Jump to content

ஐபிஎல் T20 2021 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்திய சென்னை - புள்ளிப்பட்டியலில் முதலிடம்!

 

spacer.png
கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது

14ஆவது ஐபிஎல் சீசனின் நேற்றைய (புதன்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

 

சென்னைக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு பிளிஸ்சிஸ் களமிறங்கினர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 82 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 42 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இந்த இணை, முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, அதே ஓவரில் பவுண்டரி அடித்த டு பிளிஸ்சிஸ் 35ஆவது பந்தில் அரை சதத்தை எட்டினார். தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துத் தந்ததால், டு பிளிஸ்சிஸ் மற்றும் அடுத்து களமிறங்கிய மொயீன் அலி அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தனர். இதனால், 16ஆவது ஓவரிலேயே சென்னை அணி 150 ரன்களைக் கடந்தது.

நரைன் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர் அடித்த மொயீன் அலி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, டு பிளிஸ்சிஸியுடன் கேப்டன் டோனி இணைந்தார். ஆண்ட்ரே ரஸல் வீசிய 19ஆவது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 3 பவுண்டரிகள் அடிக்க சென்னை அணி 200 ரன்களைத் தொட்டது. ஆனால், அதே ஓவரின் கடைசி பந்தில் டோனி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.

 

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ஆண்ட்ரே ரசல் - தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 24 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் லுங்கி இங்கிடி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்தார். மறுபுறம் ஆண்ட்ரே ரசல், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார். 22 பந்துகளில் 54 ரன்களை குவித்த அவர், சாம் கர்ரனின் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதற்கிடையில் பேட் கம்மின்ஸ் சென்னை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். 34 பந்துகளில் 4 பவுண்டரிகள், மற்றும் 6 சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆனால் மறுமுனையில் சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால், கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது.

இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.

 

இன்று (ஏப்ரல் 22) மும்பையில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.


https://minnambalam.com/entertainment/2021/04/22/6/Chennai-wins-Calcutta-and-Tops-all-in-points

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: விக்கெட் இழப்பின்றி ராஜஸ்தானை வீழ்த்திய பெங்களூரு!

spacer.png


மும்பையில் நேற்று (ஏப்ரல் 22) இரவு நடைபெற்ற ஆட்டத்தில் படிக்கல், கோலியின் அபாரமான ஆட்டத்தால் ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், மனன் வோரா ஆகியோர் களமிறங்கினர். பட்லர் 8 ரன்னும், மனன் வோரா 7 ரன்னும், டேவிட் மில்லர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 21 ரன்னில் அவுட்டானார்.

சிவம் துபே 46 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து ஆடிய ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ராகுல் டெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய ராகுல் டெவாட்டியா 40 ரன்கள் குவித்தார்.

 

இறுதியில், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டைப் பறிகொடுத்து 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் சிராஜ், ஹர்ஷல் படேல் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, பெங்களூரு அணி 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இறங்கினர். தொடக்கம் முதலே தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடினார். அவருக்கு கோலி பக்கபலமாக இருந்தார். இதனால் அணியின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

படிக்கல் 51 பந்தில் சதமடித்து அசத்தினார். விராட் கோலி அரை சதமடித்தார். அவர் 101 ரன்னுடனும், கோலி 72 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

நேற்றைய (ஏப்ரல் 22) ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. அவர் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் விராட் கோலி ஐபிஎல் போட்டியில் மொத்தம் 6,021 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5,448 ரன்களும், மூன்றாவது இடத்தில் ஷிகர் தவான் 5,428 ரன்களும், நான்காவது இடத்தில் டேவிட் வார்னர் 5,384 ரன்களும், ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா 5,368 ரன்களும் எடுத்துள்ளனர்.

இன்று (ஏப்ரல் 23) இரவு 7.30 மணிக்கு சென்னையில் நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுகின்றன.


https://minnambalam.com/entertainment/2021/04/23/10/IPL-Bangalore-defeats-Rajasthan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: மும்பையைச் சரிவுக்குக்கொண்டு வந்த பஞ்சாப்!

spacer.png


ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியைச் சரிவுக்குக்கொண்டு வந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 23) இரவு நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, டி காக் ஆகியோர் களம் இறங்கினர். டி காக் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் சர்மா உடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இஷான் கிஷன் ரன்கள் எடுக்க மிகவும் திணறினார். இருந்தாலும் ரோஹித் சர்மா தாக்குப்பிடித்து விளையாடினார். இஷான் கிஷன் 17 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை அணி 7 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

 

மூன்றாவது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியைச் சரிவில் இருந்து ஓரளவுக்கு மீட்டது. சூர்யகுமார் யாதவ் 27 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது.

மறுமுனையில் 40 பந்தில் அரை சதம் அடித்த ரோஹித் சர்மா, 52 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பொல்லார்டு பந்தை நான்கு பக்கங்களும் அடித்து ஆடியும் கடைசி நான்கு ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே சேர்க்க இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 131 ரன்களே எடுத்தது. இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 132 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொல்லார்டு 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணியில் முகமது ஷமி, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கி நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினர். அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியாக விளையாடினர். 25 ரன்களில் மயங்க் அகர்வால் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் கே.எல்.ராகுலுடன் கிரிஸ் கெயில் களத்தில் புகுந்தார். இந்த ஜோடியை மும்பை அணியினரால் கடைசி வரை பிரிக்க முடியவில்லை. கே.எல்.ராகுல் 60 ரன்களுடனும் கெயில் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க 17.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு அணிகளும் இது வரை ஐந்து ஆட்டங்களில் விளையாடி இரண்டு ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் புள்ளிப்பட்டியலில் முன்னணியில் இருந்த மும்பை அணி சரிவுக்கு வந்துள்ளது.

இன்று (ஏப்ரல் 24) இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடக்கும் 18ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன.


https://minnambalam.com/entertainment/2021/04/24/4/IPJ-Punjab-wins-over-Mumbai

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வீரர் டி.நடராஜன் இல்லாத ஐபிஎல் - காரணம் என்ன?

spacer.png

யார்க்கர் பந்து வீச்சில் வல்லவரான தமிழக வீரர் டி நடராஜன் தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரில் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அணி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழக வீரர் டி.நடராஜன். கடந்த சீசனில் ஏராளமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று தொடர்களிலும் அறிமுகம் ஆனார்.

 

2021 சீசனில் புவியுடன் டி.நடராஜன் சேர்ந்து பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் களம் இறங்கினார். கொல்கத்தாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடினார். நடராஜன் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

அதன்பின் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. மூன்று போட்டிகளிலும் டி.நடராஜன் இடம் பெறவில்லை. அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. இந்த நிலையில் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா தொடர் முடிந்த பின்னர், பிசிசிஐயின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு மாதங்கள் செலவழித்தார். அவரது காயம் குறித்து என்சிஏ பிசியோ கண்காணித்து பிசிசிஐயிடம் ஆலோசித்ததாகவும், அதன்பின், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் கலந்தாலோசித்து அவரை மேலும் விளையாட வைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘‘நாங்கள் முழுமையான அறிக்கை பெறவில்லை. ஆனால், அவரது கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சைக்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் செல்வார்’’ என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்தி வந்துள்ளது.

சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளரான டி.நடராஜன் தொடரில் இருந்து விலகியிருப்பது ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய பேரிடியாகயும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.
 

https://minnambalam.com/entertainment/2021/04/24/5/IPL-without-Tamil-Nadus-Natarajan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RR v KKR: தாலாட்டு பாடிய கொல்கத்தா இன்னிங்ஸ்... உருட்டியடித்தே வென்ற ராஜஸ்தான்! | IPL 2021

RR v KKR

RR v KKR

இந்தப் போட்டியில் நின்று நிதானமாக அவசரமேயின்றி 41 பந்துகளைச் சந்தித்த சாம்சன் 42 ரன்களையெடுத்து அணியை வெற்றிபெற வைத்தார்.

பாட்டு பாடி தூங்க வைக்கும் போட்டி நடைபெற்றால் முதல் பரிசை சின்னதம்பி பிரபுவும் இரண்டாவது பரிசை ஐபிஎல் போட்டிகளும் வென்றுவிடும் போல. நேற்றுதான் மும்பை Vs பஞ்சாப் போட்டியில் டெஸ்ட் மேட்ச்சை போன்ற ஒரு ஆட்டத்தை பார்த்த களைப்பில் இருந்த ரசிகர்களுக்கு, இன்று மீண்டும் ஒரு டெஸ்ட் மேட்ச் சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது கொல்கத்தா.

சிஎஸ்கேவுக்கு எதிராக 220 ரன்கள் சேஸிங்கின் போது மரண பயத்தை காண்பித்த அணி இதுதானா என்கிற சந்தேகம் வலுவாக எழும் வகையில் மோசமாக ஆடியுள்ளது கொல்கத்தா. தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை சுலபமாக வீழ்த்தியுள்ளது.

மும்பை வான்கடேவில் வைத்து நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ட்ரெஸ்ஸிங் ரூமில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஒரு வழியாக ப்ளேயிங் லெவனில் கொண்டு வந்திருந்தார் சாம்சன்.

RR v KKR
 
RR v KKR

'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே சேப்பாக்கம் பிட்ச் ஞாபகம் வருதே' என்பதை போலத்தான் கொல்கத்தா அணியின் பேட்டிங் இருந்தது. ஓப்பனர்களாக இறங்கிய நிதிஷ் ராணா சுப்மன் கில் இருவருமே பெரிதாக அடித்து ஆடுவதற்கு முயலவே இல்லை. உனத்கட் வீசிய முதல் ஓவரில் 3 ரன்களும், சக்காரியா வீசிய அடுத்த ஓவரில் இரண்டு வைடுகளுடன் 5 ரன்களும் மட்டுமே வந்திருந்தது. மூன்று மற்றும் நான்காவது ஓவரில் மட்டுமே ராணா கில் ஆகிய இருவரும் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். அவ்வளவுதான், பவர்ப்ளேயில் மொத்தமே இரண்டு பவுண்டரிகள்தான். 6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 25 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

6வது ஓவரில் கில்லும் ரன் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். வான்கடே மைதானத்தில் பவர்ப்ளேயில் சராசரியாக 44 ரன்கள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கொல்கத்தா அணி வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. பேட்டிங்குக்குச் சாதகமான இந்த பிட்ச்சில் பவர்ப்ளேயில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. இத்தனைக்கும் ராஜஸ்தான் பௌலிங் அவ்வளவு மிரட்டலாக ஒன்றும் இல்லை.

 

செட்டில் ஆகிவிட்டு அடிக்கத் தொடங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பையும் கொல்கத்தா அணி பொய்யாக்கவே செய்தது. 25 பந்துகளைச் சந்தித்து 22 ரன்களை எடுத்திருந்த நிதிஷ் ராணா சக்காரியாவின் பந்தில் எட்ஜ் ஆகி சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டைம் அவுட்டுக்கு பிறகு, 9 வது ஓவரில் சக்காரியாவை அழைத்து வந்த சாம்சனின் முடிவு பாராட்டுக்குரியது. 9வது ஓவரில் ராணா அவுட்டாக, 10வது ஓவரில் நரைனும் 11வது ஓவரில் மோர்கனும் எனத் தொடர்ந்து மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. மோர்கனின் ரன் அவுட் பெருத்த சோகமாக அமைந்தது. ஒரு பந்தை கூட சமாளிக்காமல் பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் மோர்கன்.

கேப்டனை ரன் அவுட் ஆக்கிவிட்டதால், அடுத்த மேட்ச்சில் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பரிதவிப்பிலேயே ஆடிக்கொண்டிருந்தார் ராகுல் திரிபாதி. மோர்கன் அவுட் ஆன பிறகு, ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை மட்டுமே அடித்த திரிபாதி 36 ரன்களில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

RR v KKR
 
RR v KKR

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலும் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பவே செய்திருந்தனர். தினேஷ் கார்த்திக், ரஸல், கம்மின்ஸ் ஆகியோர்தான் அதிரடியாக ஆடி அணியை தூக்கி நிறுத்தினர். இந்தப் போட்டியிலும் அவர்கள் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிசல்ட் என்னவோ 'வலிமை அப்டேட்' கதையாகிவிட்டது. தினேஷ் கார்த்திக் மட்டுமே ஒரு சில பவுண்டரிகளை அடித்து 25 ரன்களைச் சேர்த்தார். கிறிஸ் மோரிஸின் ஓவரில் சிக்ஸர் அடித்த ரஸல் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸருக்கு முயன்று லாங் ஆனில் கேட்ச்சாகி வெளியேறினார். இதே ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் எக்ஸ்ட்ரா கவரில் நின்ற சக்காரியாவை தாண்டி பவுண்டரி அடிக்க முடியாமல் கேட்ச் ஆனார்.

 

தொடர்ந்து யார்க்கராக வீச முயன்று 8 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தியிருந்தார் மோரிஸ். மோரிஸ் வீசிய 20வது ஓவரிலும் கம்மின்ஸ் ஒரு சிக்ஸரை அடித்துவிட்டு அடுத்த பந்துலேயே பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார். கேட்ச்சை பிடித்துவிட்டு ரியான் பராக் செய்யும் கொண்டாட்டம் அதகளமாக இருக்கிறது. செல்ஃபி புள்ளையாக மாறி பந்தை வைத்து செல்ஃபி எடுப்பது இந்த சீசனின் ட்ரெண்டிங் ஸ்டைலாக கூடிய விரைவிலேயே மாறும். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

RR v KKR
 
RR v KKR

வான்கடேவில் 134 ரன்கள் என்பது ஒரு ஸ்கோரே கிடையாது என்பதால் பெரும் நம்பிக்கையுடனேயே களமிறங்கியது ராஜஸ்தான் அணி. கங்குலி ஸ்டைல் பேடைக் கட்டிக் கொண்டு பட்லருடன் ஜெய்ஸ்வால் ஓப்பனராகக் களமிறங்கினார். பேட் கம்மின்ஸ் வீசிய இரண்டாவது ஓவரில் ஆஃப் சைடில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார் ஜெய்ஸ்வால். ஜெய்ஸ்வால் நன்றாக ஆடினாலும் பட்லர் சீக்கிரமே அவுட் ஆனார். தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி வீசிய நான்காவது ஓவரின் முதல் பந்தை பவுண்டரியாக்கிய பட்லர் இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனார். பெரிதாக ஸ்பின் செய்யாமல் வருண் நேராக வீசிய அந்த டெலிவரியை எதிர்கொள்ள முடியாமல் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார் பட்லர்.

நம்பர் 3 இல் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். வழக்கம்போல, க்ரீஸுக்குள் வந்தவுடனேயே பேட்டை வீசினார் சாம்சன். வருண் வீச அவர் சந்தித்த முதல் பந்தையே பவுண்டரியாக்கினார். பவுண்டரிகளாக விரட்டி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் சிவம் மவியின் ஓவரில் 22 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார்.

 

இதன்பிறகு, சிவம் துபே உள்ளே வந்தார். சாம்சன் - துபே கூட்டணி ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரி அடித்து நன்றாக ஆடிக்கொண்டிருந்தது. இந்தக் கூட்டணியையும் தமிழக வீரரான வருணே பிரித்தார். ஒரு கூக்ளியில் சிவம் துபேவை ஷார்ட் தேர்டு மேனிடம் கேட்ச் ஆக வைத்தார். 22 ரன்களில் துபே வெளியேறிய சிறிது நேரத்திலேயே திவேதியாவும் அவுட் ஆனார். இதனால், ராஜஸ்தான் பக்கம் கொஞ்சம் அழுத்தம் உருவாவதாக தோன்றியது.

RR v KKR
 
RR v KKR

ஆனால், கேப்டன் சஞ்சு சாம்சன் ஒரு முனையில் விக்கெட் விடாமல் பொறுப்பாக நின்று ஆடிக்கொண்டிருந்தார். தேவையில்லாத நேரத்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட் ஆவார் என்பதே சாம்சன் மீதான குற்றச்சாட்டாக இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் நின்று நிதானமாக அவசரமேயின்றி 41 பந்துகளைச் சந்தித்த சாம்சன் 42 ரன்களையெடுத்து அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

வான்கடே மைதானத்தில் எவ்வளவு பெரிய ஸ்கோரையும் எதிரணியால் ஸ்கோர் செய்ய முடியும் என உணர்ந்திருந்த கொல்கத்தா அணி பெரிதாக ஸ்கோர் செய்யவே முயலவில்லை என்பது ஏமாற்றமடைய செய்தது. புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் வசிக்கும் இரண்டு அணிகள் மோதிய இந்தப் போட்டி ஒரு டெஸ்ட் மேட்ச் போலவே ஆடப்பட்டதால் பெரிதாக எந்த சுவாரஸ்யமும் இல்லாமலே முடிந்திருக்கிறது.
 
https://sports.vikatan.com/ipl/ipl-2021-rajasthan-royals-chase-down-kolkata-knightriders-simple-target
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மற்றும் டெல்லி அணிகள் அபார வெற்றி

நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 19 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 69 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

Sunrisers-Hyderabad_-Royal-Challengers_-

இதன்படி, சென்னை அணி 20 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

சென்னை அணிசார்பாக, இறுதி நேரத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 62 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இவர் கடைசி ஓவரில் மாத்திரம் 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், டு பிளெஸ்ஸிஸ் 50 ஓட்டங்களையும் ருத்துராஜ் கெய்க்வாட் 33 ஓட்டங்களையும் ரெய்னா 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பெங்களூர் அணி சார்பாக ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்டுகளையும் சாஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 192 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணியின் வீரர்கள் பலர் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இதனால், 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெங்களூர் அணி 69 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதேவேளை சென்னை மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில், டெல்லி கெபிடல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி கெபிட்டல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 160 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை சமநிலை செய்தது. இதனால் போட்டி சுப்பர் ஓவருக்குள் நுழைந்தது.

இந்நிலையில்  சுப்பர் ஓவரில், முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் ஹைதராபாத் அணி, 7 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி கெபிடல்ஸ் அணி, இறுதி பந்தில் வெற்றி இலக்கை கடந்தது.

 

https://www.virakesari.lk/article/104407

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப்பை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த கொல்கத்தா

ஐ.பி.எல். தொடரில் நேற்று பஞ்சாப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.

Untitled-1.jpg

14 ஆவது ஐ.பி.எல். தொடரில் 21 ஆவது லீக் ஆட்டம் நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஈயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாட பஞ்சாப் அணி ஆடுகளம் நுழைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய கே.எல். ராகுல் 19 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேற ஏனைய வீரர்கள் அனைவரும் சொப்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

Ez6HxZHVkAQ3umE.jpg

இதனிடையே கிறிஸ் ஜோர்தன் மாத்திரம் சொல்லும் அளவுக்கு 18 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றார். இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றது.

கொல்கத்தா அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சிவம் மாயி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

124 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்க‍ை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ரானா டக்வுட்டுன் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரையடுத்து சுப்மன் கில்லும் 9 ஓட்டங்களுடன் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுனில் நரேனும் எதுவித ஓட்டமின்றி ரன் அவுட் ஆனார். 

அதனால் கொல்கத்தா அணி மூன்று ஓவர்கள் நிறைவில் 17 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

Ez6ahjJVkAAn7AU.jpg

எனினும் அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக ராகுல் திரிபாதியும் அணித் தலைவர் ஈயன் மோர்கனும் ஜோடி சேர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுக்காது ஓட்டங்களை குவிப்பதில் கவனம் செலுத்தினார்.

அதனால் கொல்கத்தா அணி 10 ஓவர்கள் நிறைவில் 76 ஓட்டங்களை பெற்றது. இந் நிலையில் 11 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் திரிபாதி 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து ஆடுகளம் புகுந்த ரஸ்ஸலும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது 10 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். 

இறுதியாக தினேஷ் கார்த்திக் களமிறங்கி ஈயன் மோர்கனுடன் கைகோர்க்க கொல்கத்தா அணி 16.4 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்தது. 

ஈயன் மோர்கன் 47 ஓட்டங்களுடனும், தினேஷ் கார்த்திக் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

நடப்பு தொடரில் இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி என்பதுடன் பஞ்சாப் அணியின் நான்காவது தோல்வியுமாகும்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஈயன் மோர்கன் தெரிவானார்.

Ez67qUWUUAESm8y.jpg

 

https://www.virakesari.lk/article/104442

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் ஒன்றும் அதிகாரபூர்வ தொடர் அல்ல; வீரர்கள் சொந்தச் செலவிலேயே நாடு திரும்பட்டும்: ஆஸ்திரேலிய பிரதமர் திட்டவட்டம்

australian-cricketers-in-ipl-will-have-to-make-own-arrangements-for-return-oz-pm-morrison ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன் | படம் உதவி: ட்விட்டர்.
 

மெல்போர்ன்

ஆஸ்திரேலிய அணியின் அதிகாரபூர்வத் தொடரின் ஒரு பகுதி அல்ல ஐபிஎல் டி20 தொடர். ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்தச் செலவில் விமானம் மூலம் வரலாம் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து, 2-வது அலை தீவிரமாகியிருப்பதை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

 
 
 

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மே 15ஆம் தேதிவரை இந்தியாவிலிருந்து எந்தப் பயணிகள் விமானம் வரவும் ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது.

1619515327756.jpg

தற்போது ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்க்ஸ் ஸ்டாய்னிஷ், கம்மின்ஸ், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட 14 வீரர்கள் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர மேத்யூ ஹேடன், பிரட் லீ, மைக்கேல் ஸ்லாடர், லிசா ஸ்தாலேகர் உள்ளிட்ட ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களும் உள்ளனர்.

இதற்கிடையே ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோரின் பயணத் திட்டம், எப்போது புறப்படுகிறார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்துள்ளது. அப்போது, ஐபிஎல் டி20 தொடர் முடியும் வரை இந்தியாவில்தான் இருப்போம் என வாரியத்திடம் வீரர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஐபிஎல் ஒப்பந்தத்திலும் 10 சதவீதத் தொகையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருவதால், போட்டி ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் தனியாக விமானம் வைத்து வீரர்களை அழைத்துச் செல்ல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1619515340756.jpg கிறிஸ் லின்

இந்தியாவில் தற்போது மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் மக்களைச் சிறிதளவு மகிழ்ச்சிப்படுத்த எங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு ஐபிஎல் மட்டும்தான்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸனிடம், அரசு சார்பில் வீரர்களுக்குத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்படுமா என்று நிருபர்கள் இன்று கேட்டனர். இதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

1619515365756.jpg

ஆஸ்திரேலியத் தொடரின் ஒரு பகுதியாக ஐபிஎல் டி20 தொடர் இல்லை. ஆஸி.வீரர்கள் சொந்தச் செலவில் சென்றுள்ளதால், அவர்களின் சொந்தப் பணத்தைப் பயன்படுத்திதான் வர வேண்டும். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டுமானால் விமானத்தைத் தனியாக அமர்த்திக் கொண்டு, சொந்தச் செலவில் நாடு திரும்பலாம்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு ஆகியவை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸி. வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அவர்களைக் கடுமையான பயோ-பபுள் விதிமுறையைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளோம். இந்தியாவில் இருந்து வரும் களத் தகவல்கள், ஆஸ்திரேலிய அரசின் அறிவுரைப்படி தொடர்ந்து செயல்படுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

 

https://www.hindutamil.in/news/sports/664224-australian-cricketers-in-ipl-will-have-to-make-own-arrangements-for-return-oz-pm-morrison-2.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாத் - ஹெட்மேயரின் போராட்டம் வீணானது ; ஒரு ஓட்டத்தால் பெங்களூரு வெற்றி!

ஐ.பி.எல். தொடரில் டேல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்றுள்ளது.

_jZDkPdk.jpg

14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரின் 22 ஆவது லீக் ஆட்டம் நேற்று அஹமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதாமனத்தில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ரிஷாத் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் துடுப்பெடுத்தாடியது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான விராட் கோலி 12 ஓட்டங்களுடனும், படிக்கல் 17 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, பெங்களூரு அணியின் முதலிரு விக்கெட்டுகள் 30 ஓட்டங்களுக்குள் வீழ்ந்தன.

மூன்றாவது விக்கெட்டுக்காக மெக்ஸ்வேல் - பட்டிதர் ஜோடி அணியின் ஓட்ட இலக்கினை 8 ஓவர்கள் நிறைவுக்கு 57 வரை கொண்டு சேர்த்தது.

எனினும் அதன் பின்னர் 9.3 ஆவது பந்து வீச்சில் அமித் மிஷ்ராவின் பந்தினை சிக்ஸருக்கு விளாச முற்பட்ட மெக்ஸ்வெல் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பட்டிதரும் 22 பந்துகளில் 31 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதனிடையே களமிறங்கிய ஏ.பி.டி. வில்லியர்ஸ் இறுதிவரை ஆடுகளத்தில் நிலைத்து நின்றாடி மொத்தமாக 42 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்களை பெற்றதுடன், ஐ.பி.எல். அரங்கிலும் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார்.

Ez_VfWmUcAMgbLY.jpg

குறிப்பாக இறுதி ஓவருக்காக மார்கஸ் ஸ்டொய்னஸின் பந்து வீச்சை எதிர்கொண்ட அவர்,  அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை தெறிக்க விட்டார்.

ஸ்டொய்னஸின் அந்த ஓவரில் மொத்தம் 23 ஓட்டங்களை திரட்டியது பெங்களூரு அணி. 

இறுதியாக பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை குவித்தது. ஏ.பி.டி. வில்லியர்ஸ் 75 ஓட்டங்களுடனும், டேனியல் சாம்ஸ் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

172 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியின் ஆரம்ப வீரர்களான பிரித்வி ஷா 21 ஓட்டத்துடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் நீண்ட நேரம் தாக்கு பிடிக்காது 4 ஓட்டங்களுடன் சிராஜின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் வில்லியர்ஸிடம் பிடிகொடுத்தார்.

Ez_ml5qVgAUKd9U.jpg

டெல்லியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 47 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட, நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரிஷாத் பந்தும் - மார்கஸ் ஸ்டொய்னஸும் விக்கெட்டுகளை பறிகொடுக்காது ஓட்ட குவிப்பில் கவனம் செலுத்தினர்.

இதனால் 12 ஓவர்கள் நிறைவில் டெல்லி அணி 81 ஓட்டங்களை பெற, 12.4 ஆவது ஓவரில் ஸ்டொய்னஸ் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் களமிறங்கிய சிம்ரன் ஹேட்மேயர் ரிஷாத் பந்துடன் கைகோர்த்து அதிரடி காட்ட, டெல்லி அணியின் வெற்றிக்கு இறுதி நான்கு ஓவரில் 56 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிருந்தது.

ஹெட்மேயர் கிடைத்த பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 23 பந்தில் அவர் அரைசதம் அடித்தார்.

குறிப்பாக 18 ஆவது ஓவரில் ஹேட்மேயர் கைல் ஜேமீசனின் பந்து வீச்சினை எதிர்கொண்டு 3 சிக்ஸர்களை பறக்க விட மொத்தமாக அந்த ஓவரில் 21 ஓட்டங்கள் பெறப்பட்டது.

இறுதி ஓவருக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட, டெல்லி அணியால் அந்த ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

அதன்படி டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்று, ஒரு ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

E0AAm_qVcAAWNYf.jpg

ஆடுகளத்தில் ரிஷாத் பந்த் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடனும், ஹேட்மேயர் 25 பந்தில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கலாக  53 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஏ.பி.டி.வில்லியர்ஸ் தெரிவானார்.

E0APLr4UUAY27X0.jpg
 

https://www.virakesari.lk/article/104498

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை!

 

spacer.png

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 29) இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 24ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

முதலில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

 

அதிகபட்சமாக சாம்சன் 42 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ராகுல் சாஹர் இரண்டு விக்கெட்டுகளும் போல்ட், பும்ரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ரோஹித் சர்மா 14, சூர்யகுமார் யாதவ் 16 ரன்கள் எடுத்து வெளியேறினர். டிகாக் குர்ணால் - பாண்ட்யா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குர்ணால் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இறுதியில் 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி டிகாக் 50 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். பொல்லார்டு 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் மோரிஸ் இரண்டு விக்கெட்டுகளும் முஸ்பிகுர் ரகுமான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதுவரை ஆறு ஆட்டங்களில் இரு அணிகளிலும் விளையாடி உள்ளன. இது மும்பை அணிக்கு மூன்றாவது வெற்றி ஆகும். ராஜஸ்தான் அணிக்கு நான்காவது தோல்வியாகும்.

 

https://minnambalam.com/entertainment/2021/04/30/10/IPL-Mumbai-win-Rajasthan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி வெற்றி!

 
spacer.png
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத்தில் நடந்த 25ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக நிதிஷ் ரானா மற்றும் சுக்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

 

12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் ரானா டெல்லி வீரர் அக்சர் படேல் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 19 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இயன் மோர்கன் (0) ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சுனில் நரைனும் (0) ரன் எதுவும் எடுக்காமல் லலித் யாதவ் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

பின்னர் களமிறங்கிய ஆண்ரே ரசல், தொடக்க வீரர் சுக்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளை சந்தித்த சுக்மன் கில் 43 ரன்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதிரடியாக ஆடிய ஆண்ரே ரசல் டெல்லி பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தார். 27 பந்துகளை சந்தித்த ரசல் 4 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 45 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் அந்த அணியின் அக்சர் படேல், லலித் யாதவ் அதிகபட்சமாக தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இரு வீரர்களுமே கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.

 

ஷிகர் தவான் சற்று நிதானமாக ஆடிய போதும் மறுமுனையில் பிரித்வி ஷா ருத்ர தாண்டவம் ஆடினார். பிரித்வி ஷா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மறுமுனையில் 47 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் உள்பட 46 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் கொல்கத்தா வீரர் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் உடன் சேர்ந்து பிரித்வி ஷா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 41 பந்துகளில் 3 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் உள்பட 82 ரன்கள் குவித்து பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். 8 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ரிஷப் பண்ட்டும் கம்மின்ஸ் பந்து வீச்சில் வெளியேறினார்.

இறுதியில் டெல்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணி தரப்பில் அந்த அணியின் பேட் கம்மின்ஸ் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் விளையாடி ஐந்து வெற்றி, இரண்டு தோல்விகளுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஏழு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஐந்து தோல்விகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

 

இன்று (ஏப்ரல் 30) இதே மைதானத்தில் நடக்கும் 26ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

 

https://minnambalam.com/entertainment/2021/04/30/11/IPL-Delhi-wins-Kolkata

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பெங்களூரைச் சாய்த்த பஞ்சாப் கிங்ஸ்!

 
spacer.png

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 26ஆவது லீக் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (ஏப்ரல் 30) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

 

தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஆடிய கெய்ல், ராகுலுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். கெய்ல் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து ராகுலுடன் ஹர்பிரீத் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி கடைசி ஓவரில் 22 ரன்கள் குவித்தது. ராகுல் 51 பந்துகளில் 91 ரன்களும் ஹர்பிரீத் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இறுதியில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் ஜேமிசன் 2, சாம்ஸ், சாஹல், அகமது தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

பஞ்சாப் அணியினர் சிறப்பாக பந்து வீசியதால் குறிப்பிட்ட இடைவெளியில் பெங்களூரு அணி விக்கெட்டுகள் வீழ்ந்தன. பெங்களூரு அணியில் விராட் கோலி 35 ரன்னும், ரஜத் பட்டிதார் 31 ரன்னும், ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணி பெற்ற மூன்றாவது வெற்றி.

 

பஞ்சாப் அணி சார்பில் ஹர்பிரீத் பிரார் மூன்று விக்கெட்டுகளும், ரவி பிஷ்னோய் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பெங்களூரு அணி பெற்ற இரண்டாவது தோல்வி இதுவாகும்.

இன்று (மே 1) டெல்லியில் நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகின்றன.

 

https://minnambalam.com/entertainment/2021/05/01/10/IPL-Punjab-kings-defeat-Bengaluru

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் அதிரடிக்கு பொல்லார்ட்டின் அசத்தலுடன் மும்பை பதிலடி

ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொல்லார்ட்டின் அதிரடியுடன் மும்பை அணி நான்கு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது.

E0UZi56VoAAHRaF.jpg

14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் நடைபெற்ற 27 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸுடன் பலப்பரீட்சை நடத்தியது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா களத்தடுப்பை தேர்வுசெய்ய சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ருதுராஜ் கெய்க்வாட்டும், டூப்பிளஸியும் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆடுகளம் நுழைய முதல் ஓவரிலேயே ருதுராஜ் நான்கு ஓட்டத்துடன் ஹர்த்திக் பாண்டியாவிடம் பிடிகொடுத்தார்.

அதன் பின்னர் டூப்பிளஸ்ஸுயுடன், சகலதுறை ஆட்டக்காரனான மொயீன் அலி கைகோர்த்தார். 

மொயீன் அலி மும்பை பந்து வீச்சுக்களை பதம் பார்த்தார். குறிப்பாக டிரென்ட் போல்ட், பும்ராவின் ஓவர்களில் சர்வ சாதாரணமாக சிக்சர்களை பறக்க விட்டார். 

மறுபுறம் டூப்பிளஸ்ஸுயும் ஏதுவான பந்துகளில் மாயாஜாலம் காட்டினார்.  பும்ராவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டியடித்தார். 

அணியின் ஓட்ட எண்ணிக்கை 112 ஆக உயர்ந்த போது மொயீன் அலி, மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு, 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, டூப்பிளஸ்ஸுயும் 28 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.

E0UFUlpVkAk7zKX.jpg

மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய சுரேஷ் ரய்னாவும் நீண்டநேரம் தாக்குப் பிடிக்காது இரண்டு ஓட்டங்களுடன் வெளியேற சென்னை அணி 12 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக ரவீந்திர ஜடேஜாவும், அம்பத்தி ராயுடுவும் இணைந்தனர். இரண்டு ஓவர்கள் நிதானம் காட்டிய அவர்கள் அதன் பிறகு அதிரடியில் மிரள வைத்தினர்.

குறிப்பாக அம்பத்தி ராயுடு விஸ்வரூபம் எடுத்தார். தவால் குல்கர்னி, பும்ரா, போல்டின் ஓவர்களில் சிக்ஸர்களை தெறிக்கவிட்டு பிரமிக்க வைத்த அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் அரைசதத்தை அடித்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை பெற்றது.

E0UFWROUUAE-7kA.jpg

அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கலாக 72 ஓட்டங்களுடனும், ஜடேஜா 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

219 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி மும்பை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடியது.

அணியின் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மாவும் - குயின்டன் டிகொக்கும் சிறப்பான ஆரம்பத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். அதன்படி அவர்கள் இணைப்பாட்டமாக 7.3 ஓவர்களில் 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

எனினும் அதன் பின்னர் ரோகித் சர்மா 35 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவும் நீண்ட நேரம் நிலைத்து நிக்காது மூன்று ஓட்டங்களுடன் வெளியேற, டிகொக்கும் 38 ஓட்டங்களுடன் மொயீன் அலியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனால் மும்பை அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்றது.

அதன் பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக கைகோர்த்த குருணல் பாண்டியா - கிரன் பொல்லார்ட்டின் இணைப்பாட்டம் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.

குறிப்பாக பொல்லார்ட் சென்னை அணியின் பந்து வீச்சுகளை துவம்சம் செய்தார். ஜடேஜா ஓவரில் 3 சிக்ஸர், நிகிடி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசித் தள்ளினார்.

பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். மறுபுறம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தாடினார் குருணல் பாண்டியா.

இவர்களின் வலுவான இணைப்பாட்டத்தால் மும்பை அணி 16 ஓவர்களில் 169 ஓட்டங்களை குவிக்க, 16.3 ஆவது ஓவரில் குருணல் பாண்டியா 32 ஓட்டங்களுடன் சாம் கர்ரனின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அவரையடுத்து களமிறங்கிய ஹர்த்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடனும், ஜேம்ஸ் நீஷம் டக்கவுட்டுடனும் வெளியேற, இறுதி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஆடுகளத்தில் பொல்லார்ட்டும், தவால் குல்கர்னியும் துடுப்பெடுத்தாட, லுங்கி நிகிடி பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

அந்த ஓவரில் பொல்லாரட் 2 பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும், ஒரு இரட்டை ஓட்டத்தையும் பெற்று மும்பையின் வெற்றியை உறுதிசெய்தார்.

W_nOwZ8E.jpg

இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றது. பொல்லார்ட் 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களுடனும், குல்கர்னி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்த சென்னை அணிக்கு இது 2 ஆவது தோல்வி என்பதுடன் மும்பை அணிக்கு இது 4 ஆவது வெற்றியாகும்.

போட்டியின் ஆட்டநாயகனாக பொல்லாரட் தெரிவானார்.

E0UrVS1VIAAf3Yw.jpg

 

https://www.virakesari.lk/article/104720

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வென்ற ராஜஸ்தான்!

 
spacer.png

ஐபிஎல் 14ஆவது தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி, 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வென்றுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 28ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று (மே 2) நடைபெற்றது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

 

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 12 ரன்களுடன் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இதில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் 4 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்டார். 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கரின் பந்து வீச்சில் கேட்ச் ஆகி, சஞ்சு சாம்சன் தனது அரை சதத்தைத் தவறவிட்டார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்தார். நிலைத்து நின்று ஆடிய அவர், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மொத்தம் 64 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், 19ஆவது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் போல்டு ஆனார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனீஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர்.

 

மனீஷ் பாண்டே 20 பந்துகளில், 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில், போல்டு ஆகி ஆட்டமிழந்தார். அடுத்த விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோ 4 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 30 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதையடுத்து கேன் வில்லியம்சன் 20 ரன்களிலும், விஜய் சங்கர் 8 ரன்களிலும், கேதர் ஜாதவ் 19 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அணியின் ரன் ரேட் கணிசமாக குறைந்தது. அடுத்து வந்தவர்களும் நிலைத்து நின்று ஆடாததால், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதுவரை இந்த இரு அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளன. ராஜஸ்தான் அணி மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி ஆறாவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

https://minnambalam.com/entertainment/2021/05/03/7/IPL-Rajasthan-wins-Hyderabad-by-55-runs

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: பஞ்சாப்பை வீழ்த்தி, டெல்லியின் ஆறாவது வெற்றி!

 

spacer.png

ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி, டெல்லி அணி ஆறாவது வெற்றியைப் பெற்றதுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று (மே 2) இரவு அகமதாபாத்தில் அரங்கேறிய 29ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் கேப்டன் பதவியை ஏற்றார். இதேபோல் நிகோலஸ் பூரனுக்குப் பதிலாக டேவிட் மலான் இடம் பெற்றார்.

 

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் ரிஷாப் பண்ட் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் நிலைத்து நின்று ஆட, இன்னொரு பக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும், டேவிட் மலான் 26 ரன்னிலும், தீபக் ஹூடா ஒரு ரன்னிலும், ஷாருக்கான் 4 ரன்னிலும் வெளியேறினர்.

இதற்கு மத்தியில் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ரபடா, இஷாந்த் ஷர்மாவின் ஓவர்களில் சிக்சர் அடித்த மயங்க் அகர்வால், வேகப்பந்து வீச்சாளர் அவேஷ்கான் வீசிய இறுதி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் சாத்தினார். இதனால் பஞ்சாப் அணி 160 ரன்களை தாண்டி கவுரவமான நிலையை அடைந்தது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது. மயங்க் அகர்வால் 99 ரன்களுடனும் (58 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹர்பிரீத் பிரார் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஐபிஎல்லில் ஒரு வீரர் 99 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருப்பது இது மூன்றாவது முறையாகும்.

டெல்லி தரப்பில் ரபடா மூன்று விக்கெட்டுகளும், அவேஷ்கான், அக்‌ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை ருசித்தது. ஷிகர் தவான் 69 ரன்களுடனும் (47 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 16 ரன்களுடனும் (4 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

 

முன்னதாக பிரித்வி ஷா 39 ரன்களும், ஸ்டீவன் சுமித் 24 ரன்களும், கேப்டன் ரிஷாப் பண்ட் 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

8ஆவது லீக்கில் ஆடிய டெல்லி அணிக்கு இது ஆறாவது வெற்றியாகும். அத்துடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணிக்கு ஐந்தாவது தோல்வியாகும்.

இன்று அகமதாபாத்தில் நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

 

https://minnambalam.com/entertainment/2021/05/03/8/IPL-Punjab-wins-Delhi

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14ஆவது ஐபிஎல் தொடருமா?

spacer.png
 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இரு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று (மே 3) இரவு 7.30 மணிக்கு பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. கொல்கத்தா அணி வீரர்களைத் தொடர்ந்து சென்னை அணியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஆட்டத்துக்கு இடையில் 14ஆவது ஐபிஎல் ஆட்டங்கள் தொடர்ந்து நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் நடுவே இவ்வளவு நாட்களாக தடங்கல் இல்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகளுக்கு நேற்று (மே 3) பிரச்சினை ஏற்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நேற்று இரவு அகமதாபாத்தில் போட்டி நடைபெற இருந்தது.

 

இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது. இதனால் நேற்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வருண் சக்ரவர்த்தி பயோ பபுளைவிட்டு மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. மருத்துவமனை மூலம் அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்றும் வருண், சந்தீப்பைத் தவிர வேறு யாருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் இடம்பெற்றிருக்கும் சிஇஓ காசி விஸ்வநாதன், பெளலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி மற்றும் சென்னை அணி பஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் தங்கியிருக்கும் சென்னை அணி, இதனால் பயிற்சிகளை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாளை (மே 5) டெல்லியில் சென்னை அணியுடன் ராஜஸ்தான் அணி விளையாட இருக்கும் நிலையில், நேற்று (மே 3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருந்த போட்டியைப்போல் இதுவும் ஒத்திவைக்கப்படுமா என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

 

ஆனால், இன்று (மே 4) இரவு நடைபெற உள்ள பெங்களூரு – மும்பை அணியின் ஆட்டம் குறித்து ஐபிஎல் அறிவிப்பில் எந்த மாற்றமும் குறிப்பிடப்படவில்லை.

சென்னை மற்றும் மும்பையிலேயே முதல் மூன்று வார போட்டிகள் நடந்த நிலையில் அடுத்தக்கட்டமாக டெல்லி, அகமதாபாத் எனப் போட்டி நடக்கும் நகரங்கள் மாறியதும் கொரோனா தொற்று, பயோ பபுளுக்குள்ளும் நுழைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மே 8ஆம் தேதிவரை டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கொரோனா பரவல் செய்திகள் ஐபிஎல் ஆட்டங்கள் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கடந்த பிப்ரவரி - மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீகில் இதேபோன்று வீரர்களுக்கு கொரோனா பரவியதால் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டது. அதுபோல் ஐபிஎல் தொடரும் நிறுத்தப்படலாம் என்கிற செய்திகள் இப்போது பரவ ஆரம்பித்திருக்கின்றன.

ரசிகர்களே இல்லாமல் அனைத்து ஆட்டங்களும் நடைபெற்றுவந்தாலும், இதுவரை அதிகாரபூர்வமாக பிசிசிஐ, ஐபிஎல் போட்டி தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

https://minnambalam.com/entertainment/2021/05/04/6/IPL-will-the-14-th-match-continue

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL 2021 suspended as Covid count increases

As things stand, members of three franchises have been confirmed to have tested positive

Story Image
Members of three franchises, including the Kolkata Knight Riders, have tested positive Covid-19  BCCI/IPL
 

IPL 2021 has been suspended, following several positive Covid-19 cases across teams over the past couple of days

From Cricinfo

Link to comment
Share on other sites

IPL போட்டித் தொடர் ஒத்திவைப்பு

IPL போட்டித் தொடர் ஒத்திவைப்பு

 

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை, மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் தற்போது ஆமதாபாத், தில்லியில் போட்டிகள் நடைபெற்று வந்தன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர் மற்றும் சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த போட்டியும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே - ராஜஸ்தான் போட்டியும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. தில்லி வீரர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் அளித்துள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nunavilan said:

IPL போட்டித் தொடர் ஒத்திவைப்பு

IPL போட்டித் தொடர் ஒத்திவைப்பு

 

கொரோனா பரவல் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்காக ஐபிஎல் போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை, மும்பையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் தற்போது ஆமதாபாத், தில்லியில் போட்டிகள் நடைபெற்று வந்தன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர் மற்றும் சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த போட்டியும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே - ராஜஸ்தான் போட்டியும் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. தில்லி வீரர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் அளித்துள்ளார்.
 

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ போன‌ வ‌ருட‌ம் ஜ‌க்கிய‌ அர‌வு தேச‌த்தில் வைச்சு இருக்க‌லாம்

குப்பை நாடு அதிக‌ ம‌க்க‌ள் வாழும் நாடு.........இவ‌ள‌வு கொரோனா பாதுகாப்பும் இருந்து ப‌ல‌ ஜ‌பிஎல் வீர‌ர்க‌ளுக்கு  கொரோனா என்றால் யோசிக்க‌ வேண்டி இருக்கு.........

Link to comment
Share on other sites

26 minutes ago, பையன்26 said:

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ போன‌ வ‌ருட‌ம் ஜ‌க்கிய‌ அர‌வு தேச‌த்தில் வைச்சு இருக்க‌லாம்

குப்பை நாடு அதிக‌ ம‌க்க‌ள் வாழும் நாடு.........இவ‌ள‌வு கொரோனா பாதுகாப்பும் இருந்து ப‌ல‌ ஜ‌பிஎல் வீர‌ர்க‌ளுக்கு  கொரோனா என்றால் யோசிக்க‌ வேண்டி இருக்கு.........

இவ்வளவு பணத்தை முதலிட்டவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு  கொரோனா வக்சீனை போட்டிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல்: ரூ.2,000 கோடி இழப்பு; எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த முடிவு!

spacer.png

கொரோனா பாதிப்பால் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால் கிரிக்கெட் வாரியத்துக்கு 2,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் ஆட்டங்கள் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த (2020) ஆண்டு ஐபிஎல் போட்டியைத் திட்டமிட்டவாறு ஏப்ரல் - மே மாதங்களில் இந்தியாவில் நடத்த முடியவில்லை. கடந்த ஆண்டுக்கான 13ஆவது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை நடந்தது.

இந்த 14ஆவது ஐபிஎல் போட்டி இந்தியாவில்தான் நடத்தப்படும் என்று கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது.

 

கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஆறு நகரங்களில் மட்டுமே இந்தப் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு சென்னை, மும்பையில் போட்டிகள் முடிந்தன. டெல்லி, அகமதாபாத்தில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தபோது வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அடுத்த கட்டமாக கொல்கத்தா, பெங்களூரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே ஐந்து வீரர்கள் போட்டியில் பாதியில் இருந்து விலகினார்கள். இதேபோல இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் ரீபெல் ஆகிய இரண்டு நடுவர்களும் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்கள்.

இதற்கிடையே ஐபிஎல் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா), விருத்திமான் சஹா (ஹைதராபாத்), அமித் மிஸ்ரா (டெல்லி) ஆகிய நான்கு வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அணியின் பஸ் கிளீனர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதவேண்டிய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

 

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரியமும், ஐபிஎல் ஆட்சி மன்றக்குழுவும் முடிவு செய்து ஐபிஎல் போட்டியைக் காலவரையின்றி ஒத்திவைத்தது.

வீரர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதி கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்தது. வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் உறுதி அளித்தார்.

இப்படி ஐபிஎல் போட்டியை பாதியிலேயே ஒத்திவைத்ததால், கிரிக்கெட் வாரியத்துக்கு 2,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெற இருந்தது. இதுவரை 29 போட்டிகள் நடந்துள்ளன. நேரடி ஒளிபரப்புக்கு, போட்டி ஒன்றுக்கு ரூ.54.4 கோடியை ஸ்டார் நிறுவனம் கொடுக்கிறது.

தற்போது பாதியில் ரத்து செய்யப்பட்டதால் 31 ஆட்டங்களுக்கான பணத்தில் ரூ.1,700 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது தவிர டைட்டில் ஸ்பான்சர் மற்றும் இதர ஸ்பான்சர்கள் மூலமும் கிரிக்கெட் வாரியம் வருவாயை இழக்கிறது. மொத்தத்தில் ரூ.2,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பாதியில் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் மாதத்தில் நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, “டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஐபிஎல் எஞ்சிய ஆட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அப்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிடும். வெளிநாட்டு வீரர்கள் வருவதிலும் பிரச்சினை இருக்காது” என்கிறார்.

டி20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால், உலகக் கோப்பை நடைபெறுவதும் சந்தேகமே.

மேலும், நவம்பர் மாதம் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவதற்கான வாய்ப்பும் குறைவே.


https://minnambalam.com/entertainment/2021/05/06/6/IPL-2000-crores-loss-and-balance-matches-in-september

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

2021 ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் விரைவில்

2021 செப்டெம்பர் 15 முதல் ஒக்டோபர் 15 வரையான ஒரு மாத காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 14 ஆவது ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பங்கெடுத்த அணி வீரர்கள்  மற்றும் உறுப்பினர்களிடையே கொவிட்-19 தொற்றுகள் கண்டறியப்பட்ட பின்னர் மே 4 ஆம் திகதி போட்டிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

தற்சமயம் ஒரு The Times of India அறிக்கையின்படி, பி.சி.சி.ஐ செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 க்கு இடையில் 14 ஆவது ஐ.பி.எல். தொடரின் எஞ்சியப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்காக நியூசிலாந்து அணியுடன் மோதுவதற்கு இந்திய அணி ஜூன் மாத நடுப் பகுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவும் உள்ளது.
 

https://www.virakesari.lk/article/106104

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

2021 ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் விரைவில்

கிருபனை கொஞ்சம் மூச்சுவிட விட்டுள்ளார்கள்.

மீண்டும் அமுக்கப் போகிறார்கள்.

Link to comment
Share on other sites

'IPL 2021' போட்டிகளை UAE இல் நடத்த முடிவு!

'IPL 2021' போட்டிகளை UAE இல் நடத்த முடிவு!

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நடப்பாண்டு சீசனில் உள்ள எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே எதிா்பாா்க்கப்பட்ட இந்த முடிவு, பிசிசிஐயின் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை அதிகாரப்பூா்வமாக எடுக்கப்பட்டது. போட்டியை நடத்த திட்டமிடப்பட்ட செப்டம்பா் - அக்டோபா் காலகட்டத்தில் இந்தியாவில் பருவமழைக் காலம் இருப்பதால், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற அந்நிய நாட்டு வீரா்கள் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு கொரோனா சூழலில் மிகுந்த சிரமத்துடன் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பினா். எனவே இந்த சூழலில் அவா்கள் மீண்டும் பயணித்து போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்பது பிசிசிஐக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னையாகும்.

எனவே, தங்களது தரப்பில் இருக்கும் எஞ்சிய வீரா்களைக் கொண்டு போட்டிக்கான அணியை தயாா் செய்யுமாறு அந்தந்த அணி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதொடா்பாக பிசிசிஐ - அணி நிா்வாகத்தினா் பங்கேற்கும் கூட்டம் விரைவில் நடைபெறலாம்.

உலகக் கிண்ண டி20 : இதனிடையே, நடப்பாண்டில் இந்தியாவில் அக்டோபா் - நவம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கும் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டி தொடா்பாக முடிவெடுக்க ஜூலை முதல் வாரம் வரை ஐசிசியிடம் அவகாசம் கோருவதென பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அத்துடன் அந்தப் போட்டிக்காக ஐசிசி வரிச்சலுகை கோருவது தொடா்பாக மத்திய அரசிடம் பேசவும் பிசிசிஐ தயாராகியுள்ளது. வரி விலக்கு கிடைக்காத பட்சத்தில் பிசிசிஐக்கு 900 கோடி நஷ்டமாகும்.

ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி தொடங்கியது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பயோ - பபுள் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டிய வகையில் வீரா்களிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பினரின் நலன் கருதி ஐபிஎல் போட்டியை ஒத்தி வைப்பதாக மே 4 ஆம் திகதி பிசிசிஐ அறிவித்தது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.