Jump to content

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்! – மாணவர்கள் காயம்

 
Capture-1.jpg
 103 Views

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும், அதில் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் எனக்கூறியுமே மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

Capture-2.jpg

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இன்று (09) காலை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் அங்கு சென்ற அமெரிக்கன் மிசனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு செல்ல முடியாதவாறு தடிகள், சீற்றுகளை போட்டு பாதையை மறித்திருந்தனர்.

எனினும், அங்கு ஆசிரியர்கள் வருகை தந்த பின்னர் மாணவர்கள் வாகனங்களை உள்ளே நிறுத்தியபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஐந்து வரையான மாணவர்கள் காயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தகவல் – யாழ்.தர்மினி

 

https://www.ilakku.org/?p=46916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விபரங்களுக்கு

https://m.facebook.com/JUCMediaClub/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2021 at 18:46, MEERA said:

மேலதிக விபரங்களுக்கு

https://m.facebook.com/JUCMediaClub/

சண்டைகள் பயங்கரமாத்தான் நடந்திருக்கு போல முகநூலில் அதிகம் உலாவுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாவம் பிரபாகரனும் அவன் பிள்ளைகளும்.

இந்த நன்றியில்லாத  தமிழனைவிட சிங்களவன் எவ்வளவோ மேல். 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பெரியவர்கள்/ அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.
இந்த பிரச்சனையை மாணவர்கள் மத்தியில் விரோதமாக வளர்த்தெடுப்பது முற்றிலும் தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இது பெரியவர்கள்/ அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனை.
இந்த பிரச்சனையை மாணவர்கள் மத்தியில் விரோதமாக வளர்த்தெடுப்பது முற்றிலும் தவறு.

பாடாசாலை நிர்வாகம் மாணவர்களை தூண்டி விட்டிருந்தால் அதை பேசி தீர்க்க முயன்றிருக்க வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுகியிருக்க வேண்டும்.

இப்படி போதகர் முன்னிலையில் நின்று பெண்களை ஏவி தடி கொண்டு அடித்தது கலைப்பதல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

இதற்கும் சச்சியருக்கும் என்ற தொடர்பு?

வெற்றி செல்வனின் தொடரை  படித்து இருந்தால் நல்லது சச்சியார்  யார் என்பது புரியும் நேரிடையாக  குற்றம் சாட்ட முடியாத  வகையில் அவர்கள் ஓடுவார்கள் என்பது உங்களுக்கு நான் இங்கு சொல்லி புரியாவிடின் இந்த திரியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் சிலவேளை எனக்கு புரியவில்லை போல் உள்ளது நன்பரே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

பாடாசாலை நிர்வாகம் மாணவர்களை தூண்டி விட்டிருந்தால் அதை பேசி தீர்க்க முயன்றிருக்க வேண்டும் அல்லது சட்ட ரீதியாக அணுகியிருக்க வேண்டும்.

இப்படி போதகர் முன்னிலையில் நின்று பெண்களை ஏவி தடி கொண்டு அடித்தது கலைப்பதல்ல.

 

சரி பிழைகளுக்கப்பால் நமக்குள் பிரச்சனைகள் வரக்கூடாது மீரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சரி பிழைகளுக்கப்பால் நமக்குள் பிரச்சனைகள் வரக்கூடாது மீரா.

புரியவில்லை குசா,

அந்த பாடாசாலையில் கல்வி கற்றவர்கள் சிலரும் தற்போது அமெரிக்க மிசனின். பின்னணியில்.  தாம் படித்த பாடசாலையை விட அவர்களுக்கு மதம் பெரியதாகி விட்டது.

25 minutes ago, பெருமாள் said:

வெற்றி செல்வனின் தொடரை  படித்து இருந்தால் நல்லது சச்சியார்  யார் என்பது புரியும் நேரிடையாக  குற்றம் சாட்ட முடியாத  வகையில் அவர்கள் ஓடுவார்கள் என்பது உங்களுக்கு நான் இங்கு சொல்லி புரியாவிடின் இந்த திரியில் இருந்து ஒதுங்கி கொள்கிறேன் சிலவேளை எனக்கு புரியவில்லை போல் உள்ளது நன்பரே .

ஒதிங்கிக் கொள்ள தேவையில்லை...

யூனியன் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கும் சச்சியருக்கும் என்ன தொடர்பு?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

புரியவில்லை குசா,

அந்த பாடாசாலையில் கல்வி கற்றவர்கள் சிலரும் தற்போது அமெரிக்க மிசனின். பின்னணியில்.  தாம் படித்த பாடசாலையை விட அவர்களுக்கு மதம் பெரியதாகி விட்டது.

மீரா! மன்னிக்கவும் தவறான புரிதலுக்கு. 
எனக்கு உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஊடகங்களை நம்புவதற்கும் இல்லை. உங்களுக்கு  உண்மையான தகவல்கள் தெரிந்தால் முழுமையாக இங்கே பகிருங்கள்.
ஆனால் எமக்குள் மத வேறுபாடுகள் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

ஒதிங்கிக் கொள்ள தேவையில்லை...

யூனியன் கல்லூரியில் நடந்த சம்பவத்திற்கும் சச்சியருக்கும் என்ன தொடர்பு?  

பிழையாக சொல்லிவிட்டேன்  மன்னித்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

மீரா! மன்னிக்கவும் தவறான புரிதலுக்கு. 
எனக்கு உண்மையான தகவல்கள் தெரியவில்லை. ஊடகங்களை நம்புவதற்கும் இல்லை. உங்களுக்கு  உண்மையான தகவல்கள் தெரிந்தால் முழுமையாக இங்கே பகிருங்கள்.
ஆனால் எமக்குள் மத வேறுபாடுகள் வரக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லை குசா,

ஊடகங்களை கூட்டி வைத்து தமது மதம் சார்ந்தவர்களால் வன்முறை ஏற்படவில்லை என்று பொய் கூறுகிறார்கள்.

மாணவர்களால் கதவு உடைக்கப்பட்டிருந்தால் , அத்து மீறி உள் நுழைந்திருந்தால் இவர்கள் ஏன் பொலிசை நாடவில்லை...?

9 minutes ago, பெருமாள் said:

பிழையாக சொல்லிவிட்டேன்  மன்னித்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு என்ன நடந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

 அமெரிக்கன் மிசனுக்கும் தென்னிந்திய திருச்சபைக்குமான உள்வீட்டு பிரச்சினை.

எதன் அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

16 minutes ago, MEERA said:

எதன் அடிப்படையில் இப்படி கூறுகிறீர்கள்?

தென்னிந்தய திருச்சபை பேராயர் டானியேல் தியாகராஜா கொடுத்த பேட்டியை பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 04:47, Kapithan said:

இந்த நன்றியில்லாத  தமிழனைவிட சிங்களவன் எவ்வளவோ மேல். 

 

இந்த மாயைதான் இப்போது சிங்களவனுக்கு அவசரம் வேண்டியது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே உள்நுழைந்து எல்லாவற்றையும் சுருட்டிவிடுவான். நாங்கள் ஆளையாள் முறைச்சுக்கொண்டிருப்போம். அடுத்த தொல்பொருள் ஆராய்ச்சி இங்குதான் ஆரம்பமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இந்த மாயைதான் இப்போது சிங்களவனுக்கு அவசரம் வேண்டியது. இந்த ஒன்றை வைத்துக்கொண்டே உள்நுழைந்து எல்லாவற்றையும் சுருட்டிவிடுவான். நாங்கள் ஆளையாள் முறைச்சுக்கொண்டிருப்போம். அடுத்த தொல்பொருள் ஆராய்ச்சி இங்குதான் ஆரம்பமாம்.

இது மாயை அல்ல சாத்தான். அனுபவம் !!!

இத்தனை அழிவுகள், தியாகங்களின் பின்னரும் சாதியாலும், சமயத்தாலும் பிரிந்து நிற்போமானால், தனது இனத்திற்கு எப்போதுமே விசுவாசமாக இருக்கும் சிங்களவன் மேலானவன் என்பது உண்மைதானே...

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்கள் நினைப்பது; சிங்களவன் நமது நிலங்களை பறிக்கிறான், நமது பெலத்தைபாவித்து பலமிழந்தவர்களின், ஏமாளிகளின் உடமைகளை நாம்  பறிப்பதில் தப்பில்லை என நினைக்கிறோம். மீண்டும் நிஞாயம் தேடி அவனிடமே போகிறோம். முதல்வர் விக்கினேஸ்வரன் கூறியதுபோல் குரங்கு அப்பம் பிட்ட கதை,. எல்லாம் அவன் விழுங்கின பிற்பாடு அடாது செய்தவனுக்கு ஒன்றும்  இழப்பில்லை அடுத்தவனின் சொத்தை பறித்து  இல்லாமற் செய்துவிட்ட மகிழ்ச்சி. இங்கு  யாரை நோவது? எதிரியின் திட்டத்தை நாமே செய்து முடிக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2021 at 07:57, கற்பகதரு said:

தென்னிந்தய திருச்சபை பேராயர் டானியேல் தியாகராஜா கொடுத்த பேட்டியை பாருங்கள்.

1-BF3-F155-1577-47-AD-9-F98-D9840-F22-B7

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மிஷன் உரிமை கோரிய ஆதனம் யூனியன் கல்லூரிக்கே சொந்தம்

April 21, 2021

mallakam.jpg

அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.

அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் பிணை முறிக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

கல்லூரியின் மாணவர்களுக்கான உணவுத் திட்ட சமையல் பகுதி மற்றும் துவிச்சக்கர வண்டித் தரிப்பிடம் அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது.

தமக்கே சொந்தம் என சட்ட ரீதியான ஆவணங்களை கல்லூரி நிர்வாகம் வைத்துள்ளனர். அத்துடன் அமெரிக்க மிஷனின் அத்துமீறல்கள் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி கல்லூரி மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமது சபைக்கு சொந்தமான காணி எனவும் அங்கு துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டு மாணவர்கள் மீது அமெரிக்க மிஷனைச் சேர்ந்த சிலர் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

அதனையடுத்து அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என அமெரிக்க மிஷன் அருட்தந்தையர்கள் இருவருக்கு எதிராக தெல்லிப்பழை பொலிஸாரால், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சார்பில் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

குற்றஞ்சாட்டப்பட்ட அருட்தந்தையர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

“பாடசாலையின் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் சமையல் பகுதி அமைந்துள்ள காணியில் மாணவர்களின் துவிச்சக்கர வண்டி தரிப்பிடமும் உள்ளது. அந்த ஆதனம் கல்லூரியின் பயன்பாட்டில் உள்ளமைக்கு அரச வர்த்தமானி அறிவிப்பும் உள்ளது” என்று சமர்ப்பணம் செய்த மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், ஆவணங்களை மன்றில் சமர்ப்பித்தார்.

அருட்தந்தையர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் தமது ஆட்சேபனையை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், அமெரிக்கன் மிஷன் உரிமை கோரும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பராமரிப்பில் உள்ள ஆதனத்தை கல்லூரியிடம் பொறுப்பளித்து கட்டளையிட்டு வழக்கை முடிவுறுத்தியது.

அத்துடன், அமைதிக்கு பங்கம் விளைவித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட அமெரிக்க மிஷனின் அருட்தந்தையர்கள் இருவரை தலா 5 லட்சம் பெறுமதியான பிணை முறியில் விடுவித்த நீதிமன்று, கட்டளை 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டியது.

அதனால் அவர்கள் இருவரும் 6 மாதகாலத்துக்குள் அமைதிக்கு பங்கம் விளைவித்தால் பிணை முறிக்கான பணத்தைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

 

https://globaltamilnews.net/2021/159759/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூனியன் கல்லூரி மாணவர்களை பொல்லாங்கட்டையால் அடிக்கும் அக்கா நீதிமன்றம் வரவில்லையோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 21:26, நியாயத்தை கதைப்போம் said:

யூனியன் கல்லூரி மாணவர்களை பொல்லாங்கட்டையால் அடிக்கும் அக்கா நீதிமன்றம் வரவில்லையோ.

அக்காவிற்கு எதிராக கல்லூரியினர் வழக்கு தாக்கல் செய்யவில்லை போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.