தட்ட ஆட்டம் ராஜஸ்தான் கைக்குச் சென்றுவிட்டது எனலாம்.

மிகவும் சிரமப்பட்டு ஷர்துல் தாகூர் 5.2ஆவது ஓவரில் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி, 32 பந்தில் 77 ரன்களைக் குவித்திருந்த லெவிஸ் - ஜெய்ஸ்வால் ஜோடியை பிரித்தார். லெவிஸ் 12 பந்தில் 27 ரன்களை விளாசி இருந்தார்.

புதிதாக களமிறக்கப்பட்டிருந்த கே எம் ஆசிஃப் 6.1ஆவது பந்தில் அரை சதம் அடித்திருந்த ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தி சென்னை ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார்.

இதன் பிறகு ராஜஸ்தானின் வேகமும் ரன்ரேட்டும் குறையலாமென எதிர்பார்த்திருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

சஞ்சு சாம்சன் - சிவம் தூபே ஜோடி நிதானமாக பவுண்டரிகளை விளாசத் தொடங்கினர். இந்த இணை 58 பந்துகளுக்கு 89 ரன்களைக் குவித்தது.

மீண்டும் ஷர்துல் சஞ்சு சாம்சன் விக்கெட்டை வீழ்த்தி கொஞ்சம் சென்னை பக்கம் ஆட்டத்தை திருப்ப முயன்றார். ஆனால் மறு முனையில் சிவம் தூபே பவுண்டரிக்கும் சிக்ஸருக்கு சென்னை வீசிய பந்துகளை பார்சல் செய்து கொண்டிருந்தார்.

அவரோடு 15.5ஆவது ஓவரில் களமிறங்கிய க்ளென் ஃபிலிப்ஸ் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 14 ரன்களைக் குவித்தது ராஜஸ்தானுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. ராஜஸ்தான் தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை அருமையாக தக்க வைத்துக் கொண்டது.

17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை குவித்து. இதில் 17 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடக்கம்.

சென்னை சறுக்கியது எங்கே?

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 1.4ஆவது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கொடுத்த நல்ல கேட்சை தவறவிட்டார் அம்பதி ராயுடு. அப்போதே அவரை வீழ்த்தி இருந்தால் 14 ரன்களோடு அவரை பெவிலியன் அனுப்பி இருக்கலாம்.

சென்னை அணியில் ட்வெயின் ப்ராவோ, தீபக் சாஹர் போன்ற முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாதது பேரிழப்பானது. போட்டி நிறைவடைந்த பிறகு தோனியே இது குறித்து வருத்தம் தெரிவித்தார். சென்னையால் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தவோ, ராஜஸ்தானின் ரன்ரேட்டை கட்டுப்படுத்தவோ முடியவில்லை. அது போக சென்னையின் ஃபீல்டிங்கும் அத்தனை தரமாக அமைக்கப்பட்டிருக்கவில்லை.

தொடக்கத்தில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த பிட்ச், போகப் போக பேட்டிங்குக்கு சாதகமானது. இதற்கு டியூவும் ஒரு காரணம் என தோனியே குறிப்பிட்டிருந்தார்.

பவர்ப்ளே ஓவர்களில் சென்னை 44 ரன்களைக் குவித்திருந்தது, ஆனால் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்களைக் குவித்தது. சாம் கரன், ஹேசில்வுட், ஷர்துல் ஆகியோர் தலா இரு ஓவர்களை பவர் ப்ளேயில் வீசினர். இதில் சாம் கரன் 25 ரன்களும், ஹேசில்வுட் 38 ரன்களும், ஷர்துல் 18 ரன்களும் கொடுத்தனர். ஆட்டம் அப்போதே ராஜஸ்தான் வசமாகிவிட்டது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் வென்றதால் புள்ளிகள் பட்டியலில் 6ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 7ஆவது இடத்தில் இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால், ராஜஸ்தான் ப்ளே ஆஃபில் விளையாடும் வாய்ப்பிருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-58777782

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

MI vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி: மும்பை இந்தியன்ஸின் ப்ளே-ஆஃப் கனவு பலிக்குமா?

2 அக்டோபர் 2021
மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா

நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது ஆட்டமாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்றபின் ஒரு போட்டியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது மீண்டும் தோல்வி கண்டுள்ளது.

ஐபிஎல் 2021இல் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் ஐந்தில் மட்டுமே வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அதுவும் கடைசியாக அந்த அணி ஆடிய ஐந்து போட்டிகளில், இன்றைய போட்டி உள்பட நான்கில் தோல்வியையே சந்தித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு நுழைவதற்கான நம்பிக்கையை ரசிகர்களுக்கு விதைத்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அடுத்து இன்று டெல்லி அணியுடனும் அடுத்ததாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுடனும் நடக்க உள்ள போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் இருந்தது.

இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் வீழ்த்தியதன் மூலம் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பு மும்பை அணிக்கு மேலும் மங்கியுள்ளது.

ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளே-ஆஃப் செல்லும் என்று உத்தரவாதம் இல்லை.

ஏனெனில் அடுத்த இரு போட்டிகளிலும் மிகவும் அதிகமான அளவில் ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

மும்பை அணியின் க்ருனால் பாண்ட்யா

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

மும்பை அணியின் க்ருனால் பாண்ட்யா

போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கிடைக்கும் புள்ளிகள் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் எடுக்கும் ரன்கள் அடிப்படையில் கணக்கிடப்படும் நெட் ரன் ரேட் அடிப்படையிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் பின்தங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் செல்ல வேண்டுமானால் அந்த அணியை விடவும் புள்ளிப்பட்டியலில் மேலே உள்ள அணிகள், அவை அடுத்து ஆடவுள்ள போட்டிகளில் சொதப்பலாக ஆடவும் வேண்டும்.

இப்போதைய சூழலில் தமது பலத்தை மட்டுமல்லாது பிற அணிகளின் பலவீனத்தையும் மும்பை இந்தியன்ஸ் நம்பியுள்ளது.

இன்றைய போட்டி

ஷார்ஜாவில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆட்டத்தின் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, 11-வது ஓவர் முதல் 20-வது ஓவர் வரை மளமளவென ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் யாரும் டக் அவுட் ஆகவில்லை என்றாலும் சொல்லிக்கொள்ளும்படி யாரும் ரன் எடுக்கவும் இல்லை.

சூரியகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுத்த 33 ரன்கள் தான் இன்றைய ஆட்டத்தின் அந்த அணிக்கான அதிகபட்ச ஸ்கோர்.

டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த்

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

டெல்லி கேபிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பந்துவீச்சாளர்கள் அவேஷ் கான் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கினாலும் அந்த அணிக்கு தொடக்கம் ஒன்றும் அவ்வளவு சிறப்பானதாக இல்லை.

தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் ஆறு மற்றும் மற்றும் எட்டு ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார்.

முதல் ஐந்து ஓவர்கள் முடிவதற்குள் டெல்லி கேப்பிடல்ஸ் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.

முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இறக்கங்களை எட்டவே இல்லை என்றாலும் அடுத்ததாக வந்த கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் ஓரளவு நிதானமாக ஆடினர்.

ரிஷப் பந்த் 22 பந்துகளில் 26 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 33 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தனர்.

ஆட்டம் முடிய ஐந்து பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இன்றைய போட்டியில் வென்றது.

https://www.bbc.com/tamil/sport-58775383

Link to comment
Share on other sites

சங்கா, மஹேல – Play off வாய்ப்புக்கான நான்காவது அணி எது ? சென்னையை துவம்சம் செய்தது ராஜஸ்தான்..!

 
FB_IMG_1633198472384-696x464.jpg

சங்கா, மஹேல – Play off வாய்ப்புக்கான நான்காவது அணி எது ? சென்னையை துவம்சம் செய்தது ராஜஸ்தான்..!

14வது ஐபிஎல் போட்டித் தொடரின் மிக முக்கியமான ஆட்டங்கள் இன்று நிறைவுக்கு வந்துள்ளன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது.

FB_IMG_1633198536056.jpg

 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 190 இலக்கை விரட்டி அடித்து மிகப்பெரிய வெற்றியைத் தனதாக்கியது.

இதன் மூலமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லப் போவது சங்கக்காரவா, மஹேல ஜெயவர்தனவாஎன ரசிகர்கள் கேள்வி தொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

26mahela.jpg

ஏற்கனவே மஹேல ஜெயவர்தன பயிற்சியாளராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ், சங்ககார ஆலோசகராக இருக்கும் ராஜஸ்தன் ரோயல்ஸ் ஆகிய அணிகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிகமான கவன ஈர்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் மஹேல ஜயவர்தனவின் மும்பை இந்தியன்ஸ், சங்கக்கார இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகள் இதுவரைக்கும் விளையாடிய 12 போட்டிகளில் தலா 5 வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில் IPL விறுவிறுப்பை எட்டியுள்ளது.

FB_IMG_1633198488099.jpg

மீதமாக இந்த நான்கு அணிகளுக்கும் இரண்டு ஆட்டங்கள் காணப்படுகின்றன, இந்த இரு ஆட்டங்களிலும் வெற்றி பெறுகின்ற அணி Play off சுற்றுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தும் என நம்பப்படுகிறது.

சென்னை அணி, டெல்லி அணி ஆகியன Play off சுற்றுக்கு தேர்வாகி விட்டன. இவற்றை தொடர்ந்து அதிகமான வாய்ப்பு விராட் கோலியின் RCB பெங்களூர் அணிக்கு காணப்படுகின்றது.

ஆகவே நான்காவது இடத்தை குறிவைத்தே இந்த நான்கு அணிகளும் பயணப்படுகின்றமை முக்கியமானது.

IMG_20211002_214619.jpg

இன்று இடம்பெற்ற போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி ருத்துராஜின் சதத்தின் துணையோடு 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

190 எனும் இலக்கோடு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஜெய்ஸ்வால் ,சிவம் துபே ஆகியோருடைய அதிரடி ஆட்டம் கைகொடுக்க 7 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றது.

FB_IMG_1633197917124.jpg

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே மூன்றாவது அணியாக Play off வாய்ப்பை உறுதிப்படுத்தி விடுவார்கள்.

ஆகவே நான்காவது இடத்தைப் பிடிப்பதற்கு 4 அணிகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது, ஐபிஎல் இன்னும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் என்றே காத்திருப்போம்.

FB_IMG_1633198452440-1.jpg

இன்று 19 பந்துகளில் அரைச்சதமடித்த ஜெய்ஸ்வால் தொடர்பிலான ஒரு யூடியூப் காணொளி 👇👇👇👇

FB_IMG_1633197908884.jpg

https://vilaiyaddu.com/சங்கா-மஹேல-play-off-வாய்ப்புக்க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளே-ஆஃப் சுற்றுக்குள் 3 அணிகள் ; நேற்றைய ஆட்டத்தில் ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா

ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

_AI_5698.JPG?width=2000&height=1333

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற 49 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் - இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும், ப்ரியம் கார்க் 21 ஓட்டங்களையும், அப்துல் சமட் 25 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

RON_8099.jpg?width=2000&height=1333

116 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா, 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 119 ஓட்டங்களை பெற்று, வெற்றியிலக்கை கடந்தது.

அணி சார்பில் அதிகபடியாக சுப்மன் கில் 57 ஓட்டங்களையும், நிதிஷ் ராணா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

Singh71_1007.jpg?width=2000&height=1333

இந்த‍ வெற்றியின் மூலம் கொல்கத்தா 12 புள்ளிகளை பெற்று பட்டியலில் தனக்கான நான்காம் இடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதேவேளை நேற்று மாலை சார்ஜாவில் நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு - கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பில் அதிகபடியாக மெக்ஸ்வெல் 33 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களையும், தேவதூத் படிக்கல் 38 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

PAN_2320.jpg?width=2000&height=1333

165 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியினரால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதனால் பெங்களூரு அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

9S6A3025.jpg?width=2000&height=1333

பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் முன்னதாகவே தகுதி பெற்றிருந்தன.

இந் நிலையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக வரப் போவது யார் என்பதை தீர்மானிப்பதற்கு ஏனைய அணிகள் முட்டி மோதுகின்றன.

இதேவேளை இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் 50 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை - டெல்லி அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/114571Photo Credit ; ‍IPL2021

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs DC: ஒற்றை கேட்சில் வெற்றியை தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

4 அக்டோபர் 2021, 18:49 GMT
மகேந்திர சிங் தோனி

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

மகேந்திர சிங் தோனி

ஐபிஎல் 2021 சீசனின் 50ஆவது போட்டி அக்டோபர் 4 ஆம் தேதி, திங்கட்கிழமை இரவு துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

136 ரன்கள் மட்டுமே குவித்திருந்த சென்னைக்கு எதிராக 139 ரன்களை அடித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது டெல்லி. அதற்கு சென்னையின் கிருஷ்ணப்பா கெளதம் விட்ட அந்த ஒரு கேட்ச் வலுவான காரணமாக அமைந்தது.

டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் களமிறங்கிய சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபாஃப் டூப்ளசி (10 ரன்கள்) மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் (13 ரன்கள்) பவர் ப்ளே ஓவர்களுக்குள்ளேயே சொற்ப ரன்களில் வெளியேறி ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரும் முறையே 19 மற்றும் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சென்னையின் மிடில் ஆர்டர் பேட்டர்களின் தலையில் மொத்த சுமையும் இறங்கியது.

அம்பதி ராயுடு மிக பொறுப்போடு 43 பந்துகளுக்கு 55 ரன்களைக் எடுத்து அணியை கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். மகேந்திர சிங் தோனி ஸ்ட்ரைக்கை சுழற்றினாலும், தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க முடியாமல் திணறியது போலத் தெரிந்தது. 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.

ஒருவழியாக தட்டுத்தடுமாறி சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களைக் குவித்தது சென்னை. துபாய் போன்ற பிட்சில் அதிக ரன்கள் குவிப்பது சிரமம் என்றாலும், டெல்லி போன்ற வலுவான அணிக்கு இது எளிதான ஸ்கோராக இருக்கலாம் என கூறப்பட்டது.

டெல்லி அணியின் அக்ஸர் படேல் 4 ஓவர்களுக்கு 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து டூப்ளசி உட்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு உத்தப்பாவின் விக்கெட்டையும், அவேஷ் கான் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து தோனியின் விக்கெட்டையும், அன்ரிக் நார்ட்ஜ் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து ரிதுராஜின் விக்கெட்டையும் வீழ்த்தினர். ரபாடா விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

டெல்லி ஒப்பனர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

டெல்லி ஒப்பனர்கள்

136 அடித்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இணை 24 ரன்களில் பிரிக்கப்பட்டது. 18 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ப்ரித்வி.

அடுத்த வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் நிதானம் காட்டி 15 ரன்களில் வெளியேறினார்.அடுத்த வந்த ரிபல் படேல் கூட 18 ரன்கள் குவித்தார்.

இப்படி டெல்லி அணியின் முதல் நான்கு ஜோடிகள் தலா 20 - 27 ரன்கள் குவித்தன. ஹெட்மேயர் மற்றும் அக்ஸர் படேல் ஜோடி 27 பந்துகளுக்கு 36 ரன்களைக் குவித்தது.

19.4ஆவது பந்தில் ப்ராவோ வீசிய பந்தை ரபாடா பவுண்டரிக்கு அனுப்பி டெல்லியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த போட்டியிலும், வழக்கம் போல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் ஷர்துல் தாகூர் சென்னைக்கு கைகொடுத்தார். ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சென்னைக்கு பெரும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஷிகர் தவான் உட்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஜடேஜா 4 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து ரிஷப் பந்த் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ப்ராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

சென்னை சொதப்பியது எங்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம்,CSK, TWITTER

 
படக்குறிப்பு,

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த போட்டியிலேயே அதிக ரன்கள் பறிபோனது, சென்னை வீசிய ஐந்தாவது ஓவரில் தான். அந்த ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்கள் பறிபோனது. அந்த இடத்திலிருந்து டெல்லி மிக வலுவாக போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

17.3ஆவது ஓவரில் ஹெட்மேயர் அடித்த ஒரு பந்தை கிருஷ்ணப்பா கெளதம் தவறவிட்டது ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திருப்பிவிட்டது. இந்த இரு தவறுகளை சரி செய்திருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

டெல்லியின் வெற்றியால், கடந்த பல நாட்களாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை, தற்போது இரண்டாமிடத்துக்கு வந்திருக்கிறது. டெல்லி 10 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்கிறது.

https://www.bbc.com/tamil/india-58796292

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RR vs MI: விஸ்வரூபமெடுத்த மும்பை இந்தியன்ஸ் - சூறாவளி பந்து வீச்சு, சுனாமி பேட்டிங்கில் கதிகலங்கிய ராஜஸ்தான்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
ராஜஸ்தான் பேட்டர்கள்

பட மூலாதாரம்,BCCI/IPL

 
படக்குறிப்பு,

ராஜஸ்தான் பேட்டர்கள்

ஐபிஎல் 2021 சீசனின் 51ஆவது போட்டி நேற்று அக்டோபர் 5, செவ்வாய்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இத்தனை நாள் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த மும்பை, பழைய பன்னீர் செல்வம் போல தன் ஃபார்முக்கு வந்து அனைத்து அணிகளையும் நிமிர்ந்து உட்காரச் செய்துள்ளது. என்ன நடந்தது?

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது. எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவர் ப்ளே ஓவர்களுக்குள்ளேயே இருவரும் தலா 24 மற்றும் 12 ரன்களோடு பெவிலியன் திரும்பினர்.

அடுத்தடுத்து வந்த ராஜஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர்களான சஞ்சு சாம்சன், சிவம் தூபே, க்ளென் ஃபிலிப்ஸ் ஆகியோரை ஒற்றை இலக்க ரன்களில் வீழ்த்தி வழி அனுப்பி வைத்தது மும்பை.

மிடில் ஆர்டர் பேட்டர்களான டேவிட் மில்லர் மற்றும் ராகுல் திவாட்டியா மட்டுமே ஆறுதலளிக்கும் வகையில் தலா 15 மற்றும் 12 ரன்களைக் குவித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அனைத்து ராஜஸ்தான் பேட்டர்களும் ஒற்றை இலக்கங்களில் வீழ்ந்தனர்.

20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை மட்டுமே குவித்திருந்தது ராஜஸ்தான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிக் கொண்டிருந்த லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் ஜஸ்ப்ரீத் பும்ரா.

நேதன் கோல்டர் நைல் 4 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் கொடுத்து ஜெய்ஸ்வால், ஃபிலிப்ஸ், மில்லர் போன்ற 3 முக்கிய விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தை மும்பைக்கு சாதகமாக்கினார்.

அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் நீஷமும் சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ராகுல் திவாட்டியா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானின் ரன் ரேட்டை சிறையிலிட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

90 ரன்கள் என்பது எளிய ஸ்கோர் தான் என்றாலும், எப்படியும் 15 ஓவர்களாவது ஆடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, மும்பை அணி 8.2 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து, அனைத்து அணிகளின் வயிற்றிலும் கிளி கிளப்பிவிட்டது.

ஆம். 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களைக் குவித்து தன் வெற்றியை பலமாக, ஐக்கிய அரபு அமிரேட்ஸ் அதிர பதிவு செய்தது.

முதலில் களமிறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் நிதானமாக ஆடத் தொடங்கினர். ரோஹித் ரன்களைக் குவித்தாலும், இஷான் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தார்.

மூன்றாவது ஓவர் முதல் ஆட்டத்தில் மும்பை பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்.

ராஜஸ்தானின் சேதன் சகாரியா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவர் மெய்டன் ஆனது. இஷான் கிஷனால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை. அதே போல க்ளென் ஃபிலிப்ஸ் சில பவுண்டரிகளைத் தடுத்த விதம் அருமையிலும் அருமை. குறைந்த ரன்களை இலக்காக வைத்திருந்தாலும் ராஜஸ்தான் தன் தரப்பில் முழுமையாக முயற்சித்தது என்பதற்கு இவைகளே சாட்சி. ஆனால், ராஜஸ்தானின் முயற்சிகள், மும்பையை கட்டுப்படுத்தவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

2.3ஆவது ஓவரிலேயே ரோஹித் ஷர்மாவை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் தவறவிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் சற்றே தடுமாறிய இஷான் கிஷன், 4ஆவது ஓவர் முதல் ரன் இயந்திரமாக பந்தை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பார்சல் செய்தார். ஆட்டத்தின் முடிவில் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.

சேதன் சகாரியா வீசிய 2ஆவது ஓவரில் ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் தவித்த அதே இஷான் கிஷன், சேதன் சகாரியா வீசிய 8ஆவது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்து துவம்சம் செய்தார்.

அடுத்து வந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானின் முதல் இரு பந்துகளையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி, தன் அரை சதம் கொண்டு மும்பைக்கு வெற்றிக் கனியைப் பறித்துக் கொடுத்தார் இஷான் கிஷன்.

பழைய பன்னீர் செல்வமாய் வந்த மும்பை

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

ஐக்கிய அரபு எமிர்ரெட்ஸில் மீண்டும் தொடங்கப்பட்ட ஐபிஎல் 2021 சீசனில்,

சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப், டெல்லி அணிகளுடனான ஐந்து போட்டியில், பஞ்சாப் உடனான போட்டியில் மட்டுமே வென்றது மும்பை.

சென்னையை அசால்டாக வென்ற ராஜஸ்தான், மும்பையையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் அதிரடி காட்டி, அனைவரையும் அலறவிட்டிருக்கிறது மும்பை இந்தியின்ஸ் அணி.

தற்போது புள்ளிகள் பட்டியலில் 13 போட்டிகளில் 6-ல் வென்று 12 புள்ளிகளோடு 5ஆவது இடத்தில் உள்ளது. ராஜஸ்தானை வீழ்த்தியதால் மும்பை ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பு இப்போதும் உயிர்ப்போடு இருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-58811960

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021: RCB Vs SRH -விராட் கோலியின் கனவைக் கலைத்த புவனேஸ்வர், மாலிக்

6 மணி நேரங்களுக்கு முன்னர்
புவனேஸ்வர்

பட மூலாதாரம்,IPL/BCCI

ஹைதராபாத் அணியுடனான போட்டியில் வென்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்து ப்ளே ஆப் சுற்றை எளிதாகக் கடந்துவிடலாம் என்று பெங்களூரு அணியின் கனவை புவனேஸ்வர் குமார் உள்ளிட்ட ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் கலைத்தனர்.

ஒரு கட்டத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுவிடும் என்ற நிலை மாறி, கடைசியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த சீசனில் அவர்களுக்கு ஆறுதலான மூன்றாவது வெற்றி இது.

கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான கட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் களத்தில் இருந்தார். இரண்டு பந்துகள் சிக்கினால் போதும் என பெங்களூரு ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

ஆனால் புவனேஸ்வர் குமார் தன்னுடைய விதவிதமான பந்துகளால் அவரைக் கட்டுப்படுத்தினார். நான்காவது பந்தில் டி வில்லியர்ஸ் சிக்ஸர் மூலமாக பதற்றத்தை அதிகரித்தாலும், பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கு அது பயன்படவில்லை.

பெங்களூரு அணி தோல்வி அடைந்ததால் முதல் பிளே ஆப் போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுவது உறுதியாகி இருக்கிறது. பிளே ஆப்பின் நான்காவது இடம் யாருக்கு என்பது இன்னும் உறுதியாகவில்லை.

வேகத்தில் மிரட்டும் உம்ரன் மாலிக்

ஹைதரபாத் அணியின் சமீபத்திய நட்சத்திரமாக உருவெடுத்திருக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பந்துவீச்சாளர் உம்ரன் மாலிக், இந்தப் போட்டியிலும் கவனத்தை ஈர்த்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 18-ஆவது ஓவரில் அவர் கொடுத்த 9 ரன்களும் இதில் அடங்கும்.

தனது முதல் ஓவரிலேயே ஒரேயொரு ரன் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பெங்களூரு அணியை நிலைகுலையச் செய்தார். ஐபிஎல் போட்டிகளில் அவர் எடுத்திருக்கும் முதலாவது விக்கெட் இது. அவரது பெரும்பாலான பந்துகள் 150 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப் பாய்ந்தன.

9ஆவது ஓவரில் படிக்கலுக்கு வீசிய பந்து 153 கிலோ மீட்டர் வேகத்தில் சீறியது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளிலே அதிக வேகத்தில் பந்து வீசியவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

மேக்ஸ்வெல் போன்ற அதிரடியான ஆட்டக்காரர்களையே அவரது பந்து கட்டுப்படுத்தியது. போட்டியின் இறுதியில் பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, உம்ரன் மாலிக்கின் பந்துவீச்சின் வேகத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

மாலிக்

பட மூலாதாரம்,IPL/BCCI

 
படக்குறிப்பு,

ஐபிஎல் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்திய உம்ரன் மாலிக்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்குப் பதிலாக வாய்ப்பளிக்கப்பட்ட மாலிக், தேசிய அணியிலும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

போட்டியை மாற்றிய ரன் அவுட்

முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்ததால், அது பெங்களூரு அணிக்கு எளிய இலக்காகவே கருதப்பட்டது. ஆனால் அபுதாபியின் மிக மெதுவான ஆடுகளம் பெங்களூருக்கு கைகொடுக்கவில்லை.

முதல் ஓவரிலேயே புவனேஸ்வரின் பந்தில் கேப்டன் விராட் கோலி வெளியேறிவிட நான்காவது மற்றும் ஏழாவது ஓவர்களில் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான படிக்கலும் அதிரடியாக ஆடும் மேக்ஸ்வெல்லும் சீரான வேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.

ரன்அவுட்

பட மூலாதாரம்,IPL/BCCI

 
படக்குறிப்பு,

மேக்ஸ்வெல்லை ரன் அவுட் செய்த வில்லியம்சன்

அச்சுறுத்தும் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கானின் பந்தில் இரண்டு சிக்சர்களை அடித்த மேக்ஸ்வெல் பெங்களூரு அணியை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு வந்தார். அந்த நிலையில் பெங்களூரு அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் 15-ஆவது ஓவரில் மேக்ஸ்வெல் ரன் அவுட் ஆனார். வில்லியம்ஸின் துல்லியமாக பந்தை எறிந்து விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த ரன் அவுட் போட்டியின் போக்கை மாற்றியது. டி வில்லியர்ஸை பின்வரிசையில் ஆடுவதற்கு இறக்கியதும் விமர்சிக்கப்பட்டது. ஆனால் நல்ல நோக்கத்துடனே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கோலி தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/sport-58824824

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK vs PBKS IPL 2021:சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 3வது தோல்வி; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல். ராகுல் சதத்தை தவறவிட்டார்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
சென்னை அணியின் டூப்ளெஸ்ஸீஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம்,BCCI / IPL

 
படக்குறிப்பு,

சென்னை அணியின் டூப்ளெஸ்ஸீஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான, நடப்பு ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இன்றைய தோல்வி சென்னை அணிக்கு தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியாகும்.

எனினும் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தகுதி பெற்று விட்டதால் இன்றைய தோல்வியால் தற்போதைக்கு சென்னை அணிக்கு எந்தப் பெரிய பாதிப்பும் இல்லை.

துபாயில் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

சென்னையின் தொடக்க வீட்டுக்கா ஆட்டக்காரர் டூப்ளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடி 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.

இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த மொயின் அலி டக் அவுட் ஆனார். ராபின் உத்தப்பா மற்றும் அம்பட்டி ராயுடுஆகியோர் இரண்டு மற்றும் நான்கு ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மகேந்திர சிங் தோனி 15 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்தார்.

தோனிக்கு பின்பு வந்தவர்களும் பெரிதாக ஒன்றும் ரன்கள் எடுக்காத நிலையில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

CSK vs PBKS

பட மூலாதாரம்,BCCI / IPL

பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் க்ரிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சேசிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

அந்த அணியின் கேப்டன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி 42 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். அவர் கடைசிவரை ஆட்டமிழக்கவில்லை. பந்துகள் எஞ்சியிருந்தும் இலக்கை எட்டிவிட்டதால் கே.எல். ராகுல் சதத்தை தவறவிட்டார்.

இன்னொரு தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.

சர்பராஸ் கான் டக் அவுட் ஆக, ஷாருக் கான் 10 பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக 13 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

சென்னை அணியின் ஷர்துல் தாக்கூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://www.bbc.com/tamil/sport-58831332

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2021: ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அடுத்தது யார்?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
ipl MS Dhoni Chennai Super Kings

பட மூலாதாரம்,BCCI /IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நேற்றைய ஐபிஎல் போட்டியில் பெற்ற வெற்றி நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் நான்காவது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இருக்கும் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

லீக் போட்டிகளின் கடைசி நாளான இன்று அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்திலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளன.
  • ஒருவேளை இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 18 புள்ளிகள் பெறும். எனினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முந்த முடியாது என்பதால் முதல் க்வாலிஃபயர் போட்டியில் டெல்லியுடன் இரண்டாம் இடத்தைத் தக்க வைக்கும் சென்னை அணி மோதும்.
  • இன்று அனைத்து லீக் போட்டிகளும் முடிந்தபின்பு 4வது இடத்தில் இருக்கும் அணியே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் கடைசி அணியாக இருக்கும்.
  • தற்போது நான்காமிடத்தில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுள்ளன.
  • இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஒருவேளை வெற்றி பெற்றால் நான்காவது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிகராக 14 புள்ளிகளைப் பெற முடியும். ஆனால் மும்பை அணி பெற்றுள்ள நெட் ரன் ரேட் அந்த அணியை புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக் கீழேதான்தான் வைத்திருக்கும்.
Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

  • இனி பஞ்சாப் அணி விளையாட போட்டிகள் ஏதும் இல்லாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது ப்ளே-ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸ் செல்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து விட்டது.

https://www.bbc.com/tamil/sport-58839104

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் கிரிக்கெட் - RCB vs DC, MI vs SRH : கோலி அணியின் பரத் நிகழ்த்திய கடைசிப் பந்து மாயாஜாலம்

9 அக்டோபர் 2021, 01:53 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
பரத்

பட மூலாதாரம்,IPL/BCCI

ஏற்கெனவே மூன்று அணிகள் பிளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை என்ற கருதப்பட்ட ஒரு ஆட்டம் கடைசிப் பந்து வரை பரபரப்பாக முடிந்திருக்கிறது. மற்றொரு போட்டி முழுக்க வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியும் மூன்றாவது இடத்தில் இருக்கும் பெங்களூரு அணியும் கடைசி லீக் போட்டியில் மோதின.

வெற்றிபெற 6 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஃபீல்டிங்கில் செய்த ஒரு சிறு அலட்சியத்தால், டெல்லி அணியின் வெற்றி கைநழுவி, பெங்களூரு அணிக்குச் சென்றது.

போட்டியின் இறுதியில் பேசிய டெல்லி அணியின் கேப்டன் தங்களது பீல்டிங் குறித்து கவலை தெரிவித்தார். கடைசி ஓவரில் டெல்லி வீரர் அக்சர் படேலின் அலட்சியமான பீல்டிங் குறித்து சமூக வலைத் தளப் பக்கங்களிலும் அந்த அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 48 ரனகளையும், ஷிகர் தவான் 43 ரன்களையும் எடுத்தனர்.

பரத் - மேக்ஸ்வெல் அதிரடி

பெங்களூரு அணியின் தொடக்க வீரரான படிக்கல் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்துவிட, கேப்டன் விராட் கோலியும் மூன்றாவது ஓவரில் 4 ரன்களுடன் வெளியேறினார். அணியின் எண்ணிக்கை 55 என்று இருந்தபோது, முக்கிய வீரரான டி வில்லியர்ஸும் வெளியேறினார். அத்துடன் ஆட்டம் முழுமையாக டெல்லி அணியின் கைக்குச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்த விக்கெட் கீப்பர் பரத்தும், அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் சேர்ந்து வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் சென்றனர்.

முந்தைய போட்டியில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுக்க முடியாமல் பெங்களூரு அணி தோல்வியடைந்திருந்தது. அதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் வாய்ப்பும் பறிபோயிருந்தது. இந்தப் போட்டியிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தபோது, டெல்லி அணியின் நோர்கியோ தான் வீசிய 19ஆவது ஓவரில் வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். அவரது விதவிதமான பந்துகளால் மேக்ஸ்வெலும் பரத்தும் தடுமாறினார். அந்த அளவுக்கு எதிர்பாராத வேகத்திலும், உயரத்திலும் நோர்கியாவின் பந்துகள் இருந்தன.

அக்சர் படேலின் அலட்சியம்

கடைசி ஓவரில் 15 ரன்களை எடுக்க வேண்டும். அவேஷ் கான் பந்துவீசினார். முதல் பந்தில் மேக்ஸ்வெல் 4 ரன்களை எடுத்தாலும் அடுத்தடுத்த பந்துகளில் பவுண்டரிகள் கிடைக்கவில்லை. கடைசிக்கு முந்தைய பந்தை பரத் அடித்தபோது ஒரு கையால் அக்ஸர் படேல் பீல்டிங் செய்ய முயன்றார். பந்து அவரது கையில் பிடிபடாததால், கூடுதலாக ஒரு ரன் பரத்துக்கு கிடைத்தது. அது போட்டியின் முடிவை மாற்றுவதாக அமைந்துபோனது.

ஏனெனில் கடைசி பந்தை அவேஷ் கான் வீச லெக் பக்கத்தில் வைடாக கடந்து சென்றது. அதனால் கூடுதலாக வீசப்படும் ஒரு பந்தில் 5 ரன்களை எடுக்க வேண்டும் என்றபோது, மிக உயரமாக சிக்சர் அடித்து பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார்.

52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் உள்பட 78 ரன்களை அவர் குவித்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

வாணவேடிக்கை நடத்திய இஷான்

பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்த அதே நேரத்தில் நடத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லாத போட்டியாகவே கவனிக்கப்பட்டது. ஆனால் அங்கும் இருபது ஓவர் கிரிக்கெட்டின் மாயஜாலங்களைக் காண முடிந்தது.

171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில், அசாத்தியமான இந்த இலக்கை பாதி அளவுக்குக் கடந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இஷான்

பட மூலாதாரம்,IPL/BCCI

அந்த அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தான் சந்தித்த பந்துகளையெல்லாம் எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார். முதல் 5 ஓவர்கள் முடிந்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்களைக் குவித்திருந்தது.

இஷான் கிஷன் பதினாறே பந்துகளில் அரைச் சதம் அடித்தார். ஐபிஎல் போட்டிகளில் மிக வேகமான அரைச் சதம் இது.

10 ஓவர்களில் 131 ரன்களை எடுத்த மும்பை அணியை இரண்டாவது பாதியில் சூர்ய குமார் யாதவ் முன்னோக்கிக் கொண்டு சென்றார். அந்த அணி இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சூர்ய குமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார்.

ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்டினால், பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்ற இலக்குடன் பந்து வீசிய மும்பை அணியின் கனவை, ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் கலைத்துவிட்டனர். அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களைக் குவித்தது. இரு அணிகளும் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறிவிட்டன.

https://www.bbc.com/tamil/sport-58853644

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல் ; இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்றில் டெல்லி - சென்னை அணிகள் மோதல்

2021 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே-ஆப் சுற்றின் முதலாவது ஆட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

SINGH50693_.jpg?width=2000&height=1333

14 ஆவது ஐ.பி.எல். தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்று நிறைவடைந்தது. 

லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும். 

இந் நிலையில் இன்றைய தினம் டுபாயில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. 

SINGH50288_.jpg?width=2000&height=1333

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

நாளை சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் 13 ஆம் திகதி மோதும். 

இறுதிப்போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி டுபாயில் நடைபெறும்.

 

https://www.virakesari.lk/article/115010

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9 ஆவது தடவையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது சென்னை

நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆவது முறையாகவும் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

_AI_0650.JPG?width=2000&height=1333

2021 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று தொடங்கின. முதல் தகுதிச்சுற்றில் ரிஷாட் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை டெல்லி அணிக்கு வழங்கியது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.

டெல்லி அணி சார்பில் அதிகபடியாக பிரித்வி ஷா 60 ஓட்டங்களையும் (34), ரிஷாட் பந்த் 51 (35) ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மேயர் 37 (24) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

RON_2004.jpg?width=2000&height=1333

173 என்ற கடினமாக இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் முதல் விக்கெட் மூன்று ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

அதன்படி அன்ரிச் நார்ட்ஜேயின் முதல் ஓவரில் டூப்பிளஸ்ஸி ஒரு ஓட்டத்துடன் போல்ட் ஆனார்.

பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக உத்தப்பா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் கை கோர்த்து டெல்லி அணியின் பந்து வீச்சுகளை சிதறடித்தனர்.

_AI_0363.JPG?width=2000&height=1333

அதனால் சென்னை 13 ஓவர்கள் நிறைவில் 111 ஓட்டங்களை குவித்தது. உத்தப்பா 62 ஓட்டங்களுடனும், ருதுராஜ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

எனினும் 13.3 ஆவது ஓவரில் உத்தப்பா டோம் கர்ரனின் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் பிடிகொடுத்து 63 (43) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சர்துல் தகூரும் அதே ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் எதுவித ஓட்டமின்றி டக்கவுட் ஆனார்.

அவரின் வெளியேற்றத்தை அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் ஒரு ஓட்டத்துடன் ரன் அவுட் ஆக, 18.1 ஆவது ஓவரில் ஆரம்ப வீரராக களமிறங்கிய ருதுராஜ் 70 (50) ஓட்டங்களுடன் ஆவேஸ் கானின் பந்து வீச்சில் பிடிகொடுத்து வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் சென்னை அணி 18.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக மஹேந்திர சிங் தோனியும், மொய்ன் அலியும் கைகோர்த்தாட 19 ஓவர்கள் நிறைவில் 160 ஓட்டங்களை பெற்றது சென்னை.

இறுதி ஓவருக்கு 13 ஓட்டங்கள் என்ற நிலையிருக்க, இறுதி ஓவருக்காக டோம் கர்ரன் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரின் முதல் பந்து வீச்சில் மொய்ன் அலி 16 ஓட்டங்களுடன் ரபடாவிடம் பிடிகொடுக்க, ஜடேஜா ஆடுகளம் நுழைந்தார்.

மறுபக்கம் தோனி இறுதி ஓவரின் அடுத்த மூன்று பந்துகளையும் எதிர்கொண்டு அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் சென்னை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

singh76_1237.jpg?width=2000&height=1333

இதன்மூலம் சென்னை அணி 9 ஆவது முறையாக ஐ.பி.எல். தொடர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.  இதற்கு முன் 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தகுதி பெற்று இருந்தது. 

இதில் 3 முறை (2010, 2011, 2018) கிண்ணத்தை வென்று இருந்தது.

இதேவேளை இன்று சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இதில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த டெல்லி அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் மோதும். 

அந்த போட்டி நாளை மறுதினம் நடைபெறும்.

Photo Credit : IPL
https://www.virakesari.lk/article/115069

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பெங்களூரை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

 
spacer.png

ஐபிஎல் தொடரின் முதலாவது எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இந்தத் தொடரிலிருந்து பெங்களூரு அணி வெளியேறியது.

ஐபிஎல் தொடரில் நேற்று (அக்டோபர் 11) நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்த அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக படிக்கல்லும் கோலியும் களமிறங்கினர்.

பெங்களூரு அணி முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. அதன்பின் விக்கெட்டுகள் சரிய தொடங்கியதால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இதனால் பவர்பிளே முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசினர். இதனால் கொல்கத்தா அணி வீரர்கள் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். முக்கியமான கட்டங்களில் கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. எனினும் சுனில் நரைன் அதிரடியாக ஆடி கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 15 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. சகிப் அல் ஹாசன் கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. கொல்கத்தா அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது.

எலிமினேட்டர் சுற்றின் இரண்டாவது போட்டி நாளை (அக்டோபர் 13) சார்ஜாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

 

https://minnambalam.com/entertainment/2021/10/12/12/IPL-Kolkatha-wins-Bangalore

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல். இறுதி போட்டி இன்று ; மீண்டும் இறுதிப் போட்டியில் களம் காணும் சென்னை - கொல்கத்தா

சுமார் ஏழு மாத காலம் நீண்ட வரலாற்றைக் கொண்ட 2021 இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளானது ஒரு வழியாக இன்றைய தினம் நிறைவுக்கு வரவுள்ளது.

டுபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் மகேஹந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும்.

VRP6558.jpg?width=2000&height=1333

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முன்பு 2012 ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் விளையாடியது, 

2012 மே 27 அன்று சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கெளதம் கம்பீரின் கொல்கத்தா அணி, தோனியின் சென்னை அணியை வீழ்த்தி முதன் முதலாக சம்பியன் ஆனது.

நடப்பு தொடரில் சென்னை அணியை கொல்கத்தா அணியுடன் ஒப்பிடும்போது டுபாய் மைதானத்தில் 4 ஆட்டங்களில் விளையாடியது அதில் 2 போட்டிகளில் வென்றது. அதேநேரம் கொல்கத்தா 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வென்றது.

கடந்த ஆண்டு உட்பட ஒட்டுமொத்தமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் டுபாயில் நடந்த 11 ஆட்டங்களில் 6 இல் வெற்றியும், கே.கே.ஆர் 5 இல் மூன்று வெற்றியையும் பெற்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 9 ஆவது ஐ.பி.எல். இறுதிப்போட்டி இது. கொல்கத்தா அணிக்கு இது 3 ஆவது இறுதிப்போட்டி. சென்னை அணி 3 முறையும் கொல்கத்தா அணி 2 முறையும்  கிண்ணங்களை வென்றுள்ளன.

சி.எஸ்.கே. 3 தொடர்ச்சியான தோல்விகளின் பின்னணியில் நாக் அவுட்டிற்குள் நுழைந்தது ஆனால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைவதற்கு முதல் தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி அவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர்.

singh76_0389.jpg?width=2000&height=1333

மறுபுறம் கே.கே.ஆர். இந்த சீசனில் ஐ.பி.எல். வரலாற்றில் மிகச்சிறந்த மறுபிரவேசம் ஒன்றை செய்துள்ளது. ஏப்ரல்-மே மாதங்களில் கொவிட் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு அவர்கள் இந்தியாவில் விளையாடிய 7 ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியுற்று, புள்ளிகள் அட்டவணையில் 7 ஆவது இடத்தில் இருந்தனர்.

ஆனால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது வீரர்களுக்கு புத்துயிர் அளித்தார். வீரர்கள் சுதந்திரமான மனதுடன் விளையாடுவதற்கும், தங்கள் திறன்களை வெளிப்படுத்தி கொள்வதற்கும் முன்னுரிமையும் வழங்கியதால் கே.கே.ஆரின் நிலை தலை கீழானது. 

Match34-_00329.jpg?width=2000&height=133

பிளே - ஆப் சுற்றுக்கு நுழைந்த கொல்கத்தா வெளியேற்றல் சுற்றில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வெளியேற்றினார்கள்.

அதன் பின்னர் இடம்பெற்ற மற்றொரு வெளியேற்றல் சுற்றில் நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்திய அணிகளுள் ஒன்றான டெல்லியை தோற்கடித்து வெளியேற்றினார்கள்.

இவ்வாறான பின்னணியிலேயே இன்றைய இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது.

இது இவ்வாறிருக்க ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்ற இரண்டு தலைவர்கள் ஐ.பி.எல். வரலாற்றில் இறுதிப் போட்டியில் எதிர்கொள்வது இதுவே முதல் முறை. 

RJV72804.jpg?width=2000&height=1333

2011 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்ற தோனி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இறுதியாக நடைபெற்ற ஒருநாள் கிண்ணத்தை வெற்றி கொண்ட இங்கிலாந்து அணித் தலைவரான இயன் மோர்கனுக்கு எதிராக போட்டியிடுவார்.

Photo Credit ; IPL

https://www.virakesari.lk/article/115340

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆவது தடவையாக ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது சென்னை சுப்பர் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் தோற்கடித்து 2021 ஐ.பி.எல். கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது,

MS Dhoni and Eoin Morgan pose with the IPL 2021 trophy, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

Ravindra Jadeja and Dwayne Bravo celebrate a wicket, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் இன்று நடந்தது. 

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Deepak Chahar celebrates the wicket of Shubman Gill with MS Dhoni, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்களை குவித்தது.

Venkatesh Iyer hits one out of the ground, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

சென்னை அணி சார்பில் கெய்க்வாட் 32 ஓட்டங்களையும் உத்தப்பா 31 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ஓட்டங்களை குவித்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

Shubman Gill and Venkatesh Iyer gave Knight Riders a solid start, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

மொயீன் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 

Faf du Plessis and Moeen Ali put together a big stand for the third wicket, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

தொடக்க ஆட்டக்காரர்கள்  இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

Faf du Plessis brought up another half-century, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 27 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது.

Robin Uthappa goes high, and long, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர்  3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Ruturaj Gaikwad and Faf du Plessis gave Super Kings another great start, Chennai Super Kings vs Kolkata Knight Riders, IPL 2021 final, Dubai, October 15, 2021

 

https://www.virakesari.lk/article/115382

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.